முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 16


 

அத்தியாயம்: 16


ஊட்டிக் காவல் நிலையம்.


மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆண் பெண் இளைஞர்கள் எனக் கூட்டம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. கூச்சலிட்ட படியே நின்ற அவர்களின் முகத்தில் கோபமும் ஆத்திரமும் நிறைந்திருந்தன. இப்போது அவர்கள் கையில் மாட்டினால் சிக்கும் ஆளைச் சின்னா பின்னம்மாக்கி விடுவார்கள். அத்தனை வெறி அவர்களுக்கு.


அப்போது அந்தத் தள்ளுமுல்லுக்கு இடையே ஒரு பழைய வெள்ளை நிற அம்பாசிடர் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினார் தயானந்தன். அவரைக் கண்டதும் கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டன.


" ஐயா!!. உங்களுக்கே துரோகம் பண்ணிட்டாங்கய்யா!."


" உங்க பேர கெடுக்கனும்னே இப்படி பண்ணிருக்கான்ய்யா!. "


"நம்ப வச்சி கழுத்தறுத்த துரோகிய்யா அவெ!."


" இன்னும் எத்தன கொல பண்ணிருக்கானோ?. "


"அவன சும்மா விட்டிடாதிங்க ஐயா. விட்டுடாதிங்க." என அங்கிருந்த அனைவரும் சேர்ந்து சொல்ல, அமைதியாக இருக்கும்படி கூறினார் தயானந்தன். அப்போது ஆரோக்கியராஜின் மனைவி முன்னே வந்து,


" பணத்துக்கு ஆசப்பட்டு கொன்னுட்டாங்கய்யா. எம்புருஷன கொன்னுட்டாங்க. இனி நா ரெண்டு பிள்ளைங்களோட அநாதையா நிக்க போறேன். எனக்கு என்ன பண்ணன்னு தெரியலங்கையா. தெரியல." என அழ,


அவர், "அழாதம்மா. உனக்கு நியாயம் கிடைக்கும். டேய் பரமா. போய் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வா." என்க,


"ஐயா இன்ஸ்பெக்டரும் புதுசா வந்த ACP யும் கதிரேசன கைது பண்ண போயிருக்காங்க. இப்ப வந்திடுவாங்க. உள்ள வந்து உக்காருக்கைய்யா." என ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்றார் வெங்கட்ராமன்.


சுருதியும் ஆரோக்கியராஜும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கின்றன என்பது உறுதியாகிப் போனது. இரண்டு கொலையையும் ஒரே ஆள் தான் செய்தது. அது கதிரேசன் தான். அவரைக் கைது செய்யத்தான் விக்னேஷும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரும் சென்றிருக்கின்றனர்.


சிறிது நேரத்திலேயே போலிஸ் ஜீப் வர, அதிலிருந்து இறங்கிய கதிரேசனை மக்கள் நைய்யப்புடைந்து எடுத்தனர். அவர்களிடமிருந்து கதிரேசனை காத்து உள்ளே அழைத்து வருவது பெரும் பாடாகிப்போனது. உள்ளே வந்த கதிரேசனை ஓங்கி அறைந்தார் தயானந்தன்.


" உன்ன பெத்த புள்ள மாறிப் பாத்தேனேடா. எப்படி டா மனசு வந்துச்சி கொல பண்ண.‌ தாயா பிள்ளையா ஒரே இடத்துல தான வளந்திங்க. அப்ப உனக்கு அந்தப் பொண்ணு தங்கச்சி மாறித் தான.‌ எப்படி டா கூடவே வளந்ததுகள கொல பண்ண தைரியம் வந்துச்சி. பாவி!. என்னோட மகன விட உன்னத்தான அதிகமா நம்புனேன். ஏமாத்திட்டியேடா துரோகி." எனத் தன் பலம் கொண்டு மட்டும் அறைந்து கொண்டே இருந்தார்.


பின் பொறுக்க முடியாது கதிரேசனின் மீதே சாய்ந்து அழுதார். ஒரு கணம் தான். பின் நிதானித்தவர்.


" விட்டுடாதிங்க தம்பி. விட்டுடாதிங்க. இவெ மட்டும் வெளில வந்தான்னா சுருதி, ஆரோக்கியம் மாறிப் பல பேத்த இழக்க வேண்டி வரும். விட்டுடாதிங்க. ஜெயிலையே இருந்து சாகனும். எங்க இல்லம் சார்புல உங்களுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தர்றோம். இவெ வெளியவே வரக் கூடாது." எனக் கதிரேசனை போலிஸ் ஸ்டேஷனிலேயே விட்டுச் சென்றார் அவர்.


எத்தனை அடி. எத்தனை மிதி. ஆனாலும் கதிரேசன் வாயை மட்டும் திறக்கவே இல்லை. எப்படி உறுதி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, மனோகர் பதிலளித்தான்.


" ஆரோக்கியராஜ் அப்றம் சுருதி ரெண்டு பேரோட மரணமும் சந்தேக மரணமாத்தா ஃபைல் பண்ணிருக்கோம். அதுல எங்களுக்குக் கிடைச்ச முக்கிய‌ எவிடென்ஸ் ஒரு மெஸ்எஜ். அது சரியா அங்க ரெண்டு பேரும் இறந்து போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி அவங்க ஃபோனுக்கு வந்திருக்கு.


விசாரிச்சதுல அத அனுப்புனது கதிரேசன் தான்னு கண்டு பிடிச்சிருக்கோம். அவரோட மொபைல்ல இருந்து தா போயிருக்குன்னு தெரிஞ்சது. அதுமட்டுமில்லாம ஆரோக்கியராஜ் தற்கொலை கடிதத்துல இருக்குற கையெழுத்து அவரோடது இல்ல. அதுவும் கதிரேசனோடது தா. அத கதிரேசன் கூட வேல பாக்குறவங்க மூலமா உறுதி செஞ்சிருக்கோம்.


சுருதி விசயத்துல, சுருதி கூடவே அவரும் பஸ்ல ஏறிருந்து இருக்குனும். ஒரு ஸ்டாப் போடப் பேரா எழுதிக் காட்டி அங்க இறங்கச் சொல்லி இருக்காரு. அந்தப் பேப்பர்ல இருந்து கதிரேசனோட கையெழுத்து. அந்தப் பொண்ணு கதிரேசன நம்பி அவர் கூப்பிட்ட இடத்துக்குப் போயிருக்கு. பின்னாடியே ஜீப்ல போயிருக்காரு. அது சீசிடீவி பதிவாகிருக்கு. அந்தப் பொண்ணு தனியா ஏரி பக்கம் வந்ததும் தண்ணீல தூக்கி போட்டுக் கொல பண்ணிருக்காரு.‌ பணத்துக்காக தா பண்ணிருக்கனும். இல்ல வேற எதுக்கான்னு அவரே சொன்னாத்தா தெரியும். ஏ எதுக்குன்னு நாங்க இன்னும் விசாரிக்க வேண்டி இருக்கு." என மனோகர் பேசி வழி அனுப்பி வைத்தான் பத்திரிக்கையாளர்களை.


நேற்று கதிரேசன் வீட்டிற்குள் அதிரடியாக ஆள் இல்லாத சமயம் உள்ளே சென்ற விக்னேஷுக்கும்‌ ஹரிணிக்கும் தேடும் வேலையேயின்றி கதிரேசனின் வீட்டு லெட்டர் பாக்ஸில் சில கடிதங்கள் கிடைத்து. அது ஒரு பிரபல காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்துள்ளது. இன்சூரன்ஸ் கம்பெனி அது. அதை பிரித்துப் படித்து பார்த்தபோது,


அது இறந்து போன சுருதியின் பெயரில் இருந்தது. அவளின் பெயரில் போடப்பட்ட இன்சூரன்ஸ்காக வந்துள்ளது. சுருதி இறந்து விட்டதால் அதன் நாமினியான கதிரேசனுக்கு அந்த இன்சூரன்ஸ் தொகை கிடைத்துள்ளது. பல லட்சம் ரூபாய் கதிரேசனின் வங்கிக் கணக்கில் வரவாகக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் தான் அந்தக் கடிதம். சுருதிக்கு மட்டுமல்ல ஆரோக்கியராஜிற்கும் இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளது. அதுவும் கதிரேசனை நாமினியாகக் கொண்டு. அந்தத் தொகையும் கதிரேசனுக்கு கிடைத்துள்ளது.


" சுருதிக்கு கூட யாரும் இல்ல அதுனால கதிரேசன நாமினியா போட்டிருக்கலாம். ஆனா ஆரோக்கியராஜ் அப்படி இல்லையே. அவருக்குன்னு மனைவி குழந்தைங்க இருக்கும்போது எதுக்கு கதிரேசன பேர நாமினியா எழுதனும். ம்." ஹரிணி.


" ஆரோக்கியத்துக்கு மட்டுமில்ல சுருதிக்கும் ஒரு லவ்வர் இருக்கான். ஆனா அவனுக்குக் கூட சுருதி இன்சூரன்ஸ் எடுத்துத் தெரியாது. ஏ ஆரோக்கியராஜ் மனைவிக்குமே தெரியாது இன்சூரன்ஸ் போட்டது. அப்போ கதிரேசன் தான் போட வச்சிருக்கனும். இன்சூரன்ஸ் போட்டதுக்கு அப்றம் கொல பண்ணி அந்தக் காச அவரு எடுத்துக்க நினைச்சிருக்கனும். ஆனா அவருக்கு எதுக்கு இவ்வளோ பணம். அதுவும் இவ்ளோ ஷாட் பீரியர்டுல." விக்னேஷ் யோசிக்க,


" விக்கி, இதுக்கா இருக்கலாம்." எனச் சில மருத்துவ ஆதாரங்களைக் காட்டினாள். அதில் கதிரேசனின் மகனுக்கு ரத்த புற்று நோயிக்கான சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான ஆவணங்கள் இருந்தன.


உண்மையில் அவரின் மகனுக்கு ரத்த புற்று நோய் தான். மகனைக் காப்பாற்ற சில மாதங்களுக்கு ஒரு முறை உடலில் உள்ள ஒட்டு மொத்த ரத்தத்தையும் நீக்கிப் புதிதாக ரத்தம் ஏற்ற வேண்டும். புது ரத்ததிற்கு, உடன் இருந்து பார்த்துக் கொள்ளும் நர்ஸுக்கு. மேற்படி சிகிச்சைக்கியென பணம் அதிகளவில் வேண்டும். அதனால் தான் இப்படி செய்திருக்கலாம்.


"ம்... கண்டிப்பா அப்படித்தா இருக்கும். இன்னைக்கி அந்த ஃபோன் நம்பர் யாரோடதுன்னு தெரிஞ்சிடும். அப்பறம் கொலகாரன கைது பண்ணிடலாம்." என விக்னேஷ் சொல்ல, கதிரேசன் வீட்டில் கிடைத்த ஆவணங்களைப் புகைப்படமாக்கி கொண்டு சென்றனர் இருவரும்.


அன்று மாலை வந்த ரிசல்டும் அந்த நம்பர் கதிரேசனின் பெயரில் வாங்கப்பட்டது எனக் காட்ட, மேலிடத்திற்கு தன் முடிவைச் சொல்லி விட்டான். கூடவே இதுவரை தான் விசாரித்தில் கிடைத்த அனைத்து ஆவணங்களையும் மேலிடத்திற்கு ரிப்போர்ட்டாக அனுப்பி விட்டான். எனவே கதிரேசன் கைது செய்யப்பட்டு விசாரனை வளையத்திற்குள் உள்ளான்.


" உனக்கு நிஜமாவே கதிரேசன் தான் காரணம்னு தோனுதா விக்கி." என ஹரிணி கேட்க,


" எனக்கும் அதே சந்தேகம் இருக்கு டார்லிங். கதிரேசன் இத பண்ணிருக்க வாய்ப்பு இருக்கு தா. ஆனா அவரு மட்டுமே இதுக்கு பின்னாடி இருக்க மாட்டாருன்னு தோனுது." கௌதம் ஹரிணியின் கருத்தை ஆதரித்துப் பேசினான்.‌


" நீ இத இன்னும் தெளிவா விசாரிக்கனும்னு தோனுது விக்கி. ஏன்னா அவரோட பையனுக்குக் கேன்சர் வந்து ரெண்டு வருஷம் ஆகுது. அப்ப முதல்ல இருந்தே." ஹரிணி.


" யாரையாது கொல பண்ணி அவங்களோட இன்சூரன்ஸ் காச வச்சி செலவு செஞ்சிருப்பாருன்னு சொல்ல வர்ற. ம்... அப்ப அந்தாளு மேல ரெண்டு இல்ல இன்னும் நிறைய கேஸ் ஃபைல் பண்ணலாம்னு சொல்லற. சரியா?. கடத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடச்சி புண்ணியம் தேடிக்கிற மாறிச் செஞ்சிருக்கான் அந்தாளு." மனோ சொல்ல,


" ஹேய் போலிஸ்ஸு. சொலவட சூப்பர். ஒரு நாள் எங்க ஊருக்கு வா.‌ என்னோட ப்யூட்டிய உனக்கு நா இன்ரோ பண்ணி வைக்கிறேன்." கௌதம் சொல்ல,


" தங்க்யூ பாஸ். நா அடுத்த வாரமே வந்து பாக்குறேன்.‌ ஹாங். ப்யூட்டி அழகா இருப்பாளா?. சைட் அடிக்க ஏத்த மாறி."


" ஹாங். கண்டிப்பா. சூப்பரா இருப்பாங்க. ஆனா நீ அடிக்கவே வேண்டாம்."


"அவங்களே உன்ன அடிப்பாங்க. உலக்கைய வச்சி." ஹரிணி


"ஏ?. "


" ஏன்னா அது அவனோட அப்பத்தா.? எம்பது வயசு கிழவி. ஆறு பிள்ளைங்களுக்கு அம்மா. நிறைய பேரன் பேத்தி. ஏ கொள்ளுப் பேரன் கூட இருக்கு. என்ன? சைட் அடிக்க அடுத்த வாரம் ஊருக்கு வர்றியா!." எனக் கண்சிமிட்டி ஹரிணி கேட்க ப்யூஸ் போன பல்பு போல் மனோவின் முகம் வாடிப் போனான்.


" இதுவரைக்கும் கல்யாணம் ஆன பொண்ணுங்கள தா பாத்து சிரிச்சிட்டு இருந்த. அது உன்னோட வயசு கோளாறுன்னு நினைச்சேன். இப்பதா புரியுது நீயே கோளாறு தான்னு.‌" கௌதம்.


"ச்சூ... உனக்கு ஏ கதிரேசன் கொல பண்ணலன்னு தோனுது ஹரிணி. எல்லா எவிரென்ஸ்ஸும் அவருக்கு எதிரா இருக்கு. அதுமட்டுமில்லாம அவரே ஒத்துக்கிட்டாரு. இதுக்கு மேல யார நீ சந்தேகப்படுற?." பவதா.


" எஸ், பவதா சொல்றது சரி.‌ என்னோட கெஸ் எப்பவும் சரியா தா இருக்கும். அது படி நமக்கு அவந்தா பண்ணான்னு நல்லாவே தெரியுது. இதுல என்ன விசாரிக்கனும்னு சொல்ற?." விக்னேஷ்.


" உன்னோட பார்வ கதிரேசன தாண்டி அவரு வேல பாக்குற ஆஸ்ரமம் வரைக்கும் போகனும்னு சொல்றேன். எந்தக் காப்பகத்துலையாது குழந்தைங்களுக்கு இவ்வளோ பாதுகாப்பு குடுத்து, சுதந்திரம் குடுத்து சந்தோஷமா பாத்துப்பாங்களா. அதுலையும் கதிரேசன் அந்த ஜான அடிச்ச‌ அடில,


குழந்தைங்கள பாத்துக்கனுமேங்கிற எச்சரிக்க உணர்வு இருந்ததே தவிர. அந்தக் குழந்த மேல அக்கற இருக்குற மாறித் தெரியல. காஸ்ட்லியா ஒரு பொருள வாங்கி அத யாரையும் தொடவிடாம பாத்துக்கிற மாறி இருந்தது. ஆனா அது குழந்த. உயிரில்லாத பொருள் கிடையாதே." ஹரிணி.


" எஸ், சுத்தி நிச்சயம் நூறுக்கும் அதிகமான கேமராஸ் இருக்கு. அது அங்க இருக்குற குழந்தைங்கள விட அதிகம். காஸ்ட்லி திங்ஸ். வெல் டிரஸ்ஸிங். நியூட்ரிஸ்னல் ஃபுல்.‌ கம்யூட்டர்ஸ் வீடியோ கேம்ஸ்ன்னு எல்லா வசதியும் இருக்கு. அப்றம் குழந்தைங்க என்ன பண்ணாலும் அடிக்கவோ மிரட்டவோ கூடாது. அந்தக் குழந்தைங்கள எதோ விலையுயர்ந்த பொருள் மாறிப் பாதுக்காக்குறாங்களோன்னு தோனுது." கௌதம்.


" யாரு கிட்ட இருந்து?. எதுக்கு பாதுக்காக்கனும்?. ஒன்ன கவனிச்சியா. மன வளர்ச்சி சரி இல்லன்னு சொன்ன எல்லா குழந்தைங்களும் பத்து வயசுக்குள்ள தா இருக்குது.‌ அந்த ஜான் அந்தக் குழந்தைங்களுக்கு மட்டும் தனியா ஹாஸ்டல் இருக்குறதா சொன்னான். அவ்ளோ பெரிய இடம். எக்கச்சக்கமா ஓப்பன்ஸ் ஸ்பேஸ். உள்ளுக்குள்ளையே ஸ்கூல் உள்ளுக்குள்ளையே ஹாஸ்பிடல். குழந்தைக்கள எதுக்கும் வெளில அலோ பண்ணாம என்ன பண்றாங்க?.


நிச்சயம் ஏக்கர் கணக்குல இடம் இருக்கும். அப்ப அவங்க சேவ செய்யனும்னு முடிவு பண்ணா அந்த இடத்த நிறைய பேருக்குக் காப்பகமாக மாத்திருக்க முடியுமே. ஆனா இவங்க ஏ சில குழந்தைங்கள மட்டும் செலக்ட் பண்ணி வளக்கனும்."


" யாரையும் உள்ள அனுமதிக்காம. உள்ள என்ன நடக்குதுன்னே வெளில இருக்குறவங்களுக்கு சொல்லாம என்னதா பண்றாங்க?. ஹிம்... யாருமே கவனிக்காம ஒரு மூளைல இருந்த ஒரு அநாத ஆஸ்ரமம், எப்படி இப்படி ஆடம்பரமா மாறிருக்கும்?. ஐஜியே கால் பண்ணி உள்ள போகக்கூடாதுன்னு சொல்லுற அளவுக்குச் செல்வாக்கு எப்படி வந்தது?. ஊர் மக்கள் எல்லாருமே சப்போட் பண்ணுற அளவுக்குப் பாப்புலர் ஆக்கிருக்கு. எப்படி?. அதுவும் பதினஞ்ச வர்ஷத்துக்குள்ள!. எங்கருந்து பணம் வருது?. என்ன நடக்குது அங்க?." கௌதம்.


" நீங்க ஓவர கற்பன பண்றிங்களோன்னு தோனுது.‌ அந்த ஆஸ்ரமம் எப்படி இருந்தாலும் நமக்கு அது தேவையில்லாதது. நாம விசாரிக்க வந்தது சுருதி கேஸ். அது கொலையா இல்ல தற்கொலையான்னு தா. வேற எதுவும் இல்ல." விக்னேஷ்.


" விக்கி நீ ஒரு போலிஸ். இப்படி பேசாத. நியாயமா பாத்தா உனக்குத் தா இந்தச் சந்தேகம் எல்லாம் வந்திருக்கனும்.‌ ஆனா ஏ வரல?. நீ இதுக்கு முன்னாடி இந்த மாறிக் குழந்தைங்க ஹப்பியா இருக்குற காப்பகத்த பாத்துருக்கியா?." ஹரிணி.


" ஏ அவங்க சந்தோஷமா இருக்குறது உனக்குப் பொறுக்கலையா என்ன!. உனக்கு என்ன தா வேணும்?. அது ஒரு காப்பகம்‌. அநாத அஸ்ரமம் இல்ல. அங்க இருக்குற பாதி குழந்தைங்களுக்கு அப்பாம்மா இருக்காங்க. அவங்க தா காசு குடுத்து பாத்துக்க சொல்லிருக்காங்க. காசுன்னு ஒன்னு வரும்போது அவங்க எல்லா வசதியும் செஞ்சி தான குடுத்தாகனும். நாளைக்கி அந்தக் குழந்தைக்கி எதாவது ஒன்னு ஆச்சின்னா பெத்தவங்க கேப்பாங்ககிற சூழ்நிலைல எப்படி அன்பா பாத்துப்பாங்க. கடமையாத் தா செய்வாங்க. அதுல என்ன தப்பு இருக்கு?." பவதா.


" எப்படி வேலில கரண்ட்டு வச்சி தா பாத்துப்பாங்களா?. சொல்லு. எதுக்கும் நீ கதிரேசன் கிட்ட அன்னை காப்பகத்த பத்தி விசாரிக்கின்றது நல்லது விக்கி." என ஹரிணி எழுந்து சென்று விட்டாள்.


" கோபமா போறாளோ!." பவதா சிறு கவலையாக.


" ச்சச்ச... ஸ்னாக்ஸ் தீந்து போச்சு.‌ அதா எடுத்துட்டு வரப் போயிருக்கா. வேற ஒன்னுமில்ல. யூக்கண்டினியூ.‌" கௌதம்.


"நீங்க ரெண்டு பேரும் நல்லா பாயிண்ட் பாயிண்டா பேசுறிங்க. எப்படின்னு எனக்குச் சொல்லித்தாறிங்களா. நா வக்கீல் ஆகுறதுக்கு யூஸ் ஆகும்." என்க, மனோவும் விக்னேஷும் சிரித்தனர்.


" வக்கிலா.! நீயா?." கௌதமும் ஹரிணியும் சேர்ந்தே கேட்டனர். கையில் கௌதம் சொன்னது போல் சில பழங்களையும் சிப்ஸ் பாக்கெட்டுகளையும் எடுத்து வந்திருந்தாள் ஹரிணி. அனைவரும் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.


" ம்... ஆமா‌. காலேஜ் சேந்திருக்கேன். இன்னும் ரெண்டு வர்ஷத்துல நா வக்கீல்." பவதா பெருமையாகச் சொல்ல, விக்னேஷ் மனைவியை மெச்சுதலாகப் பார்த்தான்.


" ஹாஹ்ஹஹ். இன்னொரு வழக்கில்லாத வக்கிலு. ஹாஹ்ஹஹ்." என நண்பர்கள் இருவரும் சிரிக்கத் தொடங்கினர்.


" பாஸ் சொல்லிட்டு சிரிச்சா நாங்களும் சிரிப்போம்.‌ இது அதர் லாங்குவேஜ் படம் மாறிப் புரிய மாட்டேங்கிது. சப்டைட்டில் போட்டிங்கன்னா பெட்டரா இருக்கும்." மனோ.


" எங்க வீட்டுலையும் ஒரு வக்கீலு இருக்கான்." கௌதம்.


"வழக்கில்லாத வக்கிலு." எனச் சிரிக்க,


" யாரு அந்த அட்வகேட்.?" என்றாள் பவதா, சற்று முறைப்புடன்.


" அது இவனோட தம்பி தா. பேரு பிரகாஷ். ஆனா சட்டம் அவனுக்குப் பிரகாஷமான வழிய காட்டல. இருபத்தி ஏழு வயசுல இப்பதா டிகிரி வாங்கினான்.‌" என சொல்லிச் சிரித்தாள் ஹரிணி.


" அப்ப நானும் அப்படித்தா ஆவேன்னு சொல்ற." பாவம் ஹரிணியும் கௌதமும் செய்த கேலியில் குரல் உடைந்து விட்டது பவதாவிற்கு.


" ச்சச்ச.‌. உன்ன அப்படி சொல்வேன்னா. நீ படிப்ப மட்டும் முடிம்மா‌. உனக்கு முதல் கேஸ் நா தாரேன். நீ தா வக்கீலாகி ஒரு பொண்ணோட வாழ்க்கைய காப்பாத்தனும்." கௌதம் சீரியஸ்ஸாக.


" யாருண்ணா அது.?" பவதா.


" எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு தா. நல்ல புத்திசாலியான பொண்ணு. தைரியமா இருக்கும். ஆனா அவள ஒருத்தேன் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான். பயங்கர கோபக்காறேன். மோசமானவனும் கூட. அந்தப் பொண்ணு அவெ கைல சிக்கி தினந்தினம் கொடுமைய அனுபவிக்கிறா. அடி, உதன்னு அந்தப் பொண்ண சித்திரவத செஞ்சிட்டு இருக்கான். அவள காப்பாத்தனும்னா உடனே அவளுக்கு விவாகரத்து வாங்கி குடுக்கனும். கோர்ட்ல நோட்டிஸ்லாம் குடுத்தாச்சி. ஆனா டைவர்ஸ் குடுக்க மாட்டேங்கிறான் அந்தக் கிராதகெ.


பேசிப் பேசி அந்தப் பொண்ணு மனச மாத்த முயற்சி பண்றான். சில நேரம் நல்ல புருஷனா இருப்பான். சில நேரம் அரக்கனா மாறிடுறான். அவெ எப்ப எப்படி மாறுவான்னு தெரியாம அவெங்கூட இருக்கவும் முடியாம, அவன விட்டு விலகவும் முடியாம, அந்தப் பொண்ணு படுற கஷ்டத்த, சரி பண்ண உன்னால தா முடியும். செய்வியா பவதா." எனக் கேட்க.‌ அவள் சரி எனத் தலையசைத்தாள்.‌ அவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு,


" ரொம்ப நன்றி. நீ வாங்கித் தரப்போறது டைவர்ஸ் கிடையாது. அந்தப் பொண்ணுக்கு விடுதல. பெண்களுக்கு எதிரா நடக்குற அநியாயத்த தட்டிக் கேக்க உன்ன மாறி ஒரு வக்கீல் அவசியம் வேணும்." என உருக்கமாகப் பேச,


" யாரு டா? அந்தப் பொண்ணு. எனக்குத் தெரியாம. ம்.‌.. இந்த மார்டன் வேர்ல்டுல கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சகிச்சிட்டு வாழுற அந்தப் பொண்ணு யாரு?." என்க, கௌதம் எழுந்து நின்றான்.


" அது வேற யாரும்மில்ல டார்லிங் நீ தா. உனக்குத் தா டைவர்ஸ். நீ அவன விவாகரத்து பண்ணிடு." என்று சொல்லிவிட்டு ஓட, ஹரிணி துரத்தினாள்.


"தயவு செய்து இந்த முறையாது ஒழுங்கா கையெழுத்து போட்டு அத்து விட்டுடு. உனக்கு மனோகர் மாறி நல்ல பையனா பாத்து நானே கட்டி வைக்கிறேன்." எனக் கத்திக்கொண்டே ஓடி விட்டான்.


"யூ... இடியட்.


உன்ன சும்மா விடமாட்டேன் டா." என ஓய்ந்து போய் சோஃபாவில் அமர,


" எனக்குப் பொண்ணு ஓகே." எனச் சிரித்த மனோகரை அடிக்க ஹரிணி தேவையில்ல. விக்னேஷே போதும்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


விழி 15


விழி 17


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...