முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 15

அத்தியாயம்: 15


" யாரு நீ? இங்க என்ன பண்ற?. இங்கெல்லாம் வெளியாள்க வரக் கூடாது. இதுக்குள்ள வர யாரு உங்களுக்குப் பர்மிஷன் குடுத்தா?."எனக் கிட்டத்தட்ட கோபமாகக் கத்தவே செய்தார் கதிரேசன். ஆனால் ஹரிணி மிரலாது, வந்த விசயத்தைச் சொல்ல, நம்பா‌து பார்த்தார் அவர். 


" ஸார், சாந்தாம்மா தா ஸார் அனுமதி குடுத்தாங்க. நீங்க வேணும்னா அவங்ககிட்டையே கேளுங்க." என மிடுக்காய் பேச,


அவளை ஏற இறங்க பார்த்தவன், 'நீ பாத்த வரைக்கும் போதும் வா.' என்பது போல் அவர் முன்னால் நடக்க ஹரிணி பின்னால் ஃபாலோ செய்தாள். திடீரென நின்றவர். 


" ஆமா ரெண்டு பேருன்னு சொன்ன. நீ மட்டும் தனியா இருக்க. இன்னொரு ஆள் எங். ம்... எங்க?" மிரட்டினார். 


'என்னடா இது!. பொதுவா டொனேஷன் குடுக்க வந்தா சந்தோஷப்பட்டு மரியாத குடுப்பாங்க. இங்க பாத்தா. இப்படி அநியாயத்துக்குக் காச வாங்கிட்டு விரட்டுறானுங்க. பேடு பாய்ஸ்.‌' என நினைத்தவள்,


"அது... எங்கூட... ஆமால்ல, இன்னொரு ஆள் வந்தான்ல. அவெ... கௌதம்.... கௌதம்... இங்க தா எங்கையாது... பாத்...ரூம் போ...ய். ஹாங்! அதோ வாரான். கௌதம். ஹேய் கௌதம்." எனத் திக்கி திணறிச் சமாளித்து நண்பனைப் பார்த்துக் கை ஆட்ட, அருகில் வந்தான் கௌதம். 


"நீ எங்க தம்பி போயிட்டு வர்ற.?" என்றார் அதே அதிகார தோரணையில். 


அவன் வாயைத் திறக்கும் முன் அவனுக்குப் பின்னாலேயே வந்த பெண், "என்னனு தெரியல அண்ணா. திடீர்னு நம்ம ரெக்கார்டு ரூம்ல இருந்த கம்ப்யூட்டர் ஒர்க் ஆகால. இவரு தா சரி பண்ணி தந்தாரு." என வெட்க புன்னகை சிந்த, கௌதமும் அந்தப் பெண்ணைப் பாத்து சிரித்தான். 


'ஐய்யோ!. இவன ஆல்ரெடி வில குடுத்து ஒருத்தி வாங்கிட்டான்னு தெரியாம இந்தப் பொண்ணு தா ரூட் விடுதுன்னா! இவனும் பதிலுக்குச் சிரிக்கிறான். இந்தக் கண்கொல்லா காட்சிய படம் பிடிச்சி இந்து கிட்ட போட்டுக் குடுத்தா எப்படி இருக்கும்.' ஹரிணியின் மைண்ட் வாய்ஸ் கேட்டதாலோ என்னவோ கௌதம் ஹரிணியின் கரத்தை அழுத்திப் பிடித்து நடந்தான். 


கதிரேசன் அந்தப் பெண்ணை முறைத்து விட்டு இவர்களை அழைத்துக் கொண்டு சென்றார். அதான்! ஜுராசிக் பார்க் சுத்தி பாத்தாச்சில்ல. வேறெங்க போக. அந்த வரவேற்பு கட்டிடத்துக்குத் தான். அங்குக் கதிரவனுக்கு எனத் தனி அறை இருந்தது. அது தான் நான்காவது அறை. இப்போது அதற்குள் தான் அமர்ந்திருக்கின்றன இருவரும். எதிரில் கதிரேசன் நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்றொரு நாற்காலியில் இருந்தார் சாந்தா குமாரி. 


சாந்தாம்மா மறுபடியும் அந்தக் காப்பகத்தின் அருமையையும் தயானந்தத்தின் பெருமையையும் பேச, இருவரும், 'எவ்ளோ நேரம் தா நாங்களும் கவனிக்கிற மாறியே நடிக்கிறது. சீக்கிரம் சொல்லி முடி பக்கி. ' என்பது போல் அமர்ந்திருந்தனர்.


கதிரேசன் ஒரு காகிதத்தில் எதையோ எழுதிக் கொண்டே இவர்களை முறைத்துக் பார்த்தார். சாந்தாம்மாவையும் தான்.


 'இந்தம்மாக்கு அறிவே இல்ல. ஐயாட்ட அனுமதி கேக்காம எதுக்கு இந்த ரெண்டு பேரையும் உள்ள விட்டாங்க. காசு குடுத்தா யாரனாலும் விட்டுடுறதா. முதல்ல ஐயாட்ட இத சொல்லனும். ' என நினைத்துக் கொண்டு அந்த காகிதத்தை மேஜையில் வைத்துவிட்டு எழுந்தார். 


அதிக பணத்தை நன்கொடையாக கொடுத்ததால் இருவருக்கு காப்பகத்தின் முத்திரை பதித்த ஒரு சான்றிதழும், அன்னை காப்பகம் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்ட ஒரு புத்தகமும் தரப்பட்டது. புன்னகையுடன் நாற்காலியில் இருந்தவர்கள் எழ எதானிக்க கௌதம் டேபிளை தட்டி விட்டான். பொருட்கள் அனைத்தும் கீழே விழ,


" ஸாரி... ஸாரி... அவனுக்காக நா ஸாரி கேக்குறேன்." என ஹரிணி எடுத்து வைப்பது போல் கதிரேசனின் கையெழுத்து அடங்கிய காகிதத்தை யாரும் அறியாமல் எடுத்துக் கொண்டாள். 


'அப்பாடா!. அந்த விக்கி கேட்ட கதிரேசனோட கையெழுத்தையும் எடுத்தாச்சி. அவெஞ்சொன்ன மாறி இங்கருக்குற குழந்தைகளோட விவரத்தையும் எடுத்தாச்சி. ' என நிம்மதி பெருமூச்சி விட்டபடி அந்த ஜுராசிக் பார்க்கில் இருந்து கை காலென உடலின் அனைத்தும் பாகங்களையும் முழுதாக எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டனர். 


" ம்... நா ஹாப்பியா தா இருக்கேன். இன்னைக்கி நா செஞ்ச காரியம் அப்படி. ஆமா இன்னைக்கி நாம செஞ்ச இந்த சாதனைக்கி, கின்னஸ் புக்ல நம்ம பேர எழுது வாங்கள்ளா கௌதம்.‌" 


"ம்... எழுதுவானுங்க எழுதுவானுங்க. புக்குல இல்ல. வேற ஒரு‌ இடத்துல. அத கட்டண கழிப்பறை சுவத்துலன்னு கூட சொல்லலாம்." என்றவனை அடிக்க போக, கதிரேசன் வேகவேகமாக ஒரு ஜீப்பில் ஏறுவது தெரிந்தது. 


" கதிரேசன் ஸார்... ஸார்... கதிரேசன் ஸார்... கொஞ்சம் நில்லுங்க." என கத்திக்கொண்டே பின்னாலேயே சென்று ஜீப்பின் முன் நின்றாள். 


' என்னவாம் இவளுக்கு. அதா அந்த கிங் காங் சும்மா தான போகுது. அத ஏ சொரிஞ்சி விடாற, இவா என்ன லூசா.! ' என்ற எண்ணம் கௌதமிற்கு மட்டுமல்ல வேனில் அமர்ந்து இவர்களின் செயல்களை கண்கானித்துக் கொண்டிருக்கும் மற்ற மூவருக்குமே வந்தது. 


" என்ன வேணும்?." என அவர் அதட்டலாக கேட்க,


"அது... எனக்கு ஒரு உதவி வேணும். உங்களால செய்ய முடியும்னு சாந்தாம்மா சொன்னாங்க. அதா பேசலாம்னு வந்தேன்." 


"உனக்கு எதுக்கு நா உதவி பண்ணனும்?." 


"எதுக்குன்னா நா..." என பதில் செல்லும் முன்,


"ம்... எதுவா இருந்தாலும் என்னால செய்ய முடியாது. எனக்கு வேல இருக்கு. உங்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல. வழிய விடு." கதிரேசன் அலட்சியமாக சொல்லி ஜீப்பை எடுக்க, ஹரிணி வேகமாக வந்து ஜீப்பில் அமர்ந்து கொண்டாள். அவளை முறைத்த கதிரேசனிடம்.,


" நீங்க பாட்டுக்கி ஓட்டுங்க கதிரேசன். நா பாட்டுக்கி பேசிட்டு வரறேன். டயம் இஸ் கோல்டு. அத வேஸ்ட் பண்ண கூடாது. ஹேய் கௌதம். வா‌ டா. வந்து உக்காரு. ஜீப்புக்குள்ள காலடி எடுத்து வைக்க உனக்கு ஆரத்தி கரச்சி எடுத்துட்டு வரனுமா என்ன!. வா.‌" என அழைக்க,


'ரைட்டு... சைத்தான் ஜீப்புக்கு கூப்பிடுது.‌ இப்பதா நா ஒரு உன்னதமான ஜுராசிக் பார்க்ல இருந்து தப்பிச்சி வாரேன். அதுக்குள்ள கிங் காங் கிட்ட மாட்டிவிட்டா எப்படி?. கொஞ்சம் ப்ரேக் விட்டு ப்ரேக் விட்டு ஷாக் குடுத்தா நல்லா இருக்கும். ஒரேடியா குடுத்தா நானும் ஒரேடியா போய்ச் சேந்திட மாட்டேன்னா.‌ நா பிள்ளை குட்டிகாரென். முந்தியாது ஒன்னு. இப்ப ரெண்டு பிள்ள. அதுகளுக்கு நா ஒரே ஒரு அப்பா. எனக்கு ஒரே ஒரு வைஃப்பு. காப்பாத்தி கர சேத்துடு கடவுளே. ' என மனதில் நினைத்தாலும் வெளியில் காட்டாது ஏறி அமர்ந்தான்.‌


" ஸார்... என்னோட பேரு ஹரிணி. இவெ." என முதலில் இருந்து ஆரம்பிக்க,


'ஏய் இப்பத்தான அந்த பொம்பள சொல்லுச்சி. நாம ரெண்டு பேரும் யாருன்னு. நீ மறுபடியும் ஆரம்பிச்சா எப்படி.?' என்பது போல் கௌதம் முணுமுணுக்க, அது கதிரேசனுக்கு கேட்டு விட்டது போலும். ஒரு கையை உயர்த்தி, ஸ்டாப் சிக்னல் கொடுத்தார். 


" நீங்க யாரு என்னங்கிறது எனக்கு தெரியும். உனக்கு என்ன கேக்கனுமோ அத மட்டும் கேளு. இல்லனா இறங்கி போய்டு." என்க, அவள் ஓகே என தலை அசைக்கவும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். அது மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே சென்றது. முகத்தை உரென வைத்துக் கொண்டு பாதையில் கவனமாக இருந்த கதிரேசன், ஹரிணியை திரும்பி பார்த்தார், 'நீ இன்னும் பேசல.' என்பது போல்,


'காலைல இவரு சாப்ட பொங்கல்ல யாரோ மிளகு அள்ளிப் போட்டுட்டாங்க போல. அதா மூஞ்சிய கடுகடுன்னு காரமாகவே வச்சிருக்காரு. தண்ணி குடிச்சா சரியாப் போட்டும். ஆனா யாரும் இவருக்கு குடுக்கல போல. பாவம். ' ஹரிணியின் மைண்ட் வாய்ஸ். 


"இப்ப பேச போறியா இல்ல கீழே இறங்க போறியா." என்க, 


" அது... அது எனக்கு உங்க காப்பகத்துல இருந்து ஒரு குழந்தைய தத்தெடுக்கனும்னு ஆச. அதா அதுக்கான ப்ரோஸிஜர் என்னன்னு உங்கிட்ட கேக்கதா வந்தேன். சாந்தாம்மா உங்ககிட்ட பேச சொன்னாங்க. ஒரு வாரத்துக்குள்ள எல்லா லீகல் ப்ராஷஸ்ஸையும் முடிச்சி குடுத்தா நல்லா இருக்கும்." என்ற போது ஜீப் நிறுத்தப்பட்டது, சடன் ப்ரேக் போட்டு. கீழே இறக்கி விடப்போறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏன்னா அவரு இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது. அதான் நிப்பாட்டிடாறாரு.‌


' தத்தா... இது நம்ம லிஸ்ட்டுலையே கிடையாதே. ' கௌதமின் மைண்ட் வாய்ஸ். 


" இங்கு ஒரு ஒத்தையடி பாத போதுல்ல. அதுல போனிங்கன்னா ஆட்டோ கிடைக்கும். அதுல ஏறி ஊருக்குள்ள போங்க. என்னால உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது." என்றவர் ஜீப்பை நிறுத்தி விட்டு ஒரு மலை மேட்டில் நடக்க போக, ஹரிணி தடுத்தாள். 


" என்னால ஒரு குழந்தைய நல்ல படியா வளக்க முடியும். அந்த க்ரீன் கலர்ல சர்ட் போட்டிருந்த ஆறு வயசு பையன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேரு ஹர்ஷா. அவன நா தத்தெடுக்க ஆச படுறேன். ப்ளீஸ் ஸார்." என்க,


" இதோ பாரு. நாங்க ஒன்னும் அநாதை ஆஸ்ரமம் நடத்தல, தத்து குடுக்க. நாங்க காப்பகம் தா வச்சி நடத்துறோம். அதாவது அப்பாம்மா இருந்தும் பாத்துக்க முடியாத குழந்தைங்கள. ஒன்னு ரெண்டு பேருக்கு பெத்தவங்கன்னு யாரும் இல்ல தா. ஆனா நாங்க யாரையும் தத்து குடுக்குறது இல்ல. இதுக்கு மேல பேசாமா கிளம்புங்க. ஊருக்குள்ள இன்னும் நிறையா அநாதை ஆஸ்ரமம் இருக்கு. போய் அதுல ஒரு குழந்தைய எடுத்துக்க. வந்துட்டா இங்க. காச குடுத்தோம்மா போனாம்மான்னு இல்லமா தத்து கித்துன்னு." என இரக்கம் இன்றி சொல்லி அந்த சிறிய மேட்டில் உள்ள ஒத்தையடி பாதையில் ஏறிச் சென்றார். 


அந்த மேட்டின் உச்சியில் ஒரு வீடு இருந்தது. அங்கு தான் செல்கிறார். அது அவரின் வீடாக இருக்க வேண்டும். ஹரிணி அசையாது நின்று யோசிக்க. கௌதம் கதிரேசனை பின் தொடர்ந்தான். 


" நா தத்தெடுக்குறதுல இந்தாளுக்கு என்ன பிரச்சினையாம். ம்... ச்ச..." எனப் புலம்ப,


"தத்த நீ வேற எங்கையாது எடுக்க நினைச்சா பிரச்சினை இல்ல. நீ அன்னை காப்பகத்துலல்ல எடுக்க நினைக்கிற. அதா பிரச்சினையே." என்றபடி வந்தான் விக்னேஷ். அவர்களை பின்தொடர்ந்து. 


"ஹாய் விக்கி. இந்தா... அந்தாள் கை பட எழுதுன பேப்பர். மளிக சாமான் கணக்கு போல.‌ ஒரு வாரத்துக்கு மட்டும் லட்ச ரூபா செலவு செய்றாங்களாம். அதுவும் மளிக சாமான் மட்டும். ஆமா வேன் எங்க?." என காகிதத்தை அவனிடம் குடுத்தவள், அவனுக்கு பின்னால் எட்டிப் பார்க்க பவதாவும் மனோகரும் வந்தனர். 



"எதுக்கு தேவையில்லாம அந்தாள் ஜீப்ல வந்த. உங்கமேல சந்தேகப்பட்டு எதாவது பண்ணான்னா." விக்னேஷ் கோபமாகவேக் கேட்டான். 


" எங்கள பாதுகாக்க எங்களுக்குத் தெரியும் விக்கி. அந்தத் தைரியம் இருக்குறதுனால தா இங்க வந்தோம். ஒரு போலிஸ் காரெனுக்கு உதவியும் செய்றோம். எங்கிட்ட கிடைச்சத உங்கிட்ட குடுத்துட்டேன். பட் எங்களுக்கு வேண்டியது கிடைக்காம கௌதம் கைல இருக்குற தகவல் உங்கைக்கு கிடைக்காது. நம்ம டீல் நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்." என்றாள் ஹரிணி. 


" கண்டிப்பா நியாபகம் இருக்கு. நாளக்கழிச்சி பார்கவி கேஸ் ரிலேட்டடான எல்லா டீட்டைல்ஸ்ஸும் உங்க கைல இருக்கும். அதுக்கப்பறம் நம்ம டீல் முடிஞ்சி போய்டும்." 


"ம்... ஆமா... முடிச்சி போய்டும்." என்றாள் புன்னகையுடன்.


" பட் ஒரு ஃப்ரெண்டா உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய பண்ணுவேன். பார்கவி கேஸ்ல." 


" அதுவும் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் மாறியா!. ஒரு ஹெல்ப் பண்ணி இன்னொரு ஹெல்ப் வாங்கிக்கனுங்கிற. பிஸ்னஸ் டீல் மாறி இருக்குமா?." 


" நிச்சயம் இருக்காது." என்றான் புன்னகையுடன்.


" அது அந்தாள் வீடுன்னு நினைக்கிறேன்." என வீட்டைக் கைக்காட்ட,


"அது எங்களுக்குத் தெரியும். பட் உள்ள போறது கஷ்டம். சுத்தி கேமரா இருக்கு. சில இடத்துல ட்ராப் கூட இருக்கலாம். ரெண்டு நாளாக நாங்க இந்த இடத்துக்கு வந்துட்டும் போய்டும் தா இருக்கோம். எந்த வழியும் கிடைக்கல. ஆனா வீட்டுக்குள்ள போறது தேவயில்லன்னு நினைக்கிறேன். கையெழுத்து பக்காவ மேச் ஆகிருக்கு. சுருதி கேஸ்ல சில கேமரால, இந்தாளோட ஜீப் க்ராஸ் ஆனது பதிவாகிருக்கு. அந்த மெஸ்ஏஜ் வந்த ஃபோன் யாரோடதுன்னு இன்னைக்கி நைட்குள்ள தெரிஞ்டும்." விக்னேஷ். 


" இவரு தா கொல பண்ணாருன்னு சொன்னா! எதுக்கு பண்ணனும். என்ன காரணமா இருக்கும்?." ஹரிணி


"தெரியல. பட் நமக்கிட்ட இருக்கற இந்த ஆதாரத்த வச்சி அவன கைது பண்ணி விசாரிச்சி ஏன் பண்ணாங்கிற காரணத்த தெரிஞ்சிக்க முடியும்." விக்னேஷ்.


"போலிஸ் ஸ்டைல்ல விசாரிச்சா உண்ம வந்திடும்." ஹரிணி. 


"ம்... சொல்லிட்டு தா மறு வேல பாப்பான். அட போங்கடா நீங்களும் உங்க கற்பனையும்." மனோகர் சொல்ல, ஏன் என்பது போல் பார்த்தாள் ஹரிணி. 


"அண்ணா சொல்றது சரிதா. நீ கலெக்ட் பண்ண எல்லாமே வலுவான ஆதாரம் கிடையாது. சோ... ஈஸியா வெளில வந்திடலாம். ஜாமின் அது இதுன்னு இருக்குமே தவிர குற்றவாளி இவெந்தான்னு உன்னால கண்ஃபார்ம் பண்ண முடியது." பவதா. 


" பரவாயில்ல. சந்தேகம்னு பிடிச்சி குடுத்துட்டு ஊர் பக்கம் போய்டலாம். இதுக்கு மேல இருந்தா என்ன இவெ காடு காடா சுத்த விட்டுடுவான். இவெ கொலகாரன கண்டுபிடிக்கிறதுக்குள்ள, நம்மல டெத் பாடி ஆக்கிடுவான் போலயே." என்றான் மனோ. பாதுகாப்பு கருதி வேனை ரோட்டை விட்டு இறக்கி காட்டிற்குள் மறைத்து நிப்பாட்டி விட்டு வந்தவன் அல்லவா! அதான். கூடவே பவதா,


"பயமா இருக்குண்ணா..."எனத் தொனத்தொனத் தொனவென பேசி அவனுடைய பாதி உயிரை எடுத்து விட்டாள். மீதி உயிரும் போகும் முன் சென்னைக்கி ஓடி விட வேண்டும் என்று நினைக்கிறான். 


" பவதா சொல்றது சரி. கதிரேசன பத்தி முழுசா தெரியனும்னா... அதுக்கு அந்தாளோட வீட்டுக்குள்ள போனும்." 


"எப்படி?." என்ற போதே கதிரேசன் வந்தான். இவர்களை நோக்கி அல்ல. அவரின் ஜீப்பை நோக்கி. கைத்தாங்கலாக ஒரு சிறுவனை இடையோடு பிடித்தபடி. 


பார்க்க விடலை பையன் போல் ஐந்தரை அடி உயரத்தில் அரும்பும் மீசையுடன் தோற்றமளித்தாலும், உடல் மெலிந்து போய் இருந்தது. பதின்ம வயது பையனை மிக எளிதாக ஒரு கரத்தால் தூக்கி விடலாம். ஆனால் அதற்கே அந்த கதிரேசனுக்கு வேறு ஒருவரின் உதவி வேண்டியதாக இருந்தது. சிறுவனின் உடல் அதிக எடை இல்லை போலும், அவருக்கு பின்னாலேயே ஒரு நர்ஸ் உடை அணிந்த ஒரு பெண் தான் உதவினாள். மூவரும் ஜீப்பில் சென்றனர்.‌


"அப்றம் என்ன அந்தாளு தா வீட்ட காலி பண்ணிட்டு போய்டாப்லேல. நீ போய் வீட்டுக்குள்ள எதாவது கிடைக்கிதான்னு பாரு." மனோ.‌


"ஆனா கேமரா?." விக்னேஷ்


" அத நா பாத்துக்கிறேன். என்னால பத்து நிமிசத்துக்கு அத சந்தேகம் வராம ஸ்டாப் பண்ணி வைக்க முடியும். இந்த ஒத்தையடி பாத வழியா போகாம மரங்களுக்கு இடைல போங்க. சரியா இருக்கும்." கௌதம்.


"வா மனோ. பவதா நீயும் ஹரிணியும் வேன்ல இருங்க." என நடக்க, அவன் உடன் யாரும் வரவில்லை. 


" என்னடா?. " விக்னேஷ் மனோகரை பார்த்து. 


" போற உசுரு நா பிறந்த ஊர்ல தா போகனும்னு ஆசப்படுறேன். அதுனால என்னால வர முடியாது." என்க,


"என்னாலயும் முடியாது. இவா கூடல்லாம் தனியா இருக்க முடியாது." பவதா. 


அவளுடன் சண்டைக்கி நின்றாள் ஹரிணி. 


" பவதா ம்மா நீ எங்கூட வா. ஹரிணி நீ." கௌதம்.


" விக்கி கூட போறேன்."


"மனோ நீ யாராது வந்தா சந்தேகம் வராத மாறி சிக்னல் குடு. குடுத்துட்டு." கௌதம்.


"குடுத்துட்டு ஓடிப் போய்றேன். நீங்க உசுரோட இருந்தா சென்னைல வந்து பாக்குறேன். சரி யா." என்க,


" வேன ரெடியா வச்சிரு டா." என விக்னேஷ் அவனின் தலையில் தட்டி கூறினான். 


கௌதம் கேமராக்கள் வேலை செய்யாது பார்த்துக் கொள்ள, ஹரிணியும் விக்னேஷும் கதிரேசனின் வீட்டிற்குள் சென்றனர். 


பத்து நிமிடம் தான். ஆனால் அதற்கும் குறைவான நேரமே இருவருக்கும் போதுமானதாக இருந்தது. விக்னேஷிற்கு வேண்டிய அனைத்தும் அங்கு கிடைத்தது. என்ன அது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்கலாம்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 14


விழி 16


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...