முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 14


 

அத்தியாயம்: 14


அண்டாகா கசம்... ஆபூக்கா புகும்... திறந்திடு ஷீஷே...


என்ற மந்திர வார்த்தைகள் சொல்லாமலேயே அந்த இருப்பு கதவு திறந்தது.


காரணம்...


பணம்... 


"பின்ன லட்ச கணக்குல நன்கொட குடுக்க வந்திருக்கோம்னு சொன்னா விட்டுத்தான ஆகனும். காசே தா கடவுள். கன்னத்துல போட்டுங்கங்க." ஹரிணியின் மைண்ட் வாய்ஸ். 


உள்ளே வந்த ஹரிணிக்கும் கௌதமிற்கும், 'ஏன்டா இந்த ரெண்டு பிள்டிங்க பாதுகாக்கத்தா இத்தாம் பெரிய கதவா!. ' என்றிருந்தது.


ஏனெனில் அங்கு இருந்தது அப்படி. உள்ளே சில அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு வரவேற்பு கட்டிடம் இருந்தது. வரவேற்க தான் யாரும் இல்லை. ஆனால் அங்கிருக்கும் கண்கள் அனைத்தும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தன. அவர்கள் இருவரையும் மறைந்து இருந்து கண்காணித்தனர். இருவரையும் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமரச் சொல்லி விட்டுச் சென்றார் அந்த வாட்ச்மேன்.  


அவர்களின் உடைமைகள் அதாவது ஹண்டு பேக்ஸ், செல் ஃபோன் போன்றவை வாங்கி வைக்கப்பட்டன. முக்கியமாக விக்னேஷ் தந்த ப்ளூடூத்தும் அதில் அடக்கம். இனி விக்னேஷுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் கேமராக்களின் உதவியால் விக்னேஷ் அங்கு நடப்பதை பார்க்கலாம்.


"எனக்கு என்னமோ நாம வழி மாறிப் பாகிஸ்தான் ஆர்மி கிட்ட மாட்டிக் கிட்டோமோன்னு தோனுது. ஆமா! ஊட்டிப் பக்கத்துல பாகிஸ்தான யாரு தூக்கிட்டு வந்து வச்சிருப்பா.?" என்ற ஹரிணியை கௌதம் முறைக்க,


"இல்ல! பெரிய பெரிய கேட்டு, இங்க இருக்குவங்க பார்வ, முக்கியமா அந்த ரூம்ல இருந்து நம்மல எட்டி எட்டி பாக்குதே அந்தாளு, இதெல்லாம் நம்மல வேவு பாக்குற மாறி ஃபில் பண்ண வைக்கிது." 


"ஏ தேவையில்லாம ஃபில் பண்ற?. அது தான நடந்துட்டு இருக்கு. நாம எதிரி நாட்டுக்குள்ள நுழஞ்சிட்டோம். தப்பிச்சி எப்படியாது வெளில போய்டனும். "


"அப்ப வந்த வேல?." 


"அங்க பாரு. அங்க சில ரூம்ஸ் இருக்கு. அதுல எதாவது ஒன்னுல கம்ப்யூட்டர் இருக்கும். அதுல இருந்து எதையாது எடுத்துட்டு. சில ஃபோட்டோவையும் எடுத்துட்டு. குப்ப தொட்டில இருந்து நாளு பேப்பரையும் எடுத்து, கொண்டு போய் அந்தப் போலிஸ் காரெங்கிட்ட குடுத்துட்டு ஊர் போய்ச் சேர வேண்டியது தா." என்ற கௌதமை முறைத்தாள் ஹரிணி. 


இருவரும் என்னென்ன உள்ளது என்று நோட்டம் விட ஆரம்பித்தனர்.


ஆங்காங்கே கேமராக்கள் இருந்தன. வலது பக்கம் ஒரு பெரிய கட்டிடம். இடது பக்கம் மற்றொரு கதவு. அதுவும் நல்ல உயரம் தான். நடுவில் வரவேற்பிற்கென ஒரு கட்டிடம். வலது பக்கம் இருப்பது சீசீடீவி பதிவுகளைக் கண்காணிக்கும் கட்டிடமாக இருக்க வேண்டும். பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே ஆட்கள் நடமாடும் சத்தம் வந்தது. அப்படியெனில் அதற்கு வேறொரு கதவும் உண்டு. 


இடது பக்கம் காப்பகத்திற்குள் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையாக இருக்க வேண்டும். அதையும் இரும்பு கதவு போட்டுப் பூட்ட வேண்டிய அவசியம் என்ன.? குழந்தைகள் காப்பகம் என்றால் இங்கு ஒரு குழந்தையின் சத்தம் கூடக் கேட்கவில்லையே! ஏன்?. 


அவர்கள் இப்போது அமர்ந்திருக்கும் கட்டிடத்தில் மாடி என்று ஏதும் இல்லை. கட்டிடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன. ஒன்று தயானந்தத்திற்கானது. அவரின் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை வாசலில் இருந்தது, Originator அதாவது தோற்றுவித்தவர் என்று. உள்ளே என்ன இருக்கிறது என்று உள்ளே சென்று பார்க்காதவரை யாருக்கும் தெரியாது. ஒலி மட்டும் அல்ல ஒளியும் வெளியே வராதபடி தான் இருந்தது அந்த அறை. 


மற்றொன்று ப்ரேயர் ஹால் போல் இருந்தது. எங்களுக்கு எல்லா கடவுளும் ஒன்று தான் என்பது போல் அனைத்து கடவுள்களின் புகைப்படமும் பெரிய அளவில் சிலையாக வடிக்கப்பட்டு இருந்தன. மற்றபடி பெரிதாக மேஜையும் நாற்காலியும் தவிர ஏதுமின்றி காணப்பட்டது. 


அடுத்த அறை, அதை எட்டி பார்க்கும் முன் அறையிலிருந்து ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் வந்தார்.  


சாந்தகுமாரி. அதன் நிர்வாகி, மற்றும் தலைவி ஆவார். பெயருக்கு ஏற்றார் போல் சாந்தமான முகம். 


"யாரு நீங்க?. இங்கல்லாம் இப்படி வரக் கூடாது. எதுக்கு வந்திருக்கிங்க?." என அதட்டலாகக் கேட்க, அவரிடமும் காப்பகத்திற்கு நன்கொடை வழங்க வந்துள்ளதாகக் கூறினர் இருவரும்.  


சந்தேகமாகப் பாத்த அவரிடம், நம்பும் படி பல கதைகள் சொல்லி ஒரே செக்கில் பத்து லட்சத்தைத் தலா இருவரும் தனித்தனியாக எழுதிக் கையில் வைத்துக் கொண்டபின், அந்தச் சாந்தமான முகத்தில் முப்பத்து பல் முளைத்தன. 


ரெண்டு பல் சொத்தை என்று புடிங்கி விட்டார். அதான் முப்பத்து.


"ஆக்ஸலி. தயா ஐயாவே எல்லாத்தையும் பாத்து பாரு. இங்கருக்குற கிட்ஸ் எல்லாத்துக்கும் அவரு தா கடவுள். அவருக்கு அப்றம் அவரோட பையன் போஸ் தா எல்லாமே. அவங்க ரெண்டு பேரோட கனவு தா இந்தக் காப்பகம். கொறஞ்சது ஒரு லட்சம் மாற்று திறனாளி குழந்தைகள நல்ல படியா படிக்க வச்சி அவங்களுக்குன்னு ஒரு லட்சியத்த உருவாக்கி, அத அவங்களையே அடைய வைக்கனும்கிறது தா ரெண்டு பேரோட லட்சியமும். நாங்க எல்லாரும் அத நிறைவேத்த பாடுபடுறோம்‌. இப்ப நீங்களும் அதுக்கு உதவி செஞ்சிருக்கிங்க. ரொம்ப நன்றி. ஒரு வகையில நீங்களும் கடவுள் தா. இல்லாத இயலாத குழந்தைகளுக்குச் செய்தால." என உணர்ச்சி பொங்க பேசினார்.


"என்னோட மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்னு தா இதெல்லாம் பண்றேன் மேம். இன்னைக்கி என்னோட குழந்த பிறந்த நாள். இறந்த நாளும் கூட. அத மறக்க முடியாது. யாரு நினச்சாலும் திருப்ப அவன எம்முன்னாடி கூட்டீட்டு வர முடியாது. ஆனா அவெ முகத்த பாக்க முடியும், அவன மாறி இருக்குற பிஞ்சி குழந்தைகளோட சிரிச்ச முகத்துல. அதா இன்னைகே‌ வந்தோம். ஸாரி. உங்கள நாங்க டிஸ்டர்ப் பண்ணிட்டோமா.?" ஹரிணி. 


" அதெல்லாம் இல்ல. நீங்கச் செஞ்ச காரியம் ரொம்ப பெருசு. உங்கள மாறி நல்ல மனசுக்காரங்க பண்ற உதவியால தா எங்க குழந்தைகள நல்ல படியா வளக்க முடியுது. ஹாங்! எங்களுக்கு வர்ற எல்லா டொனேஷனையும் நாங்க ரிஜிஸ்டர்ல எழுதி வச்சிருக்கோம். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க, நா போய் எடுத்துட்டு வந்து உங்க டொனேஷன வாங்கிக்கிறேன்." சாந்த குமாரி சொல்லித் திரும்ப, 


" மேடம் தப்பா எடுத்துக்கலன்னா, நாங்க உள்ள போய்க் குழந்தைங்கள பாக்கலாமா.? ஒவ்வொரு வர்ஷமும் இதே நாள்ள அவனுக்காக ஒவ்வொரு ஆஸ்ரமத்துக்கு போய் என்னால முடிஞ்சத செய்வேன்.‌ இன்னைக்கி குழந்தைகளோட சிரிச்ச முகத்த பாக்கலன்னா எனக்கு. எனக்கு..." எனக் கண்ணீரை துடைக்க,


" இல்ல, வெளி ஆட்கள நாங்க இந்த இடத்த தாண்டி விடுறது இல்ல. ஆனா நீங்க எங்களுக்கு உதவி செய்றவங்க. இருந்தாலும்... எப்படி?." என யோசிக்க,


"மேம் ஃப்ளீஸ். கொஞ்சம் எங்க நிலமைய புரிஞ்சிக்கங்க. நாங்க சந்திச்ச இழப்ப மறக்கத்தா இங்க வந்தோம். பாக்கலன்னா இன்னைக்கி முழுக்க இவளால தூங்கவே முடியாது. ஒரு பொண்ணா என்னோட ஃப்ரண்டு நிலமைய புரிஞ்சிக்கங்க. ப்ளிஸ்." எனக் கௌதம் ஹரிணியின் தோளில் கை வைத்து அணைத்தபடி சொல்ல, அவர் வெகுநேரம் யோசித்து.


"ஓகே. பட் அரமணி நேரம் தா. அதுக்கு மேல நீங்கக் குழந்தைங்க பக்கத்துல இருக்க வேண்டாம். ஏன்னா இங்க இருக்குற பல குழந்தைங்க பிஸிக்கலி சேலஞ்சுடு கிட்ஸ். அவங்களுக்கு கோபம் அதிகமா வரும். கைல கிடைக்கறத தூக்கி போட்டுங்க. அடிபட வாய்ப்பிருக்கு. அதான். மத்தபடி ஒன்னுமில்ல. கொஞ்சம் தூரத்துல இருந்தே பாருங்க. பேசவோ பக்கத்துல போகவோ வேண்டாம். ம்." என்றவர்,


" ஜான்... ஜான்..." என உரக்க அழைத்தார். முப்பது வயது மதிக்கத் தக்க ஆண் வந்து நின்றான். அவனின் காதில் எதுவோ சொல்லி இவர்களை அழைத்துப் போகச் சொன்னார். 


அவன் ஹரிணியை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தபடி, சாவியை எடுக்கச் சென்றான். 


'இந்தச் சைக்கோ ரோமியோ மத்தியில எப்படி சின்னக் குழந்தைங்க வளரும். ' நினைத்தபடி கௌதம் அவனை உற்று நோக்க, அவன் ஹரிணியுடன் வலிந்தபடி சாவி கொண்டு கதவைத் திறந்தான். 


"நீ என்ன மாறி ஃபீல் பண்ற கௌதம்.‌ நா வண்டலூர் ஜூ க்குள்ள நுழயப்போற மாறி உணருறேன். "


" எஸ், எனக்கும் சேம் ஃபீலிங்கு தா. அங்க பாரு சிங்கம். இங்க பாரு கரடி. அங்க பாரு யானன்னு. நமக்கு ஒவ்வொரு கூண்டுலயும் அடச்சி வச்ச குழந்தைங்கள காட்ட போறாங்க போல." 


"எல்லா ஆஸ்ரமமும் இப்படி தா இருக்குமா. நா இதுவரைக்கும் போன ஆஸ்ரமத்துல எல்லாம் இப்படி ஜெயில்ல வச்சி பிள்ளைங்கள வளக்கல. நீ இந்த மாறி ஆஸ்ரமத்த இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா?. "


" நல்ல வேள அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கல.‌ யாரு செஞ்ச புண்ணியமோ எங்கப்பெ கோபத்துல இங்க கொண்டு வந்து சேக்காம போய்ட்டாப்ல. இல்லன்னா நா என்ன ஆகிருப்பேன்." எனக் கௌதம் புலம்ப, 


" அப்ப இவங்க அந்தப் பிள்ளைங்கள கொடும படுத்துறாங்களா.?"


" உள்ள‌ போய்ப் பாத்தா தெரிஞ்சிடும். அங்க பாரு ஜான் ஜெல்லு ஃபேக்டரிய திறந்து விட்டு அதுல நீந்துறான்." என ஹரிணியை பார்த்துப் பல்லைக் காட்டும் ஜானை காட்ட, அவளும் பதிலுக்குச் சிரித்து வைத்தாள். 


" நா அவன பாத்துக்கிறேன். நீ என்ன பண்ணனும் தெரியும் தான. வந்த வேலய முடிப்போம்." என்றவள்.


" ஹாய் ஜான்!. நீங்க தா இங்க எல்லாமே போலவே. கிங் மாறித் தெரியுறிங்க எனக்கு." என அவனுடன் பேச்சுக் கொடுத்தாள். 


இரும்பு கதவைத் தாண்டி அரை கிலோ மீட்டர் நடந்திருப்பர். அதுவரை யாரும் கண்ணிற்கு தெரியவில்லை. மரம் செடிகளைத் தவிர ஒரு செங்கல் கூட மாட்டவில்லை. பின் ஒரு பெரிய கட்டிடம் வந்தது. அது தான் குழந்தைகளுக்கான இடம் போலும்.


அது அவர்கள் நினைத்து வந்த சிறை போல் இல்லாமல் சுதந்திரமாகக் குழந்தைகள் சுற்றி திரிந்தனர். அதுவும் சந்தோஷமாக.


வயசு வித்தியாசம் ஏதுமின்றி கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட மனநலம் குன்றிய குழந்தைகள். கை, காலென உடல் ஊனமான குழந்தைகள். ஏன் சில தீராத நோயான எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இருந்தனர். இது அவர்களின் விளையாட்டு நேரம் போலும். பல ஆசிரியர்கள் உடன் இருந்து கவனித்துக் கொண்டனர். அவர்கள் விளையாட என விலையுயர்ந்த பல விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. 


'ச்ச... இவ்வளோ நல்லா பாத்துக்கிறாங்க? இவங்களப் போய்த் தப்பா நினைச்சிட்டோமே. ' என இருவரும் வருத்தப்படும் அளவுக்கு அங்குக் குழந்தைகளின் முகம் இருந்தது. 


சாதாரண காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு வித ஏக்கம் இருக்கும். நிராசையான பார்வை ஒன்றை நம்மேல் செலுத்தி, நம் அன்பை பேற நினைக்கும். ஆனா‌ல் அது போன்ற எதுவும் இங்கு இல்லை. ஆசை, பாசம், உணவு, உடையென அனைத்தும் அளவுக்கு அதிகமாகவும் நல்ல விதமாகவும் தரமானதாகவும் இருந்தன. 


சிறிது நேரம் அவர்களுடன் ஹரிணி விளையாடக் கௌதம் அங்கிருக்கும் குழந்தைகளின் பெயர், ஏன் இங்கு வந்தனர்.? எப்படி அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கிறது என அங்கிருக்கும் ஆசிரியர்களை விசாரித்தான். அவர்கள் கூறிய சில, ஆச்சர்யத்தை தந்தது. இப்படியும் நடக்குமா என்று இருந்தது.


" எல்லாமே காஸ்லியா தெரியுதே. எப்படி சிஸ்டர்? அப்பாம்மா இல்லன்னாலும் ரொம்ப ஹப்பியா இருக்காங்களே!."


" ஸார் அது எல்லாமே எங்களுக்கு நன்கொடையா வந்தது. இங்க இருக்குற எல்லா குழந்தைகளும் அநாதைக கிடையாது ஸார். மனவளர்ச்சி இல்லாத, சரியா பேச முடியாம, சில நோய் இருக்குற குழந்தைங்கள வீட்டுல வச்சி பாத்துக்கிறது ரொம்ப கஷ்டம். அதுனால இங்க வந்து விட்டுட்டு போய்டுவாங்க. போஸ் ஸார் தான் ட்ரீட்மெண்ட் குடுத்து பாத்துப்பாரு. 


நல்லா ஆகுற வர இங்க தா இருப்பாங்க. அந்த மாறிக் குழந்தைங்களோட பெத்தவங்க அவங்க பொறுப்ப, ஐ மீன் தங்க,‌ சாப்பிட, ட்ரீட்மெண்ட்டுக்குன்னு டொனேஷனா தந்திடுவாங்க. அவங்க குழந்தைங்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் சேத்து தான். மாசத்துக்கு ஒருத்தர் தந்தாலே போதும் சார். எல்லாரும் ஹப்பியா இருக்க." என்றார் ஒரு ஆசிரியர்.


அதாவது மனவளர்ச்சி குன்றிய குழந்தையை என்னுடைய பிள்ளை தானென இந்தச் சமூகத்திற்கு அடையாளம் காட்ட விரும்பாத பல பணக்கார்களுடைய குழந்தை இங்க இருக்கிறது. பணத்தை கொடுத்துக் கவனிக்கும் பொறுப்பை இவர்களிடம் தள்ளி விட்டு விட்டு அவர்கள் நிம்மதியா இருக்கிறார்கள். 



‘எதுக்கு பிள்ளைய பெத்துக்கனும். அத தொல்லையா நினச்சி இங்க கொண்டு வந்து விடனும்.‌ 


ஆமா நமக்கு எதுக்கு இந்தக் கேள்வி. இதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ். நாம விக்னேஷ் கேட்டத மட்டும் எடுப்போம்.‌ சரி எங்கையாது எதாவது கிடைக்கிதான்னு பாப்போம்.‌' என நினைத்துக் கொண்டு கௌதம் பார்வையை சுழல விட்டான்.


ஒரு சிறிய அறைபோல் ஒன்று இருந்தது. அதில் கருப்பு சிவப்பு எனப் பல வண்ண நிறங்களில் ஃபைல்கள் இருந்தன. ஒரு சிறிய கணினியும் இருந்தது. கௌதம் அந்த ஆசிரியருடன் பேசிக்கொண்டே, அங்கு அழைத்துச் சென்று அவைகளில் சிலவற்றை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். 


திடீரென இரு குழந்தைகளுக்குள் சண்டை வர, அது என்னன்னு பாக்க அந்த டீச்சர் அந்தப் பக்கமாக நகர்த்தார். கௌதம் தன் வாட்சை அந்தக் கணினியில் இணைத்து முடிந்த வரை தகவல்களை எடுத்துக் கொண்டான். 


'என்ன கருமம்னே தெரியல. கண்ணுக்கும் கைக்கும் எது கிடைச்சாலும் எடுத்துட்டு போய் அந்தப் போலிஸ்காரெ கிட்ட குடுத்திட வேண்டியது தா. குப்பைய கிளறி எது வேண்டுமோ அத எடுத்துப்பான். ' என்பது போல் இருந்து அவனின் செயல்.


இங்கு ஹரிணியோ ஜானிடம் பேசிக் கொண்டு வந்தாள். 


"இந்தக் குழந்தைகளுக்கு ட்ரீட்மெண்ட் எங்க வச்சி பாப்பிங்க?. ஏன்னா வெளில கூட்டீட்டு போவீங்கன்னு தோனல. அதா கேட்டேன். "


" போஸ் ஸார் பாத்து பாரு. மாசத்துக்கு ரெண்டு மொற வந்து அதோ அங்க இருக்கு பாருங்க. அது தா மினி ஹாஸ்பிடல். அங்க தா பாப்பாரு. தேவ பட்டா வெளில பெரிய ஹாஸ்பிடலுக்கும் கூட்டீட்டு போவாரு." 


" ஓ... சூப்பர் மேன் தா அவரு." எனப் பாராட்ட,


"அது சமயக்கூடம். அப்றம் அதுக்கு அடுத்து இருக்குறது ஹாஸ்டல். இது எல்லாமே இங்க தங்கி இருக்குறவங்களுக்கு மட்டும் தா. மத்தபடி ஒரு ஸ்கூல் இருக்கு." 


" அது தனியா இருக்கு சரியா. இந்தக் காப்பகத்துக்கும் அதுக்கும் சம்மந்தம் கிடையாது." 


" ம்... ஆமாங்க. கரெக்ட்டா சொன்னிங்க." எனச் சிரித்து வைத்தான் அவன்.


"இங்க இருக்குற குழந்தைங்கள விடப் பெரியளுங்க. ஐ மீன் இருபது வயசு ஆளுங்க அதிகமா இருக்காங்களே. எப்படி." 


"முதல்ல அது யாரும் இல்லாத அநாதைங்களுக்கு மட்டும் தா காப்பகமா இருந்தது. அத ரன் பண்ண கஷ்டமா இருந்தது. நன்கொடையும் வராது. கவர்மெண்ட் உதவியும் சரியா இருக்காது. அடுத்து இந்த மனவளர்ச்சி இல்லாத பிள்ளைங்கள பாத்துக்க ஆரம்பிச்சதும், நன்கொட கிடைக்க ஆரம்பிச்சது. இங்க குழந்தைங்கள பாக்குற எல்லாரும் ஆரம்ப காலத்துல இங்கையே வளந்தவங்க. விட்டுடுட்டு போக மனசில்லாம இங்கையே கெடக்கோம்." என்றான் ஜான். 


" நீங்களும் இங்க தா வளந்திங்களா." என ஹரிணி வருத்தமாகக் கேட்டாள்.


" ஆமாங்க. வாங்க போலாம். சாந்தாமா ஃபோன் பண்றதுக்குள்ள.‌" 

என அங்கிருந்து அழைத்துச் செல்லப் பார்க்க அப்போது ஒரு குழந்தை வந்தது. அதற்கு ஒரு கால்கள் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். அதாவது குட்டியாகக் குட்டையாக எலும்பு மட்டுமே தெரியும் அளவுக்குச் சூம்பிப் போய் இருந்தது. போலியோ அட்டாக் மாதிரி. அது ஜானிடம் எதுவோ கேட்க, ஜான் ஹரிணியிடம் பேசும் மும்மரத்தில் கவனியாது விரட்டி விட்டான். 


ஹரிணி அந்தச் சிறுவனின் பின்னால் செல்ல. அது அங்கிருந்த ஒரு நாற்காலியில் ஏறியது. பாவம் அந்தக் குழந்தையால் சமாளிக்க முடியாது ஒரு பக்கம் சரிய, அங்கிருந்த இருப்பு மேஜையால் தலையில் நிச்சயம் அடிபட்டிருக்கும். அதனால் ஹரிணி வேகமாகச் செல்ல, அவள் பிடிக்கும் முன் வேறொருவர் பிடித்தார். பிடித்துச் சப் எனக் கொடுக்கவும் செய்தார். 


குழந்தைக்கி அல்ல. ஜானிற்கு. 


" இங்கருக்குற பிள்ளைங்கள ஒழுங்கா பாத்துக்கிறது தா உன்னோட வேல. அத விட்டுட்டு பொண்ணு கிட்ட பல்ல காட்டீட்டு நிக்கிற. போ, உன்ன இங்க வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்னா இல்லையா." என மேலும் சில அடிகள் அடித்து விரட்டினார் கதிரேசன். 


'போச்சி மாட்டிக்கிட்டானுங்க. இந்த விக்னேஷ் என்ன தா செய்றான். இந்தாளு எங்கையோ போட்டான் வரமாட்டான்னு தான்ன ப்ளான்ல சொன்னான். ச்ச... போலிஸ் காரனுக்கே ஒழுங்கா ப்ளான் போடத் தெரியல. என்ன பண்ண?. '



தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...