முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 13

அத்தியாயம்: 13


காலை வேளையில் விக்னேஷ் சற்று பரபரப்பாக இருந்தான். குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றபடி இருக்க, மனோகர் வேனில் எல்லாம் சரியா இருக்கிறதா எனச் செக் செய்து கொண்டு இருந்தான். 


இன்று தான் கௌதம் ஹரிணியை வைத்துத் தன் கேஸ்ஸை முடிக்க ஆதாரம் கிடைக்கும் என்பதால் பரபரப்பாகச் சுற்றுகிறான். அவனுக்குக் கதிரேசன் தான் குற்றவாளி என்று தோன்றியது.‌ எனவே அவனுக்கு எதிராக ஒரு எவிடென்ஸ் கிடைத்தாலும் அதை வைத்து அவனைத் தூக்கி விடலாம் என்று திட்டமிட்டுள்ளான். 


கதவு திறக்கும் சத்தம் கேட்க

ஆவலுடன் திரும்பிப் பார்த்தால் வந்தது பவதா.



 "எங்கையும் வெளில போறியா என்ன?." என்றான் கணவனாக. 


" போகல. உங்கூட வரப்போறேன்." 


"எது.? "


" ம்... நீ‌ போலிஸ்காரனா என்னென்ன பண்ற, எப்படி என்கொரி பண்றன்னு பாக்க. "


" அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ வீட்டுலையே இரு. அது தா எனக்கு நிம்மதி." என வேனில் ஏற்றி அமர,


‍" ஏ?.‌ ஏ‌ வரக் கூடாது?. வருங்கால வக்கீலு நா. போலிஸ் என்னென்ன பண்றீங்க! எப்படி எப்படி எல்லா சட்டத்த ஏமாத்துறாங்கன்னு தெரிஞ்சிக்க வேணாமா!. அப்ப தா கோர்ட்டுல ஒரு போலிஸ்ஸ எதிர்த்து என்னால கேள்வி கேக்க முடியும். நா ஒரு திறமையான வக்கிலா இருக்கனும்னு உனக்கு ஆச இல்லையா?." அவனைக் கதவை மூட விடாமல் பிடித்துக் கொண்டு கேட்க,


"யாரு!! நீ வக்கீலா?." நக்கலாகக் கேட்டுச் சிரித்தான் விக்னேஷ்.


"ஹாங்... என்னோட ஆம்பிஷனே அது தா. கருப்பு கோர்ட்ட போட்டுக்கிட்டு கோர்டுல வாதாடிக் குற்றவாளிக்குத் தண்டன வாங்கி தர்றது. உனக்குத் தெரியும் தான. ஏ அப்படி கேக்குற.? "


" அதுக்கு முதல்ல சட்ட கல்லூரில காலெடுத்து வைக்கனும். போக‌ மாட்டேன்னு டிஸ்கண்டின்யூ பண்ண படிப்ப மறுபடியும் படிக்கனும். எங்க!. மேடம் தான் பயந்தா கொல்லியாச்சே. உங்கள யாராது கேலி பண்ணா மறுபடியும் வேதாளம் மாறிப் போ மாட்டேன்னு அடம்பிடிக்க போறிங்க. எதுக்கு உனக்கு இந்த வாய் சவுடால்." என நக்கலாகச் சொல்ல,


" நீ பேசல. உனக்குள்ள இருக்குற ACP பேசுறான். எங்க நீதி மன்றத்துல என்ன ஃபேஸ் பண்ண முடியாம‌ போய்டுமோன்னு பயந்துட்டான் போல. விடமாட்டேன். என்னோட ஆம்பிஷன யாருக்காகவும் விட்டுக் குடுக்க மாட்டேன். நீ என்ன பேசுன பேச்சிக்கு நா வக்கீல மாறி, நீ பிடிச்சிட்டு வர்ற அத்தன பேருக்கும் நா ஜாமீன் வாங்கி தந்து, என்னோட வாதத் திறமைய கோர்ட்ல காட்டுறேன். சீ யூ இன் கோர்ட். மிஸ்டர் ACP விக்னேஷ்வரன். அங்க வந்து பாருங்க. இந்தப் பவதா யாருன்னு." என மேடை பேச்சு பேசி வேனில் ஏறி அமர்ந்தாள். 


அவளை ஏற இறங்க பார்த்தவன், "டேய் வீணாப் போனவனே. போய் அதுக ரெண்டையும் இழுத்துட்டு வா. வெட்டி டயாக் பேச்சிட்டு." என மனைவியை முறைத்தபடி கத்தினான். 


' இவனுங்க கோபத்துக்கு நான் பன்ச்சிங் பேக்கா.‌! முடிஞ்சா உம்பொண்டாட்டிட்ட காட்ட வேண்டியது தான. ச்ச... இவனுங்க சண்டய ஓரமா நின்னு ஒட்டு‌ கேக்க போய் நாம அவமானப்பட்டது தா மிச்சம்.‌ ' எனப் புலம்பிய படியே திரும்ப, கௌதம் வந்து வேகவேகமாக வேனில் அமர்ந்து கொண்டான். பின்னாலேயே ஹரிணி கையில் ஃபோனுடன் வந்துகொண்டிருந்தாள். 


" ஆதி... இன்னும் ஃபேர் டேஸ் தாம்மா. பெரிம்மா வந்திடுவேன். அப்றம் நீ நா அகின்னு எல்லாரும் டூர் போவோம். ம்... சரின்னு கேளு‌டா செல்லம்." எனக் கெஞ்சிக் கொண்டே வர, அந்தப் பக்கம் அவளின் செல்லங்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அதைப் பார்க்க மனம் இல்லாமல். 


" ஓகே இந்து பாத்துக்க. அப்றம் பாவா என்ன பத்தி எதுவும் கேட்டாரா!. இப்ப வீட்டுல இருந்தா காட்டேன். பாவாவ பாக்கனும்." எனத் தன் கணவனின் முகம் பார்க்கும் ஆவலில் கேட்க,


" இல்ல ஹரிணி. அத்தான் வீட்டுல இல்ல. அத்தான் நீங்கக் கிளம்பி போன அன்னைக்கே எங்கையோ போனாரு. அப்பப்ப ஃபோன் பண்ணுவாரு அகில பாத்துக்கச் சொல்லி. ஆனா வீட்டுக்கு வரல." என்ற போதே‌‌ ஹரிணி‌ அப்செட் ஆகிவிட்டாள்.‌ ஆனாலும் முகம் மாறாது காத்தாள்.‌ அவள் அமர்ந்ததும் வேனை எடுத்தான் விக்னேஷ்.


'தொள்ள விட்டதுன்னு அவெ வேற எங்கையாது ஊர் சுத்துறானோ. ' என அவள் யோசனையில் இருக்க, கௌதம் அமைதியாக இருந்தான். விக்னேஷ் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல,


" விக்கி, போதும். நீ‌ என்ன சொன்னாலும் எனக்கு என்ன தோனுதோ அத செஞ்சி தா எனக்குப் பழக்கம். வீணா உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத.‌ அப்றம் உங்க போலிஸ் டிப்பார்ட்மெண்ட்ட கொஞ்ச அப்டேட் ஆக்க முயற்சி பண்ணுங்க. அட்வான்ஸ் டெக்னாலஜிய பத்தி தெரியலன்னா திருடன புடிக்கவே முடியாது." 


" ஹலோ! தமிழ்‌நாட்டு‌ போலிஸ்ஸ பத்தி தெரியாம பேசிட்டு இருக்க.‌ உலகத்துலேயே நம்பர் 2 இன்டலிஜென்ட் போலிஸ்னா அது TN போலிஸ் தா. புரிஞ்சிக்க. யாருகிட்ட." மனோகர். 


" புரியுது.‌.. புரியுது... உங்க டிப்பார்ட்மெண்ட்டோட சரக்கு எல்லாம் தரமான சரக்கு தான். ஆனா உன்ன மாறிச் சில பழைய பீஸ்ஸ ஏ இன்னும் வச்சிருக்காங்கன்னு தான் தெரியல." என மனோகரை வம்பிலுக்க,


" ஏய்! யாரப்பாத்து என்ன வார்த்த சொல்ற." எனச் சண்டைக்கி மனோ வர, வேனில் இருவரின் சத்தம் மட்டுமே கேட்டது. விக்னேஷ் தலையில் அடித்துக் கொண்டு செல்லும் இடத்திற்கு வேனை செலுத்தினான். 


வேன் சாலையை விட்டு விலகிக் காட்டுப் பகுதிக்குள் செல்ல, விக்னேஷ் அவர்களிடம் பத்திரம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தான். 


" கௌதம் அண்ணாவோட சிஸ்டர் கேஸ்ல ஏதோ வீடியோ இருக்குன்னு சொன்னியே, அது கிடைக்கலையா?." எனச் செல்லும் அவர்களைப் பார்த்துக் கொண்டே விக்னேஷிடம் கேட்டாள் பவதா. 


" இன்னும் இல்ல. டூ த்ரீ டேஸ் ஆகும். ஏ பவதா?." 


" இல்ல, அவங்க ரெண்டு பேரும் அவங்களோட குழந்தைங்கள ரொம்பவே மிஸ் பண்றாங்க. நேத்து நா வீடியோ கால்ல பாத்தேன், அண்ணாவோட வைஃப் அப்றம்  குழந்தைங்க இருந்துதாங்க. பாக்கவே கியூட்டா. அழகா. நிறைய சேட்ட பண்ணுச்சிங்க. இந்து அண்ணி கூட ரொம்ப நேரம் பேசினேன்." எனச் சிரிக்க, அதை ரசித்தவன். 


" அது ரொம்ப பழைய கேஸ் பவதா. ஆனாலும் கண்டு பிடிச்சிடலாம். கவலப்படாத." எனக் குழி விழுந்த அவளின் கன்னம் தட்ட, அவள் முகத்தில் வெட்கம் வந்தது தன்னவனின் பார்வையில். சிவப்பேறிய அவளின் கன்னம் தீண்ட அவனின் இதழ் துடித்தது. நெருங்கி மனைவியின் முகத்திற்கு அருகில் செல்ல,


" இம்மிடியட்டா உங்க ரொமாண்டிக் சேனல மாத்துங்க. பாக்க சகிக்கல." என்ற மனோகரின் குரலைக் கேட்டு வேகவேகமாக வேனில் உள்ளே ஏறிச் சில கம்ப்யூட்டரின் முன் அமர்ந்தனர்.‌


அதாவது கௌதமிடம் ஒரு பட்டன் கேமரா உள்ளது. அதுமட்டுமல்ல அவனின் கையில் உள்ள வாட்ச் அது நவீன தொழில் நுட்பம் கொண்டது. ஹரிணியிடமும் ஒன்னு உள்ளது. அந்த வாட்ச் கொண்டு ஒரு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து தகவல்களையும் வெறும் முப்பதே நொடிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹரிணியின் கண்களில் புதிதாகக் கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதிலும் கேமரா உள்ளது. 


அவர்கள் இருவரும் யார் யாரை பார்க்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதை வேனில் இருந்தே பார்க்க முடியும். கேட்கவும் முடியும். அதே நேரம் அதை ரெக்கார்டு செய்யவும் முடியும். 


விக்னேஷிற்கு சிறு பயம். என்னவென்றால் தனக்கு உதவி செய்யப் போய் இவர்கள்‌ மாட்டிக்கொண்டு விடக் கூடாது என்று தான். இதற்கு முன் காப்பகத்தில் நுழைந்த போலிஸ்ஸை ஊரே ஒன்று கூடி விரட்டியடித்த சேதி, பின் அத்துமீறி நுழைய முயன்ற ஒருவரின் மரணம் விக்னேஷின் கவலைக்குக் காரணம். அதுமட்டுமல்ல ஊரில் எவரிடம் சென்று விசாரித்தாலும் அந்தக் காப்பகத்தைப் பற்றி நல்ல விதமாக‌ மட்டுமே பேசுகின்றனர். சந்தேகமாகக் கேள்வி எழுப்பினால்,


"யார்டா நீ?." 


"எதுக்கு நீ கண்டதையும் கேக்குற?. "‌


"ஊருக்குள்ள ஒருத்தெ நல்லது செஞ்சா பெறுக்காதே. உடனே வந்திடுறானுங்க. கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு." என விரட்டி விடுகின்றன. 


ஏன். ?


அப்படி உள்ளே என்னதான் உள்ளது இத்தனை பேர் ஆதரவு தரும் அளவுக்கு என்ற எண்ணம் தான் ஆஸ்ரமத்திற்குள் நுழையக் காரணம். பார்க்கலாம் அது வெறும் காப்பகமா இல்லை யாருக்கும் அனுமதி தராமல் காக்கப்படும் இடமா என்று. 


" நா உம்பேச்ச கேட்டுருக்க கூடாது ஹரிணி."  


" ஏ.? என்னாச்சு?. நாம விக்னேஷுக்கு ஹெல்ப் பண்றத சொல்றியா!.‌" 


" இல்ல, நா இங்க வந்திருக்கவே கூடாது.‌ எதோ தப்பா படுது. ஹாட்பீட் ஜாஸ்தியா இருக்கு. பாரேன்." என அவளின் கரம் எடுத்துத் தன் இதயத்தில் வைத்துக் காட்ட, அது தன் துடிப்பை அதிகப்படுத்தி இருந்தது. 


யார் வந்தாலும் எது வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற துணிவு இருவருக்கும் உண்டு. ஆனாலும் பயம் வந்துவிட்டதா. ஏன்?. 


"பயப்படுறீயா!. நீயா?." என ஆச்சர்யமாகக் கேட்டாள். அவன் முறைக்கவும். 


"இல்ல... நாம பண்ணாத தப்பா. ம்... சொல்லு. நீ எப்படி டிகிரி வாங்குனங்கிறத மறந்துட்டியா என்ன. ராத்திரி நேரம் யாருக்கும் தெரியாம எதாவது ரோட்டு கடைல சாப்பிட்டு‌ காசு குடுக்காம ஓடி வருவோமோ. போலிஸ்ட்ட மாட்டிக்காம ஒருக்க பப்புல இருந்த கார திருடி அதுல இருக்குற ஸ்பேர் பார்ட்ஸ் கலட்டி வித்து கைச்செலவுக்கு வச்சிக்கிட்டோமே. மறந்துட்டியா என்ன. அப்பல்லாம் வராத பயம் இப்ப ஏ வந்துடுச்சா." எனக் கேலி செய்ய,


" இல்ல ஹரிணி. இது என்னோட பாப்புடு பத்தி நினைக்கும்போது வரும். இப்ப நா நினைக்கல. ஆனாலும் வருது. நாம சரியான பாதைல தா போறோமா." என்றான் சந்தேகமாக. 


" கௌதம், அது உங்கிட்ட எதுவோ சொல்ல முயற்சி பண்ணுதுன்னு நினைக்கிறேன். அமைதியா இரு. மூச்சு இழுத்து விடு." நடு ரோட்டில் நின்று பேச, ஒரு சிலர் இவர்களைத் திரும்பிப் பார்த்துக்‌கொண்டு சென்றனர். சில நிமிடங்களுக்கும் பின்,



" கௌதம், நாம ஒரு விசயத்த செய்ய ஆரம்பிச்சிட்டோம். தப்போ சரியோ. அத முழுசா செய்யனும். பாதில எதயும் விட்டுட கூடாது. வா." என இழுத்து சென்றாள் ஹரிணி. 


'அடிப்பாவி இங்க நல்ல மனுஷெ ஒருத்தனுக்கு நெஞ்சு வலின்னு சொல்றான். ஹாஸ்பிடல் கூட்டீட்டு போகமா. ஹாய்யா வாக்கிங் கூட்டீட்டு போற. ' என்பது போல் பார்த்தவன் அவளைப் பின் தொடர்ந்தான். வேறு வழி.


" நாம தேடி வந்த கேஸ்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?. ம்... சொல்லு. நாம நேரத்த வேஸ்ட் பண்ணீட்டு இருக்கோம்." 


"ஒரு பழமொழி சொல்வாங்களே. ஹாங்... ஊரா வீட்டு பிள்ளைய ஊட்டி வளத்தா தாம் பிள்ளை தானே வளரும்னு. அந்த மாறித்தா. நாம விக்கிக் கேஸ்ஸுக்கு உதவி செஞ்சா, நம்ம கேஸ்கு விக்கி உதவி பண்ணுவான். அவ்ளோ தா. அது பிடிக்கலன்னா அந்தச் சுருதிய ஒரே ஒரு நாளுக்கு மட்டும் தங்கச்சியா கடன் வாங்கிக்க. உந்தங்கச்சி சுருதிய இறந்ததுக்கு யாரு காரணம்னு கண்டு பிடிக்கப் போறதா நினைச்சிக்க." எனக் கண்ட கதையையும் பேசிக் கௌதம் மனதை மாற்றினாள். 


நடந்து சென்றவர்களை‌ வரவேற்றது‌ ஒரு இரும்பு கேட். சாதா கேட் இல்லைங்க. அது பெரீ.....ரிய கேட்.


சுமார் இருபது அடி உயரம் இருக்கும். அதன் இரு பக்கமும் அதே உயரத்தில் பாறாங்கல் சுவர்கள். அதன் மேலும் சில கம்பிகளைப் போட்டுள்ளனர். பத்து மீட்டர் இடைவெளியில் சீசிடீவி கேமராக்கள்.


" என்னடா இது!. சென்ட்ரல் ஜெயிலுக்கு ஊட்டில ஒரு ப்ராச் ஓப்பன் பண்ணிட்டாங்களா என்ன?. எவ்ளோ பெரீரீரீ.....ரிய கேட்." என வாயைப் பிளக்க,


" காட்டு விலங்கு வராம இருக்க பாதுகாக்குறதுக்கா இருக்கும்." 


"இரும்பு கேட்ட உடைக்குற அளவுக்குப் பலன்னா, ஊட்டிக் காட்டுல டைனாசர் எதும்‌ இருக்கா என்ன.?" என்றவளை முறைத்தான் கௌதம். 


" கௌதம், சுவத்துக்கு மேல வேலி மாறிக் கம்பி போட்டிருக்காங்களே. அதுல கரண்ட் இருக்குன்னு நினைக்கிறேன்." 


"ம்..." எனத் தலையசைத்தான் அந்தக் கம்பியில் மாட்டி உயிரிழந்த சிறு அணிலை பார்த்தபடி.


இருவருக்குமே புரியவில்லை.‌ ஒரு காப்பகம்.‌ அதற்கு எதற்கு மின் வேலி போட்ட பாதுகாப்பு. அதுவும் மரங்கள் அடர்ந்த காடு என்றால் கூட ஓகே.‌ இது நுழைவு வாயில் தானே. அதுவும் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே ஆனாலும் மக்கள் இருக்கும் பகுதி. ஏன்? எனக் குழம்பிய படியே அந்தக் கதவை நோக்கிச் சென்றனர். 


கதவு திறக்கப்படாமல் அதன் முன் ஒரு வயோதிகர் அமர்ந்திருந்தார். அவருக்குக் கூடாரம் கட்டி கொடுத்து, ஃபேன், ரேடியோ போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. தினசரி நாளிதழில் படம் பார்த்துக் கொண்டு இருந்தவரின் முன் சென்று நின்றனர் இருவரும். 


" ஐயா, நாங்க சாந்த குமாரி அம்மாவ பாக்கனும்." என்றான் கௌதம். 


சாந்த குமாரி. அந்தக் காப்பகத்தின் முழு நேர பொறுப்பாளர். 


" யார?." எனக் காதைக் கரம் வைத்து மடித்து கேட்க,


"சுத்தம்... காது கேட்காது போல. எப்படி வாட்ச்மேன்னா போட்டானுங்க?." ஹரிணி


" சாந்தாம்மாவையா!." என்க இருவரும் ஒரு கணம் முழித்துப் பின் தலையசைத்தனர்.


" ம்.‌.. அவங்கதா." எனக் கௌதம் கத்தி பேசினான்.


"எனக்குக் காதெல்லாம் நல்லாவே கேக்கும். ஆனா எங்க அம்மா வ யாரும் பேர் சொல்லிக் கூப்பிட்டது இல்ல. திடீர்னு பேர சொன்னிங்களா அதா திரும்பக் கேட்டேன்." என்றார் அவர். 


" பாம்புக் காது தா போங்க. ஆனா கூப்பிடனும்னு தான பேர் வப்பாங்க. இவரு என்னடான்னா அம்மா ங்கிறாரு. இவருக்கு அம்மான்னா அவங்க வயசு என்னவா இருக்கும்.‌" என ஹரிணி கௌதம் காதில் முணுமுணுத்துச் சிரித்தாள்.


"ஆமா முன்கூட்டியே பதிஞ்சி வச்சிருக்கிங்களா?." என்றார் அவர். 


"ஹாங்!." 


"அதாம்மா எப்ப வந்து பாக்கனும்னு உங்களுக்குச் சாந்தாம்மா சொல்லிருப்பாங்களே. அத வாங்கிட்டிங்களா?." 


" ஓ... அப்பாய்ண்மெண்ட்டா!." 


" ம்... அது தா. உங்க பேரு என்ன‌?." எனக் கேட்டுக் கொண்டே ஒரு புக்கை புரட்டினார்.


"அப்பாய்ண்மெண்ட்டா! ஹே விக்கி, இந்தாளு என்னமோ கேக்குறான்." எனக் காதில் இருந்த ஃப்ளூடூத்தின் வழியே வேனில் அமர்ந்திருந்த விக்னேஷிடம் கேட்க,


"கேட்டா பதில் சொல்லு. ஏ எங்கிட்ட கேக்குற?." விக்னேஷ் 


"ஏய்... என்னன்னு சொல்ல?." 


" உம்பேரு. உன்னோட ஹஸ்பெண்டு பேரு. அப்றம் குழந்த குட்டின்னு வச்சிருந்தா அதோட பேரையும் சேத்து சொல்லு. அந்தாளு ரேஷன்கார்டுக்கு பேர் எழுறாப்ள, யாரு பேரையும் விடாம சேத்துடு." என நக்கலாகக் கூறினான் விக்னேஷ். 


" விக்கி விளையாடாத." என்றாள் யாருக்கும் கேட்டிடாதபடி, அதுவரை கௌதம் அந்த முதியவரிடம் பேசிக் கொண்டு இருந்தான். 


'அந்த மரத்தோடு பேரு என்ன?. இதோட ஹிஸ்டரி தெரியுமா?.'ன்னு முடிந்த வரை காலத்தை விரையம் செய்ய,


" யாரு விளையாண்டா.‌? நேத்து ராத்திரில இருந்து ஒரு போலிஸ்காரெ சொல்றானேங்கிற மரியாத இல்லாம இருந்தா அப்படி தா. என்னால திரும்பத் திரும்பப் பேசி என்னோட எனர்ஜியல்லாம் வேஸ்ட் பண்ண முடியாது. "


" அப்ப ஒன்னும் பிரச்சினை இல்ல. நாங்க திரும்பி வீட்டுக்கே வந்திடுறோம். நீ உன்னோட ப்ளான சொல்லு நா தெளிவா கேட்டுட்டு வந்து இந்த ஜுராசிக் பார்க்குள்ள போறேன்." 


"எங்க வர்ற? வீட்டுக்கா? அதெல்லாம் தேவ கிடையாது. நீ சென்னைக்கி பஸ்ஸ பிடிச்சி போய் உன்னோட அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் கூடச் சேந்து போடு உன்னோட ப்ளான. போறப்ப வெறும் கையோட தா போவ. என்னா நம்ம டீல் மறந்துடுச்சா?" என்றான் மிரட்டலாக.


" நல்லா நியாயம் இருக்கு. உன்னோட போலிஸ்காரெ புத்திய காட்டிட்டல்ல. வந்து பாத்துக்கிறேன் உன்ன." என்றவள் அந்த வாட்ச் மேனிடம் தன் பெயரைச் சொல்ல,


" என்னம்மா உங்களுக்கு அடுத்த வாரம் தான நேரம் குடுத்துருக்காக. அதுவும் இங்கல்லாம் வரக் கூடாது. இந்த ரோட்டு கடைசில ஒரு ஆஃபிஸ் ரூம் இருக்கும்‌. அங்க கதிரேசன் தம்பி இருப்பாப்ல. அவர தான் பாக்க முடியும். சாந்தாம்மா பாக்க முடியாது." 


' எது!. பாக்க முடியாதா.? இதுக்கு எதுக்கு ஐஞ்சி மணிக்கே அலாரம் வச்சி பத்து மணிக்கி வந்தோம். இவெ என்னென்னமோ சொல்லறான். டேய் ACP இதப்பத்தி சொல்லவே இல்ல.' கௌதமின் மைண்ட் வாய்ஸ்.


"உனக்கு என்ன தோனுதோ அத செஞ்சி தான பழக்கம்னு சொன்ன. இப்ப என்னனாலும் செய். ஆனா எனக்கு வேண்டியது கட்டாயம் வேணும். இல்லன்னா உங்களுக்குத் தேவையானது நிச்சயம் கிடைக்காது. கர்மா இஸ் பூமராங் ம்மா. மறந்துடாத." என விக்னேஷ் கிண்டல் செய்வது போல் மிரட்டிப் பேச,


என்ன செய்வது என்று தெரியாது நின்றனர் இருவரும்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 12


விழி 14


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...