அத்தியாயம்: 12
'இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள்
இல்லையே நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு.'
ஹரிணி...
ஒரு கையில் டீவி ரிமோட்டும் மறுகையில் பவதாவுடன் சண்டையிட்டு வாங்கிய காஃபீயும் இருந்தது. நல்ல பாடல். அதைக் கண்மூடி ரசித்தவளிடமிருந்து பிடுங்கப்பட்டது ரிமோட்.
"ஹேய்! நா பாட்டு கேட்டுட்டு இருக்கேன் தெரியலையா. குடு." ஹரிணி.
"நீ என்ன சூப்பர் சிங்கர் போட்டிக்கி ஜர்ஜா. நல்லா சுருதியோட பாடிருக்காங்களா இல்லையான்னு பாத்து மார்க் போட. ஹிம்... போதும் நீ பாத்தது." எனப் பவதா அதை மாற்றி நியூஸ் சேனல் வைத்தாள்.
"காலங்காத்தாலையே உன்னோட மூட ஸ்பாயில் பண்ணக்கூடாதுங்கிற நல்ல நோக்கத்துக்காக விட்டுக் குடுத்து போறேன். ஹிம்." எனத் தலை சிலிப்பிக் கொண்டு ஹரிணி சென்றாள்.
செய்தியைப் பார்த்தவளுக்கு அவளிடமிருந்து வாங்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில் அதில் வந்து செய்தி அப்படி. ' பாலியல் சித்திவதைக்கி உள்ளாக்கப்பட 35 வயது பெண் பல துண்டுகளாக வெட்டப்பட்டு காட்டில் புதைக்கப்பட்ட விவகாரம். கைது செய்த நபரைக் காட்டிற்கு அழைத்துச் சென்று நடந்தவற்றை விசாரிக்கும் போலிஸ் அதிகாரிகள்.' என ஒரு வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்ட, பவதாவிற்கு வேண்டாத பழைய நினைவுகள் வந்தது ஒட்டிக் கொண்டன.
அன்று மட்டும் தான் காப்பாற்ற படாமல் இருந்தால் இன்னேரம் தானும் என்ன கதிக்கி ஆகிருப்போம் என்று மனம் நினைக்க, பவதா மீண்டும் தன் ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டாள்.
" குட் மார்னிங் பவதா. ரொம்ப சீக்கிரமா எழுந்துட்ட போல. காலங்காத்தால இந்த மாறி நியூஸ்லாம் கேட்டா அந்த நாள் வெலங்குமா சொல்லு." என அவளின் கையில் இருந்த ரீமோட்டை கௌதம் பறிக்க, பவதா பயந்து அலற ஆரம்பித்து விட்டாள். புரியாமல் கௌதம் முழிக்க, விக்னேஷ் வந்து அழைத்துச் சென்று சமாதானம் செய்ய முயன்றான்.
" என்னாச்சு மனோகர். ஏ பவதா கத்துனாங்க?." கௌதம் சிறு பயத்துடன்.
" அது ஒன்னுமில்ல. தங்கச்சிக்கி கொஞ்சம் உடம்புக்கு சரிஇல்ல. அவ்ளோ தா." என மழுப்பிச் சென்றான் அவன்.
கௌதம் புரியாது முழிக்க, ஹரிணியிடம் சென்று புலம்பினான். அவள் பஞ்சாயத்து செய்யக் கையில் செம்புடன் விக்னேஷின் அறையைத் தட்டினாள்.
"ஹரிணி இப்ப வேண்டாம். பவதா கொஞ்சம் ஸ்டெஸ்ஸா இருக்கா. ப்ளிஸ்." என்க, அதைக் கேட்பாளா ஹரிணி. உள்ளே வந்து பவதாவின் அருகில் அமர்ந்து, 'உனக்கு என்னம்மா பிரச்சனை? அப்பப்ப கைல இருக்க பணத்த யாரோ பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஓடிப் போன மாறியே மூஞ்சிய வச்சிக்கிறியே!. ஏம்மா.?'ன்னு கேக்க, விக்னேஷ் பதில் சொன்னான்.
ஒரு கடத்தல் கும்பலின் கையில் சிக்கி அவர்களின் சீண்டலுக்கு உள்ளாகி மனதாலும், அவர்கள் தந்த போதை ஊசியால் உடலாலும் பாதிக்கப்பட்ட அவளின் நிலையை எடுத்துச் சொல்ல, ஹரிணிக்கும் கௌதமிற்கும் வருத்தமாகிப் போனது.
" பவதா எனக்குப் புரியுது உன்னோட நிலம." என ஹரிணி வாயைத் திறந்ததுதான் தாமதம்.
" அட்வைஸ் பண்ணப்போறியா!. போதும் பேசாத. காது வலிக்கிற அளவுக்குக் கேட்டாச்சி. இனியும் கேக்க எனக்குத் தெம்பில்ல. மறந்திடு. அத விட்டுக் கடந்து வான்னு. யாருக்குமே என்னோட மனநில புரிய மாட்டேங்கிது." என்றபடி அழத் தொடங்கினாள்.
" உன்ன யாரு மறக்கச் சொன்னா?. நமக்கு நடந்த ரொம்ப ரொம்ப கொடுமையான விசயத்தல்லாம் மறக்கவே கூடாது. கல்வெட்டுல எழுதுன எழுத்து மாறி மனசுல வச்சிட்டே இருக்கனும். அப்பதா அது உனக்கு ஒரு வெறிய தரும்." என ஹரிணி சொல்ல,
' இப்பருக்குற நிலமைல இருந்து அதல பாதாளத்துக்கு பவதாவ கூட்டீட்டு போய்டுவா போலயே. கொஞ்சம் சும்மா இரும்மா நீ. ' என்பது போல் ஹரிணியை பேசவிடாது பண்ண, கௌதம் அவனை இழுத்து சென்றான். ஹரிணி பார்த்துக் கொள்வாள் என்று.
"மறக்கக் கூடாதா!. வெறியா.! என்ன சொல்ற?."
"ம்... மறக்காத. இந்தக் காலத்துல இருக்குற ஒவ்வொரு பொண்ணுக்கும் எதாவது ஒரு கட்டத்துல இந்த மாறிப் பாலியல் சீண்டல் நடந்துகிட்டே தா இருக்கு. அதுகெல்லாம் பயந்து ஒதுங்குனா முன்னேறவே முடியாது. அதுனால அந்தப் பார்வைய படிக்கல்லா மாத்தி வெறியோட அத மிதச்சி போய்க்கிட்டே இருக்கனும்."
"ம்ச்... லூசு..." முணுமுணுத்தாள் பவதா.
"என்னோட ஃபில்டுல இந்த மாறிப் பல ஸ்ட்ரீட் டாக்ஸ் இருக்கு. ஒன்னொன்னோட பார்வையும் துச்சாதனன் பார்வையாத்தா இருக்கும். முதல் தடவ அத ஃபேஸ் பண்ணும்போது எனக்குப் பதினாறு வயசு இருக்கும். நடந்தத மறக்க முடியாம நானும் உன்னமாறி ரொம்ப ஃபீல் பண்ணேன் பவதா. அப்ப அத போக்க எனக்கு ஒரு அக்கா சொன்னா டிரிக்க உனக்குச் சொல்லப் போறேன். செஞ்சி பாரு கண்டிப்பா உனக்கு ரிலீஃப் கிடைக்கும்."
" என்ன செய்யனும்?." நக்கலாக நம்பிக்கையின்றி.
" நம்மோட கஷ்டத்த அடுத்தவங்க கிட்ட சொன்னா. என்னைக்காவது ஒரு நாள் அத வச்சி எமோஷனலா நம்ம கூட விளையாட வாய்ப்பிருக்கு. சோ, நம்ம மனசுல இருக்குறது எதுவா இருந்தாலும் அத ஒரு பேப்பரல எழுதி, ஃபயர் பண்ணுடு. இந்த உருவ பொம்மை எரிக்கிற மாறி அந்தப் பேப்பர எரிச்சிடு. நெருப்புல உன்னோட பிரச்சன அத்தனையும் பஸ்பம் ஆகிடும். அத பாக்கும்போது உன்ன கஷ்டப்படுத்துனவங்கல நீயே உங்கையால எரிச்ச மாறி உனக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்." என்றாள் கையை அசைத்து ஆக்க்ஷனோடு.
"உனக்கும் இந்த மாறி நடந்திருக்கா.?" என்றாள் சோகமாக.
"ம்... ஒவ்வொரு பொண்ணும் தன்னோட வாழ்நாள்ள ஒருக்கையாது இந்த மாறிச் சூழ்நிலைய ஃபேஸ் பண்ணித்தா ஆகனும். அதுக்குன்னு பயந்துட்டு ரூம்லையே அடஞ்சி இருந்தா. அந்தப் பொறுக்கி அடுத்த பொண்ணு அடுத்த பொண்ணு தன்னோட ஈன புத்திய காட்டிட்டே தா இருப்பான். சோ நாம உள்ளயே இல்லாம வெளிய வந்து அடுத்த பொண்ண காப்பாத்தனும்னு தோனுச்சி. அதுனால அந்தப் பொறுக்கிங்க கண்ணுல சிக்குனா நா சும்மா விடமாட்டேன்.
யாரும் நம்மல பாதுகாக்க முடியாது. நம்மல பாதுக்காத்துக்கிற வழிய நாம தா தெரிஞ்சி வச்சிக்கனும். அந்த மாறித் தப்பான எண்ணத்துல நம்ம பக்கத்துல வர்றவங்களுக்கு பதில் சொல்ல நம்ம பேக்லையே காம்பஸ், பாக்கெட் கத்தி, அப்றம் பெப்பர் ஸ்ப்ரே எப்பையும் இருக்கனும். கூடவே நீ ஆந்திரா மிளகாத்தூளையும் சேத்து வச்சிக்க. நா சொன்ன இது உன்ன யாராது டீஸ் பண்ணும்போது யூஸ் பண்ணு. கூடவே ஹைய் பிச்ல கத்து, பயந்து ஓடிடுவான். நம்ம குரலும் நமக்கு ஒரு ஆயுதம் தான்."
"ம்ச்... நீ நடக்கப் போறதுக்கு முன்னாடி பாதுகாக்க வழி சொல்ற. நாந்தா அந்தப் பொறுக்கிங்க கைல மாட்டி, என்னத்தா டீஸ் பண்ணிட்டானே. அதுல இருந்து எப்படி வர்றதுன்னு வழி தெரியல."
" ஆல்ரெடி சொல்லிட்டேன். இருந்தாலும் மறுபடியும் சொல்றேன். ஒரு பேப்பர்ல உன்னோட எல்லா ஃபீலிங்கையும் எழுதிக் கண்ணாடி பாட்டில் போட்டுத் தண்ணிக்குள்ள போட்டுடு. அது முழ்கும்போது எல்லா பிரச்சனையும் முழ்கிப் போய்டும். சோ ஈஸி. ஒன்னு நெருப்புல போடு. இல்லன்னா தண்ணீக்குள்ள முழ்கடிச்சிடு. அதையே நினைச்சிட்டு இருந்தா நம்மோட எதிர்காலத்த அது பாதிக்கும்."
" தண்ணிக்குள்ள கண்ணாடி பாட்டி தூக்கி போடுறது ரொம்ப தப்பான பழக்கம். சட்டத்துல இதுக்கு தண்டன இருக்கு தெரியுமா?. அதுனால பல விலங்குகளுக்குப் பிரச்சின வரும். நீ படிச்ச பொண்ணு தான."
'ஆனா உனா இத கேட்டுட்டுறானுங்க. படிச்சிருக்கியா இல்லயான்னு. ' என முணுமுணுத்தவள்.
"இப்ப அது பிரச்சன இல்ல. தூக்கி போடனும் அது தா நம்மோட பிரச்சனைக்கி தீர்வுன்னு சொல்றேன். நீயும் ட்ரெய் பண்ணிப் பாரு. வா." எனக் கரம் இழுக்க, பவதா லூசு எனத் திட்டி அனுப்பி விட்டாள்.
"இவளுக்கு ஒரு நல்லதுன்னு சொன்னா. என்னயவே லூசுன்னு சொல்லித் திட்டி அனுப்பீட்டா டா." எனக் கௌதமிடம் புலம்பினாள் ஹரிணி.
உள்ளே பவதா யோசனையில் இருந்தாள். ஹரிணி கூறியது போல் செய்து பார்த்தால் என்ன. என்பதைத்தான்.
முடிவு செய்து விட்டாள். எழுந்து கோடு போடாத ஆன்ரூல்டு பேப்பரை எடுத்துத் தன் மனக்குமுறலை எழுதத் தொடங்கினாள். இந்த அன்னியன் படத்துல அம்பி லவ் லெட்டர் எழுதுன மாறி மார்ஜின் கோடு போட்டு நான்கு பக்கமும் எழுதி விட்டு, அடிஸ்னல் ஷீட்ல எழுதலாமா வேண்டாம்மா என யோசித்து மேலும் நான்கு பக்கம் எழுதி முடித்தாள்.
அந்தக் காகிதத்தைக் கப்பல்போல் மடித்து, அந்தக் கப்பலை எங்கு விடலாம் என்று தெரியாது குழம்பினாள்.
"அப்பாடா... ஹரிணி சொன்னது உண்ம தா போல. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருக்கு. அப்படி தா ஃபீல் பண்றேன். இப்ப இத தண்ணீல விடனுமே. ம்." என யோசித்து அறையை விட்டு வெளியே வர, அங்கு அவளின் கணவனும் மனோகரும் போலிஸ்ஸாய் மாறி வெளியே சென்றுள்ளனர். கௌதம் மட்டும் லேப்டாப்பின் முன் அமர்ந்திருந்தான். அவனின் அருகில் சென்றாள் பவதா.
"கௌதம் அண்ணா. எங்கூட வர முடியுமா?." என்க, அவன் 'யாருகூடமா நீ பேசுற' என்பது போல் பார்த்தான்.
"அது... இத எங்கையாது போடனும். சோ, எனக்குத் தண்ணீ இருக்குற மாறி ஒரு இடம் வேணும். எனக்கு எங்க இருக்குன்னு தெரியாது. அதுனால நீங்க என்ன கூட்டீட்டு போவிங்களா.?" எனத் தயங்கி தயங்கி கேட்டாள்.
" எங்கூட வர்றது உனக்குப் பயமா இருக்காதா?." எனக் கேட்டான் கௌதம். அவளின் அலறல் அப்படி. மீண்டும் அலறித் தர்மடி வாங்கி கொடுத்து விட்டால், அதான் தெளிவா கேட்டு விட்டுக் கூட்டிச் செல்லாம் என்று கேட்கிறான்.
" இல்ல, நீங்க என்னோட கைய பிடிச்சிக்குங்க. எனக்குப் பயம் வராது." எனச் சிறுபிள்ளை போல் சொல்ல, கௌதம் எழுந்து சென்றான். அங்கிருந்து பத்து நிமிடம் நடந்தால் ஒரு சிறிய ஓடைபோல் ஒன்று இருந்தது. அங்குத் தான் அழைத்துச் செல்கிறான்.
"நீங்க இந்தக் காட்டுக்கு வந்திருக்கிங்களா.?" என்றவளின் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது பயம். உயர்ந்த மரங்கள், ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த பறவைகளின் கீச்சொலி, கால் வைக்கும் இடம் எல்லாம் நெளியும் சிறு சிறு ஊர்வனங்கள், அதைப் பார்த்த பவதாவிற்கு பயம் வரவில்லை என்றால் அது ஆச்சரியம் தான்.
"நாங்க சின்ன வயசா இருக்கும்போது இந்த மாறிப் பல இடத்துக்குப் போயிருக்கோம். நா என்னோட பாப்புடு ரிஷியும் சேர்ந்து போவோம். பாப்புடுவும் இப்படி தான் கைய புடிச்சிட்டே வருவா." என்றவனுக்கு பார்கவியின் நினைவும் ரிஷியும் நினைவும் வந்தது.
மூவரும் சேர்ந்து மூர்த்தியுடன் காட்டிற்கு செல்வர். வாங்சிங் டவர் என்று சொல்லப்படும் கண்காணிப்பு கோபுரங்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு யானை அணில் எனச் சில விலங்குகள் பைனாக்குலரின் உதவியுடன் கண்டு மகிழ்வர்.
அப்போது ரிஷி திண்பண்டங்கள் உள்ள பையைக் கௌதமின் கையில் கொடுத்து விட்டுக் குரங்கிடம் மாட்டி விட்டு விடுவான். அது தன் படைகளுடன் வந்து கௌதமின் கையில் உள்ள உணவைப் பிடிங்கி திண்ணும். பயத்தில் பண்டங்களைக் குரங்கிடம் கொடுக்காமல் அழுவான் கௌதம். மூர்த்தி தான் வந்து விரட்டி விடுவார். இப்போது அதை நினைத்தவனுக்கு புன்னகை வந்தது.
" அண்ணா, இங்க சிங்கம் இருக்குமா.!"
" இல்ல, ஆனா யானை இருக்கும்."
"ஹாங்... எனக்கு யானைன்னா ரொம்ப பிடிக்கும். கோயில்ல அத பாத்திருக்கேன். வாழப்பழம் கூடக் குடுத்திருக்கேன். க்யூட்டான அனிமல் அது. நாம இப்ப பாக்கலாமா?." ஆர்வமாகக் கேட்டாள்.
"ம்... பாக்கலாம். ஆனா கூடவே புலியும் இருக்குமே. நீ புலிக்கி சாப்பாடு குடுக்க நினைக்கிறாயா." எனச் சிரிப்புடன் கேட்க.
" அண்ணா!." என அவனின் கரத்தை இறுக பிடித்துக் கொண்டாள்.
பவதா பல கேள்விகள் கேட்டாள், அதுவும் ஹரிணியை பற்றி. அவளின் தைரியம் பவதாவிற்கு பிடித்திருந்தது. அதான் அவளைத் தெரிந்து கொள்ள கேட்டாள்.
" நீ ஏ எப்ப பாத்துலும் எதையாது கேட்டுட்டே இருக்க?. ம்..." கௌதம். அவளின் கேள்விகள் பொறுக்க முடியாமல்.
"அது, இந்தக் காட்டுக்குள்ள நடந்து போறப்ப அலுப்பா இருக்கு. அது தெரியக்கூடாதுன்னு பேசிகிட்டே வர்றேன்." எனக் கன்னகுழி விழச் சிரிக்க, கௌதம் அந்தச் சிரிப்பை ரசித்தான்.
சிறிது தூரத்தில் நீரோடையின் சத்தம் கேட்க, வேகமாகச் சென்றாள் பவதா. பின் தன் கையில் இருந்த காகித கப்பலை மிதக்க விட நினைக்க, அதைப் பிடுங்கினாள் ஹரிணி.
" ஏய்... கொரங்கு. குடு அத." பவதா.
"குடுக்குறேன். ஆனா படிச்சிட்டு." எனப் பிரிக்கப் போக, பவதாவின் முகம் வாடியது.
"சரிசரி மூஞ்சிய அப்படி வைக்காத. சகிக்கல. இந்தா." எனப் பவதாவிடம் தந்தவள்.
"ஏன்டா என்ன விட்டுட்டு வந்த?." எனக் கௌதமுடன் சண்டைக்கி போக,
" விட்டுட்டு வந்தென்னு நீ என்ன வீட்டுலேயேவா இருந்த. ஹச் டாக் மாறி வந்து சேந்துட்டேல்ல." எனக் கௌதம் பதில் சொல்ல, பவதா கைத்தட்டி சிரித்தாள்._ ஏனெனில் அவள் விட்ட கப்பல் அழகாய் ஓடையில் ஓடிக் கொண்டிருந்தது.
ஹரிணியும் பவதாவும் அதன் பின்னே சிறிது தூரம் சென்றனர், உற்சாகமாக. ஒரு கட்டத்தில் அது நீர் அதிகம் உள்ள இடத்திற்கு செல்லவும் மூழ்கிப் போனது.
"இது மாறி அது கூடவே போனா நீயும் மூழ்கிடுவ. நமக்கு நம்மோட லிமிட் தெரிஞ்சிருக்கனும். எல்லாத்துலயும். கவல, சோகம், கோபம், காதலும் அப்படி தான். எல்லாத்துக்கும் எல்லை இருக்கு. அது எவ்ளோ தூரம்னு நாம தா முடிவு பண்ணனும். எல்லைய மீறி எதுக்கும் வருத்துப்பட கூடாது. வா. போலாம். திரும்பிப் பாக்காம." என அழைத்துச் செல்ல, பவதாவிற்கு அது பிடித்திருந்தது.
கௌதமிற்கு இருவரும் ஒன்று போல் தெரிந்தனர். வளர்ந்த குழந்தைபோல். புன்னகையுடன் அவர்கள் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்து அவர்களுக்குள் எழும் சண்டையைச் சமாதானம் செய்தபடி வீடு வந்து சேர்ந்தான்.
அங்கு விக்னேஷ் அவர்களுக்காகக் காத்திருந்தான். இதழில் சாக்லேட் ஒட்டி இருக்க, ஹரிணியும் பவதாவும் கடைசி ஒரு துண்டிக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
" கேட்டா பெரிய பிஸ்னஸ் மேன்னு சொல்லற. ஆனா கஞ்ச பிஸ்னாறி மாறி வாங்கி தர்ற. கொஞ்சம் பெருசா வாங்கிட்டு வந்திருக்கலாம்ல." ஹரிணி கூற பவதா ஒத்து ஊதினாள்.
"ஆமா ஆமா. இது பத்தவே இல்ல."
" பாக்கெட்ல அதிகபட்சமாவே 100 கிராம் தா அடச்சி வச்சி விக்கிறானுங்க. அத விட அதிகமா வேணும்னா ஆர்டர் குடுத்து வாங்கிட்டு வர முடியும். ஆனா அது கூட உங்களுக்குப் பத்தாது. எறும்பு திண்ணி மாறி நீங்கச் சாக்லெட் திண்ணிங்க." எனச் சலித்துக் கொண்டு நடந்தான்.
" வணக்கம் ACP ஸார். என்ன இவ்வளோ சீக்கிரம்." விக்னேஷை பார்த்துப் புன்னகைத்தான் கௌதம்.
பவதா நாணவிழிகளால் நோக்க, ஹரிணி, "ஹாய் விக்கி. "என்றாள்.
"நாளைக்கி நீங்க ரெடியா இருக்கனும். அன்னை காப்பகத்துக்குப் போகனும்." என்றான் அந்தக் காவலன்.
" ஏ நாளைக்கே?." கௌதம்.
" நாளைக்கி தா கதிரேசன் இருக்க மாட்டாரு. சோ. உங்கள சந்தேகமா கேள்வி கேக்க ஆள் இருக்காது. நமக்கு வேணுங்கிறத நிதானமா விசாரிக்க முடியும்." விக்னேஷ்.
அப்போது ஒரு பச்சை நிற வேன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மனோகர், "நீ கேட்டதெல்லாம் இதுல இருக்க மச்சான். ஹாய் ஹரிணி. வணக்கம் பாஸ்." என்றான்.
" உள்ள வாங்க. பேசனும்." விக்னேஷ் வீட்டிற்குள் செல்ல, வட்ட மேஜை மாநாடு தொடங்கியது. விக்னேஷ் இதுவரை சுருதி கேஸ்ஸையும் ஆரோக்கிய ராஜ் கேஸ்ஸையும் பற்றி விசாரித்தவைகளை சொல்லி, தன் சந்தேகங்களை எடுத்துரைத்தான்.
"என்னோட சந்தேகம் சரின்னா ரெண்டு பேரையும் ஒரே ஆள் தா கொல பண்ணிருக்கனும். அதுக்கு முக்கியமான ரீசன்ல ஒன்னு அந்த மெஸ்ஏஜ். டிப்பார்ட்மெண்ட்ல சொல்லிட்டேன் அத சைபர் கிரைம் யாரோடதுன்னு பாத்து சொல்லும்.
அடுத்து அந்தக் கையெழுத்து. அது கதிரேசனேடையதா இல்ல வேற யாரோடதுன்னு கண்டு பிடிக்கத்தா நீங்கப் போறிங்க. அதுமட்டுமில்ல எனக்கு அங்க தங்கி இருந்த, இருக்குற ஆட்களோட டீட்டைல்ஸ் வேணும். எப்ப இந்தக் காப்பகம் ஸ்டார்ட் பண்ணாங்களோ அப்பருந்து இப்ப வரைக்கும் யார் யார் அங்க வளந்தாங்க. படிச்சாங்க, இப்ப இருக்காங்களா இல்லையா, எங்க இருக்காங்கன்னு எல்லா விவரமும் தெரியனும்.
இது பட்டன் கேமரா. இது கண்ணாடி. இதுக்குள்ள கேமரா இருக்கும். அங்க நடக்குறத இன்ச் பை இன்சா நாங்க வெளில இருந்து பாத்துட்டே தா இருப்போம். வேன்ல அதுக்கு தேவையான எல்லா எக்யூப்மெண்ட்ஸும் இருக்கு. சோ, நீங்க உள்ள போறிங்க, காப்பகத்த சுத்தி பாக்குறீங்க, ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடுறீங்க. சரியா." என அனைவரின் முகம் பார்க்க.
கௌதம் 'இன்னுமா நீ முடிக்கல?. ' என்பது போல் பார்த்தான் என்றால் ஹரிணி அதற்கும் மேல், தூங்கி வழிந்து விட்டாள்.
"ஹரிணி." என மேஜையை தட்டி எழுப்ப வேண்டியதாக இருந்தது.
இதுகல நம்பி எப்படி தா நீ இந்தக் கேஸ்ஸ முடிக்கப் போறியோ.! விக்னேஷா!!.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..