முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 11

அத்தியாயம்: 11


மாலை ஐந்து மணி இருக்கும், விக்னேஷும் மனோகரும் வீடுவந்து சேர. வெளிச்சத்தை இருள் மெல்ல முழுங்கத் தொடங்கியிருந்தது. உடலில் குளிர்பரவ, கரங்களைத் தேய்த்து உஷ்சனத்தை உண்டாக்கிய‌படி வந்தான் மனோகர். 


"ஏ! மச்சான் இந்த ஊட்டி மட்டும் இவ்வளோ குளிரான இருக்கு.?"  


"இது குளிரா? போடாங்!!.‌" அந்தக் குளிரை அனுபவத்தபடி வந்தான் அவன்.


" பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லு. அதென்ன திட்டுறது. பேட் பாய்."


"ஹிம்!. ஊட்டிய தமிழ்நாட்ட விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க. அதா குளிரா இருக்கு."  


"நம்புற மாறி இல்லையே. எதுக்கும் நா இந்தக் குளிர பத்தி தங்கச்சிட்ட பேசிக்கிறேன்." என வீட்டிற்குள் செல்ல, அது இருட்டாக இருந்தது. 


ஒரு நொடி விக்னேஷ் பயந்து விட்டான். பின் வேகவேகமாகச் சென்று விளக்கைப் போட, சோஃபாவில் அவனின் மனைவி துயில் கொண்டிருந்தாள். கன்னத்தில் சிறு கோடாய் கண்ணீர் வடிந்தோடிய வடு இருந்தது. 


"பவதா! என்னாச்சி ம்மா!. பவதா?." எனக் கன்னம் தட்ட, கண்விழித்தவள் விக்னேஷை திட்டத் தொடங்கி விட்டாள். 


" உனக்கு என்ன விட உன்னோட வேல பெருசா போச்சில்ல?. இங்க நா தனியா இருப்பேன்னு கவலையே படலல்ல நீ.? எத்தன மொற ஃபோன் பண்றது. எப்ப பாத்தாலும் அது நாட் ரீச்சபுல்னே வருது. காலைலையே சண்ட போட்டுடுட்டு போனோமே. என்ன பண்றாளோ, ஏது பண்றாளோன்னு நினைக்கிறது கிடையாது. ச்ச! நா உன்னய நம்பி உங்கூட வந்தே பாரு என்ன சொல்லனும்." எனத் திட்ட, 


" எங்கூட வராம வேற யாரு கூடப் போகப்போற?. ஆமா நாம எப்ப சண்ட போட்டோம். உன்ன எதுவும் சொன்ன மாறி நியாபகம் இல்லயே அப்றம் எப்படி சண்ட வரும்?."  


" ஏ வராது?. பாதி சாப்பாட்டுலையே எழுந்து போனேல. அப்ப அது சண்ட தான?" எனச் சிறு பிள்ளைபோல் அவனிடம் மல்லுக்கு‌ நிற்க, அவளைத் தொடாது நெருங்கி நின்றான் அவன். 


" கொஞ்சம் பிஸி பாப்பா. அதா கால் பண்ண முடியல." என நெற்றியில் முத்தமிட, அவள் சற்று விலகி நின்று கொண்டு.


" நா பண்ண கால ஏ அட்டென் பண்ணல?." என்றாள் கோபமாக. 


" அது காட்டுக்குள்ள சிக்னல் கிடைச்சிருக்காது. அது என்னோட தப்பு இல்ல பாப்பா." 


" ஹாங்! சொன்னாங்க சொன்னாங்க. அது உந்தப்பு இல்லன்னு. ஆமா! நீ அந்த ரெண்டு பேரையும் பாத்தியா?."  


"யார?"


" அதா! காலைலேயே வந்து நமக்குள்ள சண்ட மூட்டி விட்டுட்டு போச்சே அந்த லூசு. அது." என்றவளை விக்னேஷ் முறைக்க, 


" இல்ல எனக்குத் துணைக்கின்னு சொல்லித்தான தங்க வச்ச. ஆனா! காலைல போனவங்க வீட்டுக்கு வரவே இல்ல அதா கேட்டேன்." என நிலம் நோக்கிக் கேட்டவளை கூர்ந்து பார்த்தான் விக்னேஷ். அவள் விக்னேஷுடன் சேர்த்து அவர்களையும் தேடி இருக்கிறாள் என்று புரிந்தது. புன்னகையுடன் தன் மனைவியின் மதிமுகம் பார்க்க, நடு ஹாலில் இருவரும் பார்வையாலே ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தான். 


'ஆமா? இவெங்கூட உள்ள வந்து ஜீவன காணுமே?. எங்கே?' 


பவதா கண் முழித்ததுமே மனோகர் வெளியேறி விட்டான், இருவரும் தனிமை கொடுக்க வேண்டி. 


'சரி அவங்களுக்கு தனிம குடுக்குறேன்னு இவன் தனியா என்ன பண்ணீட்டு இருக்கான். ம்‌. ' என எட்டி பார்த்தால், அங்கு வானில் தெரியாத நிலவுடனும் நட்சத்திரத்துடனும் பேசிக் கொண்டு இருந்தான் மனோகர். 


"ஹிம்!. ஏ? எனக்கு மட்டும் இப்படியொரு நிலம. ஃப்ரெண்ட்ஸ் நாங்க நாலு பேரு. ஒன்னாதா இருப்போம். எதையும் ஒன்னாவே செய்வோம். ஆனா! பாருங்களே. கல்யாணங்கிறப்ப என்னோட வண்டி மட்டும் மாட்டு வண்டி கணக்கா மெதுவா போகுது. என்னோட நண்பனுங்க வண்டி ஜெட்டு வேகத்துல செட்டில் ஆகிடுச்சி. நானும் இந்தக் குளிர ரசிச்சி அனுபவிக்கனும்னா! எனக்கு ஒரு வைஃப் தேவ. அதுக்கு நா என்ன பண்ணனும்.?. கல்யாணம் பண்ணும். சோ!. நா எவ்ளோ சிக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்." என அரசியல்வாதிபோல் தீர்மானம் எடுக்க. 


"எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நா டைவர்ஸ் வாங்களாம்னு இருக்கேன்." என்ற குரல் கேட்டது மனோகருக்கு பின்னால். 


'யாருடா அது? நல்ல விசயம் பேசிட்டு இருக்கும்போது நாராசமா பேசுறது. ' எனத் திரும்பிப் பார்க்க, அங்குக் கௌதம் வந்து கொண்டு இருந்தான். அவனைக் கண்டதும் மனோகருக்கு சரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே கௌதமின் அருகில் சென்றவன். 


"என்ன! பாஸ் இது. ரெயில்வே ஸ்டேஷன்ல பெட்டி தூக்குறவெ மாறி மாறிட்டிங்க. என்ன! கோலம் இதெல்லாம்?." என ஏற இறங்க பார்த்துச் சிரிக்க, 


" நாலு புள்ளி நாலு வரிச கோலம். எனக்கு ரங்கோலிலாம் போடத்தெரியாது. ஏய் ச்சி!. வந்து கைல இருக்குற ஜாமான வாங்கு." எனத் தன் கையில் இருந்த அத்தனையையும் அவனின் தலையில் கட்டினான் கௌதம். 


"சப்பா!. என்னா வலி என்னா வலி. உள்ள கொண்டு வந்து வச்சிடு." எனச் சொல்லி வீட்டிற்குள் செல்ல,


"நானா?." 


"இங்க வேற யாரு இருக்கா.? வா!." என அவனின் தோளில் கைப்போட்டு இழுத்துச் சென்றான். 


' வேடிக்க பாக்க வந்த என்ன பலியாடா ஆக்கிட்டாரே!. ' என மனதிற்குள் புலம்பிப் படி வந்தவன் கையில் இருந்ததை சோஃபாவில் பொத்தெனப் போட, 


" ஏய்!...ஏய்!... ஃபூல். எதுக்கு அத இப்படி கீழ போடுற?. இடியட். இதோட வெர்த் என்னனு தெரியுமா?." எனக் கத்தியது ஹரிணி தான். 


" ஐய்யோ!. தெரியுமா பண்ணிட்டேன் ஹரிணி. அதுக்குன்னு உன்னோட வாயால என்ன திட்டாத. ப்ளீஸ். கஷ்டமா இருக்கு. பிஞ்சு மனசு பஞ்சி பஞ்சி பறந்திடும்." என நாடக பாணியில் மனோகர் நடிக்க, அவனை முறைத்தாள் ஹரிணி.


" என்ன அப்படி வெர்த் வந்திடப்போது. ஒர் ரூபா பேப்பரும், கலர்கலரா பத்து ரூபாக்கி பென்சிலு, இதுல அணிலோட வால் மாறி ஒரு ஃப்ரெஷ். மொத்தமே நூறு ரூபா கூடத் தேராத ஜாமான வாங்க என்ன காலைல இருந்து அழைய விட்டுடியே. இது நியாயமா? கை எவ்ளோ வலிக்கிதுன்னு தெரியுமா?." எனக் கைக்கால்களை உதறியபடி கௌதம் அவள் வாங்கி வந்த பொருட்களின் மீது அமர, அவனைத் தள்ளி விட்டாள் ஹரிணி. 


"ஐய்யோ! பாஸ். குப்புற விழுந்துட்டிங்க. நாந்தா தாங்கிப் பிடிச்சி காப்பாத்துனேன்." மனோ.


"ஏய் ச்சீ!. கைய எடு." என்றவன் எழுந்து நின்று அவளை முறைக்க, அவளோ!


" இடியட். கழுதைக்கி தெரியுமா கற்பூர வாசன. அது மாறி இதோட அரும தெரியாத எரும நீ." எனப் பத்திரமாக அதை எடுத்து வைத்தாள். 


"ஒரு வாரம். இதோ! இவா கூட வம்பு பண்ணக் கூடாது. ரூம விட்டு வெளில வரக் கூடாது. சத்தம் போட்டுப் பேசக் கூடாது. ஃபோன்ல கேம் விளாட கூடாதுன்னு எவ்ளோ கண்டிஷன் போட்டிருக்க. அதெல்லாம் எப்படி பண்ண முடியும். ம்... நா சும்மா இருந்தா இவள நோண்டிக்கிட்டே இருப்பேன்னு சொல்லி, ஏதாவது வேல பாக்கலாம்னு வாங்கிட்டு வந்தா!. நூறு ரூபா ஜாமானாம்.! நூறு ரூபா!. நீயே ஒரு கட ஓப்பன் பண்ணி இந்த ஸ்கெட்ச்ச, ஃப்ரெஷு எல்லாத்தையும் நூறு ரூபாக்கி குடு. எரும." எனத் திட்டிக் கொண்டே அதைத் தன் அறைக்குள் எடுத்து வைத்தாள். பின் ஒரு தலையணையையும் போர்வையையும் கொண்டு வந்து சோஃபாவில் போட்டாள், படுத்துக்கொள் என்பது போல். 


" உன்னோட கருண உள்ளம் என்ன கண்கலங்க வைக்கிது. ஆனாலும் அதோட ஒர்த்து நூறு ரூபா தா. ‌உன்ன அந்தக் கடக்காரெ ஏமாத்திட்டான். நாந்தா அப்பவே சொன்னேனே.‌ அவங்கிட்ட போய்ப் பந்தா காட்டுறேன்னு பீட்டர் விடாதன்னு. பாரு பர்ஸ் காலியாகிருக்கும். மொத்தமா புடிங்கிட்டான்." என்றவனின் கைக்கு அவனின் பர்ஸ்ஸை எடுத்துக் கொடுக்க, அவனுக்குப் புரிந்து போனது. இன்று அவள் வாங்கிய அனைத்திற்கும் அவன் க்ரெடிட் கார்டிலிருந்து பணம் சென்றுள்ளது என்று. 


" பெஸ்ட் ஃப்ரெண்டு குடுத்த கிஃப்டா இத நா வாங்கிக்கிட்டேன். சரியா!." ஹரிணி.


" இங்க பாரு கிஃப்ட் எல்லாம் அவங்களா பிரியப்பட்டு குடுக்கிறது. இப்படி அடாவடி பண்ணி புடுங்க கூடாது. இது தப்பு." 


"தப்பில்ல. தப்பில்ல." என நக்கலாகச் சொல்ல,


" அடுத்த மொற அந்த மாறி வேஸ்ட் லக்கேஜ் வாங்கனும்னா, உன்னோட புருஷனோட பர்ஸ்ஸ எடுத்துட்டு போ. கொத்தனாரு கொத்துகக் கொத்தா பணத்த பதுக்கி வச்சிருப்பான். அதுல இருந்து எடுத்துட்டு போ." எனச் சலிப்பாகச் சொல்ல. 'அத எப்படி நீ சொல்லலாம். ' என ஹரிணி சண்டைக்கி‌ வர, இருவரின் சண்டையை மூவர் பார்த்துக் கொண்டு இருப்பதை மறந்து போயினர். 


பவதாவிற்கு அவர்களின் சண்டை வித்தியாசமாக இருந்தது. அவளுக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. அவர்கள் அவளின் வயதுடையவர்கள். எப்படி தன்னை விட வயது பெரிய ஆணுடன் ஒரு பெண் காதல், அண்ணன் என்ற உணர்வில்லாது நட்பாகப் பழக முடிகிறது. காலையில் அவர்கள் பேசிய தோரணை வேறு. நேற்றும் அதற்கு முன் தினமும் அவர்கள் நடந்து கொண்ட விதம் வேறொருவர் மற்றவருடன் தோழமையாய், உடன் பிறப்பாய், பெற்றவரின் சாயலாகவும் நடந்து கொள்கின்றனர். அது அவளுக்கு வியப்பை தந்தது. அவளுக்கு மட்டுமல்ல, மற்ற ஆண்கள் இருவருக்கும். 


ஒரு வழியாகச் சண்டை போட்டு முடித்தவர்கள் சாப்பிட என வெளியே செல்லப் பார்க்க விக்னேஷ் தடுத்தான். வேண்டாம் என்றவர்களிடம்,


" ஸாரி. நா கொஞ்சம் கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன். என்ன மன்னிச்சிங்கன்னா சாப்பிட வாங்க." எனப் பவதா அழைத்தாள்.



"போனா போகுது உனக்கும் சோறு பொங்கி போடுறோம்னு அந்தப் பொண்ணு சொல்லுது. வந்து கொட்டிக்க." எனக் கௌதம் ஹரிணியின் காதில் மெல்லிய குரலில் கேலி செய்ய, நால்வரும் அமர்ந்தனர்.


கௌதமிற்கு பவதாவின் காஃபியே அத்தன பிடித்திருந்தது. இப்போது சாப்பாடு.‌ முறுகலாகத் தோசை, நான்கு இல்லை ஆறு வகை சட்டினி. கலர் கலராக. 


"ம்... சூப்பரா இருக்கு. செம்ம." எனக் கௌதம் பாராட்ட, அது பொறுக்குமா ஹரிணிக்கி.


"உனக்கு வேணும்னா வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடு. அத விட்டுட்டு செம்ம. அருமன்னு பொய் சொல்லக் கூடாது." ஹரிணி நக்கலாகச் சொல்லிப் பவதாவை பார்த்துச் சிரிக்க, அவள் அமைதியாக நின்றாள், எங்கே வாயைத் திறந்தால் தன் கணவனின் கோபத்தை காண நேருமோ என்பதற்காக. 


" உனக்கு நாக்குன்னு ஒன்னு இருக்கா என்ன!. இருந்திருந்தா இது எவ்ளோ டேஸ்டா இருக்குன்னு தெரிஞ்சிருக்கும்." பவதாவின் குரலாய் கௌதமே பேசினான். 


" இது டேஸ்டா!. சாம்பார் சப்புன்னு இருக்கு. தேங்கா சட்னி அதுல தேங்க மட்டும் தா இருக்கு. அப்றம் தக்காளி சட்னி." 


"அதுல தக்காளி மட்டும் தா இருக்கு. சரியா." மனோகர் எடுத்துக் கொடுக்க.


"ம்... கரெக்டு. தோசைல உப்பில்ல. மிளகா சட்னில காரமில்ல. மொத்ததுல ஒன்னுமே நல்லா இல்ல." எனக் கமெண்ட் சொல்ல, பவதா அப்படியா என்பது போல் தன் ‌கணவனைப் பார்த்தாள். 


'அது பொய் சொல்லுது மா. ' என்பது போல் கண்களாலேயே அவளின் சமையலை பாராட்டினான் அவன். 


"அப்ப எதுவுமே நல்லா இல்ல." கௌதம்


"ம்..." 


"உனக்கு எதுவும் பிடிக்கல." 


"ம்ச்... அத தான நா இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன்." என்றவள் தேங்காய் சட்னியை எடுத்துத் தன் தோசை மேல் ஊற்ற, அந்தத் தட்டை எட்டிப் பார்த்தனர் மற்றவர்கள். 


ஒரே ஒரு தோசை தான். அதற்கு நீச்சல் கத்துக்குடுக்க நினைத்திருப்பாள் போலும். எல்லா சட்னி வகைறாக்கலும் தட்டில் அளவுக்கு அதிகமாகவே இருந்தன. 


"ஓ... அப்பப் பவதா நல்ல சமக்கலன்னு சொல்ற." 


"ஆமாண்டா. சுமார் ரகம்." எனத் தோசையை பிட்டு வாயில் தள்ளினாள்.


"அப்றம் ஏ தட்டு நிறையா நிரப்பி வச்சிருக்க. தோசைல சட்னி ரொம்ப கம்மியா இருக்கே." கௌதம்.


" அது டேட்ஸ் பண்ணி சொல்லனும்ல. அப்பதான பவதா அடுத்த மொற நல்ல சமப்பா. மனோ அந்தச் சின்னக் கிண்ணத்துல என்ன இருக்கு?." 


"புதினா சட்னி.‌" என மனோ எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி மறைத்து வைத்தான் கௌதம்…


"கௌதம், குடு அத. இங்க தட்டுல இடம் காலியா இருக்கு. அத ஊத்தனும். குடு." என அவள் வாங்கி உண்ட விதமே சொல்லும் பவதாவின் சமயலை பற்றி. 


"ஹரிணி, அந்த வெங்காய சட்னிய வைக்க மறந்துட்ட. இந்தா." என மனோ பரிமாற, கௌதம், மனோ, ஹரிணியென மூவரும் சேர்ந்து டைனிங்க டேபிளை ஒரு வழி ஆக்கி விட்டனர். அதைப் பார்த்த பவதாவின் கன்னத்தில் வெகுநாட்களுக்குப் பின் குழி. அதை ஆவலுடன் ரசித்த விக்னேஷும் மகிழ்ச்சியாக இருப்பது போல் உணர்ந்தான். 


அனைவரும் எழுந்து சென்றபின் பவதா கிச்சனை சுத்தம் செய்ய, உதவுகிறேன் என்று பெயரில் ஹரிணியும் வந்து நின்றாள். 


" தனியா சாப்பிட உனக்குக் கஷ்டமா இருக்கும் அதா கம்பேனி குடுக்கலாம்னு வந்தேன். எதாவது செய்யட்டுமா?." 


"நோ. தேவையில்ல. நாம் பாத்துப்பேன்." என்றவள் தனக்காகத் தோசை வார்க்க, அதை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஹரிணி. 


"எங்கருந்து நீ தோச சுட கத்துட்ட. எனக்குக் கல்ல விட்டு வந்ததே இல்ல. என்னோட பாவா தா சுட்டு தருவான்." என்றாள் ஹரிணி. 


"தோச சுடுறதுக்கு மிலிட்டரி ஆஃபீசரா சொல்லிக் குடுப்பாங்க. அவங்களுக்கா தெரியனும். அம்மா கூட அடுப்படில கொஞ்ச நேரம் நின்னா போதும். அவங்க ரெண்டு கைய வச்சிட்டு பல வேல ஒரு நேரத்துல பண்ணுவாங்க. பாக்க பாக்க நமக்கும் வந்திடும்." 


"ம். அதுவும் சரிதா. ஆனா இந்துப் பண்ணும் போது கூடவே இருந்தாலும் என்னால கத்துக்க முடியலையே. ஏ." என்றபடி சமையல் மேட்டில் ஏறி அமர்ந்தாள். 


"இந்து யாரு. உன்னோட அம்மா வா." 


"இல்ல. அது கௌதமோட வைஃப்." 


"உன்னோட அம்மா." 


"இறந்துட்டாங்க. நா கிண்டர் கார்டன்ல படிக்கும் போதே." என்றவளுக்கு அவளின் அன்னையின் நினைவு வந்தது. 


"ஸாரி." என்றாள் பவதா வருத்தமான குரலில். 


" அதுக்கு நீ என்ன பண்ணுவ." என்ற ஹரிணியும் பவதாவும் சண்டை போடாமல் அமைதியாய் பேசிக் கொண்டனர். சிறிது நேரம் தான்.‌ 


"ஆக்சலி. நா இப்ப உங்கூட ஒரு டீல் பேச வந்திருக்கேன்." 


" ஏங்கூடையுமா. காலைல தான விக்னேஷ் கிட்ட டீல் பேசுன. அது பத்தாதா." 


"பத்தாதே. எனக்கு ஒரு ஆச. என்னோட பாவாக்கு நானே எங்கையால சமச்சி குடுக்கனும்." 


"பாவான்னா." 


"‌என்னோட ஹஸ்பென்ட். அவெ நல்லா சமப்பான். அதுனால எனக்கு இதுவரைக்கும் சமக்கனும்னு தோன்னதே இல்ல. ஆனா இப்ப ஆசையா இருக்கு. எனக்குச் சமக்க கத்து தாறியா?." எனக் கேட்க, பவதா முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பானது வந்தது. 


"நோ... நெவர்... முடியாது." என்றாள் நிறுத்தி நிதானமாக,


" ஏ?. "


"நா சொல்லிக் குடுத்தா சாம்பார் சப்புன்னு இருக்கும். தேங்கா சட்னில தேங்கா மட்டும் தா இருக்கும். பரவாயில்லையா." எனக் குறும்பாய் கேட்டாள். 


"என்ன பவதா லூசு மாறிப் பேசுற. தேங்கா சட்னில தேங்கா இல்லாம மாங்காவா இருக்கப் போது. அதெல்லாம் பெரிய விசயமே இல்ல. சப்ப மேட்டரு. நா எப்படி சமச்சாலும் சாப்பிட நிறைய ஜீவன் இருக்கு எங்க வீட்டுல. சோ நீ சொல்லிக் குடுத்தா அங்கள எந்தவிதமான டேமேஜும் இல்லாம பாத்துக்கலாம்." என்க. 


"முடியாது." என்றாள் பவதா, ஈவு இரக்கமின்றி. 


"அப்பச் சொல்லித் தர மாட்ட." மிரட்டலாக.


"மாட்டேன்." என்றாள் பவதா கைகளைக் கட்டிக் கொண்டு. 


" பவதாரணி, என்ன பகச்சிக்கிட்டேன்னா அதோட விளைவு வேற மாறி இருக்கும்." ஹரிணி போலியாக மிரட்டினாள் ஹரிணி.


" யார மிரட்டுற!. நா போலிஷ்காரென் பொண்டாட்டி. உன்ன மாறிச் சின்னப் பிள்ளைக்கெல்லாம் நா பயப்பட மாட்டேன்‌. போ போ அங்கிட்டு." என்றதோடு சிரிப்புடன் சென்றும் விட்டாள். 


"ச்ச... இந்தப் பாவா மட்டும் இன்னேரம் ஆர்மில சேந்திருந்தான்னா. நானும் மிலிட்டரி பொண்டாட்டின்னு சொல்லிப் பெரும பட்டிருப்பேன். இப்ப ஒரு கொத்தனாரு பொண்டாட்டின்னு சொன்னா நல்லாவா இருக்கும். அவன முதல்ல சூட்கேஸ் உரைய மாட்டீட்டு பார்டருக்கு அனுப்பனும்." எனப் புலம்பிய படியே ஹரிணியும் சென்றாள். 


இங்கு யார் சந்தோஷமாக இருக்கிறார்களோ இல்லையோ.‌ இந்த விக்னேஷ் மட்டும் பயங்கற ஹப்பி. ஏனெனில் முகத்தில் சிரிப்புடன் வந்த அவனோட வைஃப் ஹரிணிய திட்டிக்கிட்டே அவனின் மார்பணைத்து துயில் கொண்டாள். அதனால் தான். 


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 10

விழி 12


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...