அத்தியாயம்: 10
"டார்லிங். நமக்கு இது தேவையில்லாத ஆணின்னு தோனுது. நீ என்ன சொல்ற?." கௌதம்.
"எது டா?." ஹரிணி எதுவும் தெரியாதது போல்.
" இது தா. இந்தச் சிரிப்பு போலிஸ்ஸ மிரட்டி அவெ வீட்டுல தங்குறது. அதுலையும் அவெ பொண்டாட்டி. பேரு என்னமோவே..." எனப் புருவத்திற்கு மத்தியில் இரு விரல்களைத் தட்டி யோசிக்க,
"பவதா...ரணி." என இழுத்துக் கொண்டே, கொண்டுவந்த உடமைகளை எடுத்துக் கட்டிலில் பரப்பினாள் ஹரிணி.
" ஹாங்... தாரணி. அந்தப் பொண்ணு நம்மல டெங்கு கொசு வ விரட்டுற மாறி விரட்டிவிடுது. அது கைல மட்டும் ஒரு கொசு பேட் மாட்டுச்சின்னு வை. நம்ம கதி என்ன ஆகும்?. ம்..."
"ம்ச்... நா அவளோட ஹெஸ்பெண்ட இன்சல்ட் பண்ணிட்டேன்னு கோபமா இருக்கா. இதுல என்ன தப்பு. எனக்குப் பவதாவோட attitude பிடிச்சிருக்கு. குட் வைஃப்." என்றாள் கூலாக.
" இந்தப் பாராட்டு விழாக்கு இடந்தேடித்தா இங்க வந்திருக்கன்னு தெரியுது. ஆனா அவா புருஷன் மட்டுமில்ல நாமலும் பெரிய ஆளு தா. முக்கியமா நா. பதிலுக்கு அந்தப் பொண்ணு இன்சல்ட் பண்றத ஏ பொருத்துட்டு இருக்கனும்?. இந்த அவமானம் நமக்குத் தேவையா?. ம் தேவையா சொல்லு.?"
" ம் தேவ தா... ரொம்ப தேவ தா. ஏன்னா அந்தச் சிரிப்பு போலிஸ்ஸால தா நமக்கு உதவ முடியும்."
"அதா பண்றேன்னு சொல்லிட்டானே. "
"ஆனா அந்தப் போலிஸ் காரென் அவனோட வேல முடியையும் நம்மல நிச்சயம் சுத்தல்ல விட்டுடு வான்னும் தோனுதே. ஆல்ரெடி அந்த வெங்கட்ராமன் நம்ம நேரத்த வேஸ்ட் பண்ணிட்டாரு. இவெங்கிட்டையும் குடுக்க நம்மகிட்ட போதுமான நேரம் கிடையாது. இது நமக்குக் கிடைச்ச நல்ல சந்தர்ப்பம் கௌதம். யூஸ் பண்ணிக்கனும்."
" என்ன யூஸ் பண்ண?. அவங்க இங்க ஹரிமூனுக்கு வந்திருக்காங்க ம்மா. ஒரு ஹனிமூன் கப்பில்ஸ்ஸோட மூடக் கெடுத்து அவங்க ட்ரிப்ப நாசம் பண்றது பாவம் இல்லையா!." அவனுக்கு விக்னேஷின் வீட்டில் தங்குவது பிடித்தம் இல்லை. ஆனால் ஹரிணியின் கட்டாயத்தால் வந்திருக்கிறான்.
"அவங்கள பாத்தா ஹனிமூன் கப்பில் மாறி இல்ல. அவன் கேஸ் விசாரிக்க வந்திருக்கான். நீ சும்மா உலறாத. வழி விடு." என அங்கிருக்கும் கபோர்டில் துணிகளை அடுக்க,
" எனக்கு அந்தப் போலிஸ்ஸ பாத்தா சிரிப்பு தா வருது. இவனுங்க எப்படி திருடங்கள கடுப்பேத்தி பிடிக்கப் போறானுங்க. சொல்லு. காமெடி போலீஸ்." கேலியாக.
"கௌதம் விக்னேஷும் அவனோட ஃப்ரெண்டையும் நீ கொறச்சி எட போடுற. There are Talented guys. நிச்சயம் அவனால மட்டும் தா நமக்கு வேண்டியத செய்ய முடியும். உனக்கு இங்க தங்குறது கில்டியா ஃபீல் ஆனா சொல்லு, நா அந்தப் பொண்ணு கண்ணுக்கு முன்னாடி போய் அவள கடுப்பேத்தாம என்னோட ஓன் சிஸ்டர் மாறிப் பாத்துக்கேன். ம்... ப்ராமிஸ். ஒரு கெஸ்ட் மாறி இருந்துட்டு கெஸ்ட் மாறிப் போய்விடுவோம். நோ மோர் டிஸ்டர்ப். ஜஸ்ட் ஒன் வீக் மட்டும் தா." என்றாள் புன்னகையுடன்.
அவளின் தலையில் கை வைத்து முன்னும் பின்னும் அசைத்தவன். "ஓகே... உன்னோட ப்ராமிஸ்ஸ நம்புறேன். நீ அந்தப் பவதா கூட வீணா சண்ட போட மாட்டன்னும் நம்புறேன்."
" ஆமா... ஏ இந்தத் திடீர் கரிசனம் அந்தப் பொண்ணு மேல உனக்கு. பாக்க பவி மாறி இருக்கான்னு மட்டும் சொல்லிடாத. பவதா. பவித்ரா. ரெண்டு சிஸ்டர் எனக்குன்னும் சொல்லிடாத." எனக் கேலி செய்ய,
"ச்சச்ச. அப்படில்லாம் சொல்லமாட்டேன். பவிக்கு காஃபீ போடச் சரியா வராது. அவா போடுற காஃபி கழனித்தண்ணி மாறி இருக்கும். ஆனா அந்தப் பொண்ணு பவதா குடுத்த காஃபியோட டேஸ்டு இன்னும் என்னோட நாக்குள்ளையே ஓட்டிட்டு இருக்கு. ம்." எனப் பவதாவின் காஃபியை சிலகிக்க,
"என்ன விடவா நல்லா போட்டுறப் போறா!."
"நீ போடுறதுக்கு பேரு காஃபின்னு சொன்னா அவனுக்கு மனசாட்சிக்கிறதே கிடையாது." என முணுமுணுக்க, மனோ வந்தான் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள. அவனுடன் இருவரும் பேசிச் சிரிக்க, மற்றொரு அறையில் விக்னேஷ் பவதாவை சமாதானம் செய்தான். இல்லை செய்ய முயன்றான். அவ்வளவே.
பத்து மணி இருக்கும். காலை உணவிற்காக டேபிளில் விக்னேஷ் அமர, அவனை முறைத்துக் கொண்டே உணவு பரிமாறினாள் பவதா.
"கொண்டாம்மா கொண்டாம்மா. நல்ல பசி. சூடா எதையாச்சும் உள்ள இறக்குனாத்தா உடம்பு வேல செய்யும். என்ன சமச்சிருக்க?." என ஆவலுடன் பாத்திரங்களை உருட்டிக்கொண்டே அமர்ந்தான் மனோகர். அப்போது கௌதமும் ஹரிணியும் வர,
"ஹரிணி எங்க கிளம்பிட்ட?." மனோ.
"சாப்பிட... பிரேக் பாஸ்ட்." ஹரிணி.
"நாங்க மட்டும் என்ன பண்றோம். அததாம்மா கொட்டீட்டு இருக்கோம். வா. வந்து உக்காரு."
"இருக்கட்டும் நீங்கக் கண்ட்டினியூ பண்ணுங்க. நாங்க வெளில பாத்துக்கிறோம்." கௌதம். பவதாவின் உணவை மிஸ் செய்ய மனமில்லை தான் ஆனாலும் அவர்களைத் தொந்தரவு செய்யாது
" பரவாயில்ல. நீங்களும் எங்க கூட உக்காரலாம்." விக்னேஷ் தட்டை எடுத்து வைக்க, இருவரும் அமர்ந்தனர்.
பவதா கௌதமிற்கு மட்டும் உணவு பரிமாற, ஹரிணி புன்னகையுடன் எழுந்து சென்றாள் வீட்டிற்கு வெளியே, அதைப் பார்த்தவன்.
" வேண்டாமா. இருக்கடும். நாங்க பாத்துக்கிறோம்." என மறுத்துக் கௌதமும் ஹரிணியை பின் தொடர, விக்னேஷ் பவதாவை முறைத்து விட்டுப் பாதி உணவில் எழுந்து சென்றான்.
" என்ன பவதா இப்படி பண்ணிட்ட. அவங்கள கெஸ்ட்டா பாக்க வேண்டாம். அட்லீஸ்ட் மனுசனாவாது பாத்திருக்கலாம். உங்கிட்ட இத நா எதிர்பாக்கல." என மனோ வருந்திச் சொல்ல, பவதாவின் கண்களில் நீர் வரத் தொடங்கியது.
"ஸாரி... நா வேணும்னு பண்ணல. நா எடுத்து வைக்கிறதுக்குள்ள அவா போய்ட்டா. அதுக்கு நா என்ன பண்ணேன். ச்ச..." என்றவளுக்கும் தன் செயல் பிடிக்கவில்லை. மனம் நிஜமாகவே ஹரிணி எழுந்து சென்றதை நினைத்து உறுத்திக் கொண்டே இருந்தது.
லைட்டா ஃபீல் பண்றா போல. ஆனா அவளோட இந்த ஃபீலிங்க கேக்கத்தா யாரும் இல்லை. அழுது கொண்டே சென்று விட்டாள்.
__________
சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா.
வழக்கமாக விக்னேஷும் அவனின் நண்பர்களும் விளையாட்டு மைதானத்தில் தான் டிஸ்கஸ் செய்வார்கள்.
என்ன கேஸ்?. எதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறது?. யார் யார் சந்தேகத்திற்கு உரியவர்கள்? என நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஆலோசிப்பர். ஆனால் புது இடம் அதனால் விளையாட்டு மைதானம் எங்கே உள்ளது என்று தேடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து விட்டனர்.
"மணிராமோட பேரன்ஸ்ஸ பாத்து விசாரிச்சிட்டேன். அவங்களுக்கு சுருதிய மருமகளா ஏத்துக்கிறதுல தயக்கம் இருக்கு. ஆனா மகனோட விருப்பத்துக்கு மறுப்பு சொல்லுற அளவுக்குக் கிடையாது. நல்லா பேசிப் பழகிருக்கா அந்தப் பொண்ணு சுருதி." மனோ.
" மணி ராம பத்தி விசாரிச்சியா!. அவனோட கேரக்டர் எப்படின்னு?."
" பையன் பெறந்தது வேணும்னா சென்னையா இருக்குலாம். ஆனா படிச்சி வேல பாக்குறது கோயம்புத்தூர் தா. அந்தப் பொண்ணுக்காகத் தா அங்கையே வேல பாக்குறான் குறைந்த சம்பளத்துக்கு. நல்ல வேலை அமையயும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ப்ளான் போட்டுருக்கான். அந்தச் சுருதிய ரொம்ப சின்சியரா லவ் பண்ணிருப்பான் போல.
லவ் பண்றேங்கிற பேர்ல சுருதிய ஆள் நடமாட்டம் இல்லாத எந்த ஒரு இடத்துக்கும் கூட்டீட்டு போனது இல்லயாம். எட்ட நின்னு தான் பேசிக்கிவாங்களாம். இதுவரைக்கும் சண்டையே போட்டது இல்லையாம். நல்ல ஃப்ரெண்ட்ஸ மாறிப் பழகிக்குவாங்கன்னு கூட வேல பாக்குற எல்லாரும் சொன்னாங்க. படிச்ச காலேஜ். அப்றம் வேல பாக்குற இடம்னு எல்லாத்துலையும் விசாரிச்சாச்சி. எங்கையும் சந்தேகம் இருக்குற மாறித் தெரியல."
" அந்த ஆஸ்ரமத்த தவிர்த்து." என்றவன் கையில் சில ஃபைல்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
" அப்ப அங்க தா எதோ தப்பு நடக்குது. இல்லன்னா."
" அங்க இருக்குற யாரோ ஒருத்தன் தா இதெல்லாம் பண்ணனும்."
" யாரா இருக்கும்?." என மனோகர் யோசிக்க,
" ஏன்டா உங்கிட்ட இல்லாத மூளைய கசக்கி பிழியுற. விடு கண்டு பிடிப்போம்." எனக் கேலி செய்தவன் நிமிர்ந்தும் மனோகரை பார்க்கவில்லை.
'அப்படி என்னத்த தா படிக்கிறான். படிக்கிறானா இல்ல பாக்குறானா?. பாக்கத்தா செய்யுறான். ஃபைலுக்குள்ள ஃபோன மறைச்சி வச்சி நமக்குத் தெரியாம என்ன படம் பாக்குறானோ. ' என எட்டி பார்க்க,
" என்னடா பண்ற.?" விக்னேஷ் கத்தினான். பின்னே ஃபைலுக்குள்ள தலையை விட்டால், அதான்.
" ஒன்னுமில்ல மச்சான். ரொம்ப நேரமா பாக்குறியா!. அதா நல்ல படமோன்னு பாத்தேன்." என்க, விக்னேஷ் அவனின் கையில் திணித்தான். அந்த ஃபைலை படித்துப் பார்த்த மனோ,
" இது நமக்குத் தேவையா?. நாம விசாரிக்க வந்தது சுருதி கேஸ்ஸ. அது கொலையா தற்கொலையான்னு விசாரிக்கத்தா. நீ அத விசாரிக்கிறத விட்டுடு பார்டர தாண்டிப் போறன்னு நினைக்கிறேன்."
"இல்ல நண்பா. எனக்குத் தெரிய வேண்டியது முழுசா தெரிஞ்சாத்தா இந்தக் கேஸ்லல இன்வால் ஆக முடியும்." என்றான் யோசனையுடன்.
அது ஒன்னுமில்லங்க. இந்த ஊட்டில கடந்த ஆறு மாசமா இறந்து போனவங்க லிஸ்டு கேட்டிருந்தானே. அது தா அது. அதுமட்டுமில்ல அந்த ஆரோக்கியராஜ் தற்கொலை கடிதமும் அதில் இருந்தது. கூடவே அவன் தற்கொலை செய்தபிறகு போலிஸ்ஸார் எடுத்து வைத்த சில புகைப்படமும் அதில் இருந்தன.
" அதுல பாரேன். ஊட்டில கடந்த ஆறு மாசத்துல மொத்தம் நாப்பது பேருக்கும் மேல இறந்து போயிருக்காங்க. ஆக்ஸிடென்ட், கொல, தற்கொலை, இதுல காணாம போனவங்க லிஸ்ட்டு தனி."
" க்கூம். அவனுங்க எல்லாத்தையும் நீ கண்டு பிடிக்கிறதுக்குள்ள ரிட்டயர்டு ஆகிடுவ பரவாயில்லயா."
"ம்ச்... சொல்றத கேளுடா."
"கேக்க மாட்டேனு சொன்னா மட்டும் விடவா போற. சொல்லும். சொல்லித் தொலையும்."
" இந்த லீஸ்டுல பதினஞ்சி பேருக்கும் மேல அந்த ஆஸ்ரமத்து சேந்தவங்க. ஒரு சீரில்லாத இடைவெளில இறந்து போயிருக்காங்க. ஒரே மாறி இறந்து போகலன்னாலும் அவங்களுக்குள்ள இருக்குற ஒரே ஒற்றும அந்த ஆஸ்ரமம் மட்டும் தா. அங்க தா நாம தேடுற குற்றவாளி இருக்கனும்."
" ஓகே இருந்துட்டு போட்டும். பட் நீ வந்தது சுருதி கேஸ்க்கு. மறந்துடாத."
"இல்லடா. இந்த எல்லா மரணமும் ஒன்னுக்குள்ள ஒன்னு தொடர்பு இருக்குற மாறித் தோனுது."
" எத வச்சி சொல்ற?."
"இங்க பாரு. இத நா சுருதியோட ஹண்டு பேக்ல இருந்து எடுத்தேன். அதுல ஒரு பஸ் ஸாப்போட பேரு எழுதி இருக்கு. இட் மீன்ஸ், யாரோ அவள அங்க இறங்க சொல்லி இருக்கனும். நல்லா தெரிஞ்சவனா இருக்கனும். அதுனால தா அந்தக் காட்டுக்குள்ள தனியா நடந்து போயிருக்கனும். இது சுருதி கேஸ்ல ஒரு முக்கியமான எவிடெண்ஸ்.
இத பாரு இது மூணு நாளைக்கி முன்னாடி தற்கொல பண்ணி இறந்து போன ஆரோக்கியத்தோட தற்கொல கடிதம். அதுல இருக்குற கையெழுத்தும், சுருதி பேக்ல கிடைச்ச கையெழுத்தும் ஒன்னா இருக்கு. பாரு." என அந்தக் கடிதத்தையும் சுருதி பையிலிருந்து எடுத்த ஒரு சீட்டையும் காட்ட, இரண்டிலும் ஒரே கையெழுத்து தான் இருந்தது.
" அப்ப ஆரோக்கியராஜ் சுருதிய கொல பண்ணிட்டு. தற்கொல பண்ணிக்கிட்டான். அப்படி தான."
" இல்ல. ஆரோக்கியராஜும் கொல செய்யப் பட்டிருக்கனும். ஏன்னா இது ஆரோக்கியத்தோட கையெழுத்து இல்ல. நா அந்தாளோட வீட்டுக்குப் போய்ப் பாத்தேன். அந்தாளோட பையங்கிட்ட இருந்த நோட்ட வாங்கி பாத்தேன். அதுல எழுதியிருந்த அவரோட கையெழுத்து வேற. இது வேற." என்றவன் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் காட்டி.,
"பாரு, ரூம் உள்பக்கமா பூட்டி இருக்கும். கதவ உடச்சி தா உள்ள போனதா சொல்றாங்க. அவரு இருக்குறது மாடி. அவரோட ஜன்னல் கதவு உடஞ்சி இருக்கு பாரு. யாரோ அவரோட ரூம்க்கு அவருக்கே தெரியாம வந்து அவரு எப்பையும் சாப்பிடுற தூக்க மாத்திரைக்கி பதிலா வேற ஒரு பவர் கூடுன மாத்திரைய மாத்தி வச்சிருக்கனும். அது தெரியாம சாப்பிட்டதுனால இறந்து போயிருக்கனும். அப்றம் இந்த லெட்டர். யாரோ அவரோடது மாறிச் செட் பண்ணி வச்சிருக்கனும்.
ஒன்னு சுருதியா கொன்னது யாருன்னு ஆரோக்கியத்துக்கு தெரிஞ்சிருக்கனும். எங்க வெளில காட்டிக் குடுத்துருவாரோன்னு பயந்து கொல பண்ணிருக்கனும். இல்லன்னா சுருதிய கொன்ன அதே காரணத்துக்காக ஆரோக்கியத்தையும் கொன்னிருக்கனும். மொத்ததுல ரெண்டு கொலைக்கும் தொடர்பிருக்கு. இது தற்கொல கிடையாது." என்றான் விக்னேஷ் உறுதியாக.
" எத வச்சி சொல்லுற இவ்வளோ உறுதியா ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு தொடர்புடையதுன்னு. ரெண்டு பேருமே தற்கொல பண்ணிக்கல. கொலதா பண்ணிருக்காங்கன்னு."
" சுருதி, ஃபோனுக்கு வந்த அதே மாறியான மெஸ்ஏஜ் இவருக்கும் வந்திருக்கு பாரு." என ஆரோக்கியத்தின் ஃபோனை காட்ட,
" இது யாரோட நம்பரு."
"தெரியல. சைபர் கிரைமுக்கு அனுப்பிருக்கேன். நமக்கு இன்னும் விபரம் வேணும். அதுக்கு ஆஸ்ரமத்துக்குள்ள போனும். "
" நீ நம்ப ஐஜீட்ட சொன்னோன்னா, அவரு சர்ச் வாரெண்ட்குடுத்திடப் போறாரு. அத செய்யுறத விட்டுட்டு எதோ பாடி கார்ட் இருக்குற ஸ்கூல் பொண்ண கூட்டீட்டு வந்து டீல் பேசிட்டு இருக்குற. முட்டாள்." என ஹரிணி எதற்கு இதுக்கு எனக் கேட்க,
"நா அவருக்குக் கால் பண்ணுறதுக்கு முன்னாடியே அவரே எனக்குக் கால்பண்ணி அங்கெல்லாம் போகாம விசாரிங்கன்னு சொல்லுறாரு. என்ன பண்ண, நமக்குத் தைரியமான சிலரோட உதவி தேவ. அதா டீல் பேச வேண்டியதா போயிடுச்சி."
" அதுக்கு எதுக்குடா அந்தப் பொண்ணு. பாக்க பழக ரொம்ப ஸ்வீட்டு டா இருக்குதுடா அது. அந்தப் பொண்ணு கூடவே இருக்கே அந்தப் பாடிகார்ட் கௌதம். அவருமே பாக்க பருப்பும் நெய்யும் கலந்து சாப்பிடுற பச்சை கொழந்த மாறி இருக்காப்ல. எப்படி அவங்களால ஒரு போலிஸ் மாறி இன்வெஸ்டிக்கேட் பண்ண முடியும்."
"அவங்க பண்ணுவாங்க. அப்பப் பாத்து தெரிஞ்சிக்க." என்றான் அவன்.
"அது மட்டும் தா காரணமா. இல்ல வேற எதுவும் இருக்கா." என நண்பனைச் சந்தேகமாகப் பார்க்க, அவனை முறைத்தான் விக்னேஷ்.
"இல்ல மச்சான் நீ தா சின்சியர் சிகாமணின்னு எனக்குத் தெரியும். அதே மாறி நீ ஒரு நல்ல ஹஸ்பென்ட்டுன்னும் தெரியும். அதா எதாவது உள் குத்து இருக்கான்னு. கேட்டேன்."
"இருக்கு. பவதா... நீயே பாத்தேல்ல. இன்னைக்கி உங்கிட்ட எப்படி பேசுனான்னு."
"எங்கிட்ட மட்டுமில்ல. வீட்டுக்கு வந்தவங்க கிட்டையும் தா. கொஞ்சம் ரூடா நடந்துக்கிட்ட மாறி இருந்தது." என்றான் கவலையாக.
"உனக்கு அண்ணி செஞ்சது நியாபகம் இல்லையா. இப்ப பவதாக்கு தேவ அவள கொஞ்சிக் கிட்டும் கெஞ்சிக்கிட்டும் இருக்குற ஆள் கிடையாது. அவா கூட மல்லுக்கு நிக்க ஒரு ஆள் வேணும். அது ஹரிணி தா. எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த ஊட்டிய விட்டுப் போகும்போது எங்கூட என்னோட பவதா இருப்பா. பழய பவதா. நா நேசிச்ச என்னோட பாப்பா." என்றவனுக்கு விழிகள் கலங்கின.
அதைக் காட்டாது, "நீ வினோத்துக்கு ஃபோன் போட்டு மணிராமையும் அவனோட குடும்பத்தையும் விடாம கண்காணிக்கச் சொல்லு. குற்றவாளி யாருன்னு தெரியுற வரைக்கும் நிழல கூட நாம சந்தேகப்பட்டுதாதீரனும். வா." என அழைத்துச் சென்றான் விக்னேஷ்.
தன் மனைவிக்காக யோசிக்கும் நல்ல கணவனும் அவன் தான். அதே நேரம் தன் கேஸ்ஸை எப்படி முடிப்பது என்று தெரிந்து வைத்திருக்கும் காவலனும் அவன் தான். ஒரு கல்லுல ரெண்டு மாங்காப்பா.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..