அத்தியாயம்: 9
வட்ட மேஜை மாநாடு. வட்டமான மேஜையை சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தால் அது வட்ட மேஜை மாநாடு. அது தான் நடக்கிறது, விக்னேஷின் வீட்டில்.
மொத்தம் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விக்னேஷ், பவதா, ஹரிணி, கௌதம்.
'அப்ப ஐஞ்சாவது யாருக்கு. அட வர்றது நம்ம மனோகரு'.
'எப்ப ப்பா வந்த. நல்லா இருக்கியா?.'
'நல்லா இல்லங்க. நல்லாவே இல்ல. நைட்டோட நைட்டா பஸ் ஏறி வரச் சொன்ன க்ளோஸ் ஃப்ரெண்ட் கிடைச்சதுனா! எப்படி நல்லா இருக்க முடியும். எவனுக்கும் இப்படியொரு ஃப்ரண்டு கிடைக்க கூடாது. விடியக்காலைல கைக்கால் வெறக்கிற குளிர்ல வந்திறங்கி, அவசர அவசரமா நண்பன வந்து பாத்தா! பாத்ரூம் கூடப் போக விடாம நிக்க வச்சிட்டானுங்க. அடிவயிறு முட்டுது. என்னோட அவசரம் யாருக்கும் புரிய மாட்டேங்கிது. சுயநல உலகம்டா இது.' எனப் புலம்பியபடி இருந்தான் மனோ.
"டேய் எவ்ளோ நேரம் டா! கதவ தட்டுறது. வந்து எவனாவது கதவ தொறங்க டா." எனக் காலிங் பெல்லையும் கதவையும் மாறி மாறித் தட்டிக் கொண்டு இருந்தான் மனோகர். கதவு தான் திறக்கப்படவில்லை.
"ஹாய்.! குட்மார்னிங். ஐ ஆம் ஹரிணி. நைஸ் டூ மீட் யூ." எனக் கைக்கொடுத்தாள் ஹரிணி.
ப்ளாக் கலர் ஜீன்ஸ். மஞ்சளும் கருப்பும் சரிபாதியாகக் கலந்த டீசர்ட். உயர தூக்கி கட்டப்பட்ட சிகை. அது அவளின் தோளைத் தொட்டு உறவாடியது. முகம், அது இன்று பூத்த மலர்போல் புத்துணர்வுடன் மலர்ந்து இருந்து.
அதைக் கண்டவன் மனோ. 'வாவ்.!! நைஸ் கேர்ள்'. என ரசிக்க ஆரம்பித்தான். அவனுக்குக் காதலிக்க இன்னும் ஒரு பொண்ணும் கிடைக்காததால் தேடிக் கொண்டு இருக்கிறான். அதான் ஹரிணி சைட் அடித்துக் கைக்குலுக்க, குலுக்கிய அவனின் கரத்தைப் பிரித்து, தானும் குலுக்கினான் கௌதம்.
"என்னோட பேரு கௌதம்." எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். இருவரும் விக்னேஷ் பார்க்க, இல்லை பவதாவின் உயிரை வாங்க வந்துள்ளனர்.
'உன்ன யாரு டா கேட்டா.' என்பது போல் கௌதமை ஒரு பார்வை பார்த்தவன் கரம் குலுக்கி.
"நா மனோகர். போலிஸ்ஸா சென்னைல வேல பாக்குறேன். நீங்க யாரு.? விக்னேஷ பாக்க வந்திங்களா.?" எனக் கேட்க,
"வாங்கண்ணா. வாங்க." எனப் புன்னகையுடன் வரவேற்றாள் பவதாரிணி. மனோகரை மட்டும். மற்ற இருவரையும் முறைக்க, மனோகர் கதவைத் திறந்ததும் ஓடி விட்டான். அவசரம் இல்லையா. அதான்.
'நாங்க பாக்க வந்தது உம்புருஷன. உன்ன இல்ல.' என்பது போல் இருவரும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டனர்.
அமர்ந்தது மட்டுமில்லை கால்மேல் கால் போட்டுக் கொண்டு நாங்களும் சலச்சவங்க இல்ல என்பது போல் பவதாவை பார்த்து முறைத்துக் கொண்டு தான், இருவரும் அல்ல ஹரிணி மட்டும் தான்.
பவதா காஃபி கப்புடன் வந்தாள்.
"உன்னோட காஃபிய நா ரொம்ப மிஸ் பண்ணேன் பவதா." எனக் கப்பை எடுக்கப் போனவன் கண்டது இரண்டு கப்புகளை மட்டுமே. பவதா மனோகருக்கும் கௌதமிற்கும் மட்டுமே எடுத்து வந்தாள். ஹரிணிக்கு இல்லை
நேற்று இரவு முழுவதும் பவதா திறந்த வாயை மூடவே இல்லை. ஹரிணியை திட்டினால் திட்டினால் திட்டிக் கொண்டே இருந்தாள். அவளுக்குக் கௌதம் மீது எந்தக் கோபமும் வெறுப்பும் இல்லை. எல்லாம் ஹரிணி மீது மட்டும் தான். அதுவும் ஹரிணி விக்னேஷை விரல் சுண்டி அழைத்ததால் வந்த கோபம் அது.
'எம்புருஷன் எவ்ளோ பெரிய போலிஸ்காரென். அவன எப்படி இவா சொடக்கு போட்டுக் கூப்பிடலாம். இதுல இவளுக்கு நா காஃபி டீன்னு விருந்தோம்பல் செய்யனுமாம். ஹிம்.' பவதா மைண்ட் வாய்ஸ்.
'எனக்கு ஒன்னும் உன்னோட காஃபி தேவையில்ல.' என்பது போல் மிடுக்காய் இருந்தாள் ஹரிணி.
ஜாக்கிங்கை முடிந்து விட்டு வந்த விக்னேஷ் வாசலில் இருந்த சில சூட்கேஸ்களை கண்டு குழம்பி போனான். பின் உள்ளே செல்ல,
" ஹாய் விக்கி. குட்மார்னிங்." என்றாள் உற்சாகமாக.
"விக்கியா." என அதிர்ச்சியாகக் கேட்ட மனோவிடம்,
"ம்... விக்கித்தா.! ACP சாரோட பேரு ரொம்ப நீளமா இருந்துச்சு. விக்னேஷ்வரன்ன்ன்னு. அதா சுருக்கி விக்கி. நல்லா இருக்கா." எனக் கேட்டாள்.
"நீங்கச் சொன்னா எல்லாமே நல்லாத்தா இருக்கும்." என்றவனை மற்ற மூவரும் முறைத்தனர்.
"வணக்கம் ACP சார். இது பப்ளிக் ப்ளேஸ் இல்ல. சோ நாம பேசலாமா." கௌதம்.
" பேசலாம். ஆனா எதுக்கு சூட்கேஸ்ஸோட வந்திருக்கிங்க." விக்னேஷ். சூட்கேஸ்ஸா என வாசலைப் பார்த்துப் பவதா அதிர்ச்சியானாள்.
"அதப்பத்தி தா விக்கி பேசக் கூப்பிடுறோம். வந்து உக்காரு." ஹரிணி இடத்தைக் காட்ட. விக்னேஷ் அமர்ந்தான். ஹரிணியின் குரலில் விளையாட்டுதனம் முற்றிலும் மறைந்திருந்தது.
" ஷீ!. நீங்க எனக்குப் பண்ணப்போறது சின்ன ஹெல்ப் தா. அத யாரு வேண்ணாலும் பண்ணலாம். நீங்க தா செய்யனும்னு அவசியம் இல்ல." என விக்னேஷ் 'இப்படி வம்பு பண்ற உங்க உதவியே தேவயில்ல. போங்கப்பா. ' சற்று காட்டமாகவே சொன்னான்.
'பின்னப் பேசனும் வான்னு சொன்னதுக்கு. பெட்டி படுக்கைய தூக்கிட்டு வந்தா. கோபம் வரதா. '
" ம்... யாரு வேண்ணாலும் பண்ணலாம் தா. பட் பண்ண மாட்டாங்க. பண்ணவும் விடமாட்டோம்." ஹரிணி.
" நா விசாரிக்கிற கேஸ் என்ன ஏதுன்னே தெரியாம பேசக் கூடாது." விக்னேஷ்.
"சுருதின்னு ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிட்டா. அதுல சந்தேகம். அத பத்தி விசாரிக்கப் போற. சரியா." கௌதம்.
"அவா வளந்த ஆஸ்ரமத்துள்ள உன்ன அலோ பண்ணல. அதுமட்டுமில்ல ஊருக்குள்ள அந்தக் காப்பகத்து மேலயும், அத நடத்துற தயானந்தன் மேலயும் நல்ல மரியாத இருக்குறதுனால நீ எதிர்பாக்குற எந்த ஒரு க்ளூவையும் உனக்குத் தர யாரும் முன் வரல. சோ அதுக்குள்ள போய் உனக்கு யூஸ்புல்லா எதாவது கிடைக்கிதான்னு பாக்க ஒரு ஆள் வேணும். சரியா." ஹரிணி.
"இல்ல, எனக்கு அந்தாளு மேல் டவுட் இல்ல. ஆனா அங்க வேல பாக்குற சிலர பத்தி தெரிஞ்சிக்கனும்." விக்னேஷ்
" இருபது வர்ஷத்துக்கு முன்னாடி கஞ்சா வியாபாரம் பண்ணி பிழைச்சவேன்னாலாம் இப்ப சமூகத்துல உயர்ந்த இடத்துக்குப் போய்ட்டானாம். கேக்கவே விசித்திரமா இருக்குல்ல." என முகம் சுளித்து பேசினான் கௌதம்.
" உனக்குத் தயானந்தத்த தெரியுமா?. எப்படி?." விக்னேஷ்.
" ம்... தெரியும் அந்தாள. நா பிறந்தது வளந்தது எல்லாம் இங்கதா. ஆனா அந்தாளு எப்படி ஊருக்குள்ள இவ்ளோ சீக்கிரம் பெரியாள ஆனான்னு தா புரியல."
" உனக்கு எப்படி அந்தாளு கஞ்சா வித்தான்னு தெரியும்?." மனோ.
"நானே வாங்கிருக்கேன். அந்தாளு பையங்கிட்ட. இந்த ஆஸ்ரமம், மக்களுக்கு நல்லது செய்ற மாறிச் சீன் போடுறது எல்லாமே. இந்தப் பத்து பதினஞ்சி வர்ஷத்துக்குள்ள தா. அதுக்கு முன்னாடி ஏன்னு கேக்க கூட ஆள் இல்லா வெறும் பில்டிங்க மட்டும் வச்சி, நாலு அநாத பிள்ளைங்கள பாதுக்காக்குறேங்கிற பேர்ல ஈ ஓட்டீட்டு இருந்தானுங்க. இப்ப அப்பனும் மகனுமா சேந்து எதையோ செய்றானுங்க." என்றான் கௌதம்.
"அப்றம் எப்படி அவனுங்களுக்கு ஃபாரின்ல இருந்து ஃபன்டு வருது." ஹரிணி.
"அத கண்டு பிடிக்கனும்னா நாம அதுக்குள்ள போகனும். நீங்க என்ன பண்றீங்கன்னா." எனத் தன் திட்டத்தைச் சொல்ல வந்த விக்னேஷை தடுத்தாள் ஹரிணி.
" வெய்ட் வெய்ட். இன்னும் நாங்க பேசி முடிக்கல. பொதுவா போலிஸ் தா மக்களுக்கு உதவி செய்வாங்க. ஆனா இங்க போலிஸுக்கே எங்க உதவி தேவப்படுறதுனால. " ஹரிணி.
"ரிஸ்க் ஜாஸ்தி எங்களுக்கு. அதுனால..." எனக் கௌதம் இழுக்க,
"அதுக்கு தா உங்க தங்கச்சி கேஸ்ல ஹெல்ப் பண்றேன்னு சொன்னேனே." விக்னேஷ்.
" ம்ச்... நீங்களே சொல்லுங்க மனோகர். போலிஸ் ஸ்டேஷன் குள்ள இருக்குற ஒரு சாதாரண வீடியோ டேப்ப போலிஸ்ஸே எடுத்துத் தர்றதுக்கும். யாருக்கும் சந்தேகம் வராம ஒரு ஆஸ்ரமத்துக்குள்ள போய் உங்களுக்கு வேண்டியத தெரிஞ்சிட்டு வர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. இல்லையா." ஹரிணி.
"ஆமா... ஆமா... மாட்டுனா உங்க நிலம என்ன ஆகும். அசிங்கமா போய்டும். அதுனால ரிஸ்க் ஜாஸ்தி தா மச்சான்." என மனோகர் விக்னேஷை பார்த்துச் சொல்ல, அவன் முறைத்தான்.
" ம்... அதுனால தா எங்களுக்கு நீங்கப் பண்ணப்போற ஹெல்போட சேத்து இன்னொரு ஹெல்பும் பண்ணனும்னு சொல்றோம். அப்பதா டீலிங் சரியா இருக்கும்." என்றான் கௌதம்.
பிஸ்னஸ் மேனாம்.
"நா முடியாதுன்னு சொல்லிட்டா. உங்க தங்கச்சி கேஸ்ல நீங்க அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியாது." என்றான் விக்னேஷ் மிரட்டலாக,
"ஓ!. அப்படியா சொல்ற. ம்... ஆனா நாங்க இங்க வந்தது பார்கவி கேஸ்கு ஒரு முடிவு கட்டத்தா. உன்னால எங்களுக்கு வெல்யூவான க்ளு கிடைச்சா, போட்டு வச்ச அந்த ஃபுல்ஸ்ட்டாப்பா கமாவா கண்வெட் பண்ணி விசாரிக்கலாம்னு இருக்கோம்." ஹரிணி நக்கலாக.,
"பட்... எங்களுக்கு எந்த ஒரு க்ளூவும் கிடைக்காம நாங்க வீட்டுக்குப் போனாக் கூட எங்கல யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. ஆனா உன்ன. ம்..." கௌதம்.
"டீவி நியூஸ் சேனல்ல இருந்து யூட்யூப் வரச் சுருதி கேஸ்ஸ தீவிரமா சிலர் ஃபாலோ பண்ணிட்டு இருங்காங்க. சோ, நீ வெறுங்கையோட போனா! உன்னோட உயர் அதிகாரி உன்ன என்ன சொல்லுவாருன்னு நா சொல்லத் தேவையே இல்லை." ஹரிணி
"எங்களுக்குக் கிடைச்சாலும் கிடைக்கலான்னாலும் ஒன்னுதா. ஆனா உனக்குக் கிடைச்சே ஆகனும்." கௌதம்.
"இப்ப டிமெண்ட் பண்ற இடத்துல நாங்க தா இருக்கோம். அதுமட்டுமில்ல நீயும் வெங்கட்ராமன் மாறி எங்கள சுத்தல்ல விட்டுட கூடாதுல்ல. அதா ஒரு பெஸ்ட்டான டீலோட வந்திருக்கோம்." ஹரிணி.
"எனக்கு உங்க கூட டீல் பேச விருப்பம் இல்லன்னு சொல்லி வேற யாரோட மூலமா ஆஸ்ரமத்துக்கு போய் என்னோட வேலைய முடிச்சிக்கிவேன்னு சொன்னா! என்ன பண்ணுவிங்க?." விக்னேஷ்
"தயா கிட்ட போவோம்." ஹரிணி.
"மண்ட முழுக்க வெய்ட் முடி வச்ச அங்கிள், 'உங்க இடத்துக்குள்ள நுழய ஒரு போலிஸ் ரகசியமா திட்டம் போடுது. சோ நீ கேர் ஃபுல்'ன்னு வார்னிங்க குடுப்போம்." கௌதம்.
"அப்றம் உன்ன ஃபாலோ பண்ணி நீங்க யார்யார்கிட்ட பேசுனாலும் உங்களுக்கு உதவி கிடைக்காத மாறிப் பண்ணுவோம்." ஹரிணி.
"முடியாது. நாங்க சொன்னத செய்ய மாட்டோம்னு மட்டும் நினைக்காத. அப்றம்." கௌதம்.
"விளைவுகள் பெருசா இருக்கும்." ஹரிணி.
"மொத்ததுல ஒரு திட்டத்தோட தா வந்திருக்கிங்க." மனோ.
"எஸ்..." கோரஸ்ஸாக.
"என்ன அது?. சீக்கிரம் சொல்லுங்க." பவதா.
"அது ஒன்னுமில்ல. எங்க கைக்கு அந்த வீடியோ வர்ற வர." கௌதம்.
"நாங்க இங்க தா தங்கப் போறோம்." ஹரிணி.
" வாட்..." எனப் பவதா மட்டுமே அதிர்ச்சியானாள். மற்ற இருவரும் இதைக் கணித்திருந்தனர். அதான் அமைதி. அதிலும் விக்னேஷ் முகத்தில் பேரமைதி.
"என்ன வாட்டு கோழின்னுடு. உன்னோட புருஷனுக்கு இந்தக் கேஸ்ஸ முடிச்சி குடுத்தா ப்ரமோஷன் கூடக் கிடைக்கலாம். ஆனா எங்களுக்கு. ஒன்னும் கிடையாது. அதுனால ஜஸ்ட் ஒன் வீக். அட்ஜஸ்ட் பண்ணிக்க. அவ்வளவு தா." என ஹரிணி அசால்டாகக் கூற, பவதா மறுத்துப் பேச, அங்கு இரு பெண்களின் குரல் மட்டுமே கேட்டது.
"விக்னேஷ், என்னால இவா கூடலாம் இருக்க முடியாது. பொண்ணா இது!. பஜாரி. பேண்டு சட்ட போட்ட மினி ஏச்சார் காக்ரோச். இவா நம்ம ரத்தத குடிக்க வந்து ரத்த காட்டேரி. மொத்தல்ல விரட்டி விடு." எனப் பொரிய, 'நம்ம பவதாவா பேசுறது.' என மனோ வாய் மூடாமல் பார்த்தான்.
அவனும் கடந்த சில நாட்களாகவே பவதாவின் சாந்தி சொரூபமான அவதாரத்தைப் பார்க்கிறானே. இப்போது மீண்டும் பழைய அவதாரமான காளியை எடுத்ததில் மகிழ்ச்சி அடைந்தவன் விக்னேஷை பார்க்க, அவன் முடிவு செய்து விட்டான். ஹரிணி வீட்டில் இருந்தால் தான் பவதா பழய பவதாவாக இருப்பாள் என்று.
" எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. பட்..." என அவன் இழுக்க,
" உங்க ரெண்டு பேரையும் நாங்க எந்த விதத்திலையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்ன ஹரிணி?." எனத் தன் தோழியைப் பார்க்க,
'அப்படில்லாம் இருக்க முடியாது. ' என்பது போல் பார்த்தவளை கௌதம் முறைத்தான்.
" உனக்காகத் தா... நா எந்த வம்பும் பண்ண மாட்டேன். பட், இவா வம்பு பண்ணா சும்மா இருக்கவும் மாட்டேன்." என்றாள் ஹரிணி, பவதாவை காட்டி.
" என்ன பாத்தா சண்ட காரி மாறித் தெரியுதா உனக்கு. சும்மா இருக்குறவங்கள சீண்டி பாத்துட்டே இருக்க நா ஒன்னும் உன்ன மாறி லூசு இல்ல." என்றவளை ஹரிணி முறைத்தாள்.
" போதும். நீங்க இப்ப ப்ரஷ் ஆகிட்டு வாங்க. இந்தக் கேஸ் பத்தி பேசனும்." என விக்னேஷ் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்.
"மச்சான் யாரு என்னனு தெரியாத பொது மக்களுக்கே உன்னோட வீட்டுல இடம் தரும்போது, உயிர் நண்பன் நான் எனக்குக் கொஞ்சம்." மனோ
" பின்னாடி வேஸ்டு ரூம்னு ஒன்னு இருக்கு பழசு பட்டையெல்லாம் போட்டு வைக்கிற மாறி. அதுல போய்ப் படுத்துக்க."
'அதுவும் சரிதா. ' என்பது போல் தலையை அசைத்தான் மனோ.
" விக்னேஷ் உனக்கு என்னாச்சி. எதுக்கு அதுகல இங்க தங்குறதுக்கு சம்மதிச்ச." எனக் கத்தினாள் பவதா.
" பவதா, கொஞ்ச புரிஞ்சிக்க. நா வெளில போய்ட்டா உனக்கு வீட்டுல துணைக்கின்னு ஆள் வேணாமா?." என விக்னேஷ் பேச.
" வேணாம்." என்றாள் வெடுக்கென.
" தனியா இருக்குறதுனால தா உனக்குக் கண்டதும் நியாயம் வருது. சோ..."
"இப்ப உனக்கு நா தனியா இருக்குறது தா பிரச்சனன்னா நா சங்கீதாவ கூப்டுக்கிறேன். எனக்காக எம்ஃப்ரெண்டு வருவா." என்றாள் பவதா.
"யாரு அந்த நெட்ட பென்சிலா!. அவளுக்கு இப்ப வந்த ஹரிணி எவ்வளவோ தேவல்ல. பாக்க நல்ல பொண்ணா தெரியுது. நல்லா பாய்ண்டு பாய்ண்டா பேசுது. அத விட அழகா இருக்குது." என்றவன் மனோ, ஹரிணி சென்ற பாதை பார்த்துக் கொண்டே.
"ஆமா… பின்னாடியே போனானே அவெ யாரு.? லவ்வரா!." என விக்னேஷிடம் கேட்க,
"இல்ல..." என்றவுடன் சந்தோஷக்கடலில் குதிக்க தயாரானவனை தடுத்தான் விக்னேஷ்.
" இரு மச்சா. அது லவ்வர் இல்ல. ஃப்ரெண்டு தா. ஆனா!."
"என்ன ஆனா?. ம்... என்னடா ஆனா?."
"ஹரிணி மிஸ் ஹரிணி கிடையாது. மிஸ்ஸஸ் ஹரிணி. கல்யாணம் ஆகி அவளுக்கு ஒரு குழந்தையே இருக்கு." என்றபோது பாவம் மனோவின் மனம் தரையில் விழுந்த கண்ணாடிபோல் சில்லு சில்லாய் உடைந்து போனது.
" ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி ஆகுது. நா பாக்குற எல்லா பொண்ணுக்கும் கல்யாணம் ஆகிருதே ஏ?."
" கல்யாணம் ஆகல மச்சி. கல்யாணம் ஆன பொண்ணத்தா நீ பாக்குற. அது தப்பான செயல்." எனக் கேலி செய்ய, பவதா கத்தினான்.
" ஸ்டாப் பிட். எனக்கு அந்த ரெண்டு பேரையும் பிடிக்கல. முக்கியமா அந்த மிஸ்ஸஸ் ஹரிணிய. நீ என்ன சொன்னாலும் அவா கூட என்னால இருக்க முடியாது." எனத் திட்டிக்கொண்டே செல்ல விக்னேஷும் பின்னாலேயே சென்று சமாதானம் செய்தான்.
அவனுக்கு ஹரிணி மற்றும் கௌதமின் தைரியம் பிடித்திருந்தது. அவர்களை மிரட்டியதற்காகப் பின்னாலேயே வந்து வம்பு செய்த விளையாட்டுதனம். இருவரின் பேச்சில் முதிர்வும் தெரிந்தது. அதைவிடத் தன் மனைவியின் அந்த மாற்றம், அதற்காகவே ஹரிணியை வீட்டில் இருக்க சம்மதித்தான்.
இல்லையேல் போலிஸ்காரென மிரட்ட முடியுமா!
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..