முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 25

 

அத்தியாயம்: 25


தன்னை விடச் சிறியவளாகினும்…


தங்கத்தை விட உயர்ந்தவளாக…


அண்ணனின் உள்ளத்தில்...


வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்.‌..


ஒரு ஆண் அறியும்…


இரண்டாவது அன்னை...


உடன் பிறந்தவள்...



மனமானது சற்று லேசாக இருந்தது. தன் தங்கையின் கல்லறையைக் காண்கையில். ஏனோ இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டதை போல் ஒரு உணர்வு. தங்கையை இழந்ததற்கு பழி வாங்க தயாராக இரு என்றது மனம்.


எந்த வழியும் கிடைக்காத போதும்‌, கிடைத்துவிட்டதை போல் நிறைந்து போனது மனம். ஏன் என்று தான் புரியவில்லை.


தங்கையின் கல்லறையில் இருந்த மலர்களில் வந்தமர்ந்த சில பட்டாம்பூச்சிகளை கண்டவன் நிறைந்த புன்னகையுடன் வீடு திரும்ப, ஒரு இனிப்புக் கடை கண்ணில் பட்டது.


நேற்று பவதாவிடம் சண்டையிட்டு கடைசி ஸ்பூன் அல்லவாவை அவளுக்குத் தராது உண்டதால் கோபமாக முகம் திருப்பிச் சென்றது நினைவு வர, அந்தக் கடையில் குலோப்ஜாமுனை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்ய நினைத்தான்.


வீடு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் தர. அவளோ. "எனக்கு வேண்டாம். நா கேக்கும்போது தந்திங்களா. இல்லல்ல. இப்ப எனக்கு வேண்டாம். " என எழுந்து செல்ல,


"என்ன ACP. உன்னோட பாப்பா கோயிச்சிட்டு போது. கூப்பிடுய்யா. கொஞ்சோன்டு சாப்பிட்டு விரதத்த முடிச்சிக்க சொல்லு. " என்று சமையலறைக்குள் வாங்கி வந்ததை வைத்தான்.‌


"பாஸ் என்ன இருந்தாலும் நீங்கப் பவதாவ ஒரு அல்வாவுக்காக அவ்வளவு நேரம் கெஞ்ச விட்டுருக்க கூடாது. பவதாம்மா இதுக்கு உன்னோட சட்டத்துல என்ன தண்டன்னு பாத்து சொல்லும்மா. " மனோ.


" ம்… மரண தண்டன‌." என இதழ் கோணிச் சென்றாள் சமயலறைக்கு சென்றாள் அவள்.


"கௌதம் இன்னைக்கி நைட் உங்க கைக்குப் பார்கவி கேஸ் டீட்டெல்ஸ் கிடைச்சிடும்.‌ என்னோட ஃப்ரண்டு ஜீவா கொண்டுவந்து தருவான்." விக்னேஷ்.


“ஜீவா மாமா வர்றாங்களா?." எனப் பவதா தலைநீட்டி கேட்க, முறைத்தான் விக்னேஷ்.


"அது யாருப்பா?. புதுசா ஒரு பேரு வருது. " கௌதம்.


"புதுசெல்லாம் இல்ல. ஆள் பழய பீஸ் தா. என்ன ஊட்டிக்கி புதுசா வருது. " மனோ.


"கௌதம் நம்ம டீல் நியாயம் இருக்குல்ல. நா சொன்னத செஞ்சாச்சி. அதுனால.‌" விக்னேஷ்


"அன்னை காப்பகத்துல இருந்து எடுத்த டாக்குமெண்ட் வேணும் உனக்கு. சரியா. "


"எஸ். "


"ஆமா அதெல்லாம் தேவையில்ல. நா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டோம். கதிரேசன் தா காரணம்ன்னு சொன்ன. இப்ப என்ன திடீர்னு. சந்தேகம் வந்துடுச்சா?. "


"ஆமா கௌதம். இந்தக் கேஸ்க்கு கதிரேசன் முடிவில்லன்னு தோணுது. அப்ப வேற யாரு இருக்காங்ன்னு கண்டு பிடிக்க நீ குடுக்குறது உதவியா இருக்கும். "


"இரு நா முதல்ல அத எங்க வச்சேன்னு பாத்துட்டு வர்றேன். " எனக் கௌதம் ஹரிணியின் அறைக்குச் செல்ல, ஹரிணி பெட்டியை அடுக்கிக் கொண்டு இருந்தாள். ஒரு துணி விடாது அனைத்தையும் மடித்து கட்டில்லில் வைத்திருந்தாள், சூட்கேஸ்ஸில் அடைக்க.


"டார்லிங் ஊர விட்டு இப்பவே போறோமா?.‌" என சந்தோஷமாகக் கேட்க, அவனை முறைத்தாள் ஹரிணி.


" இல்ல அந்தச் சிரிப்பு போலிஸ் இன்னைக்கி நைட் நமக்கு வேண்டியத தர்றேன்னு சென்னான். அப்ப நாளைக்கி நாம ஊர விட்டுப் போய்த்தான ஆகணும். " என்க, அதற்கும் முறைத்தாள் அவள்.


" சரி நீ எதோ டென்ஷன்னா இருக்க நா அப்றமா வந்து பாக்குறேன். " எனப் புறப்பட இருந்தவனை பிடித்திழுத்து,


"எங்க போற கௌதம். என்னோடத காணும். எங்க வச்சேன்னு தெரியல. ப்ளீஸ் வந்து தேடு. போகாத. " என மொட்டையாகச் சொல்ல,


"என்னத்த தேடுற. சொல்லிட்டு தேடு. " என அங்கும் இங்கும் பார்த்தான்.


"தேடுடா. " எனக் கத்த,


" இவா என்ன உதவிய கூட மிரட்டிக் கேக்குறா. செய்ய முடியாதுன்னு போய்டலாமா. வேண்டாம் லூசா இருந்தாலும் என்னோட ஃப்ரண்டு. எதையாது தேடுவோம். " என நினைத்தவன், அவளுடன் சேர்ந்து தேடினான். "அப்படி என்னத்ததா தேடுற. " என்றபடி.‌


"ம்ச்... நாம அந்த ஹோட்டலுக்கு போனோமே. அப்பச் சில மெட்டீரியல் நல்லா இருந்துச்சி. சில்க், காட்டன், உல்லன்னு. அதா வாங்கிட்டு வந்திருத்தேன். அத காணும். " என்றவளிடம்,


"ஒரு வேல வாங்கி உன்னோட புருஷெ ரூம்ல வச்சிட்டு வந்துட்டியா என்ன?. " என்றபோது அவளின் முகம் பளிச்சிட்டது.


"எதுக்கும் நா அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்.‌" என்க வேகவேகமாக ஃபோன் போட, அது போகவில்லை. கௌதமை பார்க்க‌...


"அது... அது... நாளைக்கி சரி பண்ணிடுறேன்.‌. இல்ல இன்னைக்கே பண்ணீடுறேன். " என்றான். 


வெளியே வந்தவள், "விக்கி ஃபோன் குடு. " என வாங்கி ரிஷியிடம் பேசினாள்.


சமையலறையில் சத்தம் கேட்க, விக்னேஷ் எழுந்து சென்று பார்த்தான். அங்குப் பவதா யாருக்கும் தெரியாமல் அவள் மட்டுமே குலோப் ஜானை காலி செய்துகொண்டிருந்தாள். விக்னேஷ் திட்டித் தொடங்கி விட்டான்.


அவளுக்கு இனிப்பு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றில் வலி வரும். அதனால் விக்னேஷ் அதிகமாக வாங்கி தரமாட்டான். ஆனால் இந்தக் கௌதம் இருக்கானே. அவனுக்கும் ஸ்வீட்டுன்னா பிடிக்கும். அதுனால தினமும் வாங்கிட்டு வந்து பாதி உண்டு விட்டு மீதியை ப்ரிட்ஜ்ஜில் வைத்து விடுவான். மீதியை பவதா எடுத்துக் கொள்வாள். இன்றும் அதுபோல் வாங்கி வந்தவன் பவதாவிடம் தர, விக்னேஷ் இருப்பதால் அவள் வேண்டாம் என்று விட்டு, சமயலறை புகுந்து தின்றாள். மாட்டிக் கொண்டாள் விக்னேஷிடம்.


"பவதா இது சரியில்ல. நேத்து தான காய்ச்சல்னு சொன்ன. இன்னைக்கி இத சாப்டா மறுபடியும் ஹாஸ்பிடல்கு தா போக வேண்டி வரும். ஏ பவதா இப்படி பண்ற. " எனத் திட்ட, பவதா எட்டி கௌதமை பார்த்தாள். உதவிக்கி வரலாமே என்பது போல்.


"என்ன போலிஸு உனக்கு அவ்வளவு ஆகிப்போச்சா. எங்க வக்கீலம்மாவ மிரட்டுற அளவுக்கு. ம். " என வீர வசனம் பேசிக் கௌதம் வர.


"இப்படித்தாண்ணா அடிக்கடி கோபமா கத்துறான். தேவையே இல்லாம என்ன திட்டிக்கிட்டே இருக்கான். " எனக் கௌதமின் அருகில் சென்று‌ வராத கண்ணீரை துடைக்க, அவன் சமாதானம் செய்ய,


"ஏம்மா சாவித்திரி. உங்க நடிப்பு காட்சிய, யாரும் கட் சொன்னாத்தா நிப்பாட்டுவிங்களோ. தாங்க முடியல. " என்றபடி வந்தாள் ஹரிணி.


"இந்தா விக்கி ஃபோன். பாவா வந்துட்டு இருக்கேன்னு சொன்னாரு. நாங்க நாளக்கழிச்சி ஊருக்குக் கிளம்புறோம். உன்னோட உதவிக்கி தேங்ஸ். எங்களோட இந்த டிரிப்ப மறக்க முடியாத மாறி ஆக்குனதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் நன்றி. இனி நீங்க ரெண்டு பேர் மட்டும் இருந்து உங்க ஹனிமூன என்ஜாய் பண்ணுங்க. " எனப் புன்னகைக்க, பவதாவின் முகம் வாடியது. சில நாட்கள் ஆனாலும் ஹரிணியையும் கௌதமையும் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு. அவளின் சுருங்கிய முகம் பொறுக்காது.


" சென்னை தானம்மா. அடிக்கடி வந்து பாத்துகலாம். அப்படியே எனக்கு மீனுகுட்டியையும் இன்டோ குடு. எங்க கிட்ட நந்துங்கிற பேருல ஒரு அறுந்த வாலு இருக்கு. நல்லா பழகுவான். என்ன அழகான பெண்ணுக்களப் பாத்தா மட்டும் கொஞ்சம் ஓவரா பண்ணுவான். வயசு ஆறு தா ஆகுது அதுக்கு. " என்றான் கௌதம். அதை கேட்டுப் புன்னகைத்தாள் பவதா. வெளியில் கார் சத்தம் கேட்க,


" இந்தா கிட்... நீ கேட்டது. " என ரிஷி ஹரிணி கேட்ட பைகளை சோஃபாவில் அமர்ந்தான்.


' அப்படி என்னத்த வாங்கிருக்கா. ' ன்னு பிரித்துப் பார்த்த மனோவை திட்டினாள் ஹரிணி.


" மனோ ப்ளிஸ் எல்லாமே எனக்குப் பிடிச்சதா பாத்து பாத்து வாங்கிருக்கேன். விளையாடாத. " என்றவள் அதிலிருந்த சில பொருளை அள்ளிக் கொண்டு அறைக்குச் சென்றாள்.‌


அவள் சென்றதும் பையை எட்டி பார்த்த மனோவிடம். " யோவ் போலிஸு‌ உன்னோட மாசசம்பளத்த விட அவ வாங்கிருக்கிற கர்சீப் வில அதிகமா இருக்கும்யா.‌ பத்து ரூபா பெறாத லிப்ஸ்டிக். அத‌ பத்தாயிரம் ரூபா குடுத்து வாங்கி வச்சிருக்கா பாரு. வேண்டாம்டா. இது சின்ன சைஸ் கண்ணி வெடி. தொட்டா உன்னோட பர்ஸ் சிதறீடும். " என மனோவை எச்சரிக்க, பவதா ரிஷிக்கி பலகாரங்கள் எடுத்து வந்தாள். கஞ்சி கொடுத்து உதவிய பின் ரிஷியைப் பவதாவிற்கு பிடித்து விட்டது போலும்.


ரிஷி வேகமாக அதை எடுக்கப் போனான். பசி போலும். ஆனால் அவன் எடுக்கும் முன் கௌதம் வேகவேகமாக வந்து எடுத்துக் கொண்டான். நிமிர்ந்து அவனைப் பார்த்தவன், கருணையின் கடல் நான் என்பதை நிருபிக்கும் பொருட்டு சாந்த பார்வை பார்த்துவிட்டு அடுத்த தட்டை ரிஷி எடுக்கப் போக, அதையும் எடுத்துக் கொண்டான் கௌதம். அவனுக்குப் பவதாவும் ரிஷியும் ஒன்றியது பிடிக்கவில்லை. அதான்.


'மணி பதினொன்னு தான ஆகுது. அதுக்குள்ள எதுக்கு உனக்கு ஸ்நாக்ஸ். கொஞ்ச நேரம் கழிச்சு மதிய சாப்பாடா சாப்பிடு. இது பவதாக்காக நா வாங்கிட்டு வந்தது. ' என ரிஷிக்கி அஸ்காட்டி உண்ண, சும்மா இருப்பானா அவன். ஹரிணியின் பையில் கிடந்த Nail polish எடுத்தான்.


'பொண்ணுங்க யூஸ் பண்றத இவெ எப்பத்துல இருந்து யூஸ் பண்ண ஆரம்பிச்சான். ம்... ஒரு வேல சகவகாச தோஷமா இருக்குமோ. ஹரிணி கூடச் சேந்ததுனால. ' என அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஆவலுடன் பார்க்க,


ஊற்றி விட்டான். இத்தனை நேரம் பத்திரம் எனப் பாதுக்காத்த ஹரிணியின் ஆடை பையைத் திறந்து துணிகளின் மேல்.


'ஐய்யையோ. ' என மற்றவர்கள் வாய் மூடிப் பார்க்க, கௌதமிற்கு அவனின் செயலைப் புரிந்து கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது. காலி பாட்டிலை கௌதமின் கரத்தில் வைத்து விட்டு. பலகாரத் தட்டைப் பிடுங்கவும்.‌ ஹரிணி வரவும் சரியாக இருந்தது. அவ்வளவு தான் ஹரிணி வறுத்தெடுத்து விட்டாள்.


" அறிவில்லையா கௌதம். நா சொல்லிட்டு தான போனே. ஏன்னாடா பண்ண இப்படி. எரும... லூசு... இடியட்... " என எந்த மொழியில் திட்டுவது என்ற வரைமுறை இல்லாமல் எல்லா மொழியிலும் திட்ட,


"டார்லிங் நா இல்ல. இது எல்லாம் உன்னோட புருஷந்தா பண்ணான். டேய் போலிஸு சொல்லுங்கடா. " எனச் சப்போட்டிற்கு ஆள் தேட, பாவம் யாருமே வரவில்லை. தனி ஒருவனாக ஹரிணியிடம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.


இதழில் உறைந்த குறுஞ்சிரிப்புடன் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான் ரிஷி. அவனுக்குக் கௌதமை யாரிடமாவது போட்டுக் குடுத்து திட்டு வாங்க வைக்க வேண்டும். அன்று கலியபெருமாள் இன்று ஹரிணி. மொத்தத்தில் கௌதம் விசயத்தில் மட்டும் ரிஷி ஜீன்ஸ் போட்ட நாரதர். கலகத்தை உண்டாக்கிக் கொண்டே இருப்பான். அது நன்மையில் முடியும். ரிஷிக்கி மட்டும்.


அப்படில்லாம் விட முடியாது நாங்களும் கலகம் பண்ணுவோம். எங்களுக்கும் நன்ம கிடைக்கும். மாட்டி விடக் கூட தெரியும் பாக்குறிங்களா. என ஹரிணியின் முன் சில காகிதங்களைக் கொண்டு வந்து வைத்தான் கௌதம்.


"டார்லிங் நா இத உன்னோட புருஷென் டிரங்க்கு பெட்டில இருந்து எடுத்தேன். நா அன்னைக்கி சொன்னபோது நம்பலைல. நீயே பாரு. அவெ எத்தன பேருக்கு லவ் லெட்டர் எழுதிருக்கான்னு. ஐ லவ் யூன்னு அவெ உனக்கு மட்டும் சொல்லல. இங்க பாரு இதுல இருக்குற அத்தன பேர் கிட்டையும் சொல்லிருக்கான். " என கடிதங்களைக் காட்ட,


"கிட் அதெல்லாம் சின்ன வயசுல எழுதுனது.‌ அதுவும் எனக்காக இல்ல."


"ஆமா... ஆமா... அடுத்தவனுக்கு எழுதிக் குடுத்து லவ் சர்வீச செஞ்சிருக்கான். இங்க பாரேன். Dear lovable சாரா. " என வாசிக்க அவனின் தலையில் தட்டினான் ரிஷி.


"அது சாரா இல்ல. சரண்யா. ஒழுங்கா வாசி. "


" பாத்தியா ஹரிணி. சின்ன வயசுல எழுதுனதுன்னு சொன்னான். அதுவும் அவனுக்காக எழுதலன்னு சொன்னான். ஆனா இன்னும் நியாபகம் வச்சிருக்கான்னா என்ன அர்த்தம். இப்பையும் அந்தச் சரண்யா அவனுக்குள்ள இருக்கான்னு அர்த்தம். என்னன்னு கேளு. " என ஹரிணி ஏற்றி விட, ரிஷியை முறைத்தாள் அவள்.


" கிட்… அவங்க என்னோட second standard மிஸ். டீச்சர பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு எழுதச் சொன்னாங்க. எனக்கு அவங்கள பிடிக்கும்ங்கிற அர்த்தத்துல I love you எழுதினேன்." என்றான் அவன்.


" அப்பச் சாரா யாரு. " எனப் புருவம் உயர்த்தி ரிஷியிடம் ஹரிணி கேட்க, அவன் புன்னகைத்தான்.


"எப்படி சொல்லுவான் அது அந்த டீச்சரோட பொண்ணு. இவங்கூட தா பிடிச்சது. அதுக்கும் அந்த லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக் குடுத்துட்டான் போல. அங்க மட்டுமில்ல. இது என்னோட நயன்த் ஸ்டெண்டர்டு கிளாஸ் மெட் மெர்ஸி. அப்றம் இது டெண்த் படிக்கும்போது. பேரு சர்மீளா. இது. " என அவனை மேற்கொண்டு பேச விடாது ரிஷி பிடுங்கினான். ஏனெனில் ஹரிணியோட விழிகள் கோபத்தில் சிவந்தது கொண்டே வந்ததால், கௌதமை பேச விடக் கூடாது என்று.


" ம்... டார்லிங் ஸ்கூல் படிக்கும்போது எழுதுன லவ் லெட்டர பத்தி மட்டும் தா எனக்குத் தெரியும்.‌. அப்றம் காலேஜி… அங்க வச்சி யார் யாருக்கு நூல் விட்டானோ. ஆ. " என்றவனின் வயிற்றில் குத்த,


"ஆ... நீ எதுக்கும் உன்னோட அண்ணேங்கிட்ட கேளு. இல்ல வேண்டாம் அவெ சொல்லமாட்டான். நீ டிடெக்டிவ் வச்சி தெரிஞ்சிக்க. " எனக் கத்திக் கொண்டே தப்பி ஓட, ரிஷியும் துரத்திச் சென்றான். இருவரையும் இது போன்று பார்க்க ஹரிணிக்கு வெகுநாள் ஆசை. சிறு புன்னகையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம். " ஹரிணி இன்னைக்கி எங்கையும் வெளில போவியா. " விக்னேஷ்.


" இல்ல விக்கி. ஏ. "


"அது இன்னைக்கி கதிரேசன கோயம்புத்தூர் கோர்ட்டுக்கு கூட்டீட்டு போறாங்க. இனி விசாரன அங்க தா நடக்கும். சோ நாங்களும் போகணும். பவதாவ தனியா இருப்பா. அதா. " 


"நா ஒன்னும் குழந்த இல்ல விக்னேஷ். என்ன நா பாத்துப்பேன். " பவதா ரோசமாக.


"நாங்களும் தா பாத்தோமே. டீவில வந்த ஒரு மொக்க பேய்ய பாத்து பயந்து நீ போட்ட ஓவர் ஸீன. வாய் மட்டும் தா பவதா நல்லா பேசுற. மத்தபடி நீ ஒரு டம்மி துப்பாக்கி. " என ஹரிணி கேலி செய்ய.


" ஏய்… உன்னால தா எனக்குக் காய்ச்சல் வந்தது. நீ தா. "


"பவதா போதும். ஹரிணி ப்ளீஸ் நாங்க வர நேரம் ஆகலாம். அதுனால வர்ற வரக் கொஞ்சம் கூடவே இரு. அப்றம் நா பாத்துபேன். எனக்கும் கொஞ்சம் வேல இருக்கு. " என்க.


"ஓகே விக்கி. நீ கவலையே படாத. " என இருவரையும் அனுப்பி வைத்தவள் பவதாவுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள். இல்லை பவதாவை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.


மாலை நேரம்.


வீட்டின் கால் பெல் அடிக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கதவைத் திறந்தனர்.‌ யார் வந்தது எனக் காணும் ஆவலில். வந்தது


ஜீவானந்தம்.


"மாம்ஸ். எப்படி இருக்கிங்க?. ப்ரியா எங்க?. கூட்டீட்டு வரலையா?. "என மகிழ்வுடன் வரவேற்றாள் பவதா. ஜீவாவிற்கு அவளின் சிரிப்பைப் பார்க்கையில் சந்தோசமாக இருந்தது.


" உங்கக்காவ கூட்டீட்டு வர நா ஒன்னும் டூர் வரல. கேஸ் விசயமா வந்திருக்கேன். எங்க அவன. "


"உங்க நண்பென் ஸ்டேஷன்க்கு போயிருக்காப்ல. எப்ப வருவாருன்னு எனக்குத் தெரியாது. சோ நீங்க." பவதா.


"நானும் ஸ்டேஷன் போய்ப் பாத்துக்கிறேன். வர்றேம்மா. ". என வெளியே செல்லப்பார்க்க.


"அதுக்குள்ள என்ன அவசரம் மாமா முதல்ல குளிச்சிட்டு.‌ சாப்பிட்டுட்டு போங்க. இல்லன்னா வீட்டுக்கு வந்த எம்புருஷனுக்கு பச்சத் தண்ணி கூடக் குடுக்கலான்னு ப்ரியா சண்டைக்கி வருவா. கூடவே அம்மாவும் சேந்துக்குவாங்க. வாங்க. " என உபசரிக்க, ஹரிணி அதைப் புன்னகையுடன் பார்த்தாள்.


"நீங்கத் தான ஹரிணி. " என்றான் ஜீவா. ஹரிணி கரம் நீட்டித் தன்னை அறிமுகம் செய்ய,


" விக்னேஷ் சொல்லிருக்கான். நீங்க ஒரு கேஸ் டீட்டெய்லஸ் கேட்டதா சொன்னான். இதுல இருக்கு. படிச்சி பாருங்க. " என ஒரு ஃபையில் நீட்டினான்.


அதை வாங்கி பிரித்துப் பார்த்தவளிடம், " எனக்குத் தெரிஞ்சி எதோ ஒரு காரணத்துக்காக அந்தப் பொண்ண கெல பண்ணிட்டு, அது வெளில தெரியக் கூடாதுங்கிறதுக்காக, பாலியல் சித்திவதைன்னு வதந்தி பரப்பி விட்ட மாறித் தோணுது. பட், விசாரிக்காம சொல்ல முடியாது. நீங்க எந்த உதவினாலும் எப்ப வேண்மானாலும் கேளுங்க. " எனப் புன்னகைத்தவன், பவதாவிடம் மேலும் சில ஃபைல்களை குடுத்து விக்னேஷிடம் கெடுக்கச் சொல்லிச் சென்றான் அறைக்குள்.‌


ஆனால் பவதா அதை ஹாலிலேயே வைத்துவிட்டு ஜீவாவின் பின்னே சென்றாள் வாயாடிக் கொண்டு‌.


மொத்தம் மூன்று ஃபைல்கள் இருந்தது. அதில் முதலில் ஒன்றை எடுத்தவள். அதைப் படிக்க வா வேண்டாமா என யோசிக்க,


"அப்படி என்ன ராணுவ ரகசியமா இருந்திடப் போது.‌ படிச்சா பிடிச்சி ஜெயில்ல போட. சும்மா பாப்போம். " என பிரித்துப் படித்துப் பார்த்தாள்.


அதில் அவளுக்கு வேண்டிய ஒன்னு இருந்தது. அது தான் ரிஷியிடம் அவள் கேட்ட சில கேள்விகளுக்கான விடை.


விக்னேஷ் ரிஷியை பற்றித் தெரிந்து வரச் சொன்னானே.‌ அதை‌ தான் ஃபைலில் அடைத்து வைத்து எடுத்து‌வந்தான் ஜீவா. அது இப்போது ஹரிணியின் கையில் சிக்கியது.


அவளுக்குத் தெரியாத ரிஷியின் மறுபக்கம் என்று கூடச் சொல்லலாம்.‌‌

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 24

விழி 26


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...