முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 26

 

அத்தியாயம்: 26 


இரவு நேரம்.


"என்ன போலிஸு. அந்தக் கொலகார பறவைய, கூண்டுல அடைக்கிற மாறிச் சிறைல அடைச்சிட்டு வந்திருக்கிங்க போலயே. " கௌதம். கதிரேசன் குறித்து கேட்டான்.


"அடைச்சிலாம் வைக்கல பாஸ். ஜஸ்ட் விசாரனைக்கி மட்டும் இந்தச் செட்டப்பு. கன்பார்ம் ஆச்சின்னா ரெக்கய உடச்சி உள்ள தள்ளிடலாம். அடுத்து பறக்கவே முடியாத மாறி. " மனோ.


" பட்...‌ பத்து லட்சரூபா இன்சூரன்ஸ்காக வாழ வேண்டிய பொண்ண அநியாயமா கொல பண்ணிருக்க கூடாது. " ஜீவா.


" யோவ், காதுல போடுற கடுக்கண் ல இருந்து நெத்தில வைக்கிற ஒத்த ரூபாய கூடச் சுரண்டி திங்கிற உலகமா இது மாறிகிட்டு இருக்கு. நாம தா எப்பயும் கவனமா இருக்கணும், நல்லா பழகுனவனா இருந்தாலும் கூட. " என்றான் கௌதம் ரிஷியைப் பாத்துக் கொண்டே,


அவன் சொன்ன கருத்துக்கு ரிஷி நக்கலான சிரிப்பைப் பரிசாக தர, கௌதம் முறைத்தான் அவனை.


 'ஏ நாங்கல்லாம் கருத்தூசிய காதுல குத்துனா ஏத்துக்க மாட்டிங்களோ. ' மைண்ட் வாய்ஸ்.


அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டே உணவுண்ண‌, ஹரிணி மட்டும் தட்டை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


"கிட்… என்னாச்சி? சாப்பிடலையா. " என்றவனை விழி உருட்டிப் பார்த்தாள் ஹரிணி. ஆனால் பேசவில்லை.


" டார்லிங்... இந்தா. " எனக் கௌதமும் பரிமாற, ஹரிணி தட்டில் கை வைக்கவில்லை. மனம் கொதித்துக் கொண்டிருந்து.


" நீ எப்ப ஊட்டி வந்த. " என்றாள் ரிஷியிடம்.


" நாலு நாள் ஆகுது. ஏ கிட்?. " என்றவன் சாப்பாட்டை அவளுக்கு ஊட்ட வர, அவனின் கையைப் பிடித்தாள்.


" நாலு நாளைக்கி முன்னாடி ஓம்ம யாரே சூட் பண்ணிட்டாங்களாம். அவெ செத்துட்டானாம். உனக்கு யாருன்னு தெரியுமா அது?. " என்க, ஜீவா முழித்தான்.


விக்னேஷ் என்ன என்க. அவன் ஹரிணி ஃபைலை பிடித்துவிட்டாள் என்று வாயசைத்தான். 'லூசாடா நீ.‌ உன்ன ஏங்கிட்ட தான குடுக்க சொன்னேன். ' எனச் சத்தம் வராமல் அவனைத் திட்டிவிட்டு ஹரிணியை திரும்பிப் பார்த்தான்.


" ஓ... அப்படி யா!. செத்துட்டான இல்ல இழுத்துட்டு‌ படுக்கைல படுத்துக் கிடக்கானா.‌" என்றான் ரிஷி அசால்டாக.


"அப்ப உனக்கு ஓம் எப்படி இறந்தான்னு தெரியாது. நா உங்கிட்ட சொல்ற வரைக்கும் உனக்கு அப்படி ஒன்னு நடந்ததே தெரியாது. இல்லையா. " என்றவளின் குரலில் சற்று காட்டம் இருந்தது.


" இப்ப அத நா தெரிஞ்சிட்டு என்ன பண்ண சொல்ற. ஊருக்குள்ள வாழ்ந்த உத்தமன சுட்டுட்டாங்கன்னு, ஸ்கூலுக்கெல்லாம் லீவ் விட்டு, தேசிய கொடிய அரக்கம்பத்துல பறக்கச் சொல்லணுமா என்ன. அந்த வேலை எல்லாம் என்னோடது கிடையாதும்மா. " என நக்கலாகச் சிரிக்க, அது ஹரிணியின் கோபத்தை தூண்டியது.


" உனக்கு இது விளையாட்டா இருக்குல்ல. "


" ம்ச்... அவெ செத்ததுக்கு என்ன என்ன பண்ண சொல்ற.‌" என்றான் எரிச்சலான குரலில்.


" அவெ இறந்ததுக்கும் உனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்ல. அப்படி தான. " எனக் கேட்க.


" ம்… இருக்கலாம்." என்றான் தோளைக் குளுக்கிக் கொண்டு.‌


" ச்சீ... ஒரு ஆள கொன்னுட்டு எப்படி உன்னால நார்மலா இருக்க முடியுது. சைக்கோ வா நீ. " என்க.


" நா தா அவன கொல பண்ணலேயே. சூட் பண்ணது யாரோ. " என்றான் அலட்சியமாக.


" ம்... யாரோ தா. அது யாருன்னு உனக்கு எப்படி தெரியும். உனக்கும் அதுக்கும் தா சம்மந்தமே இல்லைல. ச்ச. " எனக் கைகளை உதறிவிட்டு எழுந்தாள் ஹரிணி. அவனுக்கு ஓம்மின் மீது‌ லேசான பாசம் உண்டு. அது அவளின் தந்தை தேவேந்திரனுக்கு மிகவும் பிடித்த மகன்‌. தன்னை அப்பா என்று அழைத்த முதல் பிள்ளை என்பதால் அவனின் மீது தேவேந்திரனுக்கு அதிக அன்பு உண்டு. அதை ஹரிணியிடம் அடிக்கடி கூறுவார்.


ஓம் வெளியே எப்படியோ, ஹரிணியிடம் சற்று நல்லவனாக இருந்தான் என்பது அவளின் எண்ணம். தங்கையாக அவன் ஏற்காத போதும் அண்ணனாக அவனை ஏற்றவள் ஹரிணி. அதனால் தானோ இப்பொழுது யாருமற்ற அநாதையாய் அவன் இறந்து போனதை நினைத்து வேதனையாக இருந்தது அவளுக்கு.


"கிட்... அவ என்ன உங்கூடப் பிறந்தவனா!. இல்லைல. அப்றம் ஏ இவ்ளோ கோபப்படுற. நீ பாசம் வக்கிற அளவுக்கு அவெ வொர்த் இல்லாதவே. எதுக்கு கண்டவன பத்தி பேசி நம்ம நேரத்த ஸ்பாயில் பண்ணிக்கணும். ம். சாப்பிடு. "


" அவெ எங்கூட பிறக்கலன்னாலும் என்னோட அப்பாக்கு அவெ பையந்தா. எனக்கு அண்ணென் தா. " எனத் தட்டை நகர்த்தி வைத்து விட்டு செல்லப் பார்க்க. ரிஷி அவளின் கரத்தை அழுத்திப் பிடித்தான். 'நீ உண்ணாமல் இங்கிருந்து சொல்ல முடியாது.‌' என்பது போல்.


"சாப்பிடு... சாப்பிடும்போது வேற எதப்பத்தியும் சிந்திங்காத. நாம அப்றம் பேசலாம் இத பத்தி. " என்றான் அவன்.


அவனின் பிடி உதறி தள்ளிவிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியாக இருந்ததை அறிந்த ஹரிணி அவனை முறைக்க. இதழில் சின்ன சிரிப்புடன்.‌' என்னை மீறி நீ செல்ல இயலாது. ' என்பது போல் பார்த்தான் ரிஷி.


இருவரின் பிடிவாதம் அறிந்த கௌதம். "ரிஷி அவளுக்கு வேண்டாம்னா விடேன். " என்க. அவனை முறைத்தான் ரிஷி.


அவனின் குணம் அறிந்தவள் அமர்ந்து உணவு உண்டு விட்டுத் தான் சென்றாள். அதுவும் தட்டில் உள்ள அனைத்தையும் காலி செய்து விட்டு. காலி தட்டைக் காட்டி 'போதுமா.' என்பது போல் அவனிடம் காட்டிவிட்டு எழுந்து சென்றாள்.


ஹாலில் டீவியை ஆன் செய்துவிட்டு அதன் ரீமோட்டை கையில் வைத்துக் கொண்டு சேனலை மாற்றியபடி தன் கணவனுக்காகக் காத்திருக்கிறாள். ‘அதா பேசலாம்’னு சென்னான்ல. அதுக்கு தா.


அங்கிருந்த மேசையைப் பார்த்தவளுக்கு மாலையில் நடந்தது நினைவு வந்தது.‌ அதான் ஜீவா மேசையில் வைத்துச் சென்ற கோப்புகள்.‌ அதில் இருந்தது மொத்தம் மூன்று கோப்புகள். ஹரிணியிடம் கொடுத்தது போக.


முதலாவதாக ஒன்றை எடுத்தவள். அதில் கௌதமின் பெயரும் புகைப்படமும் இருப்பதை கண்டாள்.


"பாருடா. போலிஸ்காரெ புத்தி சந்தேக புத்திங்கிறது சரியாத்தா இருக்கு. எங்கள பத்தி தெரிஞ்சிக்க துப்பறியும் வேலை எல்லாம் பாத்திருக்கான். " என படிக்கத் தொடங்கினாள். ஆனால் அது தேவையே இல்லை என்பது போல் கௌதமை பற்றி இருந்தவை அனைத்தும் அவளுக்குத் தெரிந்தவை தான்.


" அதான என்னோட ஃப்ரண்டு லைஃப்ல எனக்குத் தெரியாம எதுவுமே இல்ல. அப்றம் நெக்ஸ்ட். " என அவளின் பெயர் போட்டிருந்த ஃபைலை எடுத்தவளுக்கு அதற்கு அடியில் ரிஷியின் பெயருடன் இருந்து கோப்பு கண்ணிற்குப் பட்டது.


" பாவா ஓடதா!. அவெ தா எனக்குத் தெரியாம நிறைய விசயம் மறச்சி வச்சிருக்கான். முதல்ல அத என்னன்னு பாப்போம். " என ரிஷியின் ஃபைலை எடுக்க, அதில் முதலில் இருந்தது அவனின் புகைப்படம்.


ஒட்டாக வெட்டப்பட்டு தாடி இல்லாது தாடை. இருபுறமும் முறுக்கி விட்ட அடர் மீசை. இதழிலின் ஓரம் சிறு புன்னகை எனத் தன் கணவனை விரலால் வருடி ரசிக்க, அதில் அவன் பிறந்தது முதல் இப்போது வரை என்ன படித்தான், என்ன வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பது போன்ற சில விசயங்கள் இருந்தது.


ரிஷி தரன். அவனின் பேருக்குப் பின்னால் சில சென்டிமீட்டர் நீளத்துக்கு டிகிரி போடப்பட்டு இருந்தது. கோல்ட் மெடலிஸ்டு வேற. 'பயபுள்ள படிப்புல கில்லாடி. அத்தன புக்கையும் ரசப்புளி மாறிக் கரைச்சி குடுச்சிருப்பான் போல. '


டில்லியில் சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த அவனுக்கு இந்திய ராணுவத்தில் சேர மிகவும் விரும்பும். அதற்கான எல்லா பயிற்சியையும் தனது பள்ளி இறுதியிலேயே தொடங்கி விட்டான். அத்லெட், ஸ்போர்ட்ஸ், கம்யூட்டர் எனத் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டான்.


தந்தையின் விபத்திற்கு பின் தன் ராணுவ கனவைவிட மனமில்லாமலும் தன் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க இயலாமலும் தவித்த ரிஷி CBI exam எழுதிச் சில காலம் பயிற்சியும் எடுத்தான்.‌ ஆனால் கிடைத்த வேலையை நிராகரித்து விட்டான். மாறாக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு கீழ வேலை பார்க்கிறான். இப்போது வரை.


'ஏம்பா.‌ அதா செலக்ட் ஆகிட்டியே. ஏ அந்த வேலக்கி போகல.‌ அதுக்கு என்ன கொற. ' என்றால்


"எனக்கு அடுத்தவனுக்கு கீழ வேல பாக்குறது செட்டாகல. அவனுக்குக் கும்பிடு போட்டு அவெ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு. எல்லாத்துக்கும் எஸ் ஸார்ன்னு வெரப்ப நிக்க எனக்கு விருப்பம் இல்ல. எனக்கு நாந்தா ராஜா. தனிக்காட்டு ராஜா. நா யாருக்கும் மந்திரியாலாம் வேல பாக்க மாட்டேன்.‌" என்பான் அவன்.


யுகேந்தர் சிங்.‌‌. அது தான் அவன் டிரெக்டிவ்வாகப் பணி புரியும் ஏஜென்சியை தொடங்கியவர். முன்னாள் ராணுவ வீரனான அவர் தலைநகர் டெல்லியில் ஒரு துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேல் நடத்தி வருகிறார். இந்தியாவில் செயல்படும் முக்கிய டிடெக்டிவ் ஏஜெண்ட்டுகளில் இப்போது அதுவும் ஒன்று. அவரின் முன்னேற்றத்துக்கு ஒரு காரணமாக ரிஷி இருந்தான்.


அதாவது தந்தையின் விபத்திற்கு பின் கௌதமிடம். 'வாடா நாம சேந்து பார்கவி கேஸ்ஸ விசாரிக்கலாம். ' என்று அழைக்கத்தான் சென்றான். ஆனால் கௌதம் திட்டியபின் மீண்டும் அவனிடம் சென்று பேச ரிஷியின் ஈகோ இடம் தரவில்லை.


அதே நேரம் பார்கவி மரணத்தை விசாரிக்க வேண்டும்.‌ கூடவே தன் தங்கை வைசுவையும் தேட வேண்டும். எனவே தனித்து செயல்பட வேண்டும் என்பதற்காக யுகேந்தருடன் சேர்ந்து கொண்டான். அவர்களிடம் வரும் பல கேஸ்களை முடித்துக் கொடுத்துள்ளான். பல உயர் நிலையில் இருக்கும் அதிகாரிகளை அவன் அறிவான். நல்ல பழக்கமும் உண்டு. அவனின் நட்பு வட்டம் பெரிது. யாரை காட்டினாலும் எனக்கு ஃப்ரெண்டு. தெரிஞ்சவன் என சொல்லும் அளவுக்கு நம்பிக்கையான நண்பர்களைச் சம்பாதித்து இருந்தான்.


அப்படி ஒருமுறை அகாடமிக்கு சென்றபோது அங்கிருப்பவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி கொடுத்தான். அதில் தான் விக்னேஷும் அவனின் நண்பர்களும் ரிஷியைப் பார்த்தது. முகம் கொடுத்து கூட பேசத் தயங்கும் சில ட்ரைனர்ஸ்க்கு மத்தியில் புரியும் படி பேசிப் பழகிய ரிஷி அவர்களின் மனதில் நின்று விட்டான்.


யுகேந்தர் சின்ன சின்னக் கேஸுக்கெல்லாம் ரிஷியை பணிக்கமாட்டார். அவன் கையாலும் அளவுக்குக் கடினமான கேஸ்களை மட்டுமே கொடுப்பார். இது போதாதென்று அவன் கிராமத்தில் விவசாயம் பார்க்க ஏதுவாக இருக்கும் என முதுநிலை வேளாண் படிப்பையும் முடித்துவிட்டான். 


அவனுக்குச் சும்மா இருப்பது பிடிக்காத ஒன்று. எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். கடிகாரத்தின் நொடி முள்போல் சுழன்று கொண்டே இருப்பான்.


அவன் இதுவரை முடித்த கேஸ்களின் டீட்டைல்ஸ் இதில் இருக்க, ஒவ்வொன்றாகப் படிக்கலானாள். 'ம்ச். இதெல்லாம் நமக்கு வேண்டாம். இப்ப ஓம்க்கும் ரிஷிக்கும் எப்படி முட்டிக்கிச்சின்னு ஃபஸ்ட் பாக்கலாம்.' எனத் தேடி பார்த்தாள்.


முதலில் அந்த ஊரின்‌ டேம் காரணமாகத்தான் ஓம் உடன் பகை வந்தது என நினைத்தவளுக்கு அதிர்ச்சி தான். ஏனெனில் அந்த டேம்மை மீட்கும் பொறுப்பு அந்த ஊராரையே சாரும் என அவன் அதில் தீவிரமாகத் தலையிடவில்லை. அவ்வபோது விக்ரமிற்கு இதைச் செய் அதைச் செய் என ஐடியா மட்டுமே கொடுத்தான். முழுதாக இறங்கவில்லை. இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அது ஒரு பெண் கொடுத்த கம்ப்ளைண்டால்.


ஐந்து வயது கூட நிரப்பாத தன் மகனும் அக்கம் பக்கத்தினரின் குழந்தைகளும், தடுப்பூசி போட்ட சில நாட்களில் இறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வேண்டும் என ஒரு சில ஆண்டுகளுக்கு முன் யுகேந்திரனிடம் ஒரு ஏழைப் பெண் கேஸ் கொடுத்தாள். அதை விசாரிக்கச் சென்ற போது அவர்களுக்கு ஒம்மின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சந்தேகம் வந்தது. அதன் தயாரிப்பால் நடந்த மருத்துவ தவறு என்று உறுதியாகத் தெரியவும் வந்தது.


இவன் தான் காரணம் என ஓம்மை கை காட்டி விட்டு அந்தக் கேஸ்ஸை முடித்தான் ரிஷி. ஏழை பெண்ணால் நீதியை விலை கொடுத்து வாங்க இயலவில்லை. அவளின் குடும்பம் மட்டுமல்லாது அவளுடன் நின்ற அனைவரும் ஓம்மால் சிதைக்கப்பட்டனர்.


எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாள் அந்தப் பெண். அதுவும் யுகேந்திரனின் அலுவலகம் முன். அவளின் மற்ற மூன்று பிள்ளைகள் பாதி கருகிய நிலையில் மருத்துவமனையில் யாரின் உதவியுமின்றி உயிருக்குப் போராடி கொண்டிருந்தன. தன் கண்முன்னே துடிக்கத் துடிக்க ஒரு குடும்பமே உயிர் விடத் துணிந்ததை கண்ட ரிஷிக்கி அவனுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என நினைத்தான்.


தண்டனை மட்டும் தான். அதுவும் சட்டம் பார்த்துக் கொள்ளும் என ஓம்மிற்கு எதிராக அனைத்து ஆவணங்களையும் சிறுக சிறுக சேர்த்தான். கூடவே பெற்றோரை இழந்த அந்தக் குடும்பத்து குழந்தைகளுக்கும்,அந்தத் தடுப்பூசி போட்டதால் இறந்து போன சில குழந்தைகளின் குடும்பத்தில் உள்ள மற்ற பிள்ளைகளை அவன் சொந்த செலவில் படிக்க வைக்கிறான். அவனின் வங்கி கணக்கிலிருந்து தவறாது பரிவர்த்தனை நடைபெற்று விடும்.


அது தான் ஹரிணி கேட்ட நான்காவது கேள்விக்கான விடை. 



ரிஷிக்கு ஓம் செய்து கொண்டிருக்கும் எல்லா குற்றங்களும் தெரிய வந்தது. ஆனாலும் அவன் ஓம்மை நேரடியாகச் சட்டத்தின் முன் மாட்டி விடும் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.


இதனிடையே ஓம்மின் தங்கையும் இவனின் காதலியும் ஆன ஹரிணியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. ஓம்மின் கதையை முடித்துப் பின் நிதானமாக அவளைக் காதலிக்க வைத்துத் திருமணம் செய்யத்தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை.


ஹரிணியின் மனம் ரிஷி அறிவான். எல்லா உயிர்களையும் மதிக்கும் அவளின் குணம். பந்தா காட்டாது பணத்திமிரில் இல்லாதவரை அவமதிக்காது மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு அவளுடையது. இது எல்லாம் அவனுக்குப் பிடித்தது. எனவே ஹரிணியிடம் ஒம்மை பற்றிய உண்மையைச் சொல்லி அவளை முன்நிறுத்தி ஓம்மின் சாம்ராஜ்யத்தை அழிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டான்.


ஆனால் அதற்குள் காணாது போயிருந்த அவனின் தங்கை உயிருடன் கிடைத்தாள். தன் தந்தையை யாரோ கொலை செய்ய முயன்று வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான்.


ஓம் செய்து கொண்டிருந்த மெடிக்கல் மாஃபியாவை பென்டிரைவ்வின் மூலம் ரிஷியின் நண்பன் சூர்யா, ரிஷி வீட்டிற்கு அனுப்ப. அதைத் தேடி வந்த கயவர்கள் கைக்கு அது கிடைக்காது போக, ஆத்திரத்தில்‌ ரிஷியின் தந்தையும் தங்கையையும் கொலை செய்ய முயன்றுள்ளனர். அந்தப் பென்டிரைவ்வுக்காத்தான் விபத்து நடந்தது என்பதை அறிந்தவன் முடிவு செய்து விட்டான். ஓம்மின் மரணத்தை. கௌதமால் அந்தப் பென்டிரைவ்வில் என்ன இருந்தது என்பதை அறிந்து அதை ஆதாரமாக மாற்றிக் கொண்டான் ரிஷி.


இவை யாவும் அந்தக் கோப்பில் இல்லை. 


தீக்குளித்து இறந்த அந்தப் பெண்ணிற்காகவும். ஓம்மின் மீதுள்ள தனிப்பட்ட பகைக்கும் ரிஷி தரன் ஓம்மை கொலை செய்துள்ளான் என்பது தான் ஹரிணியின் புரிதல். அதைவிட முக்கியம் ஓம் இறந்து நான்கு நாட்களாகி விட்டது. ஆனால் யாரும் அவளுக்குத் தகவல் சொல்லவில்லை. அவன் இறந்ததை ' கேஸ் க்ளோஸ். ' என ஓம் பக்கத்தில் போட்டிருந்த death என்ற வார்த்தை தான் சொல்லியது. 


பின் ஓம்மின் அட்வகேட்டிற்கு ஃபோன் செய்து கேட்டாள். அவர் கூறியது, ஓம் கோர்ட்டை விட்டு வெளியே வந்தபோது ஒரு இளம் பெண் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளாள். உயிர் அவள் சுட்ட சிறிது நேரத்திலேயே பிரிந்து சென்றுள்ளது. ஓம்மின் உடல் யாருமற்ற அநாதையாய் சிதையூட்டப்பட்டுள்ளது.


யார் சுட்டது என்று ஹரிணி கேட்க, சுஷ்மா என்றார் அவர். இருபது வயது கூட நிரம்பாத இளம் பெண். அன்று தீக்குளித்து இறந்து போன பெண்ணின் மகள். தங்கள் குடும்ப சிதைய காரணமான ஓம்மை கொன்று பழி தீர்த்துள்ளாள்.


அந்தப் பெண் சுஷ்மாவின் புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு அவளை ரிஷியுடன் சில இடங்களில் பார்த்த நினைவு வர. தன் கணவன் தான் இதற்குக் காரணம் என முடிவு செய்து விட்டாள்.


இவனுக்கு யார் பிறரின் உயிரை எடுக்கும் அதிகாரம் கொடுத்தது.‌. ஓம் குற்றம் செய்திருந்தால் அவனைச் சட்டம் பாத்துக்கொள்ளட்டுமே. இவன் யார் அவனுக்குத் தண்டனை தர. என்ன உரிமை இருக்கிறது இவனுக்கு, என்பது தான் ஹரிணியின் கோபம்.‌


அந்தக் கோபத்தில் அவளின் பெயர் போட்டிருந்த ஃபைலை பிரிக்காது விட்டாள். பிரித்துப் படித்திருந்தாள் தெரிந்திருக்கும். ஓம் என்பவன் வெறும் குற்றவாளி மட்டும் இல்லை பணத்திற்காகப் பிறரின் இரத்தம் குடிக்கும் கொடூரமான அட்டை பூச்சி என்று. ஆனால் படிக்கத்தான் இல்லை.


அட்லீஸ்ட் எதுக்காக இங்க கௌதம் கூட வந்தோளோ அந்தப் பார்கவி கேஸ் ஃபைல்லையாவது படித்திருக்கலாம். அதுவும் இல்லை. மொத்தத்தில் கோபமாக அமர்ந்திருக்கிறாள். ரிஷியின் விளக்கத்தை வேண்டி.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 25


விழி 27


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...