முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 27

அத்தியாயம்: 27


உலகின்..


உண்மையான.


அன்பிற்கு.


கிடைக்கும்.


கடைசி பரிசு.


கண்ணீர் துளிகள் தான்.


ஓம்மிற்கு கிடைத்தது ஹரிணியால். கன்னம் தொட்டு வடிந்தோடிய நீரை துடைக்கவில்லை அவள். அது ஓம்மின் இறப்புகாக வந்தது. அவளின் உடன் பிறப்பான அரவிந்த் இறந்தபோது உண்மையான அண்ணனாய் உடன் நின்றவன் ஓம். வேண்டாத சில போதனைகளால் வளர்ந்த பின் மாறினாலும். மாறும்வரை ஹரிணிக்கு அண்ணனாக இருந்தான். உடலைத் தீண்டும் நஞ்சானது முழு உடலையும் ஆக்கிரமிப்பது போல் பணம் என்ற விஷம் அவனின் புத்தியை மாற்றி விட்டது. அதைச் சம்பாதித்து இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையும் போட்டியில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வரும் முன் ஹரிணியிடம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டான்.


அவன் கொண்ட அன்பும் சகோதரத்துவமும் பொய்யாய் மாறலாம். ஆனால் ஹரிணி கொண்ட பாசம் உண்மையானது. அதான் கண்ணீர் துளியாய் வெளி வந்தது.


அது கூடாது. கண்ணீர் அவனுக்காக வரவே கூடாது என்பது போல் ரிஷி வந்து அவளின் கன்னத்தைத் துடைத்து விட்டான்.


"கிட், என்னாதிது. ஏ தேவையில்லாம அழற. " என சாதாரணமாகக் கேட்க, அவனைக் கலங்கிய விழிகளால் தெளிவு இல்லாமல் பார்த்தாள் அவள்.


"நம்மோட கண்ணீற்கு ஒரு மதிப்பு இருக்கு கிட். ஆனா நீ ஒரு தகுதியே இல்லாதவனுக்காக அத சிந்தி வீணாக்குற. " என அவளின் அருகில் வந்தமர்ந்தான் கையில் பால் க்ளாஸ்ஸுடன்.


" அவெ என்னோட அண்ணே. அவனுக்காக நா அழறதுல என்ன தப்பு இருக்கு. " என்றாள் கண்ணீருடன்.


" அழறது தப்பில்ல. ஆனா அவனுக்காக அழுறது தா தப்புன்னு செல்றேன். மிருகத்த விடவும் கேவலாமான ஒருத்தனோட இறப்புக்காகக் கண்ணீர் விடக் கூடாது. கொண்டாடணும். பட்டாசு வெடிச்சி. " என்றவனின் தோரணை ஹரிணியை கோபமேற்ற, எழுந்து நின்றாள் அவள்.


" உனக்கு யாரு ஒரு உயிர கொல்லுற அதிகாரத்த குடுத்தா. அவெ பண்றது தப்புன்னா அதுக்கு ஏத்த தண்டன குடுக்க கோர்ட் இருக்கு. அத விட்டுட்டு ஏ அவன கொல பண்ணணும். நீ என்ன சைக்கோவா. அவெந்தா எந்த ஒரு காரணமும் பாக்காம தனக்கு பிடிக்காத எல்லாத்தையும் கொன்னு குவிப்பான். என்னோட கண்ணுக்கு நீ இப்ப அப்படி தா தெரியுற. " ஹரிணி ஆவேசமாக, அவளின் சைக்கோ என்ற வார்த்தையில் கோபமாக எழுந்த அவன். பின் நிதானித்துத் தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.


"கொன்னிருக்கணும். எங்கைல தனியா மாட்டுன அன்னைக்கே அவனோட கதைய முடிச்சிருக்கணும். உயிரோட விட்டுருக்க கூடாது. தப்பு தான அது. "


"அப்ப அவன நீ கொல்லல."


"இல்லையே. அதா வாய்ப்பு கிடைச்சும் பண்ண விடாம செஞ்சிட்டியே." என்றான் ஏமாற்றத்துடன்.


"அவெ இறந்து போனதுக்கும் உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எப்ப இறந்தான்னு கூட உனக்குத் தெரியாது. "


" நா இங்க இருக்கும்போது எப்படி அவன கொல பண்ண முடியும்‌‌. அவெ எப்ப செத்தான்னு எனக்கு எப்படி தெரியும். "


"ஓ... அப்ப அவன நீ துப்பாக்கியால சுடல. "


"துப்பாக்கிய வச்சி சுட்டதுனாலயா செத்தான்? " எனச் சந்தேகம் கேட்டான் எதுவும் அறியாதது போல்.


" உனக்குத் தெரியாது. "


"தெரியாது. " என்றான் கைகளை விரித்து.


" தெரியாது... ஓம்கு ஜாமின் கிடைக்கப்போறது உனக்குத் தெரியாது. கோர்ட் வாசல்ல வச்சி நெத்தி பொட்டுல அவன சுட்டது தெரியாது. சுட்டது பொண்ணுன்னும் தெரியாது. அந்தப் பொண்ணு சுஷ்மாங்கிறதும் தெரியாது. அந்தச் சுஷ்மா யாருன்னும் தெரியாது.‌ அந்தச் சுஷ்மா எப்படி அங்க வந்தான்னும் தெரியாது. அவளுக்கு ப்ளான் போட்டுக் குடுத்தது யாருன்னும் தெரியாது‌. இப்ப அந்தச் சுஷ்மா போலிஸ் கஸ்டடில இல்லன்னும் உனக்குத் தெரியாது. இல்ல… எதுவுமே உனக்குத் தெரியாது. ம்." என்றாள் நக்கலாக.


அவளின் பேச்சு அவனுக்கு வேடிக்கையாக இருந்தது போலும். நடந்தவற்றை சரியாகக் கோர்க்கும் அவளின் எண்ணவோட்டங்களை கை கட்டி நின்று ரசிக்க, கடுப்பானாள் அவள்.


" எப்பையும் போலக் கண்டதையும் பேசி டைவட் பண்ணாம நேரடியா எனக்கு நீ பதில் சொல்லித்தா ஆகணும். "


" எனக்கு ஒன்னு தா புரியவே இல்ல கிட். உனக்கு ஏ அவெ மேல இப்படியொரு அக்கற. தகுதியே இல்லாத ஒருத்தவெ மேல காட்டுற அன்பு‌ வேஸ்ட்டானது‌. " 


"தகுதி... என்ன இத்தன வர்ஷமா‌ பாதுக்காத்திக்கான். நா நானா இருக்க காரணம் அவெங்தா. அந்தத் தகுதி போதாதா. "


ஹரிணி, ஓம்மின் உடன் பிறந்த தங்கை கிடையாது. இன்றும் பல பெண்களுக்குச் சொந்த வீடே பாதுகாப்பு இல்லாததாக இருக்கும் நிலையில் தன்னை பாதுகாத்தவன் என்றாள் ஹரிணி.


சுற்றி உறவினர்கள் அண்ணன் தம்பி என்ற பெயரில் இருந்தாலும் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்ணை உடல் ரீதியாகத் துன்புறுத்தும் ஆண்களுக்கு மத்தியில் ஓம் நல்லவன் என்று தோன்றியது ஹரிணிக்கு. அந்த விசயத்தில் மட்டுமே. மற்றபடி அவன் ஹரிணியிடம் ஈவு இரக்கம் காட்டியது இல்லை.


"அத மட்டுமா பாத்து உனக்கு அவெ மேல பாசம் வந்துச்சி. உன்னோட தாத்தா இறந்ததுக்கு அப்றம் நீ இருந்தது ஹாஸ்டல்ல. அப்றம் ஹரி கூட. முதல்ல சம்பத் அப்றம் ஹரி உன்ன பாதுகாத்தது. இவனுங்கள விட அவெ உனக்கு நல்லவனா தெரிஞ்சா இது உன்னோட முட்டாள் தனம்.


நா‌ உன்ன எதுக்கு அவசர அவசரமாகக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உனக்குத் தெரியுமா. இல்லைலன்னா. உன்னோட ஃப்ரெண்டு கிட்ட கேளு. அவெ சொல்லுவான். " எனக் கௌதமை கை காட்டினான் ரிஷி.


ஹரிணி சொன்னது போல் ஓம் பெண்கள் விசயத்தில் கண்ணியமானவனாக இருந்தாலும். பேராசைக்காரன். பணம் அதுதான் அவனின் குறி. அவனைப் பொருத்தவரையில் ஹரிணி பொன் முட்டையிடும் வாத்து. சில சொத்துகளே அவளின் மீது எழுதப்பட்டிருந்தாலும் அதன் மதிப்பு அதிகம். அதை எப்படி அவளுக்கு விட்டுக் கொடுப்பது. 


அதுவும் அவனுக்கு வேண்டும். அது போக ஹரிணியின் திருமணம் ஸ்டேட்டஸ்ஸில் உயர்ந்த பணக்காரனுடன் நடந்தால் அது அவனின் பிஸ்னஸிற்கு உதவும்.


எனவே பல பணக்கார முதலைகளை ஈர்க்க, ஹரிணியை இறையாய் காட்டி பிடிக்க நினைத்தான். அதான் அவளுக்குப் பல மாப்பிள்ளைகளைக் கொண்டு வந்து நிறுத்தி அவர்களுடன் பழகிப் பிடித்திருந்தால் திருமணம் என்று ஹரிணியிடம் அன்பாய் கூறியிருந்தான்.


ஹரிணியை பொருத்தவரை அன்பாய் கூறினால் எதையும் செய்வாள்.‌ அடாவடியாகப் பேசினால் மதித்துத் திரும்பி கூட பார்க்கமாட்டாள். கல்லூரி செல்லத் தொடங்கிய அவளுக்கு ஓம்மின் பேச்சில் உள்ள சூது தெரியாததால் தலையசைத்து விட்டாள்.‌ அதே நேரம் திருமணம் ஓம்மிடமிருந்து விலக்கி வைக்கும் என நினைத்து 'சரி. ஆனா நீ சொல்லுற ஆளை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ ஆள காட்டு. எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் தா மேரேஜ். இல்லன்னா பண்ணிக்க மாட்டேன். ' என்றாள்.


ஓம் அவள் கூறிய வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டான். வரிசையாகத் தனது பிஸ்னஸிற்கு உதவார்கள் என்று நினைத்த அத்தனை பேரையும் அவள் முன் நிறுத்தினான்.


ஆனால் பார்க்க வந்த சிலரை தவிர மற்ற அனைவரையும் அவள் ரிஜெக்ட் செய்ய ஓம்மிற்கு கோபம் வந்தது. அவனுக்கு மட்டுமல்ல. அவளால் வேண்டாம் என்று சொல்லப்பட்ட ஆண்களுக்கும். எப்படியாவது ஹரிணியை பழி வாங்க நினைத்த கயவர்களிடமிருந்து ஹரிணியை காத்தது கௌதம்.


அவளுக்குப் பிடித்திருக்கிறது என்று முடிவு செய்தவர்களுடன் திருமண வரை கொண்டு செல்ல விடாத படி ரிஷி பார்த்துக் கொள்வான். அது வேறு விசயம்.


எத்தனை நாளுக்கு அப்படி பாதுக்காப்பது. இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அவர்களின் செயலுக்கு ஹரிணி பலியாகி விடுவாளோ என நினைத்துத் தான் திருவிழாவிற்கு என ஊர் சென்ற போதும் அவளை உடன் அழைத்து வந்தான் கௌதம். விழா முடிந்து திரும்பும்போது அந்த ராகுலுடன் ஹரிணிக்கு திருமணம் செய்ய அந்த ராகுலின் குடும்பத்துடன் பேசி எல்லா ஏற்பாடும் செய்து விட்டுத் தான் வந்தான்.


அதை அறிந்த ரிஷி 'உங்கூட திரும்பி வந்தாத்தான கல்யாணம் பண்ணி வப்ப. வர விட்டுடுவேனா.' என ஒரு திட்டம் போட்டுக் கல்யாணத்தை அரங்கேற்றி விட்டான். மொத்ததில்  ஆளுக்கு ஒரு ப்ளான் போட்டு ஹரிணியின்  முகத்தில் மஞ்சத்தண்ணிரை ஊத்தி ஒரே வெட்டா வெட்டிவிட்டனர்.


"உன்ன கல்யாணங்கிற பேர்ல வியாபாரம் பேசி விக்க நினைச்சவெ உனக்கு நல்லவனாத் தெரியுறானா. ம். " என்றவன் தன் ஃபோனில் இருந்த சில தகவல்களைக் காட்டினான். அது தீக்குளித்து இறந்து போன அந்தப் பெண்ணின் கேஸ்ஸை விசாரித்தபோது கிடைத்தது. ஓம்மிற்கு எதிரான அனைத்து தகவல்களும் அதில் இருந்தது. கூடவே ஹரிணி பற்றி ஜீவா கொண்டு வந்த ஃபைலில்லும் ஓம் பற்றி இருந்தது. அதையும் படி என்று கொடுத்தான்.


"நீ படிச்ச பொண்ணு தான. உனக்கு எழுதப் படிக்க தெரியும் தான. இத படிச்சிப் பாரு. அப்பத் தா உனக்கு அவன பத்தி தெரியும். " என கோபமாகச் செல்ல முயன்றவனின் முன் வந்து நின்றாள் அவள்.


" உனக்கு நா கேட்ட கேள்வி புரியலன்னு நினைக்கிறேன். ஓம் நல்லவனா கெட்டவனாங்கிறது என்னோட கேள்வி இல்ல. அவ எப்படி பட்டவன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா உன்ன பத்தி தா எனக்குத் தெரியாது. நா கேட்டது ஓம் மர்டருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம். அவெ இறந்ததுல உன்னோட பங்கு என்னன்னு தா நா கேக்குறேன். " என்றாள் கையை‌ கட்டிக் கொண்டு.


உதட்டில் மெல்லிய சிரிப்புடன். 'எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லம்மா. ' என்பது போல் தலையசைக்க, கோபம் வந்தது ஹரிணிக்கு.


‍"பொய். பொய். பொய். எதுவுமே எனக்குத் தெரியக்கூடாதுன்னு எங்கிட்ட இருந்து எல்லாத்தையும் நீ மறச்சிருக்க. நீ ஒரு Engineer. இப்ப நீ டிடெக்டிவ் வேற. அந்தப் பொண்ணோட அம்மா இறந்து போனதுக்கு பலி வாங்க அந்தப் பொண்ண தூண்டி விட்டுருக்க. ஓம் கோர்ட்ட விட்டு வெளில வர்ர நேரம். எப்படி சுடணும்னு அவளுக்கு நீ டிரைனிங் குடுத்து பக்காவா ப்ளான் போட்டு அவன கொன்னுட்ட. சரியா. இல்லன்னு என்னோட கண்ண பாத்து சொல்லு. " என்க, சில நொடிகள் மௌனமாக இருந்தவன். பின், தன் ஆடைக்குள் இருக்கும் மற்றொரு துப்பாக்கியை எடுத்து அவளின் கையில் கொடுத்தவன். அதிர்ந்து பார்த்தவளின் கன்னம்பற்றி,


"ம்... நாந்தா சுஷ்மாக்கு ப்ளான் போட்டுக் குடுத்தேன். அவன பலி வாங்க எனக்கு இருக்குற காரணத்த விடச் சுஷ்மாக்கு தா உரிம இருக்குன்னு தோனுச்சி. அவனால எல்லாத்தையும் இழந்து தனியா நின்னவளுக்கு நா வழி மட்டும் தா காட்டுவான். " என்றான்.


அன்று அவர்களின் வீட்டில் கண்டாலே அந்தத் துப்பாக்கி‌. அதன் ஜோடி யாரிடம் உள்ளது என்று இப்போது தெரிந்திருக்கும். சுஷ்மாவிற்கு பயிற்சி கொடுக்க என அவனின் பேரில் வாங்கியது அது. அவளின் இரண்டாவது கேள்விக்கான பதில். இன்னும் ஒரே ஒரு கேள்வி தான் பாக்கி. அது ஜிம் ரூமில் இருக்கும் ரகசியம். அதையும் விரைவில் கண்டு பிடித்து விடுவாள். அவன் வாயைத் திறந்து பதில் கூறாமலேயே.


தன் கையால் கொலை செய்வதை தன் மனைவி விரும்பமாட்டாள் என்பதால். ஓம்மை கொல்ல சுஷ்மாவை ஆயுதமாய் கூர் தீட்டி உள்ளான். சரியான நேரம் அமையவும் ஏய்தி விட்டுள்ளான். ஓம் இப்போது உலகில் இல்ல. ரிஷி கொல்லவில்லை தான். ஆனால் ரிஷி தான் காரணம்.


'கரெக்ட்டா பதில் சொல்லிட்டேனா. ம். இப்ப நா போலாமா. ' என்பது போல் அடி எடுத்து வைக்க, அவள் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.‌


'எத்தன. ஒரு மனுஷெ ஒரு கேள்விக்கி பதில் சொல்லுறதே கஷ்டம். அதுலையும் ரிஷி கிட்ட இருந்து பதில் வர்றது அபூர்வம். அவெ பதில் சொல்லுறாங்கிறதுக்காக நீ கேள்வி மேல கேள்விய மழையா பொழிவிய கூடாதும்மா. '


"நீ எதுக்கு இங்க வந்திருக்க. " என்பது தான் அந்தக் கேள்வி.


"என்ன பாக்கவோ. இல்ல கான்ட்ராக்டர் பேசவோ நீ வரல. வேற எதுக்கோ வந்திருக்க. ம்… ஜாலியா எந்த வேலையும் பாக்காம ஊர் சுத்துற ஆள் நீ கிடையாது. அதுவும் வேற ஒருத்தர் வீட்டுல தங்கி பழகின்னு கூத்தடிக்கிறது. இது உன்னோட கேரக்டரே கிடையாது. சொல்லு ஊட்டிக்கி எதுக்கு வந்திருக்க. " என அழுத்தமாகக் கேட்டாள்.


அதைக் கேட்டவனின் உதடுகள் விரிந்து சிரிப்பு வந்தது. சத்தமாகவே சிரித்தான். "கிட், என்ன சரியா புரிஞ்சிக்கிட்ட ரெண்டாவது ஆள் நீ தா. ஃபஸ்ட் ஃப்லேஸ் அப்பாக்கு. அடுத்து நீ தா.‌‌.‌. என்னோட அடுத்த மூவ் என்னன்னு சரியா கணிக்க தெரிஞ்ச ஆள் யாருமே இல்லயோன்னு சில நேரம் தோனும். அது எனக்கு ஒரு மாறித் தெணாவட்டா கூட இருக்கும். ஆனா நீ அத உடச்ச, என்னோட கர்வத்த. That's way I Love you too kid. " என அவளை அணைக்க,


பைத்தியமா இவனுங்க என்பது போல் மற்றவர்கள் இவர்களை வேடிக்கைப் பார்த்தனர்.


" ம்... எஸ். நா பிஸ்னஸ் பேசலாம் வரல. எனக்கு இங்க கொஞ்சம் இல்ல அதிகமாவே வேல இருக்கு. பல வர்ஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச ஒன்ன. ரெண்டு நாளைக்குள்ள முடிச்சி வைக்கணும்.‌ நா உனக்கு ப்ராமிஸ் பண்றேன். நா யாரையும் கொலை பண்ண மாட்டேன். ‌பட் நடக்க போற அத்தன கொலைக்கும், காரணகர்த்தாவா நாந்தா இப்பேன். " எனக் கண்சிமிட்டி வில்லத்தனமாகச் சொல்ல,


அப்படி என்ன செய்யப்போறானென கேட்க ஹரிணி வாயைத் திறக்கும் முன். "கிட் வேண்டாம். யாரு?. என்ன?. எதுக்கு?ன்னு எந்தக் கேள்வியும் கேக்காத. என்னால இப்போதைக்கி பதில் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன். சோ, இத ஃப்ரியா விட்டுடு. " என்றவன் பால் க்ளாஸ்ஸை அவளின் கரத்தில் வைக்க, அவள் குடிக்கவில்லை.‌


கொல பண்ணப்போறேன்னு குதுகலமாகக் கூறிய அவனை முறைத்து பார்த்த படி நின்றாள் பாவை. அவளின் கரத்தில் உள்ள க்ளாஸை வாங்கி, "நைட் பால் குடிச்சா உடம்பு ரொம்ப நல்லதாம். ம். மிச்சம் வைக்காம குடிச்சிடு கிட். " என ஊட்டி விட, வெறுப்புடன் அவனை தாண்டிச் சென்றவள். பின் அவனிடமே வந்து அந்தப் பாலை குடித்துவிட்டு காலி டம்ளரை வைத்து விட்டுச் சென்றாள். இல்லையேல் விடமாட்டானே... அதான்.


ஹரிணி அறைக்குள் சென்று ஓங்கி சாத்திய கதவின் ஒலியே ரிஷியின் மீதுள்ள கோபத்தை சொல்லியது.


"இது உன்னோட வீடா. " கௌதம். விக்னேஷிடம்.


" இல்ல. ஃப்ரெண்டோடது. ஏ. "


"இதுக்கப்றம் அவெ உனக்கு ஃப்ரெண்டு இல்ல. எனிமி. அதுவும் ஃப்யூசர் எனிமி. "


" எப்படி பாஸ் ஃப்யூசர்ல நடக்க போறத இப்பவே சொல்றிங்க. ஜோசியக்காரனா பாஸ் நீங்க. அஸ்ராலஜி படிச்சிருக்கிங்களா என்ன." மனோ.


" இத சொல்ல ஜோசியக்காரனா இருக்கணும்னு அவசியமே இல்ல. இன்னும் நாலு மொற இந்த மாறியே சாத்துனான்னு வை வெறும் கதவு மட்டும் தா இருக்கும். சுத்தி எந்தச் சுவரும் இருக்காது. அப்றம் ‘டேமேஜ் ஆன வீட்டுனால. ஃப்ரண்டு இப்போ எதிரி ஆனா.@ ன்னு பாட்டு பாட வேண்டியது தா. " எனத் தங்களுக்குள்ளேயே பேசிய இவர்களின் முன் வந்து நின்றான் ரிஷி.


" குட் ஈவினிங் ஸார். " எனக் கௌதமை தவிர மற்றவர்கள் சல்யூட் அடிக்க,


'ஐய்யோ இவனுக்கு எதுக்குடா இந்த மரியாத. ச்ச. சத்திய சோதன. '‌ கௌதமின் மைண்ட் வாய்ஸ்.


"இப்ப அது ஒன்னு தா கொறச்சல். நாந்தா அதிகமா யோசிக்காதீங்கடான்னு சொன்னேன்னே. அப்படியும் உங்களுக்கு நா யாருன்னு தெரியணும்னா. எங்கிட்டயே கேட்டிருக்கலாம்ல. அத விட்டுட்டு போலிஸ் டிடெக்டிவ்வா வேல பாத்திருக்கிங்க. " எனத் திட்ட,


"நாங்க கேக்கும் போதே ஒழுங்கா பதில் சொல்லிருந்தா நாங்க ஏ வேவு பாக்க போறோம். " விக்னேஷ்.‌


"ஆமா பாஸ். நீங்க மட்டும் அப்பவே சொல்லிருந்திங்கன்னா இந்நேரம் உங்க வைஃப் கூட உங்களுக்குச் சண்டையே வந்திருக்காது. பொலைக்க தெரியாத ஆளா இருக்கிங்களே பாஸ். இவனுங்க ரெண்டு பேரையும் பாருங்க. அவனுங்க வைஃப் சொல்லாம கை விரல கூட அசைக்கமாட்டானுங்க. " மனோ 


"அப்ப இவனுக்குக் குடும்பம் நடத்த தெரியலன்னு சொல்ற." கௌதம்.


"சரியா சொன்னிங்க பாஸ். " என்றவனின் தலையில் தட்டிய ரிஷி இவர்களை முறைத்து விட்டு வெளி சென்றான். இதமான காற்று ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்து ஊதினான் ரிஷி.


"மிஸ்டர் ரிஷி தரன். "என்ற குரல் கேட்கத் திரும்பியவனை அழைத்தது விக்னேஷ்.


"எந்தக் கேஸ் காக வந்திருக்கிங்கன்னு சொன்னா என்னால முடிஞ்ச உதவிய ஒரு ஃப்ரண்டா செய்ய முடியும். " 


"நீ செஞ்ச உதவிய தா பார்த்தேனே. எனக்கு வேற எதுவும் தேவயில்ல. போ. " 


"ஹரிணியால தா என்னோட கேஸ் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சது. சோ. " என இழுக்க,


"எனக்கும் போற போக்கால உதவி செய்யப் போறியாக்கும். " நக்கலாகக் கூறினான்.


"அப்டில்லாம் இல்ல. ஒரு காலத்துல எங்களுக்கு டிரைனரா இருந்ததுனால கேட்டேன். அதுமட்டுமில்லாமா ஹரிணி இப்ப எங்களுக்கு ஃப்ரண்டு. நீங்க அவளோட ஹஸ்பென்ட்டு. அந்த வகையில தா கேக்குறேன். "


"நீ எதுக்கு இங்க வந்த. " என்றவனை உற்று பார்த்தான் விக்னேஷ்.‌ ஏனெனில் கேட்ட கேள்விக்கி ரிஷிக்குத் தான் நேரடியாகப் பதில் சொல்லிப் பழக்கமே இல்லையே. அதான் கண்டதையும் பேசிக் கடுப்பேத்தி துரத்தி விட நினைத்தான் விக்னேஷை.


" நீ உன்னோட வேலய மட்டும் பாரு. என்னோடத நா பாத்துப்பேன். உதவி செய்ய முன் வந்ததுக்கு நன்றி. வணக்கம். வந்தனங்கள். " என்றவனை முறைத்துக் கொண்டே சென்றான் அந்தக் காவலன்.


அப்ப இவனும் எதோ ஒரு காரணத்துக்காக வந்திருக்கான். என்னவா இருக்கும்.


கரெக்ட்டா சொன்னிங்கன்னா உங்களுக்கு அதுக்கான வெகுமதி கிடைக்கும். கமெண்ட்ல சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 26


விழி 28


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...