அத்தியாயம்: 28
"ஹரிணி இங்க பாரேன். நா என்ன பிடிச்சிருக்கேன்னு. " பவதா ஆசையாக எதையோ காட்ட, ஹரிணி பார்த்தாள், அவளை அல்ல வேறு எங்கோ.
" ஹரிணி இது மீனா இல்ல தலைப்பிரட்டையா (தவளையின் குஞ்சி). பாத்து சொல்லேன். " என்க பவதா.
"இது பாக்க மீன் மாறி தா தெரியுது. ஆனா உன்ன பாக்க தா தலைப்பிரட்ட மாறித் தெரியுது. " என்றவள் பவதாவை இன்னும் பார்க்கவில்லை.
" உங்கிட்ட போய்க் கேட்டேன் பாரு. ச்சி... கௌதம் அண்ணா இத நா வளக்கலாமா?. எங்க வீட்டுல கண்ணாடி தொட்டி இருக்கு. இந்த மீனு பெருசா வளந்தா குட்டி போடும்ல. " என விழி உருட்டிக் கௌதமிடம் காட்ட, அவன் சிரித்தான்.
"பவதாம்மா இது மீனு இல்லம்மா இது தலப்பிரட்ட. இத வளர்த்தா குட்டி எல்லாம் போடாது. பெரிய சைஸ்ல தவளை தான் கிடைக்கும். அதை எடுத்து நீயும் உன்னோட வீட்டுக்காரனும் சூப் வைத்துக் குடிக்கலாம். உனக்குத் தவளை சூப் செய்யத் தெரியுமா. " என்றான் கேலியாக.
"என்ன தவளையா. நான் இவ்வளவு நேரம் மீனுன்னு நினைச்சு தானே பிடிச்சி வைச்சே. ஆனா மீனுன்னு இந்தத் தவள மூஞ்சி சொல்லுச்சி. எல்லாம் வேஸ்ட்டா. " என ஒரு சிறிய ஃப்ளாஷ்டிக் கப்பை காட்ட, அதில் முழுவதும் தலைப்பிரட்டை தான் இருந்தது. பாவம் அதை மீன் என எண்ணி அதிகமாகப் பிடித்து வைத்துள்ளாள்.
"இவ்வளத்தையும் கொண்டு போய்த் தொட்டிக்குள்ள வளர்த்தேன் வச்சுக்க. நீயும் உன் புருஷனும் சேர்ந்து ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி நல்லபடியா நடத்தலாம். " என அவள் பிடித்து வைத்த அனைத்தையும் நீரில் விட்டான். பின் கொண்டு வந்த சிறு துண்டை விரித்து மீன் பிடிக்க ஆரம்பித்தனர் இருவரும், அந்த அருவியில் தேங்கியிருந்த குளத்தில்.
அன்னாந்து பார்த்தால் கழுத்து உடைந்து விடும் என்பார்களே அதுபோல் உயரமாக இருந்தது அந்த அருவி. வெறும் பாறை மட்டுமே இருந்தது. நீர் என்பது எலியின் வாலின் அளவுக்குத் தான் விழுந்து கொண்டிருந்தது. இது சீசன் நேரம் இல்லை. இருந்திருந்தால் அது ஆர்ப்பரித்துக் கெட்டியிருக்கும் அருகில் யாரும் செல்ல முடியாத படி. ஆனால் இப்போது விழும் நீர் ஓடைபோல் சென்று கொண்டிருந்தது. இருந்தாலும் அந்த இடம் மிகவும் அழகாக இருந்தது.
ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் பாறைகள். நம்மிடம் 'உனக்கு அவ்வளவு தில்லு இருந்தா என்ன மிதிச்சி அந்தப் பக்கம் போ பாப்போம். எம்மேல கால வச்ச தர்மாஸ்பத்திரிக்கி தா போவ அந்தப் பக்கம்லா போக முடியாது. அந்த அளவுக்கு நா ஆபத்தானவே. ' என மிரட்டும் அளவுக்குப் பாறைகள் பாசி என்னும் கேடயத்தை அணிந்திருந்தது. சோ கவனமாக அடி எடுத்து வைக்கவில்லை எனில் ஹாஸ்பிடலில் தான் அடுத்த சந்திப்பு.
குட்டையாகத் தேங்கி இருந்தாலும் தண்ணீர் கலங்கள் இல்லாமல் தெளிவாக இருந்தது. சுற்றி காட்டில் சிறு செடிகள், பல வண்ண மலர்கள், உயர்ந்த மரம். அந்த இடத்திற்கு தான் ஆறு பேரும் வந்திருந்தனர். அந்தப் பயணத்திற்கு தலைமை வகிப்பது ரிஷி தரன்.
நேற்று தான் பொண்டாட்டியுடன் பயங்கர சண்ட போட்டான் அல்லவா. சமாதானம் செய்ய வேண்டாமா. சமாதானம் வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். எங்கேயேனும் கூட்டீட்டு செல்ல வேண்டும். பொண்டாட்டிக்கி பிடித்தை வாங்கி தந்து தாஜா செய்ய வேண்டும். அவளுக்குத் தான் வித்தியாசமான இடங்கள் பிடிக்குமே. அதான் அழைத்துக் கொண்டு வந்திருக்கான். அதுவும் கஷ்டப்பட்டு.
சமாதானம் செய்ய எதற்கு இந்தப் படை வீரர்கள் என நினைக்க வேண்டாம். ஏனெனில் ஹரிணிய மட்டும் கூப்பிட்டால் அவானள் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள். அதான் போறதுதா போறோம் மொத்தமாவே போய்டலாம் என்று எல்லாத்தையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தான். இதில மனோ மட்டும் இல்லை. அவனைத் தயானந்தத்தை பற்றி விசாரி எனத் துரத்தி விட்டு விட்டு. ஃபேமிலி மேன்ஸ் ஒன்லி என்பது போல் திருமணமானவர்கள் மட்டும் சில கிலோ மீட்டர் காட்டிற்குள் நடந்து வந்து சேர்ந்தனர்.
பறவைகளின் சத்தம் மட்டும் இல்லாது வேறுசில விலங்குகளின் சத்தமும், குறிப்பாக யானையின் பிளிறும் ஒலி கேட்டது. பவதா விக்னேஷின் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு கவனமாக நடந்தாள். விக்னேஷ் அவளை குழந்தைபோல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். காதலுடன் விழி பேசிக் கொண்டே இதழ் திறக்காது நடந்தனர்.
கௌதம், ரிஷி இருவரும் தனித்தனியாக நடந்து முன்னால் சென்றனர். இந்த இடத்தில் தான் தங்களின் பள்ளி பருவ வார இறுதி நாள் கழியும். அடித்து, விளையாடி, தள்ளி விட்டு என நினைத்துப் பார்க்கப் பல சேட்டைகள் இருந்தன. எனவே மௌனமாக இருவரின் நடையும் இருந்தது.
அப்போ யாரு தா பேசுறா.
அது ஜீவா மற்றும் ஹரிணி. ஜீவா அவர்களின் போலிஸ் ஸ்டோரியை சொல்ல, ஹரிணி அவனைக் கேலி செய்தபடி கேட்டுக் கொண்டே வந்தாள்.
குளத்தை அடைந்ததும் பவதா மீன் பிடிக்க இறங்கி விட்டாள். கண்ணிற்கு சிக்கிய மீனைத் தன் சுடிதாரின் டாப்ஸால் பிடித்து அடைத்து வைக்க, அதைத் தான் மீன் இல்ல என சொல்லிக் கௌதம் தண்ணீரிலேயே விட்டு விட்டான்.
"ஆமா எங்க உன்னோட காதல் கணவன். ஆளையே காணும். பின்னாடி தா வந்திட்டு இருந்தான். திடீர்னு எப்படி மறைஞ்சி போனான். " எனக் கேட்டபடி வலையை எடுக்க, அதில் ஒரு மீன் சிக்கி இருந்தது. அதைத் தன் கப்பில் போட்டவள்.
"மறைஞ்சி எல்லாம் போகல. அதோ வாரான் பாருங்க. " என்றாள் முறைத்து கொண்டு. அவளின் கணவனை அல்ல அருகில் வந்து கொண்டிருந்த ஜீவாவை.
" ஏய், உனக்கு என்ன ஒன்றக்கண்ணா. உம்புருஷென்னு நினச்சி என்ன முறைக்கிற. பார்வைய திருப்பும்மா. " ஜீவா. அவனை இன்னும் அதிகமாகவே முறைத்தாள் பவதா.
ஏனெனில் நேற்று இரவு நண்பர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து ஊட்டிக்கி வந்துள்ளதால் அதைக் கொண்டாடியுள்ளனர். பவதாக்கு கொண்டாட்டம்னா ஸ்வீட் சாப்பிட்டா போதும். ஆனா பசங்களுக்கு சரக்கு இல்லாம கொண்டாடத் தெரியல. கூடக் கௌதமும் சேர்ந்து கொள்ள, பல வகை சரக்கு உள்ளே சென்றது. அதான் கோபம்.
" மனோ அண்ணா இருந்த வரைக்கும் இந்த மாறில்லாம் அவெ பண்ணல. நீங்க வந்ததுக்கு அப்றம் தா என்னோட முன்னாடியே எடுத்துட்டு வந்திருக்கான். நீங்க தா காரணம். நா இப்பவே ப்ரியாக்கு சொல்லுறேன். " என ஜீவாவுடன் சண்டை போட,
இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் விக்னேஷ் ஹரிணியின் அருகில் வந்து அமர்ந்தான். " அங்கு ஒரு கலவரமே நடந்துட்டு இருக்கு. அத கவனிக்காம அப்படி அங்க என்ன தெரியுதுன்னு வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே இருக்க. ம். " என்க. அவனையும் அவள் கவனிக்கவில்லை. கைகளை ஆட்டி அவளின் பார்வை செல்லும் பாதையைத் தடுக்க, அவள் முறைத்தாள் அவனை.
" என்ன விக்கி. " என்றாள் கடுப்புடன்.
" ஹஸ்பென்ட் அண்ட் வைஃப்னா சண்ட வர்றது சகஜம் தா. அதுக்கு போய் வாழ்க்கையையே வெறுத்த மாறி விரக்தி பார்வ பாத்துக்கிட்டு இருக்க கூடாது. " என்றவன் கையில் பெரிய சூடான மக்காச்சோள கதிர். அதுமட்டுமல்ல அவித்த கடலை மாங்காய் சுண்டல், கப்ப கிழங்கு எனப் பல ஐட்டங்கள் சூடாக இருந்தன.
" ம்ச்... " என்றவள் கண்ணிற்கு ரிஷி பட்டான்.
சிறு சிறு சுள்ளிகளை எடுத்து வந்தவன் நெருப்பு மூட்டினான். வரும் வலியில் கிழங்குகள், வாங்கி வந்த சோளத்தை சுட தீ மூட்டி கொண்டிருந்தான். அவளின் பார்வையைக் கண்டதும் ‘என்ன?’ என ரிஷி புருவம் உயர்த்த,
" எனக்கு ஹனி வேணும். " என்றாள் சத்தமாக, ரிஷி விக்னேஷை பார்க்க,
" இதோ, இதுல இருக்கும். " என ஒரு பையில் தேடினான் அவன்.
"எனக்கு இதெல்லாம் வேணாம் விக்கி. எனக்கு ஃப்ரெஷ்ஷான தேன் தா வேணும். "
"இதுவும் ஃப்ரெஷ் தா. பாரு. " என எடுத்துக் காட்டினான்.
" இது ஃப்ரெஷ் இல்ல. நா கேக்குறது தேன் அடைல இருந்து என்னோட கண்ணு முன்னாடி எடுத்துத் தர்றது. அதோ அந்தக் கூட்டுல இருந்து. " என கை காட்டினாள்.
அங்கு உயரத்தில் இருந்தது ஒரு மரம். ஒற்றை கிளை தான் இருந்தது. கிளை தெரியாத படி தேனீ கூடு கட்டி தொங்க விட்டிருந்தது. அது கூடு கட்டி இருப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அது எந்த ஒரு பிடியும் இல்லாத இடத்தில் பாறைக்கு நடுவே வளர்ந்து இருந்தது தான் பிரச்சனையே. அதில் ஏறுவது சுவற்றில் பல்லி ஊர்வது போல் ஏறினால் மட்டுமே போக முடியும்.
"நீ என்ன லூசா!. அது எவ்ளோ உயரத்துல இருக்கு பாத்தியா. அதெல்லாம் எடுக்க முடியாது. கடைல வாங்கிட்டு வந்த பாட்டில குடிச்சிக்க. இந்தா. " என விக்னேஷின் கையில் இருந்ததை பவதா வாங்கி தந்தாள்.
"நா ஒன்னும் உங்கிட்ட கேக்கல. "
"டார்லிங். நா வர்ற வழில ஒரு மரத்துல இதே மாறிக் கூட்ட பாத்தேன். வா அத எடுப்போம். " என்றான் கௌதமும்.
" ம்ச்... உங்கிட்டயும் நா தேன் வேணும்னு கேக்கல. எனக்குச் செய்ய வேண்டிய ஆள் செஞ்சா போதும். " என மறைமுகமாக ரிஷியிடம் கேட்டாள்.
"அவெ என்ன ஸ்பைடர் மேன்னா. சுவத்து ஊந்து போக, இல்ல கம்மு விட்டுப் பறந்து போக. " கௌதம்.
"இதெல்லாம் எனக்குத் தெரியாது. அவெந்தா என்ன வேணும்னு கேட்டான். நா கேட்டுட்டேன். என்ன உண்மையா லவ் பண்ணா எடுத்துத் தருவான். நீ சும்மா வேடிக்க மட்டும் பாரு. "
"ஒரு வேல உன்னோட லவ்வு அந்த அளவுக்கு வெர்த் இல்லன்னு தேன் எடுக்காம விட்டுட்டா. " என்ற விக்னேஷை முறைத்தாள் அவள்.
" மொறைக்காத. லவ் பண்ணாலும் பண்ணலன்னாலும் உயிரோ இருக்கலாம். ஆனா மொட்ட பாற மேல ஏறி, தேன் கூட்டை நோண்டுனா எப்படி உயிரோட இருக்கு முடியும் சொல்லு. " ஜீவா.
"அதுமட்டுமில்லாம ஒரு வர்ஷத்துல பாம்பு கடிச்சி இறந்து போனவங்கள விட, தேனீ கொட்டுறதுனால இறந்து போனவங்க தா அதிகமா. டிஸ்கோவரி சேனல்ல சொன்னாங்க. " விக்னேஷ்.
யார் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
" ஏய்… உனக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர். நானும் பாக்குறேன் காலைல இருந்து அண்ணன நீ ரொம்பத்தா கொடும படுத்துற." என ரிஷிக்கி ஆதரவு கரம் நீட்டினாள் பவதா.
ஏனெனில் காலையிலிருந்து ஹரிணியோட நடவடிக்கைகள் எதுவும் சரியில்ல. ஹரிணி தான் தன் மனதில் எதையும் வைத்துக் கொள்வதில்லையே. சந்தோஷம், கோபம், அழுகை என அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்டி வைக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதில் கோபம் இருக்கிறதே அதை மட்டும் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி விட வேண்டும். யாராக இருந்தாலும் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டு நிதானமாகத் தங்களின் கோபத்தை வெளி காட்டி தங்களின் எதிர்ப்பைச் சொல்லி விட வேண்டும். இல்லையேல் கோபம் குரோதமாக மாறிவிடும்.
ரிஷியின் மீது கோபம். அவன் அவளிடம் வெளிப்படையாகச் சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவளிடம் மறைக்கவும் சொல்ல விரும்பாமலும் இன்னும் சில விசயங்கள் அவனிடம் இருப்பது என ரிஷியின் மீது கோபப்பட அவளுக்கு ஆயிரம் காரணம் இருந்தன. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது அவனிடம் பேசாமல் தண்டனை தருகிறார். ரிஷி இருக்கும்போது அவனைத் தவிர்த்து மற்றவர்களுடன் பேசி.
காலை உணவின்போது அவளுக்காக நாற்காலியை எடுத்துப் போட்டு காத்திருந்த ரிஷியின் பக்கத்தில் அமராமல் வேண்டுமென்றே கௌதமின் நாற்காலியில் அவனை இடித்துக் கொண்டு கௌதமின் தட்டிலிருந்து எடுத்து உண்டாள்.
பின் வெளியே செல்லலாம் அரைமணி நேரத்தில் தயாராக இரு என்று சொன்னவனின் பேச்சைக் கேக்க விரும்பாத ஹரிணி அன்றைக்குள் சென்று உறங்கிவிட்டாள். பின் அவளை எழுப்பிக் குளியலறைக்குள் தள்ள, நேரம் கடந்ததே தவிர அவள் மட்டும் வெளியே வரவில்லை. கதவை தட்டியபோது, கரத்தில் சோப்பு நுரையுடன் வந்து திறந்தாள். இன்னும் குளிக்கவே இல்லை போலும்.
" கிட் என்ன பண்ணிட்டு இருக்க. லேட் ஆகுது. " என்றவனுக்கு பதிலாகச் சோப்பு நுரையில் முட்டை விட்ட படி உள்ளே சென்றாள்.
" ஒரு வேல தனியா குளிக்கப் பிடிக்கலன்னா நா வேணும்னா கம்பேனி குடுக்கவா. " எனக் கதவை மூட விடாது ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் தன் சட்டை பட்டனில் கை வைக்க, அவனைத் தள்ளி விட்டு விட்டு விரைவிலேயே ரெடியாக வந்தாள். வந்தவள்,
"நா கார் ஓட்டுறேன். தைரியம் இருக்குறவங்க கார்ல ஏறி உக்காருங்க." எனச் சாவியை வாங்கிக் கொள்ள,
"நம்ம கிட்ட தா இன்னொரு காரு இருக்குள்ள. நாம அதுல போலாம். ம்… " எனப் பவதா விக்னேஷை காரை எடுக்கச் சொல்ல, ஹரிணி முறைத்தாள்.
"அதுல இத்தன பேர் ஏறுனா இடம் பத்தாது. அதா நானும் பவதாவும் பைக்ல வர்றோம். " என்ற விக்னேஷ் மனைவியுடன் பைக்கில் கிளம்பிவிட்டான்.
"ச்ச. தப்பிச்சிட்டானோ. " என்பது போல் தான் இருந்தது. ஏனெனில் ஹரிணி டிரைவிங் அப்படி. திடீரென வேகமாகச் செல்வது, பின் சடன் ப்ரெக் போட்டுத் திருத்துவதும், வளைந்து வளைந்து சாலையில் ரங்கோலி போட்டபடி ஓட்டிச் சென்றது எல்லாம் பயங்கறமாகத்தான் இருந்தது. ரிஷியின் கோபமான பேச்சைத் துளியும் அவள் மதித்துச் செவிக்குள் கொண்டு சேர்க்கவில்லை.
அவன் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக நடந்து கொள்ள வேண்டும் என்று காலையில் சபதம் எடுத்து விட்டாள் போலும். இப்போது தேன் வேண்டுமாம். இதுவும் தேன் கூட்டிலிருந்து அவளின் கண் முன்னே எடுக்கப்பட்ட தேன்.
'கொஞ்சம் ஓவராத்தா போறோமோ. சரி போவோம். என்ன அடிச்சாலும் எனக்குத் தாலி கட்டுன பாவத்துக்கு அவெ வாங்கித்தா தீரனும். அனுபவிக்கட்டும். ' என நினைத்தவள் அவனைப் பார்த்தபடியே,
" விக்கி எனக்கு ஹனி வேணும். அதுவும் இப்பவே. " என்க, குறுஞ்சிரிப்புடன் தன் டிரக்கிங் பேக்கில் இருந்த கயிறை எடுத்தான் அவன். ரிஷி ஏறக் கௌதமும் உதவி செய்தான்.
தன்னை தொந்தரவு செய்யாதவரை எந்த ஒரு உயிரினமும் மனிதர்களைத் தாக்குவது இல்லை. அதைக் கண் கூடாகப் பார்த்தனர் அனைவரும். அரிசியை விலக்கி அதில் உள்ள கல்லை எடுப்பது போல், தேன் கூட்டில் உள்ள தேனீகளை விலக்கி அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டி எடுத்து வந்தான். அதைச் சுத்தமான துணியில் வைத்துப் பிழிந்து எடுத்துத் தேனை சுவைக்கும்போது. ஆஹா.!! இந்த உலகின் கெடவே செய்யாத ஒரு உணவைச் சுவைப்பதில் பேரானந்தம் அவளுக்கு.
திரும்பி ரிஷியைப் பார்த்தாள் அவன் மீண்டும் எதையோ நெருப்பில் சுட்டுக் கொண்டு இருந்தான். ‘மனுஷனா இருந்தாலும், புருஷனா இருந்தாலும் நமக்காக ரிஸ்க் எடுத்து ஒன்னு பண்ணும்போது நன்றின்னு ஒன்னு சொல்லனும்ல. அதா அவெங்கிட்ட போய்’.
"தேன் நல்லா இருந்துச்சி. தேங்க்ஸ். எனக்காக எடுத்துத் தந்ததுக்கு. " என எங்கேயோ பார்த்துச் சொல்லி விட்டுத் திரும்பி நடக்கலானாள். ஆனால் முடியவில்லை. அவளின் கரம் பற்றியவன் அவளின் உதடுகளில் எதையோ திணித்தான்.
அது ஒரு வகை கிழங்கு. காடுகளில் தன்னிச்சையாக வளரக்கூடிய அது மருத்துவ குணம் கொண்டது. அதை நெருப்பில் சுட்டு தேனில் முக்கி எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். சுவை வித்தியாசமாக இருந்தாலும் நன்றாக இருந்தது.
" ம்... செம்மையா இருக்கு. எங்கருந்து எடுத்த. " எனக் கேட்டு அவனின் கையிலிருந்து கிழங்கை வாங்கி உண்ண, அவன் பதில் சொல்லாது தேன் வடிய உண்டு கொண்டிருந்த அவளை ரசித்தான். என்ன எனப் புருவம் உயர்த்தினாள்.
" என்னோட கிட் க்கு எம்மேல இருந்த கோபம் போயிடுச்சி போல. " எனக் கண் சிமிட்டி கேட்டான் அவன்.
"இல்ல நா இன்னும் உம்மேல கோபமாத்தா இருக்கேன். ஹிம். " எனச் சிறுபிள்ளை போல் அவன் முகம் பார்க்காது திரும்பிக கொண்டாள்
" இல்ல. கோபமா இல்ல. அது போயிடுச்சி. " என்றான் உதடுகளில் சிறு புன்னகையுடன் அவளின் முன் வந்து நின்று.
" ம்ச்... " என்றவள் அவனை தாண்டிச் செல்ல,
"அதா எங்கிட்ட பேசிட்டல்ல அப்பக் கோபம் போயிடுச்சின்னு தான அர்த்தம். " என்றவனை திரும்பிப் பார்த்து பார்த்து முறைத்து விட்டு நடந்தாள்.
"சரி நீ இன்னும் கோபமாத்தா இருக்கன்னு நா ஒத்துக்கிறேன். இப்ப அந்தப் பக்கம் போகாத. அங்க பாத சரி இல்ல. " எனக் கத்திக் கொண்டே பின்னால் சென்றான் அவன்.
'நீ என்ன சொல்றது நா என்ன கேக்குறது.'ன்னு வேக நடை நடந்தவள் அலறினாள்..
ஏனெனில் அங்கு இயற்கையை ரசிக்க என வந்து சில குடிமகன்கள் பாட்டிலை உடைத்துவிட்டு சென்றுள்ளனர். அதில் காலை வைத்தவளின் பாதத்தை அது பதம் பார்த்து விட்டது.
அவளைத் திட்டிக்கொண்டே முதலுதவி செய்து அழைத்து வந்தனர் அனைவரும்.
‘ஏதோ கை இருக்குற பிள்ளங்கிறதுனால குத்துனதும் எடுத்துக் கீழ போட்டுட்டு, மருந்த அள்ளிப் புண்ணு மேல போட்டுச் சரி பண்ணிக்கிட்டா. ஆனா இவள மாறிச் செய்ய முடியாத பல விலங்குகளுக்குப் புண்ணாகி உடல் அழுகி இறந்து போகக் கூட வாய்ப்பிருக்கு.
அதனால ஒரு சின்னக் கருத்து. எந்த ஒரு கூர்மையான பொருளா இருந்தாலும் அத கண்ட இடத்துல தூக்கி வீசாம அதுக்குன்னு இருக்குற குப்பைத்தொட்டிய தேடி போய்ப் போடுறது நீங்க இந்த இயற்கைக்கும் மற்ற விலங்குக்கும் செய்ற மிகப் பெரிய உதவி.
ப்ளீஸ். இத ஃபாலே பண்ணுங்க.’
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..