முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 29

அத்தியாயம்: 29


நீண்ட சோபா. அதில் அமராமல் படுத்துக் கொண்டி இருந்தாள் ஹரிணி. 


கால்களை மடக்கி வயிற்றில் லேப்டாப்பின் வைத்து ஏதோ செய்து கெண்டு இருந்தவளின் கை வேலை செய்ததோ இல்லையோ வாய் மட்டும் நன்கு வேலை செய்தது. பக்கத்தில் இருந்த டேபிளில் பழச்சாறை வைத்து ஸ்டா கொண்டு தன் வாய்க்கும் டம்ளருக்கும் பாலம் அமைத்து உறிஞ்சி கொண்டிருந்தாள்.


அப்படி என்ன பார்க்கிறாள் என்றால். கௌதம் அந்த காப்பகத்திலிருந்து எடுத்து வந்தானே அந்த ஆவணங்களை‌. அதில் கடந்த ஐந்து வருடமாகக் காப்பகத்தில் வந்து சேர்ந்த குழந்தைகளின் பெயர், பெற்றோரின் விவரம், உடலில் என்ன பிரச்சினை, எங்குப் பிறந்தார்கள், எப்போது வந்து சேர்ந்தார்கள் என்பது போன்ற பல தகவல் இருந்தன. அதைத் தான் தீவிரமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.


இப்போது அதைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன என நீங்கள் கேட்கலாம். அவசியம் வந்துவிட்டது. அதனால் தான் அந்த இருள் சூழ்ந்து இருக்கும் மாலை நேரத்திலும் விக்னேஷும் அவனின் நண்பர்களும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஏன் என்று கேட்டால். அங்குத் தான் கதிரேசன் அட்மிட் ஆகி உள்ளார். அவரைக் கொலை செய்யச் சிலர் பார்த்தார்களே, அவர்கள் போட்ட திட்டப்படி கோயம்புத்தூரிலிருந்து விசாரனையென அழைத்து வந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.‌. நல்ல வேளையாக உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. ஆனால் ஆள் சுயநினைவை இழந்து படுத்துள்ளார். அவரைப் பாதுக்காக்க என ஜீவா செல்ல, மனோவும் விக்னேஷும் விபத்து நடந்த இடத்தை பார்க்கச் சென்றுள்ளனர்.


விபத்து என்று கேள்விப்பட்டதும் விக்னேஷின் சந்தேகம் வலுப்பெற்றது, அதான் கதிரேசனின் பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்குமோ என்றும். அவர் வாய்யை திறந்தால் மாட்டிக் கொள்வோமோ என்றும் பயந்து செய்துள்ளனர் என்பது தான் அது. கௌதமிடம் சென்று காப்பகத்தில் எடுத்த சில ஆவணங்களை வாங்கி ஹரிணியிடம் குடுத்து "உனக்கு ஏதாவது க்ளூ கிடைக்கிதான்னு பாரு. " என சொல்லிச் சென்றுள்ளான்.


மணி பத்தை தாண்டியும் அவர்கள் யாரும் வீடு வந்து சேரவில்லை. அதான் விக்னேஷ் தன்னை நம்பி கொடுத்த பொறுப்பைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறாள். படித்துக் கொண்டிருந்தவளின் வாயில் ஜூஸ் வராமல் காற்று வர, நிமிர்ந்து க்ளாசை பார்த்தாள். அது தீர்ந்து போய் இருந்தது.


" ஹேய் பவதா...‌ பவதா…. ஜூஸ் காலியாப் போச்சி. வேற எடுத்துட்டு வா. " எனக் குரல் கொடுக்க, பவதா வரவில்லை.


"பவதா. பவ்…. பவ்…. " என நாய் குரைப்பது போல் குரைக்க, கோபமாக வந்தாள் பவதா.


" என்னடி வேணும் உனக்கு. நாய் மாறிக் கத்திட்டு இருக்க. எதாவது வேணும்னா பணிவா கேக்கணும் அத விட்டுபுட்டு ஓட்ட அதிகாரம் பண்ண கூடாது. புரியுதா. " 


"நல்லா புரியுது பவ். ஆனா என்னால நடக்க முடியலையே. முடிஞ்சிருந்தா நான் எதுக்கு உன்னை அதிகாரம் பண்ண போறேன். பாரு நானே பாவமா கால்ல கட்டு போட்டுப் படுத்த படுக்கையா கிடைக்கேன். உதவி பண்ணு பவ்... " 


" ஏய் உனக்குக் கால்ல சின்னப் பிங்கான் தா குத்துச்சி. அதுக்கு போய்க் காலையே வெட்டி எடுத்துட்ட மாறி ஸின் போடுற. என்ன தா சாவித்திரின்னு சொன்ன இப்ப எனக்கே டஃப் குடுக்குற மாறி நீ நடிக்கிறியே டி நியாயமா இது. " என்றாலும் ஹரிணி கேட்ட ஜுஸை டம்ளரில் ஊற்றத் தவறவில்லை.


"ஐ... தங்க் யூ பவ். இதுக்காக நா உன்னோட பேர என்னோட பப்பீஸ்கு வச்சி கொஞ்சிக்கிட்டே இருக்கேன். ம்… " என்றவளை முறைத்தாள் அவள்.


" ஒன்னும் தேவையில்ல. கால்ல நிறைய ரத்தம் போச்சேன்னு தா இந்த உதவி பண்ணேன். வேற எதுவும் இல்ல. ஆனாலும் நீ ரிஷி அண்ணா சொன்னத கேட்டிருக்கலாம். உனக்குத் திமிரு. கால்ல கட்டு போடுற அளவுக்கு அதிகமா வந்துடுச்சி. " என்றபோது காலிங் பெல் அடித்தது. வந்தது விக்னேஷும் மனோவும்.


"ஹாய் விக்கி. கதிரேசன் எப்படி இருக்காரு. "


" அத நீ ஜீவா கிட்ட தா கேக்கணும். நாங்க ஆக்ஸிடென்ட் நடந்த இடத்த பாத்துட்டு வர்றோம். " மனோ.


'யாரு நீயா?. ' என்பது போல் விக்னேஷ் மனோவை முறைத்தான்.


" ஓ!. எப்படி நடந்தது ஆக்ஸிடென்ட்?. "


" மரம் உடஞ்சி விழுந்திருக்கு. ஜீப் மேல விழுந்ததுனால சில போலிஸ்கரங்களுக்கும் அடி. " விக்னேஷ். சோர்வுடன் தனி நாற்காலியில் அமர, பவதா அவர்களுக்கு காஃபி எடுத்து வந்தாள்.


" இது மழ நேரம் கூட இல்லயே. இடி மின்னல்னு எதுவும் இல்லாதப்ப நல்லா இருந்த மரம் எப்படி முறிஞ்சி விழும். " என்றாள் யோசனையுடன்.


விக்னேஷ், " எனக்குத் தெரிஞ்சி ஜீப் அந்த இடத்துல வர்ற நேரம் பாத்து யாரோ. "


"மரத்த தள்ளி விட்டுருக்கனுமா மச்சான். " மனோ.


" கொன்ருவேன் உன்ன. எங்கூட இருடான்னு சொன்னா ஜீவா பாக்க போறேன் சொல்லி என்ன தனியா விட்டுட்டு. அவெங்கிட்டையும் போகாம. எங்கூடவும் இல்லாம என்னடா பண்ண நீ இன்னைக்கி. " என்றான் விக்னேஷ்.


"அது வேற ஒன்னுமில்ல மச்சான். சுருதி ஃப்ரண்டு நர்மதா இருக்குல, அது எனக்கு ஃபோன் பண்ணுச்சி. என்னனு கேக்க போயிருந்தேன். " என்றவனை. 'நீ அதுக்கு மட்டும் போனியா. ' என்பது போல் பார்த்தான்


"ஏய் நம்புங்க. அந்தப் பொண்ணு நர்மதாக்கு உடம்பு சரியில்ல போல. அதா அந்த டாக்டரு தன்செயன், என்ன எதுன்னு பாத்துட்டு இருந்தாரு. " என்க.


"அந்தாளுக்கு எப்படி நர்மதாவ தெரியும். " ஹரிணி.


" கேட்டேனே. அவங்க காப்பகத்துக்கு அடிக்கடி வருவாராம். சந்திரபோஸ்ஸோட ஃப்ரண்டாம். தயானந்தன் நடத்துற மெடிக்கல் கேம்ப்க்குல தன்செயனும் டாக்டரா இருந்து சேவ செய்வாராமா. " என்றபோது விக்னேஷ் மற்றும் ஹரிணியின் புருவங்கள் சுருங்கியது.


" உங்கள எதுக்கு நர்மதா கூப்டாங்க." பவதா.


" அது ஒன்னுமில்லம்மா.‌ அந்தப் பொண்ணு சுருதியோட சில மெடிக்கல் செக்கப் செஞ்ச ரிசல்ட் எங்கன்னு அந்தப் பொண்ணு கிட்ட கேட்டிருந்தேன். அத குடுக்கத்தா வரச் சொல்லுச்சி. அதுக்குள்ள உம்புருஷெ ஃபோன் மேல ஃபோனப் போட்டு வான்னு கத்திட்டான். ஆனாலும் வாங்கிட்டேன். " என்றான் விக்னேஷை முறைத்தபடி.


"செக்கப்பா.! எதுக்கு?. " ஹரிணி


"நர்மதா தா சொன்னா. அடிக்கடி தன்னோடு உடம்ப ஃபுல் செக்கப் செய்யுமா அந்தப் பொண்ணு. ஏன்னு அதுக்கே தெரியாதாமாம். ஆனா பண்ணுமாம். அதா அதோட ரிப்போர்ட் எங்கன்னு கேட்டிருந்தேன். ஒன்னே ஒன்னு தா இருக்குன்னு குடுத்தா. நல்ல ஆரோக்கியமா தா சுருதி இருந்திருக்கா. உடம்புல எந்தப் பிரச்சனையும் இல்லன்னு ஒரு டாக்டர்ட்ட காட்டி தெரிஞ்சிட்டேன். " மனோ.


"ஒன்னே ஒன்னுதா இருக்குன்னா. அப்ப மத்த ரிப்போர்ட்." ஹரிணி.


"யாருக்கு தெரியும். காப்பகத்துக்குள்ளையே செக்கப் பண்ணி அங்கேயே வாங்கி வச்சிப்பாங்கன்னு சொல்லுச்சி. இப்ப நா வாங்கிட்டு வந்தது ஃபோட்டோ‌ காப்பி. ஃபோன்ல எடுத்துட்டு வந்திருக்கும் போல. அது நர்மதாக்கு சேர் பண்ணிருக்குன்னு சொன்னா.‌. அதா அத ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு கூப்பிட சொன்னேன். அது மட்டுமில்ல அந்த ஆரோக்கிய ராஜு ம் அடிக்கடி செக்கப் பண்ணுவான்னு அவரோட வைஃப் சொன்னாங்க. அங்கிட்டையும் ரிப்போர்ட் கிடையாது. " மனோ.


" மனோ, நீ தயானந்தத்த பத்தி விசாரிக்கப் போனியே. என்ன கிடைச்சது. " ஹரிணி.


" முதல்ல இத அநாத ஆஸ்ரமமாத்தா ஆரம்பிச்சிருக்காரு. தயானந்தத்தோட அப்பா காலத்துல இருந்து இருக்கு. ஆனா நல்ல பேரு கிடைச்சி ஊர் முழுக்க ஃபேமஸ் ஆனாது இந்தப் பதினஞ்சி இருபது வர்ஷமாத்தா. அதுக்கு முன்னாடியும் நல்ல பேர் இருந்துருக்கு. இடைல கொஞ்சம் கெட்டு போய்டுச்சி. எல்லாத்தையும் இலவசமா குடுக்குற வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாம நடந்துட்டு இருந்திருக்கு.


தயானந்தன் பொறுப்புக்கு வந்ததும் இருந்த நல்ல பேரு குறைய ஆரம்பிச்சிடுச்சி. ஒரு கட்டத்துல இழுத்து மூடிடலாம்னு நினைச்சப்பதா அவரோட பையன் சந்திரபோஸ் தலையெடுத்திருக்குறாப்ல. டாக்டரா இங்க கோயம்புத்தூர்ல படிச்சி ஊட்டில கொஞ்ச வர்ஷம் கவர்மெண்ட் டாக்டரா வேல பாத்திருக்காரு. அப்றம் வெளி நாடு போய்ப் படிப்பு வேலன்னு செட்டில் ஆகிட்டாரு. அங்க அவரோட முயற்சியால சில வெளிநாட்டுகாரங்க நிதி உதவி கிடச்சி இந்தக் காப்பகத்த நல்ல படியா ரன் பண்ணிட்டு இருக்காங்க.


அப்றம் physically challenged குழந்தைங்கள பாத்துக்கிற காப்பகமா பதினஞ்சி வர்ஷத்துக்கு முன்னாடி மாத்தி யாரையும் உள்ள விடாம இப்படி கோட்டைய கட்டி வச்சிருக்காரு. போஸ் மாசத்துல நாளு நாள் தங்கி இங்க மக்களுக்கு மெடிக்கல் கேம்ப்பு அப்பறம் அங்கருக்குற குழந்தைங்களுக்கு செக்கப்புன்னு பண்ணுவாராம். ஸ்கூல் ஒன்ன நடத்துறாங்க. அது சும்மா பேருக்கு வச்சிருக்கானுங்க. மத்தபடி அப்பா மகென்னு ரெண்டு பேர் மேலயும் எங்க கம்ளைண்ட்டும் இல்ல. சில புகார் மட்டும் வந்திருக்கு. அது போஸ் மேல.


எதோ தப்பா ட்ரீட்மெண்ட் பண்ணி தன்னோட புருஷெ இறந்துட்டாருன்னு ஒரு அம்மா குடுத்திருக்கு. ஆனா விசாரிச்சதுல டாக்டர் மேல தப்பு இல்ல. அந்தாளு மொடா குடியா குடிச்சி பொட்டுன்னு போயிருக்கான், போஸ் மேல தப்பில்லன்னு பேப்பர்ல கூட வந்திருந்துச்சாம். "


" எந்தப் பேப்பர். " விக்னேஷ்


"அப்ப லேக்கல் நீயூஸ் பேப்பர் தா. இப்ப அது குறிஞ்சி மலர்ன்னு கொட்ட எழுத்துல போடுற அளவுக்குக் கோயம்புத்தூர் திருப்பூர் ஊட்டின்னு பத்து மாவட்டத்துல பேப்பர் போடுற அளவுக்கு டெவலப் ஆகிடுச்சி. "


"அந்த ஆஃபிஸ் போய் விசாரிச்சியா. " என்றான் விக்னேஷ். ஏனெனில் சுருதி மரணத்தைக் காதல் விவகாரத்தால் மரணம் என்று செய்தி வெளியிட்டது அந்த நாளிதழ் தான்.


" ம்... போனே மச்சி. தயானந்தத்தோட வைஃப் தம்பி தா தமிழ்வாணன்.‌. அதாவது தயா வோட மச்சான் தா கோத்தகிரில ஆரம்பிச்சிருக்காரு. கொஞ்ச நாள்ளையே சொத்துக்காக அவங்களுக்குள்ள சண்ட வந்து பிரிஞ்சிட்டாங்களாம். அப்றம் ஒருத்தருக்கொருத்தர் தொடர்புலையே இல்லையாம். அதா விட்டுட்டேன். இப்ப தமிழ்வாணன் பையனும் மகளும் சேந்து ஆஃபீஸ்ஸ ரன் பண்றாங்க. "என்க.


விக்னேஷும் ஹரிணியும் ஒருவரை ஒருவர் பார்வையை பறிமாறிக் கொண்டனர். அது 'உன்னுடைய கருத்து என்ன. ' என்பது போல் இருந்தது.


" விக்கி, உங்கிட்ட அந்தக் காப்பகத்துல இறந்து போனவங்க லிஸ்ட் இருக்குன்னு சொன்னேல. "


"ம்… ஆறு‌ மாசத்துல அந்தக் காப்பகத்த சேர்ந்த பத்து பேருக்கு மேல இறந்து போயிருக்காங்க. எல்லாரும் அந்தக் காப்பத்துல இருந்து வெளியேறுன ஆள் தா. இப்ப எதுக்கு ஹரிணி கேக்குற. " விக்னேஷ்.


"இறந்து போன அந்தப் பத்து பேர பத்தி குறிஞ்சி மலர்ல எதாவது செய்தி வந்திருக்கான்னு விசாரி. அத யாரு குடுத்தா. என்ன முகாந்திரத்த வைச்சி அந்த நீயூஸ்ஸ பப்ளிஷ் பண்ணாங்கன்னு விசாரிச்சா தெரிஞ்சிடும். இன்னும் அங்காளி பங்களிங்க உறவுல தா இருக்காங்களா இல்லையான்னு. "


"எதுக்கு தேவையில்லாம அங்கெல்லாம் விசாரிக்கனும்.‌ இது ஒரு சாதாரண நீயூஸ் பேப்பர் ஆஃபீஸ் தான. என்ன பெருசா கிடைச்சிடபோது. " பவதா.‌. ஹரிணி கூறியது நேரவிரையமாகப் பட்டது அவளுக்கு.


" பவதா உனக்கு இன்னும் மீடியாவோட பவர் என்னான்னு தெரியல. நம்ம மக்கள், உண்ம எதுன்னு தெரிஞ்சிக்கிறதுல ஊடகங்கள மட்டும் தா சார்ந்து இருக்காங்க. அந்த ஊடகங்கள் தான் ஒரு நாட்டோட தலையெழுத்தையை மாத்தி எழுது. அதுல எது வருதோ அது தா நிஜம்னும். பத்து நியூஸ் சேனல்ல ஒரே நியூஸ் வந்தா அது உண்மையாத்தா இருக்கும்னு அத மட்டுமே மக்கள் நம்புறாங்க‌. மக்கள் கிட்ட உண்ம கொண்டு போய்ச் சேக்குறது மட்டும் இல்ல உண்மைய மறைக்கிறதும் மீடியா தா. " விக்னேஷ்.


" அப்ப மனோ. அதையும் போய் விசாரிக்கலாமே‌. " என்க, அவன் ஹரிணியை முறைத்தான்.


" ஹரிணி சொல்றது கரெக்ட்டு. நீ என்ன பண்றன்னா. " விக்னேஷ்


"‌போய்ச் சாப்டுட்டு படுத்துத் தூங்க போறேன். " மனோ.


"டேய் முக்கியமான கேஸ்ஸ பத்தி பேசிட்டு இருக்கோம். நீ என்னடான்னா. " என விக்னேஷ் சலித்துக் கொள்ள,


" நீயெல்லாம் ஒரு நண்பனாடா. ம்… நண்பனா. சொல்லு. பகல்ல தா மனுஷன அங்க போ இங்க போன்னு உயிர வாங்குனன்னு பாத்தா. ராத்திரியும் கோட்டான் மாறி முழிச்சி வேல பாக்க சொல்லுற. முடியாது டா. என்னால நீ சொல்ற எதையும் செய்ய முடியாது. " என்க, அனைவரும் சிரித்தனர். அப்போது ஜீவா வந்தான்.


" என்னடா நீயும் வந்துட்டா யாரு அந்தக் கதிரேசன் பக்கத்துல இருந்து பாத்துப்பா. " விக்னேஷ்.


"வேணும்னா நீ போய் உக்காரு.‌ அந்தக் குளிர்ல. வந்துட்டான். பெருசா பேச. உன்னையெல்லாம் யாருடா போலிஸ் வேலைக்கி சேர்ந்து சின்சியரா வேல பாக்க சொன்னா. அப்படி செஞ்சி கிடைக்கிற வெங்கல கின்னத்த வச்சி கடைசி காலத்துல என்ன தான பண்ணப் போறானோ. பவதா பசிக்கிதும்மா. அண்ணே மதியானத்துல இருந்து சோறு சாப்பிடல. வாம்மா. " எனக் கடுப்புடன் எழுந்து சென்றான் மனோ.


" லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பாத்துபாருன்னு வெங்கட்ராமன் என்ன துரத்தி விட்டுட்டாரு. என்னால ஒன்னும் பண்ண முடியல அதா வந்துட்டேன். அங்க ஒரு வாட்பாய்ட்ட கதிரேசன் ரூம்ல என்ன நடந்தாலும் உடனே தகவல் சொல்லச் சொல்லிட்டு தா வந்தேன். கவலப்படாத. " ஜீவா பேசிக் கொண்டு இருக்கும் போதே ஒரு காரின் சத்தம் கேட்டது.


யார் எனத் தலையை வெளியே நீட்டிப் பார்க்க வந்தது கௌதம். " எங்கடா போயிருந்த. எவ்ளோ நேரமா உனக்கு ஃபோன் பண்றது. எரும. " என ஹரிணி கத்த, கௌதமிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த பெண் சிரித்தாள்.


‘யாருடா அது புது கேரக்டரா. இன்னும் எத்தன பேர் தா வருவாங்கன்னு நீங்க ஃபீல் பண்றது புரியுது. இவங்க டாக்டர். ஹரிணி தா படுத்த படுக்கையா இருக்காளே. அதா அவள செக்பண்ண கூட்டீட்டு வந்திருக்கான். அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து.’


"டேய் இது சின்னக் காயம் தானடா. எதுக்குடா டாக்டர் எல்லாம். " என்க.


" நீ சிறுசுன்னு தா சொல்ற. ஆனா உம்புருஷ கண்ணுக்கு அது ரொம்ப பெருசா தெரியுது போல.‌ டாக்டர்ட்ட காட்டணும்னு ஒரே அடம். அதுவும் இந்த டாக்டர்ம்மா தா பாக்கணும்மா. பாருங்க டாக்டர் இவா தா ஃபேஷன்டு. நல்ல செக் பண்ணி சொல்லுங்க. எந்த ஃபார்ட்ஸ் டேமேஜ் ஆகிருக்குன்னு‌. " கௌதம். ஹரிணியை காட்ட, அவர் அவளின் காலில் உள்ள புண்ணைச் சுத்தம் செய்து மருந்திட்டார்.


" அண்ணா இந்தம்மா பை பெருசு பெருசா இருக்கு. இதுல பெரிய பெரிய ஊசில்லாம் இருக்கும்ல. " பவதா கௌதமிடம்.


"ஏம்மா. "


"ரொம்ப வாய் பேசுறாண்ணா. உக்காந்துகிட்டே‌ ஹேட்டல்ல ஆர்டர் போடுற மாறி இத எடுத்துட்டு வா. அத எடுத்துட்டு வான்னு என்ன கொடும படுத்துறா. அதா நாலு ஊசி மாட்டூசியா வாயிலையே போட்டாங்கன்னா வாய் பேசமாட்டால்ல. " என்க, விக்னேஷ் உட்பட டாக்டரும் சிரித்தார். ஹரிணி மட்டும் பவதாவை பார்த்து முறைத்தாள்.


"இங்க ரூம் இருந்தா அங்க வச்சி செக்கப் பண்ணலாமே. " டாக்டர்.


"ரூம்லாம் இருக்கு டாக்டர். ஆனா. " ‌ஹரிணி.


"அப்ப வாம்மா. உள்ள போனதும் செக்கப் பண்றேன். " 


"அதா காயத்துக்குத் தா மருந்து போட்டுடீங்களே அப்றம் என்ன செக்கப்‌ பண்ணப் போறீங்க. இங்கையே பண்ணலாமே." என்றாள் ஹரிணி புரியாமல்.


"இங்க பசங்கள்ளாம் இருக்காங்க. வேணும்னா அவங்கள வெளில போச் சொல்லு. " என்ற டாக்டரை உள்ளேயே அழைத்துச் சென்றாள் ஹரிணி.


"ஏண்ணா கால்ல கண்ணாடி குத்துனதுக்கும் மருந்து போடுறதுக்கும் நீங்கள்ளாம் வெளில போறதுக்கும் என்ன சம்மதம். " பவதா.‌… டாக்டரும் ஹரிணியும் சென்ற அறையின் மூடிய கதவைப் பார்த்தபடி,


"ஒரு வேல செப்டிக் ஆகி காலையே எடுக்கப் போறாங்களோ. "மனோ.


"டேய்... காலைல தான் டா குத்தவே செஞ்சது. அதுக்குள்ள எப்படி டா செப்டிக் ஆகும். அதுவும் இத்துனோண்டு ஃபீஸ் தா. அத அப்பவே எடுத்துப் போட்டாச்சி." விக்னேஷ்.


" அதுக்கு எதுக்கு கதவ மூடீட்டு‌ செக் பண்ணணும். " கௌதம்.


"உங்களுக்கு நல்லா தெரியுமா. இந்த ம்மா ஒரிஜினல் டாக்டரான்னு. " ஜீவா.


"ஒரிஜினல் இல்லாம ஜெராக்ஸ் ஃபீஸ்ஸாடா. கவர்மெண்ட் டாக்டர் டா. ட்யூட்டி முடியிற வர உக்காந்து இருந்து கூட்டீட்டு வந்திருக்கேன். திருப்பிக் கொண்டு போய் வேற விடணும்னு கடுப்புல இருக்கேன். இதுல நீ வேற. " கௌதம்.


முழுதாகவோ பத்து நிமிடங்கள் முடிந்திருக்கும். புன்னகையுடன் வெளியே வந்தார் டாக்டர். வந்தவர் தானே சென்று கொள்வதாகச் சொல்ல, அப்பாடா என்றிருந்தது கௌதமிற்கு. ஆனால் ஹரிணி புன்னகையுடன் வரவில்லை. கோபமாக வந்தாள். 


வந்தவள்.


"உடனே அவன இங்க வரச் சொல்லு. " ‌என ஃபோனை கையில் கொடுத்து விட்டு கோபமாகச் சென்றாள்.


"இந்தக் கொடூர ஜோடிக்கி என்ன பாத்தா எப்படி தெரியுது. அவெ என்னடான்னா என்ன கால் டாக்ஸி டிரைவர் மாறிப் பிக்கப் டிராப் பண்ற சொல்றான்.


இவா என்னடான்னா டேலிஃபோன் ஆப்பரேட்டர் மாறி ஆர்டர் போட்டுட்டு போறா. " எனப் புலம்பினாலும் ரிஷிக்கு ஃபோன் செய்து வரச் சொன்னான்.


எதற்கு????


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 28

 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...