முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 30

அத்தியாயம்: 30


இரவு நேரம் என்று கூடப் பாராது படு வேகமாக வந்து. சடன் ப்ரேக் போட்டு நின்றது அந்தக் கார்.


"கொஞ்சங்கூட அறிவே கிடையாதா டா உனக்கு. எதுக்கு எப்ப ஃபோன் பண்ணாலும் உயிர் போறது மாறி அவசவசரமா வரச் சொல்லிக் கதறுற.‌ இடியட். " எனக் கத்தியபடியே இறங்கினான் ரிஷி.


கௌதம் மொட்டையாக 'ஹரிணிக்கி பிரச்ச. சீக்கிரம் வா.‌' எனச் சொல்லி ரிஷியைப் பேசவே விடாது வைத்துவிட்டான். ரிஷி திரும்ப அழைக்கும்போது கௌதம் எடுப்பதில்லை.‌ தன் மனைவியின் பெயரைக் கேட்டதும் வேகவேகமாகக் காரை ஓட்டி வந்தான். அதான் கோபம்.


" அறிவெல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கு. உனக்கும் வேணும்னா கேளு. ஹோல் சேல்ல விக்கிறேன். கொறஞ்ச வில தாப்பா நீ வாங்கி யூஸ் பண்ணிக்கலாம். " 


" ம்ச்... எதுக்கு டா வரச் சொன்ன.? " 


"வரச் சொன்னது நா இல்ல. உன்னோட பொண்டாட்டி. உனக்குத் தைரியம் இருந்தா வந்து அவா கிட்ட எகுறு. " எனச் சொல்லி உள்ளே செல்ல, ரிஷி கோபமாகவே உள்ளே வந்தான். வந்தவன் முன் அவனை விடக் கோபமாகவே ஹரிணி நின்றாள்.


" நம்ம பெட் ரூம்ல நீ எதுவும் கேமரா கீமரா செட் பண்ணி வச்சிருக்கியா என்ன. " என காட்டமாகக் கேட்டாள்.


" வாட்!. கேமராவா?. ஹரிணி என்ன பேசுறேன்னு தெரிஞ்சி தா பேசுறியா. இல்ல என்ன வெறுப்பேத்தணும்னு பேசுறியா. " என்றான் அவனும் கோபமாகவே.


" உன்ன வெறுப்பேத்துறது என்னோட நோக்கம் இல்ல. ஆனா நீ காண்டான்னா எனக்குப் பரம சந்தேகம் தா. " ஹரிணி.


" ம்ச்... என்ன ஹரிணி பேசுற. "


"என்ன கண்காணிக்க, நா என்ன பண்றேன்னு தெரிஞ்சிக்க நீ எதோ பண்ற. என்னனு சொல்லு. " 


" ஹரிணி என்ன வேணும் உனக்கு ஏ‌ லூசு மாறி என்னென்னமோ பேசுற. " என்றவன் அவளைத் தாண்டி உள்ளே செல்ல,


" எஸ். என்ன நீ வேவு பாக்குற. நீ ‌ஒரு‌ டிடெக்டிவ் தான. அடுத்தவங்க பர்ஷ்னல் லைஃப்ப பத்தி அவங்களுக்கே தெரியாம தெரிஞ்சிக்கிறவே தான நீ. அதே மாறி என்னையும் வேவு பாக்குற. " எனக் கத்திக் கொண்டே பின்னால் செல்ல, அவளின் வார்த்தைகளில் கோபம் வர, சட்டெனத் திரும்பி,


"உனக்கு என்ன தெரியணும் இப்ப. " என்றான் நேரடியாக.‌


'ஏம்மா தலய சுத்து மூக்க தொடுறதுன்னு தா கேள்வி பட்டிருக்கேன். நீ என்னடான்னா ஏழு கடல் ஏழு மலன்னு உலகத்தையே ஒரு சுத்து சுத்திட்டு வர்ற மாறி ஜவ்வா இழுத்து கேள்வி கேக்குற. ' விக்னேஷின் மைண்ட் வாய்ஸ்.


" எதுக்கு டாக்டரா வரச் சொன்ன. " என்றாள் அவள். முடிந்த வரை கோபமாகவே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.


" செக் பண்ண வேண்டியத செக் பண்ணித்தான ஆகணும் கிட். இல்லாடி ப்ராப்ளம் வரும். " என்றான் கண் சிமிட்டி.  முகத்தில் கோபம் மறைந்து புன்சிரிப்பு வந்து அவனுக்கு.


"உனக்கு எப்படி தெரியும்?. அத முதல்ல சொல்லு. உனக்கு இது தெரியவே கூடாதுன்னு தா உங்கிட்ட சொல்லாம வந்தேன். நீ எங்கிட்ட எதையும் சேர் பண்ணாத வரைக்கும் இத பத்தி ஒரு வார்த்த கூட நா சொல்லக்கூடாதுன்னு இருந்தேன். ஆனா... ஆனா... உனக்குத் தெரிஞ்சிருக்கு. எப்பிடி?. " என்க. அவளின் அருகில் நிதானமாக வந்து நின்றவன். அவளின் விழிகளை நேராக பார்த்துத் தாழ்ந்த குரலில் இருவருக்கு மட்டும் கேட்கும் படி பேசினான்.


" கிட்… யாருக்கும் தெரியாம மறைக்கிற விசயமா இது.‌ நா உன்னோட ஹஸ்பெண்டு. நாம ஒன்னா ஒரே ரூம்ல. ஒரே கட்டில்ல பல மாசமா இருக்கோம். அப்போ உன்ன பத்தி எல்லா விசயமும் எனக்குத் தெரிய வந்து தான ஆகணும். ம்... அதுமட்டுமில்லாம யூ ஆர் மை லவ்வபுல் வைஃப். உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்னால அர்த்தம் சொல்ல முடியும் கிட்… இட் வாஸ் மை ஸ்பெஷல் டெலன்ட். அது உனக்காக உங்கிட்ட மட்டும் தா காட்ட முடியிற டெலண்ட். " என்றான் அவன்.


" உன்னோட டெலன்ட்ட தூக்கி குப்பைல போடு. இப்ப எனக்குப் பதில் சொல்லு. உனக்கு எப்படி தெரியும். " என்றாள் அவளும் விடாமல்.‌.‌.


" அப்படி என்ன ரகசியத்த இவெ கண்டு பிடிச்சிட்டான்னு சண்ட போடுறா. டேய் போலிஸ்காரனுங்களா. உங்களுக்குத் தெரியுமா?. " கௌதம்.


" பெஸ்ட் ஃப்ரெண்டு உங்களுக்கே தெரியலன்னா. சாதா ஃப்ரண்டு எப்படி எங்களுக்குத் தெரியும் பாஸ். " மனோ.


"வந்தததுல இருந்து சண்ட மட்டுமே போட்டுட்டு இருக்குங்க. போய்ச் சமாதான பண்ணலாம்ல. கௌதம் உன்னத்தா‌. " விக்னேஷ்.


"ஏ?. நல்லாத்தான இருக்கு. அத ஏ தடுக்கனும். " ஜீவா சுவாரஸ்யமான பார்த்தபடி,


" சும்மா இருடா. கௌதம் போ." என விக்னேஷ் உசுப்பி விட.


"இந்த ரெஃப்ரி வேலையெல்லாம் என்னால பாக்க முடியாது. அடிச்சி ஓஞ்சிட்டு வரட்டும் அப்றம் என்னன்னு விசாரிக்கலாம். இப்ப வாங்க சோஃபா உக்காந்து சண்ட காட்சிய ரசிக்கலாம். " என அழைக்க அனைவரும் வந்து அமர்ந்து கொண்டனர்.


அப்படி என்ன தெரிஞ்சிடுச்சினு இவா இப்படி கத்துறான்னு உங்களுக்குச் சந்தேகம் வரலாம். அதுக்கு காரணம் அந்த டாக்டரு.


"படுத்துக்கம்மா. " எனக் கட்டிலில் ஹரிணியை படுக்கச் சொன்ன டாக்டர், கொண்டு வந்த பையைத் திறந்து அதிலிருந்து சில கருவிகளை எடுத்தார். அதைத் தன் லாப்டாப்புடன் இணைத்தார். சில வயர்களை ஸ்விட்ச் போர்டுடன் இணைத்தார். அதைக் கண்டு முழித்தவள்.


"எதுக்கு டாக்டர் இதெல்லாம். "


"சும்மா ஒரு செக்கப் தாம்மா. " என்றவர். ஹரிணிக்கு ப்ரஷர் பார்க்க என ஒரு துணியை எடுத்துக் கையில் கட்டினார்.


"நா ஒன்னும் பீபீ ஃபேஷன்ட் இல்ல டாக்டர். நார்மலான பெண்ணு தா. சாதாரணமா கால்ல அடிபட்டதுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய மிஷின்னு. இப்ப என்ன பண்ண போறிங்க. எதுக்கு இதெல்லாம். முதல்ல அதுல என்ன செக்பண்ணுவிங்க. " என அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாது, அவனின் உடலை பரிசோதிக்கத் தொடங்கினார்‌ அந்த லேடி டாக்டர்.


" உனக்கு உடம்புல எதுவும் பிரச்சினை இருக்காம்மா. ஐ மீன் அலர்ஜி, வீசிங் இந்த மாறி. "


"அதெல்லாம் இல்ல டாக்டர். கடவுள் புண்ணியத்துல நா நல்லா தா இருக்கேன்‌. அதுனால என்ன செக் பண்ண வேண்டிய அவசியம் இல்ல."


"உன்னோட ஃபஸ்ட் பேபி நார்மலா இல்ல சிசேரியன்னா. "


" நார்மல் தா டாக்டர். ஏ கேக்குறிங்க." என்றவளுக்கு பதிலாக‌,


"உங்கிட்ட பென்டிரைவ் இருக்கா. " எனக் கேட்க, அவள் எழ முயன்றாள். எடுத்துத் தர வேண்டும் இல்லையா.


" எதுக்கு எழற. நானே எடுத்துக்கிறேன். எங்க இருக்குன்னு மட்டும் சொல்லு." என்றவருக்கு இடத்தைக் காட்டினாள். அவர் அதைத் தான் கொண்டு வந்த லாப்டாப்பில் இணைத்து அவளின் டீசர்ட்டை உயர்த்த, அவள் தடுத்தாள். ஏன் என்ற கேள்வியுடன்.


"சொல்றேன். இந்த மார்க்ஸ் உனக்கு ஃபஸ்ட் பேபி பிறந்ததுக்கு அப்றம் போகவே இல்லையா. " என்றவர் ஒரு க்ரீமை எடுத்துத் தடவ.


"இல்ல டாக்டர். நானும் போடாத க்ரீம் இல்ல. ஆனாலும் முழுசா போகத்தா மாட்டேங்கிது. பூவத்த மஞ்சள் தேச்சி குளின்னு சொல்லுவாங்க. அதுவும் கிழங்கு மஞ்சள கல்லுல தேச்சி குளிக்கனுமாம். பட் நோ யூஸ். எனக்குப் பிறந்தது டுவின்ஸ். வயித்துக்குள்ள ரெண்டும் பயங்கரமா சண்ட போடுங்க. ஐஞ்சி மாசத்துல இருந்தே. " என்றவளுக்கு தன் முதல் தாய்மையின் நினைவு வர,


" உனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தானா. கடைசியாக எப்ப குளிச்ச. "


"எஸ் டாக்டர் ரெகுலர் தா. லாஸ்ட்டா. " என்றவள் அந்த மெஷினில் தெரிந்த தன் சிசுவை பார்த்து அமையாகிப் போனாள். பின்,


"உங்கள யார் இதெல்லாம் செக் பண்ண சொன்னது. கையோடயே‌ இத எல்லாம் தூக்கிட்டு வந்திருக்கிங்கன்னா."


" உன்னோட ஹஸ்பெண்டு தாம்மா. ஐம்பது நாள நெருங்கப்போது. இதுவரைக்கும் எந்த ஒரு செக்கப்பும் பண்ணல. பேபி எப்படி இருக்குன்னு பாத்து சொல்லச் சொன்னாரு. இந்தா இதுல நா ரெக்கார்ட் பண்ணிட்டேன். உன்னோட அவருக்குப் போட்டு காட்டு. எல்லாம் நல்லா இருக்கு. நீயும் ஹெல்த்தா இருக்கன்னு சொல்லிடுறேன். ஆனாலும் கீர, காய், பழம்னு சத்தானதா சாப்பிடு. சரியா. டெய்லி ரெண்டு க்ளாஸ் பால் குடிக்க மறந்துடாத. இதுல சில மாத்திர இருக்கு. இப்ப ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். " என்றவர் தன் வேலையே முடித்து விட்டுச் சென்றார்.


அவர் சென்றதை கூட உணராது அமர்ந்திருந்தாள் அவள். " நா ப்ரெக்னன்ட்டா இருக்குறது அவனுக்கு எப்படி தெரியும். நா யார்க்கிட்டையும் சொல்லலையே. " எனக் குழம்பிப் போனாள்.


ஏனெனில் ரிஷியிடம் இதைச் சொல்ல அவளுக்கு மனமில்லை. எத்தனை விசயங்களை அவளிடமிருந்து மறைக்கிறான். அதே போல் சில காலம் இதை அவனிடம் சொல்லாது மறைத்து‌ வைக்க நினைத்தாள். அதுமட்டுமல்ல கருவுற்றிருப்பது தெரிந்தால் கௌதம் உடன் ஊட்டிக்கி செல்லாதே‌ என்று விடுவானோ என்ற பயமும் தான் காரணம். சென்று வந்தபின் சொல்லிக் கொள்ளலாம். சர்ப்ரைஸ்ஸாக என நினைத்தவளுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளான் அவளின் கணவன்.


"ம்... சொல்லு எந்த இடத்துல கேமரா வச்சிருக்க. " என்க, அவன் அவளைக் கோபமாக முறைத்தான். பின்,


" உங்கிட்ட தா இருக்கு கிட் அது. " என அவளின் விழிகளைக் காட்டி பேச,


" டிராமா போடாத. உண்மைய சொல்லு. " என்றவளின் கையில் தன் ஃபோனை திணித்தான்.


மண்ட மேல இருக்குற கொண்டய மறந்துட்டியேம்மா, என்பது இவளுக்குச் சரியாகத்தான் இருந்தது. ஏனெனில் அவள் அந்த ப்ரெக்னென்ஸி கிட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தாள். பாவம் அதை ரிஷியின் ஃபோனிலிருந்து செய்ததோடு மட்டுமன்றி பணத்தையும் அவனின் வங்கியின் கணக்கிலிருந்து பணப்பரிவர்த்தனை செய்துள்ளாள். அதை வந்திருந்த குறுந்தகவல்மூலம் அறிந்து கொண்டான் அவன், அப்போதே.


" கேமரா எங்கன்னு கண்டு பிடிச்சிட்ட போலயே. " என அவளின் செவியில் தன் இதழுரசி மெதுவாகச் சொல்ல, அவளின் கன்னங்கள் சிவந்து போனது. அதைத் காட்டாது.


" நா... ஒன்னும்... இத எனக்காக வாங்கல. என்னோட. ஃப்ரண்டு ஒருத்தி… கேட்டா… அதா ஆர்டர் பண்ணி வாங்கி குடுத்தேன். இதுல என்ன இருக்கு. இத வச்சி எப்படி தெரிஞ்சிக்க முடியும். " என எனத் தடுமாறி பேச,


" ஆஹாங். அப்றம். " என்றான் நக்கலாகச் சொன்னபடி சோஃபாவில் அமர்ந்தான்.


" இது ஃப்யூசர்ல தேவபடும்னு கூட வாங்கி வச்சிருக்கலாம்ல. தப்பில்லைல அது. அதுக்குன்னு நீ ஓவரா கற்பனை பண்ற. "


" கிட்... நீ ப்ரெக்னென்ஸி கார்ட் எதுக்கு வாங்குனன்னு தெரியாம இருக்க நா என்ன சின்னக் குழந்தையா." என்க, அவனின் பேச்சையும், தன்னை குறும்புடன் சிரித்தபடி பார்க்கும் அவனின் விழிகளையும் எதிர் கொள்ள முடியாமல் சிவக்கும் தன் கன்னத்தை அவனிடம் காட்டாது அறைக்குள் சென்று விட்டாள், ஓட்டமாக.


" எது ப்ரெக்னன்ட்டா. " எனக் கௌதம் அதிர்ந்து போய் நிக்க,


" பாத்து போ கிட். " எனக் கத்தியபடியே மனைவியின் பின்னே செல்ல இருந்த ரிஷியை முந்திக் கொண்டு ஓடினான் கௌதம். தன் தோழியைப் பார்க்க,


போகும் முன். " வழிய விடுடா. நடு வீட்டுல நின்னுகிட்டு நவரசத்தையும் ஒழுக விட்டுட்டு‌. " எனத் தள்ளிவிட்டு விட்டுச் சென்றான்.


"டார்லிங்...‌ டார்லிங்... வாழ்த்துக்கள்." என அணைத்துக் கொண்டவனின் மகிழ்ச்சி அவனின் குரலிலேயே தெரிந்தது. பின்,


" ஏ இத முன்னாடியே எங்கிட்ட சொல்லல டார்லிங். நீயும் அவனும் ஒன்னா தா இருக்கிங்க. எல்லா விசயத்தையும் மறைக்கிறதுல. " எனக் கோபம் கொள்ள,


" இல்ல கௌதம். ஜஸ்ட்டு ஃபாட்டி வைவ் டேஸ் தா ஆகுது. பார்கவி விசயத்துல ஒரு க்ளாரிட்டி கிடைச்சதும் இத சொல்லலாம்னு இருந்தேன். ஸாரி டா. " 


" அத ஏ எங்கிட்ட சொல்லுற. உன்னோட பாவா கிட்ட சொல்லு. முதல் குழந்தையப்பத்தா அவனால உன்னோட பக்கத்துல இருக்க முடியல. இப்பையாச்சும் இருக்கு விடு. இந்த‌ மாறி நேரத்துல அப்பாவா அவனுக்கும் சில ஆசைகள் இருக்கும் அத அவனுக்குக் கொடுக்காம விட்டுடாத. " என்றவன்.


‌" இந்தச் சந்தோஷமான விசயத்த முதல்ல நா போய் மூர்த்தி பெரிப்பாட்ட சொல்றேன். அப்றம் மதி, பெரிம்மான்னு நிறைய பேருக்குச் சொல்லணும். எனக்கு நிறைய வேல இருக்கு. கொண்டாடணும்னுல. பாய். " எனக் கௌதம் மகிழ்ச்சியுடன் வெளியே செல்லவும் ரிஷி வரவும் சரியாக இருந்தது. கதவை மூடிவிட்டு வந்தவன் அவளை நோக்கி வர‌ தலை குனிந்து கொண்டாள் ஹரிணி. வெட்கத்திலா!. இல்லை சொல்லாமல் விட்ட குற்ற உணர்ச்சியிலா!.


தங்களின் முதல் குழந்தை கருவுற்றதிலிருந்து பிறக்கும் வரை ஹரிணி ரிஷியிடம் எதையும் சொன்னது இல்லை. அதன் அசைவு. ஸ்கேன் ரிப்போர்ட் என எதையும் அவனிடம் காட்டியது இல்லை. அவனாகவே வந்து வலுக்காட்டாயமாக வயிற்றில் இருக்கும் தன் குழந்தையுடன் பேசிச் செல்வான். தாயும் தந்தையுமாய் இணைந்து தங்களின் குழந்தையின் வளர்ச்சியை அனுபவித்தது போல் அனுபவிக்கவில்லை இருவரும். இப்போதும் கருவுற்றிருப்பதை மறைத்து விட்டாள். அது ஹரிணிக்கு பிழையாகப் பட்டது.


உள்ளே வந்தவனின் முகம் பார்க்க இயலாது நிலம் நோக்கி நிற்க. "ஸாரி பாவா. நா சொல்லவே கூடாதுன்னு நினைக்கல. ஊருக்குப் போய்டு வந்ததுக்கு அப்றம் சொல்லலாம்னு தா. ஸாரி." எனப் பேசியவளை வந்து இதமாய் அணைத்தான் ரிஷி.


அவளின் மதி முகத்தைத் தன் மார்பில் பதித்தவனின் கரம் தன் மகவை தேடி சென்றது. மிகவும் மெதுவாக அதைத் தீண்ட, பெண்ணவளின் தேகம் சிலிர்த்தது, அவனின் மெல்லிய தீண்டலில்.


"கௌதம் கூட போகக் கூடாதுன்னு நீ சொல்லிடுவியோன்னு பயந்து தா பாவா. ஸாரி பாவா‌‌. " என்றவளின் இதழை மூடியவன்.‌


"அவ விட உன்ன நல்லா பாத்துக்க இந்த உலகத்துல வேற யாரால முடியும் சொல்லு. நீ அவனோட இங்க வந்தல எனக்கு எவ்ளோ சந்தோஷம்னு தெரியுமா. " என்றவன் அவளைக் கட்டிலில் அமர வைத்து அவளின் மடியில் தலை சாய்த்தான்.


" ஸாரி கிட். நா உங்கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு எத்தன தடவ மன்னிப்பு கேட்டாலும் மாத்தவும் மறக்கவும் முடியாது. ஸாரி. எனக்கு எதாவது தண்ட தாயேன். ப்ளிஸ். " என அவளுடன் முதலில் உறவைக் கொண்டதை குறித்து வருந்திப் பேச,


" நா அத நினைக்கவே விரும்பல பாவா. நீயும் நினைக்காத. ம். " என்றவள் அவனின் கேசம் வருடிவிட்டு,


"அகில் வயித்துல இருந்தப்போ வாமிட் அதிகமா வரும் பாவா. இப்ப அப்படி இல்ல. அப்ப கன்ஃபாம் பொண்ணு தா‌. உன்ன மாறியே பூன கண்ணு வச்ச பொண்ணு. நீ என்ன சொல்ற. பொண்ணு தான பிறக்கும். "


" எனக்குத் தெரியாது கிட். பட் எந்தப் பேபி பிறந்தாலும் நீ தா என்னோட ஃபஸ்ட் பேபி. " என அவளின் நெற்றியில் முத்தமிட, பேச்சி திசை மாறி இருந்தாலும். அவர்களின் முதல் கூடல் அவ்வபோது நினைவில் வந்து தான் நிற்கும். கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மிகப் பெரிய தவறு. ஆனாலும் ஹரிணி அதை பற்றிப் பேசவே விடமாட்டாள். எவ்வித நெருடலுமின்றி தாம்பத்திய வாழ்வில் இணையும் அவளின் செயல் ரிஷிக்கு வியப்பை தந்தது. 


அத்தோடு ஒரு தவறுக்கு மன்னிப்பை விடப் பெரிய தண்டனை கிடையாது என்பதை ரிஷிக்கு உணர்த்தியது.


மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு மகன் பிறந்த கதையை‌ கேட்கையில், அந்த இரவு விடியா இரவாகிப் போகாதா என்றிருந்தது ரிஷிக்கு.


காலை வேலை விக்னேஷின் சத்தம் அதிகமாகக் கேட்க, கண்விழித்தாள் ஹரிணி. கைகள் தன் கணவனைத் தேட, எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவன் கிடைக்கவில்லை. எங்கேயென எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர,


விக்னேஷ் மனோவை திட்டிக் கொண்டு இருந்தான்.‌


" உன்ன நைட் ஹாஸ்பிடல்ல தான தங்க சொன்னேன். ஏ போகல. " விக்னேஷ்.


"மச்சான் அந்த வெங்கட்ராமன் தா தொரத்தி விட்டாரு, நாங்க பாத்துக்கிறோம்னு. ஜீவா சொல்லு ஜீவா நீ இவனுக்கு. " மனோ.


"நண்பா கொஞ்சம் புரிஞ்சிக்க.‌ நம்மல இந்தக் கேஸ்ஸ விட்டு விலகி இருக்கச் சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர் வந்திருக்கு. அப்ப நாம இன்வால் ஆனா தப்பு." ஜீவா.


" இதுல இருந்தே தெரியுது. என்னமோ பெருசா இருக்குதுன்னு. அது வெளில தெரியக் கூடாதுன்னு தா விரட்டுறானுங்க." விக்னேஷ்.


" என்னாச்சி விக்கி. ஏ டென்ஷன். " ஹரிணி.


"கதிரேசன ஹாஸ்பிடல்ல காணும். அவன யாரோ கடத்திட்டு போயிருக்கணும். கொல பண்ணிருக்க கூடச் சான்ஸ் இருக்கு. " மனோ.


"ஆனா அவரு போலிஸ்கு பயந்து தப்பிச்சி போய்ட்டாருன்னு இது சொல்லுதே. "என செய்தித்தாளைக் காட்டினாள் பவதா.


அது குறிஞ்சி மலர் நாளிதழ். அதை வாங்கி படித்த ஜீவா பொய் என்றான் ஆணித்தனமாக. செய்தித்தாளில் வந்த அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்றான் அவன்.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 29


விழி 31

 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...