அத்தியாயம்: 31
தலைமறைவு…
ஊட்டியில் இரட்டை கொலைகளைச் செய்த கதிரேசன் தலைமறைவு. சமீபத்தில் இறந்து போன இளம் பெண் சுருதி மற்றும் ஆரோக்கியராஜின் தற்கொலைகள் கொலையென நிறுபிக்கப்பட்டு, அதற்குக் காரணமான கொலையாளியான கதிரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மகனின் மருத்துவ செலவுக்குப் பணம் தேவைப்பட்ட நிலையில் சுருதி மற்றும் ஆரோக்கியத்தின் நண்பனான கதிரேசன் இருவரையும் கதிரேசனை நாமினியாகக் கொண்டு காப்பிடு எடுக்க வைத்து அவர்களைக் கொலை செய்து காப்பீட்டு பணத்தை பெற்றுள்ளார்.
இரு கொலைகள் மட்டுமல்லாது மேலும் இது போன்ற பல கொலைகள் செய்திருக்கலாமென சந்தேகமடைந்த போலிஸ்ஸார் காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில் நேற்று குற்றவாளி சென்ற ஜீப் விபத்திற்கு உள்ளானது. மனிதாபி மானத்துடன் மருத்துவமனைக்கி அழைத்துச் செல்லப்பட்ட கதிரேசன், அங்குப் போலிஸ்ஸாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டுத் தப்பி ஓடியுள்ளான். மருத்துவமனைக்கி பின் புறம் இருந்த பைப் வழியே பள்ளத்தாக்குகளில் இறங்கி சென்று காட்டிற்குள் தலைமறைவாகி இருக்கலாம் எனப் போலிஸ்ஸார் சந்தேகப்படுகின்றனர். அவனை பிடிக்கப் போலிஸ் ஸார் தீவிர முயற்சியும் செய்து வருகின்றனர்.
அது குறிஞ்சி மலர் நாளிதழில் வெளியான செய்தி.
" விக்கி, தயானந்தத்துக்கிட்ட பல வர்ஷமா வேல பாத்தவரு கதிரேசன். ஆனா அத பத்தியோ இல்ல கதிரேசன் வேல பாத்த காப்பகத்த பத்தியோ எதுவுமே போடலையே. ஏ?. " ஹரிணி சந்தேகமாக,
"ஆமால்ல. " மனோ.
"அவெ குழந்தைகள் காப்பகத்துல வேல பாக்குறானா இல்ல மிருகக் காட்சி சாலைல வேல பாக்குறானா. ஏன்னா பைப் இறங்கி தப்பிச்சிருக்கானே. மலக்கொரங்குக்கு தூரத்து சொந்தக்காரனா இருப்பான். " கௌதம்.
"ஆரோக்கிய ராஜ்ஜ பைப் ஏறி தா கொல பண்ணவனுக்கு இறங்க தெரியாதா என்ன. " விக்னேஷ்.
" டேய் இது பொய் டா. இதுல போட்டிருக்குற எதுவுமே உண்ம கிடையாது. கதிரேசனால பைப் ஏறவோ இறங்கவோ முடியாது. அப்றம் எப்படி தப்பிச்சிருப்பான். " ஜீவா.
" ஏ அவனுக்கு உயரம்னா பயமா. " ஹரிணி.
" ம்ச்... இதுல போட்டிருக்க மாறி அவெ தப்பிச்சிருக்க முடியாது. " ஜீவா.
"என்ன நண்பா சொல்ற." விக்னேஷ்.
"அவனுக்கு என்ன கால்ல கட்டியா. ஏற இறங்க முடியாம இருக்க. " மனோ.
"கட்டி வர்றதுக்கு முதல்ல கால் இருக்கணுமே. அவனுக்குத் தா ஒரு கால் பாதமே கிடையாதே. அப்றம் வலது முழங்கை மொத்தமும் மெட்டல் ப்ளேட். உடச்ச கையையும் காலையும் வச்சிட்டு எப்படி பைப் ஏறுவான். " என்றான் ஜீவா.
'என்னடா சொல்ற. ' என்பது போல் அனைவரும் பார்க்க,
"உனக்கு எப்படி தெரியும். அந்தாளே வந்து 'தம்பி தம்பி என்னால பைப் ஏற முடியாது தம்பி. கையும் காலும் சரியில்ல. என்ன அந்தப் பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுடுங்க தம்பி. நா தப்பிச்சி போய்கிறே.' ன்னு சொன்னானா. உங்கிட்ட யாரோ பொறலிய பரப்பி விட்டிருக்கானுங்க. " மனோ நம்பாமல்.
" பொறலி இல்ல நண்பா. என்னோட ரெண்டு கண்ணால பாத்தேன். ஒரு கால் பாதத்த கலட்டி வச்சதையும் கை நார்மலா இல்லாம கொஞ்சம் சூம்பி போய் இருந்ததையும் நா பாத்தேன். டாக்டர் கிட்ட பத்து வர்ஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல கையும் காலும் போயிடுச்சின்னு சொன்னான். அவன எங்க முன்னாடி தா டாக்டர் செக்கே பண்ணாரு.
சுத்தி போலிஸ்காரனுங்க பந்தோபஷ்த்துக்கு இருக்கும்போது அவனால உடச்சி போன கைய வச்சி பைப் பிடிச்சி தப்பிச்சிருக்க முடியாது. அவெ உயிரோட இருந்தா ஆபத்துன்னு நினைக்கிற கும்பல் தா இத பண்ணிருக்கனும்." ஜீவா உறுதியாக.
விக்னேஷின் கண்ணில் கதிரேசனின் உருவம் வந்து நின்றது. அன்று தேவாலயத்தில் பார்த்த போதும் சரி அதன் பின்னும் சரி வேட்டி சட்டை தான். சட்டையின் கையை மடித்து விடும் பழக்கம் அவருக்கு இல்லை. எப்பொழுதும் நீளமாக, கரத்தை மூடிய படி தான் இருக்கும். வேட்டியை மடித்து கட்டினாலும் காலில் செருப்பு அணிந்து பார்த்ததில்லை. ஷூ தான் போட்டிருப்பார். அதுவும் சின்ன சாக்ஸ் உடன். அப்படி எனில் அவரால் எப்படி மாடியில் இருந்த ஆரோக்கியராஜின் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று அவரின் தூக்க மாத்திரைகளை மாற்றி இருக்க முடியும்.
அதுமட்டுமல்ல சுருதியும் நல்ல ஆரோக்கியமான பெண்தான். அவளின் உடல் கிடைத்த இடத்தை ஆராய்ந்தபோது, தவறியோ அல்லது தள்ளியோ விடவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அதாவது சுருதியை யாரு தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளனர். கதிரேசனின் நிலையை வைத்துப் பார்த்தால் தூக்கி வீசுவது சாத்தியப்படாத ஒன்று.
இதுவரையில் சந்தேகமாக இருந்தது இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. இரண்டு கொலைகளையும் கதிரேசன் செய்யவில்லை என்பது. செய்தவன் யார் என்று கதிரேசனுக்கு நன்கு தெரியும். அதனால் தான் கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. கதிரேசனை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் இல்லையே அவனும் கொலை செய்யப் படலாம்.
கதிரேசன் இல்லை எனில் வரிசையாகக் கொலைகள் நடக்குமே தவிர, யார் கொன்றது என்பதை மட்டும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். எனவே விக்னேஷ் மேலிடத்திற்கு ஃபோன் செய்து நடந்ததை கூறி காவலர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கச் சொன்னான்.
"யாரா இருக்கும் விக்கி. கதிரேசன கொல பண்ற அளவுக்கு. " ஹரிணி.
" அவெ வாய திறந்தா சிக்கிடுவோம்னு யார் வேணும்னாலும் பண்ணிருக்கலாம். அவனையும் கொல பண்றதுக்குள்ள கண்டு பிடிக்கணும்." விக்னேஷ்.
" கதிரேசனோட பையன் இப்ப எங்க. ஒருவேல மகன பாக்க போயிருக்கலாம்ல. " பவதா.
" அந்தப் பையன் அன்னை காப்பகத்துல இருக்கான். நேத்து நைட் தா அங்க போனான். அதுவரைக்கும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல தங்க வச்சிருந்தோம். உடம்பு சரியில்லாத பையன்னு. " மனோ.
" ஏ கூட்டீட்டு போணும். கவர்மெண்ட்லயே நல்லா ட்ரீட்மெண்ட் பாக்குறாங்களே. " ஹரிணி.
"அந்தப் பையனுக்கு முதல்ல இருந்து ட்ரீட்மெண்ட் பண்ணது தயானந்தத்தோட பையன் டாக்டர் சந்திர போஸ் தா. அவரும் அவரோ சில வெளிநாட்டு டாக்டர் ஃப்ரண்டும் காப்பகத்துல இருக்குற எல்லா குழந்தைகளையும் மாசத்துக்கு ஒருக்க செக்கப் பண்ணுவாங்கலாம். நாளைக்கி செக்கப்ன்னு சொல்லிக் காப்பகத்துல இருந்து வந்து கூட்டீட்டு போனாங்க. " விக்னேஷ்.
"யாரு சந்திர போஸ். இதுவரைக்கும் அந்தப் பீஸ்ஸ இன்ரோவே குடுக்கலேயே எனக்கு. " ஹரிணி.
" உனக்குப் புதுசு தா. நாங்களும் அவன நேர்ல இதுவரைக்கும் பாத்தது இல்ல. " மனோ.
" கதிரேசன் காப்பகத்துக்குத் தா போயிருப்பான். மனோ உனக்கு நேத்து ஹரிணி சொன்னது நியாயம் இருக்கா. " விக்னேஷ்.
" எதுடா. எதெதுவோ பேசுறோம். எல்லாத்தையும் நியாயம் வச்சிக்க முடியுமா. " மனோ.
" அதான்டா குறிஞ்சி மலர் நியூஸ் பேப்பருக்கும் அன்னை காப்பகத்துக்கும் எதாவது லிங்க் இருக்கான்னு. " விக்னேஷ்.
" இப்ப என்ன. நா உடனே கிளம்பனும். அவ்ளோ தான சோத்த வயித்துக்குள்ள இறக்கிட்டு போகவா. இல்ல போற வழில ஆடு மாடு மாறி இலதளை ய மேஞ்சிட்டு போகவா. " என்றவனை விக்னேஷ் முறைக்க,
" ம்... போற வழில யார்கிட்ட யாது பிச்ச எடுத்துக்கிறேன். " என சொல்லிக் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.
" நீ என்ன நண்பா யோசிக்கிற. " ஜீவா.
" சுருதிய எதுக்காகக் கொல பண்ணணும். ஏன்னா கதிரேசன் இன்சூரன்ஸ் பணத்துக்காகத்தா செஞ்சாருன்னு நினைச்சோம். இப்ப அது இல்லனா. ஏ பண்ணணும். யாரு பண்ணணும். பயங்கற கன்ஃயூஷனா இருக்கு. நீ இப்ப காப்பகம் போ. கூட வெங்கட்ராமன வச்சிக்க. ஹரிணி. "
" பவதா வ பத்திரமா பாத்துக்கணும். ஓகே வா. நீ ஏ நாங்க வீட்டுல தங்குறோம்னு சொன்னதுக்கு சம்மதிச்சன்னு இப்ப தா புரியுது. " என்க, மூவரும் கதிரேசன் தேடிச் சென்றனர்.
நேற்றைய இனிய நினைவுகளில் மிதந்த படி தன் கணவனுக்கு ஃபோன் செய்தாள் ஹரிணி. ஆனால் அது எடுக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, 'நீங்கள் அழைக்கும் நபர் தற்சமயம் உங்கள் அழைப்பை ஏற்றுக்கும் நிலையில் இல்லை. ' என்ற பதில் தான் வந்தது. குழம்பிய படியே அமர்ந்திருந்தவள் கண்களுக்குப் பார்கவியின் கேஸ் ஃபைல் தெரிந்தது, 'ச்ச. எதுக்காக வந்தோமோ அத மறந்துட்டு கண்டதையும் பண்ணிட்டு இருக்கோம். ' என ஃபைலை படிக்கலானாள்.
அதில் புதிதாகத் தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே தெரிந்தவை தான் இருந்தது. வீடியோ ஆதாரம் என்றார்களே அது இருந்தது. அதை போட்டுப் பார்க்கும் முன் கௌதம் வந்துவிட பார்க்காமலேயே எழுந்து அவனுடன் சென்று விட்டாள் ஹரிணி.
______________
காலைப் பன்னிரண்டு மணி.
கோவை பன்னாட்டு விமான நிலையம்.
சென்னை போல் பரபரப்பாக இல்லை என்றாலும் கூட்டமாகக் தான் இருந்தது. கையில் ஒரு பதாகையை தாங்கியபடி நின்று கொண்டு இருந்தார் தன்செயன்.
யாருக்காகவே வெய்ட்டிங். அவர் மட்டும் அல்ல. பார்பி டால் எனச் செல்லப் பெயர் வைத்த மடோனாவும் தான். என்ன அவள் பார்க்கிங் ஏரியாவில் காரில் அமர்ந்திருந்தாள். தன்செயன் பயணிகள் வெளியே வரும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார்.
சென்னையிலிருந்து அப்போது தான் ஒரு விமானம் தரையிறங்கி இருந்தது. அதனால் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருக்க, தன்செயன் தாங்கி நின்ற பதாகையின் முன் வந்து நின்றான் ஒரு இளைஞன். இருபத்தி ஐந்து வயது இருக்கும். மாநிறம். நல்ல உயரம். வெட்டி விடாது அரை அடி நீளம் தன் சிகையை வளர்ந்து வைத்திருந்தான் அவன். ரோகித்.
" குட் மார்னிங் அங்கிள். ரொம்ப நேரமா வெய்ட் பண்றிங்களா. " எனப் புன்னகையுடன் நின்றான் ரோகித்.
" நல்லாருக்கியா ரோகித். " என வாஞ்சையுடன் தலை தடவி கேட்டார் அவர். வாஞ்சை இருக்காதா வருங்கால மருமகன் அல்லவா. தன் இரண்டாவது மகளுக்கும் ரோகித்துக்கும் விரைவில் திருமணம் வேறு நடக்க உள்ளது. உபசரிப்பு சரி இல்லை என்றால் மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு சென்று விடப் போகிறார்.
" ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ. அப்படியே தா இருக்கேன் மாமா. மாறவே இல்ல. " என்க, தன்செயன் புன்னகைத்தார்.
"அப்பா எங்க ரோகித். " எனக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சந்திரபோஸ் வந்தார்.
அவர் மட்டுமல்ல சில வெள்ளைக்கார துரைகளும் வந்தனர். நான்கு ஆண்கள். வயது நாற்பதை தாண்டி இருக்கும். இரு இளம் பெண்கள். அதில் ஒருத்தி தான் தன்செயனின் மகள். அனைவரும் மருத்துவர்கள். பெரிய பெரிய லக்கேஜ் உடன் வந்தவர்களை வரவேற்று காரில் ஏற்றிச் சென்றான் ரோகித்.
சந்திரபோஸ்ஸும் தன்செயனும் தனியாக வேறொரு காரில் ஏறினர். அவர்களுக்கு முன் கலங்கிய விழிகளுடன் மடோனா வந்தாள். சந்திர போஸ்ஸிடம் தனித்து பேச வேண்டும் என்றாள். அவளின் தம்பியின் உடல் நிலைகுறித்து.
" நிக்கி க்கு சரியாகிடுமா டாக்டர் போஸ்?. " என்க.
"Don't worry my child. நாங்க பாத்துக்கிறோம். "
" என்னோட லைஃப் என்னோட ப்ரதர் இல்லாம முழுமை அடையாது. எவ்ளோ செலவுனாலும் பரவா இல்ல. எனக்கு அவனோட உயிர் தா முக்கியம். உங்களால அவனுக்குச் சரியான ட்ரீட்மெண்ட் குடுத்து சரிபண்ண முடியும்னு என்னோட அப்பா நம்புறாரு. இப்ப எங்களுக்கு இருக்குற ஒரே நம்பிக்க நீங்கத் தா டாக்டர் போஸ். " என இதயத்தில் பிரச்சினையுள்ள தன் தம்பிக்காக அவரிடம் பேசினாள் மடோனா.
"இப்ப எங்கூட வந்திருக்குற எல்லாருமே ஸ்பெஷலிஸ்ட் தா மை சைல்ட். நிக்கோட ஹெல்த்த பத்தி தனா டெய்லியும் ரிப்போர்ட் பண்ணிட்டு தா இருக்காரு. இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. இனியும் இருக்காது. ஏன்னா இதுவரைக்கும் நாங்க பாத்த கேஸ் எதுவுமே ஃபெயிலியர் ஆனது இல்ல. எங்களுக்கு ஹார்ட் ட்ராஸ்ப்ளான்ட் ஆப்பரேன் கூட ஜஸ்ட் சுவிங்கம் சாப்பிடுற மாறிப் பழகி போன ஒன்னு. சோ இதுல அவநம்பிக்க படுறதுக்கு எதுவுமே இல்ல. இன்னைக்கி நீயும் நிக்கும் நைட் ரெடியா இருங்க. " என ஆறுதலாகப் பேசி மடோனாவை அனுப்பி வைத்தார் போஸ்.
நிக்கின் பாதிக்கப்பட்ட இதயத்தை எடுத்து விட்டு மாற்று இதயம் பொருத்தத்தான் மருத்துவர் குழுவுடன் வந்துள்ளார் சந்திர போஸ். அதற்கு எதுக்கு இரவு தயாராக இருக்கச் சொல்கிறார். ஒருவேளை நல்ல நேரம் பார்த்து அறுக்கப் போகின்றாரோ.
அவர்களின் பேச்சிலிருந்து நிக்கின் இதயத்திற்கு பதில் யாருடைய இதயத்தை உள்ளே வைத்துத் தைக்கப் போகின்றனர் என்று தான் தெரியவில்லை. ஆனால் இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்ய போகின்றனர் என்று தெரிகிறது.
"என்ன தனா. எல்லாம் சரியா போகிட்டு இருக்கா. நாளைக்கி கேம்ப் இருக்கு. அத கேன்சல் பண்ண சொல்லிடு. நைட் நிக்கிலோட கேஸ்ஸ முடிச்சிட்டு அதுக்கு அப்பறம் பாத்துக்கலாமா. " எனத் தோளில் தட்டி கேட்க…
"ம். ஓகே சந்திரா. நீ சொல்ற அன்னைக்கே வச்சிக்கலாம். எல்லாம் தயாராத்தா இருக்கு. ஆனா நீ மடோனா கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுறது பெட்டர். ஏன்னா உண்ம தெரிஞ்சா பிரச்சன பெருசா இருக்கும். "
"அதா தம்பி உயிர்தா முக்கியம்னு சொல்லிடுசே. அவனுக்குப் பதிலா யார் செத்தாலும் கவலப்படாது." என்றவர் நிக்கின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்தார்.
தன்செயனும் போஸ்ஸும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். எந்தச் செயல் செய்தாலும் சேர்ந்தே தா செய்வர். சந்திரபோஸ் இப்போது லண்டனில் Royal Hospital என்ற பிரபலமான மருத்துவ மனையில் வேலை பார்க்கிறார். இதய மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மருத்துவர் அவர். தன்செயனும் அங்குத் தான் முதலில் பணி புரிந்தார். ஆனால் அவர் செய்த சிறு பிழையால் இரு உயிர்கள் அநியாயமாகப் பறிபோனது. எனவே அங்குப் பணிபுரியும் மருத்துவர் என்ற வாய்ப்பை இழந்தார்.
ஆனாலும் போஸ் அவர்களிடம் பேசியதால் தென்னிந்தியாவில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மருந்துவமனையில் பணியாற்றி வந்தார் தன்செயன். சில ஆண்டுகளுக்கு முன் அங்கும் அவரின் சிகிச்சை காரணமா உயிரிழப்பு ஏற்படவே தன்செயன் கார்டியாலஜிஸ் என்ற நிலையிலிருந்து ஆலோசகர் என்ற நிலைக்குக் கீழ் இறக்கப்பட்டார்.
கையில் ஸ்டெதஸ்கோப்புடன் வெள்ளை கோர்ட்டு போட்டுச் சுற்றிய தன்செயன். பின்னாளில் எடுப்பு வேலைகளுக்கு ஆளானார். அதனால் இழந்த தன் பழைய நிலையை அடைய எத்தனை பேரைக் கொன்னாலும் பரவாயில்லை. தான் ஒரு சிறந்த கார்டியாலஜிஸ் என்று Royal Hospital லின் ஓனர் Daniel Fernandoக்கு நிறுபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
பாவம் அந்த அரை வேக்காட்டு மருத்துவன் கையில் சிக்கப் போகும் சோதனை கூடத்து எலி நம்ம பார்பி டால் தம்பி நிக்கில் செபாஸ்டியன் தா போலும்.
‘பையன் பாக்க வெள்ளையா இருக்கையும் கேக்குன்னு நினச்சி வெட்டப் போறானுங்க. அதுவும் பீஸ் பீஸ்ஸா’.
ஊட்டிக்கி இருவரும் காரில் சென்று கொண்டிருக்க. மழை ஏறும் முன் ஒரு காவலர் உடை அணிந்த ஒரு காவலர் கை நீட்டி நிப்பாட்டச் சொன்னார். அவரின் தோளில் கிடந்த நட்சத்திரங்கள், பெரிய அதிகாரி அவர் என்று சொல்லியது. கார் நின்றது புன்னகையுடன் அவர் காரில் ஏறிக் கொள்ள, கார் வேகமெடுத்தது.
" என்ன சந்திரா, என்ன விட்டுட்டு பெரிய பெரிய வேலை எல்லாம் பாத்திட்டு இருக்க போல. " உமாபதி. கோவையில் உயர்நிலை காவல் அதிகாரி.
" உன்கிட்ட சொல்லாமா உன்னோட ஏரியால எதாவது பண்ண முடியுமா. ஹா. " எனப் போஸ் சிரிக்க,
" கதிரேசன் தப்பிச்சிட்டான்னு பேப்பர்ல நியூஸ் வந்திருக்கு. அது உனக்குத் தெரியுமா உமா. " தன்செயன்.
" போடச் சொன்னதே நா தா. என்னோட அக்கா வீட்டுக்காரெனுக்கு கம்ப்யூட்டர் மூள. சொன்னத அப்படியே பிழையில்லாம செஞ்சிட்டான். " எனச் சிரித்தார் உமாபதி. குறிஞ்சி மலர் நாளிதழின் சொந்தக்காரான போஸ்ஸின் அத்தையின் மகன் உமாபதி.
" ம். செஞ்சிருக்கான். ஆனா கதிரேசன் இன்னும் உயிரோ தான இருக்கான். " போஸ்.
" என்ன மச்சான் சொல்ற. அவன போட்டுத்தள்ளியாச்சின்னு நம்ம பசங்க சொன்னாங்களே. " உமாபதி.
" இல்ல. கதிரேசன் தப்பிச்சான். நம்ம கிட்ட இருந்து. " போஸ் உமாபதியை முறைத்துக் கொண்டே கூறினார்..
" இல்ல மச்சான். அவனால நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நா பாத்துக்கிறேன். ஊட்டில இருக்குற எல்லா ஸ்டேஷனுக்கும் இப்பவே. இப்பவே சொல்றேன்." என்றார் பயந்த குரலில். அவனை ஓங்கி கன்னத்தி அறைந்த போஸ். அவன் தூப்பாக்கியை உறுகி அவனின் நெற்றி பொட்டில் வைத்து,
"மழைக்கி கூட ஸ்கூல் பக்கம் போகாத உன்ன போலிஸ்ஸ மாத்திருக்கேன். எதுக்குன்னு தெரியுமா. நா பண்ற எந்த ஒரு குற்றமும் சட்டத்துக்கு ஜனங்களுக்கும் தெரியவிடாம நீ போட்டிருக்குற காக்கி சட்ட மறைக்கும்கிறதுக்காகத் தா. அதுல ஒரு சின்னத் தப்பு நடந்தாலும். நீயும் உன்னோட ஒட்டு மொத்த குடும்பமும் ஜெயில்லுக்கு தா போவிங்க. கவர்மெண்ட் கட்டி வச்சிருக்குற ஜெயிலுக்கு இல்ல.
ஐஸ்லாந்துல எனக்குச் சொந்தமான தீவுல நா கட்டி வச்சிருக்குற ஜெயிலுக்கு. அங்க உன்னோட உடம்புல இருக்குற சதைய கிழிச்சி உனக்கே சாப்பாட போட வேண்டி வரும். அத எடுத்துத் திங்க ஸ்பூனுக்கு பதில்லா உன்னோட எலும்பையே நீ யூஸ் பண்ணுவ. " என்றான் போஸ்.
" அந்தப் பொண்ணு சுருதி கேஸ் கோவை போலிஸ்ட்ட இருந்த வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. எப்ப சென்னை போலிஸ் உள்ள வந்துச்சோ. அப்போதா கதிரேசன் மாட்டுனான். இப்பையும் அவனுங்க தான் தேடிட்டு இருக்கானுங்க. கதிரேசன் அவனுங்க கைல மாட்டுனா. கண்டிப்பா நம்ம பேர் லீக் ஆகும். " தன்செயன்.
"இல்ல அப்படி நடக்காது. நா. " உமாபதி.
" எனக்கு ரீசன் தேவையில்ல உமா. அந்த மெட்ராஸ்காரனுங்க இங்க இருக்க கூடாது. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோன்னு எனக்குத் தெரியாது. அவனுங்க இன்னைக்கே ஊர விட்டுப் போனும். புரியுதா.. " எனக் கண்களை உருட்டி விழிக்க. உமாபதி ஃபோன் செய்தார்.
அடுத்து ஒரு மணி நேரத்தில் விக்னேஷிற்கும் அவனின் நண்பர்களும் உத்தரவு வந்தது. ஊட்டியை காலி செய்து விட்டு வருமாறு.
அப்பக் கதிரேசன இவனுங்க கைக்கும் சிக்கலன்னா வேற யாரு கைல சிக்கிருப்பான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..