அத்தியாயம்: 32
" செல்லாது செல்லாது. நீங்கக் கள்ளாட்ட ஆடுறீங்க. நா சின்னப் பொண்ணுன்னு என்ன ஏமாத்த பாக்குறீங்க. நா வருங்கால வக்கீல். போலிஸ் காரெ பொண்டாட்டி வேற. என்ன ஏமாத்த முடியாது. மறுபடியும் ஆடலாம். " எனக் கையில் சீட்டு கட்டுகளுடன் கத்திக் கொண்டு இருந்தாள் பவதா.
" ஏய்!. ஒரே நம்பர நாலு பூலையும் சேக்கலாம். இதுக்கு பரலான்னு பேரு. ஜப்பான்னு கூடச் சொல்லலாம். இது ஆட்டத்துல உண்டு. " கௌதம்.
"இல்ல. கிடையாது. நாம விளையாடுறது ரம்மி இல்ல. செட்டு. அதுல வரிசையா மட்டும் தா நம்பர் சேக்கணும். நீங்கச் சொல்றது புதுசா இருக்கு. ஏய் ஹரிணி சொல்லு கௌதம் அண்ணாக்கிட்ட. " என ஹரிணி உசுப்ப,
"டார்லிங்! இந்தப் பொண்ணு பயங்கற ஃப்ராடா இருக்கும் போல. அது ஜெயிக்கணும்னு புது புது ரூல் போடுது. போடுற ரூல ஒழுங்கா ஃபாலோவும் பண்ணாம வக்கிலாம்மா மாத்தி மாத்தி பேசுறாப்ல. என்னன்னு கேளு. " என இருவருக்கும் இடையில் பந்தாடப்பட்டது ஹரிணியின் பெயர். ஆனால் ஹரிணியோ எதையும் கவனியாது பேப்பரும் பென்சிலும் கையுமாக அமர்ந்திருக்க, பவதா கோபமாக வந்து பென்சிலை பிடுங்கினாள்.
" காது என்ன கோளாறா உனக்கு. எவ்ளோ நேரம் கத்துறோம். திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிற." என்க, ஹரிணியும் கோபமாக எழுந்து அவளின் கையில் இருந்த சீட்டுகளை வீசி வீட்டில் விதைத்தாள். இருவரும் நடுவீட்டில் நின்று சண்டை போட்டுக் கொண்டு இருக்க, கௌதம் கை தட்டி சண்டை போடும் படி உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தான்.
" ஏ நடு வீட்டுல நின்னு சண்ட போட்டுட்டு இருங்கிங்க. அறிவில்லையா உங்க ரெண்டு பேருக்கும். " எனக் கத்தியபடி விக்னேஷ் உள்ளே வந்தான். அவனின் கத்தலில் இருவரும் அப்படியே நின்றனர். ஏனெனில் அவன் கேஸ் விசயமாகச் சென்றால் வீடு திரும்ப நள்ளிரவு ஆகும் என நினைத்ததற்கு மாறாக இருட்டும் முன்னரே வந்துவிட்டானே அதான்.
" என்னங்கடா இவ்ளோ சீக்கிரமா வந்துட்டிங்க. இருட்டீடுச்சி விடியையும் போய்த் தேடலாம்னு வீட்டுக்கு வந்துட்டீங்களாக்கும். " எனக் கௌதம் கேலி செய்ய, அவனை முறைத்தான் விக்னேஷ்.
'பின்ன அவனே கோபத்துல கொந்தளிச்சி போய் வந்திருக்கான் அவன போய்க் கேலி பண்ணா முறைக்கத் தா செய்வான். '
" லக்கேஜ் பேக் பண்ணு பவதா நாம சென்னைக்கி கிளம்புறோம். " என்க, என்னாச்சியென பவதா கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை. அவனின் கோப முகம் கண்டு அப்படியே நின்றாள்.
" ஏ விக்கி?. "
" ஏ நிக்கிற. சொன்னது கேக்கலையா. உடனே பேக் பண்ணுன்னு சொன்னேன்." என ஹரிணிக்கு பதிலாகப் பவதாவிடம் கத்தியவனை ஜீவா வந்து கன்ட்ரோல் செய்தான்.
"டேய் தங்கச்சிட்ட ஏன்டா கோபத்த காட்டுற. பொறுமையா இரு. " மனோ.
"எப்படிடா இருக்க முடியும். எத்தன நாள் இவ கூடக் கூட இருக்காம. அழஞ்சி திரிஞ்சி குற்றவாளி யாருன்னு கண்டு பிடிக்கப் போராடுனா… இவனுங்க அசால்ட்டா விட்டுடுட்டு வான்னு சொல்றானுங்க. எப்படி முடியும்?. " எனக் கத்தினான்
" நம்மகிட்ட சொன்னத நாம செஞ்சிட்டோம். கதிரேசன் தா கொலகாரன்னு கண்டுபிடிச்சி உள்ள தள்ளியாச்சி. அதோட நம்ம டியூட்டி முடிஞ்சது. அவ்வளவு தா." ஜீவா.
"டேய். அந்தக் கதிரேசன் கொல காரன் கிடையாது டா. தப்பான ஒருத்தன பிடிச்சி குடுத்திருக்கோம். உண்மையா யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்க வேண்டாமா?. " விக்னேஷ்.
" மறுபடியும் இந்த மாறி ஒரு கொல நடக்கும். அப்ப நம்ம கிட்ட இந்தக் கேஸ் வந்துச்சின்னா பாத்துக்கலாம். விடு மச்சான். " மனோ சொல்ல, கோபமாக அறைக்குள் சென்று கதவை மூடினான். பவதா பின்னாலேயே சென்றாள்.
" என்னாச்சி ஜீவா?. " ஹரிணி.
" ஒன்னுமில்ல. " ஜீவா, சொல்வதா வேண்டாமா என்ற தயக்கத்துடன்.
" ஒன்னுமில்லன்னா ஏங்கடா அமைதி படை போலிஸ் அதிரடி படை போலிஸ்ஸா மாறிக் கத்திட்டு போது. " கௌதம்.
"அது ஒன்னுமில்ல. நீங்க இத்தன நாள் ஊட்டிக் குளிர்ல உறைஞ்சி நின்னது போதும் சென்னைக்கு வந்து வெயில்ல குளிர் காய்ங்கன்னு கமிஷ்னர்ட்ட இருந்து உத்தரவு வந்திருக்கு. அதா மச்சான் கிளம்புறாப்ல." மனோ
" ஓ... சூரிய குளியலா!. அதா தோலு கருக்காம இருக்க சன் க்ரீம் லோஷன் தடவ போயிருக்கானா. " கௌதம்.
"சும்மா இரு கௌதம். ஏ திரும்பா வரச்சொன்னாங்க. கேஸ் இன்னும் கம்ப்லீட் ஆகலையே. கதிரேசன்கிட்ட விசாரிச்சாத்தா யாரு கொலையாளின்னு தெரியும்." ஹரிணி
"சில நேரம் இப்படிதா நடக்கும் ஹரிணி. போலிஸ்ஸால சொல்றத மட்டும்தா செய்ய முடியும். தன்னிச்சையா செயல்பட முடியாது. லிமிட்டடு பவர்ஸ் தா. ஹையர் ஆஃபிஸரோட ஆர்டர்ஸ்க்கு ஒபே பண்ணித்தா ஆகணும். " ஜீவா சிறு சலிப்பாக.
"ஓ.! அப்பப் போலிஸ்ஸா இல்லாம விசாரிக்கலாம்ல. " ஹரிணி.
" சென்னைல நகக்கடைல திருட்டு போயிருக்காம். அத வந்து விசாரிக்கச் சொல்லிருக்கானுங்க. நாங்க உடனே போய்யாகணும். " ஜீவா.
"ஒரு வேள முடிக்கிறதுக்கு முன்னாடி இன்னொன்னு. அத முடிக்கிறதுக்கு முன்னாடி இன்னொன்னு. இப்படி சொல்லிச் சொல்லியே எந்த வேலையையும் முழுசா முடிக்க முடியல. ச்ச... " மனோ.
"எங்க ப்யூட்டி ஒரு சொலவட சொல்லும். இந்த நாய் வாய வச்ச மாறி எல்லாத்துலையும் வைக்கக் கூடாதுன்னு. அது உங்களுக்குச் சரியா பொருந்தி இருக்கு. வாவ். ஐ மிஸ் மை ப்யூட்டி. " கௌதம் சொல்ல மனோ முறைத்தான்.
" விடு மனோ. நீ காப்பகத்துக்குப் போனியே ஜீவா எதுவும் கிடைச்சதா. "
" உள்ளையே விடல. தயானந்தத்தோட பையன் சந்திரபோஸ் வந்திருக்கானாம். எக்கச்சக்க கூட்டம்." ஜீவா.
" சந்திர..போஸ். ஹேய் அந்தப் புது கேரக்டர் யாருன்னு கண்ணுல காட்டுங்கப்பா. நா பாக்கவே இல்ல. " ஹரிணி.
" நீ பாக்குற அளவுக்கு ஆளு ஒன்னும் மிஸ்டர் இந்தியால்லாம் கிடையாது. இந்தியா இருந்து மிஸ்ஸான ஒருத்தென். தூரத்துல வச்சி பாத்தா நாசர் மாறி மூக்கு பொடப்பா இருக்கும். பக்கத்துல வச்சி பாத்தா நார் நாரா கிழிச்சி தொங்க விட்ட தோரணம் மாறி இருக்கும். மொத்தத்துல ஒரு விசித்திரமான அனிமல் அவெ. " கௌதம். அவன் தான் போஸ்ஸை பாத்திருக்கிறானே. அதா.
" இந்தா, இது கார விட்டு அந்தாளு இறங்கி உள்ள போகும்போது எடுத்த ஃபோட்டோ. நடுவுல நீல கலர் சட்ட. " எனத் தன் மொபைலை ஜீவா காட்ட, அதில் வெள்ளைக்கார மருந்துவர்கள் புடை சூழ நடந்து வந்துகொண்டிருந்தான் சந்திரபோஸ்ஸும் அவனின் மகன் ரோகித்தும்.
"இந்த நீல கலரா!. " என கை காட்டி கேட்க.
"ஆமா. அதுக்கு பக்கத்துல இருக்குறது அந்தாளோட பையன்." ஜீவா.
"இதுவா?. சந்திரபோஸ்!. இந்த நீல சட்டயா!. பாத்து சொல்லு." என மீண்டும் கேட்க,
" பாத்து சொல்லவா. ஏ உனக்கு ப்ளாக் அண்டு வெய்ட் மட்டும் தா கண்ணுக்குத் தெரியுமா என்ன?. அது தாம்மா நீல கலரு. " மனோ.
" கௌதம் நீ சொல்லு இது என்ன கலரு. "
"ஏய். நீ என்ன பிசாசு படத்துல வர்ற ஹீரோ மாறி என்ன கலர் என்ன கலருன்னு கேக்குற. அது நீலம் தாம்மா. "
"ம்ச். நல்லா பாத்து சொல்லு டா. " என மீண்டும் மீண்டும் கேட்க,
" ஹரிணி என்னாச்சி?. ஏ ஒரு மாறிக் கேக்குற. " என்றவன் குரலில் விளையாட்டு இல்லை.
" இவன நா எங்கையோ பாத்திருக்கேன். "
"எங்க? " ஜீவா.
" தெரியல. ஆனா பாத்திருக்கேன். எங்கன்னு நியாபகம் வர மாட்டேங்கிது. " எனத் தலையில் தட்டியபடியே குதிக்க தொடங்கி விட்டாள்.
" வரலன்னா விட்டுடுடேன். எதுக்கு வீணா குதிக்கிற. முதல்ல அமைதியா உக்காரு. வயித்துல பிள்ளைய வச்சிட்டு இந்தக் குதி குதிச்சேன்னா இப்பவே பிள்ள பிறந்திடும். " என சோஃபாவில் அமரச்செய்ய, அவள் அமைதியாகவில்லை. ’பாத்திருக்கேன்... பாத்திருக்கேன்’. என்றபடியே இருந்தாள்.
" வாய்ப்பில்ல. நீ சந்திரபோஸ்ஸ நேர்லா பாத்திருக்க மாட்ட. எதாவது ஃபோட்டோஸ். ஆர்டிகல்ல வேணும்னா பாத்திருப்ப. " என்றபடி விக்னேஷ் வந்தான், இவர்களின் சத்தம் கேட்டு..
"என்ன சொன்ன ஃபோட்டோஸ். எஸ்... ஃபோட்டோல பாத்திருக்கேன். என்னோட வீட்டுல. என்னோட ரூம்ல. எஸ். " என்றபடி தன் அறைக்குள் சென்றாள். அவளின் நடவடிக்கைகளில் குழம்பிப்போனவர்கள் பின்னாலேயே செல்ல,அவள் தன் லாப்டாப்பை ஆன் செய்து ஒரு வீடியோவைக் காட்டினாள்.
அது... அது... ஜிம் ரூம் என்று சொல்லப்பட்ட ரிஷியின் ரகசிய அறையில் ஒரு ப்ரொஜெக்டரில் பார்த்தாளே அது தான் அது. ரூமின் சுவருகளில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் சந்திரபோஸ்ஸின் புகைப்படமும் ஒன்று. பார்கவியின் மரணத்தில் சந்திரபோஸ்ஸும் சம்மந்தப்பட்டிருக்கிறார். இல்லை அவன் தான் காரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் போஸ்ஸின் ஒரு பெரிய புகைப்படத்தை X மார்க் போட்டு அடித்திருந்தான். எப்படி ரிஷி கண்டு பிடித்தான் போஸ்ஸை என்று தான் தெரியவில்லை.
அப்படி எனில் அவன் ஊட்டி வந்ததன் நோக்கம் பார்கவியின் இறப்பிற்கு பழி தீர்த்துக் கொள்ள. எப்படி சுருதி கொலைக்கும் பார்கவி மரணத்திற்க்கும் தொடர்பு இருக்கும். சந்திரபோஸ் அப்படி என்ன குற்றம் செய்து கொண்டு இருக்கிறான். பார்கவியை கொன்றவர்களை பழி வாங்க போய் ரிஷி என்ன ஆவான் எனப் பலவாறு யோசித்து பார்த்தவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. மெதுவாகக் காட்டிலில் அமர்ந்து கொள்ள, மற்றவர்கள் வீடியோவைப் பார்த்தனர்.
"இதுல ஒன்னுமே க்ளாரிட்டியா இல்லையே. இத வச்சி எப்படி கண்டுபிடிக்கப் போறிங்க. " விக்னேஷ் கௌதமை திரும்பிப் பார்த்து கேட்க, கௌதம் கண்களின் சிவப்பேற அனல் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான். ஏனென்னில் அன்று பார்த்தேன் என்று கூறி ஒருவனை பிடித்து அடித்தானே அந்த ஒருவன் தான் அதன் டிரைவர். முகம் மூடி இருந்தாலும் விழிகள் காட்டி கொடுத்ததன.
’வீடியோவில் இருப்பது என்னன்னு மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் சின்னதா ஒரு ரீகேப்.’
நடு இரவில் ஒரு லாரி வந்து நிற்க. அதிலிருந்து இரு இளைஞர்கள் இறங்கினர். ஒருவன் லாரியில் இருந்த துணி மூட்டைப் போல் ஒன்றை எடுத்துக் கொண்டு வர, அது அசைந்தது. அரை உயிருடன் ஒரு சிறிய உயிரை ரத்தம் சொட்ட சொட்ட மூட்டையில் கட்டில் வைத்து, அதை எங்கோ போட்டு விட்டு, மீண்டும் வந்து லாரியை எடுத்துச் சென்றனர். அந்த மூட்டையில் இருந்தது பார்கவி. அதைத் தூக்கி வந்த இருவரில் ஒருவனை பிடிக்கப் போய்த் தான் ரிஷிக்கும் கௌதமிற்கு இடையே சண்டை மூண்டது.
லாரி வந்து நின்ற இடம். அதிலிருந்த ஒருவன் எனக் காணொலியை பார்க்கப் பார்க்க குமுறும் எரிமலை மலைபோல் நிற்கிறான்.
" கௌதம்... கௌதம்... என்னாச்சி?. " என்க. கௌதம் பதிலளிக்கவில்லை.
" மூட்டைக்குள்ள யாரையோ உயிரோட கட்டி தூக்கி போட்டிருக்காங்க. லாரி நம்பர் தெரியல. தூக்கி போட்டுட்டு போன ஆளோட முகமும் தெளிவா பதிவாகல. இத வச்சி கண்டு பிடிக்கிறது கஷ்டம் தா. பட் விசாரிக்கலாம். " ஜீவா.
" எதுக்கு நாம விசாரிக்கனும். அவங்களே பாத்துக்கட்டும். இதுலையும் நாம் தலய விட்டு. ஒரு பெரிய தல இதுக்கு பின்னாடி இருந்தா. நம்ம டிப்பார்மெண்ட்ல இருந்து சில தலைகள் கதறும். நம்ம தல உருலும். எதுக்கு இதெல்லாம். " மனோ.
" கவலப்படாத. உருல போறது யாரோட தலன்னு கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும். " ஹரிணி. அத்தனை நேரம் அமைதியாக நின்ற கௌதம் அவளை திரும்பிப் பார்த்தான். வெளியே சில கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. விக்னேஷ் சென்று பார்க்க,
" என்ன குடுத்த சீர்வரிசைய உன்னோட மாமியார் வீட்டுலருந்து திரும்பி வாங்கிட்டானுங்க போலயே. " என நக்கலாகக் கேட்டபடி ரிஷி வந்தான். அவனை விக்னேஷ் முறைத்து பார்க்க,
" இந்த லுக்க உன்னால உனக்கு ஃபோன் பண்ணி திரும்பி வரச் சொன்னவெ கிட்ட காட்ட முடியுமா. ம்... இந்த மாறி எவனுக்கும் பணிஞ்சி போய் வேல பாக்க பிடிக்காம தா ரிசைன் பண்ணேன். நமக்குப் பிடிச்சதையும் செய்ய விடமாட்டானுங்க. அவனுங்க சொல்றதையும் முழுசா செய்ய விடமாட்டானுங்க. பதவில இருக்குறவனுக்கு சலாம் போட்டு வேலய மட்டும் செய்ற கூலி தொழிலாங்க மாறிப் போலிஸ் டிப்பார்ட்மெண்ட் மாறிடுச்சி.
நாம நினச்சது நடக்கணும்னா. நமக்கு கிடைக்கிற தோல்விய ஏத்துக்க கூடாது. வர்ற தோல்விக்கி மரியாத குடுத்து வரவேற்பு தராம அது மேல மிதிச்சி ஏறி நிக்கும்போது தா நமக்கு வெற்றின்னு ஒன்னு கிடைக்கும். தோல்விய ஒத்துக்கிட்டு திரும்பிப் போறது நல்ல போலிஸ்காரனுக்கு அழகில்ல. கோபத்த மறச்சிக்க. அத காட்ட வேண்டியவங்க கிட்ட காட்டு. " என்றபடி உள்ள வந்தவனின் முன் ஹரிணி வந்து நின்றாள்.
" ஹாய் கிட். " என்று புன்னகைக்க.
"கதிரேசன் எங்க?. " என்று கேட்க அனைவரின் பார்வையும் கேள்விக் குறியாய் இருவரையும் நோக்கின.
" சொல்லு கதிரேசன எங்க வச்சிருக்க. சந்திரபோஸ்காக எத்தன வர்ஷமா ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்க. பார்கவிய கொன்னது சந்திரபோஸ்ஸா. உனக்கு எல்லாம் தெரியும் தான. சொல்லு. " எனக் கிட்டத்தட்ட கத்தினாள் ஹரிணி.
" கிட்... கூல்... ஏ இவ்வளோ எமோஷனல் ஆகுற. " எனச் சொல்லி அவளுக்குக் குடிக்க நீர் எடுத்துக் கொடுக்க.
" பார்கவி எப்படி இறந்தாங்க. அவங்க டெத்துக்கும் சந்திரபோஸ்க்கும் என்ன சம்மந்தம். " என ஹரிணி கேட்க, ரிஷி பதில் சொல்லவில்லை.
" சந்திரபோஸ்க்கும் பார்கவிக்குமா!. எப்படி சம்மந்தம் இருக்கு?. " எனப் புரியாமல் விக்னேஷ் கேட்க,
" இருக்கு. இங்க பாரு. இதுல தெளிவா போட்டிருக்கு. பார்கவி உடம்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணது டாக்டர்ல தன்செயன்னும் ஒருத்தேன். நீதான குடுத்த. பார்கவியோட கேஸ் டீடெயில்ஸ். இதுல இருக்கு. சந்திரபோஸ்ஸோட திடீர் வருக. ஏன்னு அவனுக்குத் தெரியும்.
கதிரேசன் அரஸ்ட் பண்ண அந்த நாளே நீ ஊட்டிக்கி வந்திருக்கன்னா… என்ன அர்த்தம். கதிரேசன் உன்னோட ஆளு. சரியா. இப்ப கதிரேசன் உன்னோட கஸ்டடில தா இருக்கான். கரெக்ட்டா. " என ரிஷியைப் பார்த்து கேட்க, அவன் உதடுகளில் வந்த புன்னகை உண்மையைச் சொல்லியது, ஹரிணியின் யூகம் சரி என்று. அவளின் கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டவனை புரியாது பார்க்க.
" கிட்… கிட். ஐ லவ் யூ சோ மச். உன்னோட இந்தப் புத்திசாலித்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நா இத ஆல்ரெடி சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். பட் இருந்தாலும் திரும்பச் சொல்றதுல தப்பில்ல. ஏன்னா என்னோட கிட் பயங்கர புத்திசாலி. "
" ம்ச்... " என விலகி நிற்க.
"ஓகே. நீ கடுப்பாகுறன்னு தெரியுது… எஸ் பார்கவி டேத்துக்கு என்ன காரணம். யார் காரணம்னு எனக்குத் தெரியும். நா இங்க வந்ததே பாப்புக்காகத்தா. சந்திரபோஸ்க்கு நாலு வர்ஷமா ஸ்கெட்ச் போட்டுகிட்டே இருக்கேன். ஆனா இப்ப தா நேரமும் காலமும் கூடி வந்திருக்கு. " என்றபோது வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இம்முறை ஒன்றிற்கும் மேற்பட்ட கார்கள் வந்து நிறுக்கும் ஒலி கேட்டது.
" ஹேய், உன்னோட கதைய சொல்லி முடிச்சிட்டேன்னா வந்து எங்களுக்கு உதவி பண்ணு. " என்றபடி வந்தார் ஒரு பெண் மருத்துவர். ஹரிணியை செக்கப் செய்ய வந்தாரே அவர் தான்.
" விக்னேஷ், நீ தேடீட்டு இருக்குற ஆளு வெளிய தா இருக்கான். போய்க் கூட்டீட்டு வாயேன். " என ரிஷி சொல்ல, மூவரும் வெளியே சென்றனர். அங்கு ஆம்புலன்ஸ் போன்று ஒரு வேன் நிற்க, அதில் மூச்சி விடச் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தார் கதிரேசன். அவரை ஸ்டெக்சரில் போட்டு உள்ளே அழைத்து வந்தனர் மூவரும். கூடவே இரு கார்களும் நின்றிருந்தது. இதில் ஒன்றிலிருந்து ஆஜானுபாகுவாக ஒரு சிலர் இறங்கி நின்றிருந்தனர்.
மற்றொன்றில் கதவைத் திறந்ததும் உள்ளே இருந்து சீறிப்பாய்ந்து சத்தமிட்டுக் கொண்டே ஓடி வந்தன இரண்டும்.
"டிம். டெய்ஸி. " என்ற குரலுடன் ஹரிணி வெளியே வர, இரண்டும் ஹரிணியை ஆரத்தழுவி கொண்டன.
" உங்கள இங்க யாருடா கூட்டீட்டு வந்தா. " என அவைகளிடம் கேட்க,
" அது எப்படி பதில் சொல்லும். நாந்தா சொல்லணும். எங்கூட தா வந்ததுக. தரன் தா கூட்டீட்டு வரச் சொன்னான். " என்றபடி வந்தான் பாலா. ரிஷியின் நண்பன் என ஹரிணிக்கு தெரியும். ஆனால் போலிஸ் என்று இப்போது புரிந்தது. சுற்றி நின்ற மற்ற ஜிம் பாய்ஸ் சல்யூட் அடித்ததன் மூலம்.
என்ன நடக்கிறது என்று கேள்வியுடன் நின்றளிடம். "உள்ள வந்து பேசலாமே. " என அழைத்துச் சென்றான், ரிஷி.
அப்படி என்ன தா சொல்லப் போறான்னு பாக்கலாம். ஹாங். ஹரிணி ரிஷிட்ட கேட்ட நாலு கேள்விக்கும் பதில கண்டு பிடிச்சிட்டா. இன்னும் பார்கவியின் மரணம் எப்படி யாரால் நிகழ்ந்தது என்று மட்டுமே தெரிய வேண்டி இருக்கிறது.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..