முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 33

அத்தியாயம்: 33


சில சமயம் எண்ணங்களை…


வாய்மொழியை விட...


கண்ணீர் துளிகள் தான்...


அதிகம் வெளிப்படுத்தும்…


அதுபோல் தான் நின்றிருந்தான் கௌதம். பார்கவி என்ற பெயரைக் கேட்டதும். இந்த முறை உணர்ச்சிக்குவியலாய் இல்லாமல் நிதானமாக இருந்து உண்மைய அறிந்து, ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தான் கௌதம்.


விழியில் வடிந்த நீரை தலையில் சேர்க்காது தன் கரத்தில் சேர்ந்தான் ரிஷி.


'என்ன நம்பு. நா நம்ம பாப்புக்கு என்ன ஆனதுன்னு கண்டிப்பா கண்டு பிடிப்போம். ' என்று ரிஷி சொன்னதை செய்து விட்டத்தை போல் உணர்ந்தான் கௌதம். நமக்கு நெருங்கிய ஒருவர் ஒரு செயலைச் செய்ய விடாமல் நம்மைத் தடுக்கிறார்கள் என்றால் அதன் பின் வலுவான ஒரு காரணம் இருந்தாக வேண்டும். அதை இப்போது தான் உணர்ந்தான் அவன். தன் முன்னே நின்று முகம் பார்த்தவனுக்கு சிறு புன்னகையால் ஆறுதல் சொன்னான் எதிரில் நின்றவன்.


ரிஷி தன் பாப்புடுவின் மரணத்திற்கு காரணம் அறிய முயன்றுள்ளான். ஆனால் தான் அப்படியே விட்டு விட்டேனே, என்ற குற்ற உணர்வு எழத் தன்னை மட்டும் விட்டு விட்டு உலகம் சுழல்வதை போல் உணர்ந்து கால்கள் தடுமாறியவனை தன் தோளில் சாய இடம் தந்து அணைத்துக் கொண்டான் ரிஷி. நீ எந்த நிலையில் இருந்தாலும் விட்டு விடமாட்டேன் என்பது போல் இருந்த அத்தருணம் மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்வதாய் இருந்தது.


" பவதாம்மா,  நானும் உன்னமாறி தாம்மா. எனக்கும் கொஞ்சம் இடந்தந்தா பதுங்கிக்கிவேன். " என்றபடி பவதாவின் அருகில் அமர்ந்தான் மனோ. ஸாரி குத்தவைத்து அமர்ந்தான். ஏனெனில் பவதா சோஃபாக்கு பின்னாடி ஒழிந்து கொண்டு அமர்ந்திருந்ததாள். ஹரிணியுடன் விளையாடிய நாய்களைப் பார்த்து பயந்து போய் இருந்தவளுடன் அவனும் சேர்ந்து கொண்டான்.


"டேய், அவா தா பயந்தாங்கொள்ளி நாய பாத்ததும் பதுங்குறா. உனக்கு என்னடா வந்ததுச்சி. " ஜீவா.


" யார பாத்து பயந்தாங்கொள்ளின்னு சொல்றிங்க. நா ரொம்ப தைரியமான பொண்ணு. காக்கி சட்டய மாட்டிக்கிட்டு நாய்க்கும் பேய்க்கும் பயந்து சந்து பொந்துல ஒளிஞ்சிக்க நா ஒன்னும் உங்க ஃப்ரண்டு மாறித் தொட நடுங்கி போலிஸ் கிடையாது." என்றாள் எழாமலேயே.


" டேய் உன்ன கேவலமா பேசுது டா அந்தப் பொண்ணு. நீ இன்னும் அது கையவே பிடிச்சிட்டு உக்காந்திருக்க. வெக்கம் கொட்டவனே எந்திரிடா. " எனத் திட்ட.


" என்ன கெட்ட வார்த்த சொல்லித் திட்டுனா கூட நா ஓட்ட மண் சட்டில ஊத்துன மண்ணெண்ணெயாட்டம் ஒழுகிக்கிட்டே இருப்பேன். உள்ள வச்சிக்க மாட்டேன். என்ன மாறியான ஜந்துடா அது. ரெண்டு கால ஊண்ணி நின்னா ஏழுலடி இருக்கும் போல. ஓநாய் மாறி இருக்குற அத கொஞ்சிட்டு இருக்கா பாரு. ஏய் இந்தாம்மா ஹரிணி. இங்க வா. வரும்போது அந்த ரெண்டையும் வெளில விட்டு வா. " எனக் கத்தி ஹரிணியை மனோ அழைக்க, அவள் வந்தாள், உடன் டெய்ஸி டிம்முடன்.


" ஏய். உன்ன மட்டும் தான கூப்பிட்டோம். இப்ப எதுக்கு இதையும் கூட்டீட்டு வந்த." என்றபடி பவதா விக்னேஷை நோக்கி ஓடினாள். அவை பவதாவை பின் தொடர.


"டிம்... வேணாம். அவள விட்டுடு. அவா ஒரு பிள்ளப்பூச்சி. " எனப் புன்னகைக்க, இரண்டும் ஹரிணியின் பேச்சைக் கேட்டு நின்றன. பின் பவதா ஹரிணியை முறைக்கவும் இரண்டும் மீண்டும் பவதாவின் முன் வந்து நிற்க, ஜீவாவும் ஹரிணியும் சிரித்தனர்.


'அப்பாடா அதுக பார்வ நம்ம பக்கம் திரும்பல. தப்பிச்சோம். ' இது மனோவோட மைண்ட் வாய்ஸ்.


" விக்னேஷ். அவா என்ன கிண்டல் பண்ணி பயமுறுத்துறா. என்னனு கேளு. " எனத் தன் கணவனை உளுக்க, அவனின் பார்வை ரிஷியை அணைத்துக் கொண்டு நின்ற கௌதம் மீது இருந்தது.


"ஸாரி ரிஷி. நா அன்னைக்கி உன்ன நம்பிருக்கனணும். ஸாரி. உன்ன பத்தி தெரிஞ்சும் நா கோபத்துல வார்த்தய விட்டுருக்க கூடாது. அட்லீஸ்ட் என்ன நீ தேடி வந்தப்பையாது உன்னோட பேச்சுக்கு நா செவி சாச்சிருக்கணும். ஸாரி. " எனக் கௌதம் கண்ணீருடன் பேச, அவனை முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினான். கௌதமின் கண்ணீர் தேவையற்றது என்பது போல் இருந்தது ரிஷிக்கு.

கௌதம் ஸாரி கேட்டு விட்டான். பதிலுக்கு ரிஷியும் கௌதமிடம் மன்னிப்பு கேட்பானென நினைத்த ஹரிணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கௌதம் செய்தது தவறு என்றால் ரிஷி கௌதமை தனித்து விட்டு விட்டுத் திரும்பியும் பார்க்காமல் சில காலம் இருந்ததும் தவறு தானே‌. மன்னிப்பு கேட்டிருக்கலாம் தானே. ஆனால் ஸாரி என்றொரு வார்த்தை சொல்லாமல் நின்றவன் அடுத்து செய்த செயல் கோபத்தை தந்தது.


அது என்னவென்றால். ரிஷி ஒரு துப்பாக்கியை எடுத்துக் கௌதம் முன் நீட்டி. " நம்ம பாப்புடுவ கொன்னவனுக்கு இன்னைக்கி தா கடைசி நாளா இருக்கபோது. இது உனக்குத் தா. " என்க.‌


ஹரிணி வேகமாக வந்து கௌதம் அதை வாங்கும் முன் தடுக்க பார்க்க, கௌதம் அதை வேகவேகமாக வாங்கிக் கொண்டான். அதிர்ந்து போய் நின்றவளை கண்டு ரிஷி நக்கலாகச் சிரிக்க.‌


" நீ அவன கொலகாரன மாத்த பாக்குற ரிஷி. ஏ?. "


" ஏன்னா எனக்குச் சந்திரபோஸ்ஸ கொல்ல சரியான ஆயிரம் காரணம் இருந்தாலும். அவனுக்கு மட்டும் தா சந்திரபோஸ்ஸோட உயிர எடுக்க உரிம இருக்கு." என்றான் கூலாக.


" ஓ… உரிம. ஓகே. அப்படி என்ன அந்தச் சந்திரபோஸ் செஞ்சான்னு நா தெரிஞ்சிக்கலாமா. நீ இன்னும் சொல்லவே இல்ல பார்கவி இறந்தது எப்படின்னும், எதையும் உறுதி செய்யாதபோது அப்படி என்ன காரணம் இருந்திடப்போது சந்திரபோஸ்ஸ கொல பண்ற அளவுக்கு. " ஹரிணி.


"உனக்குத் தெரியாதா. " நக்கலாக.


"ஹாங். "


" காரணம் என்னன்னு தெரியாதா. "


" ம்... நீ தா சொன்னியே எங்கிட்ட. நாந்தா மறந்துட்டேன் போல. " என்றாள் ஹரிணி. அவளும் ரிஷிக்கி சளைத்தவள் அல்லவே.


" இன்னேரம் என்னோட கெஸ் சரின்னா, சந்திரபோஸ் செஞ்சிட்டு இருக்குற வேல என்னன்னு பாதிய நீயே கண்டு பிடிச்சி வச்சிருப்ப. காப்பகத்துக்குள்ள என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியும் தான‌. " என்க. ஹரிணி குழம்பிப் போய் நின்றாள். காப்பகத்துள்ள நடக்குறதுக்கும் பார்கவிக்கும் என்ன சம்மந்தம் என்று.


"கிட், எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆரம்பம்னு ஒன்னு உண்டு. அது எங்கருக்குன்னு தெரியணும்னா அதோட நுனிய கண்டு பிடிச்சி ஆரம்பத்த நோக்கிப் போகணும். சுருதியோட கேஸ் தா உங்க கைல கிடைச்ச நுனி. அத கண்டுபிடிச்சா தெரிஞ்சிடும். " என்று ஹரிணியிடம் சொன்னவன் திரும்பிப் பாலாவிடம்.

"மச்சி நீ உன்னோட ஆளுகல கூட்டீட்டு போய் **** காட்டுல நா சொன்ன இடத்துல வெய்ட் பண்ணுங்க. " எனப் பேசியபடியே வெளியே சென்றான் ரிஷி.


'இவனுக்குக் கேக்குற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லிப் பழக்கமே இல்ல. எப்ப பாத்தாலும் புதிர் போட்டி மாறிச் சுத்தி வளச்சி சொல்லிட்டு போறான். ச்ச. என்ன சொல்ல வர்றான் அப்பப் பார்கவி டெத் எதுனால நடந்ததுன்னு தெரியணும்னா இப்ப காப்பகத்துக்குள்ள என்ன நடக்குதுன்னு முதல்ல தெரிஞ்சிக்கனுமா. எப்படி தெரிஞ்சிக்கிறது. ' என யோசித்தவளுக்கு அன்று காப்பகத்திலிருந்து கௌதம் எடுத்து வந்ததை நேற்று விக்னேஷ் பார்க்கச் சொன்னதும், அதில் எழுந்த சில சந்தேகங்களை விக்னேஷிடம் காட்டி கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் குறித்து வைத்ததும் நினைவு வர, தன் அறைக்குள் இருக்கும் லாப்டாப்பை எடுத்து வரச் சென்றாள்.


அறையில் கதிரேசனுக்கு ட்ரீப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது. நல்ல அடி விழுந்திருக்கும் போல. மருத்துவ மனையில் இருந்த அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். ரிஷியும் பாலாவும் சேர்ந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்காது அந்தப் பெண் மருத்துவரின் உதவியை நாடியுள்ளனர். இப்போது சிகிச்சை நடைபெற்றுக் ‌கொண்டிருந்தது. இரு பெண் செவிலியரின் உதவியுடன்.


" அவருக்குச் சரியாகிடும்ல டாக்டர். " என்க.


" சொல்ல முடியாதும்மா. இன்னைக்கி நைட் தாண்டுனாத்தா எதையும் உறுதியா சொல்ல முடியும். "


" அப்பக் கோயம்புத்தூர் கூட்டீட்டு போகலாமே டாக்டர். இங்க இருக்குறத விட அங்க நல்லா ட்ரீட்மெண்ட் பாக்க முடியுமல. "


" இப்பதைக்கி பாதுகாப்பான இடம் இது தான்னு ரிஷி சொன்னான். " என்க.


'ஓ அவனே சொல்லிட்டானா. அப்பச் சரியாத்தா இருக்கும். ' எனக் கிண்டலாக நினைத்தாலும் மனதார இறைவனை வேண்டிக் கொண்டாள். கதிரேசனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று, யாருக்காக இல்லை என்றாலும் அவரையே நம்பி இருக்கும் அவரின் மகனுக்காக.


லாப்டாப் ஆன் செய்தவளின் அருகில் விக்னேஷ் அமர, தன் சந்தேகங்களை அவனிடம் சொல்லத் தொடங்கினாள்.


" இதுல கடந்த ஐஞ்சி வர்ஷமா அந்தக் காப்பகத்துக்கு வந்து சேந்த குழந்தைங்களோட லிஸ்ட் இருக்கு. அவங்க எந்த ஊரு?. எப்ப பிறந்தாங்க?. எங்க பிறந்தாங்கன்னு இதுல தெளிவா இருக்கு.


ஒரு வர்ஷத்துக்கு தலா முப்பது பேருக்கும் மேல அங்க வந்து சேர்றாங்க. எல்லாருக்கும் பேரன்ஸ் இருக்காங்க தா. ஆனா ஏ கொண்டுவந்து இங்க விட்டிருக்காங்கன்னு தா தெரியல.


சாந்த குமாரி ஒருக்க சொன்னாங்க, எல்லாரும் வசதியான வீட்டு பிள்ளைங்க தான். என்னோட பையனோ பொண்ணோ மனவளர்ச்சி இல்லாதவென்னு இந்த சமூகத்துக்குக் காட்ட விரும்பாம இங்க கொண்டு விட்டதாவும், அந்தப் பசங்களுக்கு வேண்டிய எல்லாத்தையும் அவங்களே ஏத்துக்கிட்டு காச நன்கொடை மாறிக் குடுக்குறதாவும் சொல்லிருக்கிங்க.


பெங்களூர். திருவனந்தபுரம். சென்னை. கொச்சின்னு வேற வேற சிட்டில இருந்து குழந்தைங்கள அன்னை காப்பகத்துல கொண்டு வந்து சேத்திருக்காங்க. இதுல என்ன சந்தேகம்னா இந்தியால எத்தனையோ காப்பகம் இருந்தும், ஏ இங்க வந்து சேக்கணும்கிறது தா.


அதுமட்டுமல்ல இந்தக் குழந்தைங்க எல்லாருமே டுவின். பிறக்கும்போது ரெண்டு பேர பிறந்து. அதுல ஒரு குழந்தைக்கு மட்டும் உடம்புல எதாவது ஒரு பிரச்சினை வந்ததுனால கொண்டு வந்து சேத்திருக்காங்க. இதுல என்ன ஆச்சரியம்ன்னா எல்லா குழந்தைங்களுமே கருத்தரிப்பு மையங்கள் மூலமா மட்டுமே பிறந்திருக்காங்க. " என்க.


" எந்த fertility clinic. பேர் என்னன்னு தெரியுமா. நம்ம சென்னைல ஏதாவது க்ளீனிக்ல இருந்து இங்க வந்து சேந்திருக்காங்களா.‌" கௌதம். அவனுள் சிறு படபடப்பு.


" இரு பாத்து சொல்றேன்.‌ சென்னைல மட்டும் கடந்து மாசம் ரெண்டு பேர் வந்திருக்காங்க.‌ வேற வேற‌ க்ளீனிக் தா. பேரு ஜீவாஜோதி கருத்தரிப்பு மையம். அப்றம் இன்னொன்னு ராயல் விமென் கேர் சென்டர். " என்றபோது கௌதம் அதிர்ந்து போனான். ஏனென்றால் ஹரிணி இரண்டாவதாகச் சொன்ன சென்ட்ரில் தான் பவித்ரா குழந்தைக்காக வேண்டி சிகிச்சைக்குச் சென்றுள்ளாள். கௌதம்‌ சண்டை போட்டது அங்குச் சென்று தான்.


" அதோட ஹெட் ஆஃபிஸ். ஐ மீன் அது எங்க நிறுவனத்துக்குக் கீழ இருக்குன்னு பாரோன். " 


" ICDS laboratory Ltd. அதோட நேட்டிவ். "


" லண்டன். "


"ம். சரி தா. இங்க பாரேன் இந்த ரெண்டு க்ளினிக்கும் அதோட ப்ராச் தா. "


" ICDS laboratory Ltd ஐ இருந்து எத்தன குழந்தைங்க அன்னை காப்பகத்துல வந்து சேந்திருக்காங்கன்னு பாரு. " விக்னேஷ்.


" ரெண்டு மட்டும் இல்ல. அந்தக் குழந்தைங்க எல்லாருமே அந்த laboratory கீழ இருக்குற கருத்தரிப்பு மையத்துல பிறந்ததா தா இருக்கும். " பதில் சொல்லியது‌ கௌதம். ஏனெனில் பவித்ரா விசயத்தில் அந்த நிறுவனத்தைப் பற்றி அக்குவேர் ஆணிவேராக ஆராய்ந்து வைத்திருந்தான்.


" ஹேய். எப்படி கரெக்ட்டா சொல்லுற." ஜீவா.


" தேங்க காட். பவிய காப்பாத்தியாச்சி. "

"என்னடா சொல்ற. " ஹரிணி.


"எஸ் காப்பாத்தியார்ச்சு தா. பவிக்கி அந்தச் சென்டர் குடுத்த மாத்திரைய நா டெஸ்டுக்கு குடுத்திருந்தேன். அத பாத்த டாக்டர், அந்தச் சென்டர்ல தர்ற சில மாத்திரைல கெமிக்கல் காப்போன்ட் அதிகமா இருக்குன்னும், அதுனால பிறக்குற குழந்தைங்க உடல்நலம் சரியில்லாம ஊனமா பிறப்பாங்கன்னும் சொன்னாங்க. நல்ல வேள பவி இப்ப அங்க ட்ரீட்மெண்ட் பாக்கல. " என்றவனுக்கு பெருமூச்சு வந்தது.


" ஹேய், இங்க பாருங்களே. அன்னை காப்பகத்துல சேந்த அத்தன குழந்தைகளும் அந்த laboratory க்கு கீழ இருக்குற க்ளினிக் தா பிறந்து இருக்கு. கௌதம் சொன்னது சரி தா. "


‍" வேணும்னேயே செஞ்சிருக்காய்ங்க. குழந்தைங்க ஊனமா பிறக்கனும்னே. " கௌதம்.


"ஏ. " விக்னேஷ்.‌.


"எனக்கு அப்படிதா தோணுது. "


" ஒரு நாளைக்கி அந்த க்ளீனிக்ல நிறைய குழந்தைங்க பிறக்குது. எல்லா குழந்தைங்களுமே ஊனமா பிறக்குறது இல்லயே. கொஞ்ச பேர் தா இந்த மாறிப் பிறந்திருக்காங்க. சோ, இது நேச்சுரல்லா இருக்கலாம்ல. " விக்னேஷ்.


" இருக்கலாம். சந்திரபோஸ்ஸும் தன்செயனும் அந்த laboratory யோட ஹெட் DR.Chorlas Fernando அப்றம் அவரோட பையன் Daniel Fernando லண்டனில வச்சிருக்குற Royal Hospital ல தா வேல பாக்குறங்க. தன்செயன் மட்டும் இந்தியால இருக்குற அவங்களோட ஹாஸ்பிடல்ல வெர்க் பண்றான். " ஹரிணி.


" ரெண்டு பேருமே கார்டியாலஜிஸ்ட். இப்ப இங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்க காரணம். கேம்ப்புக்கா" ஜீவா.


"இல்ல. மாசாமாசம் நடக்குற கேம்ப்புக்கு போஸ் மட்டும் தா வருவான். தன்செயன் எப்பையாச்சும் ஒருக்க தா வருவான்னு சுருதியோட ஃப்ரண்டு நர்மதா சொல்லுச்சி. " மனோ.


" ஹேய், மடோனா!. அவளோட தம்பிக்கி ஹார்ட்ல ப்ராப்ளம்ன்னு சொன்னாள. அவன பாத்துக்கத்தான தன்செயன் வந்திருக்காருன்னும் சொன்னாள. இரு நா அவளுக்குக் கால் பண்றேன். " என ஹரிணி மடோனாவை அழைத்தாள்.


மடோனாவிடம் நிக்கின் உடல் நலத்தை பற்றிக் கேட்டவள் சிறந்த சிகிச்சை பெற தனக்கு தெரிந்த மருத்துவமனையைச் சிபாரிச்சு செய்வதாகக் கூற,


" தேவையில்ல ஹரிணி. என்னோட ப்ரதர் குணமாகிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னோட உதவிக்கி நன்றி. டாக்டர் போஸ் என்னோட தம்பிக்கி இதய மாற்று அறுவை சிகிச்சை செஞ்சா காப்பாத்திடலாம்னு சொன்னாரு."


" Heart transplant surgery யா!. நிக்குக்கா!. " ஹரிணி.


"எஸ். கடவுள் எங்க கூடவே இருக்குறதுனால தா இன்னைக்கி என்னோட தம்பிக்கி நல்ல ஆரோக்கியமான ஒருத்தரோட இதயம் கிடைக்கபோது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. " மடோனா.


"இதயத்த தர யாரு முன்வந்தான்னு உனக்குத் தெரியுமா. ஏன்னா இல்லீகல எதையும் செய்யக் கூடாது. அதா கேக்குறேன். "


" Don't worry. ஒரு ப்ரைன் டெத் ஆனா ஒருத்தர்ட்ட இருந்து தா ஹார்ட்ட தானமா வாங்க போறோம். இன்னைக்கி நைட் ஆப்பரேன். எல்லாம் லீகலா தா நடக்குது. வி லவ் இன்டியா. யாரையும் கொல பண்ணி அவங்களோட இதயத்த எடுத்து என்னோட தம்பிய காப்பாத்துல அளவுக்கு நா டெவில் கிடையாது. " என்க, ஹரிணி அமைதியா இருந்தாள். பின்.,


" மடோனா, நா நிக்கோட Blood group என்னனு தெரிஞ்சிக்கலாமா?. "


" It's a rare blood group. AB negative." என்றவள் ஃபோனை வைத்துவிட, ஹரிணி யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.


"என்னாச்சி ஹரிணி. என்ன சொன்னாங்க மடோனா. " ஜீவா.


" நத்திங். நிக்குக்கு Heart transplant surgery செய்யப் போறதா மடோனா சொன்னா. "


" எங்க கோயம்புத்தூர்லையா. " விக்னேஷ்.


"இல்ல இங்க தா. சந்திரபோஸ் தா பண்ணப்போறதா சொன்னா. அன்னை காப்பகத்துல. ஹேய் மனோ, உங்கிட்ட சுருதியோட மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்னு இருந்ததில்ல. அத குடு. "  


சந்திரபோஸ் இந்த இதயத்தைச் சட்டப்படி பெற்றுத்தான் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார் என்று நினைக்கும் போதே இடித்தது ஹரிணிக்கு. 


அதை வாங்கி பார்த்தவளுக்கு சிறு அதிர்ச்சி.


"எதுக்கு ஹரிணி இது. " விக்னேஷ்.


" இங்க பாரு சுருதியோட ப்ளட்டும் மடோனாவோட தம்பி நிக்குக்கு AB- ரத்தம் தா. பொதுவா ஒருத்தரோட இதயம் மாறியான உள் உறுப்புகள எடுத்துட்டு அதுக்கு பதில இன்னொருத்தரோட இதயத்த மாத்தி வைக்கும்போது. ரெண்டு பேருமே ஒரே blood group ப்பா இருக்கணும். இப்ப ஒருத்தருக்கு A+ ன்னா. A+ இருக்குற ஒருத்தரோட இதயத்த தா மாத்தி வைக்க முடியும். அப்பதா அது சக்சஸ் ஆகும். இல்லன்னா இறந்து போய்டுவாங்க.

பொதுவா இதயம் கிடைக்கிறதே கஷ்டம் இதுல rare blood group ன்னு சொல்ற AB-. Rh+. Rh-. இருக்குறவங்களுக்கு கிடைக்கிறது அத விடப் பயங்கர கஷ்டம். அப்படி இருந்தும் மடோனாக்கு கிடைக்குதுனான எப்படி. சந்திரபோஸ்க்கு எப்படி கிடைச்சிருக்கும். "


"என்ன சொல் வர்ற ஹரிணி. "


"என்னோட கெஸ் சரின்னா. சுருதியோட இதயத்தா நிக்கிலுக்கு பொருத்த போறாங்க. " என்றாள் ஹரிணி.


" ஹார்ட் என்ன மீந்து போன மீன் குழம்பா. கின்னத்துல எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில வச்சிட்டு. எத்தன நாள் கழிச்சின்னாலும் தேவ படறப்ப சட்டில எடுத்துச் சூடு பண்ணி சாப்டுக்க. ஹார்டும்மா ஹார்டு. அதெல்லாம் உடனுக்குடனே செய்ய வேண்டிய ஆப்ரேஷன். லூசு மாறி உலறாத. " மனோ.


" இல்ல. நா உலறல. சுருதியோட blood group ப்பும் AB negative தா. இன்னைக்கி நைட் ஆப்ரேஷன் நடக்கப் போறது உண்மன்னா. " என்றபோது அனைவருக்கும் புரிந்தது என்ன நடக்கப் போகிறது என்று.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...