அத்தியாயம்: 64
"பைரவி பொய் சொல்ல கூடாது."
"நான் பொய் சொல்லல பாய். வேணும்னா உங்க மேல சத்தியம் பண்ணவா?"
" வேண்டாம்…" என அலற..
"ஏன்?"
"நீ பண்ணப்போறது பொய் சத்தியம்னு தெரிஞ்சும் நான் எப்படித் தலை குடுப்பேன்!"
"பாய்… நான் உங்க மேல இதுக்கு முன்னாடி எத்தன சத்தியம் பண்ணிருக்கேன். பொய்ன்னு தெரிஞ்சே வாங்கிட்டு நின்னிங்க. இப்ப நான் உண்மையவே சத்தியம் பண்றேன்னு சொல்றேன். வேண்டா...ம்னு அலறுறீங்க!"
"இதுக்கு முன்னாடி மொட்டப்பையன்ம்மா. சிங்கிள்ளு… அதுனால நீ பண்ற பொய் சத்தியம் என்னை அபெக்ட் பண்ணாலும் பரவாயில்லன்னு விட்டேன். பட்… இப்ப… என்னை நம்பி ஒரு பொண்ணு இருக்குப்பா. ஃபேமிலி வரப்போது. என்னோட ஒத்த தாமரையோட வாழ்க்கைல விளையாட விரும்பல."
"என்ன ராக்கி பாய் இப்படிச் சொல்டீங்க?"
“உனக்கு காட்ட வேற தலைய தேடு."
"அப்படிங்கிறிங்க.. " எனப் பார்வையைச் சுழலவிட்டு, "இப்ப நான் சத்தியம் பண்ண யாராவது ஒருத்தரோட மண்ட வேணுமே." எனத் தேட,
"அதுக்கு தான் அளவெடுத்து செஞ்ச மாதிரி ஒரு ஜீவன கூடவே வச்சிருப்பியே அவா மேல பண்ணா என்ன!" என ராக்கி ஏற்றி விட,
"ஆமால்ல… இதோ போறேன்." என்றவள் சாருவைத் தேடிப்பிடித்து சத்தியம் செய்ய, சாரு சண்டைக்கு நின்றாள். அவளைச் சமாளித்து ராக்கியிடம் மது எங்கே? எனக் கேட்க,
"இப்பயும் செல்ல முடியாது பைரவி."
"ஏன் பாய்?"
"ஏன்னா உம்புருஷன ரெண்டு நாளா ஒருத்தே வச்சி செஞ்சிட்டு இருக்கான். அதுனால அவனும் பயங்கர டென்ஷன்ல இருக்கான். நீ பாக்க வந்தேன்னா மறுபடியும் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவான்."
"ஐய்யோ அப்படில்லாம் ஆகாது. நான் சொல்லப்போற தகவல் நம்ம அகாடமிக்கு யாரு அந்த கோலமாவ கொண்டு வந்தான்னு மட்டுமில்ல, அந்த கும்பலயே பிடிக்க வசதியா இருக்கும். ப்ளீஸ் பாய்." எனக் கெஞ்ச,
"ஹோட்டல் ப்ளூரே. இங்க பார்ட்டி நடக்குது. நீ வந்ததும் எனக்கு கால் பண்ணு. அவன கூட்டீட்டு வர்றேன். ரெண்டு நிமிஷம் தான். அதுக்கு மேல ஒரு செக்கேண்ட் கூட அங்க நீ இருக்க கூடாது." என இடத்தை சொல்லி வைத்து விட, பைரவி தயாராகி வந்தாள்.
"வாவ்… பையூ… செம்ம அழகா இருக்க." என வாயைப் பிளந்தாள் சாரு. அவள் மட்டுமல்ல சாரதாவும் தான். பைரவியின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது அந்த முழு நீள மெஜன்ட்டா கலர் கவுன். தரையைத் தொடும் அளவுக்கு நீளமாக இருந்ததை, ஹை ஹீல் உதவியால் தரை தொடாதபடி பார்த்துக் கொண்டாள். தோளைத் தொடும் தொங்கட்டானும், கழுத்தை சுற்றி இருக்கும் கருப்பு நிற சோக்கர் என்ற அணிகலனை தவிர்த்து உடலில் வேறு எந்த அணிகலனும் கிடையாது.
உடை, அவளுக்கு அழகு சேர்த்தா! அல்லது அவள் அந்த உடைக்கு அழகு சேர்த்தாளா! எனப் பட்டிமன்றமே நடத்தியிப்பான் அந்த உடையை தந்த தீஷிதன். ம்… அது நம் தீஷித் பிறந்த நாளுக்கு எனப் பைரவிக்கு பரிசளித்தது.
இரு தினங்களாக தன் வீட்டிற்குச் செல்லாமல் இருந்தவளின் உடைகளை சாரு தான் எடுத்து வந்தாள். அதில் அந்தக் கவரும் இருக்க, 'அது எவ்ளோ பெரிய ஹோட்டல். அதுக்கு இப்படிப் போனாத்தான் நல்லா இருக்கும்.' என அணிந்து கொண்டாள். அவளைப் பாண்டி தான் ஹோட்டலில் இறக்கி விட்டான்.
"பக்கத்துல ஒரு சவாரி. பத்து நிமிஷத்துல வந்திடுறேன். கால் பண்ணும்மா." எனச் சொல்லி செல்ல, ராக்கிக்கு ஃபோன் செய்ய நினைக்கும் போது பைரவியின் கண்களில் யாரை அடையாளம் காட்டுகிறேன் என்று சொன்னாளோ! அவனே சிக்க, அவனைப் பின் தொடர்ந்து செல்வதாக நினைத்து ஹோட்டலுக்குள் சென்றாள். அவன் பார்ட்டி நடக்கும் ஹாலிற்குள் சென்றான்.
பெரிய பெரிய வீஐபிகள் கலந்து கொள்ளும் அதில் உள்ளே செல்ல அழைப்பிதழ் இருக்க வேண்டும். இல்லையேல் அழைப்பிதழ் வைத்திருப்பரின் உடன் செல்ல வேண்டும். இரண்டுமே இல்லாது அங்கிருந்த செக்யூரிட்டியிடம் உள்ளே விடுமாறு வாயாடிக் கொண்டிருந்தாள் பைரவி. அதை மதுசூதனன் காண நேர்ந்தது.
" நீ என்ன பண்ற இங்க?" எனக் காட்டமாக கேட்டு அவளைச் சில அடி தூரம் தள்ளிச் சென்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். அது ரசிக்கும் பார்வை இல்லை. ஏன் இப்படி ஒரு உடையை அணிந்து கொண்டு வந்திருக்கிறாய்? எனக் கேள்விப் பார்வை அது.
சிங்கிள் ஸ்லீவ் எனச் சொல்லப்படும் ஒற்றை கை மட்டும் இருக்கும் உடை அது. உடலை இறுக்கி பிடித்து குண்டாக இருந்தாலும் எனக்கு தொப்பை கிடையாது என்று சொல்லும் உடை அது.
கவர்ச்சியாக இருந்தாலும் அழகாக இருந்தது அது. இப்போது கவர்ச்சி பிரச்சனை இல்லை. அவள் ஏன் இங்கு வந்தாள்? சிராஜ் போன்ற கயவர்கள் உலாவரும் இங்கு ஏன் வந்தாள்? எனக் கோபம் வர, அவள் கூறிய எந்த விளக்கத்தையும் கேட்காது விரட்டப் பார்த்தான்.
"மாமா… ப்ளீஸ்… ஒரு ரெண்டு நிமிஷம் நானீ சொல்றத கேளுங்க. கேட்டிங்கன்னா நான் இப்படியே போய்டுவேன். ப்ளிஸ்…" என அவள் எத்தனை கெஞ்சியும் காதில் வாங்காதவன் அவளை விரட்ட, அவளை உள்ளே அழைத்துச் செல்ல ஒருவன் முன்வந்தான்.
"Excuse me…" என்ற குரலில் இருவரும் ஒரு சேர திரும்பி பார்க்க, பைரவி குதுகலித்தாள். மதுவிற்கு அன்றைய நாளின் அடுத்த தலவலி.
தீஷித், "Miss Any problem here?" பைரவியை பார்த்து கேட்க, அவனின் அருகில் வந்தார் செக்யூரிட்டி.
"ஸார், இவங்க இன்விடேஷன் இல்லாம உள்ள விடச் சொல்றாங்க."
"அதா சொல்றாங்கள்ல. விட வேண்டியது தான."
"ஸார்."
"she is my guest. எங்கூட தான் இருக்க போறாங்க. நாந்தா கூட்டீட்டு வந்தேன்." என்றவன் பைரவியை நோக்கி கரம் நீட்ட, வேகமாக அதை பற்றிக் கொண்டு அவனுடன் கரம் கோர்த்த படி உள்ளே சென்றாள். செல்லும் போது மதுவை திரும்பி பார்த்து அழகு காட்ட தவறவில்லை. பாவம் மது. இருவரின் மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சிராஜ்ஜின் அருகில் நின்றான்.
"யூ லுக் கார்ஜியஸ். உனக்குன்னு டிசைன் பண்ண மாதிரி இருக்கு இந்த டிரெஸ்." எனத் தீஷித் தன் டாம் கேர்ளுடன் சில மீட்டர் இடைவெளி விட்டு நடந்த படி சொல்ல,
அவன் வாங்கித்தந்த உடை தான் அது என்ற சிரத்தை இல்லாத பைரவி, "தேங்க்ஸ். " என்றாள் சுற்றி சுற்றி பார்த்தபடி,
"தேங்க்ஸ். எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?" என நாற்காலியை இழுத்து போட்டு இரு கரம் விரித்து ஆங்கிலேய பாணியில் கேட்க, அப்போது தான் தன் உடன் இருந்தவனைக் கவனிக்கவே செய்தாள்.
நடமாடும் கிரேக்க சிலை நான் என்று சொல்லும் தீஷித்தைப் பார்த்து அவளுக்கு எந்த வித ஃபீலிங்கும் வரவில்லை. அவனின் சேவையை ஏற்று புன்னகைத்தபடி அமர்ந்தவள்,
"அது என்னை உள்ள கூட்டீட்டு வந்ததுக்கும், அழகா இருக்கன்னு பாராட்டுனதுக்கும். நீங்க கூட அழகா இருக்கீங்க. ஆஷ் கலர் கோர்ட் சூப்பரா இருக்கு." என்று அவனை ஒரு சில நொடிகள் ஊன்றி கவனித்தே பாராட்டினாள்.
"நான் உன்னைச் சொன்னேங்கிறதுக்காக என்னை நீ சொல்றியா?"
"நோ... நோ… நீங்க நிஜமாவே சாமிங் தான். என் ஃப்ரெண்ட்டு கூட உங்களுக்கு ரொம்ப பெரிய ஃபேன்." என விழி விரிய பேசியவளை ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன!
"அப்ப நீ?"
"சரி இருக்கேன்.. " எனப் போனால் போகிறது என்பது போல் பேச,
"ஃபேனா?"
"ஹாங்…" என்றதும், அவனின் புன்னகை இதழ் தாண்டி கன்னம் வரை விரிந்தது. ஒரு நொடி அவனின் சிரிப்பைச் சிலகித்தவள், பின் பார்வையைச் சுழல விட,
"யார தேடி வந்திருக்க?" என சுழன்று கொண்டிருக்கும் அவளின் கருவண்டு கருமணி பார்த்து கேட்டான்.
"ஒரு ஆள ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். உள்ள தான் வந்தான். இப்ப ஆளு இன்விஷிபிள்ளா மாறிட்டான். எப்படின்னு தான் தெரியல. காணும். ம்ச்… " எனச் சோர்ந்து போக,
"தெரிஞ்சவங்களா?"
" இல்ல. தெரிஞ்சுக்கலாம்னு தான் ஃபாலோ பண்ணேன்."
"நாம எப்ப தனியா மீட் பண்ணலாம்?"
"எதுக்கு?"
"உன ஃப்ரெண்டோட ஃபோன் நம்பர் குடுத்திருந்தியே மறந்துட்டியா!"
"நான் மறக்கல. நீங்க தான் பிஸின்னு சொன்னிங்க." என இதழ் கோணி சொல்ல,
"இந்த கான்ஃப்ரென்ஸ்னால தான் நான் பிஸி. இனி இருக்குற நாள் எல்லாம் உனக்கானது." எனப் புன்னகைக்க, அவனின் குரலில் இருந்த மாற்றம் புரியாது,
"தேங்க்ஸ்." என விழி விரிய சொன்னாள். பின் வழக்கம் போல் கதை அளக்கத் தொடங்க, இருவருக்குள்ளும் பேச்சுக்கள் சுவாரசியமாக சென்றது.
பைரவி இதற்கும் முன் இது போன்ற பெரிய பார்ட்டிகளில் கலந்து கொண்டது இல்லை. மதுவிற்கு பழக்கமான ஒன்று தான். ஆனால் மனைவியை இது போன்ற பார்ட்டிகளுக்கு பெரும்பாலும் அழைத்துச் சென்றது இல்லை.
இங்கு வந்திருந்த மனிதர்கள் எல்லாம் வெவ்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான்கள். எனவே சிறு படபடப்பு உண்டானது அவளுள். தீஷித் பைரவிக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்பட்டு விடாது பக்குவமாய் பார்த்துக் கொண்டான். தன் தோழி என மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து சிறப்பாய் கவனித்துக் கொண்டான். பைரவிக்கு அது பிடித்திருந்தது.
ஆனால் மதுசூதனனுக்கு பிடிக்க வில்லை. இருவரும் நெருங்கி நண்பர்கள் போல் உரிமையுடன் பழகிக் கொள்ள, அதைத் தூர நின்று பார்த்த மதுவின் காதுகளில் இருந்து புகை வரவில்லை. அவ்வளவே… அத்தனை கோபம் அவனுள்.
ராக்கி, "மச்சி திடீர்னு இந்த இடமே சஹாரா மாதிரியும் ஓவன்ல வச்ச மாதிரியும் சூடா தெரியுதே. புல் ஏசி போட்ட இந்த ஹால்லோட தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கான காரணம் ஏன்னு தெரியுமா?"
"வாய மூடிட்டு நில்லு." என்ற மதுவின் பார்வை வேறு இடத்தை நோக்கி இருப்பதை கவனித்தவன்.
"இவெ ஏன் வந்த வேலைய விட்டுட்டு வேற எங்கேயோ பார்த்திட்டு நிக்கிறான்." என அவனும் தலை திருப்பினான்.
"மச்சி தங்கச்சிடா!"
"தெரியுது. நீ தான் அவள வரச்சொன்னியா?" எனக் காட்டமாக கேட்க,
"ஆமா… ஆனா கூடவே நான் வேற சிலதும் சொன்னேன். அது அவளுக்கு காதுல கேக்கல போல. "
"எதுக்கு வர சொன்ன?"
"உங்கிட்ட எதோ சொல்லனும்னு சொன்னா."
"என்ன?"
"நம்ம அகாடமில கோலமாவு வைக்கச் சொன்னான்னு ஒரு கும்பல பிடிச்சோமே. அதுல இந்தப் பெரிய தலைய கூட எனக்கு தெரியும்னு சொன்னாளே! அது விசயமா." எனப் பேசி முடிக்கும் முன்னரே,
"இன்னுமா நீ அவ சொல்ற பொய்ய நம்பிட்டு இருக்க!"
"ஆமா… பைரவி ஒரு விசயத்த அழுத்தி சொல்றான்னா அதுல எதோ இருக்கு. நான் நம்புறேன். அவளுஅககு விளையாட்டுத் தனம் இருக்கும் தான் ஆனா என்னோரமும் விளையாடிட்டே இருக்க மாட்டா." என்ற ராக்கியின் குரலில் இருந்த நம்பிக்கை கூட மனைவியின் மீது அவனுக்கு இல்ல.
"என்னமோ போ. சின்ன பிள்ளை மாதிரி அவ சொல்ற எல்லாத்தையும் காது குடுத்து கேட்டுட்டு இருக்க." என்றவன் தன் ஃபோனில் இருந்து பைரவிக்கு குறுந்தகவல் அனுப்பினான். 'எதற்கு வந்தாய்?' என்று.
அனுப்பி விட்டு விட்டு அவளின் முகம் பார்க்க, அது அந்த ஹாலையே பிரகாசிக்கும் அளவுக்கு மின்னி ஆடவனைக் கர்வம் கொள்ளச் செய்தது. பல நாட்கள் கழித்து கணவனிடம் இருந்து வரும் மெஸ்சேஜ். ப்ளாக் செய்து விட்டான் என நினைத்தவளுக்கு ஆனந்தம் தான்.
'ஒரு டூ மினிட் உங்க கிட்ட ஒரு ஃபோட்டோ காட்டணும். அப்றம் பேசணும்.' என அதற்கு பதிலாக அனுப்ப, புகைப்படத்தை அனுப்பி விட்டு உடனே கிளம்பும் மாறு கட்டளையிட்டான்.
அவள் முடியாது எனப் பிடிவாதமா இருக்க, வேறு வழியில்லாது அவளை பார்ட்டி ஹாலை விட்டு வெளியே தனியே வரச் சொன்னான். அப்போதும் அவளை அந்த பார்ட்டி ஹாலில் இருந்து தூர வைப்பதிலேயே குறியாய் இருந்தான்.
அவள் கட்டை விரல் உயர்த்திய தம்ஸ்அப் எமோஜியை அனுப்பி விட்டு, "ஸாரி தீஷ். நான் உடனே கிளம்பணும். நான் பாக்க வந்த ஆளு வெளில இருக்கான் போல. தேங்க்ஸ் என்னை செக்யூரிட்டிட்ட இருந்து காப்பாத்தி உள்ள கூட்டீட்டு வந்ததுக்கு. அப்றம் டின்னருக்கும் தான். நாம எப்பவேண்ணாலும் மீட் பண்ணலாம். நான் சிக் லீவ் ஒரு மன்த்க்கு எடுத்திருக்கேன். சோ நான் ஃபீரி தான். " என எழுந்து சென்றாள், மது வரச் சொன்ன இடத்திற்கு.
"என்ன காட்ட போற?" எனக் காட்டமாக கேட்டபடி மது வர, அவனின் முன் தன் ஃபோனை உயர்த்திக் காட்டி. " இதத்தா." என்றாள் அவள்.
அதைக் கண்டவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. "இவா மூஞ்சிய காட்டத்தா வந்தியா?" எனக் கேட்டு நடக்க,
" நீங்க சரியா அந்த ஃபோட்டோவ பாக்கல. எப்பயும் போல உங்க கோபம் உண்மைய மறைச்சி பாக்க வேண்டிய எதையும் பாக்க விடாம பண்ணுது. இந்த ஒரு முறையாவது நிதானமாக, உங்க ஆத்திரத்த மூட்ட கட்டி வச்சிட்டு பாத்திட்டு பேசுங்க. " என்க, மது முறைத்தான் அவளை.
அந்தபீ புகைப்படம் நிவியும் பைரவியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி. ராக்கி பாய்க்கு கூட நிவியின் புகைப்படத்தை பார்த்தால் இத்தனை கோபம் வருமா என்பது சந்தேகம் தான். அவனைக் காட்டிலும் மது தான் அதீத கோபம் கொண்டான். நண்பனின் வேதனையை உடன் இருந்து பார்த்தவனால் நிவேதாவை மன்னிக்கவே முடியவில்லை.
சரி… அதை ஏன் காட்ட இவ்வளவு தூரம் வர வேண்டும் என யோசித்தவன்,
"நீயே காட்டு. நான் என்ன பாக்கணும்னு நினைக்கிறியோ அத. " என்க, பைரவி அந்த செல்ஃபியைப் பெரிது படுத்தி அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர்களை காட்டினாள்.
அதைக் கண்டவனின் மூளை படு வேகமாக வேலை செய்தது.
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..