அத்தியாயம்: 63
கையில் ரோலக்ஸ் வாட்ச். உயர்தர லெதர் பெல்ட். மிடுக்காய் காட்டும் மேலங்கி. எவ்வித வேலைப்பாடுகளும் இல்லாத ப்ளைன் ஷூ எல்லாம் கருப்பு நிறத்தில் இருக்க, மதுசூதனன் அந்த மாலைப் பொழுதில் தயாராகிக் கொண்டிருந்தான், கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு. எங்கே என்றால் விருந்திற்கு.
என்ன விருந்தா!
ம்… விருந்து தான். நேற்று காலை தான் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து முடிந்தது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நட்சத்திர விடுதியில் பார்ட்டி நடக்க உள்ளது. அந்த பார்ட்டிக்கு மட்டுமல்லாது மாநாட்டில் கலந்து கொள்ள தென்னகத்தின் மிக முக்கியமான தொழிலதிபர் சிராஜ் சென்னை வருகை தந்துள்ளான். வந்து மூன்று பகல் இரண்டு இரவுகள் முடிந்து விட்டன. அவனுக்கு நிழலாக இருந்து அவனை காக்க வேண்டும்.
இரு நாள்கள் சமாளித்ததற்கே மது படாத பாடு படும்படி ஆகிவிட்டது. ஏனெனில் சிராஜ்ஜிற்கு பெண்ணின்றி பொழுது நகராது. அதனால் இரு பச்சைக்கிளிகளுடன் தான் வந்திறங்கினான்.
அது போதாது என மேலும் சிலர் அவனைத் தேடி வர, மது அதற்கு அனுமதிக்கவில்லை. யார் யாரை சிராஜ் பார்க்க உள்ளான். யார் யார் அவனைப் பார்க்க வருவார்கள் என்பது முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று. அந்த லிஸ்டில் இல்லாத யாரையும் அனுமதிக்க வில்லை அவன்.
"ஹேய்… என்ன பாதுகாக்குறது தான் உன்னோட வேலை. கன்ட்ரோல் பண்றது இல்ல. நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன். கம்…" எனக் கிளிகளைத் தோளில் தூக்கிக் கொண்டு சென்றான்.
சில கிளிகள் வந்த வழியே செல்லாது, மதுவிடம் வழிந்து கொண்டு நிற்பது தான் அவனுக்குக் காண்டாக இருக்கும்.
"வேற எதுவும் வேண்டாம். பணம்… நகை… எதுவுமோ வேண்டாம். ஜஸ்ட் ஒன் ஹவர். நீ மட்டும் போதும். என்ன சொல்ற." என்றபடி நெருங்கி வந்து நிற்பவர்களை விரட்டி விடுவதிலேயே அவனுக்கு பாதி மூளை சூடாகி விடும். மீதியை சிராஜ் பார்த்துக் கொண்டான்.
இரு தினங்களாக டென்ஷனாகவே இருக்க, இன்று பார்ட்டி வேறா! அது தான் மதுவின் முகத்தில் இருந்த கடுகடுப்பிற்கு காரணம்.
கடந்த இரு தினங்களாகவே அவன் பொறுமைக் கடலாக இருந்து வருகிறான். அல்லது பொறுமும் கடல் என்று கூட சொல்லலாம். சிராஜ் அவனின் பொறுமையை சோதித்துக் கொண்டு இருக்கிறான். என்று கொந்தளிக்கப் போகிறானோ.
" ராக்கி… எல்லாம் பக்காவா இருக்கா. கிளம்பளாமா?" என்றபடி வந்தான் மது. அது தனியாருக்கு சொந்தமான ஆடம்பர பங்களா. பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு ஏழு மணிக்கு செல்வதாக செட்யூலில் உள்ளது. ஆனால்…
"ரெடி மச்சி. கார பக்காவா செக் பண்ணிட்டேன். ரூட் கூட ஓகே தான். ஹோட்டல்லயும் நம்ம ஆளுங்க ரெடியா இருக்காங்க. பட் செட்யூல்ல மட்டும் சின்னதா சேன்ஜ்." என்க, மது புருவம் சுருக்கி “என்ன?” எனக் கேட்டான்..
"ஏழு மணிக்கு ப்ளூரே ஹோட்டல் பார்ட்டிக்கி போறத half an hour postpone பண்ணிருக்கு."
"வாட்… postponeனா எதுக்கு? ஏன்? யார கேட்டு பண்ண?" என்றான் கோபமாக கத்த.
" சிராஜ் பிஏ தான் வந்து சொல்லிட்டு போனான். ‘யாரோ வந்து ஸாரா பாக்கப் போறாங்களாம். அதுனால லேட் ஆகும்’னு. சொன்னான்."
"வாட்… மீட்டிங்கா! இது நம்ம செட்யூல்ல கிடையாதே. ம்ச்… ஸார் போய் பாக்கணுமா? இல்ல."
"இங்க வர்ற தான் சொன்னான்." என இழுத்தவனிடம்.
"வரப் போறது யாரு?"
"தெரியாது மச்சி. பிஏ ஃப்ரெண்டுங்கிற மாதிரி சொன்னான்."
"எப்படி ராக்கி இவ்ளோ இர்ரெஸ்பாஸிபில்லா இருக்க. முன்ன பின்ன தெரியாத ஆள் கூட மீட்டிங்க பிக் ஆகிருக்கு. வர்றவே கன் னோட வந்தா என்ன பண்ணுவ? செக்யூட்டிய டைட் பண்ணு. ஃபுல்லா செக் பண்ணாம உள்ள விடாத." எனப் பரபரக்க காரணம் உள்ளது.
இதற்கு முன் நடந்தது போல் கவனக்குறைவாக இருந்து யாரின் முன்னும் தலை குனிந்து நிற்க கூடாது என்பதால்.
"மச்சான், ஆல்ரெடி அந்தாளு உள்ள போய்ட்டான். அவெங்கூட ஒரு பொண்ணும் பையனும் போச்சி. மொத்தம் மூனு பேரு." என்றபோது மதுவிற்கு வந்ததே கோபம். தன் வேக நடையுடன் சிராஜ் இருக்கும் அறையை நோக்கி நடந்தான்.
அறைக்கதவை தட்டியவன் தன் இடையில் சொருகியிருக்கும் துப்பாக்கியில் ஒரு கையை வைத்துக் கொண்டு கவனமாக நின்றான். ஜன்னல் பக்கம் சென்று பார்க்கும் படி இருவரை பணித்தவன் உள்ளிருந்து எதேனும் சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கேட்க, எவ்வித குரலும் கேட்கவில்லை. உடனே கதவை உடைத்து விட்டு உள்ளே செல்ல, முகம் அருவெறுப்பில் சிறுத்தது.
"ஹேய்… மேனஸ் தெரியாத உனக்கு. கதவ உடச்சிட்டு வர்ற. இடியட்…" எனப் பெண் குரல் ஆங்காரமாக கேட்டது.
"சில் ஹனி." எனப் பெண்ணவளைச் சமாதானம் செய்தவன். வெளியே சென்று கொண்டிருந்த மதுவைச் சொடக்கிட்டு அழைத்தான்.
" கதவ சாத்திட்டு வெளிலயே வெய்ட் பண்ணு." என உத்தரவிட, வந்த கோபத்தில் விரல்கள் மடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தவன் கதவை ஓங்கிச் சாத்திட்டு விட்டு சென்றான். அவனின் காதில் சிராஜ்ஜின் ஏளன சிரிப்பு கேட்கத் தவறவில்லை.
எப்போது சிராஜ்ஜிற்கு மதுவும் தீஷித்தும் கூட்டாளிகள் என்ற ஐயம் வந்ததோ அப்போதே மதுவை மாட்டிவிட திட்டம் போட்டான். ஆனால் அது நடக்காது போக. மதுவை அசிங்கப்படுத்துவதே அவனின் பொழுதுபோக்காக மாறியது.
"ராக்கி." எனக் கத்த, அவன் ஓடி வந்தான்.
"இவா கூட வந்ததா சொன்னியே அந்த ஆளுங்க எங்க? மத்த ரெண்டு பேரும் எங்க? " என்க, அனைவரும் தேடத் தொடங்கினர்.
தோட்டத்தில் மது தேடிக் கொண்டிருக்கும் ஒருவன் மற்றொருவனை இழுத்து வந்து அடி வெளுத்துக் கொண்டிருந்தான்.
"ஒரு சின்ன பொண்ணு. அவளக் கடத்துறது என்ன அவ்ளோ கஷ்டமான வேலையா! அத பண்ண முடியாமா… ஸார் முன்னாடி அசிங்கமா போச்சி. பாத்தேல எவ்ளோ கோபமா திட்டுனாருன்னு. எல்லாம் உன்னால தான் நாய்யே. ஒரு நாளோட முக்கால் வாசி நேரத்த போதைலயே திரியுற உங்கிட்ட இத நான் குடுத்திருக்க கூடாது." என்றது விசாகனின் குரல்.
"இப்ப என்ன அதுக்கு! அதா கோபத்த தனிக்க அக்கா போயிருக்கே. கொறஞ்சிடும். அப்றம் என்ன!" என்றான் செந்தில். குரலில் போதை அப்பட்டமாக தெரிந்தது.
"என்னவா! அந்த ஆர்ப்பாட்டம் நடக்க கூடாது. நடந்தா அந்த பொண்ணோட கேஸ் சிபிஐ கிட்ட போய்டும். போனா என்ன நடக்கும்னு தெரியாதா! உன்ன நம்பி தான அதைக் குடுத்தேன். கோட்ட விட்டுடு வந்திட்டு திமிராவா பேசுற ***." என கேட்டு அடி வெளுத்து எடுத்து விட்டான் அவன்.
"அட! விடு மச்சான் என்னை. அடுத்த வாட்டி தூக்கிடுறேன். அந்தக் குட்டி எங்க போய்டப்போது. அந்த ஸ்கூல்ல தான இருக்கும். நான் அதுல நாலு டீச்சர கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். ஸ்கூலுக்கு வந்தா தூக்கிடவேன். அப்றம் அத நம்ம சாமிக்கி புது படையலா போட்டுவோம். எத்தன நாளைக்கி தா எச்சில் படையல சாப்பிடும் சாமி."
"நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம். இனி அந்தப் பொண்ண தூக்குறது வேஸ்ட். ஏன்னா ஆர்ப்பாட்டம் நாளைக்கி நடக்கபோது. இனி தூக்குறது ரிக்ஸ்கும் கூட. வேற வழில தான் அந்த ஆர்பாட்டாத்த நடக்க விடாம பண்ணணும்."
"என்ன மச்சான் திட்டம் போட்டிருக்க? எனக்கும் சொல்லேன்."
"எதுக்கு அதையும் சொதப்பி வைக்கவா! நீ மூடிட்டு இரு. அதுவே போதும். " என்க, இருவரின் சத்தம் கேட்டு மது அங்கு வந்தான்.
யார் என விசாரிக்க. செந்தில், "யார யாருன்னு கேக்குற? நான் யாருன்னு தெரியுமா?" என்க,
ராக்கி, "அதத்தான்டா கேக்குறோம். யாருடா நீ?"
"நீ செக்யூரிட்டிக்கு வந்தவெந்தான. அந்த வேலைய மட்டும் பாரு. எங்கள நோண்டாத." என அலட்சியமாக மதுவை முறைத்தபடி சொல்லி விசாகன் நடக்க, மது அவனின் கரத்தைத் திருகி முதுகோடு சேர்த்து வளைத்து பிடித்து, கழுத்தில் தன் முழங்கையால் அழுத்தி விசாரிக்க, சிராஜ்ஜின் பீஏ வந்து ஓடி வந்தான்.
"ஸார்… ஸார்… என்ன பண்றிங்க! விடுங்க ஸார் அவங்கள. அவங்க ரெண்டு பேரும் ஸாரோட கெஸ்ட்டு. தெரிஞ்சா திட்டுவாரு.” என இருவரையும் விடுவிக்க, வலி எடுத்த கரத்தை தடவியபடி விசாகன் மதுவை முறைத்தான். செந்திலை மட்டும் அனுப்பி விட்டு சிராஜை பார்க்க சென்றான்.
"ஸார் கிளம்பிட்டாரு. கார எடுக்கச் சொன்னாரு." என பீஏ சொல்ல, மது தன் பணியில் இறங்கினான். ஷீலாவும் சிராஜ்ஜும் கரம் கோர்த்தபடி இறங்கி வந்தனர். அவர்கள் ஒரு காரில் ஏற, மதுவும் ராக்கியும் சிராஜ்ஜின் காருக்கு முன்னும் பின்னும் பைக்கில் சென்றனர்.
சிவப்பு கம்பளம் விரித்து வீஜபிக்களை வரவேற்க, சிராஜ் பவுன்சர்களின் பாதுகாப்பில் உள்ளே சென்றான்.
இங்கு…
பைரவியும் சாருவும் தங்களின் கல்லூரி காலத்து கதைகளைத் தாமரைக்கும் சாரதாவிற்கும் சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர்..
பைரவி, "நாங்க பக்கத்துல போய் அந்த நீளக்கூந்தலுக்கு சொந்தக்காரிய பாக்கலாம்னு போனோம். ஆனா நெருங்கி பாத்ததுக்கு அப்றம் தான் தெரிஞ்சது அது பொண்ணு இல்ல பையன்னு. என்னை விட அவனுக்கு முடி ஜாஸ்த்தியா இருந்தத என்னால ஏத்துக்கவே முடியல."
பீச்சில் நீளமாக முடி வைத்த ஆளை பெண் என்று நம்பி, ‘நீளமாக முடி வளர்ப்பது எப்படி?’ என ப்யூட்டி டிப்ஸ் கேட்க நெருங்கி, அது ஆண் எனத் தெரியவந்து, தோழிகள் நால்வரும் தெறித்து ஓடிய கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.
"சத்தியாமா அப்ப தான் எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது. முடி கேர்ள்ஸ் விட பாய்க்கு நல்லாவே வளரும்ன்னு. ப்பா!! பேனிட்டைல் போட்டான்னா செம்மையா இருப்பான். பாரேன்…." என லேப்டாப்பை எடுத்து வைத்து அதில் இருக்கும் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டது, எப்படி எடுக்கப்பட்டது, என்னென்ன செய்தோம் என்ற கதைகளை சொல்லி சாரதாவைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாள்.
அவரின் இதழ்களில் பூத்த புன்னகைக்கு பைரவி காரணமாகிப் போனாள். இரு தினங்களாக அவருடனேயே தங்கி அவரின் நலத்தையும் மனநிலையும் மாற்றி இருந்தனர் இருவரும்.
பைரவி கவனமாக நிவியை பற்றி பேசாது, அவளுடன் இருக்கும் புகைப்படங்கள் வந்தாள் வேகமாக அதை மாற்றிக் கொண்டே வர,
தாமரை, "அவங்க இப்ப என்ன பண்றாங்க?"
"எவங்க?"
"அதான் அன்னைக்கி மருந்து கடைல இருந்த போனாங்களே அவங்க. அவரோட… அவரோட…” எனச்சொல்லத் தயங்கியவள்,
“ஒரு நாள் கோயில்ல வச்சி அவருக்கிட்ட பேச ட்ரெய் பண்ணாங்க." என்றவளின் குரலில் கோபம் இருந்தது.
பைரவி, "வெளி நாட்டு மோகத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா அங்க அவளுக்கு நினைச்ச மாதிரி லைஃப் அமையல. தினமும் குடிச்சிட்டு அவள சந்தேகப்பட்டு அடிக்கிறது, சூடு வைக்கிறதுன்னு சித்திரவதைய அனுபவிச்சிருக்கா. இப்பத்தான் அவெங்கிட்ட இருந்து தப்பிச்சி இங்க வந்து சேந்திருக்கா. அவளோட வீட்டு நிலமையும் சரியில்ல. ம்ச்… இப்ப எதுக்கு அதெல்லாம்..
கானல் நீர தேடி போன அவளுக்கு வாழ்க்க கானல் நீரா மாறிடுச்சி. லீவ் இட்... அவளுக்கு ஒரு வேலை மட்டும் ஏற்பாடு பண்ணி குடுத்திருக்கேன். இனி சமாளிக்க வேண்டியது அவா தான்."
சாரு, "ராக்கி பாய் அவளெல்லாம் ஒரு ஆளா நினைக்க கூட மாட்டாரு. நீ இன்செக்யூரா ஃபீல் பண்ண தேவையில்ல."
"ஹாங்… அது எனக்கு தெரியும். அவரு திரும்பி கூட பாக்க மாட்டாருன்னு." தாமரை வேகமாக சொல்ல,
" எவரு?" என்றபடி சாரதா வந்தார். தாமரை வெட்கத்துடன் ஓடிச் சென்று விட்டாள்.
சாரதா, "என்னாச்சி பைரவி இவளுக்கு."
"தாமரைய பறிச்சி சேர வேண்டியவங்க கைக்கு குடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சி."
சாரு, "கல்யாண கனவு வந்திடுச்சிங்கிறத தான் இந்த பக்கி அப்படி சொல்லு."
இருவரும் தாமரை ராக்கியின் கதையை சொல்லி,
பைரவி, "நீங்கதாம்மா அந்த மதுர வீரன சமாளிக்கணும். நீங்க சொன்னா கண்ணாயிரம் அங்கிளும் கேப்பாரு."
"அத்தோட தாமரைய ராக்கி அண்ணாவ தவிர வேற யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது. " என இருவரும் ராக்கிக்காக எக்கச்சக்க பிட்டுகளைப் போட்டு சாரதாவைத் தலையசைக்க வைத்தனர்.
அப்போது லேப்டாப் ஸ்கீரினில் தெரிந்த ஒரு புகைப்படம் பைரவியின் புருவங்களை முடிச்சிட செய்தது. உடனே தன் கணவனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்க, வழக்கம் போல் அது செல்லவே இல்லை.
"ஐய்யோ! அவெ உன்ன ப்ளாக் பண்ணி வச்சிருக்கான் மறந்துட்டியா. " எனத் தலையில் தட்டியவள் ராக்கி பாய்க்கு கால் செய்தாள். அவனும் இரு முறை எடுக்கவில்லை. மூன்றாவதாக அழைக்கும் போது எடுக்கப்பட்டது.
"ஏண்ணா கால அட்டன் பண்ண மாட்டேங்கிறிங்க. " என கத்த,
"எடுக்கலன்னா பிஸியா இருக்கேன்னு அர்த்தம். சொல்லு என்ன விசயம்.” என்று அவளுக்கு நிகராகக் கத்தியவன்,
“எதுவா இருந்தாலும் இலைல வைக்கிற அல்வா மாதிரி அளவா சொல்லிட்டு வைச்சிடு. ஏன்னா அண்ணா டியூட்டில இருக்கேன்."
"உங்க கூட அவரும் இருக்காரா?"
"அவெந்தா என் பாஸ். அவெ இல்லாம எப்படி! ரெண்டு பேரும் ஒன்னாத்தா இருக்கோம்."
"எங்க இருக்கிங்க?" எனக் கேட்டவளின் தோரனையே, 'இடத்தை சொன்னால் பறந்து வந்து விடுவேன்.' என்பது போல் இருக்க, ராக்கி சுதாரித்தான்.
"இந்த நேரத்துல இவள நான் இங்க வரச் சொன்னேன்னு அவனுக்கு தெரிஞ்சா! போற வழியிலயே கூவ ஆத்துல என்னைத் தள்ளி விட்டு போய்டுவான். சோ..
சொல்லக் கூடாது." என மனத்திற்கு பேசிக் கொண்டவன்,
"அவுட் ஆஃப் சிட்டி. என்ன விசயம்? சொல்லு."
"இல்ல நான் அவருக்கிட்ட தான் சொல்வேன்."
"நீ தலைகீழாகத்தான் குதிப்பேன்னா குதி எனக்கு ஒன்னுமில்ல. என்னால இடத்த சொல்ல முடியாது."
"பாய்… பாய்… என்ன பாய் இதெல்லாம். நான்உங்க தங்கச்சி இல்லையா!"
"மறுபடியும் முதல் இருந்தா. சையோ!! இதோ பாரு என்ன விசயம்னு தெளிவா சொல்லாம நான் இடத்த சொல்ல மாட்டேன்." என்று கறாராகச் சொல்ல,
"நம்ம அகாடமில கோலமாவ வச்ச நாலாவது ஆளு."
"நீ கூட எங்கேயோ பாத்தேன்னு கதைச் சொன்னியே!"
"எஸ்… எனக்கு அவன எங்க பாத்தேன்னு நியாபகம் வந்திடுச்சி."
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..