அத்தியாயம்: 62
கதகதப்பான தாய் பறவையின் சிறகில் துயில் கொள்ளும் இதம் போல் ஓர் உணர்வை உணர்ந்தாள் பைரவி. திறக்காத தன் கண்களில் கனவுகளை தேக்கி கொண்டு உருண்டு உருண்டு உறங்கினாள் அவள். அந்தக் கனவில் அவள் அவளின் ஆல்கஹாலுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறாள் போலும். கனவில் அவனைக் கட்டியணைத்து கன்னத்தில் தன் இதழ் பதிக்க, தள்ளி விடப்பட்டாள்.
'ச்ச… இந்தத் தயிர் சாதம் நேர்ல தான் நெருங்க விட மாட்டேங்கிதுன்னு பாத்தா! கனவுலயும் தொட விட மாட்டேங்கிது. விடக்கூடாது… இதோ வர்றேன்..' என மீண்டும் இறுக்கி அணைக்க, கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள் பைரவி.
"அடியே… கண்ண திறந்து பாத்திட்டு கட்டி பிடி. பக்கத்துல படுத்தா யாரு என்னன்னு தெரியாம கட்டி பிடிப்பியா." என்ற பெண் குரல் கேட்டதும் பதறிப்போய் கண் முழித்து கனவில் இருந்து விடுபட்டவளைத் தாமரை பார்த்து சிரிக்க, சாரு குத்திக் கிழிக்கும் காளியாய் நின்றாள்.
"ஸாரி டி… கனவு… அதுல நான் உங்கண்ணென்னு நினைச்சி கட்டி பிடிச்சிட்டேன்." என அசடு வழிய சிரிக்க,
"கட்டி மட்டுமாடி பிடிச்ச. சீ கருமம். இத வெளில சொல்ல முடியாது. ஒரு போலிஸ்ஸா இருந்திட்டு இந்த வேலைய செய்யலாமா?"
"ஸாரி டி. கனவுல என் ஆல்கஹால் கூட பைக்ல போய்க்கிட்டே டூயட் பாடிட்டு இருந்தேன். 'பார்த்த முதல் நாளே.. ' ன்னு பாடிட்டே அவர கட்டிப்பிடிச்சி அவரோட முதுகுல சாஞ்சிட்டு போறது இதமா! சுகமா! நேர்ல நடந்த மாறியே ஒரு ஃபீலிங்கு. ரொம்ப சுகமா இருந்தது அந்தப் பயணம். நிஜத்துல தான் அது நடக்காதுன்னு தெரியும். அதா கனவுலயாது அப்படியே நீண்ட நெடுந்தூரம் போணும்னு ஆசப் பட்டேன். எழுப்பி விட்டுட்ட." எனக் குறை சொல்,
"எழுப்பிட்டேன்னா! எழுப்பி விடலன்னா என்னோட நிலம என்ன ஆகிருக்கும்!"
" தலைப்பு செய்தில வந்திருப்பிங்க க்கா." எனத் தாமரை சிரிக்க,
"சரி விடு டி. அவரோட கன்னம்னு நினைச்சி உங்கன்னத்த கடிச்சிட்டேன். அதுக்கு என்னங்கிற இப்ப! ஆனாலும் உங்கன்னம் நல்லாவே இல்ல. உவாக்.. ஒரே புள்ளி புள்ளியா இருக்கு. பட் என் ஆல்கஹால் கன்னம் ஷாப்ட்டா இருக்கும்.. கன்னத்துல ஒரு முடி கூட இருக்காது. பரு இருக்காது. டெய்லி க்ளீன் சேவ் செஞ்சி, ஆப்பிள் மாதிரி செம்ம ஸ்வீட்டா! கடிச்சி திங்கனும் போல இருக்கும்." என வர்ணித்து கண் விழித்துக் கொண்டே கனவு காண, சாரு அவளைத் தலையணை கொண்டு அடித்தாள்.
"இதெல்லாம் பசங்க சொல்ல வேண்டிய டயலாக் டி. ஆப்பிள் கன்னம். ஸ்டாபெரி லிப்ஸ்னு. இங்க என்னடான்னா தலைகீழ இருக்கு.“
"அழக யாரு வர்ணிச்சா என்ன டி? இதுக்கெல்லாமா பாகுபாடு பாப்பாங்க. ஹேய்! நைட் நீ எப்ப வந்த.. நா உன்ன பாக்கவே இல்லயே.. "
"எப்படி பாப்பிங்க.. நீங்க தான் கும்பகர்ணனோட கடைசி குழந்தை யாச்சே. ஒருக்க தூக்கத்துக்கு போய்ட்டா. சூரியன் இறங்கி வந்து எழுப்புற வர எந்திரிக்கவே மாட்டேங்கிறிங்களே." தாமரை கேலியாக சிரிக்க.
"இவ என்னடி சொல்ற.।
"கும்பகர்ணனோட வாரிசுன்னு சொல்றா."
"ஏன்?"
"ஏன்னு உனக்கு தெரியாதா! "
"தெரிஞ்சா ஏன்டி கேக்கப் போறேன்."
"நைட் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு நியாபகம் இல்லயாக்கா?" தாமரை.
" இல்லயேம்மா." என இரு கையையும் விரித்து சிவாஜி போல் பேச,
சாரு, " நீ என்ன குடிகாரியா? குடிகாரனுக்கு தான் போதைல நைட் நடக்குறது பகல்ல நியாபகம் இருக்காது."
தாமரை, "நேத்து பைரவி அக்காவும் போதைல தான் இருந்தாங்க. அதா யாரு தூக்கிட்டு வந்து பெட்டுல போட்டாங்கிறதுயே மறந்துட்டாங்க.. "
"தூக்கிட்டா! பெட்டா! என்னதாண்டி சொல்ல வர்றிங்க? பிட்டு பிட்டா சொல்லாம, தொடர்ந்து சொல்லுங்களேண்டி."
"நைட் நீங்க மது அண்ணா கூட பைக்ல போனிங்க. அப்படியே தூங்கிட்டிங்க போல. உங்கள எழுப்பி எழுப்பி பாத்தாரு. கன்னத்துல அடிக்கவே செஞ்சாரு. ஆனா நீங்க எழவே இல்ல. அதா தூக்கிட்டு வந்தாங்க." என்றவளுக்கு முகம் சிவந்து இருந்தது.
'என்னை எம்புருஷெ தூக்கிட்டு வந்ததுக்கு இவா ஏன் இவ்ளோ வெட்கப்படுறா.?' என அவளுக்கு அவளே கேள்வி கேட்க,
'ம்… பெட்டுல போட்ட அவன நீ சும்மாவா விட்டுருப்ப. அதா குழந்தைக்கு வெட்கம் வந்திடுச்சி.' என்றது அவளின் மனசாட்சி.
கடையில் இருந்து புறப்பட்டதும்,
"மாமா… பசிக்கிது… சாப்பிட… " என இழுக்க,
“வீட்டுல டின்னர் இருக்குன்னு பாண்டி சொன்னான்."
"ம்ச்... அது அவங்களுக்கு. நான் எனக்கு கேக்குறேன். மணி ஒம்பதாகப்போது." என்க, உடனே ஒரு ஹோட்டலில் பைக்கை நிறுத்தியவன் சப்பாத்தியை ஆர்டர் செய்ய,
'இத நீ வீட்டலயே சாப்பிட்டிருக்கலாம்.' என்ற மனத்தை அடக்கம் செய்து விட்டு உண்ண தொடங்கினாள்.
கணவன் அருகில் இருக்க… காய்ந்து போன சப்பாத்தி கூட சுவையாக இருக்கிறதே! அடடே! ஆச்சரியர்க்குறி!! என மனம் கவி பாட, அவளைப் பார்த்து புருவங்களை ஏற்றி இறக்கினான் மது.
"ஒன்னுமில்ல…" என்றவளின் கண்கள் கணவனை நிறைக்க, கை வயிற்றை நிறைத்தது.
அவளின் பார்வையை உணர்ந்தாலும் மது அதை கருத்தில் கொள்ளாது, " நேரமாச்சி." எனக் கடிகாரத்தை காட்ட,
"எனக்கு டயம் பாக்க தெரியும். நாலாங்கிளாஸ்லயே எனக்கு கத்துக் குடுத்திட்டாங்க." என ரோசமாக சொன்னாள்.
"அப்ப சீக்கிரம் சாப்பிட்டு முடி டி.. இவ்ளோ நேரமாவா சாப்பிடுவா!" என்க, பைரவி வேகமாக உண்டு முடித்தாள்.
மதுவிற்குத் தட்டில் உள்ள உணவை ஐந்து நிமிடம். கூடினால் பத்து நிமிடங்களில் உண்டு முடித்திருக்க வேண்டும். சோற்றை அளந்து கொண்டு, தட்டில் உள்ள சோறு மீண்டும் அரிசியாக மாறும் வரை காய வைத்துக் கொண்டு இருந்தால் பிடிக்காது. பாடம் நடத்துவான்.
"போலாம்." என்றவளுடன் மீண்டும் பயணம் தொடர்ந்தது. பைரவியால் அமைதியாக இருக்க முடியவில்லை. "மாமா ஐஸ்கிரீம்…” “லெமன் சோடா…” “பாதம் கீர்…" என வரிசையாக கையைக் காட்டிக் கொண்டே வர,
"பேசாம இருக்க முடியும்னா உன்னைக் கூட்டுட்டு போறேன். இல்ல இப்பவே இறங்கிடு." என்க, அவள் வாயை மூடிக் கொண்டாள் கூடவே கண்ணையும் தான்.
உண்ட மயத்தில் கண்கள் சொருகியது. மது வேறு தன்னைத் தொடக்கூடாது என்றது நினைவு வர, தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது தள்ளாட தொடங்கினாள் அவள். அவளின் தள்ளாட்டம் வண்டியையும் தள்ளாட வைக்க,
"பைரவி என்ன பண்ற? சாமியாடுறியா!" எனக் குரல் கொடுக்க,
"இல்ல தூங்குறேன்."
"எது! தூங்குறியா?"
"ம்…" என ராகம் பாடியபடி அவனின் முதுகில் சாய்ந்து கொள்ள, பைக்கை ஓரங்கட்டியவன், அவளை எழுப்ப முயன்றான்.
"பைரவி கண்ணத்திற. கொஞ்ச தூரம் தான். சாரதாம்மா வீடு வந்திடும். கொஞ்சம் ஸ்டெடியா உக்காரு." என்க,
"ப்ளிஸ்… என்னால கண்ண திறக்கவே முடியல மாமா. ரொம்ப டயர்டா இருக்கு. என்னை நீயே பத்திரமா தூக்கிட்டு போய் பெட்ல போட்டுட்டு மாமா. " எனக் கண் திறக்காது சொல்ல, மதுவால் அவளை எழும்ப முடியவில்லை. விளைவு எப்படி அமரக்கூடாது என கண்டிஷன் போட்டானோ அதே போல் உட்கார வைத்து அவளின் துப்பட்டாவால் அவளை தன்னுடன் இணைத்து கட்டினான்.
தூளி கட்டி தூக்கிச்செல்லும் குழந்தை போல் மனைவியை அழைத்து வந்தவன், அவளின் இரு கரத்தையும் எடுத்து தன் இடையோட வைத்துக் கொண்டான். அப்போது அவளின் காயத்தில் கரம் வைத்து விட்டான் போலும்,
"வலிக்கிது மாமா." எனச் சிணுங்க, அவளின் கரத்தின் காயத்தை பார்த்தான்.
நன்கு சிவந்து போய் இருந்தது அது. சின்ன சின்ன கருப்பு புள்ளிகளாய் இருந்த காயம் ஆழமான காயம் தான். சிறு காய்ச்சல் தலைவலி வந்தாலே வீட்டை ரெண்டாக்கி விடுவாள் பைரவி.
"மாமா… தலைய தொட்டு பாரேன். சுடுது… பயங்கரமா சுத்துது. நிக்க கூட முடியல." எனச் சுருண்டு படுத்துக் கொள்வாள். சமைக்கும் போது கையில் கத்தி கீறினால் கூட பெரிய கட்டை போட்டுக் கொண்டு,
"என்னால ஃபோன கூட பிடிச்சி டயிப் பண்ண முடியல. டீவி டிமோட்ட பிடிச்சி மாத்த முடியல." என ஓவராக ஆக்டிங் போட்டு எல்லா வேலையையும் மதுவின் தலையில் கட்டி விட்டு சோஃபாவில் அமர்ந்து கொள்வாள்.
"நியூஸ் வைக்காத மாமா…” “ஸ்போர்ட் சேனல் வேண்டாம்.” “பாட்டு வை மாமா.” “நானே உடம்பு சரியில்லாம இருக்கேன். இத கூட எனக்காக பண்ண மாட்டியா மாமா." என அவளின் சிணுங்கல் மொழிகள் நினைவுகள் வர இதழ்கள் தானாக விரிந்தன.
கூடவே வேறு ஒன்றும் நினைவு வர, முகம் இறுகிப்போனது. அந்த நினைவு தீஷித் பற்றியது.
இரு தினங்களுக்கு முன் பைரவி விழுந்து வாரி புதையல் எடுத்தாளே! அப்போது மது பார்த்து விட்டான். விழும் போது அல்ல. தீஷித் அவளை அழைத்துக் கொண்டு காரில் செல்லும் போது. பின் தொடர்ந்து சென்றவன் தீஷித் காரை நிறுத்தி பைரவியின் காயத்தை சுத்தம் செய்தது முதல் மருத்துவமனை அழைத்து சென்றது வரை பார்த்தவனுக்கு தீஷித்தின் மீது சொல்ல முடியாத அளவுக்கு கோபம் துளிர்த்தது.
அவனுக்கு தீஷித்தை தெரியும். பிஸ்னஸ் மேனாக. எவ்வித பின் புலமும் இல்லாது சுயம்புவாய் இளம் வயதில் அவன் அடைந்த வளர்ச்சி பிடிக்கும். ஆனால் பைரவியின் தோழனாக பிடிக்கவில்லை. பைரவியின் மீது காட்டும் அக்கறை பிடிக்கவில்லை. அவளைப் பார்க்கும் பார்வையில் இருக்கும் பரிவு பிடிக்கவில்லை. எப்படி இருவருக்குள்ளும் பழக்கம் வந்திருக்கும் என்ற யோசனையுடனேயே பைக்கை ஓட்டிச் சென்றான்.
வீடு வந்து சேர்ந்தும் பைரவியை எழுப்பத்தான் யாராலும் முடியவில்லை. "மூஞ்சில தண்ணீ ஊத்தினா எழுந்திடுவா." என்ற சாருவிடம் சண்டைக்கு வந்தான் ராக்கி.
"கொஞ்சமாச்சும் உனக்கு மனசாட்சி இருக்கா? நல்லா தூங்குற பிள்ளைய போய் எழுப்ப சொல்ற. அதுவும் தண்ணீ ஊத்தி. ஊரையே பாதுகாக்குற பெண் போலிஸ் அவ. அவளுக்கு நிம்மதியா தூங்க உரிமை இல்லையா! அவள எழுப்பாம நீ தூக்கிட்டு போ மச்சி." என்க, மது முறைத்தான் அவனை.
"அப்ப நீ வேதாளத்த தூக்கிட்டு போன விக்ரமாதித்தன் மாதிரி முதுகுல தூக்கிட்டு போ எனக்கு என்ன வந்தது! நான் போறேன்" என்க, மது தான் தூக்கி கொண்டு வந்து பெட்டில் போட்டான். போட்டவனின் கழுத்தில் மாலையாக கரம் கோர்த்தவள் கணவனை அணைத்து தோளில் சாய்ந்து கொண்டு அங்கேயே இதழ் பதிக்க, மது அவளை நோக்கி குனிந்தான்.
ராக்கி, "நாங்க யாரும் பாக்கல. இதெல்லாம் சென்சார் ஷீனு.”
"ஏய் ச்சீ… பைக்ல ஒரு ப்ரவுன் கலர் கவர் இருக்கும். எடுத்திட்டு வா." என்றவன் சந்திரகலா வந்திருந்த போதே பைரவியின் காயம் பற்றி சொல்லி மருந்து எழுதி வாங்கியிருந்தான்.
அவளுக்கு வலிக்காது மயிலிறகாய் வருடுவது போல் வருடிக் கொடுத்து ஆயில்மெண்ட்டை தடவி விட்டவன், காயத்தைச் சுற்றி பேண்டேஜ் கட்டி விட்டு சென்றான். அவன் மனைவியின் மீது வைத்திருக்கும் அக்கறையை கண்ட ராக்கி,
"மச்சி, உங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சி." என்றவன்,
"இல்ல மறந்திட்டியோன்னு நியாபகப் படுத்தினேன்.. " எனக் கேலி செய்ய, மது அவனின் தலையில் தட்டி இழுத்துச் சென்றான்.
"இரு டா.. உன் ஆள நீ கவனிச்ச மாதிரி.. நான் என் ஆள பாத்திட்டு வர்றேன்." என்றவன் தாமரையைப் பார்க்கச் சென்றான். அவள் அப்போது தான் கண் விழித்திருந்தாள். அவளின் அருகில் சென்றவன் ஆறுதலாய் கரம் பற்றி,
"எல்லாம் கொஞ்சம் நாள் தான் பேபி. அப்றம் சரியாகிடும். நீ மட்டும் பயப்படாம தைரியமா இரு. ம்…" என்றவன் அவளின் கையில் சிறிய ப்ரேஷ் லெட்டை அணிவித்து,
"எந்தச் சூழ்நிலைலயும் இத கலட்ட கூடாது. " எனச் சொல்லி அவளின் முன் உச்சியில் இதழ் பதித்து சென்றான். அது தாமரைக்கு ஆயிரம் யானை பலத்தை தந்துவிட்டு சென்றது. ‘தன்னைக் காக்க இவன் இருக்கும் போது தான் ஏன் பயம் கொள்ள வேண்டும்.’ என்ற நினைப்பு அவளுக்கு வர, தாமரை நடந்தவைகளை மறந்து போனாள்.
"இது தான் நடந்தது. நேத்து ராத்திரி மது அண்ணா சாப்பாடு வாங்கிட்டு வர்ற கேப்ல சாராயக் கடைக்குள்ள போய்ட்டியா?." எனச் சாரு சந்தேகமாக கேட்க,
"ஏய் ச்சீ… யார பாத்து என்ன பேசுற? நான் சரக்கா!! ஹிம்.. உன்னோட முதலாளி அவகேடோ தந்த பியர் பாட்டிலயே நான் இன்னும் ஓப்பன் பண்ணல. பியருக்கு தாங்காத பாடி மத்தது எப்படி தாங்கும்?" என்க,
"நான் வேணும்னா வாங்கித்தாறேன்.. முழுசா குடிச்சிட்டு கவுந்திடுறியா? " என்று குரல் வர,
"ராக்கி பாய்." எனப் பெண்கள் குதுகலித்தனர். புன்னகையுடன் வந்து நின்றான், அவனின் ஒத்த ரோஜாவைப் பார்க்க,
வழக்கம் போல் கண்கள் கதை பேசியது. தாமரை வெட்கத்தில் சிவந்தது போனாள்.
"என்னடா நடக்குது இங்க!" என பையூவும் சாருவும் பார்த்துக் கொள்ள, தாமரை ஓடி விட்டாள்.
பைரவி, "பாய்… பாய்… உங்க லவ்வ பயங்கர ஜெட்டு வேகத்துல ஓட்டீட்டு போற மாதிரி தெரியுது."
"இந்த வேகம் பத்தாதும்மா. உன்ன மாதிரி கிடைக்கிற கேப்லலாம் கோல் போடுற திறம எனக்கு கம்மி தான். நீ வேணும்னா எனக்கு டியூஷன் எடுக்குறியா?"
"அதெல்லாம் சிறப்பா எடுத்திடலாம். ஆமா என் ஆளு எங்க? இன்னிக்கி நா பாக்கலாமா?" எனக் கண்சிமிட்டி கேட்க,
" முடியாது."
"என்ன முடியாதா!"
" சொல்ல முடியாது."
"ஏன்?"
"ஏன்னா அவெ உன்ன டைவர்ஸ் பண்ண சொல்லிருக்கான். அவெ மட்டும் பண்ணது பத்தலயாம். என்னையும் பண்ண சொன்னான். அதுனால நண்பனுக்கா நான் கோர்ட்டுக்கே போகாம அத வாங்கிட்டேன். இனி நீ யாரோ… நான் யாரோ… எங்கிட்ட என்னோட ஃப்ரெண்ட பத்தி பேசாத." என்றவன் உரிமையுடன் சென்று டயனிங் டேபிலில் அமர்ந்து கொள்ள, தாமரை உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
'என்னயவா கலட்டி விட பாக்குறீங்க!' என மனதிற்கு பொருமியவள், "ஹேய் தாமர நீ படம் பாப்பியா?"
"ம்… பாப்பேங்கா." என வேகமாக தலை அசைக்க,
"டார்ச் லைட்டுன்னு ஒரு படம் வந்திருக்கு பாப்போமா?" என்க, ராக்கி பாய்க்கு புரையேறியது.
"நல்லா இருக்குமா?"
"தெரியல. அதுல சதா கூட ஹைவேல நின்னுட்ட கைல டார்ச் லைட்ட வச்சிட்டு, லாரிய ஓட்டுறவங்கள நிப்பாட்டி எதோ செய்ற மாதிரி கத இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன். பாக்கலாமா." என்க, அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாமரையின் முகம் சூடாகி ராக்கியை அது வானலியில் வறுக்கத் தொடங்கியது.
அனல் காக்கும் பார்வை பார்த்தவளிடம் தப்பி செல்ல இயலாது பைரவியும் சாருவும் வழி மறித்து வம்பு பண்ண, ராக்கி மது இருக்கும் இடம் கூறினான். கூடவே இரு நாட்களுக்கு அவன் செல்லும் இடங்களை பற்றிய அட்டவணையையும் சொல்லிச் சென்றான்..
💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..