முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 61

 

அத்தியாயம்: 61



காலிங் பெல்லின் ஓசை… 


இரு முறை அடித்து அது அடங்க.  


"அடியே போய் யாருன்னு தான் பாறேன்." எனச் சாந்தி கத்தினார். 


"ம்ச்… இது உன் வீடு தான? நீயே போய் பாத்துக்க." என்றபடி பைரவி ஃபோனை நோண்டிக் கொண்டிருக்க, வேகமாக வந்த சாந்தி அதை பிடுங்கி கீழே வைத்து விட்டு, " போடி... உன் வீடு என் வீடுன்டு." எனத் துரத்தி விட்டார். 


"உண்மைய சொன்னா இந்தம்மாக்கு கோபம் கோபமா வருது. ச்ச… " எனப் புலம்பியபடி எழுந்தவள் தந்தை அமைதியாக வேடிக்கை பார்ப்பதை கண்டு, 


"கடைசி வரைக்கும் இந்தம்மா அதிகாரத்துக்கு கீழ தான் இருக்க போறிங்களா? சுதந்திரம்னு ஒன்ன அனுபவிக்கவே உங்களுக்கு ஆசையில்லையா!" எனக்  கேட்க,


"வேற வழி இல்லயேம்மா. இது தா‌ன் நிரந்தரம். பழகிடுச்சி…" என்றார் சேர்ம துறை. இருவரையும் ஒரு சேர முறைத்து விட்டு கதைவைத் திறக்க, அங்கு ராக்கி பாய் நின்று கொண்டிருந்தான். 


"ராக்கி பாய்! என்ன இந்த நேரத்துல?" என மணியை பார்க்க அது எட்டு என்றது.  


"அவசரம். வா. " எனக் கரம் பற்றி இழுத்துச் சென்றான் அவன். 


"சாந்திம்மா நான் பைரவி கூட்டீட்டு போறேன். நால் நாள் கழிச்சி பத்திரமா கொண்டு வந்து விட்டுடுறேன்." எனச் சாந்திக்கு குரல் கொடுத்து விட்டு பைக்கில் சாவியைப் பொருத்த,


"எங்க பாய்?" என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது பைக்கை எடுக்க, ஏறிக் கொண்டாள் பைரவி‌.


" பாய் எங்க போறோம்?"


"சாரதாம்மா வீட்டுக்கு." என்ற அவனின் முகம் இறுகி இருந்தது.


" சாரதாம்மாவ பாக்கவா? இந்த நேரத்துலயா!" என்றாலும் வேறு எந்தக் கேள்வியும் கேட்காது அமைதியாகி விட இருவரும் சாரதாவைப் பார்க்க வந்திறங்கினர்.


மயான அமைதி என்பார்களே அது போன்ற பேரமைதி நிலவியது அங்கு. பைக்கில் இருந்து இறங்கிய பைரவி சந்தோஷமாக துள்ளிக்குத்திக்காத குறையாக உள்ளே ஓடினாள். ஏனெனில் மதுவின் பைக் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. கணவனைக் காணும் ஆவலில் உள்ளே ஓட,


ஓர் அறையில் இருந்து மது வந்தான். உடன் சந்திரகலா. அவர் தான் டாக்டர். மது பைரவியைப் பார்த்தும் கோபமாகி பின்னால் வந்து கொண்டிருந்த ராக்கியை முறைத்தான். அவன் கண்டு கொள்ளவில்லை. 


"நல்லா இருக்கியா பைரவி? " என வாஞ்சையுடன் சில வார்த்தைகள் பேசிய சந்திரகலா, " ரொம்ப பயந்து போயிருக்கா. பாத்துக்கங்க. நைட்க்கு டிரிப்ஸ் போட்டிருக்கேன். முடியவும் எடுத்திருங்க." என்று மதுவுடன் பேசிபடி அவர் செல்ல, ராக்கியும் பின்னாலேயே சென்றான்.


"யாருக்கு என்னாச்சி? சாரதாம்மா!! ம்மா… " எனக் கத்த, அவர் உள்ளிருந்து எட்டி பார்த்தார். முகத்தில் அத்தனை சோகம்.


"போதும்… இதுக்கு மேல இழப்ப தாங்குற அளவுக்கு என் உடம்புலயும் மனசுலயும் தெம்பில்ல.‌ எல்லாத்தையும் விட்டுட்டு நாங ஊருக்கு போறேன்." என்ற போது கண்ணாயிரத்திற்கு அழுகை வெடித்தது‌‌. அவரைப் பாண்டி சமாதானம் செய்ய, பைரவி வேகமாக அறைக்குள் சென்றாள்.


அங்கு தாமரை விழி மூடி துயில் கொண்டிருக்க, அருகில் பாட்டிலைத் தழைகீழாக தொங்க விட்டு டியூப்பின் மூலம் திரவம் உடலுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.  


"பாண்டிண்ணா, தாமரைக்கு என்னாச்சி?" 


"மறுபடியும் கடத்த முயற்சி பண்ணிருக்கானுங்க‌. இந்த முறையும் உன்னோட புருஷெந்தா காப்பாத்துனாரு." என்க, பைரவி ராக்கியை தேடிச் சென்றாள். 


டாக்டரை வழி அனுப்ப என ராக்கியும் மதுவும் வெளியே நின்று கொண்டிருந்தனர். "இன்னைக்கி ஸ்கூல்ல என்ன நடந்தது." எனக் கேட்க, ராக்கி சொல்லத் தொடங்கினான்.


வழக்கம் போல் தாமரையின் வருகைக்காக பைக்கில் காத்திருந்த ராக்கி பாய்க்கு தாமரை அலுவலக அறையில் இருந்து வெளியே வருவது தெரிந்தது. அவள் கை அசைத்து டாடா காட்டினாள். அவளுக்காக கையசைத்து காட்டி விட்டு திரும்ப, அங்கு மது நின்று கொண்டிருந்தான். 


"நீ எங்க மச்சான் இங்க?"


"ஒரு வாரமா ஹிரானாவ நீயே கூட்டீட்டு வர்றியே! ஏன்னு பாக்க வந்தேன்?"  


"அது… அது…" என வெட்கப்பட்டு ஏதேதோ சொல்ல, அதைக் காணவும் கேட்கவும் சகிக்க முடியாது மது தலையில் அடித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டான் மது. அப்போது பாண்டி வந்திறங்கினான். 


"ஏன் பாண்டி லேட்? இது தான் கூப்பிட வர்ற நேரமா!" என உரிமையுடன் சண்டைக்கு சென்றான் ராக்கி.


"அது வர்ற வழில ஒரு குடிகாரெ கார் முன்னாடி விழுந்திட்டான். எம்மேல தான் தப்புன்னு சினேகித குடிகாரனுங்க சத்தம் போட, ஜனம் கூடி வேடிக்கை பாக்காரம்பிச்சிடுச்சி. அதா லேட்டு. செல்வி இன்னுமா வரலேல?" எனத் தங்கை வந்து நிற்கும் இடத்தை பார்க்க, அவள் இல்லை. 


"இன்னும் வரல போல. வருவா.”  எனப் பாண்டி கல்மேஜையில் அமர்ந்து கொண்டான். 


ராக்கி, "தாமர அப்பவே ஆஃபிஸ் ரூம்க்கு கையெழுத்து போட போனாளே." 


" அப்ப ஏன் வர?" என்ற பாண்டியின் குரல் ஓர் இனம் புரியாத பயத்திலும் வந்தது.‌


"வா பாத்திட்டு வரலாம்." என மது உள்ளே சென்று கேட்க, தாமரை கையெழுத்து போட்டு விட்டு கிளம்பி விட்டதாக கூறினர் அங்கிருந்தவர்கள்.


"போய்ட்டாளா! நாம எல்லாம் இங்க தானடா இருந்தோம். அப்றம் எப்படி போயிருப்பா? யார் கூட போயிருப்பா?" என மூவரும் குழம்பிப் போய் நிற்க, மது தன் லேசர் பார்வையால் பள்ளியை அளந்தான்.


ராக்கி, "நான் அவள பாத்து முழுசா ஐஞ்சி நிமிஷம் தான் இருக்கும். அதுக்குள்ள எப்படிப் போயிருப்பா?"


"நம்மல தாண்டி போயிருக்க வாய்ப்பில்ல. ஸ்கூல்குள்ள தான் இப்ப வரைக்கும் இருக்கணும். வெளில போறதுக்கு முன்னாடி பிடிக்கணும். வா… பாண்டி நீங்க வாட்ச் மேன அலாட் பண்ணி ரெண்டு கேட்டையும் செக்யூர் பண்ணுங்க. ராக்கி ஒரு ரூம் விடாம தேடு." என நண்பனுடன் பள்ளி வளாகத்திற்குள் சென்று தேடத் தொடங்கினர். முழுதாக பதினைந்து நிமிட தேடலுக்குப் பின் விளையாட்டு பொருட்களை அடுக்கி வைக்கும் அறையில் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தாள் தாமரை. 


அவளின் மூச்சை பரிசோதித்த மது, "ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். மைல்டான க்ளோரோஃபம் தான் குடுத்திருக்கானுங்க. நீங்க வீட்டுக்கு கூட்டீட்டு போங்க. டாக்டர நான் அனுப்பி வைக்கிறேன். என்ன ஆனாலும் கார எங்கயும் நிப்பாட்டாதிங்க." என்றவன் தாமரை காரில் அனுப்பி வைத்து விட்டு, ஒரு திசை நோக்கி ஓட, ராக்கியும் நண்பனுக்குப் பின் ஓடினான். 


ஓடிச் சென்ற மது PT ஆசிரியரைப் பிடித்து விசாரித்தான். ஏனெனில் அவர்கள் தேடத் தொடங்கிய போது, அவன் தான் திருட்டு முழி முழித்தது. அறையின் சாவியை தர மறுத்தது. இப்போது பயந்த போய் நிற்பது என அனைத்தும் அவன் தான் காரணம் எனச் சொல்ல, பிடித்திழுத்து வந்தனர். 


"ஸார்… ஸார்… எனக்கு எதுவும் தெரியாது. இன்னைக்கி நைட்குள்ள இந்தப் பொண்ண கடத்தணும்னு பணம் தந்தாங்க ஸார். எதுவோ நடக்க கூடாதுன்னு, இந்தப் பொண்ணு இருக்க கூடாதுன்னு பேசிக்கிட்டாங்க ஸார். நிறைய பணம் தந்தாங்க ஸார்."


"யாரு? " என ராக்கி கேட்க, அவன் ஒருவனின் புகைப்படத்தைக் காட்டி இவன் தான் என்றான். 


மது, "பொண்ண எங்க ஒப்படைக்க சொன்னாங்க?" 


"இடம்லாம் சொல்லல ஸார். பொண்ண மூட்டைல கட்டி வச்சிட்டு என்னைக் கிளம்பிட சொன்னாங்க ஸார்‌. அவங்களே வந்து தூக்கிட்டு போய்டுவானுங்கன்னு நான் நினைச்சேன். ஐஞ்சி லட்சம் தந்தாங்க. அவ்ளோ தான் ஸார்." என்றவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு சாரதா இல்லத்திற்கு வந்தால், தாமரை இன்னும் கண் திறக்க வில்லை.


" இது அவனுங்களோட மூனாவது அட்டெம்ட். " என்ற ராக்கியால் இதற்கு முன் கடத்தல் முயற்சியைத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. 


"அன்னைக்கே பைரவி சொன்னா! போராட்டத்த நடக்கவிடாம பண்ண முயற்சி பண்ணுவாங்கன்னு. எவ்ளோ ஜாக்கிரதையா இருந்தும் மறுபடியும் கடத்திட்டானுங்க ***." எனப் பாண்டி கோபமாக திட்ட,


"என்ன மறுபடியுமா!! அப்ப இதுக்கு முன்னாடியும் செல்விய கடத்துனாங்களா?" என அதிர்ந்து கேட்ட சாரதா மயங்கி சரிய, அவரையும் ஓர் அறையில் படுக்க வைத்தனர். கண்ணாயிரம் போராட்டத்தை மட்டுமல்ல அரசனூர் கேஸ்ஸையும் வாப்பஸ் வாங்கி விட்டு ஊருக்கு சொல்வதாக முடிவெடுத்தார்.


"நாங்க நிம்மதியா வாழணும். எம்பொண்ணுக்கு அவா நினைச்ச வாழ்க்க அமையணும். அதுக்கு இவனுங்க விடமாட்டானுங்க. கேஸ்ஸ வாப்பஸ் வாங்குறது மட்டும் தான் ஒரே வழி. நாங்க நிம்மதியா இருக்க இது தான் வழி. இந்த கேஸ்ஸுக்கா இன்னும் எத்தன பொம்பளப் பிள்ளைக்கள பழி குடுக்குறது." எனச் சொல்லி அழ, வரிசையாக சோகத்தில் மூழ்கியவரை கரை சேர்க்கத் தான் பைரவியை அழைத்து வந்தான் ராக்கி.


"தாமரைய கடத்துனதுக்கும் சுடரக்கா கொலைக்கும் சம்மந்தம் இருக்குன்னு இப்ப உறுதியாகிடுச்சி. அவனுங்கள சும்மா விடக் கூடாது." எனப் பைரவி கோபமாக சொல்ல,


" என்ன பண்ணப்போறாளாம் சும்மா விடுறதுக்கு. இதோ பாரு எது பண்றதா இருந்தாலும் அதப் பண்ண போலிஸ் இருக்கு. சும்மா விடமாட்டேன் சுமந்திட்டு இருப்பேன்னு சொல்லி கண்டத செஞ்சி எதுலயாது மாட்டிக்காம இருக்கச் சொல்லு. நான் பிரவீன்ட்ட பேசிட்டேன். இந்த கேஸ் சீபிஐ கிட்ட போய்டும். " என மது பைரவியிடம் பேசாது ராக்கியிடம் சொல்ல,


"அதுக்கு இந்த ஊர்வலம் நடக்கணும்." எனப் பைரவி முணுமுணுத்தபடி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


பாண்டி, "எப்படி நடக்கும்? நடக்க விட மாட்டானுங்க. கூட்டத்துல கலவரம் மாதிரி ஏதாவது பண்ணி அப்பாவ சாரதாம்மாவன்னு எல்லாத்தையும் உள்ள தூக்கி வச்சிடுவாங்க. அதுவும் நம்ம எதிரிக்கு தொக்க போய்டும்." 


ராக்கி, "ஊர்வலம் நடக்கலன்னாலும் நாம பயந்திட்டோம்னு சந்தோஷமா திரிவாங்க."


"நடக்கும்… ஊர்வலம் நல்ல படி நடக்கும்." என்ற மது ஃபோனில் உத்தரவுகள் பிறப்பிக்க தொடக்கினான். அதாவது மதுவின் ப்ளாக் கேட்ஸ் பாதுகாப்பில் ஊர்வலம் நடக்க உள்ளது.   


திட்டங்கள் பல போட்டுவிட்டு பைரவியைத் தாமரைக்கு உதவியாக விட்டு செல்ல, ராக்கி சாருவை அழைத்து வருவதாக கூறிச் சென்றான். 


மது பைக்கை உதைத்து புறப்படும் நேரம் வேகமாக பைரவி அவனின் தோளில் கரம் வைத்து பின்னால் ஏறப்பார்க்க,


"ஏய்… எங்க ஏறுற?" என்றான் மிரட்டலாக.


"ம்ச்… கடைக்கி போகணும்."


"என்ன கடைக்கி?"


"மாத்து டிரெஸ் வேண்டாமா மாமா… இதே டிரெஸ்ஸோட நாலு நாள் இருந்தா நல்லா இருக்காது. அதுனால என்னைக் கடைக்கி கூட்டீட்டு போய், உங்காசுல டிரெஸ் எடுத்து குடுத்து, என்னை மறுபடியும் இங்கயே வந்து இறக்கி விட்டுடுங்க. சரியா!" எனச் சொல்லி ஏறி அமர, 


"ஏய் இறங்கு டி கீழ. யார் யாருக்கு செலவு செய்யணும். போடி அங்கிட்டு." என்க, அவள் இறங்காது, 


"ம்ச்… என்ன மாமா நீ! நைட் போண்டோட இருக்கேன். கொஞ்சம் இறக்கம் காட்ட கூடாதா! " எனச் சிணுங்க,


"தாமர டிரெஸ்ஸ வாங்கி போட்டுக்கோ. " 


"அது எப்படி எனக்கு சரியா இருக்கும். லூசு மாமா நீங்க…" 


"ம்ச்… அப்ப கால் பண்ணி சாருவ எடுத்திட்டு வரச் சொல்லு. "


"எங்கிட்ட பேலன்ஸ் இல்ல. அத்தோட என்னோட டிரெஸ் எதுவும் அப்பார்ட்மெண்ட்ல கிடையாது. அதுனால எடு மாமா வண்டிய. நாம ஷாப்பிங் போய் ரொம்ப நாள் ஆச்சி. " என்று கூறி இடையை அணைக்க, அவன் பைக்க விட்டு கீழே இறங்கி விட்டான். 


"ஆட்டோல போ."


"இந்த நேரத்துக்கு அப்றம் ஆட்டோல எப்படி? பயம்மா இருக்குமே!"


"உனக்கா… பயம்மா… "


"ம்… வேணும்னா நீங்க மட்டுமே போய் எனக்காக வாங்கிட்டு வர்றிங்களா! ம்‌… உங்களுக்கு தான் என் சைஸ் தெரியுமே! எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டு. ம்… வெய்ட் பண்றேன்." எனச் சொல்லி அவனின் கன்னம் கிள்ளி விட்டு இறங்க, 


"வந்து தொல. " என்றவன் மனைவியுடன் பைக்கில் பயணப்பட உள்ளான். 


"இதோ பாரு உன்னக் கூட்டீட்டு போகணும்னா ரெண்டு கண்டிஷனர் இருக்கு. " 


'கல்யாணம் பண்றதுக்குத்தான் கண்டிஷன்னு நினைச்சேன்.. பைக்ல ஏற்றதுக்கும்மா!' பைரவியின் மைண்ட் வாய்ஸ். 


"சிங்கில் சைடு தான் உக்காரணும். டபுள் சைட் கால தூக்கி போட்டு உக்காரக்கூடாது."  


அவனை கட்டி அணைத்த படி செல்லலாம் என்ற அவளின் ஆசையில் ஆசிட்டை ஊற்றியவன்,


"என்னலப் பிடிக்க கூடாது. டைடுல கம்பி இருக்கு பாரு. அத மட்டும் தான் நீ தொடணும். மீறி எதாவது வம்பு பண்ண!! ரோடுன்னு கூட பாக்க மாட்டேன். இறக்கி விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்." என்க, அவள் முணுமுணுத்தபடி எறி அமர்ந்து கம்பியை பிடித்துக் கொண்டு "போலாம்.. " என்றாள். 


எவ்வித குறும்பும் செய்யாது கண்ணாடியில் தெரிந்த தன் கணவனின் முகத்தை ரசித்தபடியே வந்தவளை துணிக்கடை வாசலில் இறக்கி விட்டுவிட்டு வெளியேயே மது நிற்க,


"நீயும் வா மாமா. வந்து செலக்ட் பண்ணிக் குடு." என்றாள். 


"நான் முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு டிரெஸ் செலக்ட் பண்ணி தர்றது இல்ல."


"நான் முன்ன பின்ன தெரியாதவளா!" என இடையில் கைகளை வைத்து முறைக்க, 


"ஆமா…"


"ம்ச்… கட்டுன பொண்டாட்டிக்கி." என வாயை திறக்க, 


"இனி அந்த டயலாக்க நீ யூஸ் பண்ண முடியாது. ஏன்னா நீயும் நானும் ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் இல்ல." 


"சரி. முன்னாள் மனைவிக்காக இதக் கூட செய்ய மாட்டிங்களா! எல்லாம் என் நேரம்." வழக்கம் போல் புலம்ப, மது தலையில் அடித்துக் கொண்டு கடைக்குள் சென்றான். 


பைரவி ஒவ்வொரு உடையாக எடுத்துக் காட்ட, அவன் அசையாது ரோபோ போல் நின்றான்.


"நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த சொல்லுதா பாரு. curd rice." என்றவள் பில் போட்டு விட்டு திரும்ப, மதுவின் கையிலும் ஒரு கவர் இருந்தது. தனக்கு தான் வாங்கி உள்ளான் என ஆசையுடன் கை நீட்ட, அவன் தன் தங்கைகளுக்கும் தங்கை மகளுக்கும் வாங்கி உள்ளேன் என்று விட்டு சென்றான்.


'இவன என்ன செஞ்சா நம்ம பைரவி வழிக்கி வருவான்.. ம்.. தெரியலயே.. ' 

💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...