அத்தியாயம்: 12
" எப்படி தா இந்தப் பீசாவ சாப்பிடுறியோ வில்?. ஒரு வாசமும் இல்ல. " என முகம் சுழித்தாள் வாசு.
"இதுல இத போட்டா வாசம் வரும் வாசு. ஹர்ப்ஸ்... ம். ஸ்மெல் பண்ணி பாரு. " என ஒரு டப்பாவில் இருந்த பொடியைப் போட்டு அவளின் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து காட்டினான் வில்லியம்.
"ம்... வில். உனக்கு மூக்கு மறத்துப் போற நோய் வந்துடுச்சின்னு நினைக்கிறேன். அந்த நோய் நாக்குக்கும் பரவி அது செத்துப்போறதுக்குள்ள உடனே ட்ரீட்மெண்ட் பாரு. " என மூக்கை மூடிக்கொண்டு பேச, வில் அவளின் முன் தான் செய்த பீசாவை காட்டி வம்பிலுத்தான்.
மற்ற உணவுகள் கூட ஓகே. பட் அவளுக்கு அந்தப் பீட்சாவை மட்டும் பிடிக்கவே பிடிக்காது. எதை வேண்டுமானாலும் சாப்பிடுவாள். சில நான் வெஜ் தவிர்த்து. ஆனால் அது மட்டும் கிடையாது.
'காஞ்சி போன பன்னு. அத எப்படி எந்தக் காயும் இல்லாம சாப்பிடுறது. நா சாஃப்டான பன்னையே டீக்குள்ள முக்கி தா சாப்பிடுவேன். இவனுங்க என்னடான்னா கலர் கலரா சாஸ்ஸ ஊத்தி அதுக்கு மேல பேருக்குன்னு நாலு கறியவும் காயவும் வச்சி தந்துட்டு சாப்பிடுன்னு சொல்றாங்க. ச்ச.' என்பவள் தட்டை எப்பொழுதும் மூன்று காய்கறிகளாவது நிரம்பி இருக்கும். சாதம் கம்மியாக இருந்தாலும் குழம்பை அதிகமாக ஊற்றிச் சூப் போல் குடிப்பவள். புளிப்பாகக் காரமாக உண்பவளுக்கு எப்படி பீட்சாவின் சுவை பிடிக்கும்.
" வில், உனக்கு இப்ப தேவயான ட்ரீட்மெண்ட் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இத சாப்பாட்டு பாரு. அப்ப தா கோமால கிடக்குற உன்னோட நாக்குக்கும் மூக்குக்கும் புத்துயிர் கிடைக்கும். " என்றவள் இந்தியா உணவுகள் தயாரிக்கும் சமயற்கூடத்திற்கு சென்றாள்.
தோசை மாவை ஊற்றி முறுகலாகத் தோசை வார்த்தாள் வாசு. நெய் மணக்கும் அதன் தோசையின் வாசம், சுவை நரம்புகளைத் தூண்டி வயிற்றில் பசியை உண்டாக்கும். அதைக் கூம்பு போல் சுருட்டி ராக்கெட் தோசை செய்தாள். நான்கு வகை சட்டினிகளை சிறிய கின்னத்தில் ஊற்றிச் சாம்பாரை மட்டும் பெரிய கின்னத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே வந்தாள் வாசு.
"லவ்லி லவ்லி தோசா... டேஸ்டி டேஸ்டி தோசா... யம்மி யம்மி தோசா... " எனக் கத்திக் கொண்டே வந்தவளின் கரத்தில் இருந்த தட்டு வழிப்பறி செய்யப்பட்டது.
"ஹேய்… அது வில்லுக்காக நானே சுட்டு எடுத்துட்டு வந்தது. " என்க.
"பரவாயில்ல வாசு. நா சாப்பிட்டு கமெண்ட் பண்றேன். பில் குடுத்து கூடவே டிப்ஸ்ஸும் குடுத்துட்டு போறேன். " என்றபடி மேசையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான் க்ரிஷ்.
"என்ன ஆடு தனியா வந்திருக்கு!. எங்க உங்க குடும்பம். " என்றபடி அவனின் எதிரில் அமர்ந்தாள் வாசு.
"இப்பதா அந்தத் தொல்லைங்க இல்லாம இருக்கேன். அது பொறுக்களையா உனக்கு. " என்றவன் தட்டை வேகமாகக் காலி செய்தான்.
"க்ரிஷ் பாட்டிய எப்போ பேக் பண்ணிங்க?. "
"நேத்து நைட்டே கார் ஏத்தி விட்டுடுடேன். கூடவே எம்மாமனாரையும் தா. ஒரு மனுஷெ பேசுறாருன்னு கேட்டா, அவரு நிறுத்தாம பேசிட்டே இருக்காரு. கூட அவரு அம்மா வேற. சொல்றதெல்லாம் கேக்குறாங்கிறதுக்காக எல்லாத்தையும் சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி?. அந்த மேனஸ் அந்த கும்பலுக்குக் கிடையாது. ச்ச… என்ன பண்ண! வாக்கப்பட்டாச்சி. அனுபவிக்க வேண்டியது தா. ம்... வாசு ஒன் மோர் தோசா ப்ளிஸ். " என்க, வாசு புன்னகையுடன் எழுந்து சமயலறை சென்றாள்.
" அப்ப மாதேஷ், தாரிகாக்கா, அவங்க ரெண்டு பேரும் இங்க தா இருக்காங்களா? "
" ம்... அம்மைக்கும் மகனுக்கு மட்டும் சூரியன் பன்னெண்டு மணிக்கி தா எந்திரிக்கும். அது வந்து மூஞ்சில சுள்ளுன்னு அடிச்சாத்தா எந்திரிப்பா. அதுக்கு முன்னாடி எழுப்புனா நாய் மாறி நம்மள கொதரி விட்டுடுவா. அதா டிஸ்டப் பண்ணாம வந்துட்டேன். ம்…
வாசு தோசன்னா வெறும் தோச மட்டும் தா எடுத்துட்டு வரனும்னு அவசியம் இல்ல. இன்னைக்கின்னு எதாவது ஸ்பெஷல்லா செஞ்சிருப்பிங்கள்ள அதையும் சேத்து எடுத்துட்டு வா. " எனக் குரல் கொடுக்க, வாசு சில ஐட்டங்களை எடுத்து வந்தாள். அவனுக்கு மட்டுமல்ல அவனைப் போல் வந்திருந்த கஸ்டமர்களுக்கும் அவளே சப்ளை செய்துகொண்டிருந்தாள்.
" வாசு, கார்த்தி அங்கிள் எங்க?. "
"மேயர பாக்க போயிருக்காங்க. வந்திடுவாங்க." என்றவளை பிடித்து நிறுத்தித் தன் எதிரில் அமர வைத்தான் க்ரிஷ். அவனுக்கு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.
"பட்டம் வாங்கியாச்சி. அடுத்து என்ன பண்ண போற?. "
" நியூயார்க் சிட்டில எங்க ஃப்ரண்ட்ஸ் கூட வேல பாத்திட்டு தா இருக்கேன். ஹாலிடேஸ்காக இங்க வந்திருக்கேன். "
"என்ன வேலம்மா.? "
"நாங்க படிச்சது ஹோட்டல் மேனேஜ்மென்ட். அப்ப எதுல வேல கிடைக்கும். ம்… அந்த ஊர்ல இருக்குற ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தா சிக்ஸ மன்த் டிரைனிங். ஆல் மோஸ்ட் முடியப் போது. அடுத்து பக்கத்துல எங்கையாது ஒரு ஹோட்டல்ல வேல தேடணும். அப்பதா கார்த்திப்பாவ நினைச்ச நேரத்துல பாக்க முடியும்.. " என்றவளின் முன் தன் விசிட்டிங் கார்டை நீட்டி.
" உன்னோட ட்ரெய்னிங் முடியவும் எனக்குக் கால் பண்ணலாம். ஜாப் கண்டிப்பா கிடைக்கும். சர்வீஸ் ஃப்ரீ தா. ப்ரோக்கர் ஃபீஸ் எதுவும் கிடையாது. பட் டெய்லி உங்க ரெஸ்டாரன்ட்ல இருந்து ப்ரேக் பாஸ்ட் வந்திடணும். டீல் ஓகேவா. " என்றவன் காட்டிய கார்டில் இருந்த ருத்ரதேவ்வின் நம்பரை பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் வந்தது. அதை தலையை உலுக்கி ஒதுக்கியவள்,
"ம்... நல்ல ஆளு தா ஸார் நீங்க. சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சி. உங்க ஹோட்டலுக்கு வேலைக்கி ஆள் எடுத்த மாறியும் ஆச்சி. " என விளையாட்டாகப் பேசி எழுந்து செல்ல, அப்போது கதவுகள் படார் எனத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ருத்ரா.
'எப்படி கழுகுக்கு மூக்குல வேர்த்த மாறி வந்து நிக்கிறான் பாரு?. இவனுக்கு மட்டும் ஆயுசு நூறுன்னு சொல்ல மட்டேன்ப்பா. ' என மனதில் அவனைத் திட்டிக் கொண்டு அவனை நிமிர்ந்து ஓர் அலட்சிய பார்வை பார்த்தபடி மற்ற டேபிளை கவனிக்க சென்றாள் வாசு.
விளம்பரப்படங்களில் காட்டும் ஹச் டாக் போல் க்ரிஷின் கண்கள் வாசு எங்குச் சென்றாலும் அங்கேயே செல்ல, அவனின் பார்வையை மறைத்தபடி அவனுக்கு அருகில் வந்து நின்றான் ருத்ரா.
"ம்ச்... தேவா வழி விடு. மறைக்கிது. அட தள்ளி நில்லப்பா. " என இடமும் வலமும் அசைந்தபடி சொல்ல,
"அங்க என்ன லைவ் ஷோவா நடக்குது. எட்டி எட்டி பாக்குற. உக்காரு டா. " என எழுந்து நின்ற அவனை இழுத்து பிடித்து அமர வைத்தான்.
" ஏன்டா உனக்கு இந்தக் காண்டு. நா ஒரு பொண்ண பாத்தா பொறுகாதே. " என்க.
"நியாயமா பாத்தா இது நா சொல்ல வேண்டிய டயலாக். நீ எதுக்கு டா சொல்றா?. அதுவும் நீ கல்யாணம் ஆகி குட்டி போட்டவெ. நீயெல்லாம் எந்தப் பொண்ணையும் நிமிந்து கூடப் பாக்க கூடாது. " தேவ்.
" பாத்தா!. பாத்தா என்னவாம்.? என்ன டா பண்ணுவ?. உனக்கு நா அண்ணே. உன்ன விட மூணு வர்ஷத்துக்கு முன்னாடியே இந்த உலகத்த பார்த்துப் பழகுனவே. வந்துட்டான் எனக்கு அட்வைஸ் மழைய அள்ளித் தெளிக்க. " எனக் குரல் உயர்த்தி திட்ட,
" ம்... ஆறு வர்ஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணவேன். அத சொல்ல மறந்துட்ட. " என்க, க்ரிஷ் கண்டு கொள்ளவே இல்லை. அவனை முறைத்து பார்த்தபடி அவனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான் தேவ்.
பாவம் அமைதியாக அமர்ந்தவனின் அலைபேசி அநாமத்தாகக் கண்ணாடி டம்பளரின் சப்போட்டுடன் நிற்பதை நம்ம அப்பாவி க்ரீஷ் அறியவில்லை. க்ரீஷ் தன் பாட்டுக்கு ருத்ரதேவ்வை திட்டிக் கொண்டே இருந்தான். ஏனெனில் வாசுவ பாக்க விடாம எதாவது செய்து கொண்டே இருப்பதால்.
"ஆமா உனக்கு என்ன வேல இங்க?. " என இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் ஒரே நேரத்தில் கேட்க,
"நீ தா எனக்கு முன்னடியே உலகத்த பாத்தவனாச்சே நீயே சொல்லு. " ருத்ரா.
"ரெஸ்டாரன்ட்டுக்கு எதுக்கு வருவாங்க. சாப்பிடத்தா.. ஆமா உனக்கு என்ன வேலை இன்டியன் ரெஸ்டாரன்ட்ல. " என்க.
" நானும் சாப்பிடத் தா வந்தேன். " என்றவனின் முன் வில்லியம் சில பல காய்கறிகளை வேகாது எடுத்து வந்து சலெட் என்ற பெயரில் வைத்துவிட்டு செல்ல, ருத்ரா சாப்பிட தொடங்கினான்.
"நீ மட்டும் ஏ தனியா வந்த?. " தேவ்
" நிம்மதிய தேடி வந்தேன். "
" தாரிகா கூட இருக்குறது உனக்கு நிம்மதியா இல்ல?. சின்ன வயசுல இருந்து காதலிக்கிறதா சொல்லி அடம்பிடிச்சி ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டியே. அப்ப இருந்த லவ்வு எங்க போச்சி. வத்திப்போச்சா?. "
"போச்சி தா. போச்சி. எலான் மாஸ்க் ராக்கெட்ல ஏத்தி எங்கையாது போய் வெடின்னு டிக்கெட் கூட எடுக்காம அனுப்பி விட்டுடுட்டேன். போதுமா." எனச் சரக்கடிக்காமலேயே உலறினான் க்ரிஷ்.
"என்னடா பிரச்சன உங்களுக்குள்ள.? "
"அதெல்லாம் உனக்குப் புரியாது. நீ ஒரு முரட்டு சிங்கிள். என்ன மாறிக் கல்யாணம் பண்ணி கருங்கடல்ல விழுந்தவன கர சேக்க நினைக்கிறதே தப்பு. நிச்சல் தெரிஞ்சாலும் காலுல மாட்டுன தாமர தண்டு மாறி நம்மள சுத்தி கட்டி போட்டிருவாளுக. சாகுறத தவிர வேற வழியே கிடையாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க அப்பதா அண்ணே எவ்ளோ பெரிய தியாகின்னு புரியும். நா பெற்ற கஷ்டத்த நீயும் அனுபவிப்ப." என்றவனின் முன் வாசு உணவுத் தட்டை வைத்துவிட்டு ருத்ராவை பார்த்திடாதபடி கவனமாக செல்ல, க்ரிஷ் அவளை மொய்க்க ஆரம்பித்தான்.
" தியாகியய்யா… தியாகியய்யா… இப்ப நீங்கப் பண்ணீட்டு இருக்குறதுக்கு பேரு என்ன தியாகியய்யா.? " என ராகம் போட்டுக் கேட்டான் ருத்ரா.
" உனக்கு ஒன்னுமே தோனலயா?."
"என்ன தோனனும்ங்கிற?. "
"ம்ச்… வாசு வ பாக்கும்போது உனக்கும் எதோ மாறி ஃபீல் ஆகுதுல்ல. " என்றவனை ஏற இறங்க பார்த்தவன்.
"ம் வரத்தா செய்து. ஆனா எனக்கு வர்ற ஃபீல் வேற. அது நல்ல ஃபீலிங்கு. ஆனா உனக்கு அந்த ஃபீல் வரக் கூடாது. தப்பு. "
" தப்பில்ல தப்பில்ல. எல்லா ஃபீலிங்குமே ஒன்னுதா. அதுல என்ன சரியா தவறான்னு ஒன்வேர்டு கொஸ்டீன் மாறிக் கேட்டுட்டு?. எனக்கு அவள பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு. " என்றவனின் குரலில் விளையாட்டு இல்லை.
‘நிஜமாகவே ஃபீல் பண்ணு கூவுறான் போல.’
" இருக்கும் இருக்கும். உன்னோட கண்ணு ரெண்டையும் நா நோண்டி எடுத்துட்டா எப்படி பாப்பன்னு நானும் பாக்கறேன். " என கோபமாகக் கேட்டபடி மகனைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் தாரிகா.
"கம் மாதேஷ். நாம ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணீட்டு வாசல்லயே வெய்ட் பண்ணி ஸ்டெக்சர உருட்டீட்டு வருவோம். கம்..." எனச் சிறுவனை அழைத்துக் கொண்டு தள்ளி இருந்த டேபிளில் அமர்ந்து தாரிகா சண்டையை வேடிக்கை பார்க்க, க்ரீஷ், ‘நீ எங்கம்மா இங்க’. என்பது போல் பார்த்தான்.
கோவை சரளா போல் அவனை வெளுத்து வாங்கும் தோரனையில் நின்று கொண்டிருந்தாள் தாரிகா.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..