அத்தியாயம்: 11
"ருத்ரா Where are you. I am waiting for you. " எனப் பல முறை மெஸ்ஏஜ் அனுப்பி விட்டாள். காலும் செய்து விட்டாள். அனுப்பிய மெசேஜ்ஜை படித்து விட்டான் தான். ஆனால் பதில் தான் அனுப்பவில்லை.
"கார்த்திப்பா இன்னும் பத்து நிமிசம். அவன நீங்கப் பாத்து ஓகே சொன்னா போதும். ப்ளிஸ் கார்த்திப்பா. " எனக் கடிகாரத்தை திருப்பித் திருப்பி பார்த்தபடி இருந்த கார்த்திக்கிடம் கெஞ்சினாள் வாசு.
" வாசும்மா… நேரம் ஆச்சி. இப்ப கிளம்புனாத்தா வீட்டுக்குப் போக சரியா இருக்கும். இன்னொரு நாள் பார்ப்போமே. அங்க ஜோஹிதா தனியா இருப்பா. " என எழ மகள் பத்தே பத்து நிமிடம் கேட்டாள். சரி எனத் தலையசைத்தவன் ஒரு கூல் டிரிங்குடன் அமர்ந்து விட்டான்.
பாவம் வாசு. ருத்ராவிற்கு ஃபோன் செய்தபடி தலையை எல்லா பக்கமும் திருப்பி அவன் வருகிறானா என ஆந்தைபோல் தன் கண்களால் தேடிக் கொண்டே இருந்தாள். அப்போது அவளின் பார்வை வட்டத்திற்குள் ஒரு ரெட் ஜெர்கின் அணிந்த உருவம் பட்டது. அந்த உருவம் வெகுநேரமாக அங்கேயே தான் இருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. கூடவே அந்த உருவம் ருத்ரா தான் என்று அவள் மனம் சொல்லியது.
ஆம் உண்மை தான் அது ருத்ரா தான். அவர்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டான். இருவரையும் பார்த்தபடி வெகுநேரமாக அமர்ந்து இருக்கிறான். அவள் அனுப்பிய மெஸ்ஏஜ்ஜை படித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவர்களின் முன் தான் செல்லவில்லை. ஏன் என்று தான் தெரியவில்லை.
உற்று பார்த்த வாசு, அது ருத்ரா தான் என்று உறுதி செய்து கை அசைத்தாள். அவள் தன்னை கண்டு கொண்டதன் அடையாளமாகப் புன்னகை பூத்து எழுந்து நடந்தவன், அப்படியே வெளியே சென்று விட்டான். அவளிடம் பேசவில்லை. செல்லும் அவனின் உதடுகள் வளைந்திருந்தாலும் முகம் உணர்ச்சிகளைச் சுத்தமாக துடைத்து எடுத்தது போல் இருந்தது.
'ஏன் தன்னிடம் பேச வரவில்லை. ' எனக் குழம்பிய படியே இருந்தாள் அவள்.
"கார்த்திப்பா போலாம். "
"ருத்ராவ வரலய. "
"இல்ல. அவெ வருவான்னு எனக்குத் தோனல. " என்றவளின் குரலில் வருத்தமும் கவலையும் கூடவே அழுகையும் இருந்தது. வேறு எந்தக் கேள்வியும் கேட்டு அவளைச் சங்கடப்படுத்தாமல் வீட்டிற்கு அழைத்து வந்தான் கார்த்திக்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவன் அந்த இடத்தில் இருந்திருப்பான். ஏனெனில் அவள் உள்ளே வரும் போதே அந்த ரெட் ஜெர்கின் அணிந்த உருவம் இருந்தது. அப்படி எனில் நாங்கள் வருவதையும், இவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் அறிவான். ஆனால் ஏன் தன்னிடம் பேசவில்லை என்ற கேள்வி மூளையை குடைந்து கொண்டே இருந்தது. ஒரு வேளை கார்த்திக்கை பார்த்ததும் பேசாமல் சென்றிருப்பானோ என்ற சந்தேகம் எழ. அவனுக்கு மெசேஜ் செய்தாள் வாசு.
இம்முறை அது அவனுக்குச் செல்லவே இல்லை. கால் செய்தாலும் போகவே இல்லை. அவளின் நம்பரை ப்ளாக் செய்து விட்டான் போலும்.
ஏன்?.
சரி அத்தோடு முடிந்து விட்டதா?. இல்லையே. அவளுக்குத் தான் அவனைப் பற்றிய சிறு சிறு விசயங்கள் தெரியுமே. எனவே அவன் யார் இப்போது எங்கிருக்கிறான் என்று தேடி நேரில் சென்று பார்க்க முயற்சி செய்ய, அதற்கும் அப்பு வைத்தான் அவன்.
" வாசவி உன்ன பிரின்ஸிபால் மேம் கூப்பிட்டாங்க. " என ஒரு ஆசிரியர் சொல்ல, சென்று பார்த்தாள். அங்கு அவளுக்கு முன்னதாகவே பிரின்ஸ்பாலின் முன் கார்த்திகேயன் அமர்ந்திருந்தான்.
"கார்த்திப்பா என்னாச்சி?. " எனப் பதறிப் போய்க் கேட்க.
"இதுவர எதுவும் ஆகிடல. பட் இனியும் ஆகக் கூடாதுன்னா நீங்க உங்க மகள கண்டிச்சி வைங்க. " என்றார் பிரின்ஸி காட்டமாக. அவரின் முன் தன் தந்தைக்கு தலைகுனிவாகிப் போனதை போல் உணர்ந்தாள் வாசு.
"அதென்ன பழக்கம் இது! போட்டுக் குடுக்குறது. மூணு வாரம் எங்கிட்ட நல்லா பேசிட்டு. அந்தம்மாட்டா என்ன போட்டுக் குடுத்திருக்கான். அதுவும் அவனோட ஃபோன் நம்பர ஹேக் பண்ணி எடுத்தேன்னு. அதுமட்டுமில்ல என்னென்னமோ சொல்லிருக்கான். ச்ச. வாடாப் பழகலாம்னு தான கூப்பிட்டேன். பிடிக்கலான்னா பிடிக்கலான்னு சொல்லணும். இல்ல பேசிப் பழகிருக்கணும். ரெண்டுமே பண்ணாமா போட்டுக் குடுத்துட்டு போயிருக்கான்.
அழகா இருக்கான். நா நினைச்ச மாறி இருக்கான்னு, அவன ஃப்ரண்டாக்காக ஆசப்பட்டேன். ச்ச... எனக்கு இந்தப் பாய் ஃப்ரண்டே செட் ஆகல. அவ்ளோ தா. இனிமேயும் நா யாருகிட்டையும் போய் எனக்கு ஃப்ரண்டா இருங்கன்னு கேக்கப் போறது இல்லை. ம்... " என அவளை முடிவெடுக்கும்படி செய்து விட்டான் ருத்ரா.
அவன் அவளிடம் பேசாமல் எழுந்து சென்றதன் காரணம் என்ன எனப் பின்னால் பார்க்கலாம்.
எப்போது அவன் பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தனோ அன்றே அவன் சம்மந்தமான ஃபோன் நம்பர், chat history என அனைத்தும் அழித்துவிட்டாள். தன் ஃபோன் நம்பரையும், ருத்ரா என்ற பெயரையும் தான். இவை எல்லாம் நடந்து பல ஆண்டுகள் முடிந்து விட்டது. மீண்டும் அவளின் முன் வந்து அவனாக நேற்று தான் பேசி உள்ளான். இப்போது அழைக்கிறான் ‘வா பழகலாமென’. என்ன செய்யப் போகிறாளோ?.
காலை ஏழு மணி.
வழக்கம்போல் எழுந்தவள் தன் டிராக் ஃபோண்டை மாட்டிக் கொண்டு காதில் ஹெட்செட்டுடன் பாடல் கேட்டபடி ஓடி இல்ல ஆடிக் கொண்டே சென்று வந்தாள் வாசு.
"குட் மார்னிங் மாம்ஸ். என்ன பண்ணீட்டு இருக்கிங்க?. " எனத் தங்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகனை பார்த்துக் கேட்டாள் வாசு. அவளின் பிரிய மாம்ஸ் அவர் தான். கார்த்திக் இல்லாத நேரம் அவளை வசை பாட காத்திருக்கும் உஷாவிடமிருந்து காப்பாற்றும் ஆபத்துதவி அவர் தான்.
" வா வாசு. புல்லு அதிகமா வளந்துடுச்சி. அதா வெட்டிட்டு இருக்கேன். " என்றவர் பனியனும் லுங்கியுமாய் கையில் கத்தரிக்கோல் வைத்திருந்தார். அதை வாங்கி கொண்டு வாசு அதிகமாக வளர்ந்திருக்கும் செடியினை அழகிய கரடி வடிவில் வெட்டத் தொடங்கினாள்.
"குட் மார்னிங் வாசு. "அஸ்வின் அவனின் கையில் சிறிய கார் போன்ற ஒரு புல் வெட்டும் இயந்திரம் இருந்தது. அதைக் கொண்டு புற்களை ஒட்டாக வெட்டிருந்தான்.
"மாம்ஸ் இந்த வேலையெல்லாம் அத்தைய செய்யச் சொல்லலாம்ல. ஏ சின்னப் பையன கஷ்டப்படுத்துறிங்க. நீங்க இந்த வேலைய முடிச்சிட்டு ஆஃபீஸ் கிளம்பி போய் வேல பாத்து பாத்து டயர்டாகுறதுக்கு. அத்த செஞ்சா நல்லா இருக்கும்ல. வெட்டியா வீட்டுல தான உக்காந்திருக்காங்க." என்க.
" உங்கத்த செய்யாம இருக்குறதே நல்லது தான். அங்க பாரு வெட்டுறேங்கிற பேர்ல தரைல கோடு போட்டு வச்சிருக்கா. அவளுக்கு ஒன்னும் தெரியாதும்மா. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாறிக் காட்டிக்கிட்டு அடுத்தாள ஓட்டதிகாரம் பண்றதுல அலாதியானது சந்தோஷம் அவளுக்கு. என்ன பண்ண?. என்னோட தலையெழுத்து. " எனப் புலம்ப,
"எனக்குப் புரியுது மாம்ஸ். பேசாட்டிக்கி நா உங்களுக்கு ஒரு சின்ன வீடு செட் பண்ணி தரட்டுமா?. ஆ... " என்றவளின் காதை பிடித்துத் திருகியிருந்தார் உஷா.
"வாயாடி வாயாடி. யாருக்கு பொண்ணு பாக்க போற.? " என்க.
"மாம்ஸ்ஸுக்கு தா. அவருக்கு உங்க கூட வாழ்ந்து சலிச்சி போச்சாம். " என அவரை போட்டுக் கொடுக்க, அவர் மறுக்க எனக் காலையிலேயே சண்டை மூட்டி விட்டு விட்டு வீடு வந்தாள் வாசு.
அவர்களின் போஸ்ட் பாக்ஸில் ஒரு கொரியர் வந்திருப்பதை பார்த்தாள் வாசு.
"யாரு டா அது?. டெய்லியும் கொரியர் அனுப்புறது. " என அதன் கவரை பிரிக்க, அதிலிருந்ததே ஒரு புக் லெட். காலேஜ் magzine. அது கார்த்திகேயனின் கல்லூரி ஆண்டு மலர் என்றும் கூடச் சொல்லலாம். கூடவே ஒரு அழைப்பிதழும் வந்திருந்தது.
பல கல்வி நிலையங்கள் வெற்றிகரமாகச் செயல் பட்டாலும், சில நிலையங்கள் மூடுவிழா கண்டு விடுகிறது. அதுபோல் தான் கார்த்திகேயன் படித்த கல்லூரியும் விரைவில் கல்லூரி என்ற தரத்தை இழந்து ஒரு வணிக வளாகமாக மாறப்போகிறது. அதனால் இந்த ஆண்டு தான் அந்தக் கல்லூரியின் கடைசி ஆண்டு. அந்தக் கல்லூரி கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சமயம் அங்குப் படித்த மாணவர்கள் ஒன்று கூட ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர்.
பல ஆண்டுகளாக இயங்கி வந்த அந்தக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு நாள் ஒன்றுகூட அந்த நிறுவனம் ஏற்பாடு செய்த விழாவிற்காக அழைப்பிதழ். அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் தங்களின் இனிய கல்லூரி கால நினைவுகளையும் நட்புகளையும் புதுபிக்க கல்லூரி நிர்வாகம் வசதி செய்துள்ளது.
கார்த்திகேயனும் ஜோஹிதாவும் ஒரே ஆண்டில் தான் தங்களின் படிப்பை அந்தக் கல்லூரியில் தான் முடித்தனர். அவர்களின் பேர்ஜிக்கு ஒரு நாள் குறிக்கப்பட்டு இருந்தது. அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் தான் உள்ளது. அதனால் இருவருக்கும் சேர்ந்து அந்த அழைப்பிதழ் வந்திருந்தது. இன்னும் சில மாதங்களில் அந்தக் கல்லூரி காணமல் போய்விடும். அதற்குள்ள பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த விழாவைச் சிறப்பிக்கும் படி அச்சிடப்பட்டிருந்தது அந்த அழைப்பிதழ்.
அந்த magzineனை திறந்து பார்த்தாள் வாசு. ஏதாவது புகைப்படங்களின் கார்த்திகேயனின் படங்கள் உள்ளதா எனத் தேடி பார்த்தாள். கவிதைகள், ஓவியங்கள் என ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப் படித்து பார்க்க, வேகமாக வந்த கார்த்திக் அதை அவளிடமிருந்து பறிந்தான்.
" கார்த்திப்பா குடுங்க. காலேஜ் டேஸ்ல நீங்க எப்படி இருந்தீங்கன்னு நா பாக்குணேம்." என்ற மகளுக்கு magzine தராது அங்கிருந்து சென்று விட்டான். அவனின் இந்தச் செயல் வாசுவிற்கு வித்தியாசமாகப் பட்டது.
" என்னாச்சி மாம்ஸ்?. கார்த்திப்பா அந்த magzineன்ன எனக்குப் பாக்க குடுக்காம தூக்கிட்டு போய்டாரு. " எனக் குற்றம் சுமத்த, அவர் புன்னகைத்தார்.
"மாம்ஸ். நீங்களும் அந்தக் காலேஜ் தான. அப்ப நாம எல்லாரும் சேர்ந்து இந்தியா போப்போறமா!. வாவ். இது வர நா மேப்ல மட்டும் தா பாத்திருக்கேன். நேர்ல போய்ப் பாக்க போறேன். ஹே. " எனத் துள்ளிக்குதித்தவள்.
"ஜோஹிம்மா எப்ப ஃப்லைட் டிக்கெட் போட்டிருக்கிங்க. எத்தன நாள் அங்க இருக்க போறோம். ப்ளிஸ் ஒரு ஒன் மன்த்தாது அங்க தங்கி ஊர் சுத்தி பாக்கணும். இப்ப நாம டில்லிக்கி தான போகப்போறோம். " என ஆவலுடன் கேட்க,
"இல்ல. நாம எங்கையும் போகல. " என்றான் கார்த்திக்.
"கார்த்திக் ப்ளிஸ். அது நம்ம படிச்ச காலேஜ். போலாமே. " எனக் கெஞ்சும் குரலில் ஜோஹிதா தன் விருப்பத்தைச் சொல்ல, அதை ஏற்காதவன்,
"நோ… யாரும் அங்க போகக் கூடாது. " என்றான் கோபமாக.
"ஆனா கார்த்திப்பா… " என வாசு வாயைத் திறக்க,
" நீயோ நானோ நம்ம குடும்பமோ அந்த நாட்டுக்குப் போகப்போறது இல்ல. தட்ஸ் இட். " என்று இதற்கு மேஐஅ இந்தப் பேச்சு கூடாது என்பது போல் கத்த, ஜோஹிதாவிற்கு கவலையாகிப் போனது.
"ஏ மாம்ஸ் உங்க ஃப்ரண்டு இப்படி இருக்காரு. அங்க தான ஜோஹிம்மாவோட அம்மாப்பா இருக்காங்க. கார்த்திப்பாக்கு அப்பாம்மான்னு யாரும் இல்லலன்னாலும் ஃப்ரண்ட்ஸ்னு சிலரு இருப்பாங்க தான. இத்தன வர்ஷமா அவங்க யாரையும் பாக்காம எப்படி இருக்க முடியும்.
அட்லீஸ்ட் ஜோஹிம்மாவையாது அனுப்பலாம். இருபது வர்ஷத்துக்கும் மேல அவங்கள பெத்தவங்கள பாக்காம இருக்குறது எவ்ளோ கஷ்டம். ஜோஹிம்மா பாவம். ஏ இப்படி இருக்காரு கார்த்திப்பா.?" என்க.
"அவனோட சூழ்நிலை வாசு. அந்தக் காலேஜ் அவனுக்கு நல்லத மட்டுமில்ல மறக்க முடியாத சில காயத்தையும் குடுத்திருக்கு. எங்க அங்க போனா ஆறீட்டு இருக்குற காயத்த மறுபடியும் கீறி விட்ட மாறி ஆகிடுமோன்னு தா வேண்டாங்கிறான். சரி விடு. வா. நாம நம்ம கடைல போய் நல்ல சாப்பாடா சாப்பிடலாம். இல்லன்னா உங்கத்த கைல தட்டோட வந்து சாப்பிடுங்கன்னு சொல்லி உயிர வாங்க ஆரம்பிச்சிடுவா. " என அழைத்துச் சென்றான்.
தான் எது கேட்டாலும் சரி சிரியென தலையசைக்கும் தன் கார்த்தி ப்பா ஏன் அங்கே மட்டும் வேண்டாம் என்கிறார் என யோசித்தபடியே சென்றாள் வாசு.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..