முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 10

அத்தியாயம்: 10


ஓராண்டு‌ முடிந்து விட்டது. ஆனாலும் நம் வாசுவிற்கு பாய் ஃப்ரெண்ட் தான் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக்கில் நட்பு வைத்துக் கொள்ளும் ஆட்களை நேரில் சந்திக்க இயலாது. ஒரு வேளை அப்படி யாராவது கிடைத்தால் நேரில் சந்திக்கும்போது பிடிக்காமல் சென்று விடுகிறது. 


‘என்ன செய்ய. நம்ம வாசு தேடுற அமெரிக்க தமிழ் பேசும் இளைஞனை கடவுள் தான் கண்ணில் காட்ட வேண்டும்.’


"வாசு. உனக்குப் பாய் ஃப்ரெண்டுக்கு அர்த்தம் தெரியுமா.? " விக்டர் கேலியாக.


"அதெல்லாம் தெரியும். ஏ கேக்குற?." வாசு ரோசமாக எதிர்த்தாள்.


"இல்ல உன்னோட ஃபேஸ்புக் முழுக்க நீயும் உங்கப்பாவும் இருக்குற ஃபோட்டோஸ் மட்டும் தா இருக்கு. ஒரு வேள பாய் ஃப்ரெண்ட்டுக்கு மினிங் தெரியாம அப்பா கூடவும், அந்தக் குட்டி பையன் அஸ்வின் கூடவும் ஃபோட்டோஸ் எடுத்துப் போஸ்ட் பண்றியோன்னு சந்தேகமா இருக்கு. " மெய்ஸி.


"அப்படில்லாம் இல்ல. நா எதிர்பாக்குற மாறி ஒருத்தெ கிடைக்கல. அவ்வளவு தா."


"ஹேய். நாங்க உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாப்ள தேட சொல்லல. ஃப்ரெண்ட் தா தேட சொன்னோம். அதுக்கே இத்தன கண்டிஷனா!. அப்பக் கல்யாணம் பண்ணணும்னா என்னென்ன கன்டிஷன் போடுவியோ!. உங்கிட்ட மாட்டுறவெ செத்தான். " எனக் கேலி செய்து சிரித்தனர்.


"ஹைய்ஸ்... ஹைய்ஸ். நம்ம பேபிய நாமலே கிண்டல் பண்ண கூடாது. நீ எதுக்கு வாசு வெளில ஆள் தேடுற. உனக்காக மீ ஆல்வேஸ் வெய்ட்டிங். " எனக் கைகளை விரித்த ரானை அடித்தாள் வாசு.


" உன்னெல்லாம் பையனாவே நா பாக்கல. இதுல உங்கூட அவுட்டிங்கா!. போடா. " என்றாள் வாசு.


"எல்லாத்துக்கும் ஒரு டயம் ஆஃப் பிரியட் இருக்கு. உனக்கு நாங்க சிக்ஸ் மந்த் டயம் தர்றோம். அதுக்குள்ள ஒருத்தன எங்க முன்னாடிலாம் கூட்டீட்டு வர வேண்டாம். அட்லீஸ்ட் ஃபோட்டோ எடுத்துப் போஸ்ட் பண்ணு போது. இல்லன்னா!!. " லிண்டா


"இல்லன்னா?. " வாசு கலக்கமாக வந்தது குரல்.


"அங்க பாரேன் அவெ நம்ம சீனியர். அவனுக்கு உம்மேல ஒரு கண்ணு. சீக்கிரம் நீ ஆளப்பிடிக்கலன்னா. அவனுக்கு நீ எழுதுன மாறி ஒரு லவ் லெட்டர எழுதி" மெய்ஸி.


"எழுதி. "


" அத அவெங்கிட்டலாம் குடுக்க மாட்டோம். நோட்டீஸ் போட்டுல ஒட்டி விட்டுடுவோம். உங்க காதல ஊரே பாக்கும். " என விக்டர் சொல்லிச் சிரிக்க, வாசு பயந்து தான் விட்டாள்.


"ப்ளிஸ்! அப்படில்லாம் பண்ணாதிங்க. "


"இந்த மாறில்லாம் பண்ண கூடாதுன்னா.‌. " லிண்டா.


"இப்பவே என்ன பாய் ஃப்ரெண்டா ஏத்துக்க. " என ரான் தலையைத் தூக்க, அவனின் தலையில் தட்டினர் மற்றவர்கள்.


"கார்த்திப்பா எனக்காக... ஆறு மாசத்துல எனக்கு ஒரு ஃப்ரெண்டு கிடைக்கனுங்கிறதுக்காகக் கடவுள் கிட்ட வேண்டிக்கங்க கார்த்திப்பா. " எனக் கடவுளிடம் சிபாரிசு செய்யும்படி கார்த்திகேயனிடம் சிபாரிசு செய்தால் பெண்.


"கார்த்திக் என்ன கார்த்திக் இது!. அவா என்னென்னமோ பேசுறா. நீயும் கேட்டு உக்காந்திருக்க. இதெல்லாம் தப்புன்னு அவளுக்குச் சொல்லு கார்த்திக். " என ஜோஹிதா வர,


"ஜோஹிம்மா ஜஸ்ட் ஃப்ரண்டு தா. இப்பல்லாம் பாய் ஃப்ரெண்ட் இல்லன்னா pause பட்டன் அழுத்துன மாறி உலகமே நின்னு போய்டுதாம். உங்களுக்கு எந்தப் பாயும் இதுவர ஃப்ரெண்டா இருந்தது இல்லையா‌. " என வாசு கேலி செய்ய,


"எனக்கு இருந்தது டி. ஆனா இந்த வயசுல ஊர் சுத்துற அளவுக்குக் கிடையாது. " 


"இந்தியால பிறந்து வளந்த உங்களுக்கே‌ ஒரு ஃப்ரெண்டு இருக்கும்போது. எனக்கு ஏ இருக்க கூடாது? " வாசு.


" வாய்ல அடி டி அவள. பேச்சப்பாரு பேச்ச. இவள நீங்க ரெண்டும் பேரும் அடிச்சி வளத்தாத்தா உருப்படுவா. இல்லன்னா இவளால நீங்க அவமானப்பட்டு தலை குனிய போறிங்க. " உஷா.


"சும்மா இரு உஷா. நீ பேசுறது உன்னோட ஃப்ரெண்டு குடும்பத்துக்கே சாபம் குடுக்குற மாறி இருக்கு. என்னடி பேச்சு இது?. நல்லதா பேச மாட்டியா. " முருகன்.


"சரியா சொன்னிங்க மாம்ஸ். இவங்களுக்கு இதே வேலையா போச்சு மாம்ஸ். எப்ப பாத்தாலும் நா என்ன செஞ்சாலும் என்ன திட்டிக் கிட்டே இருக்காங்க. நீங்கத் தா என்ன காப்பாத்தணும். " என முருகனிடம் செல்லம் கொஞ்ச,


" என்னமும் போங்க. நாளைக்கி எதாவது பிரச்சனைல இழுத்துட்டு வந்து நிக்க போறா உம்மக. அப்பத் தெரியும் நா எதுக்கு சொன்றேன்னு. " என்ற ஜோஹிதாவின் பேச்சு அப்பாவுக்கும் கேட்கவில்லை, மகளின் செவிக்கும் சென்றடையவில்லை.


தினமும் காலையில் எழும்போது இன்றாவது ஒருத்தனை பார்த்து விட வேண்டும் என்ற வேண்டுதலுடனேயே அவளின் பொழுது விடியத் தொடங்கியது. இப்படியே நான்கு மாதங்கள் ஓட விட, அவள் வேண்டிய அமெரிக்க தமிழனை நேரில் காண்டாள் வாசு. அவளுக்குப் பிடித்த மாதிரியான ஒருத்தன்.


அது ருத்ரதேவ் என்று இன்னேரம்  சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனே தான் அது.


பள்ளியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்ஸுக்கு ஒரு மியூசியத்தை சுற்றி பார்க்க என அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது தான் அவனை முதல் முதலில் கண்டாள். இல்லை கேட்டாள்.


"ம்மா… ம்மா... ம்மா... நீ சொல்ற படிலாம் கேக்க முடியாது ம்மா. எனக்கு எப்ப தோனுதோ அப்ப தா செய்வேன். " என்ற குரல் தான் அது.


'யார்ரா அது தமிழ்ல பேசிட்டு போறது. ' எனத் தேடியவளின் கண்களுக்குக் காரில் சாய்ந்து நின்று தன் அன்னையுடன் பேசிச் சிரித்த ருத்ரதேவ் பட்டான்.‌


" பாக்க ஆளு ஓகே. நல்லா பேசிச் சிரிக்கிறான். தமிழ்ல வேற பேசுறான்ப்பா. இவெ யாரு என்னன்னு கண்டு பிடிக்கணுமே. " என அவனின் அருகில் செல்லும் முன்னே அவன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.


"என்ன போய்ட்டான். நா இன்னும் அவன முழுசா பாக்கவே இல்லயே. மூஞ்சிய மட்டும் தான பாத்தேன். அதுல பாதிய கூலிங் க்ளாஸ் போட்டு அவனே மறைச்சி வச்சிருந்தான்.‌ ச்ச... கிடைச்ச நல்ல வாய்ப்ப இப்படி அநியாயமா பறிச்சிட்டியே ஆண்டவா. இது உனக்கே ‌அடுக்குமா. " என கடவுளைத் திட்டயபடி சென்ற அவளுக்கு மாலையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இம்முறை அவன் ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைவதை கண்டாள். அவளும் பின்னாலேயே சென்றாள். அவன் பாத்ரூம் செல்லும் நேரம் தவிர்த்து மீதி நேரம் அவனின் நிழல்போல் சுற்றினாள். அதன் விளைவாக அவனின் ஃபோன் நம்பர் கிடைத்தது. அவனின் பெயர் ஊர் என எந்தத் தகவலும் தெரியாது. அதெல்லாம் அவளுக்குத் தேவையே இல்லை. ஓரிரு ஃபோட்டோ அவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டால் போதும். நண்பர்களிடம் பெருமை பேச ஏதுவாக இருக்கும் என அவனுடன் பேசி பழகத் தீர்மானித்தாள்.


அவனுக்கு ஃபோன் செய்ய நினைத்தாள் தான். ஆனால் கடுமையாகப் பேசி திட்டி விட்டால் என்ன செய்வது. அதனால் முதலில் நூல் விட வேண்டும். அதற்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட வேண்டும்.


"பரவாயில்ல. வாட் ஆஃப் நம்பரா இருக்கு. இதுலையும் கால் பண்ணலாம். இல்ல வேண்டாம் கால் பண்றதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம். " என முதலில் அவனுக்கு ஹாய் என குறுந்தகவல் அனுப்பினாள். சாம்பல் நிறத்தில் டிக் மார்க் என்று விழுந்தது. இரண்டு டிக் மார்க் விழுந்தது. ஆனால் படிக்கப்படவில்லை.‌ நீல நிறத்திற்கு மாறினால் நானே படித்துள்ளான் என்று அர்த்தம். அது மாறாததால்,


அவனின் DPயில் இருந்த அவனின் புகைப்படத்தைப் பார்த்து "படிச்சி பாத்தாதத்தா என்னவாம். " என திட்டத் தொடங்கினாள் அவள்.‌


படிப்பான்… படிப்பான் என்று காத்திருந்த அவளுக்கு ஏமாற்றம் தான். பார்க்கவே இல்லை. பின்னே எப்படி பதில் வரும்.‌ ச்ச… என்றிருந்தது அவளுக்கு.‌ ஆனாலும் விடுவதாக இல்லை. தொடர்ந்து எதையாவது ஒன்றை அனுப்பிக் கொண்டே இருந்தாள்.


" ஆணின் அழகை வர்ணிக்கக் கவிஞர்கள் இல்லையாம்.


உனக்காக நான் எடுத்த அவதாரம்


கவிதாயினி. " எனத் தமிழில் யாரோ எழுதிய கவிதைகளை டைப் செய்து அனுப்ப தொடங்கினாள் வாசு. தினமும் ஒரு மெசேஜ். கவிதை. அவளுக்குப் பிடித்த தமிழ் பாடல் வரிகள். சில நேரம் வடிவேலு அவர்களின் மீம்ஸ் கூட அவனுக்கு அனுப்பி வைப்பாள்.


எல்லாம் அவனைச் சென்றதற்கான அடையாளம் இருக்கும். ஆனால் பார்க்கத்தான் படமாட்டாது. ஆனாலும் அனுப்பினாள். அவளின் ஒரு வார இந்த விடா முயற்சிக்குப் பலனாய் ஒரு நாள் எல்லாம் படிக்கப்பட்டது. நீல நிறத்தில் டிக் மார்க் மாற, குஷியாகிப் போனாள் பெண்.


"யார் நீ?. " என்று கேள்வியுடன் பதில் வர, போதுமே வாசுவிற்கு தன்னை பற்றிய அனைத்தையும் கூறினாள்‌. தன் நண்பர்களுடன் போட்ட சவால்வரை அனைத்தையும்.


" ஓ… அப்ப ஒரு பாய் ஃப்ரெண்டுக்காகத் தா எனக்கு மெசேஜ் பண்ணியா.? " என இருவரும் chat செய்யத் தொடங்கினர்.


"ஆமா. எனக்குத் தமிழ் பேச எழுதத் தெரிஞ்ச பாய் ஃப்ரெண்ட் வேணும். நீங்கப் பேசுனத தா கேட்டிருக்கேன்.‌


"எப்ப.‌?"


"ஒரு பத்து நாளைக்கி முன்னாடி நீங்க *** மியூசியம் வந்திருந்தப்ப.‌"


"நா யாருன்னு தெரியுமா உனக்கு.? "


"இல்ல சொல்லுங்களே தெரிஞ்சிக்கிறேன். " என்றாள் அவள்.


"ஒருவேள நீ மியூசியத்துல பாத்த ஆள் நானா இல்லாம இருந்தா என்ன பண்ணுவ. " என்ற கேள்வியும் தமிழிலேயே அனுப்பியிருந்தான் அவன்.


" இல்ல நா சரியாத்தா நம்பர் எடுத்தேன்.‌ நா பாத்த ஆளு தா நீங்க. DP ல கூட உங்க ஃபோட்டோ இருக்கே.‌" என்றாள் உறுதியாக.


" அதா எப்படின்னு கேக்குறேன். என்னோட பர்ஸ்னல் நம்பர எப்படி எடுத்த. அவ்வளவா யாருக்கும் தெரியாது. அப்படி இருக்குறப்போ உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது. " என்க.


"அது இப்பதைக்கு சொல்றதுக்கு இல்ல. சீக்ரெட்டாவே இருக்கட்டும். "


"எப்படி எடுத்தன்னு சொல்ல மாட்ட. சரி உன்ன பத்தி சொல்லு.‌" என்க. அவள் மறைக்காத அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள். பெயர், வயது, படிக்கும் பள்ளி, இருக்கும் இடம், விருப்பு, வெறுப்பு, பிடித்தவை, பிடிக்காதவையென அனைத்தையும்.


"உங்க பேர நீங்கச் சொல்லவே இல்ல.‌ என்ன பண்றீங். "என்க.


"ருத்ரதேவ். " எனத் தன்னை பற்றிச் சில விசயங்களை மட்டுமே பகிர்ந்தான்.‌ அவளின் நம்பரை தன் ஃபோனில் சேமித்த பின் அவளின் வாட்ஸ் ஆப் DPயை பார்த்தவனுக்கு அவள் மிகவும் சின்னப் பெண் எனப் புரிந்தது. கூடவே அவளின் பேச்சு சிரிக்கவும்‌ ரசிக்கவும் வைத்தது.


அவளின் வயது கருதி எந்த விதத்திலும் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டிடாத படி மிகவும் கவனமாகப் பேசினான்.‌ தினமும் பள்ளியில் நடக்கும் அனைத்தையும் அவனுடன் சொல்லாமல் இருந்தது இல்லை. ஓரிரு வாரம் ஓடியது வாட்ஸ் ஆப் பழக்கம்.


‘எல்லாம் ஓகே தான். பட் ரெண்டு பேரும் டேட்டிங் போன மாறி ஃபோட்டோ எடுக்கணுமே. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பந்தா காட்டணும்னா அவன நேர்ல பாக்கணுமே.’


 அதனால் நேர்ல சந்திக்க முடிவு செய்து இருவரும் திட்டமிட்டனர். 


"கார்த்திப்பா. நாளைக்கி நாம ருத்ராவ பாக்க போறோம். ரெடியா இருங்க. நாம ரெண்டு பேரும் சேந்து போறோம். " எனக் கார்த்திக்கையும் அழைக்க, ஜோஹிதா முறைத்தாள். இருந்தும் 


இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டு வந்தனர்.


மாலையில் தான் அவர்களை ஒரு பொது இடத்தில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். ஆனால் அப்பாவும் மகளுமாய் காலையிலேயே புறப்பட்டு வந்து விட்டனர்.


வால்ட் டிஸ்னி லன்ட். அதைக் கேள்வி பட்டதுன்டா. இல்லை என்றால் மிக்கி மவுஸ் கேள்வி பட்டிருப்பீர்கள் டீவியில் பார்க்கவும் செய்திருப்பீர்கள். அந்தக் கார்ட்டூன் கதாப்பத்திரம் உருவானது அங்கே தான்.


வாசவிவும் கார்த்திகேயனும் எதற்கு வந்தோம் என்பதை‌ மறந்து அந்த இடத்தை சுற்றி பார்த்து ஆட்டம் போட்டு விட்டு, அவன் சொன்ன நேரத்திற்கு சரியாக, அவன் வரச் சொன்ன இடத்திற்கு சென்றனர்.

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...