முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

நேசிப்பாயா 9

அத்தியாயம்: 9


" ஹேய் யாரு அது?. " எனக் கேள்விகளுடன் வந்தனர் வாசுவின் நண்பர்கள்.


"ஹாய் லிண்டா. மை நேம் இஸ் ருத்ரதேவ். வாசவீஸ் பாய் ஃப்ரெண்ட். " எனத் தன்னை அறிமுகப்படுத்த… அவளின் நண்பர்களுக்கு ஒரே குஷி.


'எது நீ எனக்குப் பாய் ஃப்ரெண்டா!.‌ உன்ன நா நேர்ல பார்த்துப் பேசுனதே நேத்து தா. அதுவும் முழுசா பேசுனாதே பத்து வார்த்த தா. அதுக்குள்ள பாய் ஃப்ரெண்ட்டுன்னு சொல்ற. ' என நினைத்து அவனைப் பார்க்க, அவன் 'அப்படி தான்' எனக் கண்சிமிட்டினான்.


'பொய்யி. 'அவள் வெளியே சொல்லவில்லை. தலையசைத்து மறுக்கவும் இல்லை.


" வாவ்!. கடைசியா உனக்குப் பிடிச்ச மாறி ஒரு பையன பாய் ஃப்ரெண்டா படிச்சிட்ட போல. கங்கிராஸ். " என அவளை வந்து அணைத்துக் கொண்டனர் அவளின் நண்பர்கள்.


" ஓகே… நாங்க உங்கள டிஸ்டப் பண்ணிட்டோமா!.‌" எனக் கண்சிமிட்டி ருத்ராவை பார்த்து ஒருத்தி கேட்க,


"இப்படில்லாம் இல்ல. " என்றபடி வந்து வாசுவின் தோளில் கை போட்டான் ருத்ரா. அவள்‌ முறைக்கவும் அவனுக்குக் குதுகலமாக இருந்தது.


"இப்ப என்ன ப்ளான் வச்சிருக்கிங்க?. "


"எங்க போகப் போறிங்க?. "


"நாங்களும் கூட வரலாம்மா?."


" ஏன்னா வாசு இதுவரைக்கும் யார்யும் டேட் பண்ணது இல்ல. எப்படி டேட் பண்றிங்கன்னு பாக்க நாங்க வரலாமா?. " என மாறி மாறிக் கேள்விகள் கேட்க,


"இன்னைக்கி ப்ளான் எதுவும் இல்ல. நாளைக்கும் தா. சோ வீக் எண்டுல ஒரு அவுட்டிங் ப்ளான் பண்ணிருக்கோம். Mission peakக்கு. " என அவளின் அனுமதி கேளாமல் திட்டமிட, அவள்‌ யாரும் அறியாமல் அவனின் கையில் கிள்ளினாள்.


இதுவரை ஒற்றை கை மட்டுமே தோளில் வைத்திருந்தவன் இப்போது அவளை அணைத்தார் போல் மற்றொரு கையையும் தூங்கி அவளின் தோளில் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட தொங்கினான்.


" வாவ்!. சூப்பர் ப்ளான்.‌ அது ஒரு மலை முகடு. அதுல மலையேறி அதோட உச்சில நட்டுவச்சிருக்குற கொடி‌ பக்கத்துல நின்னு ஃபோட்டோஸ் எடுக்கலாம். அங்க இருந்து பாத்தா சூப்பரா இருக்கும். வியூவ்ஸ் எல்லாம் பாக்கவே அருமையா இருக்கும். " என அவர்கள் சிலகிக்க.


" ம்… நல்லாதா இருக்கும் பட். நாங்க ரெண்டு பேர் மட்டும் தா போகப்போறோம். எந்த டிஸ்டபென்ஸ்ஸும் இல்லாமா. " என அவளின் நண்பர்களைக் கத்தரித்துவிட்டான்.‌ அவர்கள் “ஹே!. “ என்ற கூச்சலுடன் அங்கிருந்து செல்ல,


" நீ ஒன்னும் எனக்குப் பாய் ஃப்ரெண்ட் இல்ல. எதுக்கு பொய் சொன்ன?. " என ருத்ராவை கேட்டாள்.


"பொய் சொல்லக் கூடாதா?. அப்பச் சரி அவங்கள கூப்பிடு. எல்லாத்துக்கிட்டையும் உண்மைய விளக்கிச் சொல்லுறேன். நா இவளுக்குப் பாய் ஃப்ரெண்ட் இல்ல. இவா எனக்குக் கேர்ள் ஃப்ரண்டு ன்னு. " என்றவனை முறைக்க,


"ஆமா நாந்தா பொய் சொல்லிட்டேன். நீ தா உண்மை விளம்பியாச்சே.‌ நீ சொல்லிருக்கலாம்ல அவங்ககிட்ட. 'இவெ எனக்குப் பாய் ஃப்ரெண்டு இல்ல.'ன்னு. ஏ சொல்லல.? " என்றவன் அவளின் இரு தோளிலும் மாலையாகத் தன் கரத்தைக் கோர்த்து தன் பக்கம் திருப்பினான்.


"அது... அது… " எனத் தடுமாற.


"சொல்ல முடியலன்னா.‌ நா உனக்குப் பாய் ஃப்ரெண்ட் தா. "


"இல்ல. பாய் ஃப்ரெண்ட் இல்ல. "


"சரி நா கூப்பிடுறேன். நீ உண்மைய சொல்லிடு. ஆமா ‌அந்தப் பிங்க் மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணு பேரு என்ன. மெய்ஸி தான. மெய்..." என் அவன் அழைக்கும் முன்னரே அவனின் வாயை மூடினாள் வாசு. தன் கை கொண்டு.‌


" கத்தாத. உண்மைய சொன்னா அவங்க என்ன கிண்டல் பண்ணுவாங்க. ஆல்ரெடி நா ஒரு இன்டியன் கேர்ள், எனக்குப் பசங்க கூட டேட் பண்ணி பழக்கம் கிடையாது. ஏ பேசக் கூட மாட்டேன்னு சொல்லிக் கிண்டல் பண்றவங்க கிட்ட போய், சொல்லச் சொல்ற.‌" என முகம் சுருக்க, அவன் அவளின் உள்ளங்கையில் தன் இதழை ஒற்றி எடுத்தான். அவள் கரத்தை விலக்கிக் கொண்டாள் வேகவேகமாக.


" அப்ப நாம சொன்ன பொய்ய நிஜமா மாத்திடுவோம். " என்க.


"ஆனா எனக்கு நீ வேணாம். ‌"


"ம்ச்… உனக்குத் தேவ ஒரு பாய் ஃப்ரெண்ட். நா உன்னோட ஃப்ரெண்டா கொஞ்ச நாள் நடிக்கிறேன். அப்றம் ப்ரேக் அப்புன்னு சொல்லிட்டு அவங்கவங்க பாதைல போய்டப் போறோம். சிம்பிள். என்ன ஓகே தான!. இனி நா உன்னோட பாய் ஃப்ரெண்ட் தான.‌ சாட் டயம் பாய் ஃப்ரெண்ட். " என்க அவள் தலையசைக்கவில்லை. புருவங்கள் முடிச்சிட யோசிக்கலானாள்.‌


"என்ன உன்னோட கார்த்திப்பாட்ட பர்மிஷன் கேக்கணுமா. " என்க. ஆம் எனத் தலையசைத்தாள்.


" அப்ப ஒன்னு பண்ணு உன்னோட வீட்டுல சொல்லிப் பர்மிஷன் லெட்டர்லாம் வாங்கிட்டு. எனக்குக் கால் பண்ணு. வீக் எண்டுல Mission peakல மீட் பண்ணுவோம். " என்றான் நக்கலாக.


"இல்ல நா வரல. மறுபடியும் உன்ன நம்பி நா ஏமாற விரும்பல. உன்னோட ப்ரபோஷல நா ஏத்துக்கல. நீ எனக்குப் பாய் ஃப்ரெண்டா இல்ல, ஒரு நார்மல் ஃப்ரெண்டா கூட வேண்டாம். " என்று சொல்லி நகர பார்க்க அது முடியவில்லை.‌ அவள் தான் அவனின் கை சிறையில் இருக்கிறாளே. எப்படி வெளியே செல்வாள்?.


"சன் டே. ஈவ்னிங் ஃபைவ் ஓ க்ளாக்… வந்திடு. நா வெய்ட் பண்ணீட்டு இருப்பேன். " என்றவன் அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டு விட்டு,


"ப்ராமிஸ்ஸா வெய்ட் பண்ணுவேன். உன்ன ஏமாத்த மாட்டேன்." என்க.‌


'எல்லாரும் ப்ராமிஸ்ஸ கைல அடிச்சி தான சொல்லுவாங்க. இவெ என்னடான்னா கிஸ் பண்ணி சொல்றான். ' எனத் திருதிருவென முழிக்க, அவன் இதழ் பதித்த இடம் குறுகுறுத்தது.


" நாம முதல்ல பழகுவோம் வாசு. அப்றம் அது வெறும் ஃப்ரெண்ஷிப்பா. இல்ல மோர் தென் ஃப்ரெண்ஷிப்பா.‌ அதாவது நட்புக்கும் மேலயானு காலம் முடிவு பண்ணட்டும். நா உனக்காக வெய்ட் பண்ணீட்டு இருப்பேன். " என்றவன் அவளின் கரம்பற்றி அந்த லைட் ஷோவை பார்க்க அழைத்துச் சென்றான். இரவுவரை அவளுடனேயே இருந்தான். சாதாரனமான பேச்சும் கேலி கிண்டலுமாக அவர்களின் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து விட்டுச் சென்றான் தேவ்.


"நீங்க என்ன நினைக்கிறீங்க கார்த்திப்பா ருத்ராவ பத்தி?. நா அவனோட ஃப்ரெண்ஷிப்ப ஏத்துக்கட்டுமா வேண்டாமா?. அவெங்கூட அவுட்டிங் போகவா இல்ல வேண்டாமா?. " எனக் கார்த்திகேயனிடம் வாசு கேட்க, அவன் புன்னகைத்தான்.


"இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் கார்த்திப்பா?. வேண்டாமா!. " என சோகமாகக் கேட்டவளின் குரலே சொல்லியது‌ ருத்ராவுடன் பழக நினைக்கும் அவளின் ஆசையை. அதைக் கண்ட கார்த்திக் மீண்டும் சத்தமாகச் சிரிக்க,


"சிரிக்காதிங்க கார்த்திப்பா. நா இப்ப என்ன பண்ண?. " என அவனிடமே கேட்க.


"நா உன்னோட அப்பா. அது உனக்கு ஞாபகம் இருக்கா?. ம்… இந்த மாறி விசயத்தெல்லாம் ஃபேரன்ஸ் கிட்ட சொல்லமாட்டாங்க வாசு. க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இல்லன்னா யார் கிட்டையும் சொல்லாம ரொம்ப சீக்ரெட்டா வச்சிப்பாங்க. பட் என்னோட பொண்ணு என்னடான்னா எங்கிட்டையே வந்து... அதா வாசு சிரிப்பு வந்துடுச்சி. " என சொல்லிச் சிரிக்க,


"உங்க கிட்ட சொல்லாம வேற யார்க்கிட்ட சொல்ல. எனக்கு நீங்கத் தா ஃபஸ்ட் அண்டு பெஸ்ட் ஃப்ரெண்டு. " என்க கார்த்திக் சிரிப்பை நிறுத்தவில்லை. அதைப் பார்த்த வாசுவின் முகம் சுருங்கியது.


"கார்த்திப்பா அந்த ருத்ரா என்ன யூஸ் பண்ணி நம்ம ரெஸ்டாரன்ட பேரம் பேசுவானோன்னு பயம்மா இருக்கு. விக்டர் சொன்னான், OLA ஹோட்டல அவனோட அப்பா தா எதோ செஞ்சி வாங்கிட்டதா. என்ன வச்சி உங்கள கார்னர் பண்ணா! என்ன பண்றது.? " என்க, அதற்கும் கார்த்திக் சத்தமாகச் சிரிக்க, மகள் முறைத்தாள்.


"ஓகே… ஓகே... சிரிக்கல. உனக்கு அந்தப் பயமே தேவையில்ல. அது நம்மோட பிஸ்னஸ். கிட்டத்தட்ட என்னோட ரெண்டாவது பொண்ணும் கூட. சோ அத பாத்துக்க எனக்குத் தெரியும். நீ உன்ன குழப்பிக்காத வாசு.


பார்ட்னர்ஷிப்ங்கிறது ஒரு பிஸ்னஸ்க்கு ரொம்ப முக்கியமானது. அது நம்ம தொழில அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போக உதவியா இருக்கும்.


என்னோட கனவு என்னன்னா நம்ம ஊர்களோட பாரம்பரிய உணவ எல்லாரோட தட்டுக்கும் கொண்டு போய்ச் சேக்குறது. அது நடக்கும்னா கூட்டணி வச்சிக்கிறதுல தப்பில்லயே. எது நல்லதோ அத நானும் உங்கம்மாவும் சேர்ந்து முடிவெடுப்போம். உனக்கு எது நல்லதுன்னு நீ நினைக்கிறியோ அத நீ பண்ணு… போதும். " என்க, பாவம் வாசுவிற்கு தான் புரியவே இல்லை.


'இப்ப என்ன சொல்ல வர்றாரு. நா அவெங்கூட பழகலாமா பழகக்கூடாதா. ஊர் சுத்தலாமா சுத்தக்கூடாதா. இப்படியே போக்கிட்டு இருந்தா எப்படி?. இதுக்கு முடிவே இல்லையா?. ' என்றிருந்தது வாசவிக்கு.


இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் அவளுடைய வீணா போன தோழமைக் கூட்டம். 


‘அவனுங்களால தா இவா பாய் ஃப்ரெண்ட் பாய் ஃப்ரெண்ட்ன்னு கிடக்கா. என்ன ஆச்சின்னா.’


வாசுவிற்கென லிண்டா, மெய்ஸி, ரான், விக்டர் என நான்கு நண்பர்கள் உண்டு. பள்ளியில் ஆரம்பித்த பழக்கம் கல்லூரியிலும் தொடர்ந்தது. நால்வருமே Hotel management முடித்து விட்டனர். ஒன்றாக இப்போது வேலைக்குச் செல்ஐ முடிவு செய்து, நியூயார்க்கில் வேலையும் பார்க்கின்றனர்.


மெய்ஸியும் விக்டரும் காதலர்கள். எப்போதுமே ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் திரிவர். லிண்டா அவளுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் உண்டு. ரானுக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் இதற்கு முன்னாள் இருந்தது. இப்போது பிரச்சனை நம்ம வாசுக்கு எந்தப் பாய் ஃப்ரண்ட்டும் இல்லை. அவளை டேட்டிங் அழைத்துச் செல்லும் அளவுக்கு எந்தப் பாயும் நெருக்கம் இல்லை. இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னும் கிடையாது.


பதின்ம வயது பிள்ளைகளின் பேச்சு எப்படி இருக்கும்?. சொல்லுங்கள். எதை பற்றிப் பேச வேண்டும், எதைப் பற்றி ஆராய வேண்டும், எதைக் கவனிக்க வேண்டும் என்ற வரையறை அவர்களுக்கு இல்லை. பெரும்பாலும் எதிர்பாலினத்தவரை பற்றிய பேச்சுகள் தான் அதிகம் இருக்கும். பருவ வயது அல்லவா.


வாசுவின் நண்பர்கள் அனைவரும் அவளைப் பள்ளி படிக்கும் போதிருந்ததே அவளைக் கேலி செய்வர்.


 " உன்னோட ஃபேரன்ஸ் எப்படி?. பசங்க கூடப் பேச விடுவாங்களா?." லிண்டா


" நாங்க வீட்டுக்கு வந்தா எங்கள திட்டமாட்டாங்களா?." ரான்


" உன்ன தனியா ரூம்க்குள்ள அடச்சி வைக்கமாட்டாங்களா?." விக்டர்


" ஏன்னா பொதுவா இந்தியால பாய்ஸ் கேர்ள்ஸ் கூட நண்பா இருந்தாலே லவ்வுன்னும் தப்புன்னும் சொல்லி அடிப்பாங்களாமே!. " மெய்ஸி


"உனக்கு எப்படி?. நீ வாங்கிருக்கியா?." லிண்டா.


"எப்படி வாங்குவா?. அவளுக்குதா பாய் ஃப்ரெண்ட் கிடையாதே!. " என கேலியாகக் கேட்பர்.


"என்னோட கார்த்திப்பா அப்படி இல்ல. வெரி ஃப்ரெண்லி. ஜோஹிம்மா திட்டுனாலும் என்ன அடிக்கலாம் மாட்டாங்க. எனக்கு ஒரு பாய், ஃப்ரெண்டா இருக்குறதுல அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. "


"டேட்டிங் அவுட்டிங் போனாலும் ஓகேவா. " என ரான் கேட்க.


"ம். " எனத் தலையசைத்தாள்.


"ஹக்கு கிஸ்ஸு." மெய்ஸி.


"ம். " என்றவளுக்கு ஜோஹிதாவின் கோப முகம் நினைவில் வராமல் இல்லை. ஆனால் உண்மையைக் கூறினாள் இவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும். அதான் பொய் சொல்ல.


"நாங்க நம்பல. " விக்டர்.


"அதுக்கு நா என்ன பண்ண?. " வாசு.


"ஒரு பாய்ய ஃப்ரெண்ட பிடிச்சி அவெங்கூட டேட்டிங், அவுட்டிங் போய், ஃபோட்டோஸ் எடுத்து, உன்னோட ஃபேஸ் புக் இன்ஸ்டால சேர் பண்ணு அப்பதா நாங்க நம்புவோம். கூடவே லிப்லாக் ஃபோட்டோவையும் எடுத்து அப்லோட் பண்ணு” என்றபோது நம்ம வாசுக்கு பதிமூன்று வயசு.


"கார்த்திப்பா, நா ஒரு பாய் கூட டேட்டிங்க போனா உங்களுக்கு ஓகே தான?. " என மகள் நண்பர்களுடன் நடந்த உரையாடலைச் சொல்ல, கார்த்திக் வாயைத் திறக்கும் முன் ஜோஹிதாவும் உஷாவும் பொங்கி விட்டனர். ஆனால் கார்த்திகேயன் மறுப்பு சொல்லவில்லை என்பதால் தீவிரமாகத் தனக்கு பிடித்த‌ மாதிரியான ஒரு ஆணை தேர்வு செய்து அவனுடன் பழகி ஃபோட்டோஸ் எடுத்துப் பதிவிட முடிவு செய்தாள் வாசு.


ஓராண்டுகளாகத் தேடுதல் வேட்டையின் பலனாய் அவளுக்குச் சிலர் அறிமுகம் ஆனார்கள் தான். ஆனால் அவளுக்குத் தான் அவர்களுடன் வெளியே செல்ல மனமில்லை. குறிப்பாகக் கிஸ்… ஹக்…


ம்ஹிம்… முடியவே இல்லை.


"நீ என்ன மாறியான ஆள எதிர்பாக்குற வாசும்மா.? " கார்த்திக்.


"கார்த்திப்பா என்னோட ஃப்ரெண்டு பாக்க அழகா இருக்கணும். பழகவும் தான். என்னவிட கொஞ்சம் வயசு கூடுன ஒருத்தனா இருக்கணும். அப்பதா நா செய்ற குறும்பு தனத்த கொஞ்சம் மெச்சூரிட்டியா ரசிச்சி ஹேண்டில் பண்ணுவான்.


அப்றம் முக்கியமான விசயம் லாங்குவேஜ் ப்ராப்ளம் இருக்கவே கூடாது. மொழி புரியலன்னா அவனுக்கு நா பேசுற வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லிச் சொல்லியே நா டயர்டு ஆகிடுவேன். பேசுறது மட்டுமில்ல. தமிழ் மூவீஸ் எங்கூட உக்காந்து ரசிச்சி பாக்கணும். அப்றம் தப்பு தப்பானாலும் அவனுக்குத் தமிழ்ல ஒரு சில வார்த்தைகள் எழுதத் தெரிஞ்சிருக்கணும். எங்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணாத நல்ல ஒழுக்கமான பையனா இருக்கணும். " என்க கார்த்திக் தலையைச் சொரிந்து கொண்டு வித்தியாசமாகச் சிரித்தான்.


'நீ கேக்குற குவாலிஃபிகேஷன்ல யாரும் இந்த அமெரிக்கால கிடையாதேம்மா. ' என்பது போல் இருந்தது அந்தச் சிரிப்பு.

 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...