முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 8

 

அத்தியாயம்: 8


" ஹலோ! கார்த்திக், நீ எங்க இருக்க?. இங்க உம்பொண்ணு நீ வருவன்னு வாசல நின்னுட்டு வர மாட்டேங்கிறா. கஷ்டப்பட்டு அவளோட ஃப்ரெண்ட்ஸ் இப்ப தா உள்ள இழுத்துட்டு போயிருக்காங்க சீக்கிரம் வா கார்த்திக். " ஜோஹிதா


"இதோ டென் மினிட்ஸ். வந்திடுவேன். அவள பிஸியாவே வச்சிரு. இல்லன்னா டென்ஷனாகி எல்லாத்தையும் கத்த ஆரம்பிச்சிடுவா. இதோ வந்துட்டே இருக்கேன். " என அரக்க பறக்கத் தன் ஏப்ரானை கலட்டி விட்டு, வேகவேகமாகக் கோர்டை எடுத்து அணிந்து கொண்டான் கார்த்திகேயன்.


" நீ இன்னும் போகலையாடா?. " முருகன் அதிர்ச்சியாக‌ கேக்க,


" இல்ல மச்சான் இத முடிச்சிட்டு போலாம்னு பாத்தேன். "


" இன்னைக்கி உவ்வீடு போர்க்களமாத்தா இருக்கபோது. "


"ஏன்டா வாய வைக்காற. "


"பின்ன ஒரே மக இன்னைக்கி பட்ட படிப்பு முடிச்சி பட்டம் வாங்க போறா. அப்பனா முன்னாடி நிக்காம சமயங்கட்டுக்குள்ள நின்னா வீடு யுத்த பூமி தா. உம்மக கிட்ட இருந்து வீட்ட காப்பாத்தணும்னா உடனே கிளம்பிடு. இத நாங்க பாத்துக்கிறோம். ஏதோ கூட்டம் கூட்டமா வந்து உங்கடைல உக்காந்து சாப்பிடுற மாறி. ஆளே இல்லாத ஹோட்டல்ல யாருக்க டா டிப்பன் செய்ற. போடா. " எனத் துரத்தி விட்டார் முருகன்.


என்னென்ன செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு விட்டுக் கார்த்திகேயன் தன் மகளின் பட்டமளிப்பு விழாவிற்காக ரெடியாகி வெளியே வரவும், நான்கைந்து பேர் கையில் லெமினேஷன் போட்ட அடையாள அட்டையுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.


" நாங்க செக்கிங்காக வந்திருக்கோம். புட் டிப்பார்ட்பெண்ட்ல இருந்து. உங்க ரெஸ்டாரன்ட்ல சுத்தமான சுகாதாரமான உணவ தா குடுக்குறிங்களா இல்லையான்னு நாங்க சோதன போட வந்திருக்கோம். " என வந்தவர்கள் நேராகக் கிச்சனுக்குள் செல்ல.க்ஷ, கார்த்திகேயனால் எப்படி அங்கிருந்து செல்ல முடியும்?. எனவே ஓனராக அவர்களுடன் அங்கேயே இருந்துவிட, அவனின்றி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


"ஜோஹிம்மா கார்த்திப்பா எங்க?. "


" அது திடீர்னு இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்காங்களாம் வாசு. அதா வரமுடியல. உங்கிட்ட ஸாரி சொல்லச் சொன்னான். " என்ற அன்னையை முறைத்துக் கொண்டு சென்றாள் வாசு.


தான் பட்டம் வாங்கும்போது கார்த்திப்பா உடனிருக்க வேண்டும். கருப்பு அங்கியில் தன்னை பார்த்துப் பூரித்து போக வேண்டும்.‌ வாங்கிய பட்டத்தை அவனின் கையில் தந்து பல புகைப்படங்களை எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் போட்டுப் பெருமை பட வேண்டும் என்று நினைத்தவளுக்கு பெரிய ஏமாற்றம்.


"வாசு, கார்த்திக்குக்கு வேலை வந்திடுச்சிடா கண்ணா. அதா வரமுடியல. கோய்ச்சிக்காத ம்மா. " என மகளின் வாடிய முகம் பொறுக்காது கன்னம் தடவி பேச, அவள் அதே முகத்துடன் சென்று அந்தக் காகித சுருளை வாங்கி வந்தாள். அவளைக் குஷி படுத்த அவளின் தோழிகள் அவளை ஊர் சுற்ற அழைத்துச் சென்றனர்.


இரவு பத்து மணி இருக்கும் கார்த்திக் வீடு வர. வந்தவன் மனைவியிடம் மகளை பற்றிக் கேட்க,


"ரொம்ப கோபமா இருக்கா போல. ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயும் அவளோட கோபம் குறையவே இல்லன்னா பாத்துக்க. " 


"இப்ப எங்க இருக்கா?. ரூம்லயா!. " என்றவன் சமையலறைக்குள் சென்று மகளைச் சமாதானம் செய்ய எதையாவது சமைப்போம் என்ற முடிவுடன், எதாவது கிடைக்கிறதா என்று தேடினான்.


"ரூம்லலாம் இல்ல. வெளில கார்டன்ல இருக்கா. ரொம்ப நேரமா உக்காந்திருக்கா.‌ ஏன்டி இப்படி உக்காந்திருக்கன்னு கேட்ட எங்கிட்ட சண்ட கூடப் போடல.‌" என்றாள் வருத்தமாக.


கார்த்திக் புன்னகையுடன் மகளின் கோபத்தை உணவை உள்ளிறக்கி குறைக்க நினைத்தான். கண்களுக்கு அவல் சிக்க‌ வேகமாக அதைக் கழுவி ஊற வைத்தவன். மறு பக்கம் வெல்லப்பாகை கரைத்து எடுத்து வைத்துக் கொண்டான். பத்து நிமிடங்கள் தான். அவன் செய்த வேலையில் வெல்ல பனியாரம் ரெடி. தட்டில் அதை எடுத்துக் கொண்டு மகளை பார்க்கச் சென்றான் கார்த்திகேயன்.


" வாசும்மா. வாசு செல்லம். ஸாரி டாம்மா. சின்ன வேல. அதா உன்னோட கார்த்திப்பாவால வர முடியல. கோபமா!. " எனப் புல்லில் அமர்ந்திருந்த மகளின் முன் சென்று அமர, அவள் அவனைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டாள்.


" வா... சு. " எனச் செல்லமாக அழைத்தவன் அவளின் வாயில் பனியாரத்தில் ஒன்றை எடுத்து ஊட்ட, பேச வாய் திறக்கவில்லை. ஆனால் பலகாரத்தை உண்ண வாய் திறந்தது. ஒன்று ஒன்றாக அவன் மெதுவாக ஊட்ட,


" நீங்க என்ன ஸ்லோ மோஷன்ல ஊட்டுறீங்க. குடுங்க. எனக்குப் பசிக்கிது. " எனக் கொண்டு வந்த அனைத்தையும் உள்ளே தள்ளினாள் வாசு.


எத்தனை அள்ளி உண்டாலும் உடல் மட்டும் வைக்காது அவளுக்கு. ஒல்லியாகவே இருப்பாள். 


அவளை பார்க்கும்போது கார்த்திக்கின் மனதில் வேறொரு உருவம் வந்து சென்றது. அது அவனின் கண்களில் நீரையும் வர வைக்க, அதை மகளுக்குக் காட்டாது துடைத்துக் கொண்டான்.


"ஸாரி செல்லம். வாழ்த்துக்கள். எங்கைல குட்டிய பொம்மை மாறி இருந்த பொண்ணு. இப்ப நல்லா வளந்து பட்ட படிப்பு முடிச்சிருக்கா. ரொம்ப பெருமையா இருக்கு டாம்மா.‌" என மகளின் வளர்ச்சியைக் கண்டு பூரித்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திகேயன்.


ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் பூரிப்பு தான் இது. கண்ணுக்கே தெரியாத ஒரு விதை வளர்ந்து இன்று மரமாய் தன் முன் நின்றதை பார்த்தால் யாருக்கு தான் பூரிப்பு இருக்காது. சொல்லுங்கள்.


"கார்த்திப்பா. எதுக்கு ஸாரி. எனக்கு ‌ உங்கள பத்தி தெரிஞ்சும் நா உங்க மேல கோபப்படுவேனா. ம்... உங்களுக்கு உங்க லைஃப்ல ரெண்டே ரெண்டு விசயம் தா ரொம்ப முக்கியம். ஒன்னு நம்ம ரெஸ்டாரன்ட்.‌ இன்னொன்னு நா. ஒன்னுக்காக ஒன்ன விட்டுக் குடும்பிங்களே தவிர எதையும் விட்டுட மாட்டிங்க. சரியா. என்ன சொன்னாங்க அந்த ஹெல்த் இன்பெக்டர்ஸ்?. " 


" அத மேயர்ட்ட இன்ஃபார்ம் பண்ணுவானுங்க. நமக்கு மெயில் வரும் வாசும்மா. "


"கார்த்திப்பா!. நா… உங்க கிட்ட... ஒரு .. விசயம்... சொல்லணுமே. " எனத் தயங்கி தயங்கி செல்லம் கொஞ்சுவது போல் வார்த்தைகள் வர, கார்த்திக்கிற்கு மகள் எதைபற்றிப் பேசப் போகிறாள்‌ என்று புரிந்து விட்டது.


கார்த்திக்கிடம் வாசு எதுயுமே மறைத்து இல்லை. தான் செய்யும் எல்லா சேட்டைகளையும்‌ குறும்புகளையும் கார்த்திக்கை நண்பனாய் பாவித்து மனம்விட்டு பேசுவாள். எந்த அளவுக்கு என்றால். ம்... அவள் பூப்பெய்ந்த விடயத்தை கூடக் கார்த்திக்கிடம் தான் முதலில் கூறினாள். ஜோஹிதாவிடம் அல்ல.


பன்னிரண்டு வயது இருக்கும். பள்ளியிலிருந்து கார்த்திக்கிற்கு ஃபோன் செய்த வாசு, சீக்கிரமாக வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறினாள். அப்போது கூட அவளுக்குத் தன் அன்னைக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றவில்லை.


க்ரவுண்டில் ஓரமாக அமர்ந்திருந்த மகளை பார்த்துப் பதட்டத்துடன் கார்த்திகேயன் ஓடி வர.


"கார்த்திப்பா. " என்றபடி கார்த்திக்கை அணைத்துக் கொண்டாள். அவளின் உடையில் இருந்த கரைகளை வைத்து அவளைத் தன் கையில் அள்ளிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் கார்த்திகேயன்.


விவரம் தெரியாத வயதில் உடன் படிப்பவர்கள் பேசும் வார்த்தைகளைக் கோர்த்து உதிரத்தைப் பார்த்ததும், பயத்தில் அந்த நாள் முழுவதுமே அழுதாள் பெண். அவளைத் தன் கை அணைப்பிலேயே வைத்து அவளுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னதே கார்த்திகேயன் தான். ஜோஹிதாவை விடக் கார்த்திகேயன் தான் அவளுக்கு அதிக நெருக்கம். வாசு அப்பா பெண்.


இப்போது அவள் பேச இருப்பது என்னவென்றால். பருவ வயது மங்கைக்கு காதலை தவிர வேறு எதாவது வருமா என்ன!.


'காதலா! இல்ல வெறும் க்ரெஸ் தா. ஈர்ப்புன்னு சொல்லுவாங்க. ஒரு பையன் பாக்க அழகா இருக்கான். ரசிக்கிறேன். அவ்வளவு தா. அத போய்க் காதல் கீதல்னு பேசாதிங்க. ' வாசு.


"இன்னைக்கி ருத்ராவ பாத்தியா. " எனக் கேட்டான் கார்த்திகேயன்.


"ம்... ஆமா கார்த்திப்பா. நா அவன இன்னைக்கி பார்த்தே. பாத்ததோட மட்டுமில்ல. ஈவினிங் முழுக்க எங்கூடவே தா இருந்தான். " என மாலையில் நடந்ததை கார்த்திக்கிடம் சொல்லத் தொடங்கினான்.


Vision Light Shows.


வண்ண வண்ண விளக்குகள் நமக்கு வலது புறம் இடது புறம் மட்டுமல்ல. மேலே கீழேயென எல்லா பக்கத்திலும் வண்ண விளக்குகள் தான் மின்னும். இருளின் நம்மைச் சுற்றி விளக்குகள் ஒளிரும்போது நாம் மாயாஜால உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு வரும். அந்த உணர்வு தான் வாசுவிற்கும்.


நண்பர்களுடன் ஊர் சுற்ற புறப்பட்டவள் அந்த Light Shows வை ரசித்துக் கொண்டிருக்க அவளின் கரம்பற்றி இழுக்கப்பட்டது.


'எவென்டா அது.? கைய பிடிச்சி இழுக்குறது. ' என நினைத்தாலும் கத்தி கூச்சல் போடவில்லை. வண்ண விளக்குகளை விட்டு வெள்ளை நிற ஒளியில் பார்க்கும்போது தான் தெரிந்தது அது ருத்ரதேவ் என்று.


"ஏய்!. எதுக்கு மேன் எங்கைய பிடிச்சி இழுத்துட்டு வர்ற?. "


"உங்கூட பேசணும். ஃபோன் நம்பர் தெரியாதே. அதா நேர்ல பாக்க கிளம்பி வந்துட்டேன். " என்றவன் மக்கள் கூட்டத்தை விட்டுச் சற்று தள்ளி ஒரு மரத்தடிக்கு இழுத்து வந்து விட்டான்.


" என்ன பேசப் போற.? எனக்கு உங்கிட்ட பேச எதுவுமே இல்ல. " என விலகி நடக்கும் அவளைப் பிடித்து மரத்தில் சாய்த்தவன்.


" எதுவுமே... இல்ல. ம்... " என அவளை நெருங்கி நின்று கொண்டு கேட்டான் தேவ். இல்லை அவளுக்கு மட்டும் ருத்ரா. வெகு அருகில் தெரிந்த அவனின் முகம் அவளை ரசிக்கத் தூண்டியது.


அவனின் கண்கள் ஆழமானது. அதன் கருமணிகள் அவளை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. அவனின் மேலிருந்து வந்த இதமான பாடிஸ்ஃரேயின் வாசனை அவளுள் மயக்கம் உண்டாக்கியது. மீசை கிடையாது தாடியும் கிடையாது. அடர்ந்த புருவங்களைத் தவிர முகத்தில் முடிகளே கிடையாது. அவனின் முகத்தில் எங்குக் கை வைத்தாலும் வலுக்கிக் கொண்டு சென்று விடும் அளவுக்கு வலுவலுவென இருந்தது.


கோர்ட் சூட்டில் இல்லாமல் டீசர்ட்டும் ஜீன்ஸ்ஸும் தன் பங்கைப் போனிட்டைல் போடாது விரித்து விட, அது அவனின் தோளைத் தொட்டுக் கொண்டிருந்தது. கூர் நாசி. தம் தண்ணியென எந்த ஒரு போதைக்கும் ஆளாகாத அவனின் உதடுகள் சிவந்தே இருந்தது. பெண்களுக்குத் தான் அதரங்கள் சிவந்திருக்க வேண்டுமா என்ன?. வெயிலே படாமல் வளர்ந்த அவனுக்கும் சிவந்து தான் இருந்தது. அது ரசிக்க மட்டுமல்ல முத்தமிடவும் தூண்டியது.


பாவம் எல்லாம் சேர்ந்து ஒரு சிறு பெண்ணை மயக்க, அவள் அவனைத் தள்ளி விட்டு விட்டு, " இப்படி பக்கத்துல வந்து வந்து பேசாத. " என எச்சரித்தாள்.


"ஏ.? வந்தா என்னாகிடும்?. " என்றான் கள்ளச்சிரிப்புடன் உதடுகளை வளைத்துக் கேட்க,


" அது உனக்குத் தெரியும். ஒருவேள அப்படி ஆகணும்னு தா பக்கத்துல வர்றியா. " எனக் கைகளைத் தேய்த்தபடி, ‘அடி விழும்’ என்ற அர்த்தத்தில் பேச,


"எப்படிம்மா... மொட்டையா சொல்ற. கொஞ்சம் தெளிவா சொல்லு. " என வம்பாகப் பேச, அவள் நடக்க தொடங்கினாள்.


" எனக்கு உன்னோட ஃபோன் நம்பர் வேணும். "


"அதெல்லாம் குடுக்க முடியாது. " எனத் திரும்பாமலேயே கையசைத்து செல்ல, அவன் நம்பரை சொல்ல திரும்பிப் பார்த்தாள் அவள்.


" சரியா.! அது தான உன்னோட நம்பர். "


"இல்ல. என்னோடது வேற. நீ தப்பான நம்பர யார்கிட்டையே வாங்கிருக்க. " என மறுக்கும் போதே அவளின் அலைபேசி அழைத்தது. நிமிர்ந்து அவனைப் பார்க்க,


"இது என்னோட பர்ஸ்னல் நம்பர். ஸ்டோர் பண்ணி வச்சிக்க. பழக வசதியா இருக்கும். "


"எனக்கு உ நம்பர் தேவயில்ல. நா உங்கூட பழகவும் நினைக்கல." என்று சொல்லி மீண்டும் நடக்க தொடங்கினாள்.


" ஓகே… நாம தா நாளைக்கி ஃபிஷ்ஷிங் போறோம்ல. Lake Elizabethல அங்க போட்ல போய்ப் பேசிக்கிட்டே மீன் பிடிச்சிக்கிட்டே பழகிக்கலாம். "


"ஃபிஷ்ஷிங்கா. "


"ம்... நீயும் நானும் டேட்டிங் ப்ளஸ் அவுட்டிங். நிறை ஃபோட்டோஸ் எடுக்கலாம். அத இன்ஸ்டா பேஸ்புக் ன்னு போட்டுப் பந்தா காட்டலாம். " என்றபடி நடந்து அவளின் அருகில் சென்றவன்.


"உன்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நீ விட்ட சவால்லயும் வின் பண்ணலாம். " என்றவன் அவளின் ஃபோனை வாங்கி தன் நம்பரை சேவ் செய்ய அவள் அதிர்ச்சியுடன் நின்றாள்.‌


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 7


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...