முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 15


 

அத்தியாயம்: 15

"மா… மா. சொல்லு. கார்த்தி மாமா. ரொம்ப ஈஸி தான்டா. எங்க சொல்லு கேப்போம். சொல்லுடா. ‌" என மிரட்டிக் கொண்டு இருந்தான் கார்த்திகேயன்.


ஆனால் அவனுக்கு எதிரில் இருந்த வாண்டுவோ. ' அந்த மாறில்லாம் கூப்பிட முடியாது ' என்பது போல் பார்த்தான் அந்த ஐந்து வயது சிறுவன்.


" டேய் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடான்னா மொறச்சி பாத்துட்டே உக்காந்திருக்க. சொல்லுடா குட்ட வாத்து. மா…மா. சொல்லுங்கிறேன்ல.‌" என அந்தச் சிறுவனின் சட்டையைப் பிடித்து உயர்த்தி உலுக்கி மிரட்ட,


' புயலே ஊருக்குள்ள புகுந்து விளையாண்டாலும் நாங்க நகராம நட்டுக்கிட்டு தா நிப்போம். ' என்பது போல் சிறுவன் அசராது நிற்க.


"அடிங்க... உனக்கு எவ்ளோ‌ திமிரு இருந்தா என்டவே உ திமிருதனத்த காட்டுவ... உன்ன. " என அடிக்கக் கை ஓங்க,


"கார்த்தி என்ன பண்ற. " என்ற பெண்ணின் குரல் தடுத்தது.‌


" ம்ச்… பாத்தா தெரியல இவனோட தோல உரிச்சி வெயில்ல காயப்போட்டு இவன கருவாடாட்டம் எடுக்கப் போறேன். " எனத் தலைக்கு மேலாக அந்த சிறுவனைத் தூக்க,


"கார்த்தி. அவன கீழ இறக்கி விடு. "


" முடியாது. "


"கார்த்தி ப்ளீஸ் கார்த்தி. " எனக் கெஞ்ச,


"ஏதோ நீ கேக்குறக்கிறதுக்காக இறக்கி விடுறேன். பட் அவென என்ன மாமான்னு கூப்பிட சொல்லு. இப்பவே. நா அவெ வாயால ஒருக்க கேக்கணும். " என அவனைக் கீழே இறக்கி விட,


" என்ன மறுபடியும் தூக்கி வக்கணும்னா வச்சிக்கங்க. ஆனா என்னாலலாம் மாமான்னு கூப்பிட முடியாது. I hate you lot. " என்ற சிறுவன் பயப்படவே இல்லை. எனவே மீண்டும் தலைக்கு மேல் தூக்க,


" கொஞ்ச நேரம் சும்மா இருடா. கார்த்தி இறக்கி விடு கார்த்தி சின்னப் பையன் அவெ. அவெங்கிட்ட போய் வம்பு பண்ற. "


" சரி அவன்ட்ட பண்ணல. உங்கிட்ட பண்ணலாமா.‌.. வம்பு. ம்... இன்னைக்கி நைட் உங்க வீட்டு மொட்ட மாடில. " எனக் கண் சிமிட்டி கேட்க.‌


"கார்த்தி நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சிது பேசுறியா. " என விழி விரிய கேட்டவளின் தோரனை அவனைக் கவர்ந்தது.


" ம்... " எனக் குறுநகையோடு கண் சிமிட்டி கேட்க,


" எங்கக்கா எங்கையும் வரமாட்டாங்க. முதல்ல என்ன கீழ இறக்கி விடுங்க. " என்றான் வாண்டு.


" என்னங்கடா இது. நீயும் என்ன மாமான்னு கூப்பிட மாட்ட. இவளையும் எங்கூட அனுப்ப மாட்ட. அப்றம் உங்க ரெண்டு பேரையும் நா பிடிச்சி வச்சி மிரட்டுறதுனால என்ன அர்த்தம் இருக்கு.‌ சொல்லுங்க. " 


"நா எதுக்கு உங்கள மாமான்னு கூப்பிடணும். அதுக்கு முதல்ல சரியான காரணம் சொல்லுங்க. " வாண்டு.


"ஏன்னா நா உங்கக்காவ கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்ப உனக்கு மாமா தான. " எனப் பெண்ணின் தோளில் கை போட்டுச் சொல்ல,


"அக்கா அந்தாளு சொல்லுறது உண்மையா. " என ஆச்சர்யமாகக் கேட்டான் வாண்டு. உண்மை தான் என்பது போல் பெண் வெட்க புன்னகை சிந்தினாள்.


" அக்கா உனக்கு என்ன பைத்தியமா.‌ இப்படியொரு அற‌ வேக்காட கல்யாணம் பண்ணிக்க. நா உனக்கு நல்ல ஆளா பாக்குறேன். இவெ‌ வேண்டாம் உனக்கு. " என்றவனை கார்த்திக் அடிக்கப் பாய, அவனின் கரம் பற்றித் தடுத்தாள் பெண்.‌


" சின்னு ஓடீடு. போ சின்னு. போ. " என அவசர‌ அவசரமாகப் பெண் குரல் கொடுத்தாலும், அந்த வாண்டு கார்த்தியை முறைத்தபடி நிதானமாக நடந்து சென்றான். வாண்டுவின் தலை‌ மறைந்ததும் தான் தாமதம், அவள் பிடித்திருந்த கரம் இப்போது அவளைப் பிடித்திருந்தது.


பெண்ணின் இடையை‌ சுற்றி தன் கரத்தை வளைத்திருந்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைக்க, அவனின் விழிகளைக் கண்டு முகம் சிவந்த பெண் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


" என்னடி உன்ன பாக்குறது குதிரக் கொம்பு இருக்கு. எத்தன நாள் ஆச்சி இப்படி நாம தனியா பாத்து. " என்றவன் அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க,


" நேத்து தான காலேஜ்ல பாத்தோம். அதுக்குள்ள ரொம்ப நாள் ஆன‌ மாறிப் பேசுற. "


"ஆனா எனக்கு உன்ன பாத்துட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கே. " என அவளின் கன்னத்தில் இதழ்களால் கவி பாட,


"எனக்கும் தா கார்த்தி.‌" என அவனின் மார்பில் தன் விரலால் கோலமிட்டபடி சிணுங்கிக் கொண்டே கூறினாள் பெண்.


" அந்தக் குட்ட தவக்கா தா என்ன மாமான்னு கூப்பிட மாட்டேங்கிது. நீயாது கூப்பிடலாம்லடி. " ஏக்கமாக வந்தது அவனின் குரல். தலை தூக்கி அவனின் முகம் பார்த்தவள்,


"கார்த்தி மா.மா. " என்று கூறி நாணி அவனின் மார்பில் மீண்டும் முகம் புதைத்தாள்.


"மாமா... மாமா... மாமா... என்னோட கார்த்தி மாமா. இது என்னோட மாமா." என அவனின் நெஞ்சில் புதைந்து விடும் வேகத்தில் இறுக்கி அணைக்க, அவளின் முகம் உயர்த்தியவன் வெட்கம் கொண்டு சிவந்திருந்த பிறை நெற்றியில் தன் இதழ் பதித்தான்.


பம்பரமாய் தன்னை சுழல விடும் சாட்டையாகிய அவளின் கண்களுக்குத் தன் அடுத்த முத்தங்களைத் தர, பெண்ணவளின் கரம் அவனின் கன்னங்களைத் தாங்கி அடுத்து தரவிருக்கும் இதழலொற்றலுக்காகக் காத்திருந்தது.


"அக்கா. " என்ற குரல் கேட்டது. கார்த்தி சொன்ன குட்ட தவக்கா.


"ம்ச்… டேய்… என்னடா. " என எரிச்சலுடன் திரும்பினான் கார்த்தி.


"நா எனக்குச் சம்மந்தமில்லாதவங்க கிட்ட பேசமாட்டேன். அக்கா உன்ன அம்மா கூப்பிட்டாங்க. "


" வர்றேன் போடா. "


" உன்ன கையோட கூட்டீட்டு வரச் சொன்னாங்க. வா. " என்ற வாண்டு அவளின் இடையில் இருந்த அவனின் கரத்தை விலக்கி விட்டு அவளின் கரம்பற்றி இழுத்துச் சென்றான்.


திரும்பி அவனை பார்த்துப் பறக்கும் முத்தங்களைப் பறக்க விட்டபடி சென்றாள் பெண்.‌ இதழில் உறைந்த புன்னகையுடன் அவளைத் தன் பார்வைக்குள் சிறையடைத்தான் கார்த்தி.


இப்போது அதை நினைத்தாலும் உதடுகள் புன்னகையில் விரிந்தன. இன்று க்ரிஷின், கார்த்தி மாமா என்ற அழைப்பு அவனுக்குள் பழைய நினைவுகளைத் தட்டு எழுப்பி விட்டுச் சென்றது. ஒரு வேளை அதைத் தண்ணீர் ஊற்றி எழுப்பி விடத்தான் அந்த அண்ணன் தம்பி இருவரும் வந்துள்ளனரோ. எனெனில் கார்த்திக்‌ மறக்க நினைத்ததை நினைவு படுத்தி சென்றுள்ளனரே.


"கார்த்திக்... கார்த்திக்... உன்னோட பொண்ணு என்ன பண்றான்னு பாரு. கார்த்திக். " என வெகுநேரமாக அசையாது பழைய நினைவுகளில் இருந்த அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள் ஜோஹிதா.


"கார்த்திப்பா நா சொல்றது சரி தான. ம்…" என்றாள் மகள்.


"என்னடி கரெக்டா பண்ணிட்ட. யாராது கண்ண தொறந்துட்டே கிணத்துல விழுவாங்களா. விழுறவங்க பெரிய முட்டாள். அந்த மாறியான அறிவு ஜீவி தா நீ. " என்றாள் மனைவி.‌


"ரொம்ப சரியா சொன்னிங்க. நீங்கள் சொன்னத செஞ்சா கிணறு இல்ல பெரிய கடல்லயே குதிச்ச மாறி இருக்கும். என்னால நீங்கச் சொன்னதுக்கு சம்மதிக்க முடியாது. அப்படியே பண்ணித்தா தீரனும்னா. நா கேக்குறதுக்கு சரின்னு சொல்லுங்க. ‌" என்றாள் வாசு.‌


"இப்ப என்ன பிரச்சனன்னு சொல்லிட்டு சண்ட போட்டுறிங்களா ரெண்டு பேரும். " கார்த்திக் குழப்பமாக.


"கார்த்திக் இப்பவே அவளுக்கு வயசு இருபத்தி ஒன்னாகப்போது.‌ படிக்க வைச்சோம். ஓகே. வேலைக்குப் போகணும்னு சொன்னா. ஓகே. தனியா தா இருப்பேன்னு சொல்லித் தூரமா போய் வேல பாத்தா. அதுக்கும் ஓகே. இப்ப வேற ஒரு வேள பாக்கபோறேன்னு சொல்றா. அதுக்கு ஓகே தான சொல்லிருக்கோம். இவா சொன்னா எல்லாத்துக்கும் ஓகே சொன்னோம்ல. இப்ப நமக்காக இத பண்ண மாட்டாளா உம்பொண்ணு. "


" நமக்காக இல்ல உங்களுக்கான்னு சொல்லுங்க நா ஒதுக்கிறேன். எதுக்கு கார்த்திப்பாவையும் கூட்டு சேக்குறிங்க. இது எல்லாமே உஷா ஆன்டியும் நீங்களும் சேந்து போட்ட ப்ளான் தான. "


"ஜோஹிதா என்னாச்சி. "


"நா சொல்றேன் கார்த்திப்பா. " என மகள் ஒரு புறம் அமர்ந்தாள் என்றாள்.‌


" நா சொல்றேன் கார்த்திக். " என மனைவி மறுபுறம் வந்து அமர்ந்தாள்.


"கார்த்திப்பா என்ன கல்யாணம் பண்ண சொல்லிச் சொல்றாங்கப்பா. "


"இதுல என்ன தப்பு இருக்கு கார்த்திக். உஷாவோட ரிலேட்டிவ் பையன் இங்க க்ரீன் கார்டு வச்சிருக்கான். நா உங்கிட்ட சொன்னேன்ல கார்த்திக். நீ கூடப் பாக்கலாம்னு சொன்னேல. " என அவனின் முகம் திருப்பி.


"எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல பிரச்சின இல்ல. ஆனா ஜோஹிம்மா நா வேல பாக்க கூடாதுன்னு சொல்றாங்க. " என்றாள் குற்றம் சுமத்தும் குரலில்.


"உம்பொண்ணு அந்தச் சிவ்ராம் ஸாரோட ஹோட்டல்ல வேல பாக்க போறேன்னு சொல்லிட்டு இருக்கா கார்த்திக். உனக்கே தெரியும் அந்தக் குடும்பம் நம்மகிட்ட வந்து பேரம் பேசுனது. அவங்க ஹோட்டல்ல போய் வேல பாக்குறது எனக்குப் பிடிக்கல. கண்டிஷன் போடாம கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு அவள. "


"கார்த்திப்பா இது எந்த விதத்துல நியாயம். நீங்க ரெண்டு பேருமே லவ் மேரேஜ் தான. நா மட்டும் ஏ வீட்டுல பாக்குற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கணும். "


"உன்ன கல்யாணம் பண்ண சொல்லல. ஜஸ்ட் பேசிப் பழகத்தா சொல்றோம். " கார்த்திக்.


"கார்த்திப்பா. நீங்களுமா!!. " என்க.


" இதோ பாரு வாசு உனக்குச் செட்டாகுச்சின்னா மட்டும் தா கல்யாணங்கிற பேச்ச எடுப்போம். இல்லன்னா எதுவுமே நடக்காது வாசு. " எனக் கார்த்திக் மகளின் திருமணம் குறித்து பேச,


"ஓகே… அப்ப நீங்கச் சொல்ற பையன நா போய்ப் பாத்து பேசிப் பழகுறேன். அப்ப நீங்க நா க்ரிஷ் ஸாரோட ஹோட்டல்ல வேல பாக்க சம்மதிப்பிங்க தான. " என்றபோது, இருவர் முகத்தில் குழப்ப ரோகை. ஜோஹிதா சரி என்று விட்டாள். மகளின் பிடிவாதம் தெரிந்தது.


"நீ ஏ வாசும்மா அவங்க கிட்ட வேல பாக்கனும்னு நினைக்கிற வேற எங்கையாது பாக்கலாம்ல. " கார்த்திக்


" கார்த்திப்பா எனக்குத் தெரியும் அவங்க நம்மல மாறியான சின்ன சின்ன ரெஸ்டாரன்ட் ஹோட்டல்ஸ் எல்லாத்திட்டையும் வலுக்கட்டாயமா பிஸ்னஸ் பேசுறாங்கன்னு. பட் அப்படி அவங்க வாங்குன எந்தப் பிஸ்னஸும் லாஸ்ல போகவே இல்ல. சம்திங் மேஜிக் பண்ற மாறிப் பிஸ்னஸ் வளந்துட்டே இருக்கு. அது எப்படி?


அத‌‌ கண்டுபிடிக்கணும்னா. நாம நம்ம எதிரியோட மூவ்ஸ வாட்ச் பண்ணிடே இருக்கணும். அதுவும் நெருக்கமா. அப்பத் தா அவனுங்க கிட்ட மாட்டாம நம்மலால தப்பிக்க முடியும். அதுக்கு நாம அவங்க கிட்டயே வேல பாத்து தொழில கத்துக்கணும். என்ன நா சொல்றது கார்த்திப்பா. சரி தான. " என்றபோது ஜோஹிதா தலையில் அடித்துக் கொண்டாள். கார்த்திக் இதழில் புதைந்த புன்னகையுடன் மகளைப் பார்த்தபடி இருக்க,


"பெரிய டயலாக்லாம் பேசிருக்கேன்‌. ஏ எந்தக் கமெண்ட்ஸ்ஸும் இல்ல.‌"


" என்னமும்‌ பண்ணித் தொல. நாளை நீ நியூயார்க் கிளம்பிடுவ. அதுக்கு அடுத்த நாள் அந்தப் பையன் உன்ன வந்து பாக்குறதா சொல்லிருக்கான். ஃபோட்டோவையும் டீட்டெயில்ஸ்ஸையும் உனக்கு வாட்ஸ் ஆப் பண்றேன். எல்லாம் நீ குடுக்குற இடம் தா கார்த்திக் இது இத்தன வாய் பேசுது. " எனக் கார்த்திக்கின் தலையில் தட்டிவிட்டு சென்றாள் ஜோஹிதா.


" இந்த அம்மாக்களே இப்படி தானா கார்த்திப்பா. எப்ப பாரு‌ திட்டிக்கிட்டே. ச்ச‌‌… நீங்கச் சொல்லுங்க நா எடுத்த முடிவு சரி தான.‌" எனத் தோளில் சாய்ந்து கொண்டு கேட்க,


" ம்… எதிரிய தூரம வச்சிக்கிறத விட. பக்கத்துல வச்சிக்கிறது சரிதா. பட் இங்க எதிரி யாரு?. "


"கார்த்திப்பா. " எனச் சிணுங்கினாள் மகள்.


"ஓகே. ஓகே. நீ அந்த ஹோட்டல சூஸ் பண்ணதுக்கு அது மட்டும் தான காரணம். ம்… ருத்ரா இல்லேல்ல. சரியா… நம்பிட்டேன். நம்பிட்டேன். " எனக் கேலி செய்தபடி எழுந்து செல்ல.‌


வாசுவின் 'அப்படில்லாம் இல்ல கார்த்திப்பா. ' என்ற குரல் கேட்கவே இல்லை. அவளுக்கே கேட்கவில்லை. அத்தனை மெதுவாக வந்தது அந்தக் குரல்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


நேசிப்பாயா 14

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...