அத்தியாயம்: 16
" அந்த மயில் கழுத்து கலர் காட்டுங்க. ஹாங் அது தான். வாவ்!. இட்ஸ் ப்யூட்டி புல். இது என்ன மாறியான பட்டு." என்றது புவனா.
தன் திருமணத்திற்காகப் பட்டு புடவையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
"இது எல்லாமே பனாரஸ் பட்டும்மா. இது மைசூர் பட்டு. இது நம்ம காஞ்சிபுரம் பட்டு. எல்லாமே ஏ1 க்வாலிட்டி. தங்க சரிகம்மா. " என புடவையைக் கொண்டு வந்த கடைக்காரர் அந்தப் பட்டின் அருமை பெருமைகளைக் கூறி ஒவ்வொன்றாக பிரித்துக் காட்டிக்கொண்டு இருந்தார்.
"பூவி, இத பாரு. " எனத் தாரிகா ஒரு புடவையில் எடுத்துக் காட்டினாள்.
"ம்… நைஸ் தாரி. அதோட பத்தாவது. " என அதையும் தான் இதுவரை தேர்தெடுத்து வைத்திருந்த புடவைகளில் மேல் அடுக்கி வைத்தாள் புவனா. தன் வருங்கால கணவனுடன் கலந்து ஆலோசித்து அதை டிசைனரின் உதவியுடன் எப்படி தைப்பது போன்ற முடிவுகளை எடுக்க உள்ளாள்.
" தாரிகா, இத நீ கல்யாணத்தப்ப கட்டிக்கலாம்ல. அழகா இருப்ப. " என அமிர்தா ஒன்றை காட், தாரிகா யோசித்தாள். ஏனெனில் க்ரிஷ் ' நா வந்து தா நீ கட்டப் போற சேலைய சூஸ் பண்ணுவேன். அதுக்குள்ள எதையாது எடுத்த பாத்துக்க. ' என மிரட்டி விட்டுச் சென்றதால், மாமியாருக்கு என்ன சொல்ல எனத் தெரியாமல் முழித்தாள் அவள்.
"அத இங்க கொண்டா. ஹங்!!. நல்லா தா இருக்கு. சின்னப் பார்டரா இருக்கு. ம்... சரி இத நா வச்சிக்கிறேன். கிழவிங்க கட்டுறத குமரிங்களுக்கு காட்டுனா என்ன சொல்லுவா. பாவம். எம்பேத்திக்கி எதுவுமே தெரியல. அத அவா புருஷெ வந்து பாத்துக்குவான். ஆமா நீ உனக்கு எடுத்துட்டியா. " என்றார் ராசாத்தியம்மாள்.
"இல்லம்மா. அவரு வந்து தா எனக்கு எது அழகா இருக்கும்னு பாத்து சொல்லுவாரு. நா எடுத்து வச்சாலும் அவரு சொல்றத தா கல்யாணத்தப்ப கட்டிப்பேன். " என்ற அமிர்தாவின் முகத்தில் வெட்கம். முப்பத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்தாலும் சிவ்ராம் மனைவியின் மீது கொண்டிருக்கும் காதல் இன்றும் மாறியது இல்லை. மாறவும் செய்யாது.
பிள்ளைகளின் முடிவுக்கும் விருப்பத்திற்கும் தடை சொன்னது இல்லை. ஆனால் அமிர்தாவிற்கு வேண்டிய அனைத்தையும் தானே முன்நின்று தேர்வு செய்வார். அதில் அமிர்தாவிற்கும் அப்படி ஒரு சந்தோஷம்.
" க்கும், எதுக்கும் உன்ன வெளில விடாமா உள்ளயே வச்சிருந்தா எப்படி இருக்கும். இப்படித்தா ரசனையே இல்லாம இருக்கும். எடுத்திருக்கா பாரு பட்டிக் காட்டான் கணக்கா பஞ்சி மிட்டாய் கலர்ல. எங்க காலத்துல இருக்குற மாறி நல்ல டிசைனாவா இருக்கு இது. ஆளுகள வீட்டுக்குப் புடவைய தூக்கிட்டிவரச் சொல்லி எடுக்குறது என்ன பழக்கமோ.
நாங்கல்லாம் அந்தக் காலத்துல ஒரு நாள் முழுக்க நினச்ச மாறிப் புடவ கிடைக்கிற வரைக்கும் கட கடயா அழஞ்சி, திரிஞ்சி எடுப்போம். அப்பெல்லாம் கல்யாண பொண்ணுக்கு தேர்தெடுக்குற உரிம கிடையாது அதுக மாமியாருக்கும் நாத்தனாருக்கும் தா இருக்கும். அதெல்லாம் அந்தக் காலம். " எனத் தன் திருமணம் நடந்தபோது நடந்த பழைய காலத்து கதையைச் சொல்ல,
"மாம், உங்கள சேல மேல கை வக்காதன்னு சொல்லுது உங்கம்மா. " என்றபடி வந்து அமர்ந்தான் தேவ்.
"நா எப்படா அப்படி சொன்னேன்?. "
"இப்ப தான சொன்னிங்க. எங்கம்மாவ கிழவின்னு. அதுமட்டுமா சொன்னிங்க. எங்கம்மாக்கு ரசனையை இல்ல. அப்றம் மாம்ம டாட் கூண்டுல அடச்சி வளக்குற மாறிப் பேசுனீங்களே. " தேவ்.
"ஆமாமாம்மா. சொன்னாங்க. நாங்கேட்டேன். " புவனா சொல்ல ராசாத்தி முழித்தார்.
" எப்படி எங்க வீட்டுலயே உக்காந்திட்டு எங்கம்மாவயே நக்கல் பேச்சு பேசிட்டு. எங்கப்பாவையே கொற சொல்லிட்டு திரியுறீங்க. ம்… உங்கல்லாம் என்ன பண்ணலாம்." புவனா.
"எங்க டாட் யாருன்னு தெரியுமா?. தி கிரேட் பிஸ்னஸ் மேன் சிவ் ராம்." தேவ்.
" அவர பாத்தா எத்தன பேர் பயப்படுவாங்கன்னு தெரியுமா?. " புவனா.
"எனக்கு எந்தப் பயமும் கிடையாது டி. பெரிய அப்பாடக்கராவே இருந்தாலும் நா ஏண்டி பயப்படணும். "
" டாட், வெய் லேட்?. " எனத் தேவ் எழ, ராசாத்தி திரும்பியும் பார்க்காது உள்ளே சென்று மறைந்து விட்டார். மருமகளிடமும் அப்படி தான். ராசாத்திக்கி வெறும் வாய் மட்டுமே தான்.
அவரின் மின்னல் வேக நடையை கண்டு மற்றவர்கள் சிரிக்க,
"மாப்ள, இன்னைக்கி நீங்க ஃப்ரீயா.? " எனக் கேட்டபடி வந்தார் மதன கோபால். தேவ் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியும். அதனால்,
"பிஸி மாமா. வேல இருக்கு. " என்றவன் நகர்ந்து செல்லப் பார்க்க,
" என்ன விசயம் மதன்.? " அமிர்தா.
"அது தன்யா இன்னைக்கி இந்தியால இருந்து வர்றா. அதா அவள பிக்கப் பண்ணீட்டு வரமுடியுமான்னு சின்ன மாப்ளைட்ட கேக்கலாம்னு. " என இழுக்க, தேவ் மறுக்கும் முன்,
"இதுக்கென்ன. தேவ் போய் கூட்டீட்டு வா. எத்தன மணிக்கி ஃப்ளைட் மதன்." எனத் தம்பியிடம் கேட்டு அமிர்தா சொல்ல, தாயை முறைத்தபடி சென்றான் தேவ்.
" மாப்ள போவாறா க்கா.? " என்ற கோபாலுக்கு புன்னகையுடன் பதில் சொல்லிச் சென்றார் அமிர்தா.
"மாப்ள நம்ம பொண்ண தனியா கூட்டீட்டு வரப்போறாரு. ரெண்டு பேர் மட்டும் கார்ல தனியா வர்ப்ப எல்லாத்த பத்தியும் பேசி ஒரு நல்ல முடிவா எடுப்பாங்க. அது எனக்குச் சாதகமான முடிவா இருந்தா எப்படி இருக்கும். "
"கண்றாவியா இருக்கும். ஏம்ப்பா ஏ... ஏ இப்படி கேவலாம யோசிக்கிறீங்க. அவா எங்க தனியாவா வர்றா. கூட அம்மாவும் தான வர்றாங்க. அவங்க பாக்காத இடமா. இங்கயே பிறந்து வளந்த அம்மாக்கும். இந்த ஊரோட இன்டு இடுக்குல சுத்துன தன்யாவுக்கும் வீடு வந்து சேரத் தெரியாதா. நீங்கப் போடுற திட்டம் ரொம்ப மோசமா இருக்கு. நல்லாவும் இல்ல. " எனக் கோபமாக அவரின் முன் வந்து நின்றாள் தாரிகா.
" நா உன்னோட அம்மாக்கு ஃபோன்ல சொல்லிட்டேன்ம்மா. அவா எப்படியும் தன்யாவ மட்டும் தனியா மாப்ள கூட அனுப்பிடுவா. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துவந்தா. கல்யாணம் தா. " எனச் சிரிக்க, தலையில் அடித்துக் கொண்டாள் தாரிகா.
" என்ன தாரி?. மாமா பெரிய பெரிய ப்ளான்லாம் போடுறாரு. " புவனா.
"எல்லாமே ஊத்தி ஒழுகப் போது. அது தெரியாம இவரு காமெடி பண்ணிட்டு இருக்காரு. " என்றவள் சில புடவைகளை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் செல்ல, அங்கு அவள் கையில் வைத்திருந்ததை விட நல்ல சில புடவைகள் கட்டிலில் ஏற்கனவே இருந்தது.
" க்ரிஷ். " என அவள் அழைக்கும் முன்னரே வந்து அவளை அணைத்தான் அவளின் ஆசை கணவன்.
"எப்ப டா இத எடுத்த?. " என்றாள் அணைப்பில் இருந்தபடியே கேட்டாள்.
"கடக்காரன வீட்டுக்கு வரச் சொல்றதுக்கு முன்னாடியே இதெல்லாத்தையும் வழிப்பறி பண்ணீட்டு வந்துட்டேன். எல்லாம் என்னோட ஹனிக்காக. ஷீ!. எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு. இது உனக்குன்னே நெஞ்ச மாறி இருக்குல்ல. " என ஒரு புடவையைப் பிரித்து மனைவியின் மேல் போட்டவன் அவளைக் கண்ணாடி முன் நிறுத்தி அழகு பார்த்தான்.
தாரிகா க்ரிஷ்ஷுடன் வேலைக்குச் செல்லும் போது சேவை அணிந்து செல்வது தான் அவளின் வழக்கம். வீட்டில் எப்படி இருந்தாலும் வெளியே தன் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள். உனக்குத் தேவை என் திறமை மட்டுமே என் ஆடையை வைத்து என் திறமையை மதிப்பிட்டால் உன்னைப் போன்ற முட்டாள் யாருமே அல்ல என்பவள். அதற்காக மாடன் உடைகளுக்கு எதிரானவள் அல்ல. அதுவும் பிடிக்கும். இது மிகவும் பிடிக்கும்.
தன் இணையின் செயலில் பூரித்து போனவளின் கண்களுக்கு மேஜையில் அனாமத்தாக இருந்த மற்றொரு சேலை பட்டது.
"க்ரிஷ் இது யாருக்கு?. "
"இது வாசுக்கு ஹனி. நல்லா இருக்கா?. " எனக் கேட்க, தாரிகா கோபம் கொள்ளவில்லை. அவளுக்கும் வாசுவின் முகம் அவர்கள் சிறுவயதில் பழகிய வாணி அக்காவின் முகம்போல் தெரிந்தது.
" வாணிக்காவ அதுக்கு அப்றம் நீ பாக்கவே இல்லையா க்ரிஷ்.? "
"இல்ல தாரிகா. உனக்கே தெரியும் அவங்க நம்ம கூடப் பழகுன பழக்கம். எவ்வளோ க்ளோஸ்ஸா இருந்தாங்க. பட், அவங்கள பத்தி அவங்க ஃபேமிலி ரொம்ப மோசமா பேசுறாங்க ஹனி. அவங்க சொல்ற மாறில்லாம் வாணிக்கா கிடையாது. ரொம்ப நல்லவங்க. ஆனா!. ம்ச்… என்ன விடத் தேவ் தா அதிகமா அழுதான். அதுனால தா அவெ அடுத்து இந்தியாக்கே வரல. " என்றவனின் நினைவுகளில் வந்து சென்றார் வாணி.
யார் அது எனப் பின்னால் பார்க்கலாம்.
மதன கோபால் போட்ட திட்டம் சரியாகவே இருந்தது. ஏனெனில் இப்போது சாலையில் வழுக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்தக் காரில் இருவர் மட்டும் பயணம் செய்கின்றனர்.
தன்யாவும் தேவ்வும் தான் அது. ரஞ்சனி கலன்று கொண்டார். மதன கோபால் சொன்னதற்காக அல்ல தன் அண்ணனைப் பார்க்க. பல மாதங்கள் கழித்து வருகிறார் எனவே சிவ்ராமை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லலாமென நினைத்தார். சிவ்ராமின் அனைத்து பிஸ்னஸிலும் ரஞ்சினியும் ஒரு பார்ட்னர்.
காரில் அதிக ஒலியுடன் பாடல்கள் ப்ளே செய்யப்பட்டிருந்தது. வெளியே இருப்பவர்களின் குரல் கண்ணாடி ஜன்னல்களைத் தான்டி உள்ளே வராதபடி, இல்லை வர முடியாது எனும் அளவுக்குச் சத்தமாக இசைத்துக் கொண்டிருந்தது.
பாப் சாங். ஆங்கிலத்தில் இருந்த அதன் வரிகளைப் பாடிக் கொண்டும் தலையசைத்து ரசித்துக் கொண்டும் தன்யா மட்டும் இருக்கவில்லை. தேவ்வும் தான் கேட்டுக் கொண்டு வந்தான்.
அவனுக்குத் தாரிகாவுடன் தான் பிரச்சனை. அதுவும் அவள் அவனின் மானத்தை வாங்கி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது வரை பார்க்கும் தன் சொந்தங்கள் எல்லோரிடமும் தேவ் அந்தப் பெண்ணிற்கு கொடுத்த முத்ததையும். ஃபிஷ்ஷிங் என்ற பெயரில் நண்பர்களுடன் அவன் பழகுவதையும் சித்தரித்து கூறிக் கொண்டே இருந்ததன் விளைவு அது.
மற்றபடி அவனுக்குத் தன்யாவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை. சொல்லபோனால் தாரிகாவை விடத் தன்யா ஃப்ரீ டைப். எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு ஜாலியா பழகுவாள். no more heart feelings ya என்பவள். அதனாலேயே தேவ்வும் தன்யாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆனார்கள். அந்த பழக்கத்தைத் தான் கல்யாணமாக மாற்ற முயற்சிக்கிறார் மதன்.
"ஹே.ஏ. தேவ் இன்னும் ஸ்பீடா போக முடியுமா. " எனத் தன்யா காரின் டாப்பை ஓப்பன் செய்து தன் கரத்தை விரித்தபடி கேட்க,
"கண்டிப்பா பேபி. " என்றவனின் கார் தார் சாலையில் ஓடாது பறந்தது.
வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் கேலி செய்து பேசிச் சிரித்தபடியே இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த மதன கோபலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. புன்னகையுடன் வரவேற்றார் அவர். தேவ் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, தன்யா, வீட்டாரிடம் பேசினாள்.
"அத்தை. " என அமிர்தாவை கட்டிக் கொண்டு. அங்கு நல விசாரிப்புப் படலம் நடைபெற்றது.
"டயர்டா இருப்ப ம்மா. போய்க் குளிச்சிட்டு வா. சாப்பிடலாம். " அமிர்தா
"ஓகே அத்த. வா தேவ். நா உனக்காகச் சில ஐட்டம்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். " என அவனின் தோளில் தொத்திக் கொண்டு மாடி ஏறினாள் தன்யா.
"நா சொன்னேல்லக்கா சின்ன மாப்பிள்ளைக்கி தன்யான்னா உசுருன்னு. பாத்தேல்ல நீயே. இன்னைக்கி மச்சான் வரட்டும் அவருக்கிட்டையே பேசிக்கிறேன். " என்றார் மதன்.
தோளில் கை போட்டு இணை பிரியா இரட்டையர்கள்போல் உரசிக் கொண்டு சென்றவர்களின் முன் தாரிகா கோபமாக வந்து நிற்க. தேவ் அவளை கண்டு கொள்ளாது தன்யாவுடன் பேசிய படி நடந்தான். ஆனால் தாரிகா தன்யாவை பிடித்து இழுத்துச் சென்றாள். தனியாக.
வேற எதுக்கு தேவ்வை பற்றிப் புகழ்ந்து பேசி எச்சரிக்கைத் தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..