அத்தியாயம்: 17
"உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா டி. அவெங்கூட போல் தோள்ள தொங்கிக்கிட்டு வர்ற. விட்டா அவெ முதுகுலயே உப்பு மூட்ட ஏறிக்கிவ போல.. " என்றாள் தாரிகா காட்டமாக.
"ஆமால்ல. படிக்கட்டுல தேவ் என்ன உப்பு மூட்ட தூக்கிட்டு வந்தா நல்லா இருக்கும்ல. நா போய்த் தேவ் கிட்ட கேக்குறேன். அவெ என்ன தூக்கிட்டு வர நோ சொல்லமாட்டான். " என சொல்லித் திரும்ப,
"முட்டாள்... முட்டாள்... நீ அவெங்கூட இப்படி வரமொற இல்லாம பழகுறதுனாலதா அப்பா உனக்கு மாப்பிள்ளையா இவன சூஸ் பண்ணிருக்காரு. தயவு செய்து கேட்டுக்கிறேன். இனி அவெங்கூட இப்படி பழகாத. " எனக் கெஞ்ச,
"நீ நிஜமாவா சொல்ற?. "
"எத.? "
"அப்பா எனக்கும் தேவ்க்கும் கல்யாண ஏற்பாடு பண்றாத!. " என விழி விரிய அதிர்ச்சியாகக் கேட்டாள் அவள்.
"ஆமா.! ஆனா அது நடக்காது. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். உன்ன அவெனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவா!. நீ கவலையே படாத உங்கல்யாணம் உனக்குப் பிடிச்சவெங்கூட தா நடக்கும். உன்ன அவன்ட்ட இருந்து நா கண்டிப்பா காப்பாத்துவேன்... கவலயே படாத. சரியா!. " என ஆறுதல் சொன்னாள் தாரிகா.
அதிர்ச்சியிலிருந்த தங்கையின் நிலையை தவறாகப் புரிந்து கொண்டு பேசிவிட்டாள்.
" ஏய்!. என்னாச்சி?. ஏ உறஞ்சி போய் நிக்கிற. ?" எனத் தன்யாவை உளுக்க, அவள் தாரிகாவை கட்டியணைத்து சுற்றினாள்.
" வாவ்.! வாவ்.! வாவ்!. சூப்பரான ஒரு விஷயத்த சொல்லிருக்க. நான் எதுக்கு கவலப்படணும். எனக்குப் பிடிச்ச பையன் எப்பவுமே தேவ் தா. எனக்கும் அவனுக்கும் கல்யாணமா.! எப்ப.?" என ஆனந்தமாகக் கேட்க,
'சும்மா கிடந்த சங்க நாமலே ஊதி கெடுத்துட்டோமோ.! ' என்பதே போல் ஒரு ரியாக்ஷனை கொடுத்துக் கொண்டு நின்றாள் தாரிகா.
"தேவ் என்னோட லைஃப் பார்ட்னர். நினைக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. அவெ கிடைக்க நா குடுத்து வச்சிருக்கணும். அவெ எவ்ளோ ஹாட் தெரியுமா!. ஹென்சம். மேன்லி ஹைய். அப்பா எனக்குச் செஞ்சதுலயே இது தா உருப்படியான நல்ல விசயம். " எனக் கனவுகளில் மிதந்தபடி தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுக்க0பின்னாலேயே வந்தாள் தாரிகா.
" லூசாடி நீ.? அவெ யாரு எப்படி பட்டவன்னு கண்ணால பாத்ததுக்கு அப்றமும் அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷம்னு சொல்ற. ரெண்டு நாளைக்கி முன்னாடி கூடப் பாத்தேன். அவெ ஒரு பொண்ண கட்டிப்பிடிச்சி முத்தம் குடுக்குறத. ஒன்னு விட்டு ஒன்னுன்னு தாவிக்கிட்டு போற வண்டு மாறி இருக்குற அவனையா நீ கல்யாணம் பண்ணிக்க போற?. "
" அவெ முத்தம் குடுத்தத நீ பாத்தியா. ம்… உங்கண்ணால? நேர்ல?. பக்கத்துல வச்சா பாத்த.? " என முக்கியமான சந்தேகத்தைக் கேட்க,
"அப்படி கண்ணால, நேர்ல பாத்தேன்னு சொல்லிட முடியாது. கொஞ்சதூரமா பாக்குறப்ப அப்படி தா தெரிஞ்சது. " எனத் தடுமாறி பேசியவளை தன்யா உற்றுப்பார்த்தாள்.
" ஆனா அவெ அந்தப் பொண்ண தனியா கூட்டிட்டு போட் எடுத்துட்டு கடலுக்குள்ள போனான். மூணு. நாள் கழிச்சி தா வந்தான். இத என்னன்னு சொல்ற. "
" உனக்கு ஏ அவெ மேல இவ்ளோ காண்டு. "
"காண்டெல்லாம் இல்ல. இது பழிக்கி பழி. க்ரிஷ் கூட எனக்கு நடக்க இருந்த கல்யாணத்த இப்படி தா சொல்லித் தடுக்க பாத்தான். நல்ல வேள க்ரிஷ் அவெ பேச்ச கேக்கல. "
" அப்ப நா மட்டும் எப்படி உம்பேச்ச கேப்பேன். சொல்லு?. " என்றவளை முறைத்தாள் தமக்கை.
" உனக்கு அவெ கூட என்ன தாண்டிப் பிரச்சன?. "
" அவெ பிஞ்சிலயே பழுத்தவேண்டி. பதினஞ்சு வயசு இருக்குமா! அந்த வயசுலயே அவெ அந்தப் பொண்ண கட்டி பிடிச்சி கிஸ் பண்ணவெ. இப்ப இருபத்தி எட்டு வயசாகுது. என்னென்ன பண்ணுவான். பண்ணிருப்பான். சொல்லு. பாக்குற எல்லா பொண்ணுங்களையும் அவெ எப்படி ட்ரீட் பண்றான்னு உனக்குத் தெரியுமா?. ம். "
" ஏன்டி நீ இன்னும் பழய பஞ்சாங்கமா இருக்க. பாத்ததும் கட்டிப்பிடிச்சி கன்னத்துல லைட்டா கிஸ் பண்ணா அவங்கள வரவேற்கிறதுன்னு அர்த்தம். அதப் போய். ச்ச. "
"அவெ பண்ணதுக்கு பேர் வரவேற்பு. ம் நம்பிட்டேன் டி. நம்பிட்டேன். " என ராகம் பாட.
" உன்ன கிஸ் பண்ணானா. " என எதிர் கேள்வி கேட்க, அவள் திருதிருவென முழித்த படி இல்லை எனத் தலையசைத்தாள்.
" எங்கிட்டையும் தேவ் அந்த மாறி நடந்துக்கிட்டது இல்ல. அத்த பொண்ணுங்கன்னு உரிம எடுத்துக்கிவானே தவிர மோசமா நடந்துக்கிட்டது இல்ல. நீ அவன பத்தி சொல்லும்போது தேவ் ஒரு தர்டு ரேட் பொறுக்கிற மாறி ஃபீல் ஆகுது. ப்ளிஸ் இனி அப்படி பேச. ஏன்னா அவெந்தா உன்னோட தங்கச்சி புருஷெ." எனத் தன் பெட்டியைப் பிரித்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலை செல்ல.
" நீ அவன லவ் பண்றியா! என்ன.? " என்றாள் தாரிகா, குரலில் அதிர்ச்சி இருந்தது.
"இதுவரைக்கும் இல்ல. ஆனா அவெந்தா எனக்கு ஹஸ்பென்ட்டுன்னு முடிவு ஆகிடுச்சின்னா அந்த லவ்வையும் பண்ணிட வேண்டியது தா. " எனத் தமக்கையை பார்த்துக் கண்சிமிட்டி விட்டுச் சென்றான் தன்யா.
'என்னமும் போ. ச்ச கூடப்பிறந்த பாவத்துக்கு உனக்குப் போய் நல்லது பண்ணலாம்னு வந்தே பாரு. என்னைய சொல்லணும். அவனுக்கு உன்னய பிடிக்கும். ஆனா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்குச் சத்தியமா பிடிக்காது. எனக்கு இப்பையும் நம்பிக்கை இருக்கு. இந்தக் கல்யாணம் நடக்காது. ' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே சென்று விட்டாள் தாரிகா.
அலுப்பு தீரக் குளித்து முடித்துக் குதுகலத்துடன் அறையை விட்டு வெளியே வந்த தன்யா கையில் ஒரு கேமராவுடன் வீட்டின் பின் புறம் சென்றாள். வயது இருபத்தி நான்கு இருக்கும். இப்போது வரை வேலை வெட்டிப் பார்க்காமல் வெட்டியாய் ஊர் சுற்றிவதில் அதிகமான நேரத்தைப் போக்குவாள். வருடத்திற்கு ஒரு மாதம் சிவ்ராம் வீட்டிற்கு வந்து தேவ்வுடன் ஊர் சுற்றுவது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
கையில் கேமராவுடன் தேவ்வை இழுத்துக் கொண்டு கடலுக்குச் சென்று விடுவாள். தான் ரசிக்கும் அனைத்தையும், நினைவுகளாக அந்தப் படக்கருவியில் பதிந்து வைத்துக் கொள்வாள். சின்ன சின்ன விசயங்களைக் கூட ரசித்துச் செய்யும் ரசனை உடையவள்.
வீட்டை விட்டு வெளியே வந்து அங்கிருந்த சின்ன சின்னப் பூச்சிகளை படம் பிடித்தவள். தன் மூன்றாம் கண் வழியே அந்த வீட்டைப் படம் எடுத்தாள். அவளுக்கு எப்போதும் பிரம்மிப்பு தரக்கூடிய விசயங்களில் ஒன்று அந்தச் சிவாஸ் பேலஸ்.
பெரிய மாளிகை அது. சுற்றி இரும்பு கதவுகளால் கோட்டை போல் பாதுக்காக்கப்பட்டும் மாளிகை. வரும் வாகனங்களுக்கு ஒரு பாதை, செல்லும் வாகனங்களுக்கு ஒரு பாதையென வட்ட வடிவில் சாலைகள் போடப்பட்டு இருந்தது. மற்ற இடங்களில் போர்வை போர்த்தியது போல் புற்கள் சில செண்டிமெண்ட் உயரத்திற்கு மட்டுமே வளர்க்கப் பட்டிருந்தது. ஆங்காங்கே உயரமாக மரங்களும் வளர்க்கப்பட்டு இருந்தன. அது பலவித பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் உறைவிடமாய் அமைந்தது.
தினமும் பார்ட்டி என்ற பெயரில் அந்தப் புல்லில் சில நாற்காலிகளைப் போட்டு வண்ண விளக்குகளால் தோரணங்கள் கட்டி தொங்க விட்டுக் கொண்டாடலாம். ஆனால் சிவ்ராம் குறிப்பிட்ட சில விசேஷமான நாட்களைத் தவிர வேறு எதற்கும் பிற மனிதர்களைத் தங்களின் வீட்டிற்கு அழைக்கமாட்டார்.
மாளிகைக்குள்ளேயே இறை வழிபாட்டிற்கு சிவாலயம், உடற்பயிற்சி செய்யக் கூடங்கள், ஏழெட்டு கார்களும் சில பைக்குகளும் நிற்கும் பெரிய பார்க்கின், வேலயாட்களுக்கு எனத் தங்கு இடம். அருகிலேயே சமையல் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் என எல்லாம் இருக்கும். வரவேற்பின் நடுவே நீரூற்று. கண்ணாடியில் செய்த சிலைகள் எனப் பிரம்மாண்டமாக இருக்கும் அது தான் சிவாஸ் பேலஸ்.
இங்குச் சிவ்ராம்,, க்ரிஷ், ,தேவ்விற்கு எனத் தனி தனியான அலுவலக அறை உண்டு. அது போன்றதொரு அலுவலகத்தின் உள்ளே இருந்த தேவ்வை தன் மூன்றாம் கண்ணில் பார்த்து விட்டு ஓடினாள் தன்யா, , தேவ் காண.
அங்குக் கண்ணாடி கதவுகளுக்குப் பின், கோர்டு அணிந்த சில மனிதர்களுடன் தேவ் காரசாரமாக விவாதித்து கொண்டிருப்பது தெரிந்தது. கதவைத் தட்டி அனுமதி எல்லாம் கேளாது உள்ளே வந்தாள் தன்யா.
" இதுவே கடைசியா இருக்கட்டும், இனி இதுமாறியான சீப் எஸ்க்யூஸ்ஸ சொல்லிட்டு எம்முன்னாடி வர்றது. அடுத்து இதே தப்பு நடந்தா I will fire everyone. You may go now. " என்றான் கோபமாக.
" Hey man!. calm down. ஏ இவ்ளோ கோபம்??. " என அவள் கேட்பதற்கும் மற்றவர்கள் வெளியேறவும் சரியாக இருந்தது.
" ஒன்னுமில்ல தன்யா. நீ ஏ இங்க வந்த?.? " எனக் கேட்டவனின் பார்வை தன்யாவை தாண்டிப் பின் நின்றிருந்த ஒருவரின் மீது பட்டது. அவரைக் கண்டு புன்னகைத்தவன்,, அவருடன் பேசச் சென்று விட்டான்.
'இவன பாத்து பேசிக் கரெட் பண்ணலாம்னு வந்தேன். அவெ என்னடான்னா என்ன பாத்து சிரிக்காம, ஒரு ஆம்பளைய பாத்து சிரிக்கிறான். எஸ்கேப் ஆகிட்டான் ச்ச… நீ ஃப்ரியாகுற வரத் தா வாசல்லயே காத்திருக்கேன். ' என அவனின் அலுவலகத்தினால் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தன்யா.
"என்னடி தன்யா தனியா உக்காந்திருக்க.!!" என்றபடி வந்தாள் புவனா.
" வாம்மா கல்யாணப் பொண்ணு. என்ன ரைமிங்காலாம் பேசுற!. யாரு சொல்லித்தந்தா??. மார்க்கா!?. ம்..... வேறென்னென்ன சொல்லித்தான் உன்னோட வருங்கால கணவன்?. " எனக் கண்சிமிட்டி கேட்க,, புவனாவின் முகம் வெட்கம் கொண்டது.
சிவ்ராமின் நண்பரின் மகன் தான் மார்க். இருவருக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை. ஆனால் நல்ல நட்பு இருக்கிறது. மார்க் தான் தொடங்கினான் நட்பைக் கல்யாணமாக்கும் முயற்சியை. எவ்வித எதிர்ப்புமின்றி திருமணம் நடக்க உள்ளது மூன்று வாரங்களில்.
"பூவி யாரு இவங்கெல்லாம். தேவ் வேற கோபமா கத்திட்டு இருந்தான். சரி நாம போய் அவன கூல் பண்ணலாம்னு பாத்தா, இப்பவும் யாரையோ கூப்பிட்டு வச்சி ரொம்ப நேரமா கழுத்தறுத்துட்டு இருக்கான். என்னாச்சி?.? "
" பிஸ்னஸ் டென்ஷன். உள்ள இருக்குறவரு ஈவன்ட் மேனேஜர். Fremont ல இருக்குற ஹோட்டல வீக் எண்டுல ஒரு ஈவன்ட் நடந்த ப்ளான் பண்றதுக்காக வந்திருக்காரு. அப்றம் போறவங்க, நம்ம பேக்டரியோட யூனியன் வெர்க்கர்ஸ். சின்னப் பிரச்சன. அதா."
"ஹோட்டலா!!. எப்பருந்த இந்தப் பிஸ்னஸ்ஸ பாக்க ஆரம்பிச்சான்.? இருக்குறது போதாதுன்னு சொல்லுவான். அவனா புதுசா ஹோட்டல்ஸ் மேனேஜ் பண்றான்?. எப்படி.? ?" ஆச்சர்யமாக.
" தெரியல, தேவ் அண்ணேந்தா இத ஆரம்பிச்சான். அப்பாக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லதா. பட் அண்ணாக்காக ஓகே சொன்னாரு."
சிவ்ராம் கடின உழைப்பால் உயர்ந்தவர். தன் தந்தை சேர்ந்து வைத்தவற்றை பாதுக்காக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக நினைத்து அதைப் பேணி காத்ததோடு மட்டுமல்லாது பலமடங்கு வளர்க்கவும் செய்தார். தன் மகன்களும் அவ்வாறு இருக்க விரும்பினார்.
பள்ளி படிக்கும் போதே அவர்களைத் தங்களின் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்வார். மகன்களை மட்டுமல்ல மகளையும் தான். தன் அனுபவங்களை அவர்களுக்குக் கற்றுத்தந்தார்.
தான் அவர்களுக்குக் கற்றுத்தரும் தன் அனுபவம் போதாது இந்த உலகம் அவர்களுக்குக் கற்றுத்தரும் அனுபவம் தான் முக்கியம் என எண்ணியவர் தன் மகன்களுக்கு முழுதாகச் சுதந்திரம் கொொடுத்து வளர்ந்தார். அவர்களின் முடிவுகளுக்குத் தடை சொன்னது இல்லை.
வியாபார தந்திரங்களைக் கற்று வளர்ந்த இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல…
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..