முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 18

அத்தியாயம்: 18


நீச்சல்.


நல்லதொரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியும் கூட. உடலுக்கும் மனதுக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும் அது உடலில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.


‘இப்ப இதெல்லாம் நா ஏ சொல்றேன்னா அதெல்லாம் உண்மை.’ 


அதற்கு ஒரு நல்ல உதாரணம் நம் தேவ். வாக்கிங் ஜாக்கிங் என்று உடல்பயிற்ச்சி செய்ய மாட்டான். தினமும் ஒரு மணி நேரம் விடாது நீந்துவதனாலேயே அவனின் உடல் இறுகி வலுவேறிய எஃகினை போல் திடகாத்திரமான இருக்கும். தேவையற்ற சதைகள் இல்லாத கட்டுடல் அவனுடையது.


இப்போதும் அந்தக் குளத்தில் தான் உள்ளான். அவர்களின் குளம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று ஆழம் குறைவானதாக இருக்கும். குறைவு என்பதே ஆறடி தான்.


'நாலாம் போனா அந்த சின்னக் குளத்துலயே முங்கிடுவேன் ப்பா. '


அப்போ‌ அதிகம்னா!!. 


அது கிட்டத்தட்ட ஐம்பதடிக்கும் மேல் இருக்கும் போலவே. freediving என்று சொல்லப்படும் மூச்சி பிடித்துக் கொண்டு தண்ணீரின் ஆழம் வரை சென்று நீந்துவது. scuba diving என்பது முகமூடியின் மூலம் ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டு அதிக ஆழம் வரை செல்வது. freedivingகில் ஆக்ஸிஜனின் உதவியின்றி நீந்துவது.


தேவ்விற்கு freediving பிடிக்கும். மூச்சைப் பிடித்துக் கொண்டு எவ்வித உதவியும் இல்லாமல் நீரில் ஆழத்தில் நீந்தும்போது அவனின் மன அழுத்தம் குறைவது போல் உணர்வான். கிட்டத்தட்ட தண்ணீரில் தியானம் என்றும் சொல்லலாம்.


நீருக்கு அடியில் சின்ன சின்ன விளக்குகள் மின்னிக் கொண்டே இருந்தது.‌ நீர், அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் அவை.


இரவு என்பது நள்ளிரவை நெருங்கி விட்டது. இருந்தும் அவனின் நீச்சல் முடியவே இல்லை. இரண்டு மணி நேரத்திற்கு பின் நீரிலிருந்து எழுந்து வந்தான். உடலில் சொட்டிய நீரை துண்டால் துடைத்தவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நேரம் பார்க்கவெனத் தன் ஃபோனை எடுக்க, அதன் திரை கீறல் விழுந்திருந்தது.


உயர்தர, விலை அதிகம் உள்ள கம்பெனியின் புது மாடல் ஃபோன் அது. எப்படி உடைத்திருக்கும்?. ஒரு வேலை கோபத்தில் அவனே தூக்கி எறிந்து விட்டானோ!. இருக்காது. அப்படி எறிந்திருந்தால் இன்னேரம் புதியதொரு ஃபோன் வந்திருக்கும். ஏன் கோடு போட்ட செல் ஃபோனை உபயோக்க வேண்டும். 


யார் தந்த கீறல் அது?. 


அது அவனின் மனம் கவர்ந்தவள் குடுத்த கீறல். அதைக் கண்டவனின் உதடுகள் அழகிய புன்னகையை பூத்தன.


"ராச்சஸி.‌ நான்னு நினைச்சி என்னோட ஃபோன தூக்கிப் போட்டு உடச்சிட்டா. ப்பா... என்ன விட அதிகமாவே கோபப்படுவான்னு நா நினைக்கவே இல்ல. பட் அதுவும் நல்லா தா இருக்கு. கோபவத்துல முகம் சிவக்கும்போது பாக்க ரத்த காட்டேரி மாறியே இருந்தா. " என்றவனின் நினைவில் வாசவி மட்டுமே நிறைந்திருந்தாள்.


தன் உடைந்த ஃபோனை வருடியவனின் விரல்கள் வாசுவின் கரத்தின் மென்மையை உணர்ந்தன.


' எப்படி!! எப்படி!! மெட்டல் ஃபோனு இவனுக்கு மட்டும் சாஃப்ட்டான கையாட்டம் தெரியாதாக்கும். புதுசால்ல இருக்கு. '


"இது மேஜிக். இந்த மாறி மேஜிக் எல்லாம் அவளால தா பண்ண முடியும். " 


"என்ன மேஜிக் தேவ்.‌?" என்றபடி வந்தாள் தன்யா.


" ஹேய்.! தன்யா!. நீ எங்க இங்க.? அதுவும் இந்த நேரத்துல.‌" எனக் கேட்டான் தேவ். மணி பன்னிரெண்டை தாண்டி இருந்தது.


"தூக்கம் வரல. கோமரால ஸ்டார்ஸ்ஸ ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தேன். உன்னோட தல இந்தப் பக்கமா தெரிஞ்சது. அதா எட்டிப்பாத்துட்டு போலாம்னு நினைச்சேன்.‌. " என்றவள் அவனின் சிக்ஸ் பேக்கை ரசித்துப் பார்த்தாள்.‌


"சிக்ஸ் பேக். பில்டிங் ப்ளாக்ஸ அடுக்கி வச்ச மாறி. எப்படி ப்பா அப்படியே மெயிட்டெய்ன் பண்ற. வெரி செக்ஸியஸ்ட் பாடி. " என்றவளின் பேச்சிற்கு மற்ற நேரமாக இருந்தால் தன் கரத்தை உயர்த்தி ஆம்ஸை காட்டி மினி ஆணழகன் ஃபேஷன் ஷோவே நடத்திருப்பான். ஆனால், இன்று ஏனோ சிறு கூச்சம் வர எழுந்து சென்று டீசர்ட் மாட்டிக் கொண்டான். அது தன் வாசு பார்த்து ரசிக்க வேண்டியது என்பதால்.


"என்ன உடனே சட்டைய எடுத்துப் போட்டுட. என்ன காரணம். " எனக் கண் சிமிட்டி கேட்க.


"எந்தக் காரணமும் கிடையாது. நீ ஏ இன்னும் தூங்காம இருக்க. உனக்கு எட்டு மணிக்கே தூக்கம் வந்திடுமே. இவ்ளோ நேரம் தூங்காம இருக்கன்னா. எதுவும் பிரச்சனையா.? " என அக்கறையுடன் கேட்க,


" அப்படில்லாம் ஒன்னுமில்ல. " என்றாள் சோர்வாக.


"அப்ப ஒன்னில்ல நிறையவே இருக்குன்னு அர்த்தம். சொல்லு. என்னாச்சி?. " எனக் கேட்டவனின் முகம் பார்க்காது திரும்பிக் கொண்டாள், சொல்ல விருப்பம் இல்லை என்பது போல்.


" இட்ஸ் ஓகே. நா போறேன். இந்த நேரத்துல உன்னையும் என்னையும் இந்த இடத்துல இந்த மாறி டிரெஸ்ல உங்கக்கா பாத்தான்னா அவ்ளோ தா. மினி கோர்ட்டையை வீட்டுக்குள்ள கொண்டு வந்து அவளே ஜர்ஜா மாறி, என்ன தூக்குல போடச் சொல்லிடுவா. " என்றவன் நடக்க, தன்யா உடனே திரும்பி.‌


" தீர்ப்பு சொல்றது மட்டுமில்லாம தேவ் அவளே கயற எடுத்துட்டு வந்து கழுத்துல மாட்டி விட்டுடுவா. உயிர் போயிடுச்சா இல்லையான்னு பாத்துட்டு தா நகருவா.‌ ஆமா! உங்க ரெண்டு பேருக்கும் ஏ இப்படி முட்டிக்கிது. " எனக் கேட்க,


" தெரியல. அவளுக்கு என்ன பிடிக்கல. எனக்கு அவள சுத்தமா பிடிக்கல. அவ்ளோ தா. " என்றவன் தன் அறையை நோக்கிச் செல்ல, கூடவே தன்யாவும் நடந்தாள்.


"தேவ், இப்ப நம்ம வீட்டோட ஹாட் டாப்பிக் என்னனு தெரியுமா.?" 


"ம். தெரியுமே. நாம தா அந்தத் தலைப்பு செய்தின்னு. "


"என்ன பேசுறாங்கன்னு உனக்கும் தெரியுமா?. வாவ்!. சூப்பர் நானும் அத பத்தி தா உங்கிட்ட பேசலாம்னு வந்தேன்.‌. நீதா பிடிகுடுக்காம பிஸின்னு பந்தா காட்டிட்டு சுத்துற. "


"இதுல பேச என்ன இருக்கு தன்யா. நாங்க அப்படி நினைச்சி பழகல. இதெல்லாம் வேண்டாம்ன்னு போய் உங்கப்பாட்ட தெளிவா சொல்ல வேண்டியது தான. "


"எது?. வேண்டாம்ன்னு சொல்லனுமா!. " என அதிர்ச்சியாகக் கேட்க, தேவ் திரும்பி அவளைப் பார்த்தான்.


"தேவ் என்ன பேசுற நீ.? உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்குக் கடவுளா பாத்து குடுத்த நல்ல வாய்ப்பு இது. அத போய் வேண்டாம்னு யாராது சொல்வாங்களா.! நா எவ்ளோ பெரிய ப்ளான் போட்டு வச்சிருக்கேன். உன்ன கல்யாணம் பண்ணிட்டு எங்கெங்க போலாம்னு பெரிய பெரிய லிஸ்டே போட்டுட்டேன். பக்கெட் லிஸ்ட். பாக்குறியா!. " எனக் கேட்க. அவளின் குரலில் எதையோ உணர முடிந்தது அவனால்.


"தன்யா‌‌ என்னாச்சி உனக்கு.? ஏ இப்படி கண்டத உலறுற?. நமக்குள்ள அந்த மாறி எண்ணமே கிடையாதே. இத பத்தி நாம நம்மோட சின்ன வயசுலயே பேசிருக்கோம். அதோட உனக்குத் தா ஆல்ரெடி ஒரு பாய் ஃப்ரெண்டு இருக்கே. "


"அதுனால என்ன. அவெ ஃப்ரெண்ட். நீ ஹஸ்பென்ட். ரைமிங்கா இருக்கில்ல." என்றவளின் பேச்சு பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.


" ம்ச், எனக்கு விருப்பம் இல்ல தன்யா. போய் நீயே இந்தப் பேச்ச தடுத்து நிப்பாட்டு. இல்லன்னா நா பாத்துக்கிறேன். " என்றவன் முன்னேறிச் செல்ல.


"நா எதுக்கு நிப்பாட்டணும். ம்... நீ என்னோட அத்த பையன் தான. உன்ன கட்டிக்க எனக்குத் தா முதல் உரிமை இருக்கு. அத ஏ நா விட்டுக் கொடுக்கணும். சரியான காரணம் சொல்லு. என்ன வேணாம்னு நீ சொல்றதுக்கு. ம்… நீ சொல்ற காரணம் எனக்கு ஓகேன்னு தோனுச்சின்னா, நா போய் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லன்னு நாளைக்கி வீட்டுல எல்லார் கிட்டையும் நா சொல்றேன். " 


"அத எதுக்கு நா உங்கிட்ட சொல்லணும். ம்…" எனக் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பியவன் அவளின் முகம் கண்டு நிதானித்து.


" நா ஒரு பொண்ண லவ் பண்றேன். போதுமா. நீயும் ஒருத்தன லவ் பண்ற தான. " என சந்தோஷமாகக் கேட்க,


" அப்ப உனக்கும் என்ன பிடிக்கலயா!. " என்றவளின் குரல் வலி நிறைந்ததாக இருந்தது.


'ஐய்யோ பாவம் பொண்ண எவனோ வேண்டாம்னு கலட்டி விட்டுட்டான் போல. '


" தன்யா. " என அவளின் தோளை தொட, அவள் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள். குலுங்கி அழும் அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தான் தேவ்.


அவனுக்குத் தன்யா நெருங்கிய தோழி. புவனாவுக்கும் சரி, தன்யாவுக்கும் சரி க்ரிஷ்ஷும் தேவ்வும் தான் நண்பர்கள். அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் சொந்தங்கள். அந்தக் கூட்டத்தில் தாரிகா மட்டும் கிடையாது.


"என்ன நடக்குது இங்க?. " என்றபடி வந்தாள் புவனா.


"ஸ்ஸூ. தன்யா அழுதிட்டு இருக்கா!. "


"அதா தா ஏன்னு கேக்குறேன் ண்ணா?. "


"பத்து நிமிசம் அழட்டுமே. அப்றம் உக்காந்து ஃப்ளாஷ் பேக் சொல்லுவா. பொறு. "


"என்ன என்னோட மச்சினிச்சி கண்ணுல இருந்து கண்ணீரா வருது. " எனப் புவனாவின் கேள்விகளைத் தாங்கியபடி வந்தான் க்ரிஷ். ஆனால் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை.


" என்னாச்சினு யாராது சொல்றீங்களா ப்பா. " க்ரிஷ்.


" தெரியல்லண்ணா. "


" நத்திங். " தன்யா சொல்ல.


"எப்ப ப்ரேக்கப் ஆச்சி தன்யா. " தேவ்.


"ப்ரேக்கப் பா. " க்ரிஷ்


"நீ எப்ப லவ் பண்ண தன்யா.?" புவனா ஆச்சரியமாக.


"ஒரு வாரம் ஆச்சி தேவ். எங்கூட பழகும் போதும் பேசும் போதும் தெரியாத என்னோட கல்சர். கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேக்கும் போது தெரிஞ்சிடுச்சாம். பழங்காலத்து ஆள் மாறிக் கல்யாணம் கண்றாவின்னு பேசுறன்னு சொல்லி என்னோட காதல உடச்சிட்டு போய்ட்டான். " என்றாள் சிறு கண்ணீருடன்.


" யாருடி அது?." புவனா


" எப்படி அவெங்கூட உனக்குப் பழக்கம்.? " க்ரிஷ் சிறிய புன்னகையுடன். ஏனெனில் இது அவளது ஆறாவது ப்ரேக்கப். பள்ளியிலிருந்து இப்போதுவரை லவ், லவ்வர, க்ரஸ் எனப் பலர் இருந்தனர் தன்யாவிற்கு.


"ஒரு டிப்ளோமோ கோர்ஸ் சேந்தேன்ல. சிக்ஸ மன்த்துக்கு. அப்பத் தா அவன பாத்தேன். முதல்ல அவெந்தா ஃபேஸ் புக்ல ரெக்வஸ்ட் பண்ணான். நா கன்பார்ம் மட்டும் தா பண்ணேன்.‌ அப்றம் க்ளாஸ் தேடி வந்து வந்து பேசுனான். அப்றம் ஃபோன் நம்பர் மாத்திக்கிட்டோம். நட்பு காதல மாறுச்சி. கொஞ்சம் கொஞ்சமா க்ளாஸ கட்டடிச்சிட்டு சுத்த ஆரம்பிச்சோம். நல்லா தா போச்சி. அடுத்து என்ன. நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு கேட்டேன்.


அந்த மல மாடு. என்ன ஜஸ்ட் என்டர்டெயின்மென்ட்டுக்காகப் பழகிருக்கு. நாந்தா முட்டாத் தனமா காதலு கீதலுன்னு தப்பா புரிஞ்சாக்கிட்டு என்னோட மனச கெடுத்துக்கிட்டேன். " என விளையாட்டாகக் கூறினாலும் அவளின் காதல் உண்மை.‌ அது அவளின் கண்ணீரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.‌ இந்த முறை உண்மையாவே காதலிச்சிருந்தால் போலும்.


"இந்தச் சோஷியல் மீடியா பாய்ஸ் எவனுக்குமே தைரியமே கிடையாது. text லயே நல்லா பேசிப் பழகி நம்மல ஒரு யூஸ் அண்டு த்ரோ கப்பு மாறித் தூக்கி போட்டுட்டு போய்டுறானுங்க. எங்க க்ரிஷ் மாமா மாறி யாருமே உண்மையா லவ் பண்றது இல்ல. நீங்க ரொம்ப க்ரேட் மாமா. எப்படி எங்கக்காவையே காதலிச்சி எங்கக்காவையே கல்யாணம் பண்ணி எங்கக்கா கூடவே இத்தன வர்ஷம் இருக்குறீங்க.? " 


"அதுக்கெல்லாம் ஒரு தியாக மனசு வேணும்மா."


" ம்… நீங்கத் தியாகிலாம் இல்ல. லவ்வர் பாய். சிவ் மாமா, இந்த வயசுலையும் அத்த கூட எப்படி டூயட் பாடுறாரு. ச்ச.‌.. அந்த மாறி உண்மை காதல் எல்லாம் உங்க குடும்பத்துக்குள்ள‌ மட்டும் தா இருக்கு. அதுனால. "


"அதுனால. " கோரஸ்ஸாக.


"அதுனால தா நா தேவ்வ கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்தக் காதல் குடும்பத்துக்குள்ள எனக்கும் இடம் வேணும்ல. துண்டு போட்டுப் பிடிக்கிறதுக்கு பதிலா, நா அப்பாவ தூக்கி போட்டு இடம் பிடிக்கப் போறேன். " என்க, அவளை முறைத்தபடி சென்றான் தேவ்.


"நாளைக்கி எங்கப்பா கேக்கலன்னாலும் நானே மாமாட்ட போய்ச் சொல்லுவேன். நீயும் நானும் லவ்வர்ஸ்னு. அமிர்தா அத்த சொன்னா நீ கேட்டுத்தான ஆகணும்.‌


தேவ்… குறிச்சி வச்சிக்க. நாந்தா உனக்குப் பொண்டாட்டி. இத யாராலையும் மாத்த முடியாது. இது இந்தத் தன்யாவின் சபதம். " எனக் கத்தியவளின் குரலுக்குச் செவி சாய்க்காது அறைக்கதவை சாத்தினான் தேவ்.


"வருங்கால ருத்ரதேவ் பொண்டாட்டி தன்யா, உங்க சபதம் எடுக்குற டயம் முடிஞ்சிடுச்சின்னா எனக்குக் கொஞ்சம் வழி விட முடியுமா. ஏன்னா பாதைல நின்னு சபதம் செஞ்சா யாராலையும் அந்தப் பக்கம் போக முடியாது. சோ ஓரமா நின்னு உங்க சபதத்த சத்தம் போடாம பண்ணுங்க. ம்… ஏன்னா இது நைட் நேரம். கேக்கறவெ காது அவிஞ்சி போய்டும்.‌" என அவளை நகர்த்தி விட்டு விட்டுச் சென்றான் க்ரிஷ்.


அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நின்ற தன்யா "ஒரு வேள தேவ் கூட எங்கல்யாணம் நடக்கலன்னா நாந்தா உங்க ரெண்டாவது பொண்டாட்டி. தாரிகா அவளோட செல்லத் தங்கச்சிக்காக எதுனாலும் பண்ணுவா. " என்று மற்றொரு சபதம் இயற்றியவளை இழுத்துச் சென்றாள் புவனா.‌


ஒருவேள இவளோட முதல் சபதம் பழிச்சிடுமோ.! அப்ப வாசுவோட நிலம?…

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 17


நேசிப்பாயா 19


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...