அத்தியாயம்: 19
ஓம்... நமசிவாய…
ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய…
இந்த ஒலியே அந்தத் தியான அறையில் நிறைந்திருந்தது. எல்லாம் வல்ல சிவனின் முன் சம்மணமிட்டு அமர்ந்து இரு விழிகளை மூடி மனதை ஒருநிலை படுத்தி இந்தக் குடும்பமே அமர்ந்திருந்தது.
"ய்…யா.ஆ... " என முழு நீளக் கொட்டாவியை விட்டார் ராசாத்தி.
"பாட்டி.! என்ன பண்ற?. கண் மூடித் தியானம் பண்ணு. " தாரிகா.
"மூடித்தாண்டி இருக்கேன். ரொம்ப நேரமா மூடீட்டு தா இருக்கேன். வாய் தா திறந்து இருக்கு. என்ன பண்ண?. " என்றார் அவர் மீண்டும் ஒரு கொட்டாவியை விட்டபடி.
"ஏ ராசாத்தி, உன்ன உக்காந்திட்டு தூங்க சொல்லல. தியானம் பண்ண சொன்னோம். வாய இவ்ளோ பெருசா தொறக்காத. பெருச்சாலி நுழையிற பொந்து மாறி இருக்கு. " தன்யா.
"நா ஏன்டி அர்த்தர ராத்தில எந்திரிச்சி உக்காந்து தூங்க போறேன். என்ன எழுப்பி விட்டு இந்தக் குடும்பமே கொடும படுத்துதே. ஈஸ்வரா… நா பேசாட்டிக்கி சிவனேன்னு ஊர்ல இருந்தேன். என்ன கொடும படுத்தணும்னே கூட்டியாந்திருக்கானுங்க. ஹிம்... நா போய்க் குறுக்க செத்த கீழ போட்டுறேனே. " எனப் பாட்டி எக்கேப் ஆகப் பார்க்க, தாரிகா அமர வைத்தாள்.
"மணி ஆறாகுது. எப்ப பாத்தாலும் ‘எங்க காலத்துலாம்’ன்னு இழுப்பியே. காலைல வெல்லன எழுந்து உங்க காலத்துல பழக்கம் இல்லயா ராசாத்தி. " தன்யா.
"எந்திரிப்பேன்டி. எந்திரிச்சி வேல வெட்டிப் பாப்பேன். இப்படி அநாமத்தா உக்காந்திருக்க மாட்டேன். "
"பாட்டி, காலைல எழுந்ததும் இந்த மாறித் தியானம் பண்ணணும் அது இந்தக் குடும்பத்தோட வழக்கம். "
"நா உங்க குடும்பமே கிடையாதே. ஏன்டி என்ன இழுத்து வச்சி உக்கார வைக்கிறிங்க. நீ அந்த வீட்டுக்கு மருமக. நீ வந்து இந்தக் குளிர்ல உக்காந்திருக்குறதுல ஒரு நியாயம் இருக்கு. என்ன ஏன்டி எழுப்பி விட்ட.? " என்றார் பாட்டி தாரிகாவை பார்த்து. அதற்குத் தன்யா ஒன்று சொல்ல, தாரிகா இன்னொன்னு சொல்ல என அமைதியாக இருந்த இடத்தில் முணுமுணுவெனச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
அது நம்ம சிவ்ராமை தொந்தரவு செய்திருக்க வேண்டும். திரும்பி அவர் பார்த்த பார்வையில் பாட்டி பக்குவமாய் கண்ணை மட்டுமல்ல காது வாயென ஐம்புலன்களையும் மூடிக் கொண்டார்.
" ஏ! தன்யா வர்றப்பவெ உங்க பாட்டிக்கு ஒரு ப்ளாஸ்த்ரி பாக்கெட் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல. வாய்ல x மார்க் போட்டு வச்சி நம்ம மாதேஷ்கு மேக்ஸ் க்ளாஸ் நடத்திருக்கலாம். " கேலி செய்தான் தேவ்.
"வயசானவங்கன்னா அப்படி தா இருப்பாங்க. இவன மாறியா உர்ராங்கொட்ட குரங்கு மாறி வாய உப்பி வச்சிட்டு உம்முன்னு இஞ்சி தின்ன மாறி மூஞ்சிய வச்சிட்டு இருப்பாங்க. ப்ளாஸ்த்ரி போடுவானாம் ப்ளாஸ்த்ரி. ஹிம். " வேற யாரும் இல்லை தாரிகா தான்.
" என்ன தேவ் காலைலயே சூடு தாங்காம பட்டாசு பறக்குது. அணுகுண்டு மாறில்ல இருக்கு. " தன்யா.
"உங்கக்கா அணுகுண்டா. ஆள் குண்டுன்னு வேணும்னா சொல்லு ஏத்துக்கிறேன். ஆனா அணுகுண்டுன்னு சொல்லாத. அவா ஒரு சீனி பட்டாசு. கைல வச்சே வெடிக்கலாம். " என்றான்
"யாரு பட்டாசு யாரு பத்தவச்சா?. " எனக் கேட்டி வந்து நின்றார் சிவரஞ்சனி. தேவ்வின் அத்தை.
"மாம், உங்க குழந்தைங்கள அணுகுண்டுன்னு சொல்றான் உங்க சின்ன மாப்பிள்ள. " என்க.
தேவ் 'சின்ன மாப்ளே யா. பைத்தியமா இவ!. இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தா. ' என்பது போல் பார்க்க,
" தேவ் இன்னும் உங்களுக்குள்ள சண்ட ஓயவே இல்லயா. !" எனக் கேட்டார் ரஞ்சனி.
"அத்த, அது உங்க மகா கைல தா இருக்கு. நா அவாக்கிட்ட பேசவே இல்லலன்னாலும் ஜாட மாடையா திட்டி என்ன கடுப்பேத்திட்டு போற. "
"சரி விடு தேவ். உன்னோட பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது.?" எனக் கேட்க,
"ம்… இதுவர எல்லாமே சரியாத்தா போக்கிட்டு இருக்கு. " எனப் பேசியபடியே சென்றவர்கள் அமர்ந்த இடம் டைனிங் டேபிள்.
வீட்டார் அனைவரும் ஒன்று கூடி உணவு உண்ண, நம் மதன் சரியான நேரம் பாத்து காத்துக் கொண்டு இருந்தார்.
"பாட்டி… பாட்டி... " எனத் தாரிகா ரகசியமாக ராசாத்தியை அழைக்க..
"என்னடி வேணும். சும்மா சும்மா காதுக்குள்ள குசுகுசுன்டு. உம்மாமெ வேற அப்பப்ப மொறச்சிட்டே திரியுறான். "
"ம்ச்… நா சொல்றத கேளு பாட்டி. அப்பா இருக்குற பொசிஷன பாத்தா, மாமா கிட்ட தன்யா தேவ்வோட கல்யாணத்த பத்தி பேசப்போறாரு போல. "
"நீயேண்டி கவலப்படற. அதா இந்த வீட்டுக்குப் பெரிய மனுசியா நா இருக்கேனே. நா பாத்துக்கிறேன். " என்க, தாரிகா நிம்மதியுடன் உணவில் கை வைத்தாள்.
" மாமா, உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்." என்றார் மதன்.
" சொல்லுங்க மதன். "
"டைனிங் டேபிள்ள வச்சி சாப்பிடத்தா செய்யணும். வேற எதப்பத்தியும் பேசக் கூடாது. இந்தாங்க. " என உணவைப் பரிமாறினார் அமிர்தா.
"ரெண்டு நிமிஷம் தானக்கா. ரஞ்சனி சொல்லு. " மதன்.
ரஞ்சனி வாயைத் திறப்பதற்குள்,
" அந்த ரெண்டு நிமிசத்துல சாப்பாட்டு வேல முடிஞ்சிடுமே மாமா. எதுக்கு நல்ல மனநிலமைய கெடுக்க பாக்குறீங்க. " தேவ் சொல்ல அமைதியாகிப் போனார் மதன். சின்ன மாப்பிள்ள பேச்ச கேக்கலன்னா கோயிச்சிட்டு போய்டுவாரில்ல. அதா.
தந்தையின் அமைதியை பொறுக்காத தன்யா தேவ்வின் காலில் ஓங்கி மிதிக்க, அவன் அவளை முறைத்தான். " எது நம்ம கல்யாண விசயம் பேசுனா உங்க மனநில கெட்டுப் போய்டுமா.! ம்... மாம்ஸ் நீ இந்தப் பேச்ச தள்ளித்தா போட முடியும். தவிர்க்க முடியாது. ஒரு பொம்பளப்பிள்ளையா நானே பயப்படாம தைரியமா கல்யாணத்துக்கு ரெடியா இருக்கேன். நீ என்னடான்னா. ஒருவேள உனக்கு உடம்புல ப்ராப்ளமா?. சுரக்க வேண்டிய எல்லா ஹார்மோனும் கரெட்டா தான சுரக்குது." என அவனின் காதில் முணுமுணுக்க,
'மாம்ஸ்ஸா!. இது எப்பத்துல இருந்து. சரி விடு. இந்தக் கட்டெறும்புகிட்டலாம் வீர வசனம் பேசி நம்ம நேரத்த வீணடிக்கக் கூடாது.' என அமைதியாகத் தன் கின்னத்தில் இருந்த ஓட்ஸை காலி செய்து விட்டு எழுந்தான்.
ஹாலில் அனைவரும் கூடி இருக்க… மதன் மீண்டும் தயங்கி தயங்கி ஆரம்பித்தார்.
"அண்ணா நம்ம தேவ்வ தன்யாக்கு கட்டி வைக்க இவரு ஆசப்படுறாரு. நீ என்னண்ணா நினைக்கிற. " ரஞ்சனி. அவரின் பேச்சு எப்பொழுதும் 'வெட்டு ஒன்று துண்டு ரெண்டு' என்பது போல் தான் இருக்கும்.
" இதுல மாப்ள நினைக்க என்ன இருக்கு. சொந்த அத்த மகள கட்டிக்க கசக்குமா என்ன?. அதுலையும் அதுக ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னாவே சுத்துதுக. அப்ப அந்த ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான மொற. " ராசாத்திங்க.
'இது எப்பத்துல இருந்து நமக்குச் சப்போட்டா பேச ஆரம்பிச்சிச்சி. ' தேவ்வின் மைண்ட் வாய்ஸ்.
"பாட்டி நம்ம கோல் போஸ்ட் அங்க இருக்கு. நீ என்னடான்னா ஆப்போஷிட் காரனுக்கு கோல் போட்டுக் குடுக்குற. " தாரிகா.
" பொறுடி இந்தப் பாட்டியோட ஆட்டத்த. " என்றார் ராசாத்தி.
" அதா அம்மாவே சொல்லிட்டாங்கல்ல. நீங்க என்ன சொல்றிங்க மாமா?. " எனச் சிவ்ராமை கேட்க, அவர் மகனைத்தான் பார்த்தார்.
'இவரு அம்மா பெரிய அமெரிக்கன் ப்ரசிடெண்ட்டு. சொல்லிட்டாங்களாம் சொல்லி. ' என்பது போல் பார்த்தவன் தந்தையின் பார்வை உணர்ந்து தன் கருத்தைச் சொல்லும் முன், தன்யா வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.
" என்ன மாறியே இது உனக்கும் சந்தோஷமான செய்தி தான தேவ். " என்க, அவளை முறைத்தான். அவன் மறுக்கும் முன் அவனின் கரத்தை அழுத்திப் பிடித்து, பேசாதே என்பது போல் தலை அசைத்தாள் அவள்.
'சரி எவ்ளோ தூரம் தா போகுதுன்னு பாப்போமே. நம்ம ஊர் கிழவி எதாவது பண்ணுமே. ' என அமைதியாக இருந்தான்.
" அப்றம் என்ன எல்லாருக்கும் சம்மதம் தான. புவனா கல்யாணத்தப்ப நிச்சயத்த வச்சிக்கிவோம். அடுத்த மாசம் கல்யாணம். " என மதன கோபால் நாள் குறிக்க.
"அப்பு கொஞ்சம் பொறுப்பூ. கல்யாணம்னா என்ன சும்மாவா. அதுக்கு நாள் பாக்கணும் நட்சத்திரம் பாக்கணும். முக்கியமா ஜாதகம் பாத்து பொருத்தம் இருக்கான்னு தெரிஞ்சிக்கணும். " ராசாத்தி.
'ஓ. கிழவி சுத்துப் போடுதாக்கும். தலைய சுத்தி மூக்க தொடுறதுதா கேள்வி பட்டிருக்கேன். பட் இது சூரியனையே சுத்தோ சுத்துன்னு சுத்தி வருது. இன்ட்ரெஸ்டிங். ' என ஆர்வமாக வாய் பார்த்தான் தேவ்.
" ம்மா எந்தக் காலத்துல இருக்க நீ. இப்ப அதெல்லாம் யாரும் பாக்குறது இல்லம்மா. " என்றார் மதன்.
"ஏன்டா உம்மூத்த மகளுக்கு அப்படி பாத்து தான கல்யாணம் பண்ண. இப்ப மட்டும் என்ன வந்துச்சாம். சொல்லு. திருமணத்துக்குத் தேவ மணப் பொருத்தம். அது இல்லன்னா வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும். பாக்க வேண்டியதெல்லாம் பாத்துட்டு நிதானமா பண்ணுவோம். எங்க போய்டப்போறான உம்மாப்பிள்ள. கிணத்து தண்ணீ தான. " என்றார் பாட்டி.
சிவ்ராமிற்கும் அது சரியென படத் தன் மாமியாரின் பேச்சை ஆமோதித்துப் பேச, தற்காலிகமாகத் தன்யா தேவ்வின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
" ஏய் கிழவி. வயசான காலத்துல வாய்க்குள்ள ரெண்டு வெத்தலைய போட்டோம்மா. பொளிச் பொளிச்ன்னு துப்புனோமான்னு இல்லாமா உனக்கு எதுக்கு இந்த ஜோசியக்காரெ வேல. " என்றாள் தன்யா, காட்டமாக. அனைவரும் சென்றபின்.
"இதென்னடி கூத்தா இருக்கு. கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணப் போறோம்னா இதெல்லாம் காலாகாலமாகப் பாக்குறது தான. இன்னைக்கி பாத்து நாளைக்கே வா கல்யாணம் பண்ணிப்பாங்க. எதோ உலகத்துல நடக்காத கதைய நா சொல்லிட்ட மாறி இந்தக் குதி குதிக்கிற. அம்புட்டு லவ்வோ அவெ மேல. "
"உனக்கு அது தேவயில்லாதது டி கிழவி. "
"தன்யா, மரியாதையா பேசு. அவங்க நம்ம பாட்டி. "
"எனக்குப் பாட்டியா இருந்தா இன்னேரம் எங்க சாந்தி முகூர்த்துக்குல நாள் பாத்துட்டு இருந்திருக்கணும். இது ஆட்டத்த கலச்சி விடப்பக்குது. இது உனக்கு மட்டும் தா பாட்டி. எனக்கு இல்ல. ச்ச…" என்ற படி அங்கிருந்து நடந்து செல்ல, நம் ராசாத்தியும் தாரிகாவும் குதுகலமாகச் சிரித்தனர்.
"சூப்பர் ப்ளான் பாட்டி. ஆனா அது டெப்ரவரி தான. நம்ம ஃபேமிலி ஜோசியர் கிட்ட அப்பா இப்பவே ஃபோன்ல ஜோசியம் பாக்க போயிருப்பாரே. என்ன பண்ண.? "
"நீ எதுவும் பண்ண வேண்ணாம் டீ. நானே எல்லாத்தையும் செஞ்சிட்டேன். இன்னேரம் அவெ ரெண்டு பேருக்கும் பொருத்தம் இல்லன்னு சொல்லிக் கல்யாணத்த கலச்சி விட்டுடுவான். " என்று சொல்லிச் சிரிக்க, தன்யா வந்து நின்றாள்.
'நீ இன்னும் போலயாம்மா. !!'
" திட்டம். ம்… தேவ் கூட நடக்கப் போற என்னோட கல்யாணத்த தடுக்க திட்டம் போடுறீங்க. ம்... பாக்குறேன். எப்படி நீங்க இந்தக் கல்யாணத்த நிப்பாட்டுறீங்கன்னு நானும் பாக்குறேன். "
"அட சும்மா இருடீ. எம்பேத்திக்கி யார கட்டி வைக்கணும்னு எனக்குத் தெரியாதா. அந்தத் தாடியும் மீசையும் இல்லாத சைனா பொம்ம மாறி இருக்குற வெளிநாட்டு விநோதத்தையா ஏ அழகு பேத்துக்கி கட்டி வப்பேன். உனக்கு நா நம்மூர் பையனா பாத்து வச்சிருக்கேன். வேண்டாம் இந்த வெள்ளக்காரனுங்க. " என்க.
"ஏய் கிழவி. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது வெள்ளக்காரெ கூடத் தா நடக்கும். இல்லாட்டி. ம்ச்… இல்லன்னாங்கிற பேச்சே இல்ல. இது என்னோட சபதம்.
எடுத்த சபதம் முடிப்பேன்..." எனப் பாடிய படியே சென்றாள் அவள்.
ஐய்யையோ குறிச்சி வைக்க மறந்துட்டேனே. இது எத்தனாவது சபதம்னு தெரியலயே. டெய்லி காலண்டர் பேப்பர்ல எழுதி வைக்கிற அளவுக்கு அதிமால்ல சபதம் எடுத்துக்கிறா. இது சரிப்பட்டு வராது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..