அத்தியாயம்: 20
எல்லா உதடுகளும்…
பேசும் சர்வதேஷ...
மொழி…
புன்னகை...
அனைவராலும் எளிதில் அந்த மொழியைக் கற்க முடியும். அந்த மொழி இனிமையானதா என்றால். அது இல்லை. அதன் தன்மை சூழ்நிலையையும் புன்னகைக்கும் மனிதர்களையும் பொருத்து மாறுபடும்.
இங்கு நாம் கேட்டுக் கொண்டிருப்பது ஒரு கேலிச் சிரிப்பு. சிரிப்பர்களுக்கு அது கேலியாக இருக்கலாம். ஆனா கேலிக்கி உள்ளாகுபவர்க்கு அப்படி இல்லை.
ஹா...ஹ்…ஹா...
"போதும் நிப்பாட்டுங்க. உங்க சிரிப்பு எனக்கு எரிச்சலா இருக்கு. " என்றாள் வாசு கோபமாக.
"ஓகே சில். சில். கோபப்படாத. " மெய்ஸி சொல்ல, விக்டரும் லிண்டாவும் அமைதியாகி விட்டனர். ஆனாலும் ரான் மட்டும் சிரிப்பை நிறுத்தவில்லை.
"ஹா.ஹ்.ஹா." என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் அவன். வாசு தன் கண்களால் அவனை எரிக்க முடியுமா என்ற பரிசோதனையில் இறங்கினாள்.
" ரான். போதும். சிரிப்ப கன்ட்ரோல் பண்ணு. " என்றாள் லிண்டா தாழ்ந்த குரலில். ம்ஹிம்… அவன் சிரிப்பை நிறுத்தவே இல்ல. அவனின் சிரிப்பைக்கண்டு இவர்களுக்கும் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். சிரிச்சா வாசு திட்டுவாளே!.
"ரான். இப்ப நீ ஸ்டாப் பண்ணப் போறியா! இல்லயா?. " வாசு.
" நாங்க ஏ ஸ்டாப் பண்ணணும்?. ம்??. இது ஏ வாய்!. நா அப்படி தா சிரிப்பேன். சத்தம் போட்டுச் சிரிப்பேன். உனக்குப் பிடிக்கலன்னு எந்திரிச்சி போக வேண்டியது தான. ஹாஹ்ஹா." ரான் தான் அந்தப் பயங்கர சிரிப்புக்குச் சொந்தக்காரன்.
" ரான், சும்மா இரேன். " மெய்ஸி.
"எப்படி சும்மா இருக்குறது?. ம்… நா இவாக்கிட்ட எவ்வளவோ கேட்டேன். ஒரு ஒன்டே மட்டும் வா. நாம ரெண்டு பேரும் ஒரு பார்லர்ல ஐஸ்கிரீம் சாப்டுட்டு நிறைய ஃபோட்டோ எடுத்துட்டு நாந்தா உன்னோட பாய் ஃப்ரெண்டுன்னு சொல்லிடுவோம்னு. கேட்டாளா!. கண்டிஷன் போட்டுப் பாய் ஃப்ரெண்டு பிடிக்கிறாளாம். ஹாஹ்ஹா. இந்தியாக்கு போகலன்னாலும் நீ ஒரு இன்டியன் கேர்ள்னு கரெக்டா நிறுபிச்சிட்ட. ஒன் பாய் ஃப்ரெண்ட். ஒன் கிஸ். ஒன் ஹக். ம்... இதுவரைக்கும் எதுவுமே கிடையாது. ஹாஹ்ஹா. ப்ளடி இன்டியன் கேர்ள்." என சொல்லிச் சிரித்தான் ரான்.
வாசுவின் பாய் ஃப்ரெண்டு பதவிக்காக அவன் அனுப்பிய அப்ளிகேஷனை வாசு ரிஜக்ட் செய்ததால் வந்து கடுப்பு. இப்போது சிரிப்பாக வெளி வருகிறது.
நால்வருக்கும் இன்றைய நாள் தான் நியூயார்க்கின் கடைசி நாள். இனி வேறிடம். வேறு வேலை. வேறு நட்புகள் என நால்வரும் பிரித்துச் செல்கின்றனர். வாசுவிற்கு நள்ளிரவில் ஃப்ளைட். அதற்கு முன் ஒரு ஃபேர்ல் பார்ட்டி கொண்டாட என ஒரு பாரில் அமர்ந்துள்ளனர்.
"ஒரு பாய் ஃப்ரெண்ட் வச்சிக்காததெல்லாம் குத்தமா!. உங்கள விட நான் எல்லாத்துலயும் பெஸ்ட். படிப்பு, ஸ்போர்ட்ஸ், ஜாப்ன்னு எல்லாத்துலயுமே நல்ல கிரேடு வாங்கி இருக்கேன். ஒரு பையன் கூட டேட்டிங் போகலாங்கிறதுக்காக எல்லாம் நீங்க என்ன இப்படி கேலி பண்றது ரொம்ப… ரொம்ப வியடா இருக்கு. ஹிம். " என்றாள் வாசு.
"எல்லாத்தையும் பெஸ்டா இருந்து என்ன பிரயோஜனம் கடைசில ஒரு பாய் பிரண்ட் கூட இல்லயே உனக்கு. " விக்டர் சிரிக்க,
" ஆனாலும் நீ ரொம்ப மோசம். உனக்காக ஒருத்தர் நட்புக் கரம் நீட்டி டேட்டிங் கூப்பிட்டா!. " லிண்டா.
"வர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாறிச் சொல்லிட்டு வந்திருக்க. " மெய்ஸி.
" என்ன இது வாசு.?" என்றனர் மூவரும்.
'என்ன!. தேவ் கூட வாசு அவுட்டிங் போகலயா?. என்னாச்சி?. எப்படி எப்ப நடந்தது இது?.'
" எனக்குப் பிடிக்கலயே. எனக்குப் பாய் ஃப்ரெண்ட்டா இருக்குறதுக்கான குவாலிஃபிகேஷன் அவன்ட்ட இல்லயே. அதா அப்படி சொன்னேன். " என்றாள் முகம் சுருங்க.
"நீ இன்னும் ஓல்டு ஃபேஷன்லயே இருக்க. மாடன் கேள்ர்லா நீ மாறப்போறதே இல்ல. அதா நாங்க உன்ன கேலி பண்றோம். " என முடிந்த அளவு அவளைக் கேலி செய்ய, ரான்னின் கையில் இருந்த க்ளாஸ்ஸைத் தன் வாயில் ஊற்றியவள், அவர்களை திட்டத் தொடங்கினாள். அவளின் பேச்சு திடீரெனக் குலறத் தொடங்கியது.
" ஹேய் அவா ஓட்காவ உள்ள இறக்கிட்டா!. " விக்டர்.
"அதுவும் ராவ்வா!. " மெய்ஸி
"வித் ஆவுட் மிக்ஸின்!." விக்டர்.
" இன்னும் ஒரு மணி நேரத்துல அவளுக்கு ஃப்ளைட் இருக்கே!. " லிண்டா.
" நாம அவள பத்திரமா கூட்டீட்டு போவோம். கம் வாசு. " என ரான் எழ,
" எனக்கு உங்க யாரோட உதவியும் தேவை இல்ல. I hate you all. நீங்க வந்து என்ன ஃப்ளைட் ஏத்தி விடுற அளவுக்கு நா ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல. " என்று சிறு போதையில் உலறியவள் தன் மொபைலில் டாக்ஸியை புக் செய்து விட்டு வெளியே வந்தாள்.
அவளை அவளின் நண்பர்களின் சிரிப்புச் சத்தம் பின் தொடர்வதை போல் ஒரு பிரமை ஏற்பட்டது. கோபமாக வெளியே வந்தவள் வந்து நின்ற காரில் ஏறி அமர.
" ஹேய்!. யாரு நீ?. " எனக் கேட்டது ஒரு ஆணின் குரல்.
"ப்ளீஸ் எனக்கு டயர்டா இருக்கு என்ன ஏர்போர்ட்ல இறக்கி விட்டுடுங்க. ப்ளீஸ். பின் நம்பர் ***. சரியா பத்து மணிக்கி ப்ளேட். லேட் பண்ணாம அரைமணி நேரத்துக்கு முன்னாடியே கூட்டீட்டு போன உங்களுக்கு நா டென் டாலர் அதிகமா மனி தருவேன்." என்றவள் பின் சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள். அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே காரை ஸ்டார் செய்தான் அந்த இளைஞன்.
" இது தா ஃபஸ்ட் டயமா நீ ஹாட் டிரிங்க் எடுத்துக்கிறது. " என்றான் அந்த டிரைவர். அவனுக்குப் பதில் சொல்லாது அமைதியாக இருக்க,
"தலை வலிக்கிதா?. மயக்கம் வர்ற மாறி இருக்கா?." என்க,
" அது எதுக்கு உங்களுக்கு. பேசாம உங்க வேலய மட்டும் பாருங்க. நா ஆஃப்ல புக் பண்ணும் போதே டிரைவர் எங்கிட்ட தேவையில்லாம பேசக்கூடாதுன்னு சொன்னேனே. சோ... ஷட் அப். இல்லன்னா கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன். " என்றவள் கரத்தில் தன் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். குழந்தைபோல்.
அவளின் மையிட்ட கண்களில் உருண்டோடிய கண்ணீர் மையை கலைத்து அவளின் கண்களைச் சுற்றி கருமையாக்கியது. அதைத் தான் அணிந்திருந்த சட்டையில் துடைத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் அழுதாள்.
" என்னாச்சி?. ஏ அழற?. " என்றான் சிறு புன்னகையுடன் அவன்.
"உங்க வேலைய பாருங்க ஸார். " என்றாள் வாசு ஆங்கிலத்தில்.
" ஏ எனக்கு மட்டும் இப்படி நடக்குது. ஏதோ பாக்கெட்டே இல்லாதவெங்கிட்ட போய்ப் பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஓடுன திருடன் மாறி என்ன பாத்து எல்லாரும் சிரிக்கிறாங்க.
அரையுங்குறையுமா டிரெஸ் போட்டுட்டு. ஒரு பையன டேட்டிங் அவுட்டிங்ன்னு கூட்டீட்டு போய்க் கிஸ் அடிச்சாத்தா மாடன் கேள்ர்லா. யாரு மாடன் பொண்ணுங்க இப்படி தா இருக்கணும்னு எழுதி வச்சானுங்களோ. ச்ச...
எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கல. அது எப்படி என்னோட தப்பாகும். அதுக்கு போய் எல்லாரும் சேந்து ஒரு வாரமா என்ன வச்சி ஓட்டீட்டு இருக்காங்க. இடியட்ஸ். இந்த இடியட்ஸ்காக நானும் அழறேன் பாரு. நானும் ஒரு இடியட் தா. ச்ச... " எனத் தமிழில் புலம்பியவள் தன் கை பையிலிருந்து டிஸ்யூ பேப்பரால் கருப்பாகிப்போன தன் இமைகளைச் சுத்தம் செய்ய, அதை அந்தக் காரை ஓட்டும் இளைஞன் சுவாரசியமாகப் பாத்துக் கொண்டு இருந்தான்.
" ஏ உனக்கு ஸ்கூல் டேஸ்ல ஒரு பையங்கூடவா கிடைக்கல. "
"ஃப்ரெண்டு வேற பாய் ஃப்ரெண்ட் வேறயாம். ஜஸ்ட் லைக் தட் ன்னு பழகுறவே ஃப்ரெண்டு. எப்ப வேணும்னாலும் உனக்கு நா லவ்வரா மாறலாம்னு பழகுறவே பாய் ஃப்ரெண்ட்டாம். எனக்கு யாரையும் அப்படி பாக்க தோனலயே. நா என்ன பண்ணுவேன். பாய் ஃப்ரெண்ட் இல்லன்னா என்னோட அமெரிக்கன் சிட்டிசன் ஷிப்ப கேன்சல் பண்ணிவானுங்களா என்ன?.
ஒரு நிமிசம். இப்ப நீ தமிழ்லையா பேசுனா!. " எனக் கேட்க.
"ஆமா. தமிழ்ல தா பேசுனேன். இப்பையும் தமிழ்ல தா பேசுறேன். ஓவ்... ஓவ்... என்ன பண்ற. நா டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். உனக்கு அது தெரியலயா?. " என்றவன் காரை ஓரமாக நிறுத்தினான். ஏனெனில் வாசு அந்த இளைஞனின் முகம் பார்க்க என குரங்குபோல் முன் சீட்டிற்கு தாவி வந்து அவனின் முகத்திற்கு அருகில் வந்து பார்த்தாள்.
" என்ன பண்ற?. "
"இல்ல எந்த ஆங்கில்ல இருந்து பாத்தாலும் வெள்ளக்காரெ மாறித் தான தெரியுற. ஒரு வேள யாரோ ரெக்கார்டர் பண்ணிக்குடுத்தத ப்ளே பண்றியோன்னு பாத்தேன். இல்ல சின்ன சின்ன வார்த்த பேச டிரைனிங் எடுத்துக்கிட்டியா." என்க.
" நாந்தா பேசுனேன். இப்ப என்ன அதுக்கு?. எதாவது திருக்குறள் சொல்லிக் காட்டவா!. எனக்குக் கொஞ்ச குறள் தா தெரியும். தப்பா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க. " என்றவன் திருக்குறள் சொல்ல. அவனின் உதடுகள் அசைவை வைத்து அவன் தான் பேசினான் என்பதை உறுதி செய்தவள்,
" வாவ்! தமிழ் பேசும் வெள்ளைக்கார காளை. சூப்பர். உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்?. யாரு கத்துக்குடுத்தா?. எழுதத் தெரியுமா?. தமிழ் பாட்டு கேட்டிருக்கீங்களா.? தமிழ்நாட்டுக்கு போயிருக்கிங்களா?." என சரமாரியாகக் கேள்வி கேட்க,
" வெய்ட் வெய்ட். ஒன்னென்னா கேளு. என்னோட எக்ஸ் கேள்ர் ஃப்ரெண்டு தா எனக்குத் தமிழ் எழுதப் படிக்க சொல்லிக் குடுத்தா. அதுவரைக்கும் கொஞ்ச கொஞ்சம் பேசுவேன். ஏன்னா எங்க பக்கத்து வீட்டுல ஒரு தமிழ் ஃபேமிலி இருந்தது. சின்ன வயசுல பசங்க கூட விளையாடும்போது கத்துக்கிட்டது. இதுவரைக்கும் நா தமிழ் நாட்ட வெல்டு மேப்ல பாத்தோட இல்லாம போய்ச் சுத்தியும் பாத்திருக்கேன். போதுமா. வேற. "
"வேற... வேற..." என யோசிக்க,
"ஆமா உம் பேரென்ன?. எங்க இருக்க?. இப்ப எங்க போகப்போற?. " என அவனும் கேள்வி கேட்க.
" என்னோட பேரு ஊரு தெரிஞ்சிட்டு நீங்க என்ன பண்ண போறிங்க. எம்பேர்ல நியூயார்க் சிட்டிய எழுதி வைக்கப் போறிங்களா?. " எனக் கேட்க, அந்த இளைஞன் புன்னகைத்தான்.
"ஏ எல்லா பாய்ஸ்ஸுமே இப்படி இருக்கிங்க. பேரு என்ன.. ஊரு என்ன… ஃபோன் நம்பர்… ப்ளாப் ப்ளாப்… ப்ளாப். ஊரு பேரு தெரியலன்னா பேச மாட்டிங்களோ. இல்ல ஊரு பேரத்தவிர பேச எதுவுமே இல்லயா. "
"அப்படில்லாம் இல்ல. இது கேஸ்வலா கேக்குறது தான. அதா இட் ஓகே விட்டுடு. உன்னோட பிரச்சினைக்கு வருவோம். " என்றபடி காரை ஸ்டார்ட் செய்து பேசிக்கொண்டே ஓட்டினான்.
"எனக்கு இருக்குறது பிரச்சனையே கிடையாதே. "
"அப்றம் ஏ அழுத. "
"கிண்டல் பண்ணானுங்க அதா. மத்தபடி ஒன்னுமில்ல. ஒரு பையனோட ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்கலன்னு அழுகுற டயிப் நா கிடையாதுப்பா. " என வீராப்பாய் சொன்னாள் வாசு.
" சொல்லப் போனா எனக்கு ஒருத்தெ சிக்குனான். நாந்தா அவெங்கூட அவுட்டிங் வரலன்னு சொன்னேன். அப்றம் எதுக்கு நா ஃபீல் பண்ணணும். ரிஜக்ட் ஆன அவெந்தா ஃபீல் பண்ணணும். அவன சுத்தி உக்காந்து தா கேலி பண்ணி கை தட்டி சிரிக்கணும். உன்ன ஒரு பொண்ணு ரிஜக்ட் பண்ணிட்டான்னு சொல்லி. "
"ஓ… நீ ரிஜக்ட் பண்ணியா. ஏ.?"
" ஏன்னா!! " என அடுத்து பேசுவதற்குள் அவளின் செல்ஃபோன் இசைந்தது.
"ஜஸ்ட்ட மினிட். ஹலோ. " என்றவள் ஃபோனில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
"ஸ்டாப். "
"என்னாச்சி?. "
"ஸ்டாப். ஸ்டாப் தா கார். " எனக் கத்த. கார் ஓரமாக மீண்டும் நிறுத்தப்பட்டது. முழுதாக அதன் சக்கரங்கள் சுழன்று நிற்கும் முன்னரே. கதவைத் திறக்க முயல. அது திறக்க வில்லை.
"ஓ… நோ... காட்… யாரு நீ?. என்ன கடத்தீட்டு போறியா!. நா உங்காருல ஏறுனதுமே நீ டாக்ஸி டிரைவர் இல்லன்னு சொல்லிருக்கலாம். எப்படி சொல்லுவ!. நீ தா ப்ராடாச்சே. ஓப்பென் தா டேர்!. ஓப்பன் பண்ணு மேன். " எனக் கத்தினாள் வாசு.
ஏனெனில் அவள் புக் செய்ய டாக்ஸி இப்பொழுது தான் அந்தப் பாரின் வாசலை அடைந்ததாக ஓட்டுநர் கால் செய்தார்.
‘அது தா நாம புக் பண்ண டாக்ஸின்னா.. இது... இவ்ளோ நேரம் தமிழ் பேசிட்டு வந்தானே. அந்த வெள்ளைக்கான மைதா மாவு. யாரு அது?…’
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..