அத்தியாயம்: 21
"ஏய்... யாரு நீ.? என்ன கடத்திட்டு போறியா!. கொல பண்ணப் பாக்குறியா?. நா கராத்தே ப்ளாக் பெல்ட். எங்கிட்ட வந்தேன்னா வெள்ள குதிர மாறி இருக்குற உன்ன வரிக்குதிர மாறி மாத்திடுவேன். கடவுளே.! யாரு என்னனே தெரியாத ஒரு பையன் என்ன கார்ல கடத்திட்டு போறான். காப்பாத்துங்க. காப்பாத்துங்க. ஏய் கார் நிப்பாட்டு. நிப்பாட்டு. I say Stop the car. " எனத் தன் பையால் அவன் தலையில் நாலு போடு போட்டாள் வாசு.
அவளைப் பிக்கப் செய்ய வேண்டிய டிரைவர் அவளுக்கு ஃபோன் செய்து, 'எப்பம்மா வர்ற. நா ரொம்ப நேரமா உனக்காகக் காத்திட்டு இருக்கேன்னு. சீக்கிரம் வா இல்ல கேன்சல் பண்ணு.' என்று கத்திய பின் தான் தெரிந்தது அவள் ஏறி அமர்ந்திருப்பது டாக்ஸி அல்ல, முன்னால் இருக்கும் வெள்ள மைதா மாவுடைய சொந்த கார் என்று.
ஃபோன்ல கத்திக் கொண்டிருந்த அந்த டாக்ஸி டிரைவரிடம் கேன்சல் செய்வதாகச் சொல்லியவள், காரை ஓட்டிச் செல்பவனிடம் கத்திக் கொண்டு இருக்கிறாள்.
அவளுக்கு, தான் டிரைவர் அல்ல என்று தெரிந்ததை அறிந்த அவன் குறுஞ்சிரிப்புடன் ஓரமா நிறுத்தப்பட்டிருந்த காரை மீண்டும் ஓட்டத் தொடங்கினான். அவளின் புலம்பல் மிரட்டல் அடிகள் என எதையும் பொருட்படுத்தாது கார் வீதியில் சென்று கொண்டே இருந்தது.
" துப்பாக்கி வச்சிருக்கியா!. இந்தக் கயிறு எதுக்கு என்னோட கழுத்துல மாட்டித் தொங்க விடவா?. ஓ நோ! தெரியாம உங்க கார்ல ஏறுன எனக்குத் தண்டன தரக் கொல பண்ண போற. சரியா! சைக்கோ கில்லரா நீ?. போலிஸ்… போலிஸ்... ஹேய்! இந்தாளு என்ன கடத்திட்டு போறான். காப்பாத்துங்க. " எனக் கத்திக் கொண்டே ஜன்னலைத் தட்டிக் கொண்டு வர,
"கொஞ்சம் அமைதியா இரு. எனக்கு நீ கோவாப்ரேட் பண்ணா எல்லாமே ஈசியா முடிஞ்சிடும். "
"எது! கோ...வாப்ரேட் பண்ணனுமா!!. வாட்?. நீ ரேப்பிஸ்ட்டா!. தெரியாம வந்து மட்டிக்கிட்டேனே. இரு நா இப்பவே 911 க்கா கால் பண்றேன். " எனத் தன் மொபைலை எடுக்க,
கார் நிறுத்தப்பட்டு அவளின் ஃபோன் பறிக்கப்பட்டது.
"ஹேய்! அது என்னோட ஃபோன். நா இப்பவே கார்த்திப்பாக்கு கால் பண்ணணும். குடு... குடு... " என்க,
"கார்த்திப்பா யாரு?. உன்னோட முன்னாள் பாய் ஃப்ரெண்ட்டா!. அவெங்கூட தா சண்ட போட்டுட்டு வந்தியா?. "
"ஷட் அப். முட்டாள் மாறிப் பேசாத. ஃபோன வேண்முன்னா கூட நீயே வச்சிக்க. முதல்ல எனக்குக் கதவ திறந்து விடு. சொல்றேன்ல. " எனக் கத்தியபடி கதவில் கை வைக்க, அமைதியாகி விட்டாள் வாசு. ஏனெனில் கார் நின்ற இடம் ஏர்போர்ட். சரியாக அரைமணி நேரத்திற்கும் முன்னதாகவே கொண்டு வந்து சேர்த்துள்ளான்.
"யாரா நீ!. முன்ன பின்னத் தெரியாத ஒரு பொண்ணுக்காக உன்னோட வேல வெட்டியல்லாம் விட்டுட்டு காசு போட்டு, பெட்ரோலாம் போட்டு என்ன ஏர்போர்ட்ல கொண்டு வந்து விட்டிருக்க." என ஆச்சர்யமாகக் கேட்க,
"இது உன்னோட ஃபோன். இது பேக். சொன்ன நேரத்துல கொண்டு வந்து விட்டா டென் டாலர்ஸ் அதிகமா தர்றேன்னு சொன்ன. " எனப் புன்னகையுடன் அவளின் உடமைகளை தர,
"தேங்க் யூ. " என்றவள் கதவைத் திறக்க முயல, அது அப்போதும் திறக்க வில்லை.
"வெய்ட். நா டோர் லாக் பண்ணிருக்கேன். இப்ப ஓப்பன் பண்ணு. " என்றதும் கதவு திறந்தது. வேகவேகமாக இறங்கியவள். பணத்தை நீட்டிவிட்டு ஓடிச் சென்றாள்.
"மீதி... காசு…. வேணாம் போல. " என்றவனுக்கு வாசுவின் முகமும் செயலும் புன்னகையை தந்தது. ரூபாய் தாளை வருடியபடி அமர்ந்திருந்தவனின் முன் வாசு வந்து நின்றாள்.
எதற்கு?.
அவன் அமர்ந்திருந்த காரின் முன் பக்க ஜன்னல் கண்ணாடியைத் தட்ட, அவன் அதை கீழே இறக்கி என்ன என்பது போல் பருவங்களை வளைத்தான்.
" உம்பேர் என்ன?. என்ன வேல பாக்குற?. "
" ஏ எல்லா கேர்ள்ஸ்ஸும் இப்படி நா இருப்பிங்களா.! ஒரு உதவி பண்ணா உடனே கண்டத கற்பன பண்ணிட்டு பேர கேட்டுப் பேசி பழகுறது. ம்... " என அவளின் பிட்டை அவளுக்கே போட,
" தேவையில்ல. எனக்கு உன்னோட பேர் தேவையில்லை. ம்… உனக்கு நேரம் இருக்குன்னா எங்கூட உள்ள வந்து நா ஃப்ளைட் ஏற்ற வரக் கூட இருக்க முடியுமா? " எனக் கேட்க,
"தனியா இருக்க பயமா.?"
"இல்ல அப்படில்லாம் இல்ல. இன்னும் டயம் இருக்கு ஃப்ளைட் வர. சோ, அதுவர பேச்சி துணைக்கி. "
"இந்தச் சைக்கோ மேல உனக்கு எப்படி நம்பிக்க வந்துச்சி? "
"நம்பிக்கல்லாம் இல்ல. இங்க சுத்தி ஆளுங்க இருக்காங்க. அத்தோட நா கராத்தே ப்ளாக் பெல்ட். கூடவே இங்க பாரு, அது என்ன பாதுகாக்கும். ரொம்ப பேசினா. கழுத்துல கோடு போட்டு விட்டுடுவேன். " எனக் கசாப்பு கடையில் இருப்பது போல் ஒரு பட்டையான கத்தியைக் காட்ட, அவன் புன்னகையுடன் காரை விட்டு இறங்கி வந்தான்.
இருவரும் உள்ளே சென்றனர். தான் ஏற வேண்டிய விமானம் வரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள் வாசு. கூடவே அந்த இளைஞனும் வந்தான்.
"எனக்கு ஹாட் சாக்லேட். உனக்கு?. " என வாசு புருவம் உயர்த்திக் கேட்க,
"ப்ளாக் டீ. "
இரு கைகளிலும் பானத்தை வாங்கிக் கொண்டு வந்தவள் அங்கிருந்த சேரில் அருகருகே அமர்ந்து பருகத் தொடங்கினர். அந்த இளைஞனும் வாசுவின் செயல்களைக் கண்டு ரசித்த படியே அமர்ந்திருந்தான்.
"சொல்லு உன்னோட பாய் ஃப்ரெண்ட்டு கூட எதுக்காக அவுட்டிங் போகால.? அவனோட ப்ரபோஷல ஏ ரிஜக்ட் பண்ண?. "
"ம்... ம்.. " என்றவள் சாக்லேட்டை ஒரே மூச்சாய் குடித்து முடித்து, "அதெப்படி நா அதைப்பத்தி தா பேசப் போறேன்னு கரெக்டா சொல்ற. "
" நம்ம கான்வர்சேஷன் அதோட தா முடிஞ்சது. சோ, விட்ட இடத்துல இருந்து ஸ்டாட் பண்ணலாம். சொல்லு ஏ அவன ப்ரேக்கப் பண்ண.?"
"ஹல்லோ! நா அவனுக்கு ஃப்ரெண்டோ கேர்ள் ஃப்ரெண்டோ கிடையாது. ரெண்டு பேருக்குள்ள எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் இல்ல. அப்பறம் எப்படி ப்ரேக்கப் பண்ணுவேன். " என்க, அவன் சிரித்தான்.
"ஓகே பைன். எப்படியும் அவனோட பேர சொல்ல மாட்ட, எங்க எப்படி பாத்தன்னு சொல்லாமா?. " எனக் கேட்க, அவள் நடந்த அனைத்தையும் கூறினாள். முதல் முதலில் பார்த்து முதல், ஒரு வாரத்திற்கு முன் இருவரும் ஒன்றாக வெளியே செல்லத் திட்டமிட்டது வரை கூறியவளிடம்,
"இதுல அவனோட ப்ரபோஷல ஏத்துக்கிறதுல உனக்கு என்ன பயம்னு தா எனக்குப் புரியவில்ல. "
" அவனோட குடும்ப தொழிலே ஒட்டுல உல வைக்கிறது. அதாவது அடுத்தவங்கள்ட்ட இருந்து அடிச்சி பிடுங்குறது. அப்படி இருக்கும்போது எப்படி நா அவெங்கூட பழகுவேன். சொல்லு. ஒரு வேள எங்கழுத்துல கத்திய வச்சி என்னோட கார்த்திப்பாட்ட டீல் பேசுனா!. ஐய்யோ.! என்னோட கார்த்திப்பா ரொம்ப பாவம்.
எனக்காக என்னனாலும் செய்வாருங்கிறதுக்காக யாராது வேணும்னே தண்டவாளத்துல தலைய வப்பாங்களா.! சொல்லு?. அவெ கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்கிட்டா அது தா நடக்கும். என்ன அவெ மிஸ்யூஸ் பண்ணாலும் பண்ணுவான். " என்றவள் கண்களுக்கு ருத்ரா அவளைப் பணயமாக வைத்து அவர்களின் ஹோட்டலை எழுதி வாங்குவது போல் காட்சிகள் விரிந்தன.
அந்த ஹோட்டல் வெறும் சுவர் அல்லவே. பதினைந்து ஆண்டுகால உழைப்பு. கார்த்திக், ஜோஹிதாவின் ரத்தம். அது தான் கார்த்திக்கிற்கு தனி அடையாளத்தை உண்டாக்கி தந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கார்த்திக் அதிகம் இருப்பது அந்தச் சமயற்கூடத்தில் தான்.
ஆறு மாத குழந்தையாக அமெரிக்காவிற்கு வந்த போது நாடு மாறியதே தவிர, வயிறு என்ற ஒன்று மாறவே இல்லை. பசி…
பச்சிளங்குழந்தையான வாசுவையும் சுமந்து கொண்டு தான் அந்தச் சூட்டில் வேலை செய்வான் கார்த்திக். அவன் சமையல் வேலை செய்யும் அதே விடுதியில் தான் ஜோஹிதா தன் படிப்பால் ஊழியம் தேடிக் கொண்டாள்.
வாசு இருவரின் பொறுப்பில் மாறி மாறி இருப்பாள். நம்மூரில் தூக்கு வேலைக்கி செல்லும் பெண்கள் மார்பின் குறுக்கே தூளி அமைத்துத் தன் குழந்தைகளைத் தூக்கிச் செல்வது போல், இங்குக் கார்த்திக் தூக்கி சுமந்தான் வாசுவை. அவளுக்குத் தான் ஜோஹிதாவை விடக் கார்த்திக் தானே எல்லாம். அவனும் மகளை மனைவியிடம் கொடுத்ததே இல்லை என்று சொல்லலாம். அவனின் மனநிம்மதி வாசு தான். வேக வேகமாகச் செல்லும் தன் வாழ்க்கை பயணத்தின் சிறிய நிறுத்தம் வாசவி.
அத்தனை வியர்வையும் சிந்தி உருவாக்கிய அந்த ஹோட்டலை, தாரை வார்க்க வாசுவிற்கு விருப்பம் இல்ல. அதனால் தான் ருத்ராவை அவாய்ட் செய்கிறாள்..
இப்பொழுது ஏன் இதைப் பேர் அறியாத இவனிடம் செல்கின்றாள். அவளுக்குத் தான் கார்த்திக் இருக்கிறானே. அவனிடம் தானே இதை எல்லாம் சொல்லி, அவன் கருத்தைக் கேட்பாள். இப்போதும் இவனிடம் ஏன் என்ற கேள்வி எழலாம்.
கார்த்திக்கிடம் தான் முதலில் கூறினாள். அதற்கு அவன். " வாசும்மா. நீ ஓவரா இமாஜின் பண்றன்னு தோணுது. உனக்குப் பிடிச்சிருந்தா நீ அவெங்கூட பழகிப் பாக்கலாம். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. பழகிப் பாத்தாத்தா அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு தெரியும். எதையும் விசாரிக்காம முடிவு பண்ண கூடாதும்மா. " என்று விட்டான். கூடவே,
"இனி ருத்ராவ பத்தி பேசுறதா இருந்தா, எங்கிட்ட பேசாத. ஏன்னா ஒரே நேரத்துல என்னால மல்டி டாஸ்க்லாம் பண்ண முடியாது. உனக்கு ஃப்ரெண்டாவும், ஒரு பொம்பளப்பிள்ளையோட அப்பாவாவும் என்னால இருக்க முடியல. அதுனால நீ ருத்ராவ பத்தி உன்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசுறது தா நல்லது. அவங்க உனக்கு நல்ல நல்ல ஐடியால்லாம் தருவாங்க. சரியா. " என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சென்றான்.
" என்னோட பொண்ணு மேல எனக்கு நம்பிக்க இருக்கு. நா தலை குனிஞ்சி நிக்கிற மாறியான எந்த ஒரு செயலையும் நீ செய்ய மாட்டன்னு எனக்குத் தெரியும். " என்று நம்பிக்கை என்னும் கயிற்றால் மகளைக் கட்டியும் வைத்தான்.
ஏனெனில் வாசுவிற்கு வந்த அந்தப் பயம் அவனுக்குமே உண்டு. வாசுவுடன் அவன் பழக நினைக்கக் காரணம் அதுவாக இருக்குமோ, என்று யோசிக்காத நாளே இல்லை. இத்தன ஆண்டுகள் தலை தூக்காமல் இருந்தவன் ஆறு மாதங்களாகத் தன்னை சுற்றி வருவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை அவனுக்கு எப்போதுமே உண்டு.
அதை வாசுவிடம் சொல்லி அவளைப் பயமுறுத்த அவன் தயாராக இல்லை. இது அவளின் இளமை காலம். வானில் சிறகின்றி பறக்கவும், கற்பனை உலகில் மிதக்கவும் ஏற்றக் காலம் அது. அதை அனுபவிக்கட்டுமே. ஏன் தன் கஷ்டங்களையும், சந்தேகங்களையும் சொல்லி அவளை வாட்டுவானேன் என்று விட்டு விட்டான்.
"உங்க அப்பா சொன்னது சரி தானே. அவங்க ஃபேரன்ஸ். எல்லா சைடுல இருந்தும் யோசிக்கணும். பட் எனக்கு இந்த மாறி ஒரு சூழ்நில வந்தா, நா யாரையும் கேர் பண்ணிக்க மாட்டேன். எனக்கு எது பெஸ்ட்டுன்னு படுதோ அத செஞ்சிட்டு போய்க்கிட்டே இருப்பேன். உன்ன மாறிச் சில இன்டியன் கேர்ள்ஸ் தா. பெத்தவங்க வளத்தவங்கன்னு பாசம் காட்டுறேங்கிற பேர்ல பயங்கரமா எதையாது செய்வீங்க. " என்றவனை முறைத்தாள் வாசு.
"நீ தனியாத்தான இருக்க. உன்னோட ஃபேரன்ஸ்ஸ விட்டு எப்பருந்து தனியா வாழ்ற?. " எனக் கேட்டாள் வாசு.
ஏனெனில் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் குழந்தைகளை தங்களின் கைக்குள்ளேயே வைத்திருக்கும் பழக்கம் கிடையாது. பள்ளி முடிக்கும் முன்னரே வீட்டைத் துறந்து வெளியேறி விடுகின்றனர். நம் நாட்டில் போல் கடைசி வரை, நீ எனக்கு மகன் தான், மகள் தான் எனத் தோளில் சுமந்து கொள்வதில்லை. அதே போல் பெற்றவரின் கடைசி காலத்தில் உடன் இருந்து சேவை செய்யும் பழக்கமும் இல்லை.
" எனக்கு இப்ப முப்பது வயசாகுது. என்னோட வாழ்நாள்ல முக்கால்வாசி நாள் நா அவங்க தயவு இல்லாமத்தா இருந்திருக்கேன். என்ன கேட்டா நீ அவங்க கிட்ட போய் நா பழகலாமா வேண்டாமான்னு கேட்டதே தப்புன்னு சொல்லுவேன். எதுக்கு அவங்ககிட்டல்லாம் பர்மிஷன் கேக்குறேன்னு ஒரு செண்டிமெண்ட் ஸீன உண்டாக்கணும்.
நீ நல்லா வளந்த பொண்ணு. இன்டிபெண்ட்டான நீ உன்னோட முடிவ நீ தா எடுக்கணும். " என்க வாசுவின் முகம் சிந்தையில் இருப்பதாக காட்டியது.
"என்ன முடிவு பண்ணிருக்க.?" எனக் கேட்டான் சில நிமிடங்களுக்குப் பிறகு.
"பழகிப் பாக்கலாம்ணு."
"ஓகே அப்ப அவெங்கிட்ட உன்னோட லவ்வ மறக்காம சொல்லிடு. "
"லவ்வா. " என விழி விரிய கேட்டாள். வாசு.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..