அத்தியாயம்: 22
"லவ்வெல்லாம் இல்ல. சும்மா க்ரெஸ் தா. பாக்க அழகான பையன். பழகவும் ஏத்த ஆளு. அதனால… " என்றவளின் பேச்சை நிறுத்தியது எதிரில் இருந்தவனின் குறுஞ்சிரிப்பு.
"ஒத்துக்கிறேன். க்ரெஸ் கிடையாது தா. அதே நேரம் லவ்வும் கிடையாது."
"லவ் இல்லன்னா நீ இவ்ளோ தூரம் அவனுக்கு இம்பாட்டெண்ட் குடுக்க வேண்டிய அவசியம் என்ன.? " என்க, அவளின் முகத்தில் சிறு நாணம் வந்தது.
"அது… அது…. " என்றவள் முகம் மூடிச் சிரிக்க தொடங்கினாள்.
ஆம். காதல் தான். அவனுடன் பேசிப் பழகிய முதல் சில நாட்கள் எதுவும் தெரியவில்லை வாசுவிற்கு. அவனைக் கவர எனச் சினிமா பாடல் வரிகளைக் கவிதைகளாக எழுதி அனுப்பும் போதும் தெரியவில்லை. அவன்மீது ஈர்ப்பு என்ற எண்ணத்தைத் தவிர கற்பனைகளில் காதல் படிக்கவில்லை. அவன் தன்னை பார்த்தும் பாராதது போல் எழுந்து சென்ற போதும் கோபம் தான் வந்ததே தவிர அவன்மீது கொண்ட ஈர்ப்பு குறையவே இல்லை.
அவள் பள்ளியின் இறுதி வருடங்களின் அவளின் முகநூல் பக்கங்களில் சில ஆண்கள் அனுப்பிய குறுந்தகவல்களை படித்தவளுக்கு ருத்ராவின் மீது காதல் வந்தது. ‘ஸ்மைலி’ ‘எமோஜி’க்களை அனுப்பியதுமே இதயத்தைப் பறக்க விட்டு அவர்கள் அனுப்பும் அநாகரிக உரையாடல்கள் புரிய வைத்தது, ருத்ரா அவளை எப்படி கையாண்டுள்ளான் என்று. பலர் அந்தப் புத்தகத்தில் ஏற்பட்ட நட்பால் இழந்தவற்றை கேட்கையில் ருத்ரா ‘தி க்ரேட்’ தான் என்றெண்ணினாள் வாசு.
அது அவளின் மனதில் ருத்ராவிற்கான நன்மதிப்பை தந்தது. அவனின் சமூக வலைதளங்களில் நட்புக் கரம் நீட்டிய போதும் அவனிடமிருந்து அநாகரிகமாக எந்தக் குறுஞ்செய்தியும் வந்ததில்லை.
அவனின் புகைப்படங்களைப் பார்த்து பார்த்து அவனுடன் தினமும் உரையாடுவாள் பெண்.
அதுவரை நிழல் படங்களில் மூலம் வளர்ந்து வந்த இன கவர்ச்சி அவனைச் சில நாட்களுக்கு முன் பார்த்த உடனேயே அவளின் மனதில் காதலாக உருமாறி இருந்தது.
கண்களில் சிரிப்புடன் ‘ஹாய் ஸ்வீட்டி.’ என்ற அவனின் குரல், அவளுள் ஆழமாகப் பதிந்திருந்தது. நிழல் படங்களில் பார்த்து ரசித்த உருவம் தன்முன் நிஜமாய் வந்து நின்றது ருத்ரதேவ்வாக.
அவனின் தோளைத் தொட்டு கதை பேசும் அவனின் அடர்ந்த கருஞ்சிகை. அவளை பார்க்கும்போது வில் என வளையும் அவனின் உதடுகள். இன்னும் நிறைய உள்ளது. அவளைக் கவர்ந்து காதல் செய்ய வைத்தது.
ஆனால் காதல் செய்யக் கூடாது என்று பிடிவாதமாகத் தன் மனதிற்கு கடிவாளம் கட்டி இழுத்து வைத்திருக்கிறாள். காரணம் அவளே சொல்லிவிட்டாள்.
"ஓகே!. ஒரு மொக்க காரணத்துக்காக நீ அவெ உனக்கு நீட்டுன நட்பு கரத்த வெட்டி விட்டுட்ட. சரியா. "
"இல்ல... மொக்க காரணத்துக்காகலாம் இல்ல. எனக்கு பாய் ஃப்ரெண்ட்டா ஆகணும்னா அதுக்கு சில கண்டிஷன் இருக்கு. அதுல ஒன்னு அவெங்கிட்ட இல்ல. அதுவும் முக்கியமானது அது தா."
"என்ன அது?. "
" நா கேட்டது அமெரிக்கன் தமிழ் காமினேஷன். பட் அவெ வெறும் அமெரிக்கன் மட்டும் தா. "
"புரியலயே."
"ம்ச்... அவனுக்குத் தமிழ் பேச மட்டும் தா தெரியுமாம். எழுத, படிக்க ஏ! தமிழ் மூவீஸ் பாத்தது கூட இல்லையாம். வடிவேலுன்னா யாருன்னு கேக்குறேன். தி கிரேட் லெஜன்ட் காமெடியன் வடிவேலுவ தெரியலன்னா அவென்லாம் எப்படி தா மனுஷனா இருக்க முடியும். வேற்றுகிரக ஜீவராசி. ச்ச… அதா அவனோட நட்பு கரத்த கருணையே காட்டாம கட் பண்ணி விட்டுட்டுடேன். " எனப் பலவாறு ருத்ராவை திட்டியவள், அவளின் எதிரில் இருந்தவனை பார்த்து.
"ஆமா உனக்கு வைகை புயல் வடிவேல்னா யாருன்னு தெரியுமா?. " என அவள் கேட்ட தோரணையே மிரட்டுவது போல் இருக்க,
"ம்… நல்லாவே தெரியும். தி... க்ரேட்… லெஜன்ட். தெரியும் ப்பா. " என வேகவேகமாகத் தலை அசைத்தான்.
"நிஜமாவா!. அப்ப அவரு நடிச்ச படம் பேரு எதாவது சொல்லு பாப்போம். எதாவது பேர் தெரியாத படத்துல வந்த காமெடி ஸீனா இருந்தா கூட ஓகே தா. " என இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்க,
" நிறையவே தெரியும். ஸீன்... ம். ஹாங்... காண்ட்ராக்ட் நேசமணியா ஒரு வீட்டுக்கு வெள்ளையடிக்கப் போவாறே அது. ம்... அப்றம் கட்டதொற கைப்புள்ள காமினேஷன். ராஜாவா ஒரு படத்துல கூட நடிச்சி கம்மி மீச வச்சிருப்பாறே. அது எல்லாம் நல்லா இருக்கும். என்னோட எக்ஸ் கூட நா மூவியா பாத்தப்ப செம்மையா என்ஜாய் பண்ணோம். " என உல்லாசமாகச் சொன்னவனை உற்று நோக்க,
"படத்த தான் பாத்து என்ஜாய் பண்ணேன். மத்தபடி எதுவும் இல்ல. " என்றவன் குரலே சொல்லியது, படத்தை மட்டும் தான் பார்த்தானா இல்லை ‘கார்னர் சீட்’டில அமர்ந்து கசமுசா செய்தானா என்று.
" பார்த்தாலே தெரியுது. நீ என்ஜாய் பண்ணது. " என முகம் திருப்பிக் கொண்டாள்.
" ஓகே அவனுக்குத் தா பாவம் தமிழ் தெரியல. நீயே அவனுக்குச் சொல்லிக் குடுத்தா சூப்பரா இருக்கும்ல. என்ன சொல்ற இதுக்கு. "
"நோ.! நா என்ன தமிழம்மாவா. வணக்கம் வந்தனம் போட்டு அஆஇஈ சொல்லிக் குடுக்க. "
"சரி, அவனுக்குத் தெரியாதுங்கிறத எப்படி கண்டு பிடிச்ச.? ஏன்னா உங்க கார்வர்ஷேசன். அதாவது நீங்க மெஸ்ஏஜ்ல பேசிக்கும்போது தமிழ்ல தா பேசுனதா சொன்ன. அப்றம் எப்படி தெரிஞ்சது?. " என்றான் குறுநகையுடன். அந்த நகை,
'நல்ல வேள என்னோட கேர்ள் ஃப்ரண்ட் இந்த மாறி எந்த ரூலும் போடலப்பா. தப்பிச்சேன். ' என்பது போல் இருந்தது.
'ஆனாலும் நீ அவள கலட்டி விட்டுட்டியேப்பா. '
ஒரு வாரத்திற்கு முன்.
ஃபுட் பால் கிரவுண்ட்.
" விக்டர்... இந்தப் பக்கம்... இங்க." எனக் கத்தினாள் வாசு. விக்டரும் அவளுக்குப் பந்தை பாஸ் செய்ய, வாசு உடலை வளைத்து ஓங்கி பந்தை உதைக்க, அது இலக்காக வைத்திருந்த வலைக்குள் சரியாக விழுந்தது. ஒரு புள்ளி கிடைத்த சந்தோஷத்தில் மைதானத்தை, இரு கைகளையும் நீட்டி, கத்திக் கொண்டே வளம் வந்தனர் வாசுவும் அவளின் அணியினரும்.
அது பெட் மேச். அங்கிருக்கும் ஏரியா பசங்களும் பெண்ணுங்களும் சேர்ந்து தான் விளையாடுவர். பல டீம்கள் உள்ளது. இன்றைய விளையாட்டில் வாசுவின் அணி வெற்றி பெற்றது.
‘இந்த வாசு கார்த்திக் கொடுக்குற சப்போட்டுல கொஞ்சம் அதிகமாகவே ஆடுவா. நம்ம ஜோஹிதா எத்தன கத்துனாலும் காதுல வாங்கிக்க மாட்டா. பொம்பளப்பிள்ளையா அடக்குமா இருன்னு சொன்னாலும். யாரையாவது அடக்கம் பண்றவ மாறியே நடந்துக்குவா. என்ன பண்ண. அவளோட வளர்ப்பு அப்படி.’
அவளின் அந்தச் சேட்டைகளையும் ஒருவன் வைத்தக் கண்ணு வாங்காது பார்த்துக் கொண்டே இருப்பானென்றால், அது நம் ருத்ராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
அவளைக் காணவெல்லாம் வந்து நிற்கவில்லை. அந்த பக்கமாகச் சென்றான். அப்போது இவளின் விளையாட்டைப் பார்த்துவிட்டு காரை ஓரமாக நிறுத்தியவன், அதன் மேலையே சாய்ந்து கொண்டு அவளின் விளையாட்டைத் தன் ஃபோன் கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தான்.
தூரத்தில் இருந்த வாசுவின் மனம் குறுகுறுத்து ருத்ராவின் வருகையை சொல்லிக் கொடுத்தது. கண்கள் அவனைத் தேட, கண்டு கொண்டாள் அவள். கூடவே சிறு கோபத்துடன் அவனை நோக்கி வந்தாள்.
" என்ன பண்ணிட்டு இருக்க. உனக்கு என்ன வேல இங்க. " எனத் தன் முழு நீளக்கை டீசர்ட்டை மடக்கி சண்டைக்கி வருவது போல் ருத்ராவின் முன் வந்து நின்றாள் வாசு.
பின்னே அவளுக்கே தெரியாமல் அவளை வீடியோ எடுத்தால், ஃபோஸ் கொடுத்துட்டா நிற்பாளா என்ன. அதான் வந்தவள், அவனின் ஃபோன் பிடுங்க. அவன் தராது மல்லுக்கு நின்றான்.
" ஒரு பொண்ண பர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுக்குறதும், வீடியோ எடுக்குறதும் தப்பு. இரு உன்ன என்ன பண்றேன் பாரு!. " எனத் தன் மொபைலை எடுக்க,
" ஃபோலிஸ்க்கு கூப்பிட போறியா.? கூப்பிடு... கூப்பிடு... அப்பத்தா எனக்கே தெரியாம என்னோட ஃபோன் நம்பர எடுத்து மெஸ்ஏஜ் பண்ணியே அத கம்ப்ளைண்ட் பண்ண வசதியா இருக்கும். மாத்தி மாத்தி கம்ப்ளைண்ட் குடுத்துப்போம்."
"அதுக்கு தா நீ என்ன எங்க பிரின்ஸி கிட்ட போட்டுக் குடுத்தியே. அது போதாதா. "
"ம்ஹிம் போதாது. எங்கூட நாளைக்கி காலைல அவுட்டிங் வந்தா தா சரியாகும். " என்க., அவனை முறைத்தாள் வாசு.
" Hey man what's up?. " என்றபடி விக்டர் வர, அவனுடன் கை குலுக்கியவன், பேச ஆரம்பித்தான்.
" அவுட்டிங் ப்ளான் போட்டிருந்திங்கள்ள!. " விக்டர்.
"எஸ் விக்டர். நாளைக்கி தா நாங்க கிளம்ப போறோம். "
"ஓ... எனி ப்ளானிங். ஏன்னா அங்க என்ஜாய் பண்ண நிறைய விசயம் இருக்கும். சோ என்னென்ன பண்ணப்போறிங்கன்னு ப்ளான் பண்ணிட்டு போங்க. " எனக் கண்சிமிட்டி சொல்ல,
"ம்… கரெக்ட். அதுக்கு தா வாசுவ பாக்க வந்தேன். எந்த ஒரு முடிவா இருந்தாலும் ரெண்டு பேரும் கலந்து பேசி எடுக்கும்போது தான சிறப்பா இருக்கும். சரிதான வாசு. " என அவளை பார்த்துக் கண்சிமிட்டியபடி கேட்க,
"ஆல் தி பெஸ்ட் ப்ரோ. ரெண்டு பேருக்கும் தா. வாசுக்கு உங்கள சமாளிக்கிறது ஈசியா இருக்கலாம். ஆனா உங்களுக்கு இவள. ரொம்ப கஷ்டமா இருக்கும். சோ என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். " என வாசுவை கேலி செய்து ருத்ராவிற்கு சில பல ஐடியாக்களை வழங்கி விட்டுச் செல்ல, வாசு கோபமாக நின்றாள்.
" நாலாம் எங்கையும் வரமாட்டேன். உன்னோட டயத்த வேஸ்ட் பண்ணாத. உன்ன பெரிய பிஸ்னஸ் மேன்னு அறிமுகப் படுத்திருக்கு. இப்படி வெட்டியா ஊர் சுத்துனா உன்ன ஹீரோங்கிற போஸ்டுல இருந்து டீ-ப்ரமோட் பண்ணிடப்போறாங்க. பாத்துக்க." என நடந்து கொண்டே பேச,
" அட்வைஸ்க்கு நன்றி. பட் நா கேட்டதுக்கு பதில் இது இல்ல. நாளைக்கு mission peak போக...லா...மா?" எனச் சென்றவளின் கரம்பற்றி நிறுத்தி அவளின் உள்ளங்கையில் தன் விரலால் கோலம் போட்டபடி கேட்க, பெண்ணவள் கிறக்கத்தில் பாகாய் கரைந்து போனாள். ஒரு நொடி தான், அந்த உணர்ச்சியை வளர விடாது அவளின் கரத்தை உதறி வெடுக்கென எடுத்துக் கொண்டு, திரும்பி அவனை பார்த்துப் புன்னகைத்தாள் வாசு.
‘நம்ம வாசு செம்ம ஸ்டெடி மைண்ட் போல.’
" போணும்னா நீ மட்டும் தனியா போ. இனி எதுவா இருந்தாலும் நமக்குள்ள நாலடி இடைவெளி விட்டு மட்டுந்தா பேசணும். என்னோட அனுமதி இல்லாமல் எம்மேல கை வைக்கிற வேல வச்சிக்காத. நா கராத்தே ப்ளாக் பெல்ட். " என முடுக்காய் சொல்ல,
" எந்தக் கடைல வாங்குனது?." என்றவனை முறைத்தாள்.
"இல்ல, எவ்ளோ காசு குடுத்து வாங்குன ப்ளாக் பெல்ட்டுன்னு கேட்டேன். " என்றான் அவளின் முறைப்பை ரசித்தபடி கேலியாக.
"இது கடைல கிடைக்காது. உன்ன மாறி ஆளுங்கள தூக்கி போட்டுப் புருஸ்லீ மாறிப் பந்தாட நா கத்துக்கிட்டது. தேவையில்லாம பேசுனாலும், வரம்பு மீறுனாலும் பாதிப்பு உனக்குதா. ஜாக்கிரதை. " என்க, வந்த சிரிப்பை உதடுகளில் புதைத்தபடி நின்றான் அவன்.
"எதுக்கு இப்ப சிரிக்கற?. நா ஒன்னும் விளையாட்டுக்குச் சொல்லல. நிஜமா நா வரமாட்டேன். "
"ம்ச்... அத விக்டர் முன்னாடி சொல்லிருக்கலாம்ல. சொன்னா உனக்கு உன்னோட ஃப்ரண்ட்ஸ் கேலி பண்ணுவாங்களோன்னு பயம்மா?. " என்றவன், மெல்ல அவளின் அருகில் வந்து அவளின் அனுமதி கேட்காது கரம்பற்றி.
"நா உங்கிட்ட ஆல்ரெடி சொன்னது தா ஸ்வீட்டி. ஒன் டே... சில ஃபோட்டோஸ்... அதுக்கப்றம் உன்ன எந்த வகையிலயும் நா டிஸ்டப் பண்ண மாட்டேன்.
நீ உன்னோட ஃப்ரண்ட்ஸ் கிட்ட விட்ட சவால்ல வின் பண்ண மாறியும் இருக்கும். எங்கிட்ட அவுட்டிங் போகலாமான்னு கேட்ட ஒரு சின்னப் பொண்ண நா ஏமாத்தாத மாறியும் இருக்கும். எனக்கு யாரையும் ஏமாத்தி பழக்கம் இல்ல. " என்க, வாசு அமைதியாக நின்றாள்.
ஏனெனில் அவளின் நண்பர்களின் கேலி எப்போதுமே அதிகமாவே இருக்கும். அதுவும் அவளை அதிகமாவே கேலி செய்வர். அவர்களின் முன்னால் சென்று, ‘ருத்ரா என் பாய் ஃப்ரெண்ட் இல்லை’ என்று சொன்னால் தன்னை வைத்துச் செய்து விடுவார்கள். ருத்ரா அவளின் பலவீனத்தை
பிடித்துக் கொண்டான்.
அவளின் அமைதியை பயன்படுத்தி ருத்ரா பிடித்திருந்த அவளின் கரத்தில் விரல்களைத் தன்னோடு கோர்த்துக் கொண்டு மைதானத்தில் நடக்க தொடங்கினான். முதல் சில நொடிகள் அமைதியாக நடந்தவள், பின் அவனுடன் பேசத் தொடங்கினாள், எவ்வித தயக்கமுமின்றி. சண்டைகளுமின்றி நட்பாய் உலாவர தொடங்கினர் இருவரும்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..