முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 23

 

அத்தியாயம்: 23


நாம் யார்…


பின்னால்.‌..


போகிறோம்…


என்பதை விட...


யார் நம்…


நிழலாக…


பின்தொடருகின்றார்கள்…


என்பதில் அடங்கி…


இருக்கிறது…


உண்மையான…


வாழ்க்கை...


வெளிச்சம் முழுதாக மறைந்திடாத அந்தப் பொன் மாலை பொழுதில், தங்கத்தை அரைத்துப் பூசிக் கொண்டது போல் இருந்த மஞ்சள் வெயிலில், தன் மனம் கவர்ந்தவனுடன் கரம் கோர்த்து நடப்பது வாசுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ நாட்கள் அவளின் கனவில் அவனுடன் இப்படி நடைபயின்றுள்ளாள். இன்று அது நிறைவேறி விட்டது.‌


" இதுக்கு முன்னாடி நீ அங்க போயிருக்கியா?. " என்ற ஒற்றை கேள்விக்குத் தான் பக்கம் பக்கமாகத் தன் அனுபவத்தைப் பேசிக் கொண்டே வந்தாள் வாசு.


அவனுடன் பேச வேண்டும் என்று இதுவரை சேமித்து வைத்த வார்த்தைகள் அனைத்தும் மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்தோடிக் கொண்டு இருந்தன. அவனின் அருகாமையில் தோளுரசி நடக்கும்போது.


கார்த்திகேயனுடன், ஜோஹிதாவுடன், முருகன், உஷா  என ஆரம்பித்துக் கடைசியாக அஸ்வினுடன் சென்ற தன் அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே வர, ருத்ரா அங்குப் பார்வையாளனாக மாறி விட்டான்.


உயர்த்தி போட்ட குதிரை வால். அவளின் தலை அசைவுக்கு ஏற்றார் போல் கன்னம் தொட்டு தொட்டு செல்லும் அவளின் கலர் பூசிய கூந்தல். சூரியன் மறையும் நேரத்தில் அதன் ஒளியில் மின்னிய அவளின் மூக்குத்தி அவனை மிகவும் கவர்ந்தது. பிடித்திருந்த அவனின் வலது கையை விடாது ஆட்டிக் கொண்டே நடந்தாள் வாசு. அவளுக்குத் தான் தரை எங்கு உள்ளது என்றே தெரியாதே. இப்போது மனம் விரும்பியவனின் அருகாமை, காற்றில் பறக்கச் செய்தது.


"நாங்க லாஸ்டா போனப்ப அஸ்வினால முடியல. பாதி தூரம் தா போனோம். அதுக்குள்ள அவெ‌ தரைல உக்காந்திட்டு தர்ணா பண்ண ஆரம்பிச்சிட்டான். அப்பறம் காட்டு வாசிங்க மிருகத்த சமைக்க எடுத்துட்டு போற மாறி, கையையும் காலையும் மரக்குச்சில கட்டி தொங்கவிட்டு தோள்ல தூக்கிட்டு போனோம். ஹாஹ்ஹா... " என்றவளின் சிரிப்பு இதமாய் அவனின் மனதை வருடியது.


"நீ இதுக்கு முன்னாடி இந்த மல ஏறிருக்கியா?. ஏன்னா நா வேகமா போய்ட்டா நீ தனியா நடந்துட்டு இருப்ப. அதா… பாவம் இல்லையா நீ!. " எனத் திரும்பி அவனை பார்த்துக் கேட்க,


" உனக்கு எவரெஸ்ட் தெரியுமா?. "


"ம்... ஹிமாலயாஸ் ல இருக்குற பெரிய peak அது தா. நீ அதுல ஏறிருக்கியா!. வாவ்!!. சூப்பரான விசயம் அது. எப்ப போன?. முழுசா ஏறிட்டியா.? அங்க பனிக்கு கீழ பெரிய பெரிய பள்ளம்லாம் இருக்குமாமேம்?. ‌உனக்குப் பயமா இருந்ததா?. எத்தன பேர் கூட வந்தாங்க?. எந்த வர்ஷம் ஏறுன?. உன்னோட மலையேற்ற அனுபவத்த சொல்லேன். " என ஆவலுடனும் ஆசையுடனும் விழி விரிய கேட்க.


" அனுபவம்… அத எப்படி சொல்றது. ம்… இல்ல, நா எவரெஸ்ட் ஏறுனது இல்ல. உனக்கு ஜஸ்ட் எவரெஸ்ட்னா என்னனு தெரியுமான்னு தா நா கேட்டேன். அவ்வளவு தா. " என்றவனின் முதுகிலேயே தன் கரத்தால் அடி போட்டாள் வாசு.


" உன்ன போய்ப் பெரிய hiker னு நினச்சேன் பாரு. ப்ராடு. ப்ராடு. உன்ன நம்பி எப்படி நா வர்றது சொல்லு. ஒருவேள என்னால அந்த மலய ஏற முடியலன்னா என்ன பண்ணுவ?. ம்… என்ன பண்ணுவ?. விட்டுடுட்டு வந்துடுவியா!. என்ன அங்கேயே விட்டு வந்துடுவியா.! " என சொல்லிச் சொல்லி அடிக்கச் சில நிமிடங்கள் அதை வாங்கியவன் அவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு,


" பெரிய மலைகள நா‌ ஏறுனது இல்லன்னாலும், எனக்கும் அனுபவம் உண்டு. உன்ன தூக்கிட்டு பத்திரமா வர்ற அளவுக்குப் பலமும் உண்டு. " எனக் கண்சிமிட்சி சொல்ல,


"லைக் கொரியன் ஹீரோஸ் மாறியா!!. " எனக் கண்சிமிட்டி கேட்க, பாவம் அவன் திருதிருவென முழித்தான்.


"சொல்லு, கொரியன் ஹீரோஸ் மாறி என்ன முதுகுல தூக்கிட்டு நடந்து வருவியா.! ம்... நா கொரியன் டிராமாஸ் அதிகமா போப்பேன். நீ?. " என்க,


இப்போது அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாது. "ம்… பாத்திடுவோம்." என எல்லா பக்கமும் தலையசைக்க,


" மூவீஸ் கூட நல்லா இருக்கும். பட் ஒன்லி டிராமா மட்டும் தா கொரியன்ல. நா எப்பவும் தமிழ் மூவிஸ் தா அதிகமா பாப்பேன். அதுலயும்‌ காமெடி மூவி தா எனக்கு ஃபேவரைட். நீ பாத்திருக்கியா?. நெக்ஸ்ட் வீக் நாங்க எலி படம் போலாம்னு இருக்கோம். என்னோட ஃபேவரைட் ஹீரோ அண்டு காமெடியன் வைகை புயல் நடிச்சிருப்பாரு. நானும் அஸ்வினும் சேந்து செம்மையா என்ஜாய் பண்ணப் போறோம். " என அவள் இஷ்டத்திற்கு பேச, அவன் தலையசைத்தான்.


" உனக்கு வைகை புயல் நடிச்ச படத்துல எந்த ஸீன் பிடிக்கும்?. ம்... " என எதிர் கேள்வி கேட்க, அதைச் சற்றும் எதிர்பாராத அவன்.


" வைகை புயல்ன்னா என்ன?. " எனக் கேட்க, வாசு பேசாது அவனை‌ விசித்திரமாகப் பார்த்தாள்.


"உனக்கு வைகை புயல்னா யாருன்னு தெரியாதா?. "


" ஓ!! அது மனுஷனா!. நாங்கூட பயங்கரமா வீசுமே சூறாவளி காத்து, அத தா அப்படி சொல்றன்னு நினைச்சேன். ஹாஹ்… ஆமா யாரு அது?. " என்றான் ருத்ரா.


பாவம்... அவரைத் தெரிந்து வைத்திருக்காத குற்றத்திற்காக இவன் அவளிடம் வாங்கி கட்டிக்க போகிறான். நல்லா அனுபவிக்க போகிறான்.


அமிர்தாவின் கண்டிப்பால் மட்டுமே தமிழ் பேசுறான். மற்றபடி தமிழின் அரிச்சுவடி கூட அவனுக்குத் தெரியாது. படங்கள் பார்ப்பான் தான். ஒன்றோ! இரண்டோ!. அவனுக்குத் தெரிந்த நடிகர்கள் யார் என்றால் அது கமல்ஹாசன், ரஜினி, விஜய். தலா ஒரு ஒரு படங்கள் புவனா பார்க்க, உடன் அமர்ந்து பார்த்திருக்கிறான். அதுவும் முழுதாக இல்லை.


கண்ணீர் வர வைக்கும் சென்டிமென்ட் ஸீன், ஹீரோவை ஹீரோ ரேஜ்ஜிற்கு உயர்த்த வேண்டிய பொறுப்புள்ள வில்லன்கள் இப்போது காமெடி என்ற பெயரில் பண்ணும் பயங்கரங்கள், சிரிப்பு வரவைக்க வேண்டிய காமெடியன்கள் நம்மைக் கடுப்பு மூட்டும் வகையில் செய்யும் காமெடிகள் எனப் பார்ப்பதற்கே அவனுக்கு எரிச்சலாக வரும்.


'என்னோட பொன்னான மூணு மணி நேரத்த இந்தக் குப்பைய பாத்து நா குப்ப தொட்டிக்குள்ள போட விரும்பல. கெட் லாஸ்ட். ' என்று சென்று விடுவான். தமிழ் பாடம் மட்டுமல்ல ஆங்கில படங்களும் அப்படி தான். சில பாப் ஆல்பங்கள் மட்டுமே கேட்பான். அதுவும் தன்யாவின் தயவால் கிடைத்த அனுபவம்.


நம் தமிழ் சினிமாவை கேலி செய்யும் அவனிடம் போய் வைகை புயல் யார்? காவேரி மைந்தன் யார்?. பொன்னியின் செல்வன் யார் என்று கேட்டால் என்னாகும்.


‘ பையன் குழம்பி போய் நிக்கிறான்’.


அவனின் குழப்ப முகத்தைப் பார்த்தவள், அவனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஃபேனாவை எடுத்து அவனின் கரத்தில் தந்து, "எங்க உன்னோட பேர என்னோட கைல எழுது பாப்போம். " எனக் கரம் நீட்ட, எதற்கென்று தெரியவில்லை என்றாலும் ஆவலுடன் அதைப் பற்றியவனிடம், எழுதும் முன்,


" தமிழ்ல எழுதணும்." என்க, அவன் புருவம் நெறித்தான்.


"எனக்குத் தமிழ் பேசத் தெரிஞ்ச அளவுக்கு எழுதத் தெரியாது. சொல்லப்போனா அதுல இருக்குற சில லெட்டர்ஸ்ஸ தவிர வேற எதுவும் ஐடென்டிஃபை பண்ண தெரியாது. " என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள, வாசு தலையில் கை வைத்துக் கொண்டாள்.


"அவ்வளவா எழுதத் தெரியாதுன்னு சொல்லுற, அப்றம் எனக்குத் தமிழ்ல டைப் பண்ணி மெஸ்ஏஜ் அனுப்புன. எப்படி?. "


" இப்பெல்லாம் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆகிடுச்சி வாசு. எனக்கு என்ன டைப் பண்ணணுமோ அத நா கூகுள் கிட்ட வாஸ்ல சொல்லுவேன். அது உனக்குக் கரெக்டா தமிழ்ல மெஸ்ஏஜ் எழுதிச் சென்ட் பண்ணிடும். " என கூலாகச் சொல்ல,


'அடப்பாவி என்னோட பாய் ஃப்ரெண்ட் க்வாலிஃபிகேஷன்ல முக்கியமான ரெண்டு உங்கிட்ட இல்லவே இல்லையேடா. தமிழே தரிகிடனத்தம் ஆடும்போது தமிழ் படம் எப்படி பாத்திருப்பியான். அத எப்படி எங்கூட உக்காந்து என்ஜாய் பண்ணுவான்‌. ' என்பதால் வாசு சூடாக முறைத்தாள். 


கூடவே எதற்கென்றே தெரியாத கோபமும் வர, எதுவும் பேசாது அவனைத் திரும்பியும் பாராது நடந்து செல்லத் தொடங்கினாள்.


" வாசு... வாசவி... மிஸ் வாசவி கார்த்திகேயன்... என்ன கிளம்பிட்டிங்க? என்னாச்சின்னு சொன்னாத்தான என்னால தெரிஞ்சிக்க முடியும். " எனக் கத்த, திரும்பி ஒரு பார்வை பார்த்தவள்,


" போடா. " என்று விட்டு மீண்டும் திரும்பி நடக்க,


'போடாவா!!. என்ன மரியாத பூமிய தோண்டிட்டு‌ அடி ஆழத்துக்கு போது. ' என நினைத்தவனுக்கும் சிறு கோபம் வந்தது, அவளின் டா என்ற அழைப்பில். 


அமிர்தாவை தவிர வேறு எந்தப் பெண்ணும் அவனை டா என்று சொல்லியதே இல்லை. முதல் முறை வேறொரு பெண்ணின் வாயில் இருந்து கேட்கிறான். அதுவும் அவனுக்குப் பிடித்த பெண்.


ஒரு முறை தாரிகா அவனை டா என்று சொன்னதற்கு அவளை ரஞ்சனியிடம் சொல்லி நன்கு அடிவாங்கிக் கொடுத்தான்.


ஆசையில் டா சொல்லியிருந்தால் கூட நம் பையன் ரசித்திருப்பான். ஆனால் கோபமா முகத்த வைத்துக் கொண்டு டா என்று சொல்லித் திட்டும் போது, அவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும்.


அதே கோபத்துடன் வேகமாகச் சென்று அவளின் முழங்கையை பற்றி இழுத்து நிறுத்த, அவள் விட சொல்லித் திமிறினாள்.


" ஒழுங்கா நில்லுடி. உங்கிட்ட நா இவ்ளோ நேரம் மரியாத குடுத்து தான பேசிட்டு இருந்தேன். அதென்ன டா போட்டுப் பேசிட்டுட்டு போக்கிட்டே இருக்க. ம்... சொல்லு டி. நா உம்பின்னாடி வர்றேங்கிறதுக்காக. நீ என்ன வேணும்னாலும் சொல்லலாம். நா அத கேட்டுட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா டி. இப்ப என்ன தான் டி உனக்குப் பிரச்சன, மூஞ்சிய தூக்கி வச்சிட்டு போற அளவுக்கு. " என மிரட்ட அவளும் ஒன்றும் பயப்படவில்லை. அதே முறைப்பு பார்வையை அவனுக்குத் திரும்பி தந்து பார்த்தவள்,


"உனக்குத் தமிழே தெரியல அது தா பிரச்சன. போதுமா!. என்னோட பாய் ஃப்ரெண்ட்டுக்கு தமிழ் கொஞ்சமாச்சும் எழுதப்படிக்க தெரியணும். இப்படி கூகுள் கிட்ட வாய் வார்த்தையால சொல்லி, அது எனக்கு என்னன்னே தெரியாம மொழி பெயர்த்து சொல்றதுல எனக்கு இஷ்டம் இல்லை.


இதுக்கு நா கூகுள்ளையே பாய் ஃப்ரெண்ட்டாக்கிருப்பேன். உன்ன மாறி மனுஷன நம்புறதுக்கு மிஷின்னையே நம்பிடலாம். ச்ச… முதல்ல இருந்தே உனக்கு எங்கூட பழகுறதுல இன்ட்ரஸ்ட் இல்ல. என்ன அவாய்ட் பண்ண இப்படில்லாம் பண்ற. don't message me. ஒரு வார்த்த ஒரு ஒரே ஒரு வார்த்த போட்டிருந்தேன்னா. உன்ன நா டிஸ்டப் பண்ணிருக்கவே மாட்டேன். ஆனா நீ.


உன்னோட பர்மிஷனே இல்லாம உன்னோட நம்பர எடுத்தேங்கிறதுக்காக. எங்கூட பேசி, என்ன நேர்ல வர வச்சி, என்ன அழைய விட்டுருக்க. அது மட்டுமா பண்ண. என்ன எங்க ஸ்கூல போட்டுக் குடுத்து எல்லார் முன்னாடி தலைகுனிஞ்சி நிக்க வச்சிட்ட. உன்னால நா அந்த ஸ்கூல்ல இருக்குற எல்லாருக்கும் ஒரு கேலிப் பொருளா மாறிட்டேன். உ சங்காத்தமே வேண்டாம்னு தான நா விலகி இருந்தேன்‌.


இப்ப, நீயா வந்து பேசிட்டு என்ன டி போட்டுப் பேசுற. இப்பையும் என்ன எல்லார் முன்னாடியும் கேலிப் பொருளா நிக்க வைக்கத் தா வந்திப்ப. முதல்ல நீ யாருடா என்ன டி போட்டுப் பேசுறதுக்கு. என்னோட கார்த்திப்பாவே என்ன எவ்ளோ மரியாதயா கூப்படுவாருன்னு தெரியுமா. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாத உன்ன எல்லாம் என்னோட பாய் ஃப்ரெண்டா ஏத்துக்க மாட்டேன். போடா. " என‌ டா வை அழுத்தமாகச் சொல்ல, அவனும் அழுத்தினான், கரத்தைச் சிவக்கும் அளவுக்கு.


முதலில் அவள் தான் அவனை டா என்றது. அதை உணராது பேசிக்கொண்டு போக. 'லூசு மாறிப் பேசிட்டு இருப்பா அதுக்கு நாம பதில் சொல்லிட்டு இருக்கணுமா.' என அவளை உதறிவிட்டு திரும்பி நடக்க தொடங்கினான்.


‘அவளா வந்தா. மெஸ்ஏஜ் பண்ணா. சரி பழகலாம்னு பாத்தா. இப்ப இத்தன கன்டிஷன் போடுறா. ச்ச. இந்தப் பொண்ணு உனக்குச் செட்டாகாது ருத்ரா. உனக்குத் தன்யா சரியா இருப்பா.


ஆமா! இதுல எப்படி அவனோட ஃபோன் உடஞ்சதுன்னு சந்தேகம் வருதுல்ல.’


 திரும்பி நடந்து சென்ற அவனுக்குப் புவனாவிடம் இருந்து அழைப்பு வர, தங்கையுடன் சிரித்த முகத்துடன் பேசியபடி நடந்தான் ருத்ரா.


இவளிடம் சற்று முன் கோபமாகக் கத்தி விட்டு! பின் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் கண்டு கொள்ளாமல் திரும்பிச் சென்றுதோடு மட்டுமல்லாது, வேறு யாருடனோ ஃபோனில் சிரித்து சிரித்து பேசிச் செல்வதை கண்ட வாசுவிற்கு ஆற்றாமையில் கோபம் தலைக்கு ஏறியது.


வேகமாகச் சென்று அவனின் ஃபோனை பறித்தாள்.


"ஹேய்… லூசா டி நீ. குடு. " என்க, அதுவும் அவளுக்குக் கோபம் தந்தது.


'இத்தன நேரம் யாரு கூடயோ சிரிச்சி சிரிச்சி தான பேசிட்டு இருந்தான். அதென்ன என்ன பாத்து மட்டும் உறுமுறான். நா என்ன இவனுக்கு டொமேட்டடோ சாஸ்ஸா.' என நினைத்தவள்,


ஃபோனை பலம் கொண்டு தூக்கி வீசி எல்லாம் எறியவில்லை, திருஷ்டி சுத்தி போடும்போது பூசணிக்காயையோ அல்லது சிதரு காய் என்று தேங்காயையோ தூக்கி போட்டு உடைப்போமே அதுபோல் தூக்கி போட்டு உடைத்து விட்டு, விழிகளை உருட்டிக் காளி போல் மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க கால்களைத் தடக்தடக்கென எடுத்து வைத்துச் சென்றாள்.


வாட்டர் ப்ரூஃப் damage ப்ரூஃப் எனப் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் நம் வாசுவிடம் இருந்து காப்பாற்றுவது போல் யாரும் ஃபோன் கண்டு பிடிக்கலவில்லை போலும்.


‘நம்மல விடப் பெரிய கோவக்காரியா இருப்பாளோ’ என நினைத்தபடி கீழே கிடந்த ஃபோன் எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.


திரும்பித் திட்டி சண்டைக்கி வருவானென நினைத்தவளுக்கு ஏமாற்றமே. 


அதுவும் அவளுக்குக் கோபத்தை தான் தந்தது. அந்தக் கோபத்தில் தான் அவனுடன் அவுட்டிங் செல்லவில்லை.


பாவம்ல.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

நேசிப்பாயா 22


நேசிப்பாயா 24


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...