முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 24


 

அத்தியாயம்: 24


நேரம் 9:40


நியூயார்க் விமான நிலையம்.


‘இன்னும் இவா புறப்படல போலயே. ஒரு வேள ருத்ரா கூடப் பேசாததுனால ரொம்ப சோகமா இருக்காளோ. அதுனால தா யாருன்னே தெரியாத ஒருத்தெங்கிட்ட தன்னோட வாழ்க்கை வரலாற வாய்ப்பாடு மாறிச் சொல்லிட்டு இருக்கா போல.’


"ஹாஹ்ஹா... காதல், லாங்குவேஜ் பிரச்சன வந்தாலும் அதையும் தாண்டிக் காதலர்கள சேத்து வைக்கும்னு நா இதுவரை கேள்விபட்டிருக்கேன். பாத்திருக்கேன். பட் இங்க. ஒரு லாங்குவேஜ்ஜே ஒரு காதல பிரிச்சிடுச்சி. ஹாஹ்ஹா... அதுலையும் காதலிக்க ஏத்த மொழியான தமிழ். ஹாஹ்ஹா. " என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த அந்த இளைஞனை தன்னால் முடிந்த மட்டிலும் முறைத்தாள் வாசு.


"சிரிக்காத. எனக்குக் கடுப்பா இருக்கு. " என்றாள் வாசு சூடாக.


"நீ இப்படியே இருந்தேன்னா‌, நிஜமாவே உனக்குப் பாய் ஃப்ரெண்ட் கிடைக்கவே மாட்டான். என்ன மாறியான பொண்ணு நீ.!" எனக் கேலி செய்தான்.


இதைச் சொல்லித் தானே அவளுடைய நண்பர்கள் அவளை ஒரு வாரமாக கேலி பேசிக் கொண்டு இருக்கின்றனரே. இப்பொழுது இவனும் அவர்கள் வரிசையில் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது. ச்ச... என்றிருந்தது வாசுவிற்கு.


"உன்னோட டிரெஸ், பிகேவியர் வச்சி பாக்கும்போது நீ மார்டனா தெரிஞ்ச. பட் பழகும்போது தா தெரியுது, நீ ரொம்ப வித்தியாசமானவன்னு. மோஸ்ட்டாஃப் கேர்ள்ஸ் உப்பு சப்பில்லாத காரணத்துக்காகத் தா பிரேக் அப்பண்ணிட்டு போறாங்க. " என சொல்லிச் சிரிக்க.‌‌


"உ கேர்ள்ஸ் ஃப்ரெண்டும் அப்படி தானா. ஸாரி முன்னாள் காதலி. " 


"எஸ். அவளும் இப்படி தான். சில நேரம் ஸ்டுப்பிட் மாறிப் பேசுவா. அவளும் உன்ன மாறியே தா தமிழ் தமிழ்னு அத பத்தி அதிகமாவே பேசுவா. வாரத்துல ஒருக்க கட்டாயம் தாவணி கட்டிட்டு தா க்ளாஸ்கே வருவா. சித்தி, பெரிம்மா‌, அத்த, மச்சான், மாமா, அக்கா, மதினி, ஆச்சி, அண்ணி ன்னு என்னென்னமோ உறவு முறை சொல்லுவா. இதுல யாராது எதாவது சொல்லிட்டா ஃபீல் பண்ணி சில நேரம் அழவே செய்வா. " என சொல்லிச் சிரித்தான்.


"ம்… relationship. Mom, dad, uncle, aunty, cousins, grandparents. இது மட்டும் தா இப்ப நம்ம பழக்கத்துல இருக்கு. இல்லயா. உங்களுக்கு மச்சானுக்கும் அத்தானுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா. " எனக் கேட்க.


"ரெண்டு பேருமே கசின் தான. ஆம்பள பசங்க. "


"ம்... அதையும் தாண்டிச் சில விசயம் இருக்கே. "


"என்னதது."


"அத்தான், அப்பா வழில வர்ற முறை பையன். ஐ மீன் அப்பாவோட அக்காவோ தங்கச்சியோ அங்க பசங்க. அத்த பையன் அத்தான். "


"ஓ… அப்ப மச்சான். "


"அதுவும் முறைப்பையன் தான். ஆனா அம்மா வழி மூலமா. அதாவது அம்மாவோட அண்ணனோ தம்பியோ அவங்களோட பசங்களத்தான் மச்சான்னு கூப்பிடுவாங்க. கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே அத்தான்னு கூப்பிடுறது காணாம போச்சி. இப்ப மச்சான்னு கூப்பிடுறதும் ICU கிடக்குற ஃபேஷன்ட் மாறி இழுத்துட்டு இருக்கு.


ஐயா... மதினி... இப்பல்லாம் அத சொல்லி யாரும் கூப்பிட்டா அது அவமானமா இருக்காம். மச்சான் கூப்பிட்டா கூச்சமா இருக்காம்‌‌.


எந்த உறவை முறையா இருந்தாலும் அண்ணா அக்கான்னு கூப்பிடுறத தா இந்தக் காலத்து ஜென்ரேஷன் விரும்புது. அப்படி அவங்க கூப்பிடுறதுனால நாம மறந்து போறது அந்தப் பேர மட்டுமில்ல. அந்த உறவு முறையையும் தா. ஒரு ஜென்ரேஷனையே மறந்துட்டோம்.


இப்பையும் தென் தமிழகத்துல பெத்த அப்பாவ ஐயான்னு தா கூப்பிடுறாங்க தெரியுமா. மதினி ஆச்சி ஓரகத்தி ங்கிற அழைப்பும் சில இடத்துல தா இருக்கு.


அந்த மாறி உறவுகளோட முக்கியத்துவம் எல்லாரையும் ஒரே மாறிக் கூப்பிடுற உங்கள மாறியான ஆளுங்களுக்கு எப்படி தெரியும்.?‌" என மிகப் பெரிய விளக்கம் தந்தவளை கன்னத்தில் கை வைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.


'அத்தான் மச்சான் அழைப்புபற்றி ஏதோ ஒன்றில் படித்த நியாபகம். தவறாக இருந்தால் மன்னிச்சு. '


" ஏ அப்படி பாக்குற?. நா எதுவும் தப்பா சொல்லிட்டேனா!. "


" நீ தப்பா சொன்னியா இல்ல சரியா சொன்னியான்னு யாருக்கு தெரியும். ஆமா, இந்த விளக்கத்த எல்லாம் உனக்கு யாரு சொல்லிக் குடுத்தா?. " எனக் கேட்க, வாசு புன்னகையுடன் மீண்டும் கதை சொல்லத் தொடங்கினாள்.


"அது என்னோட ஜோஹிம்மா தா சொன்னாங்க. அவங்க குடும்பம் வடநாட்டு குடும்பமாம். மூணு தலைமுறைக்கி முன்னாடி தமிழ்நாட்ட சுத்தி பாக்க வந்த அவங்களுக்கு தமிழ்நாடும் அதோட மொழியும் ரொம்ப பிடிச்சி‌ போச்சாம். அதுனால எல்லாத்தையும் வித்துட்டு சென்னைல செட்டில் ஆகிட்டாங்களாம்.


சைத்தாப்பேட்டை முழுக்க இருக்குற எல்லாரையும் ஜோஹிம்மாக்கு தெரியுமா. பெரிப்பா, பெரிம்மா, மாமான்னு எக்கச்சக்க சொந்தங்கள் இருக்காம்.‌ எப்பெல்லாம் நா பழைய ஆல்பம் எடுத்துட்டு உக்காந்தாலும்.‌ ஜோஹிம்மா சலிக்காம அவங்க குடும்பத்த பத்தி சொல்லுவாங்க.


நல்ல வசதியான குடும்பமாம். அந்தக்காலத்துலயே இந்தியால கார் வச்சிருந்த குடும்பத்துல அங்க குடும்பமும் ஒன்னாம். " என்றாள் பெருமையாக.


" இப்பவும் அந்தச் சொந்தக்காரங்க கூடப் பழக்கம் இருக்கா என்ன.?"


" இல்ல. நா அவங்க எல்லாத்தையும் ஃபோட்டோல மட்டும் தா பாத்திருக்கேன். நேர்ல பாக்குற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்ல. " என சோகமாகக் கூறினாள்.


"ஏ."


" ஜோஹிம்மா கார்த்திப்பாவ காதலிச்சாங்கலாம். கார்த்திப்பாக்கு சொல்லிக்கிற‌ மாறிச் சொந்தமும் இல்ல, சொத்தும் இல்ல. அதுனால ஜோஹிம்மா வீட்டுல யாருக்கும் பிடிக்கலயாம். மறந்திட சொல்லிச் சொன்னாங்களாம்.


ஆனா ஜோஹிம்மா சும்மா விடல. கைய அறுத்துட்டு தற்கொல பண்ணிக்க பாத்தாங்களாம். வேற வழியே இல்லாம அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். ஆனா கார்த்திப்பாக்கு அவங்க சரியான ரெஸ்பெக்ட் குடுக்கலன்னு சொல்லிக் கார்த்திப்பாவ தனியா கூட்டீட்டு வந்துட்டாங்களாம்.


காதலுக்கு எவ்ளோ பவர் இருக்கு பாத்தியா. வசதியா ஏசில வாழ்ந்த அவங்க, இங்க கார்த்திப்பா கொண்டு வர்ற மீதி காய்கறிகளையும் செற்ப வருமானத்தையும் வச்சி குடும்பம் நடத்தி இன்னைக்கி இவ்ளோ பெரிய ஆளா மாறிருக்காங்க. அதுக்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் தா காரணம். போத் ஆர் க்ரேட். " எனத் தன் பெற்றவர்களின் காதலை சிலகித்துக் கூறி, அந்த இளைஞனின் முகம் வாடி இருப்பது தெரிந்தது. காரணம் கேட்டாள் வாசு.


"எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இருபத்தி ஒரு வயசு பொண்ணு இன்டிப்பென்டலா இல்லாம இன்னும் அவளோட பெத்தவங்கள சார்ந்து இருக்குறது. காச விடக் காதல் தா பெருசுன்னு உன்னோட அம்மா உங்கப்பாக்கு துணையா இருக்குறது. இத்தன வர்ஷம் கடந்தும் உங்கப்பாக்கு உங்கம்மாவ தவிர வேற எந்தப் பொண்ணு மேலையும் இன்ட்ரஸ்ட் வரமா இருக்குறது. எல்லாமே எல்லாமே ஆச்சர்யமாத்தா இருக்கு. "


"இதுல ஆச்சர்ய பட ஒன்னுமே இல்ல. உன்னோட ஃபேரன்ஸ் மாறித் தா என்னோட. "


"ப்ளிஸ். கம்பேர் பண்ணாத. அவங்க ஃபேரன்ஸ்ஸே‌‌ கிடையாது. ஒரு நல்ல ஃபேரன்ஸ்ஸோட கடம அந்தக் குழந்தைகளுக்கு நல்ல ஃபீஸ் புல்லான லைஃப்ப எப்படி வாழணும்னு கத்துதர்றது. ரொம்ப நாள் இல்லன்னாலும் ஒரு பதினஞ்சி வயசு வர்ற வரைக்கும் அவங்க கூடவே இருந்து இந்த உலகத்த ஃபேஸ் பண்ண சொல்லிக் குடுக்கணும். ஹிம்… எனக்குத் தா அப்படி நடக்கலையே. "


"ரெண்டு பேரும் உயிரோட இல்லயா!!. " என்றாள் வருத்தமான குரலில்.


" இருக்காங்க, வேற வேற ஆள கல்யாணம் பண்ணிட்டு. கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு தா நினைக்கிறேன். ஆனா குழந்தை குட்டினு செட்டில் ஆகிட்டாங்க. அவங்களோட பையனான எனக்குத் தா, கூட யாருமே இல்ல. " என்றவனும் வாசுவிடம் மனம் திறந்தான்.


"அப்பா சொந்தமா பிஸ்னஸ் பாத்தாரு. அம்மா பேங்குல வெர்க் பண்ணாங்க. ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தா. என்னோட நாலு வயசுல வரைக்கும், அதாவது அப்பாவோட பிஸ்னஸ் நல்ல லாபத்துல போனவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா லாஸ் வரும்போது, கைக்கு வர்ற காசு கம்மியாகிடுச்சி. சண்ட அதிகமாகிடுச்சி.


அப்பெல்லாம் அம்மாக்கு ஆறுதல் தரன்னு ஒருத்தே வீட்டுக்கு வருவான். முதல்ல ரெண்டு நிமிசம் பேசிட்டு போய்டுவான். அப்றம்‌ அது அஞ்சி நிமிசமா மாறுச்சி. அப்றம் அது ரூம் குள்ள பல மணி நேரம் ஆறுதல் சொல்ற அளவுக்கு வளந்தது.


அப்பாவால எதுவும் பண்ண முடியல. ஏன்னா அவருக்கு ஸ்ட்ரோக். பிஸ்னஸ் லாஸ்ஸ ஏத்துக்க முடியாம கை கால் ரெண்டும் இழுத்துக்கிச்சி.


எங்கண்ணு முன்னாடியே அப்பாவ அடிச்சி கொடும படுத்தும் அந்த ம்மா. சரி அம்மா தா தப்பு பண்றாங்க போலன்னு நினைச்ச எனக்கு, அப்பா வச்சிருந்த இல்லீகல் ரிலேஷன்ஷிப் பத்தி தெரியவந்தது‌.


இத காரணம் காட்டி டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டாங்க. போறப்ப அப்பாக்குன்னு இருந்த ஒரே வீட்டையும் எழுதி வாங்கி அப்பாவ ஜீரோவாக்கிட்டு போயிருச்சி. அப்பாவோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்டு தா தங்க இடம் குடுத்தாங்க. ரொம்ப சிறுசு அந்த இடம்.


அந்த இடத்துலயும் அவ்ளோ கஷ்டத்துலயும் அந்தாளால சும்மா இருக்க முடியல. வயசுக்கும் லஸ்ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு அந்தாளு தா புரிய வச்சான். ஓரளவுக்கு உடம்பு சரியானதும் அந்தம்மாவோட பொண்ணு மேல கைய வச்சிட்டான். அது அந்தம்மாக்கும் தெரியும். பட் அத அவங்க வெளிக்காட்டிக்கல்ல.


அந்தப் பொண்ணோட தனிப்பட்ட விசயம்னு தலையிடல. இந்த மாறியான மனுஷங்களோட வளந்ததுனால எனக்குப் பயம். இந்த மாறி ஒரு ரிலேஷன்ஷிப் நமக்கு அமைஞ்சிடுமோன்னு. அதுனாலயே நா யார் கூடயும் நெருங்கிப் பழகுறது இல்ல. தனியா இருக்கத்தா விரும்புறேன். " என்றவனின் கண் முன் அவனின் முன்னாள் காதலி வந்து செல்வதை தடுக்க முடியவில்லை. ஏனெனில் அவள் வித்தியாசமானவள். அவனின் நம்பிக்கைக்கு உரியவள்.


"எனக்கு இந்த உலகம் சொல்லித்தந்தது இது. யாரா இருந்தாலும் தாமர இல மேல இருக்குற தண்ணி மாறி ஒட்டியும் ஒட்டாமாலும் பழகணும். எனக்கு எந்த ரிலேஷன்ஷிப் மேலயும் நம்பிக்க இல்ல. என்ன நெருங்குறவங்களையும் அந்தப் பயம் காரணமா விரட்டி விட்டுடுவேன். " என்க அவனுக்கு ஆறுதல் சொல்ல வாயைத் திறக்கும் முன் அவளின் கேட் ஓப்பனாகி ஃப்ளைட்‌டின் வருகையைச் சொல்ல, வாசு வேகவேகமாகத் தன் ஹெண்ட் பேக்கிலிருந்து ஒரு‌ விசிட்டிங் கார்டை எடுத்தாள்.


"இது எங்க ரெஸ்டாரன்ட். நீ தாராளமா வந்து எங்கப்பாவ பாக்கலாம். உனக்கு ஒரு நல்ல ஃபீல் கிடைக்கும். எனக்கு லேட் ஆகிடுச்சி.‌ பை. " எனத் தோளில் பையை மாட்டிக் கொண்டு நடக்க, அவள் தந்த கார்டில் அவளின் வசிப்பிடமும் ஃபோன் நம்பரையும் அறிந்தவன்,


" உன்னோட பேரென்ன. " எனக் கத்த,


" வாசவி கார்த்திகேயன். உன்னோட பேரு. "


"டேனியல். என்னோட பேருக்குப் பின்னாடி அந்தாள் பேர சேத்துக்க நா விரும்பல. "


"அதெல்லாம் சரி. என்ன வேல பாக்குற. " 


"நேத்துவர எனக்கு வேல வெட்டிக் கிடையாது. பட் நாளைக்கி நா ஒரு மாடலிங் கம்பெனியோட ஃபோட்டோ கிராஃபர். நியூயார்க் சிட்டில என்னோட ஃபஸ்ட் டே இது தா. "


"பட் எனக்கு இது தா லாஸ்ட் டே. நீ ஃப்ரீயா இருந்தா Fremont வா. பழகலாம். " என்றபடி சென்றாள் வாசு.


மான்போல் துள்ளி குதித்து ஓடிய மங்கையை பார்க்கையில் மனம் இதமாய் மாறியது. அவளின் செயல்கள் புன்னகையை வரவைத்தது மட்டுமல்லாமல் அவனின் முன்னாள் காதலியையும் நினைவு படுத்தியது.


அவளும் வாசுவை போல் தான் வாயாடுவாள். திருமணத்தின் மீதும் உறவுகள்மீதும் இருக்கும் அவநம்பிக்கையால் மனம் விரும்பிய பெண்ணை விட்டு விலகி நிற்கிறான். இல்லை விரட்டி விட்டுள்ளான்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

நேசிப்பாயா 23

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...