அத்தியாயம்: 25
உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடிதான் குத்து தான். இது சொலவடை. இது உண்மையா இல்லையா என்று நம் தன்யாவை பாத்து தெரிந்து கொள்ளலாம்.
அது ஹோம் தியேட்டர்.
திரையரங்கிற்கு சென்று கூட்டத்தோடு கூட்டமாகப் படம் பார்ப்பதை விட, குடும்பமாகவும் நண்பர்களுடனும் அமர்ந்து, கையில் எதையாவது வைத்துக் கொண்டு வாயில் அசை போட்டபடி சோஃபாவில் படுத்துக் கொண்டும் சாய்ந்து கொண்டும் படம் பார்ப்பது தனி சுகம். அதற்குத் தான் இப்போதுள்ள வீடுகளில் தியேட்டர் போன்ற வசதியைச் செய்து கொள்கின்றனர்.
அது போன்றதொரு தியேட்டரின் சோஃபாவில் தான் தன்யா அமர்ந்திருக்கிறாள். ஆனால் படம் பார்க்கவில்லை. பார்த்துக் கொண்டு இருப்பது கார்ட்டூன். டாம் அண்ட் ஜெர்ரி. அவளுக்கு அது பிடிக்கும் தான் ஆனால் இப்படியொரு சூழ்நிலையில் பார்ப்பது பிடிக்காது.
அப்படி என்ன மாறியான சூழ்நிலை என்று தானே கேக்குறீங்க. ஒரு பக்கம் அக்காள் மகன் மாதேஷ். அடுத்த பக்கம் நம் ராசாத்தி பாட்டி. ரெண்டு பேரும் அமைதியாக உக்காந்திருந்தால் தன்யாவும் சேர்ந்து ரசித்துப் பார்த்திருப்பாள்.
ஆனால் நம் ராசாத்தி, ரசிக்கிறேன் என்ற பெயரில் தன்யாவின் தொடையில் தட்டி தட்டி சிரிக்க, மாதேஷோ தன்யாவின் கையில் சாய்ந்து கொண்டு சிரித்தான். அதுவும் தலையால் அவளின் தோளை முட்டி முட்டி.
தன்யாவிற்கு அரவை இயந்திரத்தில் இருப்பது போல் இருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவள் பொங்கி விட்டாள்.
" பாட்டி, அந்தப் பக்கம் தா அத்தன சேர் இருக்கே. அதுல போய் உக்காந்தாத்தா என்னவாம். "
" அடியே கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி. மும்மரமா எலியையும் பூனையையும் பாத்துட்டி இருக்கேன். ஓலப்பாய்ல நாய். " என அடுத்து பேசுவதற்குள் தடுத்தாள் தன்யா.
"ஏய் கிழவி!. என்ன நாயின்னு சொன்னதோட சின்னப் பையன் முன்னாடி பேசுற பேச்சா இது!. "
" நீ அப்படி தான டி லொடலொடன்னுட்டு இருக்க. "
"அத நீ சொல்ற பாரேன். "
" வாய மூடுடி. அங்க பாரு அந்தப் பூனய எலி படுத்துற பாட்ட. " எனச் சொல்லி மீண்டும் தொடையில் தட்டி சிரிக்க,
" டாம் ஜெர்ரி பாக்குற வயசா உனக்கு. அவெந்தா சின்னப் பையன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறான். உனக்கு என்ன வந்தது. கட்டைல போற வயசுல உனக்குக் கார்ட்டூன் கேக்குதா. எந்திரிச்சி போ. போய் உம்மகளுக்கும் மருமகளுக்கும் சமைக்க உதவி பண்ணு. போ. " என வயதானவர் தன் பாட்டி என்றும் பாராது லேசாக லேசாகத்தான் பாட்டியின் தோளைத் தட்டினாள். ஆனால் நம் ராசாத்தி ஆஸ்கார் வாங்குற அளவுக்குத் தரைல விழுந்து நடிக்க ஆரம்பித்து விட்டது.
"ஐய்யோ!. அம்மா!. ஈஸ்வரா!. காலம் போன காலத்துல என்ன கூட்டீட்டு வந்து கொடும படுத்துறானுங்களே. ஒரு டீவி பொட்டிய கூடப் பாக்க விடாம என்ன அடிச்சி கொடும படுத்துறானுங்களே!. அம்மா!. வேற யாரா இருந்தா கூடப் பரவாயில்லை எம்பேத்தியே என்ன பிடிச்சி தள்ளி விட்டுட்டாளே!. இத நா எங்க போய்ச் சொல்லுவேன். யாருக்கிட்ட சொல்லுவேன். போதும் டி யாத்தா. என்ன கொண்டு போய் எவ்வீட்டுலயே விட்டுடுங்க. எனக்கு எதுக்குடிம்மா இந்தப் பகட்டு வாழ்க்க. நா கட்டாந்தரையிலேயே உக்காந்துக்கிறேன். ஆ!. வலி உயிர் போகுதே. அம்மா!. போற உசுரு எம்புருஷெங்கூட வாழ்ந்த வீட்டுலயே போட்டும். ஐய்யோ!. அம்மா!. வலிக்கிதே!. " எனக் கூப்பாடு போட அது வீட்டாரை அலாரம் வைத்து அழைத்தது.
"ஐய்யோ அம்மா என்னாச்சி.? " என அவர் பெற்ற செல்வங்கள் வந்து ராசாத்தியை தூக்கி விட, பாட்டி ‘எந்திரிக்க மாட்டே’ என்று அடம்பிடித்தார். தன்யா வந்து கால பிடிச்சி மன்னிப்பு கேட்டால் தான் கிழவி காலை ஊனி எந்திரிப்பே என்று சொல்ல, தன்யா பாட்டியை முறைத்தபடி நின்றாள். கூடவே,
"அவ்வா!. கிழவி நீ சரியான ஆளு தா. உன்னைய யாரும் தள்ளி விடல. நீயாத்தான விழுந்த. ஓவரா நடிக்காத எந்திரி. " என்பதற்குள் தாரிகா வந்து தன்யாவை திட்டத் தொடங்கினாள்.
" ஏன்டி அதுவே கீழ விழுந்து கெடக்கு. தூக்கி விடாம திட்டுற. "
" உம்பாட்டி என்ன நூறடி பள்ளத்தாக்கு குள்ளயா விழுந்துடுச்சி. சோஃபால இருந்து தான விழுந்துச்சி. ஒரு அடி கூடக் கிடையாது. ஆனா அது போடுற ஆக்டிங் இருக்கே. ஹப்பா!!. " என்க. அனைவரும் அவளைத் திட்டி பாட்டியைக் கைத்தாங்களாக அழைத்துச் சென்றனர்.
" என்ன இங்க ரொம்ப நேரமா சத்தமா இருக்கு!. " என்றபடி வந்தான் க்ரீஷ்.
"உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க எதையும் கேக்கல பாக்கல அப்படி தான. "
"எஸ். நானும் என்னோட ஹனியும் சீரியஸ்ஸா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும்போது. ஐய்யோ அம்மான்னு ஒரு குரல் வந்து எங்க மூட ஸ்பாயில் பண்ணிடுச்சி. அந்தக் குரல் உன்னோடது தானா. "
"அது என்னோடது இல்லன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அதெப்படி மாமா! உள்ள வந்தா கிழவிய தூக்கிட்டு போகச் சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டு கதவுக்குப் பின்னாடியே நின்னு லைவ் ஷோ பாத்துட்டு வந்து கேள்வி கேக்குறீங்க. ச்ச. " என்றவள் கோபமாகத் தேவ்வை பார்க்கச் சென்றாள். கிழவி விசயத்தில் அவளுக்கு ஆதரவு தரும் ஒரே ஜீவன் அவன் தான்.
"பாத்தியா தேவ். அந்தக் கிழவி போட்ட மேடை நாடகத்த. " என்றபடி வந்தவளை அவன் கண்டு கொள்ளவில்லை.
இன்னும் இரு வாரங்களில் வரவிருக்கும் Thanks giving day காக விடுதிகளில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் சரி பார்த்தபடி அமர்ந்திருந்தான் தேவ், லேப்டாப்புடனும் காதில் ப்ளூடூத்துடனும்.
"ஐய்யோ பாவம். இங்கையும் உனக்குப் பெரிய பல்பு குடுத்துட்டாங்க போலவே. உன்ன சுத்தி பல கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த வெளிச்சம் இருக்குன்னா நீ எவ்ளோ பல்பு வாங்கிருப்ப. " என்றபடி வந்தாள் புவனா.
" இது நடக்குறது தான. புதுசா வாங்குற மாறிப் பாராட்டு விழா நடத்துற. ஆமா Thanks giving ஈவன்டுக்கு தேவ் எங்க போகப்போறான். எப்பையும் ‘போட்’டுல கடலுக்குள்ள வச்சி தான கொண்டாடுவான் அதா கேட்டேன். " என்றவளை உற்று நோக்கினாள் புவனா.
" அது வேற ஒன்னமில்ல. அந்த ரெண்டு நாளு தா எங்கிட்ட முகம் குடுத்து பிஸ்னஸ் டென்ஷன் இல்லாம பேசுவான். அப்பத் தா அவெகூட பேசி அவன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க முடியும். எங்க ஊரு ஜோசியக்காரெ எனக்குத் தை மாசம் கல்யாணம் கன்ஃபாம்னு சொல்லிருக்கான். ரொம்ப நல்ல ஜோசியக்காரென். அவரு சொன்னது அத்தனையும் கரெட்டா நடக்கும். சோ இன்னும் மூணு மாசம் தான இருக்கு. அதா... " என்க, அவளின் பேச்சைக் காதில் கேட்ட தேவ்,
" தன்யா, நான் உன்னை இந்த மாதிரிப் பேசாதன்னு சொல்லிருக்கேன். எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. ஸ்டாப் திஸ் நான்ஸ்சென்ஸ். " எனக் கடுப்புடன் சொல்லி எழுந்து சற்று தூரமாக அமர்ந்து கொண்டான்.
" பட் எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஐடியா இருக்கே. அது போதாது." என்க, புவனா தலையில் அடித்துக் கொண்டாள்.
" ஹேய் பூவீ. உங்கண்ணே யாரையோ லவ் பண்றதா சொன்னான். உனக்கு யாருன்னு தெரியுமா.?"
"லவ்வா!. தேவ்வண்ணாவா!. சான்ஸ்ஸே இல்ல. ஃப்ரெண்ட்டா இருக்கப்போது. நீ தப்பா நினைச்சிட்டு பேசுற. "
"இல்லடி. நேத்து சும்மிங் ஃபூல் கிட்ட அர்த்தராத்திரி பேசுனோமே அப்பச் சொன்னான். ' நா ஒரு பெண்ண விரும்புறேன். 'ன்னு”.
"நீ உண்மையாவா சொல்ற!."
" ம். "
"நிஜமாவா.! "
"பின்னப் பொய்க்கு யாராவது சொல்வாங்களா!. உங்கண்ணே ப்கேவியர்ல ஏதாவது மாற்றம் தெரியுதா உனக்கு?. அப்படி இருந்தா அது கண்டிப்பா காதல் தா. "
"எனக்குத் தெரிஞ்சி எதுவும் இல்லயே. " என யோசித்தவள்.
"ஹாங். அண்ணே இந்த மொற Thanks giving dayக்கு கடலுக்குள்ள போகல. Fremontல புதுசா renew பண்ண ஹோட்டல்ல தா கொண்டாடப்போறதா நேத்து அப்பாட்டா சொல்லிட்டு இருந்தாரு. யாரு சொன்னாலும் கேக்கம கடலுக்குப் போட்-ட எடுத்துட்டு போற அண்ணா இந்த வட்டம் போகல. இது ஒரு வேள காதலுக்கான சிம்டம்மா இருக்குமோ.! " எனப் புவனா யோசிக்க,
"இது காதலுக்கு இல்ல. கடமைக்கான சிம்டம்ஸ். அவனுக்கு அவனோட பிஸ்னஸ் தா முக்கியம்ன்னு அர்த்தம். உங்கிட்ட போய்க் காதலப்பத்தி கேட்டேன் பாரு. என்ன சொல்லணும். காதலுக்கு உனக்கும் ராசியே கிடையாது. "
"ஆமாமாம்மா. ஏழெட்டு லவ்வு பண்ணி அதுல ஒருத்தேங்கூட கூடக் கடைசி வரைக்கும் இருக்க முடியாத நீயும் என்னோட லிஸ்டா தா. போய் வரிசைல கடைசி ஆளா நில்லு. " என்றாள் ரோசமாக.
‘பின்ன லவ் வந்தா பண்ண மாட்டோமா. வரல பண்ணல.’ அது புவனாவின் மைண்ட் வாய்ஸ்.
அவளின் தந்தையின் மீதுள்ள மரியாதை காரணமாகவும், அவளின் அண்ணன்கள் தேவ், க்ரிஷ் இருவரின் மீதுள்ள பயத்தின் காரணமாகவும் யாரும் அவளை நெருங்குவதில்லை.
ஒரு முறை அவளைக் காதலிக்க சொல்லித் தொந்தரவு செய்த இளைஞனை அடித்து விரட்டலாம் இல்லை. பைத்தியம் போல் மாற்றி அவனை அந்த ஏரியாவில் சுற்ற விட்டுள்ளனர். அதிலும் தேவ் தான் கண்டிப்பாக இருப்பான். கேரம் போர்டுகளில் எந்தக் காயினை எப்படி அடித்தால் ஓட்டைக்குள் விழும் என்று குறி பார்த்து அடிப்பது போல் யாரிடம் எப்படி நடந்து கொண்டால் தன் வழிக்கு வருவார்கள் என்பதை நன்கு அறிந்தவன் அவன். அப்படி பட்டவனை மீறி யாரும் புவனாவை காதலிக்க வைக்கவில்லை.
" ம்ச்! அப்ப உனக்கும் தெரியாது. வேஸ்ட் ஆஃப் டயம். " என்றவள் தேவ்விடம் திரும்பி,
"தேவ் நீயே சொல்லிடேன். உன்னோட காதலி யார்னு. ம்... " எனக் கத்த, அவளை நிமிர்ந்து கோபமாகப் பார்த்து விட்டு மடிகணினியில் விழி பதித்தான் தேவ்.
"அண்ணே கோபமாச்சின்னா நீ செத்த. ஏற்கனவே அவரு பல டென்ஷன்ல சுத்துறாரு. இதுல நீ வேற ஊடால காமெடி பண்ணிட்டு. வாய் மூடீட்டு இரு." என்ற புவனாவை கண்டு கொள்ளவில்லை.
"தேவ் ப்ளிஸ் நீ யார்னு சொன்னாத்தா எனக்கு வசதியா இருக்கும். "
"என்ன வசதி. "
" போய்க் காதல கலச்சி விட்டுறதுக்கு தா. ஹாஹ்ஹா." எனச் சிரிக்க
"அடிப்பாவி. ஏண்டி இப்படியொரு எண்ணம். "
" நாந்தா சொன்னேனே. தேவ்வ நா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு. அவனுக்கு ஆள் இருந்தா எப்படி நா அவன காதலிக்கிறது கல்யாணம் பண்றது. "
" லூசு. முத்திப்போச்சின்னு நினைக்கிறேன். உங்கூட சேர்ந்தா நானும் உன்ன மாறியே மாறிடுவேன். எனக்கு வேண்டாம்ப்பா. " என்றபடி திரும்பிக் கொள்ள, தன்யா தேவ்வை பார்த்துப் பாடத் தொடங்கினாள்.
"நீ ஒன்று சொல்லடா கண்ணா
இல்லை நின்று கொல்லடா கண்ணா
எந்தன் வாழ்க்கையே
உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே
உயிா் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய். " எனக் கர்ண கொடுறமாகப் பாட, புவனாவும் தங்கையைச் சமாதானம் செய்ய வந்த தாரிகாவும் காதை இழுத்து மூடிக் கொண்டனர். அவளின் குரல் செவிப்பறையில் நுழையக் கூடாதென.
ஆனால் இந்தத் தேவ் மட்டும் காதை மூடவில்லை, மாறாக லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்து அவளின் அருகில் வந்தான். புருவங்களை முடிச்சிட்டு எதையோ சிந்தித்தபடி மெதுவாக நடந்து வர, தன்யாவிற்கு குஷியாகிப் போனது.
'இவெ எதுக்கு ஸ்லோ மோஷன்ல எந்திரிச்சி ஃபீல் பண்ணிட்டே வாறான்?. பாராட்டப் போறானா!. இந்தக் குரலையா?. ' தாரிகா மைண்ட் வாய்ஸ்.
பக்கத்தில் தான் வந்தான் ஆனா பாராட்ட இல்லை.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..