அத்தியாயம்: 26
தன்யாவின் கொடுற குரலைக் கேட்டு நடந்து வந்த தேவ்வின் முகம் என்னவென்று கணிக்க முடியாத படி இருந்தது.
குழப்பமா, யோசனையா, கோபமா. என்வென்று சரியாக கூற முடியாது.
'ஏம்பா இப்படியொரு மூஞ்சில ஓராயிரம் உணர்ச்சி கொண்டு வந்து வச்சிருக்க?. என்னாச்சி?. '
" தன்யா, இப்ப நீ பாடுனியே. அது என்ன.?"
" பாட்டு. "
'பா...ட்…டா.!! ' என்பது போல் புவனாவும் தாரிகாவும் ரியாக்ஷன் தர,
"ம்ச்… அது தெரியுது. என்ன பாட்டு?. பாப் சாங்கா?. ஆல்பம் சாங்கா?. என்ன கேட்டகரின்னு கேட்டேன். "
"இது சினிமா பாட்டு. ஏஆர் ரகுமான் மியூசிக்ல. வைரமுத்து எழுதி, எங்க தல அஜித் செம்மையா பெர்ஃபாம் பண்ணிருப்பாரு.
சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா. " என மீண்டும் பாட, புவனா அவளின் வாயை மூடி. 'ஆத்தா நீ தயவு செய்து வாய தொறக்காத ஆத்தா. ' என்பது போல் கெஞ்சினாள்.
"சினிமா பாட்டா!!. " என மீண்டும் கேட்டான் தேவ்.
"ம்… தமிழ் சினிமா பாட்டு தா. நம்பலன்னா இத கேளு. " எனத் தன் ஃபோனில் அந்த பாடலைக் காட்சிகளாக ஒலிபரப்பு செய்ய, தேவ் அதை வாங்கி பார்த்தான். பின் தன் ஃபோனில் இருந்த சில மெஸ்ஏஜ்களை அவளுக்குக் காட்டி,
"இந்த வேட்ஸ் எல்லாம் சினிமா பாட்டா.? என்ன சாங்?. " என்க, அதை வாங்கி படித்துப் பார்த்தவளுக்கு சில பாடல் வரிகள் எதிலிருந்து எடுக்கப்பட்டது எனத் தெரிய, அதை அவனிடம் கூறினான்.
மேற்கொண்டு தேவ்விடம் அந்த பாட்டுக்குப் பாட்டு போட்டி நடந்தியது யார் எனவும், அவர்களின் உரையாடல்கள் என்னவாக இருக்கும் எனவும் பார்க்க எண்ணி, விரலால் திரையை அசைக்க, தேவ் ஃபோனை பிடுங்கிக் கொண்டான். பின்,
"உனக்கு ஒரு க்ரீன் சாட் அனுப்புறேன். அதுல இருக்குறது என்னென்ன பாட்டுட்டு எனக்குக் கண்டு பிடிச்சி அனுப்பு. " என்று விட்டுத் தன் அலுவலகம் அறைக்கு வேகவேகமாகச் சென்றான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, வேகமாக அவனின் அலுவலக அறையின் கதவில் காதை வைத்தனர். அவன் யாருடன் என்ன பேசுகிறான் என்பதை அறிய ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றனர்.
உள்ளே தேவ் கோபமாகக் குறுக்கும் நெடுக்கும்மாக நடந்து கொண்டிருந்தான். பின் தன் மொபைலை எடுத்து யாருக்கோ மெஸ்ஏஜ் டைப் செய்தான். ஆங்கிலத்தில். யாருக்கு என்றால். நம்ம வாசுவிற்கு தான்.
ஒரு வாரமாகி விட்டது அவளை பார்த்துப் பேசி. அன்று ப்ளே க்ரவுண்டில் டா போட்டுப் பேசியதால் சண்டை போட்டு விட்டுக் கோபமாக இருந்தான் தேவ்.
நீ வா போன்னு ஒருமையில் கூப்பிட்டால் கூட ஓகே தா. ஆனா மரியாதை இல்லாமல் டா டி போட்டுப் பேசுவது அவனுக்குப் பிடிக்காத ஒன்று. சிறு வயதில் தாரிகா அவனை வேண்டுமென்றே டா போட்டு அழைக்க, பதிலுக்கு அவளின் தோளில் கடித்தும் வைத்தான். இப்போது வரை அந்த வடு அவளின் தோளில் உண்டு. ஆனால் வாசுவை கடிக்க முடியாது. அதனால் தான் உண்டான கோபம் இன்றும் குறையவே இல்லை.
இப்போதும் அவன் ஆசையாக மெஸ்ஏஜ் செய்யவில்லை. கோபமாகத் தான் செய்துள்ளான்.
‘சரி வாங்க அது என்னன்னு பாப்போம்.’
"அந்தப் பக்கம் கவிதாயினி மேடம் இருக்காங்களா. " என அனுப்ப, என்ன ஒரு ஆச்சரியம், உடனே ப்ளூ டிக் விழுந்தது. அவனின் மெசேஜ்ஜிற்காகக் காத்திருந்திருப்பாள் போலும். ஆனா பதில் தான் வரவில்லை.
"மிஸ் வாசவி கவிதாயினி நம்பர் தான இது. நா கவிதாயினிட்ட பேசணும். " என ஆங்கிலத்தில் டைப் செய்ய,
" இப்ப என்ன வேணும் உனக்கு. எதுக்காக மெஸ்ஏஜ் பண்ண. " எனத் தமிழில் டைப் செய்து அனுப்பினாள் வாசு.
பாவம் அதைப் படிக்க முடியாமல் வழக்கம்போல் கூகுளின் உதவியை நாட, ஒரு வாய்ஸ் நோட் வந்தது.
" நா அனுப்புனத உன்னால கூகுள் உதவி இல்லாம படிக்க முடியுமா?. " எனச் சவால் விடுவது போல் பேசி அனுப்பி இருந்தாள் அவள்.
" ஏய்! அது ஒரு பொண்ணோட வாய்ஸ்!. நீ கேட்டியா பூவீ?. " தாரிகா
" ஆமா! ஆமா தாரி. நாங்கூட எனக்கு மட்டும் தா பொண்ணு வாய்ஸ் கேக்குதோன்னு பயந்துட்டேன். மன பிரம்மையா இருக்குமோன்னு ஒரு செக்கேண்ட் நினைச்சேன். " புவனா.
"ஷூ... அமைதியா இருங்க. என்ன பேசுறாங்கன்னே கேக்க மாட்டேங்கிது. " தன்யா சொல்ல மூவரும் ஒட்டு கேட்கும் பொஷிசனில் அமர்ந்து கொண்டனர்.
" நீ சொல்றத நா செய்ய வேண்டிய அவசியமே எனக்கு இல்ல. நீயே ஒரு ஃபார்டு… சீட்டர்… நீ எனக்கு அனுப்புன எல்லாமே சினிமா பாட்டு. எதுவுமே கவித கிடையாது. யாரோ ஒருத்தர் எழுதுனத நீயா எழுதுன மாறி எனக்கு அனுப்பி, என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரெய் பண்ணிருக்க. I didn't expect from you. இதுல கவிதாயினி அவதார வேற. ச்சீ… நீ இவ்ளோ தூரம் கீழ இறங்கிருப்பன்னு நா நினைச்சே பாக்க. அந்தச் சின்ன வயசுலயை எவ்ளோ திறம உனக்கு. இடியட். " இன்னும் நிறையாவே கண்ணாபின்னான்னு பேசி அடுத்தடுத்து வாய்ஸ் நோட் அனுப்ப,
அந்தப் பக்கம் இருந்து ஃபோன் வந்தது. வாசு தான். சிறு புருவ முடிச்சுடன் அதை அட்டென் செய்து காதில் வைத்தவன், ஹலோ என்று சொல்லும் முன்னரே வாசு பொறியத் தொடங்கினாள்.
" யார ஃப்ராடு சீட்டர்னு சொல்ற. நீ தா அது. நா இல்ல. நா உன்ன பெரிய இன்டலிஜென்டுன்னு நினைச்சேன். ஆனா சரியான டிபூப் லைட். ரொம்ப ரொம்ப ரொம்ப லேட்டா எரியுற. எப்பையோ அனுப்புன மெஸ்ஏஜ். அதுக்கு இத்தன வர்ஷம் கழிச்சி ரிப்ளே தர்ற. ஸாரி இப்பதா அது என்னன்னு கண்டு பிடிக்கிற.
அது என்னன்னு எங்கிட்ட கேட்டா கூட நானே சொல்லிருப்பேன். முதல்ல என்னோட ஃபோன் நம்பர யாரு உனக்குத் தந்ததா. எப்படி உனக்குக் கிடைச்சது. நீ அன்னைக்கி என்னோட நம்பர கண்டுபிடிச்சிட்டன்னு சொல்லித்தா பழைய நம்பர மாத்திட்டு புது நம்பர வாங்குனேன். ஒரு வாரம் ஆகுது. அதுக்குள்ள உனக்கு என்னோட நம்பர் எப்படி கிடைச்சது. யாரு குடுத்தா. " எனப் படபடக்க,
"யாரும் தரல. இப்ப நீ வேல பாத்துட்டு இருக்குறது என்னோட ஹோட்டல்ல. I am also one of the owner of that hotel. மறந்துட்டியா. என்னோட ஸ்டாஃப்போட ஃபோன் நம்பர நா யார கேட்டு எடுக்கணும். "
"அடப்பாவி ஒரு பொறுப்புள்ள முதலாளியா நீ. ஒரு பையனோட ஃபோன் நம்பர எடுத்ததுக்கு தா என்ன பிரின்ஸ்ஸி கிட்ட போட்டுக் குடுத்த. இப்ப வயசு பொண்ணோட ஃபோன் நம்பர அவளுக்கே தெரியாம எடுத்ததுக்கு உன்ன நா யார்கிட்ட போட்டுக் குடுக்க. உங்கம்மாட்டையா இல்ல உங்கப்பாட்டையா. " என அவனின் கோவத்தை தூண்டி விட,
" ஏய்... ஏய்… வாய மூடுடி. ஒரு ஃப்ராடு நீ. நீ எல்லாம் வந்து என்ன கேலி பண்ற. நா ஒன்னும் உன்ன மாறி எவனோ எழுதன கவிதய நானே எழுதுன மாறி அனுப்பல. அதுலையும் எங்கெல்லாம் டி வருதோ அதெல்லாம் மாத்தி டா போட்டு, பெண்ணே ங்கிறத கண்ணேன்னு மாத்தி, யப்பா!. என்ன ஒரு ஃப்ராடு தனம்!. " என்ற அவனின் கோபத்தில் ஒரு நியாயம் உள்ளது.
அவனுக்கு அவள் அனுப்பிய அனைத்தும் கவிதைகள் தான் என்று நம்பிக்கொண்டு இருந்தான். சினிமா பாடல்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அவள் எங்கெல்லாம் பெண்ணை வர்ணித்துப் பெண்பாலில் வரிகள் வந்ததோ அதை எல்லாம் ஆண்பாலாக மாற்றி, தானே எழுதியது போல் அனுப்பி இருந்தாள். அவள் அனுப்பிய அத்தனை வரிகளும் அவனுக்கு மனப்பாடம்.
ஏதோ அவளே உருகி உருகி தன்னை நினைத்து வர்ணித்துக் கவிதை எழுதியதாக நினைத்து விட்டான் ருத்ரதேவ். பாவம்… அது எல்லாம் பொய் என்று தெரியும்போது கோபம் வருவது சகஜம் தானே.
"இதோ பாரு ஃப்ராடு கீடுன்னு சொன்ன அவ்ளோ தா. நா ஒன்னும் உன்ன மாறிக் கூகுளையே நம்மி உக்காந்திருக்கல. எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் வரியத்தா உனக்கு அனுப்பினேன். அதுவும் என்னோட கையாலயே டைப் பண்ணி தா அனுப்புனேன். அப்ப அந்த வரிக்கி நாந்தா சொந்தக்காரி. நானும் கவிதாயினி தா. நா ஒன்னும் ஃப்ராடு வேல பாக்கல. உன்ன மாறி. "
"ஏய்! யாரடி ஃப்ராடுன்னு சொன்ன?. "
"ஹாங் நீ தா. நா என்னப்பத்தி எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னேன். என்னோட பாய் ஃப்ரெண்ட்டுக்கான கண்டிஷனையும் சொன்னேன். எல்லாத்தையும் பாத்துட்டு படிச்சிட்டு உனக்குத் தமிழ் பேச மட்டும் தா தெரியுங்கிறத எங்கிட்ட சொல்லாம மறச்சிட்ட. அப்படி நீ சொல்லாததுனால எனக்குத் தா லாஸ். " என்க
பதிலுக்கு அவனும் ஒன்று சொல்ல. இருவரும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டே அரைமணி நேரம் கடந்து விட்டது.
இருவருக்குமே ஃபோனை துண்டிக்கும் எண்ணமில்லை. சண்டை போட்டுக் கொண்டேயானாலும் பேசிக் கொண்டே இருந்தனர். அந்தக் குரல் இருவருக்கும் ஒரு புதுவித உணர்வைத் தந்தது. முதல் முறை ஃபோனில் பேசிக் கொள்கின்றனர்.
ஒரு மணி நேரத்தை நெருங்க உள்ளதை அவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ ஃபோனின் பேட்டரி உணர்ந்ததால், தான் இறக்க உள்ளதை வைப்ரேட் மூலமாகவும் ஹீட் மூலமாகவும் உணர்த்த, ஃபோனை சார்ஜில் போட்டு விட்டு கோபமாகச் சென்றான். எங்கு என்றால் நீச்சல் குளத்திற்கு.
அதில் சென்று குதித்தால் தான் அவனின் மனம் குளிரும். ஆனால் இம்முறை கிளர்ந்து கிடக்கும் தன் மனதை அடக்க நீரில் பிரவேசித்துள்ளான். காதுகளில் அவளின் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டே இருந்தது.
அவன் சென்றதும் அவனை இத்தனை நேரம் வேவு பார்த்தபடி நின்றிருந்த மூவரும் சத்தம் இல்லாமல் வந்து அவனின் ஃபோனை பார்க்க, அது லாக் செய்யப்பட்டிருந்தது.
"உனக்கு லாக் பேட்டன் தெரியுமா?. " தன்யா புவனாவிடம்.
"எனக்கு எப்படி தெரியும்.! " எனக் கையை விரிக்க,
"அவனுக்குத் தங்கச்சியா இத்தன வர்ஷமா இருக்குற உனக்குத் தெரியாதா!. " தன்யா.
" நீயும் தா அவருக்கு ஃப்ரெண்ட்டா பல வர்ஷமா குப்ப கொட்டுற. உனக்குத் தெரியாதா?. " புவனா.
" ம்ச்... சண்ட போடாதிங்க. எனக்குத் தெரிஞ்சி அவனோட கை ரேக தா லாக் பேட்டனா இருக்கும்னு நினைக்கிறேன். நம்மாளா ஓப்பன் பண்ண முடியாது. "
" அப்றம் எப்படி அவெ யார் கூடப் பேசுனான்னு கண்டு பிடிக்கிறது. உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா. " என்க, மற்ற இருவரும் உதட்டைப் பிதுக்கினர் தெரியாது என்று.
" யாருக்கும் தெரியாதா!. ச்ச… நிச்சயம் அது தா அவெ லவ் பண்ற பொண்ணா இருக்கும். எப்படியாது கண்டுபிடிக்கணும். " தன்யா. அவளுக்குத் தேவ் காதலிக்கும் பெண்ணை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது.
"நிஜமா அண்ணே லவ் பண்ணுதுன்னு தா சொல்றியா!0. " புவனா சந்தேகமாக. ஏன்னா தேவ்க்கு காதல் மீது ஈடுபாடு கிடையாது. அவனும் செய்யமாட்டான், செய்கிறேன் என்று கூறி வருபவர்களையும் நெருங்க விடமாட்டான். அதான் கேட்கிறாள்.
" இதுவரைக்கும் நீ அவெ யாரையாது டி போட்டுப் பேசி கேட்டுருக்கியா!. " தாரிகா சொல்லப் புவனா இல்லை எனத் தலையசைத்தாள்.
" இப்ப அவெ பேசுனத கேட்டதான. அப்ப அது. "
"நிச்சயம் அண்ணி தா. ஹே… " என சந்தோஷமாகச் சொல்லி செல்ல, தாரிகாவிற்கு சந்தோசம். தன்யா தப்பிச்சிட்டால்ல.
ஆனால் தன்யாவிற்கு தா அப்படி இல்லை. 'நீங்கக் கவலயே படாதிங்க நா இருக்கேன். ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சேரவே மாட்டாங்க. சேரவும் நா விடமாட்டேன். ஏதாவது செஞ்சி யாரு அதுன்னு கண்டு பிடிச்சி பிரிச்சி விட்டுட வேண்டியது தான்.' என வில்லத்தனமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..