அத்தியாயம்: 27
அது சாதாரணமாகப் பல அடுக்குகளைக் கொண்ட ஹோட்டல் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் தூரத்திலிருந்து பார்த்தால் அது சற்று பெரிய பங்களா என்று தான் தோன்றும். மூன்று அடுக்குகள் தான். ஆனால் அது பரந்து விரிந்து இருந்தது.
முழு மொட்டை மாடியாக அல்லாது அங்காங்கே கூம்பு வடிவ கூரைகளைக் கொண்ட அந்த ஹோட்டல் L வடிவில் இருந்த சிறிய விடுதி.
கேட்டைத் தாண்டி வரும் நம்மை வரவேற்கவெனச் சாலையில் இரு புறமும் நீரூற்றுடன், சின்ன சின்ன க்ரோட்டன் செடிகளும், ஓங்கி உயரமான சில தென்னை மரங்களும், சீராக வெட்டப் பட்ட புல்லும் அங்கு வளர்க்கப்பட்டிருந்தன. அன்டர் கிரவுண்ட் பார்க்கிங். அதாவது தரைக்கு கீழே சுரங்கம் போன்று அமைத்து வாடிக்கையாளரின் வாகனங்களைப் பாதுகாத்தனர்.
காரை நிறுத்திவிட்டு வரவேற்பறைக்கு சென்றால் நம்மை மெழுகு சிலைபோல் அழகுடைய பெண்கள் உதடுகளில் புன்னகையுடன் வரவேற்பர். மேற்கூரையில் தொங்கிய கண்ணாடி மின் விளக்குகள் அந்த இடத்தை மின்னச் செய்தது. மொத்தம் 60 அறைகள் கொண்ட அதில் ஒற்றை படுக்கை, இரட்டை படுக்கை அறை வீஐபி அறை டீலெக்ஸ் ரூம் என வகைப்படுத்தப்பட்டிருந்தன.
டீலெக்ஸ் மற்றும் வீஐபி அறைகள் மூன்றாவது மாடி. யாரும் தொந்தரவு செய்ய முடியாதபடி தனித்து இருந்தது. இரட்டை படுக்கை அறைகள் இரண்டாவது தளமும், ஒன்றை படுக்கை அறை முதல் தளத்திலும் இருந்தது. தரை தளம் முழுவதும் ஜீம், இன்டோர் சுவிம்மிங் ஃபூல், மசாஜ் சென்டர், சிறிய மீட்டிங் ஹால், பார்ட்டி ஹால் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பார் வசதியுடன் கூடிய ரெஸ்டாரன்ட் எனச் சகலமும் இருந்தன. சில இடங்களில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கட்டுமான பணியாளர்களின் நடமாட்டம் இருந்தது.
தரைதளம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு thanks giving டேக்காகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அது அந்த நாட்டில் கொண்டாடப்படும் நன்றி செலுத்தும் நாள் அல்லது அறுவடை விருந்து என்று கூடச் சொல்லலாம்.
நாளைய இரவு முழுவதும் ஒரு பிரபல பாப் சிங்கரின் இசை நிகழ்ச்சி மற்றும் அந்த நாளுக்கான சிறப்பு உணவுகளுடன் விருந்தும், அந்த ஹோட்டலுக்கு வெளியே இருக்கும் வெட்ட வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டம் நடக்கவிருப்பதால் அந்த ஹோட்டலே பரபரப்புடன் இருந்தது. வெள்ளை உடையில் கருப்பு கலந்த கோர்ட் அணிந்த படி அங்கிருக்கும் ஊழியர்கள் இன்முகத்துடன் தங்களின் பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த ஹோட்டல் அறையில் பணியாளர்களுக்கு என இருக்கும் தனி அறையினுள்ளே கண்ணாடி முன் நின்று, தான் அணிந்து இருக்கும் உடையைச் சரி பார்த்துக்கொண்டிருந்தாள் வாசு. தோளில் தொட்டு தவலும் தன் கலர் பூசிய கூந்தலை அழகாய் ஒற்றை கேச் க்ளிப்பில் அடக்கிக் கொண்டையிட்டாள்.
மேலே வெள்ளை நிற சட்டையும், மை ப்ளூ கலர் கோர்ட்டும் அணிந்து அதே நிற pencil skirt என்று சொல்லப்படும் தொடையை இறுக்கி பிடித்த உடை. அவளின் முட்டியை தொட்ட சீருடையை சரி செய்துகொண்டிருந்தாள் அவள். அவளின் உடையே சொல்லும் அந்த ஹோட்டலில் அவளுக்கான பணியை.
வரும்போது அணிந்திருந்த உடையை பத்திரமாகத் தனக்கென இருக்கும் லாக்கரில் வைத்துப் பூட்டியவள். தன் பணியை செய்யச் சென்றாள் வாசு.
ரிசப்ஷனில் அதன் மேனேஜர் ஜானீத்தன் வந்தார் புன்னகையுடன். வயது சற்று அதிகம் தான், ஆனால் அவரின் சிந்தனைகள் இளமையாகவே இருக்கும். அவரின் ஐடியாவால் தான் அந்த ஹோட்டலே இப்போது மிளிர்கிறது. சக ஊழியர்களின் ஐடியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சிறந்த மனிதர்.
"குட் மார்னிங் எவ்ரிபடி. " எனச் சந்தோஷமாகக் கத்தினார் தன் பணியாளர்களைப் பார்த்து.
" குட் மார்னிங் ஜான். " என்றனர் ஒரு சேர.
" நாளைக்கி நமக்கான பிக் டே. ஏன்னு சொல்லுங்க பாப்போம். " என அனைவரையும் பார்த்தும் கேட்க,
" ஜான் நீ வேலைய விட்டுடுட்டு போகப்போறியா. " எனக் குறும்புடன் கேட்டான் மேக்ஸ்.
"வாவ்! தட் வாஸ் குட்."
"அந்த நல்ல நாள நா பியர் பாட்டிலோட கொண்டாடுவேன். " ஒருவர்.
" ஜான் நீ போய்ட்டனா அடுத்த மேனேஜர் யாரு?. " இன்னொருவர்.
" ஓ! அப்ப அந்தப் போஸ்ட்டுக்கு நாந்தா சரியான ஆளு. " நான்ஸி.
"ஹேய் அசிஸ்டன்ட் மேனேஜர்ன்னு ஒரு ஆள் புதுசா வந்து சேந்திருக்கே நான்ஸி. மேனேஜர் இல்லன்னா அசிஸ்டன்ட் மேனேஜர் தா அடுத்த மேனேஜர். ஏற்கனவே இருக்குற ரெண்டு பேர சமாளிச்சிடலாம். ஆனா புதுசா வந்தவள என்ன பண்ண போற.? " மேக்ஸ்.
"அவளுக்குக் காச குடுத்து வெளில தொரத்தி விட வேண்டியது தா. இல்லன்னா அவளுக்குப் புரியுற மாறிப் பக்குவமா சொல்லி போகச் சொல்லிடுவோம்." என நான்ஸி ஐடியா கொடுக்க மேக்ஸ்ஸும் ஜானும் தலையில் அடித்துக் கொண்டனர்.
" நா இன்னமும் வேலைல தா இருக்கேன். அத மறந்துட்டு பேசுறிங்க எல்லாரும். இப்ப மட்டுமில்ல இன்னும் பத்து வர்ஷத்துக்கு நாந்தா உங்க மேனேஜர் அதுல எந்த மாற்றமும் இல்ல. " ஜான் உறுதியாக.
"ஹோஓஓஓ!!. அப்ப டெத் பாடி ஆனாலும் பதவிய விட்டுக் கொடுக்க மாட்ட. " ஒரு ஊழியர்.
"ஜான் ஆவியானாலும் மேனேஜர் போஸ்ட் அவருக்குத் தான். சேர்ல ஆவியா உக்காந்து அதிகாரம் பண்ணுவாரு. சரியா ஜான். " எனக் கேலி செய்ய,
" ஐய்யோ.! யாரும் நா சொல்லப்போறத கேக்குற ஐடியால இல்லயா. நா போய் வேலைய பாக்குறேன். அது தலைக்கி மேல இருக்கு. " எனப் புலம்பியபடி திரும்ப,
"ஜான் நீங்க ஏ வேல பாக்குறிங்க. உங்களுக்கு அசிஸ்ட் பண்ணத்தான ஒன்னுக்கு மூணு அசிஸ்டன்ட் அப்பாயிண்ட் பண்ணிருக்கு. எங்க அவ. புதுவரவு. இன்னும் டியூட்டிக்கு வந்து சேரல போலயே. கண்ணாடி முன்னாடி நிக்கவே அவளுக்கு நேரம் போதாது. அவள போய் அசிஸ்டன்ட் மேனேஜரா போட்டுட்டு. ரொம்ப பொறுப்பானவ தா. " என நான்ஸி மட்டம் தட்டி பேச,
" தேவையான அளவுக்குப் பொறுப்பு ஸ்டாக் இருக்கு நான்ஸி. உனக்கு எதுவும் வேணுமா.? " என நக்கலாகக் கேட்டபடி வாசு வர, அவளை முறைத்தாள் நான்ஸி.
" எத பிக் டேன்னு சொன்னிங்க ஜான்." என்றபடி நான்ஸியின் பார்வைக்கு பதில் சொல்லிச் சொல்லும் விதமாய் முறைத்து பார்த்துக் கொண்டே ஜானிடம் கேட்டாள் வாசு. அந்த ஹோட்டலோட அசிஸ்டன்ட் மேனேஜர்.
நம் க்ரிஷ்ஷின் சிபாரிசால் நான்ஸிக்கு கிடைக்க வேண்டிய பதவி நம் வாசுவிற்கு தரப்பட்டுள்ளது. இது நான்ஸியின் எண்ணம்.
'ஆறு வர்ஷம் அனுபவம் இருக்குற என்ன விட்டுட்டு ரெக்கமெண்ட்டேஷன்ல வந்த அவள அசிஸ்டன்ட் மேனேஜரா மாத்தி அழகு பாத்திருக்காங்க. ' என வாசுவின் மீது வன்மத்தோடு இருக்கிறாள்.
அவள் சொல்வது போல் வேலை வேண்டுமானால் சிபாரிசால் வந்திருக்கலாம். ஆனால் பதவி வாசுவின் திறமைக்குக் கிடைத்தது. பணியின்போது அவள் காட்டும் பொறுமை, நிதானம், சிறு காகிதத்தைக் கூட அழகாய் மடித்து சிறு சிறு வடிவங்களாக மாற்றும் அவளின் திறமை, காய்கறிகளைக் கொண்டு பல வடிவங்களைச் செதுக்கும் அவளின் கலையுணர்வு, அறையை ஒழுங்கு படுத்தி புதியது போல் உணர வைக்கும் அவளின் நேர்த்தி. இவை எல்லாம் கணக்கில் கொண்டு தரப்பட்ட பதவி இது.
நான்ஸியின் முறைப்பிற்கான காரணம், வாசுவின் திறமைமீது இருக்கும் பொறாமையும் தான். வேலைக்குச் சேர்ந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது. வாசு ஏதாவது தப்பு செய்வாள் அவளைத் துரத்தி விடலாம் என்று கண்ணில் பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேட, கண்டுதான் பிடிக்க முடியவில்லை.
ஏளனமாக மட்டம் தட்டி பேசினாலும் எதிர்த்து வாயாடிச் சண்டை போடாது பொறுமையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நான்ஸிக்கே திருப்பித் தருவாள். அனைத்தையும் கையாலும் அவளின் பணிவின் மீது காண்டு நான்ஸிக்கு.
அது போதாதென்று அந்த ஹோட்டலின் உரிமையாளர் பீட்டரின் மனைவி ஒலிவியாவிற்கு வாசு நெருக்கம். ஜோஹிதாவின் மகள் என்பதால் அவளுக்கு எனச் சில விசேஷ சலுகைகளும் கிடைத்தது என்பாள் நான்ஸி.
அது உண்மை அல்ல. தேவ் தான் வாசுவிற்கு இந்தப் பதவி வரக் காரணம். தன் மனம் கவர்ந்தவள் என்பதற்காக அவன் தரவில்லை. அவளின் திறமைக்குக் கிடைத்த வெகுமதி. நம் ருத்ரதேவ் தொழில் விசயத்துல கரார் பேர்வழி. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவே மாட்டான்.
அவை எல்லாம் தெரியாது ஒரு வித குரோதத்தை வாசுவிடம் உண்டாக்கி கொண்டு முறைக்கிறாள் நான்ஸி. அவளை அலட்சிய பார்வை பார்த்தபடி வாசு ஜானிற்கு காலை வணக்கம் வைக்க,
" குட் மார்னிங் வாசு. அரேஜ்மெண்ட் எல்லாத்தையும் சரி பாத்துட்டியா. "
" எஸ் ஜான். எல்லாம் பக்கா. " வாசு எனத் தன் இரு கட்டை விரலை உயர்த்தி காட்டி புன்னகையுடன் கூறினாள் வாசு.
" ஜான் ஒவ்வொரு வர்ஷமும் கொண்டாடுர ஈவென்ட் தா thanksgiving day. அத எதுக்காகப் பிக் டேன்னு சொல்லணும். " மேக்ஸ்.
"நாளைக்கான நாள் நமக்கு ரொம்ப முக்கியமான நாள். கொண்டாடப் படவேண்டிய நாளுன்னு கூடச் சொல்லலாம். " என்றபடி வந்தார் ஒலிவியா.
அனைவரும் அவளை மரியாதையுடன் வரவேற்க. வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டார். எல்லா ஊழியர்களும் ஏன் என்ற குழப்பத்துடன் அவரைச் சூழ்ந்து நிற்க,
" ஏன்னா நாளைக்கி இந்த ஹோட்டலோட இன்னோரு முதலாளிய நீங்கப் பாக்க போறிங்க. புது MD. அதுமட்டுமில்ல நம்ம 3 ஸ்டார் ஹோட்டலிருந்த 5 ஸ்டாருங்கிற பெரிய முன்னேற்றத்த பாத்திருக்கு. அதுக்கான லீகல் அப்ரூவ் நாளைக்கி தா நம்ம கைக்கு வந்து சேரப்போது. அத்தோட முடியல. இனி உங்களோட சேலரியும் இங்க்ரீஸ் ஆகப் போது. அப்ப அந்த நாள. " என வார்த்தையை முடிக்காமல் எழுந்து நின்று அனைவரின் சந்தோஷ முகத்தைப் பார்க்க,
"நாம கொண்டாடியே ஆகணும். ஹோ. " என அனைவரும் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.
ஹோட்டல் நிர்வாகம் கை மாறியபோது அனைவருக்கும் சிறு பயம். புதிய முதலாளி ஆட் குறைப்பு செய்து விரட்டி விட்டு விடுவாரோ என்பது தான் அது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே பெரிய சந்தோஷம். இதில் அந்தப் புண்ணியவானை நேரில் பார்ப்பது அதைவிட சந்தோஷம். சம்பளம் அதிகமாகக் கிடைக்கப் போவது அதைவிட அதைவிட பெரிய சந்தோஷம்.
"நாளைக்கான பார்ட்டி, கெஸ்ட்டுக்கு மட்டுமில்ல. உங்களுக்கும் தா. சோ என்ஜாய். " என்றவர் ஜானையும் வாசுவையும் தனியாக அழைத்துச் சென்றார்.
" ஜான் நாளைக்கி எந்த விதத்துலையும் எதுவும் சொதப்பிட கூடாது. மிஸ்டர் சிவ்ராமோட குடும்பத்த நல்ல முறைல நாம கவனிக்கணும். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தா பொறுப்பு. வாசு. "
"சொல்லுங்க ஆன்டி. "
" அவங்க வந்து தங்கப்போறது நாலு நாள் தா. அந்த நாள் முழுக்க வீஐபி சூட்ட ஏற்பாடு பண்ணி நல்ல படியாக அவங்கள பாத்துக்கிறது உன்னோட பொறுப்பு. சாப்பாட்டு பெனுலாம் நல்ல தரத்துல வித்தியாசமா அவங்களுக்கு பிடிச்ச டிஸ்ஸஸ்லாம் ப்ரிப்பர் பண்ணு. அப்றம் ரூம்மோட இன்டீரியர முழுசா சேன்ஜ் பண்ணிடு. உனக்கு எது சரின்னு படுதோ அத பண்ணு. ஜான் நீங்க ஈவென்ட்டுக்கான மத்த ஏற்பாட்ட பாத்துக்கங்க. " என்க இருவரும் தலையசைத்துவிட்டு வந்தனர்.
ஜான் வாசுவை சூட் ரூமின் நிலையைப் பார்த்து வரச் சொல்ல, வாசு குதுகலத்துடன் சென்றாள். ஒலிவியா, சிவ்ராம் குடும்பம் என்று மூன்று சூட் ரூமை ஏற்பாடு செய்யச் சொன்னதால் வருவது ருத்ரா மட்டுமல்ல க்ரிஷ்ஷையும் தாரிகாவையும் என எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.
அன்று ஃபோனில் சண்டை போட்டபின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மறப்போம் மன்னிப்போம் என்பது போல் அவனுடன் சண்டையிட்டதை மறந்து, தமிழ் தெரிந்து வைத்திருக்காத அவனின் தவறை மன்னித்து, அவனை நேரில் காண மனம் துடித்தது.
அவனுடன் கழியப் போகும் தன் பொன்னான நேரத்தை நினைத்துப் பார்த்து இதயம் படபடக்கத் தொடங்கியது.
'வர்றவெ சண்ட போட்டா சண்ட போட்டுக்க வேண்டியது தா. ஒருவேள ரொமான்ஸ் பண்ண. அதையும் அனுபவிச்சிக்க வேண்டியது தா. மொத்தத்துல அவெ என்ன பண்ணாலும் சரிதா. எதுவும் பண்ணாம மட்டும் இருந்திட கூடாது. ' என வேண்டிக் கொண்டாள்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..