முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 100


 

அத்தியாயம்: 100


இழந்தது என்பது


சிலருக்கு வார்த்தை...


சிலருக்கு வாழ்க்கை…


இது ஜோஹிதாவிற்கு பொருந்தும். இழந்து விட்டாள் கார்த்திக்கை முழுதாக… மொத்தமாக இழந்து விட்டாள்.


“இல்லை. இழக்க மாட்டேன். மாட்டேன்.” டங்… டங் என பூமி அதிரும் படி கோபமாக ஆங்காரமாக ஆத்திரமாக நடந்து வந்தாள் ஜோஹிதா. பின்னாலேயே விகாஸ் ஓடி வர,


" என்னாச்சி விகாஸ்.‌ அந்தப் பையன பாத்திங்களா? " என ஜோஹிதாவின் தந்தை கேட்க,


"பாத்தோம் சித்தப்பா. ஆனா... " எனப் புன்னகையுடன் இழுத்தவனை ஜோஹிதா திரும்பி பார்த்து முறைத்தாள்.


"ஆனா என்ன ஆனா... நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. போங்க... போய் அவெங்கிட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.. சீக்கிரம். " என உச்ச ஸ்வனத்தில் கத்த,


"பைத்தியம் மாதிரிப் பேசாத ஜோஹிதா. அவெ உன்னை மறந்திட்டு அடுத்த பொண்ண தேடி போய்ட்டான். அவனப் போய்க் கல்யாணம் ‌பண்ணிக்கிறேன்னு சொல்ற. பைத்தியமா நீ?."


"ஆமா பைத்தியம் தான். எனக்குப் பைத்தியம். கார்த்திக் மேல பைத்தியம். நான் அவனக் காதலிக்கிறது தெரிஞ்சி நீங்க எல்லாருமா சேந்து எங்களப் பிரிச்சி விட்டுடீங்க. உக்காந்து… உக்காந்து… பேசி… பேசி… உங்க போதனைய என்னோட மூளைக்குள்ள அனுப்பி, என்னையும் அவனையும் பிரிச்சிட்டிங்க.‌.


எனக்குக் கார்த்திக் வேணும். இப்பவே நான் அவன பாக்கணும். என்னைப் பாத்தா போதும்... நாங்க பேசுனா போதும். அவெ எல்லாத்தையும் விட்டுட்டு எம்பின்னாடியே வந்திடுவான். கூட்டீட்டு வாண்ணா. அவன இங்க கூட்டீட்டு வா. எனக்கு அவெ வேணும். " எனத் தலையை பிடித்துக் கொண்டு கத்தவே ஆரம்பித்து விட்டாள். அவளின் நிலை மற்றவர்களுக்குப் பயத்தை தர, ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர்.


"போ… போ… அவனக் கூட்டீட்டு வா. போ... " என விகாஸ்ஸைப் பிடித்து தள்ளினாள் பைத்திரக்காரி போல்.


"ஜோஹிதா புரிஞ்சிக்க. இப்ப அவெ வேற பொண்ண விரும்புற மாதிரி இருக்கு. எதுக்கு அவெ உனக்கு. வேற நல்ல பையனா பாத்து நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். " எனக் குடும்பமே சேர்ந்து அவளைச் சமாதானம் செய்ய முயல, அனைவரையும் தள்ளிவிட்டு விட்டு அறைக்குள் சென்று கதவடைத்தாள் ஜோஹிதா.


"எனக்குக் கார்த்திக் வேணும். " என மந்திரம் போல் திரும்ப திரும்ப உதடுகளால் உச்சரித்தபடி இருந்தாள்.


கார்த்திக்கின் வார்த்தைகளைக் காட்டிலும் அவன் கண்கள் அவளுக்கு விஷ்வாசி. ‘கடைசியாக இருவரையும் சேர்த்து வைத்து கண்ட போது கூட அந்த கண்களில் காதலைப் பார்க்கவில்லை. ஒரு மாதம் ஒரே மாதத்தில் அவளின் மேல் மையல் கொள்ளும் அளவுக்குக் காதல் எப்படி வந்தது அவனுக்கு? எப்படி வரலாம் அவனுக்கு?


என் கார்த்திக்கின் பைக்கில்... என் கார்த்திக்கை இடையணைத்தபடி எப்படி அவள் வரலாம்? கூடாது. அவன் எனக்கானவன். என்னவன். யாருக்கும் விட்டு தர மாட்டேன் அவனை. என் கார்த்திக். எனக்கு மட்டுமே.’ என்றவளின் ஆங்காரத்திற்குத் துலாம் போட்டனர் வீட்டினர்.


"விகாஸ் எனக்கு எம்பொண்ணு தான் முக்கியம். அதுனால… "


"சித்தப்பா நீங்களுமா!!. " என விகாஸ் தடுத்த போது,


"அந்தப் பொண்ணு யாரு என்னன்னு பாத்து செட்டில்மென்ட் பண்ணி விட்டுடு. இத எனக்காக இல்ல. நம்ம வீட்டு பொண்ணுக்காக செய். கோவத்துல எதாவது செஞ்சிக்கிட்டான்னா அது நம்ம குடும்பத்துக்குத் தான் அவமானம். நம்ம வீட்டு கௌரவமே நம்ம பொண்ணு தான். அதுக்காக செய். " என்றார் அவளின் தந்தை மோகன்.


"ஆனா எனக்கு யாரு என்னன்னு தெரியாதே சித்தப்பா!" என்றவனும் செட்டில்மென்ட் செய்ய தயாராகி விட்டான்.


"நான் காட்டுறேன் அவள.‌ " என்றபடி வந்தது அப்சத்தைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.


அப்சத்திற்கு ஜோதியின் குடும்பத்தை பற்றியும் அதன் சூழ்நிலை பற்றியும் தெரியும். அதை விகாஸ்ஸிடம் சொல்லி கல்லூரியில் முகவரியை வாங்கிக் கொண்டு ஜோஹிதாவின் குடும்பத்தினர் சுப்புவைப் பார்க்கச் சொன்னார்.


" ஐய்யோ... ஐய்யோ... இவ்ளோ நேரம் பணம். எல்லாம் எனக்கா... என் வாழ்நாள்ள இத்தன ரூபா தாள ஒரே நேரத்துல பாத்தது இல்ல. ஏன் கனவுல கூடப் பாத்ததில்ல. இதுல இருபது லட்சம் சரியா இருக்கும்ல. " எனச் சந்தேகமாக கேட்டார் சுப்பு. இரு பெட்டி நிறைய இருந்த பணத்தின் மீது கண்ணை வைத்துக் கொண்டு.


" ம்ச்… எல்லாம் சரியாத்தா இருக்கும். இனி உங்க பொண்ணு அந்தப் பையன பாக்க கூடாது. மீறி பாத்தா

.. " என மிரட்டினான் விகாஸ்.


"எதுக்கு தம்பி பாக்கப்போறா!. நாளைக்கே அவளுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிடுறேன். மாப்பிள்ளையெல்லாம் ரெடியாத்தா இருக்கு. தகவல் சொன்னா இன்னைக்கே கூடக் கட்டிட்டு போக அவரு தயாராத்தா இருக்காரு. " என வாயெல்லாம் பல்லாக சொன்னாள் சுப்பு.


"ம்ச்... நீங்க அவளுக்குக் கல்யாணம் பண்ணுங்க இல்ல கருமாதி பண்ணுங்க. எங்களுக்கு அது தேவையில்ல. ஆனா நாங்க சொன்னது நியாபகம் இருக்கட்டும்.‌" எனப் பணத்தை வைத்து சுப்புவை வாயடைத்து விட்டு சென்றான் விகாஸ்.


வாணி, பணத்தை வாங்கிக் கொண்டாள். கதையை முடித்து விட்டோம் என ஹோஹிதாவிடம் சொல்ல, அவளுக்கு சிறு நிம்மதி. வாணிக்கு வேறு ஒருவருடன் திருமணமாக உள்ளது. அது முடிந்த பின் கார்த்திக்கிடம் பேசி திருமண ஏற்பாடு செய்வதாகக் கூறினர். ஜோஹிதா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கலாம் இல்லை.


" அவன எம்முன்னாடி கூட்டீட்டு வாங்க. அதுவர நான் வெளிய வரமாட்டேன். " என்று விட்டாள்.‌


"ம்மாய்... ஏதும்மா இவ்வளோ பணம். " எனப் பணக் கட்டை முகர்ந்து பார்த்தபடி முரளி கேட்க,


"அதெல்லாம் உனக்கு எதுக்கு? இதக் கொண்டு போய் சாமி படம் போட்ட நம்ம பீரோல வை. நான் இதோ வந்திடுறேன். அடேய் காச ஆட்டையப்போட்டு உள்ள ஊத்திக்காத. நாளைக்கி ராப்பொழுது கல்யாணம். அதுக்கு செலவு செய்ய வேணும். " என்றார் எச்சரிக்கும் குரலில்.


"எது கல்யாணமா? நீ பாத்த ஆளா இவ கல்யாணம் பண்ணிப்பாளா என்ன! மாட்டேன்னு அடம்பிடிச்சா?. "


" மாட்டேன்னு சொல்லுவாளா அவ!!. ம்… இத்தன வர்ஷமா அவளுக்குக் கருண பாத்து சோறு போட்டு பத்திரமா பாத்துக்கிட்டதுக்கு இதக் கூட செய்ய மாட்டாளா அவ!.‌ இல்ல செய்யாமத்தா நான் விட்டிடுவேனா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ போய் அந்த ராஜிய கூட்டீட்டு வந்து அவளுக்கு காவலுக்கு வை. ஓடி கீடி போய்ட போறா.


பத்து சவரன் நக…  ஒரு லட்ச ரூபா ரொக்கம் குடுத்து அந்தப் பெரிய மனுஷன் இவளக் கட்டிக்க கேட்டிருக்கான். அந்தப் பையங்கூட ஓடீட்டான்னா அந்தாளு நம்மல சும்மா விட மாட்டான். நான் போய் நாளைக்கி கல்யாணங்கிறத சொல்லிட்டு வந்திடுறேன். " எனத் தன் கணத்த சரீரத்தைத் தூக்கி கொண்டு சந்தோஷமாக நடந்தார் அவர்.


அவர் சொன்னது போக‌ ஜோஹிதா வீட்டில் இருபது லட்சம் பணம். அது லாபம்  தானே. அவர் ஏற்கனவே வாணியை நகை பணத்திற்காக, தன்னை விட வயதில் மூத்த ஒருவனிடம் விற்று விட்டாள். இப்போது ஜோஹிதா வீட்டினர் வந்து பணம் தரவும் வேகமாக திருமணத்தை‌ முடித்துவிட தீர்மானித்து அந்த கிழவனுக்கு ‌ஃபோனில் தகவல் சொல்ல, அவன் மாப்பிள்ளை ஜோரில் தயாரானான்.


இரவு எப்போதும் போல் பாய் கடை வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது ராஜியும் உடன் வந்தாள். ஏன் எனக் கேட்ட போது.‌ " ஏன் நானும் உங்கூட வந்து உன் வீட்டுல தங்குனாத்தா என்னவாம். தொரத்துற. " எனக் கேட்டவளை ஆச்சர்யமாக பார்த்தாள்‌‌. ஒரு வாரமாக என்ன செய்தாய எங்கு சென்றாய்? எப்படி பொழுது போனது? என எந்தக் கேள்வியையும் கேட்காது இருந்த ராஜியை வித்தியாசமாக பார்த்தபடி வீட்டிற்கு வந்தாள் வாணி.


அங்கு வெள்ளை வேட்டி, சட்டை போட்ட தலை நரைத்த கிழம் அவளின் அருகில் வந்து. " இப்பத்தா வேலை முடிஞ்சதாம்மா.! " எனப் பல் செட்டை காட்டிச் சிரிக்க, வாணிக்கு அருவெறுப்பாக இருந்தது. அந்தக் கிழத்தின் பான்பராக்கு வாயை பார்க்கையில்.


எதுவும் சொல்லாது உள்ளே செல்ல, "அடியே. வீட்டுக்கு வந்தவங்களுக்கு காப்பி தண்ணி குடுக்காம எங்க ஓடி ஒழியிறவ. இதக் கொண்டு போய் குடு. போ... " என டம்ளரை கையில் கொடுத்தார் சுப்பு. அங்கு நடப்பது புரியாது பெரியன்னையின் சொல்படி கேட்டாள்.


இருவரும் பேசி சிரிக்க. அதைப் பார்க்க முடியாது உள்ளே ஓடிச் சென்றாள் வாணி. அவளின் பின்னாலேயே வந்த ராஜி, அவளின் ஃபோனை அவள் அறியாமல் எடுத்து வைத்துக் கொண்டாள்.


"என்ன ராஜி!. இப்பவே உன் ஃப்ரெண்டுக்கு கல்யாண கலை மூஞ்சில வந்திடுச்சி போல. " எனக் கேட்டு முரளி வாணியை அதிர்ச்சி அடையச் செய்தான் என்றால் ராஜி தந்த பதில் அதற்கும் மேலாக இருந்தது.


"வராதா பின்ன!. காட்டிக்கப் போறவன நேர்ல பாத்தா வெட்கம் நாணம் எல்லாம் வந்து தான தீரும். அது தான் நம்ம பண்பாடு. " என்றாள் வாணி


" சரி பாத்துக்க. இதோ வந்திடுறேன். இந்தச் சனியனுக்கு சேலை எடுக்கணும்னு சொல்லுச்சி எங்காத்தா. " என்றவன் செல்லும் முன்,


"அவன விட்டு கையவா ஒடிக்கிற. இனி உன்னால அவன பாக்கவே முடியாது டி… உனக்காகத்தான என்னை அடிச்சான். இனி என்ன பண்றான்னு பாக்குறேன்‌." என்று சொல்லி செல்ல, வாணி அழத் தொடங்கினாள்.


" இப்ப எதுக்கு நீ அழுகுற. கல்யாணம் தான பண்ணி வக்கிறாங்க. சந்தோஷ படு." என ராஜி நெட்டித் தள்ள,


" உண்மைய சொல்லு… இது கல்யாணமா? என்னை விலை பேசி வித்துட்டு இருக்கு அந்தப் பொம்பள. அதப் போய் கல்யாணம்.. அது இதுன்னு சொல்ற. என்னைப் பொத குழில தள்ள பாக்குறாங்க அதுக்கு நான் சந்தோஷ படணுமா!." என அழுகுரலுடன் கேட்டாள்.


" நீ பண்ண காரியம் அப்படி. கண்டவெ கூட ஊர் சுத்தினா. வீட்டு மானத்த காப்பாத்த வேறென்ன செய்யச் சொல்ற. என்ன பாக்குற!. நீ ஒரு வாரமா காலேஜ்ல இல்லன்னு எங்களுக்குத் தெரியும். அந்தக் கார்த்தி கூட எங்கெல்லாம் சுத்திட்டு வந்தன்னும் தெரியும். எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்றமும் உன்னைக் கட்டிக்கிறேன்னு கேட்டு வந்த அவரு ரொம்ப நல்லவரு. " என ராஜி சொல்ல, வாணி விக்கித்து நின்றாள்.


"யாரு அந்தாளா!. அந்தாளுக்குப் பக்கத்துல நிக்கிதே அதோட பேத்தி அதுக்கு கூட என்னை விட வயசு அதிகம். அவனப் போய்‌. " என முகம் மூடி அழுதாள்.


"அதெல்லாம் பிரச்சனையா!. வயசுல பெரியவனா இருக்குற ஆள கட்டிக்கிட்டா அந்த ஆளு உன்னை உள்ளங்கைல வச்சி தாங்குவான்.‌ அந்த மாதிரி நேரத்துலயும் உன்னோட சொல்பேச்சு கேட்டு பக்குவமா நடந்துப்பான். " என அசிங்கமாக பேச, வாணிக்கு அருவெறுப்பில் உடல் பற்றி எரிந்தது.


" ச்சீ… " என அவள் முகம் சுளிப்பதைப் பார்த்த ராஜி,


"என்னடி முகத்த சுழிக்கிற. அவெங்கூட இருந்தேல்ல. அதே மாதிரி இந்தாளு கூடவும் இரு. அவெங்கூட ஊர் சுத்தி நீ பண்ண காரியத்துக்குக் கௌரவமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு சந்தோஷப்படு. இல்லன்னா அந்தம்மா உன்னைச் சிவப்பு விளக்குக்கு வித்தாலும் வித்திடும். இதுவும் உனக்கு ஒரு வகைல விடுதல தான். " என்றாள் வியாக்கியானமாக.


" நீயா ராஜி பேசுற! நான் கார்த்திய காதலிக்கிறேன்னு சொல்லும் போது என்ன சொன்ன!. அடுத்தவ புருஷன எப்படிக் காதலிக்க மனசு வந்ததுன்னு தான கேட்ட.‌ இப்ப இந்தாளக் கட்டிக்க சொல்லி சொல்ற. இத்தன வர்ஷம் பிரம்மச்சாரியாவா இருந்தான். நீ எப்பருந்து ராஜி முரளி கூட சேந்த." என நடப்பதை நம்ப முடியாது அழுகையுடன் கோபமாக கேட்க,


"உனக்கு அது தேவையில்ல. நாளைக்கி சாயங்காலம் கல்யாணம். போய் தூங்கி ரெஸ்ட் எடு. எங்கையும் ஓடிடலாம்னு திட்டம் போடாத அப்றம் நீ தான் வருத்த படுவ. " என விரட்ட விக்கித்து போனாள் வாணி. ராஜியின் இந்த திடீர் மாற்றம் அவளுக்குப் புரியவே இல்லை.


என்று ராஜியின் பேச்சை மீறி கார்த்திக்கைக் காண வாணி சென்றாளோ அன்றே ராஜி வாணிக்கு எதிராக திரும்பி விட்டாள். புதிதாக முரளியுடன் காதல் வேறு வந்து‌விட்டதே. காதல் மயக்கத்தில் முரளியின் பேச்சு அனைத்தும் உண்மையாகவே தெரிந்தது ராஜிக்கு. சுப்புவின் பங்களா வீட்டு கனவு இவளுக்கும் வந்து விட்டது போலும்.


வாணி அழுது புலம்பவில்லை. அழுகை மன பாரத்தைக் குறைக்குமே தவிர, பிரச்சனைக்கானத் தீர்வை அது தராது. அது‌மட்டுமல்லாது கார்த்திக்கிற்கு அவள் அழுதால் பிடிக்காது. அடுத்து என்ன செய்வது என யோசித்தவள் ராஜியிடம் இருந்து ராஜி ஃபோனை வாங்கினாள்.‌


"என்ன... அவன்ட்ட பேச போறீயா. ஹிம்... அதெல்லாம் முடியாது. இந்த ஃபோனுக்கு ரிசார்ஜ் பண்ணல. யார்கிட்டையும் பேச முடியாது. " என விறைப்பாய் சொன்னவள், அவளின் அருகில் அமர்ந்து,


" வாணி சொன்னா கேளு. இன்னைக்கி காலைல தான் அந்தப் பொண்ணு ஜோஹிதா வீட்டுல இருந்து வந்து பேசீட்டு போயிருக்காங்க. அத்தோட காசும் உங்க பெரியம்மாட்ட குடுத்து, அவன விட்டு விலகி இருக்கச் சொல்லி சொல்லிருக்கானுங்க.‌ அப்படி இல்லன்னா உன்னைக் கொல்ல கூடத் தயங்கமாட்டான் போல அவளோட அண்ணே.


அவனப் பாத்ததுக்கு அப்றம் தான் உங்க பெரியம்மா பாத்திருக்கிற அந்தாள கட்டிக்கிட்டா நீ உயிரோடயாது இருப்பன்னு தோனுச்சி. சொன்னா கேளு வாணி. உயிர் ரொம்ப முக்கியம்.‌ " என்றவளை வெறித்து பார்த்தாளே தவிர எதுவும் பேசாது தனக்கு குடுக்கப்பட்ட மாடிப்படிக்கட்டின் அடிக்கு சென்று அமர்ந்து கொட்டாள், ராஜியின் ஃபோனுடன்.


அது ரீசார்ஜிங் கார்டு. எப்பொழுதும் தன்‌ பையிலேயே வைத்திருப்பாள் அந்தப் பத்து ரூபாய் கார்டை. வேகமாக அதை எடுத்து ரீசார்ஜ் செய்தவள் அனைவரும் தூங்கும் நேரம் வரை அமைதியாக இருந்து விடியற்காலையில் கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள்.


நடந்த எதையும் அவனிடம் கூறாது ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க சொன்னாள்.


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  


கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...