முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 101

அத்தியாயம்: 101


கார்த்தி தன் உடமைகள் சிலவற்றை பையில் போட்டுக் கொண்டு உற்சாகமாக ஸ்டேஷனுக்கு வந்தான்.


அவனின் ஜோ தான் வர சொல்லியிருக்கிறாளே. எங்கே செல்வது?. அவளின் குடும்பத்தின் கண்களுக்கு தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவள் விரும்பும் அனைத்தையும் செய்து அவளுடன் முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். என நிறைவேறாத பல கனவுகளுடன் காலை வேளையே வந்து விட்டான்.


அவள் தான் இரவு பத்து மணிக்குள் வருவதாகச் சொன்னாளே!. எந்த நேரம் என்று குறிப்பிடாத போது முன் கூட்டியே அவள் வந்து விட்டால் அதான் மும்பைக்குச் செல்லும் ரயில்கள் எத்தனை உள்ளதோ அனைத்திற்கும் இரு டிக்கெட் களை எடுத்து வைத்துக் கொண்டு நுழைவு வாயிலை பார்த்தபடி அமர்ந்தான். காலை முடிந்தது. மாலை வந்தது.


இன்னும் சற்று நேரத்தில் இருள் வந்துவிடும் என்பதால் ஸ்டேஷனின்  அனைத்து பகுதியிலும் மின்விளக்குகள் போடப்பட்டன.‌ அந்தச் சாயங்கால வேளையிலும் வந்தது.


" கார்த்தி... " என்ற குரல் கேட்க திரும்பி பார்த்தால், வந்தது அப்சத்.


" நீ எங்க மச்சான் இங்க வந்த?" கார்த்தி.


"உன்னைப் பாக்கதா வந்தேன். கலவரம்னு சொன்னானுங்க. அதான் நீ எப்படி இருக்க? என்ன‌‌ பண்ணன்னு பாத்திட்டு போலாம்னு வந்தேன். உன்னோட அத்த வீட்டுக்குப் போனேன். நீ இல்லன்னு சொல்லிட்டாங்க. " என்றவன் கையில் இருந்த பையை பார்த்துவிட்டு,


" சென்னைக்கா கார்த்தி! எந்த ட்ரெயின்?. எத்தனாவது ப்ளாட்பாம்.? எத்தன மணிக்கி வரும்.? " எனச் சந்தோஷமாகவே கேட்டான்.


ஏனெனில் வாணிக்கு இன்று திருமணம் என்பது அவன் அறிந்த செய்தி. கார்த்தி இங்கு இருந்து புறப்பட்டு விட்டால் வாணியின் திருமணத்திற்கு எந்தவித தடையும் இருக்காது. அதற்காகத்தான் அவனைத் தேடி அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு என்றான். அவனின் அத்தை அவன் இல்லை என்று கூறி துரத்தி விட்டார். எங்கே சென்றிருப்பான் என்ற யோசனையுடன் ஸ்டேஷனுக்கு வர, கார்த்திக்கே அங்கு இருந்தான்.


‘இவன்‌ இங்கிருக்கிறான்… அதுவும் டிராவல் பேக்குடன் என்றால் அது சந்தோஷமான விசயம் தானே.‌ இனி அவனை ஜோஹிதாவுடன் சேர்த்து வைத்து விடலாம். ‘ என மகிழ்ந்து போனான். ஆனால் கார்த்திக் அவனிடம் வாணி ஃபோன் செய்ததைக் கூறினான்.


" மும்பைக்குப் போறோம் டா. அங்க கண்டிப்பா எனக்கு ஸ்டார் ஹோட்டல்ல வேலை கிடைக்கும். அப்படிக் கிடைக்கலன்னாலும் பிழைக்க ஆயிரம் வழி இருக்கும். எல்லாத்திலயும் ஜோதி உறுதுணையா கூடவே இருக்கும் போது கஷ்டம் எதுவும் தெரியாது. " என்க, அப்சத்தின் முகம் சிந்தனையில் விழுந்தது.


" ஆமா நீ எப்ப கிளம்புற?. எப்ப வந்த முதல்ல அதச் சொல்லு.?" என்றான் கார்த்திக்.


" நேத்து ராத்திரி தான் வந்தேன். காலைல உன்னைப் பாத்திட்டு ராத்திரி ஏறிடலாம்னு பாத்தேன். நல்ல வேளை உன்னப் பாத்திட்டேன். அப்படியே இங்கயே எதையாது சாப்டிட்டு கிளம்ப வேண்டியது தான். ஆல் தி பெஸ்ட் கார்த்தி. உன்னோட பெஸ்ட்டான லைஃப்புக்காக." எனக் கரம் நீட்ட,


" தேங்க்ஸ் மச்சி. நான் மும்பை போறேங்கிறத யார்கிட்டையும் சொல்லாத. சரியா. " என்றவன் வாயிலை ஆவலாக பார்த்தான்


" கார்த்தி நீ சாப்டியா?"


"இல்ல டா. நான் அந்தப் பக்கம் போன நேரம் பாத்து ஜோதி வந்திட்டா. என்னைக் காணும்னு தேடுவா. பயந்திடுவா. ‌" என்றபோது அவனின் குரலில் அத்தனை கனிவு.


"அப்ப நீ இரு கார்த்தி உனக்கு நான் சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன். " எனச் சொல்லி விட்டு சென்றவன், விகாஸ்ஸிற்கு ஃபோன் செய்தான்.


" ஓ… அந்த *** இப்படிலாம் ப்ளான் போடுறானுங்களா. இப்பவே போய் அந்த பொம்பளைட்ட சொல்லி அவளோட கால துண்டா எடுக்க சொல்றேன். அப்றம் எப்படி ஸ்டேஷனுக்கு வருவா பாக்குறேன். " எனக் கண்டபடி வாணியைத் திட்ட, அப்சத்திற்கு எதுவோ போல் இருந்தது.


"என்னாச்சி? " என ‌ஜோஹிதாவின் குரல் அப்சத்திற்குக் கேட்டது. விகாஸ் இருவரும் ஓடி செல்ல திட்டமிட்டதைச் சொல்ல, தட தட வென ஓடும் சத்தமும்,


"ஜோஹிதா… கதவாதிறம்மா… அம்மாடி ஜோஹிதா… வேண்டாம்மா. ஐய்யோ… ஜோஹிதா. " என வீட்டார் அலறும் சத்தமும் கேட்டது. அடுத்த சில நொடிகளில் ஃபோன் கட்டாக என்னானது என்று தெரியாது போனது அப்சத்திற்கு.


உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கார்த்தியின் அருகில் சென்று அமர்ந்தான் சிந்தனையோடே. சற்று நேரத்தில் எல்லாம் ஜோஹிதாவின் தந்தையும் அண்ணன்களும் ஓடி வருவது தெரிந்தது. 


கார்த்தி, ‘இவர்கள் எப்படி இங்கே?’ என யோசித்தபடியே எழுந்து நிற்க, அவனின் கையைப் பற்றினார் மோகன்.


"தம்பி எம்பொண்ணு உயிர காப்பாத்துப்பா. உன்னால தான் அவளக் காப்பாத்த முடியும். ப்ளிஸ் முடியாதுன்னு சொல்லிடாதப்பா. " என்று இறைஞ்ச, கார்த்திக் புரியாது முழித்தான்.


‘ஜோஹிதா எப்பொழுது இங்கு வந்தாள்? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்று யோசிக்க,


"கார்த்தி, ஜோஹிதா கைய வெட்டிக்கிட்டா. நீ வந்தாத்தா ட்ரீட்மெண்ட் எடுத்துப்பேன்னு சொல்றா. ப்ளீஸ், கார்த்தி எந்தங்கச்சிய காப்பாத்து. " என விகாஸும் தர்ஷனும் கெஞ்சத் தொடங்கினர்.


"என்னாச்சி அவளுக்கு? கைய வெட்டிக்கிட்டாளா! ஏன்? ஹாஸ்பிட்டலுக்கு கூட்டீட்டு போனிங்களா இல்லயா?. இப்ப ஜோஹி எங்க இருக்கா?. " எனப் பதறிப் போனான் கார்த்திக். அவளின் மீதுள்ள அன்பு அப்படியேத்தான் இருந்தது அவனிடத்தே.


"*** ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்கோம். ஆனா உன்னைப் பாக்காம டாக்டர் உட்பட யாரையும் பக்கத்துல விடமாட்டேன்னு அடம்பிடிக்கிறா கார்த்தி. "


" ட்ரீட்மெண்ட எடுத்துக்க மாட்டேன்னு சொல்றா தம்பி. " என மோகன் அழுதார்.


" வாங்க போகலாம். " என எட்டு வைத்த போது அப்சத்திற்கு அத்தனை சந்தோஷம். எங்கே ஜோஹிதாவை வெறுத்திருப்பானோ என்று நினைத்திருந்தவனுக்கு, இல்லை‌ இருவரின் காதல் அப்படியே தான் இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாய் அது அமைந்தது. அவனிடன் பின்னாலேயே செல்ல இருந்த அப்சத்தைத் தடுத்த கார்த்திக்,


"மச்சி… நீ இங்கையே இரு. ஜோதி வந்தான்னா  அவளப் பத்திரமா உங்கூடவே வச்சிரு. நான் பத்து மணிக்குள்ள வந்திடுறேன்.‌‌. நான் வந்து அவளக் கூட்டீட்டு போறேன்னு சொல்லு. வெயிட் பண்ண சொல்லுடா. " என அந்தச் சந்தோஷத்திற்கு வெடி வைத்துவிட்டு போனான் கார்த்திக்.


வாணியின் கெட்ட நேரம். கார்த்தி சென்ற சிறிது நேரத்திலேயே ஸ்டேஷன் வந்து சேர்ந்தாள். வந்தவள் கார்த்திக்கை தேட, கிடைத்தது அப்சத்.


"அப்சத் அண்ணா!! நீங்க எப்படி இங்க? " எனத் திகைப்புடன் கேட்டவளைத் தரதரவென இழுத்துச் சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றினான்.‌


"என்னாச்சிண்ணா?" எனக் கேட்டவளை முறைத்தவன்,


" எப்ப இருந்து உங்க பழக்கம் தனியா பைக் எடுத்திட்டு ஊர் சுத்துற அளவுக்கு முன்னேறுச்சி? " எனக் கோபமாகக் கேட்க,


"அது…. அது.." என எதையும் பகிர முடியாது அவள் திணறினாள்.


"யார்கிட்டையும் சொல்லாம இருந்தா யாருக்கும் தெரியாதுங்கிற‌ நினப்பா. ம்... அவெ ஆம்பள. பத்து பொம்பள பின்னாடி போனாலும் அவன இந்த ஊரு ஒன்னும் சொல்லாது. ஆனா நீ… பொண்ணு தான. உனக்கு எங்க போச்சி புத்தி. அவனும் ஜோஹிதாவும் காதலிச்சது தெரியும் தான. " எனத் திட்ட,


"ஆனா…. அவங்க... சண்ட... போட்டு..." எனத் திக்கி திக்கி பேச,


"சண்ட போட்டா… ஒரேயடியா அவள மறந்திட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான்னு நினச்சியா?" என்றதும் விருட்டென்று தலை உயர்த்திய, வாணி எதுவும் பேசாது அமையாகவே வந்தாள்.


" இப்ப கார்த்தி எங்க? " எனச் சிறிய குரலில் கேட்கவும் ஆட்டோ மருத்துவமனையில் நிற்கவும் சரியாக இருந்தது‌.


அதைக் கண்டவளின் நெஞ்சுக் குழி அடைத்து போக,


"கார்த்திக்கு என்னாச்சி?" என்றாள் பதைபதைப்புடன்.


"வந்து பாத்து தெரிஞ்சிக்க. " என்றவன் வேக நடையுடன் முன்னே செல்ல, அவள் ஓடிச் செல்லவேண்டியதாக இருந்தது.  அப்சத் ஓரிடத்தில் நிற்க, அவளும் நின்று அப்சத் பார்த்த திசை பார்த்தாள். 


நின்ற இடம் அவளை மொத்தமாக மண்ணில் புதைத்து மூடியது போல் இருந்தது.


கார்த்திக் ஜோஹிதாவின் கழுத்தில் தாலியைக் கட்டிக் கொண்டு இருந்தான். பின் ஜோஹிதாவின் கன்னத்தில் கை வைத்து. "எல்லாம் சரியாகிடும். அமைதியா இரு. " என்றான்.


"நீ எங்கூடவே இருப்பேல்ல கார்த்தி. இப்ப நான் உன்னோட வைஃப் தான. என்னை விட்டுட்டு போக மாட்டேல்ல. நான் உங்கைய விட மாட்டேன். மாட்டேன். உன்னை எங்கயும் போக விட மாட்டேன். " எனக் கார்த்திக்கை கட்டிக் கொள்ள, அவனும் அவளை அணைத்து ஆறுதல் சொல்லி ட்ரீட்மெண்ட் எடுக்க வைத்தான்.


" பாத்தேல்ல என்ன நடந்ததுன்னு‌. அவனோட காதல் எப்பையுமே ஜோஹிதா தான். நீ அவெ மேல விழுந்து விழுந்து பழகவும் கொஞ்சம் ஸ்லிப் ஆகிருப்பான். அது அவெ மேல மட்டும் தப்பில்ல. பசங்க கூட வரை முறை இல்லாம பழகுற உன்னை மாதிரிப் பொண்ண பாத்தா யாருக்கும் ஆசை வரத்தான் செய்யும். அதைப் போய் காதல்னு நினைச்சா எப்படி?. நீ கார்த்திக்கு பாஸிங் க்ளவுட் தான். ஜஸ்ட் வந்த... இப்ப போற... " என்றவனின் பேச்சு கூட முழுதாக காதில் விழுந்திருக்காது… அதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.


இதுவரை தன் எதிர்காலத்தைப் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாத அவளுக்கு அந்த ஆசையை ஊட்டியது கார்த்தி. தான் மட்டும் ஒரு தலையாக காதல் செய்த போது கூட அவனை ஜோஹிதாவிற்கு விட்டு கொடுப்பது என முடிவுடன் தான் இருந்தாள். ஆனால் கார்த்தியின் காதல் தெரிந்த பின், அவனுடன் முழுமையாக தன்னைக் கலந்த பின், அவனை விட்டுக் கொடுக்க மனம் இல்லை. 


என்ன செய்வது இப்போது அவன் ஜோஹிதாவின் கணவனாகி விட்டானே.‌ 


அழுகையுடனே மீண்டும் ஆட்டோவில் ஏறி ஸ்டேஷனுக்கு வந்தவள். யாரும் பார்க்கிறார்களா என்றெல்லாம் கவனியாது தன் வாழ்க்கையை நினைத்து அழ, அப்சத்தும் உடன் வந்தான்.


" ஜோதி உன்னோட வீட்டு நிலம எனக்குத் தெரியும். ஆனாலும் நீ இந்த நேரத்தில இங்க இருக்குறது சரி இல்ல. அதுனால நான் உன்ன உன் வீட்டுல.‌.." 


"என்னால முடியாது. நான் எங்கையும் போக மாட்டேன்.‌" என்றவளுக்கு ராஜியைத் தொடர்ந்து அப்சத்தின் நிறமாறும் பேச்சும் பெரிய இடியாக இருந்தது. அவளின் முன் வந்து இரு கரத்தையும் கூப்பிய அப்சத்,


" எங்க வச்சி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான். இப்ப ஜோஹிதாவோட புருஷெ கார்த்தி. அத மாத்த முடியாது. ப்ளிஸ்… எம் ஃப்ரெண்டா அவெ விரும்புன பொண்ணு கூட வாழ விடு."


'அப்ப நான். நானும் கார்த்தி விரும்புன பொண்ணு தான்.' என்ற வார்த்தை வாயைத் தாண்டி வரவில்லை.


" நீ இங்க இருந்தா... கார்த்தி ஜோஹிதாவ ஏத்துக்க மாட்டான். வீணா பிரச்சனை வரும். உன்னால உங்க வீட்டுக்கும் போக முடியாது. எங்கூடவும் கூட்டீட்டு போக முடியாது. அதுனால கார்த்தி கண்ல படாம எங்கயாது போய்ட்டேன்னா… அவெ நல்லா இருப்பான். " என்க, வாணி தன் நிலையை நினைத்து நொந்து கொண்டிருந்தாள்.


இப்பவே கிளம்பு என்பது போல் அப்சத் அவளைப் பார்த்தபடியும் வாசலைப் பார்த்த படியும் பேசிக் கொண்டே போக, வாணி, கார்த்தியை விட்டு செல்வதாக முடிவு செய்தாள்.


" நா… நா..ன் போறேன். " என்றபோது அவளை அவளே வெறுத்தாள்.


"எங்க?"


"அது உங்களுக்குத் தேவையில்லாதது. " எனச் சோர்வுடன் நடக்க,


" ஜோதி ஒரு நிமிசம். " என்றவன், அவள் நின்றவுடன் அவளின் முன் வந்து,


" நீ இப்படியே எதுவும் செய்யாம போய்ட்டேன்னா. கார்த்தி உன்னைத் தேடி தேடி அழஞ்சி ஜோஹிதாவ அவாய்ட் பண்ணுவான். அதுனால… " என்றவனை ஒரு வெற்று பார்வை பார்த்தாள்.


"உங்கைப்பட நீயே அவன விட்டு போறன்னு ஒரு லெட்டர் எழுதி குடு. அப்றம் கார்த்தி நியாபகமா இருக்குற பொருள், அவெ உனக்கு பண்ண கிஃப்ட். அப்றம் உன்னோட செல்ஃபோன் இது எல்லாத்தையும், ‌குடுத்திட்டு போய்ட்டேன்னா நல்லா இருக்கும். உன்னை மறந்தாத்தான் அவனோட லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போவான். " என்க, கணத்த மனதுடன் தன் மூக்குத்தியைக் கலட்டத் தொடங்கினாள்.


அது அவன் தந்த பரிசு. 'உன்னோட முகத்துக்கு இந்த மூக்குத்தி எடுப்பா அழகா இருக்கு. ' என அடிக்கடி கார்த்தி கூறுபவன், அதில் வைக்கும் முத்தம் அவளின் உயிரின் வேர் வரைத் தொடும். 


அது மட்டுமல்லாது சில நோட் சுடிதார் ஃபோன் என எடுத்து வந்த சில பொருட்களை அப்சத்திடம் தந்தவள், கடிதம் ஒன்றையும் எழுதி தந்தாள். அதை வாங்கிக் கொண்டவன்.‌


"நன்றி ஜோதி. சாப்டியா? எந்த ட்ரெயில ஏறி போகப்போற? " என அக்கறையுடன் கேட்டான். அந்த அக்கறை அவள் சென்று விடுவாள் என்று உறுதியுடன் தெரிந்ததால் வந்தது. அவள் பதிலேதும் கூறாது நடக்க,


"நீ சோகத்துல வேற மாறி எதாவது முடிவ எடுத்திட மாட்டியே. " என்றவனுக்குத் தற்கொலை செய்து கொள்வாளோ எனப் பயம் தோன்றியது. அவனைத் திரும்பிப் பார்த்தவள்,


"இந்த உலகத்துல எல்லா ஜீவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கு. அதோட காரியம் முடியாம. கடமைகளச் செய்யாம அந்த உயிர் போகாது.  போகக் கூடாது. அது… கார்த்தி எனக்குச் சொன்னது. " என்றவள் என்ன சொன்னால் என்று புரியுவே இல்லை அப்சத்திற்கு. சில அடி தூரம் சென்றிருப்பாள் பின் மீண்டும் அவனின் அருகில் வந்து,


"நீயும் ஆம்பள தான?. " எனக் கேட்க, அப்சத் கோபமாகி முறைத்தான்.


" இல்லை... நான் பசங்க கூட வரை முறை இல்லாம பழகியிருந்தா இன்னோரம் நீயும் என்னோட வலை தான் இருந்திருப்ப. கார்த்திக்க விட நீ அழகானவன். பணக்காரனும் கூட… அப்படி இல்லங்கிறப்போ. நான் யார்கிட்டையும் என்னோட வரம்ப மீறி நடந்துக்கிட்டது இல்ல.


என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும். நான் இங்கருந்து போய்ட்டா... கார்த்தி கண்பார்வைல இல்லன்னா... அவெ என்னை மறந்திடுவான்னா. " எனச் சொல்லி ஆக்ரோஷமாக சிரித்தாள்.


" உங்க யாருக்கும் கார்த்திய பத்தி சரியா‌ தெரியல. தெரிஞ்சிருந்தா அவனோட சந்தோஷம் நான் தான்னு தெரிஞ்சிருக்கும்.‌ தெரிஞ்சிப்பிங்க ஒரு நாள் கார்த்தியோட காதல் நான்னு. அவன ஏமாத்தி சூழ்ச்சி செஞ்சி எங்களப் பிரிச்ச அத்தன பேருக்கும் எம்மேல வச்ச காதல கார்த்தி நிறுபிப்பான். என்னை அவன பாக்க கூட விடாம தொரத்துற உங்களுக்குப் புரிய வைப்பான்." என்றவள் கண்ணீரைத் துடைத்து படி செல்லும் போதே, தூரத்தே கார்த்தி வருவது தெரிந்தது. வியர்க்க விறுவிறுக்க வேகமாக அப்போது தான் வாயிலுக்குள் நுழைந்தான்.


மணி சரியாக பத்து...


' அவன் என் கார்த்தி. ' எனக் கர்வ பார்வைப் பார்த்தாள் வாணி. 


எங்கே கார்த்தியிடம் ஓடி சென்று விடுவாளோ எனப் பயந்து அப்சத் அவளின் காலில் விழுந்து கெஞ்ச தொடங்கினான். கூடவே அவளுக்கு வாழ்க்கை தர முன்வந்த பெரிய மனிதனும் கார்த்தியைத் தொடர்ந்து வருவது தெரிந்தது. அவளுக்கு வேறு வழியும் இல்லாது போனது.


எவனோ ஒருவனுக்கு மனைவியாக வாழ்வதை விட. கார்த்தியின் காதலியாக வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து சென்றாள்.


'என்ன மன்னிச்சிடு கார்த்தி மாமா.' என மனதில் நினைத்தபடி கண்களின் அவனின் உருவத்தை நிறைத்தபடி பெயரே தெரியாத ஒரு ட்ரெயினில் ஏறி அமர்ந்தாள்…


முதல் அத்தியாயத்தில் பிரிந்து சென்ற இரண்டாவது ஜோடி, கார்த்தி-ஜோதிவாணி.

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

நேசிப்பாயா 100

நேசிப்பாயா 102

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...