முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 44


 

அத்தியாயம்: 44


எந்த ஒரு செயலும்.


சரியான திட்டமிடல்.


இல்லை என்றால்.


நம்மால் நிலைப்பாட்டோடு.


அதை நிறைவேற்ற.


முடியாது என்பது தான் உண்மை.


எனவே‌ முதலில்.


எந்தக் காரியம் ஆயினும்.


திட்டமிட கற்றுக் கொள்ள வேண்டும்.‌


நம் ரிஷி தரனை போல்.


தன்செயன் என்ற சிறு கொடிதான் கையில் சிக்கியது. ஆனால் அதைக் கொண்டு அதன் ஆணி வேரையை அடியோடு அழிக்கும் அளவுக்குத் திட்டமிட்டு வைத்திருந்தான் ரிஷி தரன்.


தன்செயன் கண்ணில் சிக்கிய இரண்டே மாதத்தில் சந்திரபோஸ். தயானந்தன். ரோகித் மட்டுமில்லாது மேலும் பல தலைகளின் குடுமிகளை ரிஷி கண்டு பிடித்து வைத்திருந்தான்.‌ ஏதோ சட்ட விரோதமாகச் செய்கிறார்கள் என்று நினைத்த அவனுக்கு உயிரைக் கொன்று உள்ளுறுப்புகளை திருடும் கும்பல் என்று தெரிந்தபோது அதிர்ச்சி தான் வந்தது. அவர்கள் கொலை செய்த ஜீவன்களில் தன் தங்கையும் ஒருத்தி எனத் தெரியவந்த போது பேரதிர்ச்சி மட்டுமல்ல வெறியே வந்தது.


பலத்த பாதுகாப்புடன் மின் வேலி போட்டு இருந்த காப்பகம் எதற்கு என்ற சந்தேகத்தைத் தீர்க்க ரிஷி அவர்களின் சுரங்க வழியில் சென்றான். அவனுக்கு அந்த வழியைக் காட்டியது கதிரேசன். அவருக்குத் தயானந்தன் செய்யும் இந்தக் கொலைகளில் விருப்பமில்லை. ஆனாலும் இதைத் தடுத்து நிறுத்தும் துணிவும் இல்லை. தன் மகனுக்கு இலவச மருத்துவம் கிடைப்பதே தயானந்தத்தின் தயவால் என்றபோது அவரை எதிர்க்க அவனுக்குத் தைரியம் எப்படி வரும்.


பாவம் செய்து கொண்டிருப்பதாகத் தேவாலயத்தில் இறைவனின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுப் புலம்பியவரின் புலம்பலை ரிஷி கேட்க நேர்ந்தது. தயானந்தத்தின் கொலைகளுக்கு உதவுவதா வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் அவரைத் தன் பேச்சால் வசியம் செய்து அவரின் உதவியைப் பெற்றான் ரிஷி. அவ்வபோது ரிஷி கேட்கும் தகவல்களைக் கொண்டுவந்து கொடுப்பார்.


ஒருமுறையேனும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ரிஷியைச் சுரங்கம்‌ வழியே அழைத்து வந்தது கதிரேசன். அப்போது சந்திரபோஸ்ஸின் அறையில் அவரால் கொல்லப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப் பட்ட நினைவு சின்னங்களைச் சேர்ந்து வைக்கும் கபோர்ட் கண்ணில் தெரிய, திறந்தும் பார்த்தான். அதில் தான் பார்கவியின் ஐடி கார்டும் இருந்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு புரியாது நின்றவனுக்கு நடந்தது என்ன என்பதை சந்திரபோஸ்ஸே விளக்கிக் கூறினான்.


அதா சந்திரபோஸ்க்கு ஒவ்வொரு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணும் போதும் பார்கவிய எப்படி கொன்னேன்னு அவளோட ஃபோட்டோவ பாத்து அவகிட்டையே பேசிப்பானே. அந்த மாறிப் பேச, கொலை வெறி கொண்ட ரிஷிக்கு இப்போதே அவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி மறைந்தவர்கள் பட்டியலில் சேர்க்க தோன்றியது. ஆனால் இதைத் தான் செய்யக் கூடாது. ஹரி செய்ய வேண்டியது. அவன்மேல் விழுந்த பழியை போக்க அவன் கையாலேயே இந்தச் சந்திரபோஸ் சாக வேண்டும் என நினைத்தான். அதிக அழுக்கு படிந்த சந்திரபோஸ்ஸையும் அவனின் கூட்டத்தை நன்கு ஊறவைத்து துவைக்க எடுக்க வேண்டும் என நினைத்தவன். அவர்களைப் புதை‌ குழியில் சிக்க வைக்க அப்போது இருந்தே தோண்ட ஆரம்பித்து விட்டான்.


கையெழுத்து போட்டுக் கொன்னுட்டேனே எனக் கலியபெருமாளின் வார்த்தைக்கு அப்போது அர்த்தம்‌ புரிந்தது. எனெனில் மகளின் இதயத்தை தானமாகக் கொடுத்துள்ளார் அல்லவா. மகனை வெறுத்து ஒதுக்கும் ஒரு கெட்ட அப்பாவாகக் கலியபெருமாளை நினைத்து வந்தவன், கலியபெருமாளும் சூழ்நிலை‌ கைதிதான் என்பதை உணர்ந்தான். அந்த நொடியிலிருந்து அவரைத் தனித்து மும்பையில் இருக்க விடக் கூடாது என்று வீட்டாரிடம் பேசிப் பல ஆண்டுகளாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்த அவரை ஊருக்கு வரவைத்தான்.


நங்கை. அவரையும் திருமணம் செய்து கொள்ளும் படி பல முறை வற்புறுத்தினான் ரிஷி.‌ ஆனால் நங்கை உறுதியுடன் இருந்து விட்டார். அதனால் அவரின் முடிவுக்கு மரியாதை கொடுத்து அவரைத் தொந்தரவு செய்யவில்லை.


ஒரே கல்லுல மூன்று மாங்க அடிக்கத்தா குறி வைத்தான். ஆனா கிடைத்தது நான்கு மாங்காய். ஒன்னு கலியபெருமாளின் வருகையால் நாச்சியம்மாளின் குடும்பம் முழுமை பெறுவது. இரண்டாவது இந்துவை அவளின் மனம் விரும்பிய கௌதமிற்கு திருமணம் செய்து வைப்பது. எப்படியும் கௌதமுடன் ஹரிணியும் வருவாள். அவளின் தாத்தாவால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை பற்றித் தெரிந்தால் அவளே முன்னின்று டேமை மீட்டுத்தருவாள் என்பது. நான்காவது எதிர்பாராது. நாச்சியாம்மாவால் கிடைத்தது. அதான் ஹரிணியோட நடந்த அவனோட கல்யாணம். 


‘மொத்தத்துல அவனுக்கு எல்லா பக்கமும் லாபம் தான்.’


ஆழமாக வேர்விட்டு உலகம் எங்கும் தன் கசாப்பு கடையை ஓப்பன் செய்திருந்த சந்திரபோஸ்ஸின் கூட்டத்தை ஒரே நேரத்தில் அழிக்க அவன் ஒருவனால் மட்டுமே முடியுமா. முடியாது அல்லவா அதற்குத் தான் ஓரிரு பவர் ஃபுல் ஆட்கள் தேவைப்பட்டது.‌ அவர்கள் தான் மார்க் செபாஸ்டியன், மற்றும் நம்ம விக்னேஷும் அவனோட ஃப்ரெண்ட்ஸும்.‌


மார்க் செபாஸ்டியன். லண்டனில் டாப் ஃபைவ் மில்லினியர்களில் செபாஸ்டியன் குடும்பமும் ஒன்று. பரம்பரை பரம்பரையாக லண்டனில் தொழில் செய்துவரும் அவருக்கு லண்டன் அரச குடும்பங்களுடன் நல்ல பழக்கம். அதுமட்டுமல்லாமல் அவரின் விரலசைவிற்கு ஏற்ப காரியங்களைக் கச்சிதமாக முடிக்கும் அளவுக்கு ஒரு கூலிப்படையே வைத்திருக்கிறார்.


அவரின் மகனுக்கு இருக்கும் இதயப் பிரச்சினையை அறிந்தவன் அவரின் மகள் மடோனாவுடன் தன் நட்புக் கரம் நீட்டி வளர்த்துக்கு கொண்டான். யூரியா உரம் போடாமலேயே இருவரின் நட்பு வேகமாக வளர்ந்தது.


ஒரு முறை தன் தம்பிக்காக ஒரு சிறந்த மருத்துவரைத் தேடுவதாக சொல்ல ரிஷி தான் சந்திரபோஸ்ஸை பற்றிக் கூறினான். சந்திரபோஸ்ஸிடம் செபாஸ்டியன் குடும்பம் பல கோடிகளைக் கொட்டி கொடுத்தது தன் மகனுக்காக‌.  நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து அவன் எழுந்து நடக்கவில்லை எனில் இவர் அந்தத் திருட்டு கும்பலைக் கருவருத்து விடுவார். விட்டார்.‌ ஏனெனில் ஆப்ரேஷன் தான் நடக்கவில்லையே.


இப்போது இந்தியாவில் இருக்கும் விஷக்கிருமிகளுக்கு வேக்ஸின் போட வேண்டும். அதற்கு அவன் தேர்ந்தெடுத்தது விக்னேஷ். அம்ரேஷ் என்ற வாலிபனின் தற்கொலையைக் கொலை என்று சில நாட்களிலேயே கண்டுபிடித்து, அவர்களுக்குத் தண்டனை வாங்கித்தந்த விதம் ரிஷியைக் கவர்ந்தது. எனவே சந்திரபோஸ்ஸின் வெளிநாட்டு வியாபாரத்துக்கு மூடுவிழா நடத்த செபாஸ்டியன் கையிலும், உள்ளூர் வியாபாரத்துக்கு விக்னேஷின் கையிலும் கத்தரிக்கோல் கொடுக்கப்பட்டது.


போட்டு வைத்த திட்டங்கள் யாவும் மிகவும் சரியாக நடந்தது. ரிஷி ஹரிணியிடம் க்ரிஸ்டல் க்ளியர் என்பார்களே அதே போல் தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறினான். கூறியதோடு மட்டுமல்லாமல் பார்கவி மரணம் தொடர்பாகச் சுவற்றில் இருந்த அத்தனை ஆதாரங்களையும் ஒரு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்றான்.


செல்லும் அவனைச் சிறிய கோபத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஹரிணி.


எனெனில் அவனின் அளவு கடந்த காதலை நல்ல நிலையில் இருக்கும்போது கூறாமல், இப்போது கூறியதால் வந்தது. மூட்டைக் கட்டிக் கொண்டு இருந்தவனை முறைக்க, எனக்கு என்ன என்பது போல் அவன் எடுத்துச் சென்றான்.‌


அவன் மூட்டைக் கட்டி எடுத்துச் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் எப்படி அவர்களைத் தண்டித்தான் என்பதை கூறாமல் சென்றுவிட்டான். செல்லும் முன் "இனி எனக்குள்ள எதுவும் இல்ல ஹரிணி. I am blank. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டேன். இனி எதையும் மறைக்கமாட்டேன் ஹரிணி. " என்றவனை நிறுத்திச் சந்திரபோஸ் என்ன ஆனான் என்று கேட்க.


" என்னால அத சொல்ல முடியும் ஹரிணி. பட் நா மட்டும் தனியா எதுவும் பண்ணல. சோ நடந்தத நேர்ல பாத்த மற்ற ரெண்டே பேர் கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்க. " என்றது தான் பிரச்சனையே. அத்தோடு அவனின் ஹரிணி என்ற அழைப்பு அவளுள் தீயை போல் சுட்டது.


ஆனாலும் அவன் தன் மேல் இத்தனை காதலை வைத்திருப்பான் என்று நினைத்துப் பார்க்கையில் உள்ளம் உலகை விட்டுப் பறந்து சென்றது. 


"ஐ ஆம் ஸாரி பாவா. நா உங்கிட்ட அப்படி பேசிருக்க கூடாது. பட். " 


" உன்னோட எந்த விளக்கமும் தேவயில்ல. நீ என்ன சொல்லப்போறன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ இத இப்படியே விட்டுடு ஹரிணி. " என்றவன் குரலில் அதீத கோபம் இருந்தது போல் தெரிந்தது ஹரிணிக்கு.


செல்லும் அவனை ஹரிணியின் கண்ணீர் தடைபோட்டு நிறுத்தவில்லை. அப்படியே ஊட்டிக்கி புறப்பட்டுச் சென்றான், சந்திரபோஸ்ஸின் உயிரற்ற உடலைக் காண. ஒரு வாரம் கழித்து தான் திரும்பி வந்து கொண்டு இருக்கிறான். அதுவரை அவளின் தொலைபேசியில் பேசினாலும் ஓரிரு வார்த்தைகள் தான் பேசுவான். அதுவும் குழந்தைகளைப் பற்றியதாகவே இருக்கும். அவனின் ஹரிணி என்ற அழைப்பு அவளைச் சோர்வடையச் செய்தது.


" ஒரு வாரம் ஆச்சி. மாசமா இருக்குற பொண்டாட்டிய பக்கத்துல இருந்து பாத்துக்கலன்னாலும் பரவாயில்ல.‌ அட்லீஸ்ட் ஃபோன்லயாது அக்கறையா பேசலாம்ல. எப்ப பாத்தாலும் டாக்டர்ட்ட போனியா?. அகி ஆதி என்ன பண்றாங்க?. மாத்திர சாப்டியான்னே பேச வேண்டியது. இந்த அறிவு கெட்ட புருஷன வச்சிட்டு என்ன பண்ண. " எனத் தன் கணவனுடன் நடந்த சண்டையை நினைத்துக் கொண்டும், அவனைத் திட்டிக் கொண்டும் தோப்பிலிருந்து வீட்டிற்கு நடந்து செல்ல, உடன் அவளின் செல்ல நாய்க்குட்டி டார்வின்னும் வந்தது. சாலையின் வெகுதூரத்தில் பலத்த ஹாரன் ஒலியுடன் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.


சத்தத்தை வைத்து வருவது யார் என அறிந்த ஹரிணி ஆசையுடன் திரும்பிப் பார்த்தாள். 


ரிஷி தான். 


தனியாகக் கார் ஓட்டி வந்து கொண்டிருப்பதை அறிந்து கரம் நீட்டி நிறுத்தச் சொல்ல, ஆனால் அவளின் அருகில் காரை நிறுத்த வில்லை. சென்று விட்டான்.


வெகுதூரம் சென்றபின் காரை ஓரமாக நிறுத்தியவன் கீழே இறங்கி, கோபமாகத் தன்னை திட்டிக் கொண்டே நடந்து வரும் தன் மனைவியைப் பார்த்தபடி காரில் சாய்ந்து நின்று பார்த்தான்.


தன் எஜமானனை கண்ட நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கொண்டு ரிஷியின் காலைச் சுற்றி வர, அவன் காரில் கதவைத் திறந்துவிட்டான். வேகவேகமாக உள்ளே ஏறிய அது ஜன்னல் வழியே தலையே நீட்டி ஹரிணியை பார்த்துக் குரைத்தது. அது ' சீக்கிரம் வந்து ஏறிக்‌கோ. ' என்று சொல்வது போல் இருந்தது ஹரிணிக்கு.‌


" என்ன என்ன இவெ வளக்குற நாய்குட்டின்னு நினைச்சிட்டானா.‌ இவெ எவ்ளோ தூரத்துல இருந்தாலும் கண்ணுல பட்டதும் குடுகுடுன்னு ஓடிப் போய் கால சுத்தி வர. திமிரு பிடிச்சவெ. " என முணுமுணுத்தபடியே அவனை தாண்டி செல்லப் பார்க்க, விடுவானா அவன்.‌ கரம்பற்றி நிறுத்தினான். காரில் ஏறுமாறு கண் ஜாடை செய்ய, ஹரிணிக்கு கோபம் வந்தது.


" ரொம்ப நன்றி ஸார். நீங்கக் காட்டுற கருணைக்கி. ஆனா எனக்கு உங்க லிஃப்ட் தேவையில்ல. கடவுள் எனக்கு ரெண்டு கால் குடுத்திருக்காரு. எந்தப் பக்கம் போகணும்னு பாக்க கண்ணையும் நல்லாவே குடுத்திருக்காரு. நீங்கப் போலாம் மகாபிரபு. வெயில நின்னா கருத்திடுவீங்க. கார்ல உக்காந்து ஏசி போட்டுட்டு கிளம்புங்க." எனச் சொல்லி அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் கால் காற்றில் மிதந்தது. அலேக்காகத் தூக்கி காரின் முன் சீட்டில் அமரவைத்தவன். பேசாது வீட்டிற்கு சென்றான்.


'பின்ன அவனோட குழந்தைய வயித்துல வச்சிடு நடந்து போனா. அதா தூக்கி கார்க்குள்ள போட்டுக்கிட்டான்.’


ஹரிணி தான் வாய் ஓயும் வரை திட்டிக் கொண்டே வந்தாள். அவன் எதுவும் பேசவில்லை. ஏன் திரும்பிக் கூட பார்க்க வில்லை… காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு அதை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்துமாறு ஹரிணியை பணித்துவிட்டு வீட்டிற்குள் செல்ல,


" என்ன நா பார்க் பண்ணணுமா. ஹேய், நீ தான ஓட்டிட்டு வந்த. அப்ப நீ தான நிப்பாட்டணும். இடியட். " எனக் கத்த,


" என்ன ஹரிணி யாரு கூடப் பேசிட்டு இருக்க. உன்னோட கண்ணுக்கு மட்டும் யாரோ தெரியுறாங்களா என்ன. " எனக் கேட்டபடி பிரகாஷ் வந்தான். ஏனெனில் ரிஷி இவளின் பேச்சைக் காதில் வாங்காமல் சென்று விட்டான். அதான் 'ஏ தனியா பேசிட்டு இருக்க. லூசா நீ.' என தோப்பிலிருந்து வந்த கூட்டம் அவளிடம் கேட்டது.


" உனக்கு அப்போ யாரும் தெரியலயா. ம்... நிஜம்மா தெரியலையா. " என காரிலிருந்து இறங்கியபடி கேட்க, பிரகாஷ் 'நம்ம கண்ணு தா பொட்டலா போச்சோ. ' என நினைத்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எனத் தேடி கூடப் பார்த்தான் யாரும் கிடைக்கவில்லை.


"எனக்கு யாரும் தெரியலயே ஹரிணி. "


"பத்து நிமிஷமா நிக்கிறேன் எங்கண்ணுக்கே யாரும் தெரியல. இப்ப வந்த உனக்கு மட்டும் எப்படி டா தெரியும். எரும. இந்தா இத நிப்பாட்ட வேண்டிய இடத்துல நிறுத்திட்டு வா. " பார்க்கிங் பொறுப்பைப் பிரகாஷிடம் தள்ளி விட்டுக் கோபமாக உள்ளே வந்து ரிஷியைப் பார்க்க, அவன் மூர்த்தியின் அறையில் இருந்தான்.


தன் தந்தையை வந்தணைத்தவன். மூர்த்தியை அமரச் செய்து அவரின் மடியில் தலை சாய்த்தான். "ப்பா... நா முடிச்சிட்டேன் ப்பா. ரொம்ப லேட்டா முடிச்சிருக்கேன். இத முன்னாடியே செஞ்சிருந்தா நம்ம பாப்பு மாறி நிறைய பேர் இறந்துருக்க மாட்டாங்கள்ளப்பா. " எனத் தன் தங்கைக்குத் தாமதமாக கிடைத்த நீதியை பற்றிய தன் உணர்வுகளைத் தந்தையிடம் கொட்ட, அவர் அவனுக்கு ஆறுதலாகப் பேசி தலை கோதி, அவனின் பேச்சை ‌அமைதியாகக் கேட்டார். அவர் மட்டுமல்ல ஹரிணியும் தான். கனகா கண்ணீருடன் மகனை அணைத்துக் கொண்டார்.


ஆறடி வளந்திருக்கும் தன் கணவன் சிறுவன்போல் தந்தையின் மடியில் கிடப்பதை கண்ட ஹரிணிக்கி வெளியில் தன்னை கம்பீரமாகக் காட்டிக் கொண்டாலும் ரிஷி மனம் மிகவும் மெல்லியது எனத் தோன்றியது. தான் அதைக் காயப்படுத்தியதை எண்ணி கவலை கொண்டாள்.


ஒருவரின் தோற்றத்தையும் பிறரிடம் காட்டும் முகத்தையும் வைத்து யாரையும் எடை போடக் கூடாது. நெருங்கிப் பழகும் போது தான் அவர்களின் குணமும் மனமும் புரியும்.


அனைவரும் தியான நிலையில் நிற்க, அதைக் கலைத்தது கலியபெருமாளின் அழு குரல். பதறிப்போய் ஹாலிற்கு வர, கலியபெருமாள் விக்னேஷின் கரத்தை பற்றிக் கொண்டு அழுதார்.


அவரின் கையில் பார்கவியின் ஐடி கார்டு இருந்தது. விக்னேஷ் அவரிடம் அதை மட்டும் தரவில்லை. மூவரின் உயிரற்ற உடலையும் புகைப்படமாய் காட்ட, நிம்மதியும் வேதனையும் ஒரு சேர உணர்ந்தார் கலியபெருமாள். விக்னேஷின் கரத்தைப் பற்றிக் கொண்டு,


தன் மகளின் மரணம் விபத்து அல்ல கொலை என்று உலகிற்கு எடுத்துரைத்தற்கு தன் நன்றியை முன் வைத்து விக்னேஷிடம் கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.


அவரின் நன்றியை ஏற்பதா வேண்டாமா எனத் தெரியாது கௌதமை பார்த்துக் கொண்டு நின்றவன், ரிஷி வரவும் அவனைப் பார்த்தான்.‌


'யோவ் பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு என்ன ஏய்யா இதுல கோர்த்து விடுற. ரொம்ப சங்கடமா இருக்கு. வந்து கூட்டீட்டு போங்கப்பா. ' என்பது போல் இரு சகோதரர்களையும் பார்த்தான். ஏனெனில் இன்னும் சிறிது நேரம் விட்டால் கலியபெருமாள் கால்லையே விழுந்திருப்பார் போல.  


' எனக்கும் அவருக்கும் ஆகாது ப்பா. அவரோட பாராட்டக் கேக்குறதுக்காக நா இத செய்யல. என்னோட மன நிம்மதிக்காகத்தா அவனுங்கள கண்டுபிடிச்சினேன். மத்தபடி இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்ல. நா ஹீரோன்னு யாருக்கு ப்ரூப்பன்னனும்னு அவசியம் இல்லை.' என்பது போல் பார்த்தான் ரிஷி.


ரிஷி, விக்னேஷை வைத்துப் பார்கவியின் மரணத்தை விளக்கச் சொன்னதற்கு காரணம் இருந்தது. அது என்னவென்றால் கலியபெருமாளிடம் ரிஷி பார்கவியின் மரணத்தை விசாரிக்கச் சொல்லி பல முறை வற்புறுத்தினான். ஆனால் அவர் கேட்பதா இல்லை. அப்போது உண்மை தன் வாயால் தெரிந்தால் அவருக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படும். அவரின் அந்த முகத்தை பார்க்கப் பிடிக்காமல் தான் விக்னேஷை வைத்துப் பார்கவியின் மரணத்தை பற்றிச் சொல்லியுள்ளார்.


"ஸார் நா என்னோட கடமையாத்தா செஞ்சேன். வேற எதுவும் பெருசா பண்ணிடல. நாங்க கிளம்புறோம் ஸார். " எனத் தன் மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல நினைக்க,


" அதெப்படி தம்பி உடனே கிளம்புவிங்க. அண்ணே நாலு நாள் இருக்க சொல்லுங்க. டேய் பிரகாஷு தம்பி இருக்கப் போற நாலு நாளும் வீட்டுல விருந்து ஏற்பாடு பண்ணணும். போய் நாட்டுக் கோழிய பிடிடா. " என விக்னேஷ் சம்மதித்தானோ இல்லையோ அவனுக்கு விருந்து வைக்காமல் விடமாட்டோம் என்பது போல் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்.


மறுத்த விக்னேஷிடம் நாச்சியம்மாலும் மூர்த்தியும் பேசச் சம்மதித்தான்.‌ நான்கு நாட்கள் அல்ல இரு நாட்கள் மட்டுமே.


" ஏண்ணே உங்கப்பா கண்ணுக்கு நா மட்டும் தா தெரிவேனாக்கும். எப்ப பாத்தாலும் எல்லா வேலையையும் என்னையே செய்யச் சொல்லுறாரு. நா ஒரு தொழிலதிபர் இல்லையா. எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அது என்ன ஆகுறது. " பிரகாஷ்.


"கவலப்படாத உன்னோட இமேஜுக்கு ஒன்னும் ஆகாது. ஏன்னா அப்படி ஒன்னு உனக்குக் கிடையவே கிடையாது. " இந்து, பிரகாஷின் தலையில் தட்டி சொல்ல.


" ஈசி சேர்ல உக்காந்துட்டு கால் நீட்டித் தூங்குற உன்ன யாரும் தொழிலதிபர்ன்னு சொல்லமாட்டாங்க. " வைசு.


"யாரு நம்ம வைசுக்காவா பேசுறது. " எனக் கன்னத்தில் கை வைத்து ஆச்சரியமாகப் பிரகாஷ் கேட்க, கலியபெருமாள் குரல் கொடுத்தார். 


‘கோழி பிடிக்கும்னு இல்லையா. இவெ என்னடான்னா சும்மா நின்னு வாய் பேசிட்டு இருக்கான்.@ என்ற கடுப்பு கலியபெருமாளின் குரலில் நன்கு கேட்டது.


" ம்ச்... இவரு ஏ அப்பப்ப வென்னீர்ல விழுந்த விட்டில் பூச்சி மாறிக் குதிக்கிறாரு. முத வேளயா இவர கூட்டீட்டு போய் ஹாஸ்பிடல்ல சேருங்க. இல்லன்னா இவருக்கு வேல பாத்து பாத்து நா அட்மிட் ஆகிடுவேன் போல. ச்ச… " எனப் புலம்ப,


"நீ இன்னும் போலயாடா. " எனக் குரல் வர,


"போயாச்சி போயாச்சி. எவனாது சமச்ச கோழி கால்ல கைய வச்சிங்க. எவ்வாய்ல அவெங் கை இருக்கும். " என அசோக்கையும் கௌதமையும் பார்த்து சாடையாகச் சொல்லிவிட்டு சென்றான். 


‘ஏனெனில் அவனுங்க ரெண்டு பேரும் இவனுக்கு மீதி வைக்காம சாப்பிட்டுடுவாங்க.’


மூர்த்தி விக்னேஷிடம் பேச ரிஷி தன் அறைக்குச் செல்ல படி ஏறினான். "பாவா ஒரு நிமிடம். நீங்க மூணு பேரும் அந்தச் சந்திரபோஸ்ஸ என்ன பண்ணிங்க. இதுக்கு பதில் தெரியலன்னா என்னோட மண்டையே வெடிச்சிடும். ப்ளிஸ் சொல்லிட்டு உள்ள போயேன். " எனச் சத்தமாக ரிஷியிடம் மட்டுமல்லாது மற்ற இருவரிடமும் கேட்க,



மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தபடி ஆளுக்கு ஒரு திசையாகப் பிரிந்து சென்றனர்.


"ஹாங்... " என முழித்தபடி நின்றவளிடம்.


" ஐய்யோ... பாக்கவே பா…வமா இருக்கு. " என உச்சுக்கொட்டியபடி பவதா வந்தாள்.


" இவ்ளோ நேரம் நின்னு பேசிட்டு இருந்தவங்கள கல் குவாரில பாம்ல போட்டுச் சிதறுன கல்லு மாறி ஓட விட்டுட்டியே." வைசு


" இதுல இருந்து என்ன தெரிய வருது. " பவதா.


"ம்… என்ன தெரியுது." வைசு.


" உனக்கு அவ்ளோ தா மரியாதன்னு தெரியுது. " என இருவரும் கோரஸ்ஸாக சொல்ல.


ஹரிணி முறைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.


செல்லும் அவளின் காதிற்கு இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டு சிரிக்கும் சத்தம் கேட்டது.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

விழி 43


விழி 45


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...