அத்தியாயம்: 43
ஆண் பெண் நட்பாகப் பழகலாம். ஆனால் ஒரு பெண் ஆண் தோழனுடன் பழகும் போது சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதைப் பெருந்தன்மையுடன் கணவன் என்பவன் ஏற்றுக் கொண்டாலும், அவ்வபோது எழும் பொறாமையை தடுக்க முடியாமல் சில சண்டை நடைபெறும். இங்கும் அது தான்.
நட்பின் புனிதம் தெரிந்தவன் தான். ஆனால் லைட்டா இல்லை கொஞ்சம் ஹெவியாவே வருகிற பொறமையை என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.
"எஸ்… எனக்குப் பொறாமதா. ஆனா அது கௌதம் மேல மட்டும் இல்ல. உன்னோட மேலயும் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பழகிக்கிறத பாக்கும்போது அதிகமாவே இருக்கு. உங்க ஃப்ரண்ஸ்ஷிப் மேல எனக்கு எப்பையும் பொறாம உண்டு. " என்றவன் முகத்தில் கௌதம் ஹரிணி இருவரின் நட்பின் மீதான பொறமை நன்றாகவே தெரிந்தது.
ஹரிணி கௌதமின் உறவின் மீது சந்தேகம் கொள்ளவில்லை ரிஷி தரன். ஜஸ்ட் Jealous தா. அந்தப் பொறாமை இன்னைக்கி நேத்து இல்லைங்க. இவங்க ரெண்டு பேர ஒன்னா பார்த்ததுல இருந்து இருக்கு. பெங்களூருல ஆரம்பித்தது.
ஒரு பள்ளி கலைநிகழ்ச்சியில் தான் ஹரிணியை முதல் முதலில் பார்த்தான். காக்கி உடையில் என்சீசி மாணவியாக இருந்த அவளின் தோற்றம் அவனைக் கவரவில்லை என்ற போதும் முகம் மனதில் பதிந்தது. அதே நிகழ்ச்சியில் தன் நடனத்தால் அவன் மனதை கவர்ந்தும் சென்றாள் ஹரிணி.
அடுத்த சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அதில் அவளைப் பின் தொடர்ந்தன் மூலம் அவளின் மனமும் குணமும் ரிஷியிடம் காதல் விதையைத் தூவிச் சென்றது. அது முளைவிடத் தொடங்கிய போதும், அவளின் பெயர், என்ன படிக்கிறாள், எந்த ஸ்கூலில் படிக்கிறாள் என்பது போன்ற தேடலைச் செய்ய விரும்பவில்லை. மீண்டும் அவளை அவளின் விடுதியில் பார்த்தான். அவனின் உணர்ச்சிகள் அவளால் மட்டுமே துண்டப்படும் என்பதை அறிந்தவனுக்கு பெண்ணவளின் மீது காதல் செடியாய் வளர்ந்தது. மரமாய் வேர் விடும் முன் மருந்து தெளித்து வளர விடாமல் செய்தார் மூர்த்தி. அவனின் தந்தை..
படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என்ற தந்தையின் அறிவுரையை ஏற்றவன். தன் காதலை ஹரிணியிடம் தெரிவித்து அவளின் காதலை பெற முயற்சிக்கவில்லை. நிதானமாக ஒரு வேலையில் அமர்ந்து விட்டுக் காதலை சொல்லிக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தான்.
ஆனால் அவன் செய்ய வேண்டிய பொறுப்புகளும் கடமைகளும் க்யூ கட்டி வரிசையில் நிற்க, அதைக் கவனிக்க சென்றவனுக்கு ஹரிணியுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பழகினால் தானே காதல் செய்ய முடியும். ஆனால் பல ஆண்டுகள் கழித்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை வீட்டை விட்டு வெளியே சென்றிடாத இந்துவைக் காலேஜ் டூர்ருக்கு அனுப்பி வைத்தது ரிஷி தான். பாஷை தெரியாத ஊரில் இந்து தொலைந்து விட்டதாக அவனுக்குத் தான் முதலில் தகவல் வந்தது. பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவனால் உடனடியாகச் செல்ல முடியவில்லை. அவளின் கல்லூரி பேராசிரியரை அழைத்துத் திட்டிக் கொண்டே தன் அத்தை மகளைக் காண காரில் சென்றான் பெங்களூருக்கு.
ஆனால் பெங்களூரை அடையும் முன் இந்து திரும்பக் கிடைத்து விட்டதாகவும் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் வர, நிம்மதியுடன் வீடு திரும்ப நினைத்தவனை தடுத்தது அவனின் மனம். இந்துவின் நலம் அறிய எனப் பெங்களூர் சென்று பார்க்க, பார்த்தவனின் கண்களுக்கு ஹரிணி சிக்கினாள். நியாயமாகப் பார்த்தால் அவனுக்குள்ள மகிழ்ச்சி அருவி மாறிக் கொட்டி ஓடியிருக்க வேண்டும். ஆனால் கோபம் தான் வந்தது. ஏனெனில் கௌதம் உடன் ஹரிணி இருந்ததாள்.
கௌதமின் தோளில் தொங்கிக் கொண்டு கையில் ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டு இருவர் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை பார்த்தவனுக்கு கௌதம் மீது அதீத கோபமே வந்தது.
ஆண் பெண் இருவரும் பேதமின்றி பழகும்போது பார்ப்பவர் கண்களுக்கு அவர்கள் காதலர்களாகத் தான் தோன்றுவர். ரிஷிக்கும் முதலில் அப்படி தான் தோன்றியது. அதான் கௌதம் மீது கோபம் வந்தது. தன்னவளை கவர்ந்து விட்டானோ என்று. ஆனால் இருவரின் நட்பின் ஆழம் அவர்களை ஃபலோ செய்யும்போது தெரிய வந்தது. அது அவனுக்கு வியப்பையும் தந்தது. கூடவே பொறாமையையும்.
பல ஆண்டுகள் கழித்து கௌதமை சந்தோஷமாகவும், எவ்வித தீய பழக்கம் இன்றியும் புதிதாகப் பார்த்தான் ரிஷி. கடைசியாகக் கௌதமை பார்த்தபோது வெட்டப்படாத சிகை, தாடி, சிவப்பேறிய கண்களில் போதை எனப் பார்ப்பவர்கள் பயத்தில் சற்று விலகி இருக்க செய்யும் தோற்றத்தில் இருந்தான். இப்போது முற்றிலும் மாறி இருந்தான், நல்ல அழகான இளைஞனாக.
முதலில் தோன்றிய கோபம் மாறி இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளையும் ரசிக்கத் தொடங்கினான் ரிஷி. தன்னை திட்டி விரட்டியடித்த பின் கௌதமை காண செல்லாது இருந்தவனை மும்பைக்கு ஹரிணியின் நினைவுகள் இழுத்து வந்தது.
ஓம் அவளுக்கு எனப் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளைகளை இருவரும் சேர்ந்து கலாட்டாக்கள் பல செய்து ஓட விடுவது, இரவு நேரம் சுவரேறி குதித்து ஊர் சுற்றுவது, கேளிக்கை விடுதிக்குச் சென்று கண்ணில் காண்போரை எல்லாம் வம்பிலுப்பது, பிரச்சினை என்று வந்து விட்டால் தலை தெறிக்க ஓடி விடுவது என நண்பர்கள் இருவரின் நட்பைக் கண்டவனுக்கு அந்தக் கூட்டில் இடம் கிடைக்காத என ஏக்கமும் பிறந்தது.
கௌதம் ஹரிணியுடன் இருந்தாலும் அவனின் பார்வை கழுகின் பார்வை போல் ஹரிணியை சுற்றி என்ன நடக்கிறது என்பதிலேயே குறியாய் இருக்கும். அந்தப் பார்வை வட்டத்தில் ஒரு நாள் ரிஷி தரன் சிக்கினான். ரிஷியின் பார்வை ஹரிணியின் மீது காதலாய் படிவதை உணர்ந்தவனுக்கு. அவனிடமிருந்து ஹரிணியை பாதுகாப்பது வேண்டும் என்ற முடிவுடன் டபுள் ட்யூட்டி பார்த்தான். ' இது என்னோடது. உனக்குத் தரமாட்டே போடா. ' என்பது போல் ஹரிணியை ஒழித்து வைத்துத் கொள்ளவான். ஆனாலும் ரிஷி ஹரிணியின் திருமணத்தைத் தடுக்க முடியவில்லை.
எத்தனை வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு மாதம் இரு முறை இருவரையும் காண மும்பை வந்து விடுவான். தன் வலது கரத்தில் கௌதமின் கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஹரிணியின் இடது கரம்பற்றி உடன் செல்ல மனம் துடிக்கத் தான் செய்தது. காதலாய் அல்ல, நட்பாய்… ஹரிணியின் காதலை காட்டிலும் அவள் நட்பிற்காக ஏற்கும் அளவுக்கு, இருவரும் நட்பும் அவனை வியந்து பார்க்க வைத்தது.
இப்போது மட்டுமல்ல எப்போழுதுமே ஹரிணியின் காதல் ரிஷிக்கு மட்டும் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவன் பங்கு கேட்பது இருவரின் நட்பில் தனக்கென ஒரு இடம்.
" என்னைக்குமே நா முக்கியமா இல்ல ஹரி முக்கியமான்னு உங்கிட்ட கேள்வி கேக்க மாட்டேன் ஹரிணி. எனக்குத் தெரியும் அவனோட லைஃப்ல நீ எந்த அளவுக்கு முக்கியமான ஆளுன்னும் உன்னோட லைஃப்ல அவனுக்கு இருக்குற இம்பார்ட்டன்னும். மொத கொஞ்ச வர்ஷம் நா அவன கண்டுக்கல தா. ஆனா வைசு ஆக்ஸிடென்ட்க்கு அப்றம் அவன நேர்ல போய்ப் பாத்த அன்னைக்கி தா நா பண்ண தப்போட வீரியம் எனக்குத் தெரிய வந்துச்சி.
அவங்கிட்ட போய் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா 'நா அப்படி தா பண்ணுவேன்னு. ' இருக்குற நிலமைய விட மோசமா போய்டுவானோன்னு பயம் எனக்கு இருந்தது. அவன தடுக்க என்னால முடியல. பட் அந்தப் போதை பழக்கத்துக்கு அவெ முழுசா அடிமையாகாம இருக்க வழி பண்ண முடிஞ்சது. அவனுக்குச் சப்ளே பண்ற ஆளுங்க மூலம் அதிக போத தராத மாத்திர மட்டும் ஹரி கைக்குக் கிடைக்கிற மாறிப் பண்ணேன். " என்றவன் அங்கிருந்த ஒரு கப்போர்டில் சில துணிகளைக் காட்டினான். இதே மாதிரியான உடைகள் கௌதமிடம் உண்டு.
"இது... இது..."
"இது எங்க பிறந்த நாளுக்கு நா எடுத்தது. இது என்னோட செட். அவனோடத அவெங்கைக்கு போறா மாறிப் பாத்துப்பேன். ஒவ்வொரு பிறந்த நாள் அப்பையும் ஒரே மாறிச் சட்டை போட்டுட்டு காட்டுக்குள்ள சுத்துவோம். நடுராத்திரில கேக் வெட்டி, வார்டன பயமுறுத்தி, பட்டாசு வெடிச்சி… மத்த பசங்க முன்னாடி கெத்தா கொண்டாடுவோம். ஹரிக்கு அது ரொம்ப பிடிக்கும். நா அத மறக்கல. மறக்கவும் மாட்டேன்." என்றவனுக்கு கௌதமுடன் கழித்த பொழுதுகள் நினைவு வந்தது. வெகுநேரம் மௌனத்தில் கழிய.
"நீ அவனுக்கு எப்படி டிகிரி வாங்கி குடுத்தன்னும் எனக்குத் தெரியும். " என்றவனின் வெகு நேரத்துக்குப் பின் உதட்டில் சிறு புன்னகை.
ஏனெனில் ஆள் மாறாட்டம் செய்து பரிச்சை எழுதிப் பாஸ் ஆனான் கௌதம். அதில் ஹை லைட் என்னென்னா ஹரிணி ஆணாக மாறிக் கௌதமிற்காக எழுதினாள். தன் சிகையை தலைப்பாகை மூலம் மறைத்துத் தாடி மீசை வைத்துச் சிங் கெட்டப்பில் எக்ஸாம் ஹாலுக்கு சென்றாள். ரிஷியின் புகைப்பட கலெக்ஷனில் அந்தப் படமும் இருந்தது.
" நம்மோட தேவ யாருக்கு அதிகமா இருக்கோ. அவங்க கூட நாம கண்டிப்பா இருந்தே ஆகணும் ஹரிணி. என்ன விட ஹரிக்கு தா நீ அதிகமா தேவப்பட்ட. இப்பையும் அவனுக்கு நீ தேவ. அதுனால உங்க ரெண்டு பேருக்கும்மான இடைவெளில நா என்னைக்கும் வரமாட்டேன். பட் எனக்கு ஆச இருக்கு. இது மாறி எப்பையும் இருக்கணும்னு. " எனத் தன் கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான். அது ஊட்டியில் எடுக்கப்பட்டது. அதில் கௌதமின் தோளில் சாய்ந்து தரனின் கரத்தை மார்போடு அணைத்தப்படி நடுவில் ஹரிணி அமர்ந்திருக்க அவளின் இருபுறமும் அந்த அண்ணன் தம்பி இருவர் என மூவரும் ஒன்றாக இருந்த தரும் அது.
"ரொம்ப அழகா இருக்கு. " என அதை வாங்கி ரசித்தவளின் கரத்தில் இருந்த புகைப்படத்தை வாங்கி அந்தச் சுவற்றில் ஒட்டி வைத்தான்.
" ஹரி உனக்கே தெரியாம உனக்குக் கல்யாணம் ஏற்பாடு செய்ற வரைக்கும் உங்கூட பேசிப் பழகாம, என்ன உனக்குப் புரிய வைக்காம, உன்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே எனக்கு இல்ல. அவெந்தா காரணம் நம்ம கல்யாணம் நடக்க. இப்பையும் உன்னால தா அவெ ஊட்டிக்கி வந்தான். நீ தான் ஹரியோட சந்தோஷம். அவனுக்கு எப்ப எது தேவன்னு பாத்து பாத்து செய்ற உன்ன எனக்கு மட்டுமேன்னு நா பிடிச்சி வச்சிக்க விரும்பல.
அதே நேரம் என்ன வெறுத்து ஒதுக்குறவங்க கிட்ட போய்க் கெஞ்சி கெஞ்சி பேச, என்னால முடியாது. இது தா நா. என்னால என்ன மாத்திக்க முடியாது ஹரிணி. ஹரிய விட்டு ஒதுங்கி இருந்தேனே தவிர. ஒரேடியா அவன நா ஒதுக்குனதும் இல்ல. " என்றவனின் குரலில் கவலையும் வருத்தமும் இருந்தது. எப்போதும் கணீரெனக் கேட்டே பழக்கப்பட்ட அந்தக் குரல் உடையவும் தாங்க முடியாது.
" எனக்குத் தெரியும் பாவா உன்ன பத்தி. " எனச் சொல்லிக்கொண்டே அவனின் அருகில் செல்ல, அவன் கரம் நீட்டித் தடுத்தான், என்னை நெருங்காதே என்பது போல்.
" தெரியும்னா ஏ ஹரிணி அப்படி சொன்ன. பொறாம, செல்ஃபிஷ்ன்னு. சின்ன வயசுல இருந்த மாறியே வா இப்பையும் இருந்திடப்போறேன். " என்க.
" அப்படி இல்ல பாவா." என்றவளை பேச விடாது,
" ஹரி தா என்ன ப்ளேம் பண்றான்னா நீயும் அதையே தா சொல்ற. அவெ சொன்னத விட உன்னோட வாயால அத கேக்கும்போது ரொம்ப வலிக்கிது ஹரிணி. இதயத்த ரெண்டா பிளக்குற மாறி வலி. உன்ன அளவுக்கு அதிகமா காதலிக்குறதுனால நீ என்ன நோக்கிச் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் என்ன அதிகமாவே காயப்படுத்து.
ஒவ்வொரு முறை உனக்கு எவெங்கூடையாச்சும் உங்கண்ணே நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணும் போதெல்லாம் அப்படியே உன்ன தூக்கிட்டு வந்திடலாமான்னு தோனும். எவெ எதுக்க வந்தாலும் உனக்காக உன்னோட காதலுக்காக எதுவேண்டுமானாலும் செய்ய நா தயாரா இருக்கேன். இப்பையும் தா. பிகாஸ் I love you madly. But. But your words. killing me. " என்றான். நேற்றை விவாதம் எந்த அளவு அவனைப் பாதித்தது என்பதை உணர முடிந்தது ஹரிணியால், கண்களில் நீர் சுரக்க அவனை அணைத்து ஆறுதல் சொல்லத் துடித்து அவனின் அருகில் செல்ல, மீண்டும் கரம் நீட்டித் தடுத்தான்.
"இன்னும் நிறைய இருக்கு. ஓம்கார். சந்திரபோஸ். பார்கவி டெத்துன்னு. " என்றவன் எப்படி சந்திரபோஸ் தான் காரணம் என்பதை கண்டு பிடித்தான் என்று சொல்லத் தொடங்கினான்.
இவ்வுலகில் மிகவும் கூர்மையான ஆயுதம் எது என்று தெரியுமா. மனிதன் வாயில் இருந்து வரும் சொல். அது மனிதனை உயிரோடு தான் வைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு நொடியும் மரணமே மேல் என்று சொல்லும் அளவிற்கு வலியைத் தந்து விடும். உறங்க விடாது. நம் சிந்தனையிலேயே இருந்து நம் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் உறிஞ்சி எடுத்து விடும்.
ரிஷிக்கும் அது தான் நேர்ந்தது. பல ஆண்டுகளாக நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டே இருக்கிறது. கௌதம் குத்திக்காட்டிய வார்த்தைகளோ இல்லை ஹரிணி கூறி வார்த்தைகளோ இல்லை. அது கலியபெருமாள் வாயில் இருந்து வந்தவை.
"ஒரு கையெழுத்து போட்டு எம்மகள நானே கொன்னுட்டேனே. " என வார்த்தை தான் அது. ஒவ்வொரு நொடியும் அதை சொல்லிச் சொல்லி வேதனையில் அழுத அவரின் வார்த்தையில் உள்ள பொருள் அந்த வயதில் அவனுக்குப் புரியவில்லை. புரியும்போது சும்மா இருக்கு முடியவில்லை. பல ஓநாய்கள் சேர்ந்து தன் தங்கையை வேட்டையாடும் போதும் அதைத் தடுக்க முடியாது நின்று பார்க்க நேர்ந்ததை ரிஷியால் இன்றும் மறக்க முடியவில்லை.
விடாமல் துரத்திய கலியபெருமாளின் முதலாளியின் கூட்டம், சுற்றத்தாரின் பேச்சு என நடந்த அனைத்தையும் ரிஷி தன் காதுகளால் கேட்டான் தானோ. தன் கரத்தை அழுத்திப் பிடித்து அழுத தன் சித்தப்பாவின் கண்ணீரையும் வேதனையும் அருகில் நின்று உணர்ந்தவன் ஆயிற்றே.
இன்று வரை அவனின் செவிகளில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது கலியபெருமாளின் கதறல். தன்னை சுற்றி நடக்கும் எதுவும் புரியவில்லை என்ற போதிலும் அவனின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.
கலியபெருமாளின் கதறல் தான் ரிஷியைக் கௌதமை தேடிச் செல்ல வைத்தது. நட்பாய் பழகவும் வைத்தது. கௌதம் வைசுவை பார்கவியுடன் ஒப்பிட்டு பேசியபோது தன் இயல்பு குணம் தலை தூக்க, கௌதமை மறந்து படிப்பில் கவனம் செலுத்தினான் ரிஷி. ஆனாலும் கலியபெருமாள் குரல் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. கல்லூரி காலத்தில் முக்கியத்துவம் கொடுத்து பார்கவி மரணத்தை ஆராயவில்லை என்றாலும் சிறு சிறு முயற்சியைச் செய்து கொண்டு தான் இருந்தான். யுகேந்தர் மூலமாக.
விதி வலியதாய் இருந்தது.
அது ரிஷியை மேலும் சோதித்தது. படிப்பு முடியும் முன்னரே தந்தை விபத்து. வைசுவை தேடும் வேலை. கோமாவில் விழுந்த தந்தையையும் அன்னையையும் அழைத்துக் கொண்டு நாச்சியம்மாளின் வீடு வந்தவனுக்கு கிராமத்து வாழ்க்கை அத்தனை எளிதாக இருக்க வில்லை.
சிறு செடி கூட நட்டு பாதுக்காக்கும் அளவுக்குப் பொறுமை இல்லாத அவனை வயலில் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்க வைத்தது விதியைத் தவிர வேறு ஒன்றாக இருக்கு முடியாது. இதுவரை சுகமாய், தான் விரும்பிய படி வாழ்ந்து வந்தவனை விதி அது இஷ்டத்திற்கு வாழ வைத்தது. தனி ஒருவனாய் நின்று அனைத்து வேலைகளையும் செய்வான்.
கைகள் காய்த்து போகும் அளவுக்கு வேலை செய்வான். யார் தடுத்தாலும் கேட்கமாட்டான். யாரிடமும் தேவையின்றி பேசமாட்டான். ஆனால் அவன் பேசும் வார்த்தைகள் சரியா இருக்கும் என்று சொல்லும் அளவுக்குப் பெயர் வாங்கினான். அது வீட்டிற்குள் மட்டுமல்ல ஊரிலும் அவனுக்கு எனத் தனி மரியாதையை உண்டாக்கியது.
உடல் சோர்ந்து ஓய்வு கேட்கும் வரை வேலை செய்வான். ஏனெனில் மனம் அமைதியாக இல்லாமல் அதன் வலிமையை இழந்து இருந்ததால் விழி மூடினாலும் உறக்கம் வருவதில்லையே. அதான் ஓய்வின்றி உழைத்தான். மனம் வைசுவிடமும் பார்கவிடமும் சென்று நின்றது.
வைசு வயதுப் பெண். அவளைக் காணாது தவித்தபோது தான் கௌதமின் தவிப்பு அவனுக்குப் புரிந்தது. தன்னால் முடிந்த வரை தங்கையைத் தேடி பார்த்தான். கிடைக்கவில்லை. டிடெக்டிவ்வாக இருந்த அவனுக்கே வைசுவின் கேஸ்ஸில் எந்த ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.
‘சரி நம்ம வேலய நாம பாப்போம் எது நடக்குதோ அது நடக்கட்டும் எனத் தன் பாட்டுக்கு இருந்த அவனை மீண்டும் பார்கவி கேஸ்ஸை கையில் எடுக்க வைத்தது. அதே விதி தான்.
" எனக்குப் பார்கவி டேத்ல மூனே மூணு கேள்வி இருந்தது. அது பார்கவி இறப்ப பத்தி யாரு தப்பான தகவல பரப்பணும். சித்தப்பாவோட எஸ்டேட் முதலாளியும் அவரோட வைஃப் குழந்தன்னு குடும்பமுமே ஏ வந்து சித்தப்பாட்ட வீடே கதின்னு கிடக்கணும். போலிஸ்ல குடுத்த கம்ப்ளைண்ட்ட ஏ ஒரு போலிஸ்ஸே ரிட்டன் வாங்க சொல்லிச் சித்தப்பாவ மிரட்டணும். இதெல்லாத்துக்கும் பதில் வேணும்னா முதல்ல பார்கவி எப்படி இறந்தான்னு தெரியணும்.
பார்கவி கேஸ்ஸ முடிக்கக் காரணமா இருந்தது உன்னோட அண்ணே ஓம்கார் தான். அந்த நன்றி எனக்கு ஓம் மேல எப்பையும் உண்டு. அந்தக் காரணத்துக்காகத்தா இத்தன நாள் உயிரோட விட்டு வச்சேன். அவன பத்தி விசாரிக்கப் போய்த்தா என்னோட கண்ணுக்குத் தன்செயன் மாட்டுன்னான்.
ஹாஸ்பிடல்ல பார்கவிக்கி ட்ரீட்மெண்ட் பாத்த டாக்டர்ஸ்ல அவனும் ஒருத்தெ. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு சித்தப்பா காதுக்குள்ள என்னென்னமோ பேசி அவர்ட்ட கையெழுத்து வாங்குனது அவன் தா.
ஃபஸ்ட் தன்செயன்னு பேரு மட்டும் தா கிடைச்சது. நா பாத்த ஆளு தா தன்செயன்னு கன்ஃபாம் பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணது உன்னோட அண்ணே ஓம். அவனோட மெடிக்கல் கம்பேனிய பத்தியும் அவெ டீலிங்க வச்சிட்டு ஆட்கள பத்தியும் விசாரிச்சபோது தா தன்செயன் கிடைச்சான். அவன தொடர்ந்து சந்திரபோஸ்ஸும் அவெ செஞ்சிட்டு இருந்த கொடுமையும் தெரியவந்தது. " என்றான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..