அத்தியாயம்: 42
நம்பிக்கை.
ஒருவர் மீது.
தோன்றும்போது யோசிக்காது.
ஆனால்.
அந்த நம்பிக்கை.
உடையும் போதுதான்.
மனம் யோசிக்கும்.
ஏன் நம்பினோம் என்றல்ல.
எப்படி இழந்தோம் என்று.
அந்தச் சிந்தனையில் தான் ரிஷி அமர்ந்தான். அத்தனை சிகிரெட் பாக்கெட்டுகளையும் காலி செய்தபிறகும், மனம் நிலையில்லாது துடித்தது.
பவதாவையும் ஹரிணியையும் வீட்டிற்கு கூட்டிவந்து அந்த இரவு இருவருக்குள்ளும் நடந்த நினைவுகள் மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
தான் ஹரிணி மேல் வைத்த நம்பிக்கையை அவள் தன்னிடம் வைக்கத் தவறி விட்டாளோ. இருவரும் புரிதலிலுடன் வாழ்ந்து வருவதாக நினைத்த அவனுக்குப் பெரிய அடி விழுந்தது.
அன்று கௌதம். இன்று ஹரிணி. அவன் வார்த்தைகளால் சொல்லி விட்டான் உன்னைப் போன்ற ஒருவனை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாற நான் தயாராக இல்லை. நீ ஒரு ஏமாற்றுக்காரன் நம்பிக்கை துரோகி. இது கௌதம் சொன்னது. அவனை அவனின் கல்லூரியில் சென்று பார்த்த அன்று ரிஷியிடம் சொன்னது.
இப்போது ஹரிணி. முதலில் வார்த்தையை வாய் திறக்காது தன் பார்வையால் சொல்லியவள் பின் தன் வார்த்தையாலும் சொல்லித் தரன் மனதை காயப்படுத்தி விட்டாள். ஒரு முறை அல்ல பல முறை இதே போன்று தன்னை காயப்படுத்தி விட்டதாகத் தோன்றியது அவனுக்கு.
திருமணம் நடந்தேறிய புதிதில் மும்பையில் உள்ள அவள் வீட்டில் சுயநினைவு இல்லாத பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி உறவு கொண்டதாக அவள் சாட்டிய குற்றமே அவனின் மீது அவள் கொண்ட அவநம்பிக்கைகாக முதல் படி. அந்த வார்த்தை தான் அவனை வெறி கொள்ளச் செய்தது. அதற்குத் தண்டிக்கிறேன் என்ற பெயரில் தான் அவளிடம் நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு. மீண்டும் இதே போன்றொரு சூழ்நிலை வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
அவளின் மீது கோபம் கொள்ள கூடாது என முடிந்த வரை இது போன்று பேச்சை வர விடாமல் பார்த்துக் கொண்டான். இருந்தும் காயம் பட்டு நிற்கிறான்.
இன்றைய அதிகாலையில் ஓடி வந்து கௌதமை அணைத்து, அவனின் நலம் அறிய அவள் கொண்ட ஆவல், பின் அவனின் தோளில் நிம்மதியுடன் சாய்ந்தது, இந்த மூன்றுமே ரிஷியின் மீது அவளுக்கு இருந்த நம்பிக்கையின்னமையை காட்டியது. அப்படித்தான் உணர்ந்தான் தரன். அது தான் அவனின் கோபத்திற்கு முக்கிய காரணம்.
ஊட்டியிலிருந்து புறப்பட்ட கார் அவர்களின் வீட்டை வந்து சேர இரவானது. அந்த இரவு இருவருக்குள்ளும் இருந்த பல விதமான உணர்ச்சிகளை வெளியே கொண்டு வந்தது.
அடுத்தது காட்டும் பளிங்கு போல் ஹரிணியின் முகமே காட்டி கொடுத்து விடும், அவளின் எண்ண ஓட்டங்கள் என்ன என்று. சுருதியை காப்பாற்ற சென்ற அந்த இரவு முழுவதும் தூக்கமின்றி கண்டதையும் நினைத்து விழித்திருந்தாளே, அன்று அத்தனையையும் அவளின் முகம் பார்த்துப் படித்து தெரிந்து கொண்டான் ரிஷி. குறிப்பாகக் கௌதமை மாட்டி விட்டு விட்டு வேடிக்கை ரிஷி பார்த்து விடுவானோ என்று அவள் பயந்தது, ரிஷியின் மீது கொண்ட அவநம்பிக்கையாகப்பட்டது அவனுக்கு.
' என்ன நம்பாமல் தான வந்ததும் அவனைப் பாய்ச்சி வந்து கட்டிப்பிடிச்சா. நம்பாம தான விடிய விடிய உக்காந்திருந்தா.' என அவனுள் தோன்றியது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. கௌதம் விசயத்தில் ரிஷியை ஹரிணி நம்ப தயாராக இல்லை.
மேய்ச்சலுக்கு செல்லும் பசுவைப் பிரிந்த கன்றுக் குட்டி போல் அவள் காத்திருந்ததும், தாயை கண்டதும் ஓடி வந்து அணைத்த அவளின் செயலும் பாசமா கண்ணிற்கு தெரியாமல், மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவன் எங்கே பாதி விலைக்கி விற்று விடுவானோ என்ற பயமாகத் தான் ரிஷியின் கண்களுக்குத் தெரிந்தது. என்னைப் பற்றி நன்கு அறிந்தவள் என் மனைவி என்ற கர்வம் தவிடு பொடி ஆனது போல் உணர்ந்தான்.
அவனுடைய கோபத்திலும் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் கௌதமின் நலனை அறிந்த பின் ஹரிணி ரிஷியுடன் பேசி இருக்க வேண்டும். பேசவில்லை. ஏன் ரிஷியைத் திருப்பி கூடப் பார்க்கவில்லை. பெண்களை ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று கௌதம் தான் கூறினான். ஆனால் அவர்களை ஏற்றிக் கொண்டு கார் ஓட்டியது ரிஷி. பவதா, ஹரிணி, ரத்தம் கொடுத்ததால் சோர்ந்து போய் இருந்த சம்பத், வேல்ராஜ் என அனைவரும் காரில் ஏற,
ஹரிணி மட்டும் ஏக்கத்துடன் கௌதமையே ஜன்னலில் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டே வந்தாள். கண்ணை விட்டுக் கௌதம் மறையும் வரை தலையை உள்ளையே கொண்டு வரவில்லை. சரி அதுக்கு அப்புறமாச்சும் அவள் ரிஷியைக் கண்டு கொண்டாளா. இல்லையே. சம்பத்தும் பவதாவும் கேலி செய்தாலும் முகத்தைச் சுண்டிக் கொண்டு பேசவில்லை. பின் காரில் நிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தவளை தட்டி எழுப்பி இழுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது.
இருவரும் ஓட்டிய அந்தத் தெய்வத்திருமகள் க்ளைமாக்ஸ் காட்சியைக் கண்ட ரிஷிக்கி கோபம், கடுப்பு, எரிச்சல் இன்னும் என்னென்ன இருக்கோ அது அத்தனையும் கதவ தட்டாமல் அவனின் மூளைக்குள்ள வந்து உக்கார்ந்து கொண்டது. ‘
என்ன பண்ண. டயம் சரியில்லை. அவனுக்கா. இல்ல இவளுக்கா. ரெண்டு பேருக்குமே தா.’
ஆத்திரத்தில் மதி கெட்டு எற்கனவே செய்த தவறை திரும்பச் செய்து விடக் கூடாது. அதனால் பொங்கி வந்து கோபத்தை தண்ணீர் விட்டுப் பொங்காமல் வீடு திரும்பும் வரை பாதுகாத்தவன், அறைக்கு வந்ததும் பொங்கத் தொடங்கி விட்டான். முடிந்த வரை நிதானமாகத் தான் பேச முயன்றான்.
" உனக்கு ஏம்மேல எப்பதா முழுசா நம்பிக்க வரும் ஹரிணி. " எனச் சாந்தமான குரலில் தான் கேட்டான். ஆனால் அழுத்தமாக வந்த வார்த்தைகளில் வலி இருந்தது.
ரிஷி திருத்த முடியாத தவறு செய்த இடம் என்றால் அது கௌதமும் ஹரிணியும் தான். இருவருமே அவனுக்கு ஸ்பெஷல் தான். அதனால் தான், தான் செய்த தவறை சரி செய்ய நினைத்து அவர்களின் முன் இறங்கி சென்று பேச, இதை உணராது இருவருமே ரிஷியின் மனதை காயப்படுத்தி விடுகின்றனர்.
" ம்ச்... என்ன பாவா இது. சின்னப் பிள்ள மாறிப் பேசுற. உன்ன நம்பாம வேற யார நா நம்பப் போறேன். " என விளையாட்டாகப் பேசியவள் நன்கு கவனிந்திருந்தால் அவனின் கிட் என்ற அழைப்பு இல்லாமால் ஹரிணி என்று அழைப்பு வந்ததை உணர்ந்து அவனின் முகம் பார்த்துப் பேசி இருப்பாள். இல்லையே அவள் பார்க்கவில்லையே.
"ம். பாத்தேனே. உன்னோட நம்பிக்கைய. காலைல நீ பாத்த பார்வையே சொல்லுச்சி. நீ எந்த அளவுக்கு என்ன நம்புனன்னு."
" என்ன பாவா சொல்ற. " என அவனின் முகம் பார்க்கக் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது போல் தெரிந்தது.
" நா ஹரிய பலியாடா ஆக்கி அவெ மேல கொல பலி போட்டு மாட்டிவிட்டுடுவேன்னு நினச்சியே அந்த நினப்பு. பெரிய அவார்ட் வாங்குன மாறிப் பெருமையா இருந்துச்சி. " என நக்கலாகச் சொல்ல,
" என்ன சொல்லவர்ற பாவா நீ. எனக்குப் புரியல. "
" நடிக்காத டி. நா உன்னோட ஃப்ரெண்ட பத்தி பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஹரி விசயத்துல என்ன பத்தின உன்னோட நினப்பும் தெரியும். "
"பாவா நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சி தா பேசுறியா. " என்றால் சிறு எரிச்சலுடன். கௌதமை பெயரைச் சொல்லியதால் வந்த எரிச்சல் அது.
"எப்படி உன்னால அப்படி நினைக்கத் தோனுச்சி ஹரிணி. ம். அவனும் சரி நீயும் சரி ரெண்டு பேருமே என்ன நம்ப கூடாதுக்கிறதுல ரொம்ப கவனமா தா இருக்கிங்க. என்ன பண்ணா உங்களோட அந்த எண்ணத்த மாத்திக்கிவிங்கன்னு எனக்குத் தெரியல. இனி தெரியவும் வேண்டும். I don't need anyone. Especially you. " என கோபமாகச் சொல்ல, அவளின் கண்களுக்கு ரிஷி சிறுவனாகத் தெரிந்தான்.
'அதெப்படி என்ன நீங்க நம்பாம இருக்கலாம். நாந்தா பாத்துக்கிறேன்னு சொன்னேன்ல. பாத்துப்பேன். அதுக்குள்ள சந்தேகப்படுறீங்க. ' எனத் தாயிடம் கோபித்துக் கொள்ளும் சிறுவனாய் தெரிய, கூடவே எரிச்சலும் வந்தது.
அவனின் பேச்சில் பொறாமை இருப்பதும் தெரிந்தது. 'எத்தன தடவதான்டா சொல்றது. திரும்பத் திரும்ப கேட்டா மட்டும் மாத்தி சொல்லிடுவோமா என்ன. எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம்னு. ச்ச…' என நினைத்தவள்.
"பாவா நீ பேசுறது எனக்குக் குழந்த தனமா தெரியுது. உனக்கு அம்மா அப்பா அண்ணே தங்கச்சின்னு எல்லாமே தனித்தனியா இருக்காங்க. ஆனா எனக்குக் கௌதம்கிற ஒரு ஆளுக்குள்ள தா எல்லாருமே இருக்காங்க. அதா அவனுக்கு எதாது ஆகிடுமோன்னு கொஞ்சம் அதிகமாவே பயந்துட்டேன். அதுக்காக உன்ன நம்பல அது இதுன்னு பேசாத. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தா. உன்ன எந்த அளவுக்கு லவ் பண்றேன்னோ, அதே அளவுக்குக் கௌதமை மேலையும் எனக்கு அன்பு உண்டு. இப்படி முட்டாள் மாறி யோசிக்காத. I trust you. "
" எனக்கு அப்படி தோனலயே. " என கை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றவனின் தோரணை கோபமேற்றியது.
ஆல்ரெடி அவகிட்ட இருந்து மறைச்ச ரிஷியோட பல சீக்ரெட்ஸ் இப்போ தான் தெரிய வந்திருக்கு. அதை அவளிடம் மறைத்தற்காக ஒரு பக்கம். இப்போது பொறாமையுடன் தன்னை கேள்வி கேட்பது ஒரு பக்கம். இன்னும் பார்கவி மரணத்தை எப்படி கண்டுபிடித்தான் என்று பகிர்ந்து கொள்ளாதது பக்கம். கௌதமையும் அவனையும் ஒப்பிட்டி பேசுவது ஒரு பக்கம். செய்வதெல்லாம் செய்து விட்டுத் தன் முன்னே திமிராய் நிற்கும் அவளின் attitude அதாவது அணுகுமுறை ஒரு பக்கம் என எல்லா பக்கமும் பற்றி எரிய. ஹரிணி வெடிக்க தொடங்கி விட்டாள்.
" எஸ்… எனக்கு உம்மேல சுத்தமா நம்பிக்க இல்ல. அதுவும் கௌதம் விசயத்துல உன்ன நா என்னைக்குமே நம்ப தயாராவும் இல்ல. நம்பவும் மாட்டேன். மத்த எல்லா விசயத்துலையும் உன்ன நா முழுசா நம்புவேன். ஆனா கௌதம் விசயத்துல ஒரு துளி கூட உன்ன நம்பனும்னு எனக்குத் தோனமாட்டேங்கிது.
ஏன்னா உனக்கு அவெ மேல பொறாம. அதனால தா மட்டம் தட்டி அவனோட self confidence உடைக்க பாக்குற. அவெ மேல கொஞ்சமாச்சும் அக்கற இருந்தா பெத்தவங்க சப்போட் இல்லாம வளந்த அவனுக்கு நல்லதா எதையாச்சும் செஞ்சிருப்பா. ஆனா உனக்குத் தா அவனுக்குச் செய்ய மனசில்லையே. தாங்கிற கர்வம் உன்ன செய்யவிடல.
நீ ஒரு Selfish. அவன உன்னோட ஃபோமில ஒருத்தனா நீ நினைச்சிருத்தா. கஞ்சா போதன்னு அவ கெட்ட வழில போகும்போது நீ அவன நிச்சயம் தடுத்திருப்ப. அவன தடுக்க உன்னால முடியும். ஆனா நீ அவன திரும்பிக் கூட பாக்கல. ஏன்னா அவன கெட்டவன்னு சொல்லும்போது எனக்குத் திருப்தியா இருக்கும். உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம். சரியா. " என அடுக்கடுக்கா ரிஷி கௌதமிற்கு செய்தது அநியாயம் என்ற ரீதியில் பேசினாள்.
அவளுக்குக் கௌதமின் கதையைக் கேட்டதில் இருந்தே, ரிஷி நினைத்திருந்தால் கௌதமை தீய பாதையில் செல்லாமல் தடுத்திருக்க முடியும். வீணாகத் தன் ஈகோவை தூக்கி வைத்துக் கொண்டு கௌதமை கை விட்டதில் ஹரிணிக்கு எக்கச்சக்க கோபம் ரிஷியின் மேல். அது அத்தனையும் இப்போது வெளியே வந்தது.
‘அவா சொல்றதுல கொஞ்சோன்டு. கொஞ்சம் தாங்க. உண்ம இருக்கு தான். அதுக்காக மீதிய இவளா கற்பன பண்ணி பேசுறது தப்பில்லையா. ரிஷி தப்பே செஞ்சிருந்தாலும் அத எப்படிங்க ஓப்பனாகச் சொல்லாம். அதுவும் தரன் மூஞ்சிக்கி முன்னாடியே. அதான் பையனுக்குக் கோபம் வந்து விட்டது. ஆனா அத ஹரிணி மேல காட்டல. அமைதியாகப் பால்கனிக்கு சென்றவன் சில தம்மை முழுதாக ஊதி தள்ளிக் கொண்டு இருந்தான்’.
மிஸ் அன்டர்ஸன்டிங். எப்படி வந்தது. எப்படி அத நெம்பி விட்டுச் சரி பண்றது என யோசித்துக் கொண்டிருக்கிறான்.
புகைத்துத் தள்ளும் அவனை எட்டிப்பார்த்தவளுக்கு.' ரொம்ப நீளமா பேசி அவெ மனசு கஷ்டப்படுற மாறிப் பண்ணிட்டோமோ. ச்ச. ' என்றிருந்தது அவளின் காதல் கணவனின் நிலையைப் பார்த்து.
ஓம்மின் கொலை, தீப்தியின் தற்கொலை, பார்கவியின் மரணம், பார்க்கும் வேலை என எத்தனை விடயங்களையும் தன்னிடம் இருந்து மறைத்துவிட்டான். அன்னியோன்யமான கணவன் மனைவியாக நீண்ட காலம் பிரியாது வாழ வேண்டும் என்றால் அதற்குக் கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பது ஹரிணி எண்ணம். தன்னை மனைவியாக ஏற்று இருந்தால் தன்னை பற்றிய அனைத்தையும் என்னிடம் பகிர்ந்திருப்பான். கௌதம் சொன்னது போல் அவனைப் பற்றி முழுதாகத் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் வர, கூடவே கண்ணீரும் வந்தது. கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
உறக்கம் வரவில்லை. ஆனாலும் கண்ணைத் திறந்து எதையும் பார்க்கவில்லை. விளக்கை அணைத்து படுத்தவள் அப்படியே உறங்கி விடவே, அவளின் செல் ஃபோன் சிணுங்கியது. அழைத்தது கௌதம்.
"ஓ விடிஞ்சிடுச்சா. " என மணியைப் பார்க்க அது ஏழு என்றது. 'ரொம்ப நேரம் தூக்கிட்டோமோ. ' என நினைத்தவளுக்கு அலைபேசியின் விடாத அழைப்பு கேட்க, மற்றதை மறந்து கௌதமுடன் சந்தோஷமா பேசினாள். ரிஷி பாத்ரூமிலிருந்து வருவது தெரிந்தது, கூடவே சிரித்து பேசும் அவளை முறைப்பதும் போன்று தெரிய.
'போச்சி இப்ப இதுக்கும் திட்டப் போறான். காலங்காத்தால கட்டுன புருஷெ கண்ணு முன்னாடி இருக்கேன். என்ன கவனிக்காம ஃப்ரண்டு கூடக் கடல போட்டுட்டு இருக்கான்னு தப்பா நினைச்சிக்க போறான். ஆமா இவெ இந்த நேரம் நானும் விவசாயிதாங்கிற மாறி வயலுக்குப் போயிருக்கணுமே. ஏ போல. ' என யோசித்தபடியே விரைந்து பேசி முடித்து விட்டு எழுந்து பாத்ரூம் சென்றவளை உற்றுப்பார்த்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்திருந்தான்.
அவளுக்கு எப்படி தெரியும் நள்ளிரவில் அவளைத் தன்னோட அணைத்து உறங்கியது ரிஷியின் செயல். அகில் உடன் இல்லாததால் தலையணையை இறுக்க அணைத்துக் கொண்டு உறங்கும் மனைவியிடம் இருந்த தலையணையை உறுவி வீசி எறிந்து விட்டுத் தன்னை அவ்விடம் வைத்தது அணைத்துக் கொண்டு உறங்கியது அவளுக்கு நினைவில் இல்லை. அவனின் அணைப்பு அவளை யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன். அவளாகவே விட்டுச் செல்ல நினைத்தாலும் விடமாட்டேன் என்பது போல் இருந்தது.
சிறிது நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள், பார்வையை மாற்றாது அமர்ந்திருந்த ரிஷியைப் பார்க்க. ' இப்பையும் அவனோட பார்வைய வச்சி என்ன நினைக்கிறான்னு என்னால கண்டு பிடிக்கவே முடியல. அப்ப நா ஒரு வைஃபா தோத்துட்டேன்னு தான அர்த்தம். ' என மனம் சோர்ந்து போனது.
அறையை விட்டு வெளியே செல்லப் போனவளின் கரத்தைப் பற்றி நிறுத்தியவன். வா என்பது போல் அவளை இழுத்துச் சென்றான், ஜும் ரூம் என்று சொல்லப்பட்ட அவனின் ரகசிய அறைக்கு.
'ஆல்ரெடி நா பாத்துட்டேன். நீ என்னத்த புதுசா காட்டிடப் போற. ' என அவனுடன் நடந்தவளுக்கு, அந்த அறையே சிறிது அதில் தான் கண்டது அதனினும் சிறிது எனத் தோன்றியது.
அந்த அறையின் நான்கு பக்க சுவற்றில் இரண்டை மட்டுமே செல் ஃபோனின் வெளிச்சத்தில் பார்த்திருந்தாள். அதையும் முழுதாகப் பார்ப்பதற்குள் ரிஷி வந்து இழுத்துச் சென்று விட்டான். இப்போது அறை முழுவதையும் பார்க்கிறாள். மங்கிய வெளிச்சமின்றி நல்ல ஒளியில், குண்டு பல்பை மாற்றிவிட்டான் போலும்
ஒரு சுவரில் ப்ரொஜெக்டரின் ஒளி வந்து விழுந்தது. பார்கவி மரணத்தில் கிடைத்த வீடியோவை ப்ளே செய்து பார்த்தபடியே அங்கிருக்கும் த்ரெட் மில்லில் நடப்பான் போலும். தன்னுள் இருந்த கோபம் குறையாது இருக்க அந்த வீடியோவைப் பல முறை ஓட விட்டு விட்டு அங்கிருக்கும் எக்யூப்மெண்டில் வியர்வை வடிய உடற்பயிற்சி செய்வான்.
மற்றொன்றில் கௌதமும் அவனும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படங்கள் இருந்தது. பதினைந்து வயது வரை தான் ஒன்றாகக் கொண்டாடியிருப்பார். எட்டு வயது வரை உள்ள புகைப்படங்களில் ரிஷி முகத்தைச் சுருக்கிக் கொண்டு கோபமாகக் கேக்கை கௌதமிற்கு ஊட்டி விட்டுவது போல் இருந்தது. மீதி மகிழ்வுடன் கொண்டாடிய தருணம்.
மற்றொன்றில் தயானந்தன். தன்செயன், சந்திரபோஸ், மடோனாவின் தம்பி நிக், சுருதி என அந்தக் கொலைகார கும்பலின் புகைப்படங்களும் என்ன செய்து அவர்களை வெளியே இழுப்பது. தான் செய்தது இனி செய்யவேண்டியது என்பதை சிறிய காகிதத்தில் எழுதித் தொங்க விட்டிருந்தான்.
மற்றொன்றில் கௌதம் மற்றும் ஹரிணியின் புகைப்படங்கள் இருந்தது. அவை அனைத்தும் அவளின் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்டது. இருவரும் தங்களின் இரவைக் கழிக்கும் அவர்கள் மரவீட்டிலும் அவளும் கௌதம் இருக்கும் புகைப்படங்கள் உண்டு. ஆனால் அது கௌதமின் திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்டவை. இது கௌதமுடன் நட்பாய் கல்லூரி காலத்தில் ஊர் சுற்றியபோது எடுக்கப்பட்டது.
அதன் நடுவில் ஒரு பெரிய புகைப்படம் இருந்தது. மற்ற எல்லாவற்றையும் விட அதில் சம்பத், சாரா, சூர்யா, ரிஷி என நால்வரும் இருந்தனர்.
"சாராக்கா. " என அருகில் சென்று பார்த்தாள் ஹரிணி.
" ம்… சாரா. எங்களோட ஃப்ரண்டு. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம எங்க கூடப் பழகுன பொண்ணு. இப்ப இவா உயிரோட இல்ல. சூரியாவும் தா." என்றான் ரிஷி.
'பாத்துக்க எங்களுக்கும் கேர்ள் ஃப்ரண்டு உண்டு. எங்களுக்கு ஃப்ரெண்ஸ்ஷிப்னா கடல்ல மூழ்காத ஷிப்புன்னு தெரியும். ' என்பது போல் பார்த்தான் ரிஷி.
" ரெண்டு பேரோட டெத்துக்கும் ஒரு வகைல உன்னோட அண்ணேந்தா காரணம். ஓம். " என கோபமாகப் பேசத் தொடங்கியவன்,
" என்ன சொன்ன பொறாமையா. கௌதம் மேலையா. ஹாஹ்ஹாஹ்ஹா. " எனச் சிரிக்க, எதற்குச் சிரிக்கிறான் என்று புரியாமல் முழித்தவளின் அருகில் சென்று " எஸ். எனக்குப் பொறாம தா. " எனத் தன் பக்க கதையை சொல்லத் தொடங்கினான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..