அத்தியாயம்: 41
காதலின் பிரதானம்...
ரோஜாவாக இருக்கலாம்...
ஆனால்...
கணவனின் பிரதானம்...
மல்லிகை தான்...
சூடிக் கொண்ட பின்…
மணம் வெல்லும்…
மன்னவனின் மனதை...
தன் மணாளனை மனத்தில் நினைத்தபடி தான் அமர்ந்திருக்கிறாள் இந்துமதி. திருமணம் முடிந்த நாளில் இருந்தே இருவரும் தனிமை தேடிச் செல்லும் இடம் என்றால் அது அவளின் தோட்டத்தில் போட்டு வைத்த மல்லிகைப் பந்தல் தான். கொஞ்சி, கூடி, குழைந்து எனத் தன் கணவன் செய்த சேட்டைகளை நினைத்தபடி மலர்ந்திருந்த மல்லிகையின் வாசம் பிடித்தவளுக்கு, காதல் மயக்கம் வந்து விட்டது. நாளை உன்னுடன் தான் என் விடியல் என்று தன் கணவன் அனுப்பிய குறுஞ்செய்தியால்.
கௌதமின் பொழுது இந்துவில் தொடங்கி இந்துவில் தான் முடியும், கடந்த சில நாட்களாகவே அது ஃபோன் மூலம் விடிந்தது. தான் தேடிச் சென்றது கிடைத்துவிட்டதாகவும் இனி நிம்மதியுடன் குற்ற உணர்வு இல்லாமலும் வாழப் போவதாகவும் முதலில் தன் மனைவியிடம் தான் கூறினான்.
கௌதம் தான் அந்த த்ரீ இடியட்ஸ்ஸின் டெத் பார்டியை பார்க்காமல் ஊர் திரும்பப் போவதில்லை என்றிருந்தான். இப்பொழுது தான் அவர்கள் இறந்து விட்டனரே. அதான் கௌதம் ஊட்டியை காலி செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருக்கிறான். அவனுக்காகத்தான் காத்திருக்கிறாள். அவனின் மனம் விரும்பும் இடமான மல்லிகை பந்தலில். தோட்டத்திற்கு தண்ணீர் விட எனச் சொல்லி விட்டு அதிகாலையிலேயே வந்து விட்டாள்.
அவள் மட்டும் வரவில்லை. எங்குச் சென்றாலும் படைகளுடன் தான் செல்வோம் என்பது போல் துணைக்கி ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள். அதில் தன் அண்ணன் அசோக் குடும்பமும் அடக்கம். அசோக் தோட்டத்தைச் சுத்தம் செய்தவர்களுடன் சேர்ந்து இறங்கி வேலை செய்து கொண்டிருக்க,
" வர வர இவரு அமெரிக்கால வேல பாத்தவரா, இல்ல ஆண்டிப்பட்டில வேல பாத்தவரான்னு சந்தேகம் வருது. எனக்குத் தெரிஞ்சி நீங்க ஏமாந்துட்டிங்க மம்மியாத்தா. " நந்து.
"டேய், அது உங்கப்பாடா. அமெரிக்கா ரிட்டன்ஸ். எம்புருஷன வாய்க்கு வந்த படி பேசத. " வைசு மகனை அதட்ட, கையில் இருந்த கௌதமின் மகன் சிணுங்கினான். அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மகனைத் திட்டினாள் அவள்.
"கையில வெளக்கமாறு, உடம்புல முண்டாசு பனியனு, இடுப்புல ரங்கோலி மாறிக் கலர் கலரா வேட்டி. ச்சச்சச்ச. ஒரு அமெரிக்க ரிட்டன் பண்ற வேலையா இது. "
" அது வெள்ள கலர் வேட்டி டா. "
" ஆனா கலர் கலரா வெள்ள வேட்டிய நா பாத்தது இல்லயே மம்மியாத்தா. "
" அதுல சேறு பட்டிருக்குடா. அதா கலர் மாறிடுச்சி. "என்றவள் அங்கிருந்த செம்பருத்தி பூவின் இதழைப் பிட்டு தன் வாயில் போட,
"மாதா!!. என்னதிது. பசிச்சா சோத்த வயித்துக்குள்ள கொட்ட வேண்டியது தான. நம்ம ஆச்சிங்க கிட்ட கேட்டா டம்ளர் டம்ளரா மோரு காஃபீன்னும் தருவாங்களே. அத விட்டுடுட்டு ஏ இப்படி கண்டதையும் திங்கிறீங்க. ஐய்யோ என்னோட ஆத்தா இப்படி ஆட்டுக்குட்டியா மாறிட்டாங்களே. இந்தக் கொடுமைய நா எங்க போய்ச் சொல்லுவேன். எப்படி சொல்லுவேன். " எனக் கூச்சலிட,
"டேய் கத்தாதடா. இதுல சத்து இருக்கு. உடம்புக்கு குளிர்ச்சி தரும். வெறும் வயித்தல இத சாப்டா வயித்துல புண்ணு வராது. குறிப்பா இது பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லது. " என அதன் நன்மைகளைச் சொல்ல, அதைக் கேட்கும் பொறுமை இல்லாத நந்து.
"இது வயித்துக்குள்ள போனா, கொடலு கொமட்டீட்டு வந்துடாது. " எனக் கேலி செய்ய, அவனை வைசு முறைத்தாள்.
"மம்மியாத்தாவோட பார்வையே கருணை பார்வை தான். அதுல இருந்து அன்பு அனாமத்தா பொங்கி வழியுறத என்னால மட்டும் தா பாக்க முடியுது. இப்ப என்ன இந்தப் பூல அம்புட்டு சத்தையும் ஒழிச்சி வச்சிருக்காங்க. அதான... ஒழிச்ச அத்தனையையும் கண்டு பிடிக்கிறேன். " என பூவைப் பிய்த்து எறிய, வைசு அவனைத் திட்ட, அசோக் வந்தான்,
" ஏ வைசும்மா பையன திட்டுற. " என்றபடி மகனுக்கு ஆதரவாக.
" பாத்துக்கங்க. இந்த நந்து மேல கைய மட்டுமில்ல வார்த்தய விட்டா கூடத் தோட்டகாரனெல்லாம் சண்டைக்கி வருவாங்க. " என அசோக்கை வார, அவனும் நந்து துரத்தி விட்டான். தலை தெறிக்க ஓடிய அவனை பார்த்துச் சிரித்த அசோக் மனைவியை அன்புடன் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
_______________
" ப்ரதர் வண்டிய கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுங்களே. "என்றான் கௌதம். தோட்டத்தில் தனக்காகக் காத்திருக்கும் தன் மனைவியைக் காண வேண்டும் இல்லையா. வீட்டிற்கு சென்றுவிட்டாள் அவனின் மதி வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை வரும் எனப் பாதியிலேயே இறங்கிக் கொள்ள, மனைவியை அழைத்துச் செல்ல இருவருடனும் வந்திருந்த விக்னேஷையும் உடன் அழைத்தான் கௌதம்.
" டேய் போலிஸு வீடு இங்கருந்து இப்படிக்கா போன பக்கம். வா நடந்து போலாம். "
" என்ன நடந்து போறதா. " என ரிஷியைப் பார்த்து கேட்க,
"உம்பொண்டாட்டிய பாக்க வேண்டாமா. பவதா தோட்டத்துல இருக்குறதா உளவுத்துறைல இருந்து தகவல் வந்தது. வா. " என அழைத்ததால் விக்னேஷ் கௌதமுடன் இறங்கினான்.
"ரிஷி நீ வரல. " என்ற கௌதமிற்கு பதிலாக சிரிப்பைத் தந்தவன் இருவரையும் இறக்கி விட்டுட்டு வீட்டிற்கு சென்றான். செல்லும் அவனை ஒரு நொடி தன் புருவங்கள் முடிச்சிட பார்த்தவன். ஏனெனில்??.
' டார்லிங்கும் தோட்டத்துல இருக்குறதாத்தா உளவுதுறை ரிப்போர்ட்டு சொல்லுது. ஒரு வாரம் கழிச்சி ஊருக்கு வர்றவெ அவள பாக்காம வீட்டுக்குப் போறோன்னு சொல்றான். இவனுக்கு என்னாச்சி. ஏ அன்னைக்கில இருந்து ஒரு மாறி இருக்கான். ம்... ஒரே வேள சண்ட நடந்திருக்குமோ.
அது சரி சண்ட போடாம இருந்தாத்தா ஆச்சர்யப்படணும். இப்ப என்ன விசயத்துக்காக அடிச்சிகிதுகளோ. இந்த வினோத ஜோடிகள அப்பறமா பாக்கலாம். இப்ப நமக்கு வைஃப் தா முக்கியம். மதிம்மா. ' என உற்சாகமாகவும் விக்னேஷுடன் நடந்து செல்ல, அவர்களை ஒரு கூக்குரல் அழைத்தது.
"யார்ரா அது பொட்டக்காட்டுல புழுதி பறக்கப் போறவுகள கத்தி கூப்டது. " என எதிர் குரல் கொடுக்க,
"அண்ணே… நாந்தாண்ணே. உன்ன பாக்காமா கண்ணு ரெண்டுலயும் கத்திய வச்சி கீறுன மாறி ரத்தக் கண்ணீர் வடிக்கிற உன்னோட ஒட்டிப் பிறவா சகோதரன் பிரகாஷ் ண்ணே. " என்றபடி வந்தான் பிரகாஷ் கையில் சிலம்ப குச்சியுடன். நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் இருக்கும் மைதானத்தில் காலை வேளையில் பயிற்சி எடுத்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தான் அவன்.
" நீ இன்னைக்கி வர்றேன்னு சொன்னத கேட்டதும் நேத்து தாண்ணே இந்து மூஞ்சில மூன்னூறு சூரியன் ஒன்னா வந்துட்டு போச்சி. அதுவரைக்கும் கிழவி கூடச் சேந்துட்டு பூஜ ரூம்குள்ளையே கிடந்தா. நல்ல வேள அவா சாமியாரா மாறுறதுக்கு முன்னாடியே நீ சீக்கிரமா வந்துட்ட. " எனக் கௌதமுடன் பேசியவன் விக்னேஷிற்கு தன் நன்றியைக் கை கூப்பி தெரிவிக்க, விக்னேஷ் புரியாமல் முழித்தான்.
" டீவில உங்க பேட்டிய பாத்ததுக்கு அப்றம் தா பார்கவியோட டெத் எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டோம். சட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடியே தண்டன உங்க கையால கிடைச்சிருக்கும்னு ஹரிணி சொன்னா. அதுக்கு தா நன்றி. அதுமட்டுமில்லாம ரொம்ப வர்ஷமா யாருக்கும் தெரியாம நடந்த இந்த ஆர்கன் திருட்ட கண்டு பிடிச்ச ஒரு போலிஸ்காரர் நமக்குத் தெரிஞ்சவருங்கிறப்ப. அது சந்தோஷமா தான இருக்கும். நீங்க இன்னும் இது மாறி நடக்குற பல குற்றத்த கண்டுபிடிக்கணும். விக்னேஷ்னு உங்க பேர கேட்டாலே தப்பு பண்றவனுங்க எல்லாம் அடிச்சி உருண்டு நடு ரோட்டுல சட்டைய கிழிச்சிட்டு கதறணும். வாழ்த்துக்கள் என்கவுண்டர் ஸ்பெஷல். " எனச் சென்டிமெண்ட்டாக ஆரம்பித்து விளையாட்டாகப் பேசி கை குளுக்கினான்.
"டேய் இது உனக்குச் செட்டாகல டா. ஏ இப்படில்லாம் பேசுற." கௌதம்.
" அதுவா வருதுண்ணே. " என்க விக்னேஷ் புன்னகைத்தான்.
"டேய் உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா. நீ எங்க வீட்டு கீரிப்பிள்ளை. "
"ண்ணே. "
"ஸாரி கிளிப்பிள்ளை. சொல்லு. உன்னய இப்படில்லாம் பேசச் சொல்லி யாருடா சொல்லித்தர்றது. " கௌதம்.
" இவரு புகழத்தா ஒரு வாரம கேட்டுட்டு இருக்கேனே. அதா நேர்ல பாத்ததும் வாய் தான வாழ்த்திடுச்சி. நா மட்டும் இல்லண்ணே. ஒரு வாரமா நம்ம வீடே இவர புகழ்ந்து தள்ளுது. அதுல கொஞ்சோன்டு தா எங்காதுக்குள்ள விழுந்தது. அதோட ஸாம்பில் தா இப்ப நீங்கக் கேட்டது. சீக்கிரம் வீட்டுக்குப் போங்க. உங்க வருகை வழிமேல் விழி வைத்து ஒரு குடும்பமே எதிர்பார்த்து காத்திட்டு இருக்கு. " என்க.
"ஆனா அவரு எதிர்பாக்குற ஒருத்தர பாக்காம நம்ம வீட்டுக்கு வரமாட்டாராமா. கார்லருந்து பாதிலையே இறங்கி பாத யாத்திரையா வாராரு. " கௌதம்.
"இது என்ன புது பொரலியா இருக்கு. நா எப்ப இறங்குனேன். நீங்கத் தான இழுத்துட்டு வந்திங்க. " என்றவன்.
"பிரகாஷ் நா என்னோட கடமையத்தா செஞ்சேன். இதுல பாராட்டுறதுக்கு எதுவுமே இல்ல. " விக்னேஷ். ' நம்ம பார்கவி கேஸ்ல எதுவும் பண்ணலையே. ரிஷி சொன்னத அப்படியே பத்திரிக்க காரங்க முன்னாடி பேசுனேன். அவ்வளவு தா. இதுக்கு ஏ பாராட்டுறானுங்க. ' என்று புரியாது தன்னடக்கத்துடன் பேசினான் பிரகாஷிடம். சில பல உரையாடலுக்குப் பின்,
" இவரு எதிர்பார்க்குற ஆளு. அது இப்பத்தா ஏ ஆளு கூடச் சைக்கிள் பந்தயம் வச்சிட்டு ஓட்டீட்டு போச்சி. இந்தப் பக்கம். " என ஒரு தோப்பிற்குள் கை காட்டி விக்னேஷை அழைத்துச் செல்ல,
" சரி நீங்கப் போய் உங்காளுகல பாருங்க. நா போய் என்னோட ஆளப்பாக்குறேன். " எனத் தோட்டத்திற்குள் சென்றவனை வாசலிலேயே எதிர்கொண்டாள் இந்துமதி.
அளவுகடந்த மகிழ்ச்சியில் அவளை வந்தணைத்தவன் இருக்கும் இடம் கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
" மதிம்மா. " என மெல்லிய குரலில் வார்த்தைகள் காதில் விழாது அளவுக்கு மெதுவாகக் கூறியவன், அவளின் கன்னம் தாங்கி நெற்றி முட்டி முத்தமிட, அவனின் கரத்தை ஆசையுடன் பிடித்துக் கணவன் தந்த முத்தத்தை இமை மூடி அனுபவித்தாள் அவனின் மதி.
" எல்லாம் முடிஞ்சது மதிம்மா. " என மல்லிகை பந்தலில் மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு இதுவரை நடந்தவற்றையும் தன் உணர்வையும் மனைவியிடம் ஒன்று விடாது பகிர்ந்து கொண்டான். இந்துத் தடை செய்யாது அமைதியாகக் கேட்டாள். பேச்சு வெகு நேரமாகச் செல்ல, மீண்டும் அபயக்குரல். இம்முறை அது பிஞ்சி குரலாகக் கேட்டது.
" மாமா... கௌதம் மாமா… என்ன காப்பாத்துங்க. காப்பாத்துங்க மாமா. மாமா. " எனக் கத்த, இருவரும் தோட்டத்தின் வாசலுக்குச் சென்று பார்த்தனர். சிரிப்பு தான் வந்தது அவர்களுக்கு. காரணம்…
விக்னேஷ் தன்னை பாகுபலியாக நினைத்துக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பதில் சிவனின் வாகனம் என்று சொல்லப்படும் நந்தியை அதாவது நந்தகுமாரை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு வந்தான்.
"உங்கக்கா மகனெ தத்தளிக்கிறேன். பாத்துட்டு வர்றிங்களே நீங்கெல்லாம் நல்ல மாமனா.. " எனப் பிரகாஷிடம் கத்தியவன், தன் அன்னையை பார்த்ததும் மீண்டும் குரலுயர்த்தி.
" மம்மியாத்தா. வந்து நீ பெத்த புள்ளைய காப்பாத்து. ஆள் அட்ரஸ்ஸே தெரியாத யாரோ ஒருத்தெ. " என்றவனின் பேச்சு ஒரு நொடி நின்று போனது. விக்னேஷின் குளுக்கலில் பின்,
"ஒருத்தர்ர்ர். வந்து என்ன அலேக்கா தூக்கிட்டு போறாருரு. பாத்துட்டே இருக்கியேம்மா. யோவ் மாமா. உன்னோட மகா வாழ்க்க நல்லா இருக்கனும்னா வருங்கால மருமகன காப்பாத்தி. இவர என்னன்னு கேட்டு என்ன இறக்கி விடச் சொல்லுங்க. " எனக் கௌதமிடம் சொல்ல,
"டேய் அட்ரஸ்ஸாம் தெரியும் டா. சென்னை தா. ஆமா அட்ரஸ் தெரிஞ்சி நீ என்ன பண்ணப்போற. " பிரகாஷ்.
"ம்… வாக்காளர் அடையாள அட்டைக்கி பேர் எடுக்கப் போறேன். லூசு மாமா என்ன கீழ இறக்கி விடச் சொல்லுங்க. " என நந்து அலற. பக்கத்திலேயே ஜெனியும் கெஞ்சிக் கொண்டு வந்தாள், நந்துவை இறக்கிவிடச் சொல்லி.
" ஜெனி நீ ஏ கெஞ்சுற. கொஞ்ச நேரம் வல்லால் மாறித் தலகீழ தொங்கட்டும். அவனுக்கு ஒன்னும் ஆகிடாது. டோண்ட் ஃபீல் மா. " என மனைவியைச் சமாதானம் செய்ய அவள் முறைத்தாள். விக்னேஷ் கீழே இறக்கி விடப்போக,
" ஐய்யோ அண்ணா இறக்காதிங்க. கீழ வந்தா இன்னும் அதிகமா வாய் பேசுவான். மேல அந்தரத்துலையே கொஞ்ச நேரம் இருக்கட்டும். " இந்து சொல்ல வைசுவும் ஆமோதிக்க மூவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
" மாமியாரே.!! மம்மியாத்தா!!. நீங்களுமா.??"
" டேய் யாருடா மாமியாரு. இன்னொரு மொற என்ன அப்படி கூப்பிட்ட அண்ணே மகென்னு பாக்காம மூக்குல மிளகாப்பொடிய போட்டுவேன். " இந்து.
" சரி கூப்பிடமாட்டேன். இப்ப இறக்கிவிடச் சொல்லுங்க. ரொம்ப நேரமா ஃப்லை ஓவர்ல பறக்குறேன். பயமால்ல இருக்கு. " என்றவனை விக்னேஷ் இறக்கி விடும் முன்,
"இதுக்காப்றம் ஈவ் டிசிங்க பண்ணுவியா. " என்க.
"மாட்டேங்கையா. "
"நா யாருன்னு கேப்பியா."
"கேள்விக்குப் பதில் தெரிஞ்ச பின்னாடி அதே கேள்விய கேட்டு எனக்குப் பழக்கம் இல்லைங்கையா. "
"ம்… அது. சமத்தா வயசுக்கு தகுந்த படி நடந்துக்கணும். சரியா. " என எச்சரித்தே இறக்கி விட்டான்.
"சத்திய சோதன. சிவப்பு சட்ட போட்டிருக்கோம்னு பெரியாளுங்கிற நினப்புல என்ன நீங்கத் தூக்கிட்டீங்க. வெள்ள சட்ட போட்ட நல்ல உள்ளம் நாங்கிறதுனால உங்கள் மன்னிக்கிறேன். இனி எங்கண்ணு முன்னாடி வரக் கூடாது சொல்லிடேன். "
"வந்தா என்னடா பண்ணுவ. " பவதா. தன் கணவனை பார்த்துச் சுண்டைக்காய் சைசில் இருக்கும் இவன் பஞ்ச் டயலாக் பேசுவாதா என்ற ஆதங்கத்தில்.
"வந்து பாக்க சொல்லுங்களே. இந்த நந்துவோட டெலன்ட் என்னன்னு நா காட்டுறேன். "
"டெலன்ட்டா! என்னடா அது புதுசா என்னமோ கத சொல்லுற. என்னதது." கௌதம்.
"அவரு மட்டும் முன்னாடி வந்தா நா பின்னங்கால் பெடறில அடிக்க ஓடிப் போய்டுவேன். உங்க யாராலையும் என்ன பிடிக்கவே முடியாது. "
" எப்படி டா பயத்த கூடப் பஞ்ச டயலாக் பேசிச் சமாளிக்கிற. தைரியமான ஆளு தான்டா நீ. " பிரகாஷ்.
"தைரியமன்னா என்னன்னு தெரியுமா மாமா. வர்ற பயத்த வெய்டிங்க லிஸ்ட்டுல உக்கார வச்சிட்டு தைரியத்த வீஐபி பாஸ் குடுத்து ஊடால விடுற தா. தைரியம் பயப்படாத மாறி நடிக்கிறது."
"ஆமா இவன எப்படி பிடிச்சிட்டு வந்த விக்னேஷ். " கௌதம்.
" ஹலோ, நா இப்ப இந்தச் சமூகத்துக்கு ஒரு முக்கியமான கருத்து சொல்லிருக்கேன். கை தட்டலன்னாலும் பரவாயில்ல. அட்லிஸ் என்னோட தலைலயாது தட்டிருக்கலாம்ல. " என்ற நந்து பேசவே இல்லை என்பது போல் பாவித்து மற்றவர்கள் பேச, கடுப்பாகிப் போனது நந்துவிற்கு.
"நா சொல்றேன் அண்ணா. நானும் ஜெனியும் சைக்கிள் ஓட்டீட்டு வந்தோமா. அப்ப இந்தச் சுண்டக்கா. "
"ஹலோ, நா ஒன்னும் சுண்டக்கா இல்ல சுரக்கா சைசுல பெருசாத்தா இருக்கேன். கண்ண திறந்து வச்சிட்டு என்ன பாருங்க. " என நந்துவின் பேச்சு இம்முறையும் யாரின் காதிற்கும் கேட்கவில்லை என்றால் பாருங்களே.
" வந்து வழிய மறைச்சிட்டு நின்னான். ஏண்டா நிக்கிற. லிஃப்ட் வேணுமான்னா கேட்டோம். " ஜெனி..
" லிஃப்ட்டு படத்த வாங்குற அளவுக்குக் கைல பணம் இல்ல. அத சம்பாதிக்க தா உங்கள நிப்பாட்டுறேன்னு சொன்னேன். என்ன தப்பு இருக்கு. நம்ம கைல காசில்லன்னா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கைமாத்தா காசு வாங்குறது இல்ல. அந்த மாறித் தா இதுவும். என்ன நா பக்கத்து வீட்டுல கேக்காம. பல கிலோமீட்டர் தூரத்துல தள்ளி இருக்குறவங்க கிட்ட இருந்து கேட்டுட்டேன். இதுல என்ன இருக்குன்னு இவரு சஞ்சீவி மலைய தூக்கிற மாறி என்ன தூக்கிட்டு வந்தாருன்னு தா தெரியல. "என்க.
" காசா... உனக்கு எதுக்காக நாங்க குடுக்கனும்னு கேட்டுச் சைக்கிள விட்டு விட்டு இறங்கி வந்தா எங்ககிட்ட, லைசன்ஸ் கேக்குறான். " ஜெனி.
"ஹெல்மெட் எங்கன்னு கேக்குறான்." பவதா.
"சீட் பெல்ட் ஏ போடலன்னு கேக்குறான்."
"ஏ ஒன்வே ல வந்திங்கன்னு கேக்குறான்."
"ஏ பெட்ரோல் போடலன்னு கேக்குறான்."
"இது கூடப் பரவாயில்லை. டாக்டர் கிட்ட போய்ச் செக்ப் பண்ணீட்டு வந்த ரிப்போர்ட் கேக்குறான். " என ஜெனியும் பவதாவும் மாறி மாறிப் பேச,
" டாக்டரா!! அவர பாக்குறதுக்கும் சைக்கிள் ஓட்டுறதுக்கும் என்டா சம்மந்தம். " விக்னேஷ்.
" அது நம்ம நாட்டுலா பாதி பேர் ஒரு குத்து மதிப்பாதா ரோட்ட பாத்து வண்டி ஓட்டுறாங்க. மீதி நேரம் எல்லாம் அவங்களோட நினைப்பு வேற எங்கையாது போய்டுது. அதா மெண்டல் டாக்டர்ட்டா போய்ச் செக் பண்ணிட்டு வரச் சொன்னேன். எப்படி நம்ம புத்திசாலித்தனம். " என்றவனை முறைத்தான் விக்னேஷ்.
"ஒரு போலிஸ்ஸா இருந்து நீங்கக் கேக்க வேண்டியத நா கேட்டுருக்கேன். இதுக்கு நீங்க என்ன ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ்ஸா உங்க ஸ்டேஷன்ல ஒரு இடம் குடுப்பிங்களா. " நந்துவை மீண்டும் தூக்கி மரத்தில் தொங்க விட்டு விட்டான் விக்னேஷ்.
வழிமறித்து இருவரிடமும் வம்பு பண்ணிய நந்துவை விக்னேஷ் வந்து தட்டி கேட்க, நந்து விக்னேஷிடம் வாயாடியதால் வந்த வினை. இருந்தும் மரத்தில் தொங்கியபடியே பேசிக் கொண்டு இருந்தான் நந்து. இவன விட்டா இன்னைக்கி நாள் முழுக்க நின்னு பேசிட்டே இருப்பான்.
" வைசும்மா டார்லிங் எங்க?. உங்க கூட வந்ததா சொன்னா. ஆளையே காணும். " கௌதம்.
"இங்க தா இருந்தா. " எனத் தேட,
"எனக்குத் தெரியும். ஆனா உங்க கிட்ட சொல்லமாட்டான். நீங்கக் கெஞ்சி கேட்டா வாய திறந்து பம்கின் எங்கன்னு சொல்வேன். அப்பையும் என்ன நீங்கக் கீழ இறக்கி விட்டாத்தா சொல்லுவேன். அதுவும் இந்தப் போலிஸ்காரரு தா இறக்கி விடணும். " நந்து. மரத்தில் ஆணி அடித்துத் தொங்க விட்ட காலண்டர் போல் தொங்கிக் கொண்டிருந்தவனை விக்னேஷ் இறக்கி விட, ஓடி விட்டான் நந்து. "பம்கின் வீட்டுக்கு நடந்து போச்சி." என்று கத்திக் கொண்டே.
" நடந்தா." என யோசித்தபடி படைகளை வீட்டை நோக்கி நகர்த்தி சென்றான் கௌதம்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..