முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 40

அத்தியாயம்: 40 


கையில் கருப்பட்டி காபி. மலர் போட்டுத்தந்தது. அதைக் குடிக்க குடிக்க, அதன் சுவை நாக்கில் நடமாடுவது போல் இருந்தது.


"ம்… ம்… ஆன்டி சூப்பரா இருக்கு. நானும் எத்தனையோ காபி குடிச்சிருக்கேன். பட் இது தா அல்டிமேட் டேஸ்ட். ம்… இன்னொன்னு கிடைக்குமா. " பவதா. 


நாச்சியம்மாளின் ஊஞ்சலில் அமர்ந்தபடி சுவைத்து பருக,


"இந்தாத்தா… எடுத்துக்க. இன்னும் வேணும்னா கேளு. கொண்டாந்து தாரேன். " என நங்கை கொண்டு வந்து கொடுத்தார்.


"ம்… தேங்க்ஸ் ஆன்டி. ஆன்டி நா பிரகாஷ் அண்ணாவோட புக்ஸ எடுத்துக்கலாமா. அவரோட லா புக் அங்க செல்ஃப்ல இருக்குறத பாத்தேன். " பவதா. 


சட்ட கல்லூரி மாணவியாகச் சில மாசத்திற்கு முன் சேந்திருக்கிறாள். சில காரணங்களால் விடுப்பில் இருக்க, ‘சும்மா உக்காந்திருக்குறதுக்கு நாலு சட்டத்த படிச்சி தெரிஞ்சிக்கலாம்‍’ எனப் படிக்கக் கேட்டாள்.


"எடுத்துக்க ராசாத்தி உனக்கு இல்லாததா. இந்த வீட்டுல தெண்டத்துக்கு பல இது இருக்கு. அதுல ஒன்னு உனக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம்தா. சிலதெல்லாம் ஏ இருக்குதுன்னே தெரியல. " என மடியில் கௌதமின் மகனைக் கிடத்திக் கொண்டு காஃபி கப்புடனும் ஃபோனுடனும் தரையில் அமர்ந்திருந்த ஹரிணியை காட்டி மலர் சொல்ல, பவதா சிரித்தாள்.


மலர் ஹரிணியை சொல்லக் காரணம் இருக்கிறது. இந்து முறைவாசல் செய்து கொண்டு இருக்க, கனகா கிருபாவதி என மற்ற மருமகள்கள் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டு இருக்க, நங்கையும் ஜோதியும் சமயற்கூடத்தில் வேலை செய்ய, சின்னப் பெண் லதா அவள் கூடப் பன்னிரண்டாம் வகுப்பு பரிச்சைக்காக அந்தக் காலை வேளையில் படித்துக் கொண்டு இருக்க, அந்த வீட்டில்ல வெட்டியாக அமர்ந்திருக்கும் ஒரே மருமகள் ஹரிணி மட்டும் தான். அதான் மலர் காட்டமாகச் சொல்கிறார்.


ஹரிணி தன் கண்களைக் கன்னாய் மாற்றிச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தாள். 


சமையலறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மலரிடம்,


"நா வந்து ஹெல்ப் பண்ணவான்னு கேட்டேன். ஜோ அத்த தா வேணாம் நா பாத்துக்கிறேன்னு சொன்னாங்க. " என்ற ஹரிணியை திரும்பிப் பார்த்து முறைக்க,


"நீ ஹெல்ப் பண்ணணும்னா ஹெல்ப் பண்ணாம இருக்குறதே பெரிய ஹெல்ப் ன்னு சொல்லிக்காங்க. " என்ற பவதாவை 'உனக்கு நேரம் சரியில்லை.' என்பது போல் பார்த்தாள் ஹரிணி.


"நா ஒன்னும் வெட்டி ஆஃபிஸ்ஸர் கிடையாது. இருங்க இன்னைக்கி மார்னிங் சாப்பாடு நானே எங்கையால பண்றேன். அப்பத் தா நானும் சமயல் பண்ணுவேன்னு உங்களுக்குத் தெரியும். " என எழ,


"காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தா தெரியும். கூடச் சேந்து சுமந்தா கூடப் பரவாயில்ல. நீ தா கீழ தள்ளி விட்டு நாசம் பண்றியே. உன்னயெல்லாம் சமக்கட்டுக்குள்ள விட்டா வெளங்குன மாறித் தா. " எனத் திட்ட, ஹரிணி மீண்டும் அமர்ந்து கொண்டு ஃபோனை நோண்ட ஆரம்பித்தாள். 


‘அதா எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்டாங்கள்ள. பின்ன எதுக்கு செய்ஜி நம்ம எனர்ஜிய வேஸ்ட் பண்ண’ என நினைக்க, அதுக்கும் மலர் திட்டத் தொடங்கி விட்டார். காலைச் சுப்ரபாதம் போல், அதைக் கேட்டுக்கொண்டு தலையாட்டினாள் ஹரிணி.‌


" ம்மோய்… காலங்காத்தால யாரம்மா பாராட்டு கடல்ல முக்கி முக்கி எடுக்குற?." எனக் கேட்டபடி பிரகாஷ் வந்து ஹரிணியின் அருகில் அமர்ந்தான். ஹரிணி முறைத்தாள் அவனை. இவனுக்குப் புளி போட்டு விளக்கிச் சொன்னாத்தா தெரியுமாக்கும் என்பது போல். 


அதைக் கண்டவன், "ம்மா. தெண்டம்னு நீங்க எம்பக்கத்துல இருக்குற எதையாது சொல்றிங்களா. " எனச் செல்லும் தன் அன்னையை தடுத்து கேட்க, மலர் திரும்பி ஹரிணியை காட்டினார். இல்லைங்க ஹரிணி பக்கத்துல இருக்குற பழைய நாற்காலியைக் காட்டினான்.


"அதோ அதத்தா சொன்னேன். இந்தச் சேரு எதுக்குன்னே தெரியல. உங்கண்ணே தா எடுத்துட்டு வந்தான். எதுக்கும் உபயோகப்பட மாட்டேங்கிது. " என ஜாடையாகத் திட்ட,


"பூவத்த தீ இஸ் டூ மச். I can't stand you talking. " என்க, அவர் புரியாமல் முழித்தார்.  


"ஆன்டி நீங்க வாய் அதிகமா பேசுறீங்கன்னு சொல்றா. நீங்கப் பேசுறத எல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாதாம்.‌" எனப் பவதா போட்டுக் கொடுக்க பிரகாஷ் கையில் வைத்திருந்த நாளிதழைப் பிடுங்கி சுருட்டி பவதாவை அடித்தாள்.


"உன்ன மொழிபெயர்க்கச் சொல்லி யாராது கேட்டாங்களா. வாயாடி வாணரம்.‌" எனச் சொல்லிக் கொண்டே அடிக்க, மலர் காப்பாற்றினார் அவளை.


"என்னடி பழக்கம் இது. வீட்டுக்கு வந்த பிள்ளைய அடிக்கிறது. ச்ச எனக்கு வாச்ச எல்லா மருமவளும் இப்படித்தா இருக்குதுக. இந்தப் பிள்ள இந்துவ தவிர. அந்தக் கௌதம் பய மட்டும் தா குடுத்து வச்சவே. மத்த மகனுங்க எல்லாம் அவெ அவெ பொண்டாட்டி அடிக்கிற சாம்பிராணிக்கு ஏத்த படி மணக்குறான்னுங்க. அதிக இடம் குடுத்து வச்சிருக்கானுங்க. புருஷன விட்டுட்டு விட்டு ஊருக்குப் போற அளவுக்கு.‌ ஹீம்... எல்லாம் ஏ தலையெழுத்து. " என மகனின் தலையில் தட்டி விட்டுப் புலம்பிய படியே சென்றார் அவர்.


"டேய் கைப்புள்ள. பூவத்த பொலம்பல கேட்டா உம்பொண்டாட்டியத்தா ஜாடமாடையா திட்டுற மாறித் தெரியுதே. " ஹரிணி.


"ஜாட மாடையால்லாம் திட்டல நேரடியாகவே திட்டத்தா செஞ்து. எங்கம்மா. " 


"ஏன்டா. நம்ம பூவத்தையும் டீவி சீரியல் மாமியாரா மாறிட்டாங்களோ. " 


"அதெல்லாம் இல்ல. நீயும் ஜெனியும் சேந்து பொட்டிக் ஓபன் பண்ண போறிங்கள்ள. அதா இனி இந்த ஊரு பக்கமே வரமா இருக்கத்தா ப்ளான் போடுறிங்கன்னு உங்க ரெண்டு பேர் மேலையும் குறிப்பா உம்மேல தா‌ கோபம இருக்காங்க. "


சென்னையில் புதிய ஷோரூம் வேலைகளைக் கவனிக்கச் சென்றுள்ளாள் ஜெனி. திருமணம் முடிந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் வேலை வேலை என்று பிரகாஷ்ஷை தனியே விட்டு ஜெனி சென்றது மலருக்குப் பிடிக்கவில்லை. ஆனா போதும் ஜெனியை எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் ஒரு பெண்ணின் வளர்ச்சியைத் தடுப்பது தவறு என்பதால். ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் ஹரிணியை மட்டும் திட்டிவிட்டு செல்வார். காரணங்கள் பல உள்ளது.


மலரைப் பொருத்த வரை கணவன் மனைவி இருவரும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். ஒருவரை விட்டுப் பிரிந்து ஒரு வேறு இடத்தில் இருப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. வேல்ராஜ் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனாருடனும். இப்போது தனிக்குடித்தனத்திற்கும். சம்மதித்ததே அதற்குத் தான்.


ஆனால் கோபித்து கொண்டு கணவனை விட்டுச் செல்லும் கான்செப்டை முதலில் ஆரம்பித்து வைத்தது ஹரிணி தான். தரனுடன் சண்டை போட்டு விட்டது தனித்து சில நாட்கள் இருந்தது. ஏன் இப்போது கூட ரிஷியை விட்டுச் சில நாட்கள் அவள் சென்றதோடு மட்டுமல்லாது கௌதமை அழைத்துக் கொண்டு அல்லவா சென்று விட்டாள்.


இப்போது ஜெனி, அவளையும் பெங்களூருக்கு அனுப்பியது அவள் தான். நேற்று காலைச் சென்றவள் இன்று மாலை அசோக் மற்றும் வைசுவுடன் வந்து விடுவாள் தான். ஆனாலும் மகெங்கூட இருக்க வேண்டிய மருமகள பிரிஞ்சி வச்சிட்டான்னு ஹரிணி கண்ணுக்குச் சிக்கும் போதெல்லாம் சின்னாபின்னமாக்குகிறார் மலர்.


உறக்கம் கலைந்து எழுந்த அகிலனையும் ஆதியையும் தூக்கிக்கொண்டு பவித்ரா வர, உடன் சம்பத்தும் வந்தான். பவதா ஆதியை வாங்கிக்கொண்டு இருவருடன் பேசிக் கொண்டு இருக்க, அகில் ஹரிணி சுருட்டிய நாளிதழைக் கசிக்கி விளையாடினான்.


"அகில்… குடுத்துடு மா. இன்னும் வீட்டுல யாருமே பேப்பர் படிக்கலடா செல்லாம். குடுத்துங்க. " எனக் கை நீட்ட, அகில் சமத்தாய் கையில் வைத்து விட்டு அவளின் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான். ஹரிணி அந்த நாளிதழைப் படிக்க, அதில் பாலாவின் புகைப்படம் இருப்பதை கண்டாள். கசங்கிய பேப்பரை கையால் ஐயன் செய்து படிக்கத் தொடங்கினாள்.


அதிரடி காட்டிய கேரள காவல் துறை, என்ற தலைப்பில் இருந்தது அந்தச் செய்தி. தமிழக கேரள எல்லைகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடிய கயவர்களை கேரள போலிஸ் ஸார் அதிரடியாகத் தமிழகத்திற்குள் நுழைந்து கைது செய்துள்ளனர். அழிந்து வரும் சில அறிய வகை உயிரினங்களை மருத்துவதிற்கும், புலி இனங்களைத் தோலுக்காகவும், யானைகளைத் தந்தங்களுக்காவும் வேட்டையாடிக் கடத்தி வந்த கும்பலை சேர்ந்தவனாகக் கருத்தப்படும் கோவை சந்தானத்தை கேரள போலிஸ்ஸார் கைது செய்துள்ளனர்.


அவர் கோவையில் குறிஞ்சி மலர் என்ற நாளிதழின் உரிமையாளர் ஆவார். கோவை மாவட்டம் உயர்நிலை காவல் அதிகாரி உமாபதியின் சொந்தக்காரரான அவரின் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் புலியின் தோல் மற்றும் யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் எனக் கடத்தல் பொருட்களைக் கைப்பற்றப்பட்டது.


கேரள மாவட்டம் கொச்சி துறைமுகத்தில் சில மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பிலான தங்கம் வெள்ளி மற்றும் ஐம்பெனால் ஆன சிலைகளும் யானைத்தந்தங்களும் வெளி நாட்டிற்கு கடத்தபட இருந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. கடத்தல் காரர்களை கைது செய்து வந்த போலிஸ்ஸார் அதன் தொடர்பான சந்தானத்தையும் கைது செய்துள்ளது.


' ஓ... இதுக்கு தா பாலா ஊட்டிக்கி‌ வந்தாப்லையா. சரித்தா. ஆனா பவதா எப்படி ரிஷியோட வீட்டுல இருக்கா?. விக்னேஷ் எங்க. அவனோட மத்த ஃப்ரெண்ட்ஸ் எங்க. நம்ம கௌதம் எங்க. ரிஷி தா எங்க. அந்த த்ரீ இடியட்ஸ்ஸ எப்படி கொன்னானுங்க. எப்படி அந்த த்ரீ இடியட்ஸ் தா பார்கவி மரணத்துக்குக் காரணம்னு ரிஷி கண்டு பிடிச்சான். அப்படின்னு நீங்கக் கேக்குறது‌ எனக்கு நல்லாவே புரியுது. கதைய முடிக்கிறதுக்குள்ள எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். '


பவதா எப்படி வந்தான்னா. ரிஷி தா கொண்டுவந்து விட்டுவிட்டு போனான். சம்பத், ஹரிணி, பவதா மூவரையும் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தான். நான்கு நாட்கள் முடிந்து விட்டது பவதா ரிஷியின் வீட்டிற்கு வந்து. எப்படியும் விக்னேஷிற்கு சில வேலைகள் பாக்கி இருக்கும். காவலனாய் அவன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டி இருக்கும்.  


அதான் ' சென்னைக்கி போகும்போது வந்து கூட்டீட்டு போப்பா. ' என்று விட்டான். விக்னேஷிற்கும் அது சரி எனப் படவே பவதா குதுகலத்துடன் ஹரிணியுடன் வந்தாள்.


ரிஷி கண்களுக்கு மட்டும் பவதா பார்கவியாகவே தெரிந்தாள். அதான் மூர்த்தியிடமும் கனகாவிடம் கொண்டு வந்து விட்டுட்டு சென்றான். நிஜமாகவே மூர்த்திக்கும் கலியபெருமாளுக்கும் அப்படி தோன்றியது போலும். தாங்கு தாங்கு என்று தாங்குகின்றனர். அவளைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தி என அனைவரும் ஏற்று அவளை நன்கு பார்த்துக் கொண்டனர்.


சரி விக்னேஷும் அவனின் நண்பர்களும் எங்க. என்ற கேள்விக்கு.


"பவித்ரா நியூஸ் சேனல மாத்தாதிங்க. இதுல என்னோட ஹஸ்பென்ட் பேட்டி குடுத்ததா ப்ரியாக்கா சொன்னாங்க. மாத்தாதிங்க. " என ரிமோட்டை வாங்கி கொண்டு, மலரை மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து வந்து ‌டீவி முன் அமரவைத்தாள் பவதா.


"குற்றவாளிங்க எல்லாம் இப்ப மைக்க பிடிச்சி பேட்டி குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்ன.‌" ஹரிணி கேலி செய்ய, அவளை முறைத்தாள் பவதா.


அரைமணி நேரம் முடிந்து விட்டது. தேவையற்ற அனைத்து செய்திகளும் வந்ததே தவிர பவதாவின் கணவன் விக்னேஷ் மட்டும் டீவியில் வரவில்லை.


" ஒரு பொம்பளப்பிள்ள செய்தி வாசிச்சாத்தா எங்க சித்தப்பா செய்தியே கேப்பாரு அவர போய் ஒரு ஆம்பள வாசிக்கிறத கேக்க வச்சிட்டியேம்மா. அதுவும் அரமணி நேரமா. " எனப் பிரகாஷ் கவியரசனை வார, பதிலுக்கு அவரும் மூர்த்தியும் சேர்ந்து கொண்டு பேசினார்.


" அமைதி. அமைதி. இதோ இந்தச் செய்தி தா அது. " பவதா கத்தியதால் கவனம் டிவிக்கு சென்றது.


அதில் காப்பகம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த மனித உறுப்பு திருட்டு பற்றிப் பேசிய செய்தியாளர், அது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தயானந்தம் மற்றும் அவரின் பேரன் ரோஹித் இருவரும் செய்த குற்றங்களை அடுக்கினார்.


"இது தொடர்பாகச் சென்னை காவல் அதிகாரி திரு விக்னேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். " எனச் சொல்லி விக்னேஷும் ஜீவாவும் வந்து அமரும் காட்சிகளைக் காட்ட, பவதா ஆர்ப்பரித்தாள்.


" இது தா… இது தான் விக்னேஷ். என்னோட ஹஸ்பென்ட். " என்க.


"ரெண்டு பயளுக இருக்கானுங்க. இதுல யாரு உன்னோட புருஷெ. " நாச்சியம்மாள். வயோதிகத்தின் காரணமாகப் பார்வை சரியாக த்தெரியாததால் தன் கண்ணைச் சுருக்கி பார்த்தபடி கேட்டார்.


"அங்க நடுவால இருக்காரே உசரமா.‌ அவரு தா பவதா வீட்டுக்காரரு அப்பத்தா. நா இதுக்கு முன்னாடி பாத்திருக்கேன். " பவி.


" ஓ... அந்தத் தம்பியா. கண்ணு சரியா தெரியாதாத்தா. உடம்பு பழசாகிட்டே போது. ஆனா‌ வர்ற நேவு பூராம் புது புதுசாத்தா இருக்கு. " என வருத்தமாகப் பேச, பவதா சமாதானம் செய்தாள்.


"இன்னேரம் எம்ஜிஆர் வந்து நின்னா என்ன நடந்திருக்கும்." இந்து பிரகாஷிடம்.‌


"டீவி பெட்டிக்குள்ள தலைய விட்டு எங்க எம்ஜிஆரு எங்க நம்பியாருன்னு தேடிருக்கும். "


"மண்ணுக்குள்ள பொதஞ்சி கெடக்குற காசு ஒத்த ரூபாயா, இல்ல ஐஞ்சி ரூபாயான்னு நின்னு கிட்டே பதில் சொல்லும். இந்தக் கிழவி. " இந்து.


" ஆனா டிவில யாரு வந்தாலும் கண்ணு தெரியலன்னு ஸீன்ன போட்டுது பாரேன். " பிரகாஷ். இருவரும் தங்களுக்குள்ளேயே கேலி செய்து சிரித்தனர்.


நாம் இதுவரை கண்டுபிடித்தது தான். தயானந்தன் செய்த அனைத்து குற்றங்களையும் விக்னேஷ் விளக்கிச் சொல்ல, இடையிடையே செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கும் பொறுமையாகப் பதில் சொல்லிய தன் கணவனை ரசித்துப் பார்த்தாள் பவதா.


'ச்ச. இவனுக்குள்ள இத்தன பொறுமையா. எடக்கு மொடக்கா எத்தன கேள்வி கேட்டாலும் நிதானமாகப் பதில் சொல்றான். ' ஹரிணி மைண்ட் வாய்ஸ்.


நமக்குத் தெரிந்த விசயங்களைக் தான் விக்னேஷ் செய்தியாளர்களிடம் சொல்கிறான் என அடால்ட்டாக இருந்த ஹரிணி அதிரும்படி ஒன்றை‌ செய்தான். ஹரிணிக்கி மட்டுமல்ல, டீவி பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே தெரியாத உண்மைகளை, ஊருக்கே கேட்கும்படி சொன்னான் விக்னேஷ்


அது தான் பார்கவியின் மரணம்பற்றி.


செய்தியாளர்களிடம் பார்கவியின் புகைப்படத்தைக் காட்டி, " இந்த எட்டு வயசு பொண்ணு தா சந்திரபோஸ் இவ்ளோ பெரிய க்ரிமினல் வேலய தைரியமா இத்தன வர்ஷமா செய்றதுக்கான ஒரு தூண்டு கோள். " எனப் பார்கவியின் மரணம்பற்றி விரிவாகச் சொல்ல, கலியபெருமாள் உறைந்து போய் அமர்ந்திருந்தார். ஹரிணியும் மூர்த்தியும் அவரின் அருகில் சென்று நின்று கொண்டனர்.


"தமிழ்வாணன், தயானந்தத்தோட மச்சான். குறிஞ்சி மலர் நாளிதழ் மூலமா சந்திரபோஸ் செய்ற எல்லா க்ரிமினல் வேலையையும் மறச்சி, பொய்யான தகவல பரப்பிச் சம்மந்தப்பட்டவங்கள கேஸ் போட விடாம ஊர விட்டுப் போற மாறிச் செஞ்சிடுறானுங்க. இது எல்லாம் ஆரம்பத்துல செஞ்ச வேல.


இப்ப அவனுங்களோட மூலதனம். கருத்தரிப்பு மையம் தா. " என்றவன் ICDS laboratory Ltd கீழ் இயங்கி வந்த அனைத்து கருத்தரிப்பு மையங்களிலும் சோதனை செய்து சில மருத்துவர்களைக் கைது செய்ததாகச் சொல்ல. செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் புகைப்படத்தை ஒளிப்பரப்பு செய்தனர்.


அதில் பவித்ராவிற்கு வைத்தியம் பார்த்துத் தரூணிக்கா இருக்க, பவித்ரா அதிர்ந்து போய்ச் சம்பத்தை பார்த்தாள். அவன் " நமக்குச் சேர வேண்டியது நம்மகிட்ட கண்டிப்பா கிடைக்கும் பவி. அதுக்கு இந்த மாறிச் சீப்பான ஆளுங்க உதவி தேவையில்ல. நீ எனக்கு எப்பையும் முதல் குழந்தை தா பவித்ரா. " என அணைத்து ஆறுதல் சொல்ல, வீடே நிசப்தமாக இருந்தது.


அங்கு‌ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறியான உணர்வு உண்டானது. கலியபெருமாளுக்கு தன்னை அனைவரும் சேர்ந்து ஏமாற்றி தன் குழந்தையைத் தன் கையாலேயே கொலை செய்யும்படி செய்து விட்டார்களே ‌என்று நினைக்கும் போதே இதயம் வலித்தது. ஆனாலும் அந்தச் சந்திரபோஸ் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது. ஒருவேளை கைது செய்திருந்தால் தானே அவனைக் கொன்று விட்டுச் சிறைக்கு செல்லத் தயார் என்று நினைத்தார்.


"சந்திரபோஸ் தா இதுல மெயின் கல்ப்ரேட்.‌ இப்ப எங்க இருக்காரு. கைது செஞ்சிட்டிங்களா இல்ல. உங்க போன கேஸ் மாறித் தலைமறைவா சுத்த விட்டுடீங்களா. " எனச் செய்தியாளர்கள் கேட்க.‌ விக்னேஷ் இதழில் படர விட்ட குறுஞ்சிரிப்புடன் எழுந்து செல்ல,


" கைது செய்ய முடியாத சூழ்நில, ஏன்னா அடிபட்டு ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காரு. குணமானா ஜெயில்ல தள்ளிடலாம். " என்ற ஜீவா விக்னேஷ் பின்தொடர்ந்து எழுந்து சென்றான்.


"ட்ரீட்மெண்ட்டா. இவனுங்களா. ஹீம். இன்னோரம் கொன்னு புதச்சிருப்பானுங்க. செத்துப்போன வேற எவனோட பாடியையோ பெட்டுல படுக்கு போட்டு ஊர ஏமாத்திட்டு இருக்கானுங்க. " என விக்னேஷின் சிரிப்பிலிருந்து நடந்ததை புரிந்து கொண்டு ஹரிணி சொல்ல,


" உப்பு தின்னவெ தண்ணி குடிச்சித்தா ஆகணும். அது மாறித் தப்பு செஞ்சவனுக்கு தண்டன குடுத்தா ஆகணும். " நாச்சியாம்மாள்.


தண்டனை கொடுப்பதில் பிரச்சினை இல்லை. அந்தத் தண்டனையை தன் கணவனின் கையால் கொடுக்க வேண்டிய சூழ்நிலையைத் தான் ஹரிணி வெறுத்தாள். தனக்கு என்று வரும்போது எல்லாரும் சுயநலமா மாறிடுறாங்க. ஹரிணி மட்டும் விதி விலக்கா என்ன?.


' ஓ... இந்தச் செய்திய டீவில சொல்ல வைக்கனுங்கிறதுக்காகத்தா ரிஷி மணிராம விக்னேஷ் கிட்டையும் அவனோட ஃப்ரண்ட்ஸ் கிட்டையும் அனுப்புனானோ. இருக்கும் இருக்கும். ரிஷி எந்த நேரத்துல எத செய்வான்னு சொல்லவே முடியாது. ஏ அவெ நேர்லையே இத சொல்லிருக்கலாமே. '


வீட்டார் சூழ்நிலை காரணமாக இறுக்கமாக அமர்ந்திருக்க, " கேக்குற கேள்விக்கி பதில் சொல்றது மட்டும் தா போலிஸ் வேலையா. ச்ச... இவ்ளோ ‌சிம்மிளான வேலன்னு எனக்குத் தெரிஞ்சா நானும் போலிஸ்ஸாகிருப்பேன்‌. மிஸ் பண்ணிட்டேனே‌. " எனப் பிரகாஷ் போலியாக வருத்தபட,


" முக்காலும் காகம் முழுகிக் குளிச்சாலும் கொக்காகுமா?. எடுபட்ட பயெ வக்கீலுக்குப் படிச்சிட்டு ரைஸ் மீல்லுக்கு வேலைக்கி போறான். கேணப்பயெ. வந்துட்டான் வாய்கா கணக்கா இருக்குற அவெ வாய தூக்கிட்டு. " என நாச்சியம்மாள் திட்டிச் சொல்ல, அனைவரும் சிரித்தனர், ஹரிணியை தவிர.


ஏ? இவளுக்கு என்னாச்சி?.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 39

விழி 41

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...