முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 39

அத்தியாயம்: 39


நள்ளிரவு நேரம். 


மருத்துவமனை…


"நம்ம மனோகருக்கு என்ன தா ஆச்சி. வெள்ளை நிற கோர்ட்டு போட்டுச் சுற்றும் பெண்கள். சூழும் பனி மூட்டம், குளிர் என்றிருக்க, இப்படி எதையும் ரசிக்காமல். ஏன் வந்து இங்குக் கண் மூடிப் படுத்திருக்க வேண்டும். இதுவரை பொறுத்தது போதும். எழுந்து நடந்திடுவோம். இனி பொது இடங்களில் இப்படி பெப்பரப்பேன்னு படுத்திருப்பது குற்றமாகும். மீறினால் அபாரம் விதிக்கப்படும். சோ மூடீட்டு படு டா வெண்ண. " ஜீவா. டீவி விளம்பரம்போல் பேசி மனோகரின் அடிபடாத காலை நகர்ந்த மனோ கத்தினான். 


‘மனோ தான் அடி பட்டுப் படுத்திருக்கானே. அதா சேவை செய்யலாம்னு வந்திருக்கான்.’


" வலிக்கிது டா பரதேசி நாயே. " எனக் கத்த,


" டேய் அடி பட்டது அந்தக் காலு. நா விளையாடுறது இந்தக் காலு. கொஞ்சமாச்சும் டீசெண்ட்டா கால ஒடுக்கி வச்சி படுடா. அப்றம் கைப்புள்ள வடிவேலு மாறி யாராது வண்டிய பார்க் பண்ணிடப் போறானுங்க. உனக்கு இன்னும் கல்யாணம் வேற ஆகல மறந்துடாத. “


"ஐய்யோ பல வர்ஷமா ஒரு பொண்ண ஃபாலோ பண்ணி சில மாசத்துல ஓகே பண்ணி கொஞ்ச நாளைக்கி முன்னாடி கல்யாணம் பண்ண, இந்த டியூப் லைட்டலாம் எனக்கு அட்வைஸ் பண்றமாறி என் நிலைமை ஆகிடுச்சே ஆண்டவா. எந்த ஃபைட் வந்தாலும் எவனுக்கு எதுவும் ஆக மாட்டேங்கிது. எனக்கு மட்டும் தா இப்படி ஆகுது. யாரோ எனக்குச் செய்வின வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். " மனோ. காலில் அடி பட்டதால் அதை ஊஞ்சலில் கட்டி தொங்க விட்ட காலை ஆட்டிக் கொண்டு பேச,


" எனக்குத் தெரியும் மச்சான். யாருன்னு. "


"யாருடா அது‌. சொல்லு. இப்பவே அவன பிடிச்சி கை கால கட்டி போட்டுப் படிக்கட்டுல டிக்கி தேய இழுத்துட்டு போவோம். கூடவே படிக்கட்டுல நெருஞ்சி முள்ள போட்டு வச்சா அவனோட டிக்கி டெஸ்ட்ராய் ஆகிடும். சொல்லு மச்சான். எவரது. "


" உனக்குச் செய்வின வக்க தனியால்லாம் ஆளு தேவையா என்ன.! உன்னோட வாயோ போதாது. "


"க்கும். "


" அதா வீட்டுலையே இருன்னு சொன்னாருல்ல ரிஷி. நானும் வந்தே தீருவேன். நானும் போலிஸ் தாங்கிற மாறி எதுக்கு வெட்டு ஸீன் போட்டு வரணும். வந்தவெ சும்மா இருக்காம குட்டி வில்லன் கிட்ட போய் வாலாட்டுனா இப்படி கிளிஞ்சி போகத்தா செய்யும். " என அடி பட்ட காலிலேயே அடிக்க,


"ஆ… கிளிஞ்சி போக என்னோட காலு என்ன காகிதமாடா. ஐய்யோ வலிக்கிதே. " என்றபடி காலை அமுக்கி விட,


" டேய்… டேய்... டேய்... லூசாடா நீ. நல்லா பெபிக்கால் போட்டு ஒட்டி வச்சிருக்காரு டாக்டரு. ஓவரா அமுக்குனா ஒடஞ்சி விழுந்திடாது. " 


"எது ஒடஞ்சி போய்டுமா. டேய் சின்ன அடித்தான்டா. அந்த டாக்டரு காலாவதியான பேண்டேஜ்ஜ குப்பைல போட மனசில்லாம என்னோட கால்ல சுத்தி விட்டுட்டாரு. இன்னும் ரெண்டு நாள் இங்க இருந்தேன்னு வை. காலு மட்டுமில்ல இடுப்பு வயிறு கை மூஞ்சின்னு எல்லாத்துக்கும் சுத்தி எகிப்து மம்மி மாறி ஆக்கிடுவாரு. உங்கள யாருடா இங்க வந்து சேக்க சொன்னா. தர்மாஸ்பத்திரிக்கி போனா வெள்ள கலர்ல நாலு மாத்திர தந்திருப்பாங்க. வாங்கி போட்டுட்டு நா பேசாட்டி படுத்திருப்பேன். "


‘அது மல்டி ஸ்பெஷலிட்டி ஹஸ்பிட்டல். காலில் சுற்றிய பேண்டேஜ் நீளத்திற்கு பில்லை தீட்டி விடுவார்களோ!.: என்ற பயத்தில் கத்தினான்.


" நாங்களும் கொண்டு போய் அடக்கம் பண்ணிருப்போம். என்ன பண்ண. " என்றவனை முறைத்தான் மனோ.


" மடோனா மேடம் தா இங்க ட்ரீட்மெண்ட் பாக்க சொன்னாங்க. அவங்க தம்பியையும் சுருதியையும் இங்க தா சேத்திருக்கு. நீயும் நானும் கூட இருந்தா பேட்டரா இருக்கும்னு சொன்னாங்க. சரி வந்தது வந்தாச்சி. ரெண்டா பிஞ்ச உன்னோட கால ஊசி நூல் போட்டுத் தச்சிடலாம்னு பாத்தேன். ஆனா கட்டு போட்டு நடக்க விடாம பண்ணிட்டான் அந்த டாக்டர் என்ன பண்ண." ஜீவா சொல்லக் கதவு தட்டப்பட்டது.


" கம் இன். " என மனோ ‌குரல் கொடுக்க.


கதவைத் திறந்து கொண்டு மடோனா வந்தாள். முகம் வருத்தத்தில் சிவந்திருந்தது. அவள் எதிர்பார்க்கவில்லை, தன் தம்பிக்காக இன்னொரு உயிரைக் கொலை செய்யப் பார்த்திருக்கிறார்கள் என்பதை. நல்ல வேளை தடுத்து விட்டார்கள் என்று ஒரு சிறு சந்தோஷம் இருந்தாலும், இனி தன் தம்பியை எப்படி காப்பாற்றுவது என்ற கவலையும் இருந்தது அவளின் முகத்தில். மனோகரை நலம் விசாரித்து விட்டு ஜீவாவிடம் நன்றி கூறினாள் மருத்துவமனைக்கு நிக்கை கொண்டு வந்து சேர்க்க உதவியதால்.


பேச்சு இவர்களுடன் இருந்தாலும் மனம் ரிஷியைச் சுற்றி சுற்றி வந்தது. அவன் எங்கே என்று ஜீவா விடம் எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் எதெதையோ பேசிக்கொண்டு அவர்களுடன் சுருதி இருந்த அறையின் வாசலிலேயே நின்றாள். சுருதியை பார்க்க அவன் வரலாம் என்று அவனைப் பார்க்க அங்கு நின்றாள்.


ரிஷி அவளுக்கு அறிமுகம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்கலாம். ஆனால் பார்த்த முதல் நாளில் இருந்தே‌ ரிஷியின் மீது ஈர்ப்பு அவளுக்கு. அவனின் திடமான பேச்சு, பெண்களிடம் குழையாமல் கண்ணைப் பார்த்து உரையாடும் அவனின் தோணி, நக்கலான சிரிப்பு, கம்பீரமான நடையென எல்லாம் அவளை அவனிடம் காதல் என்று சொல்ல வைத்தது.


சில மாதங்களுக்கு முன் தான் தனக்கு ரிஷியின் மீது காதல் உள்ளதை கண்டு பிடித்தவள். ‌அதை உடனடியாக அவனிடம் கூறி விட்டாள். ஆனால் ரிஷி ஏற்றவில்லை. தான் திருமணமானவன் எற்று கூறி மறுக்க, அதை மடோனா நம்பவில்லை, ஹரிணியை அணைத்து மனைவி என்று அறிமுகம் செய்யும்வரை. தன் காதலை ஏற்றாக்காவிட்டாலும், அவனைத் தான் காதல் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என இப்போது வரை ரிஷியை நேசித்துக் கொண்டே இருக்கிறாள், அந்தப் பார்பி டால்.


அவளின் எண்ணம் சரியே என்பது போல் ரிஷி வேக நடையுடன் வந்தான், அவளைக் காண அல்ல. சுருதிக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள. ஆனால் பாதியிலேயே அவனைப் பிடித்துக் கொண்டாள் மடோனா.


கசந்த புன்னகையுடன் வரவேற்ற மடோனாவிடம்,‌ " தன்செயன பத்தி உங்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும். பட் உன்ன எச்சரிச்சா அவெ தப்பிக்க வாய்ப்பிருக்கு. அதா சொல்லல. நிக் எப்படி இருக்கான். " எனக் கேட்க.


' அவன் தங்களை தூண்டில் புழுபோல் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பது புரிந்தாலும். அவனின் மீது கோபம் வரவில்லை.‌ மாறாக. '


"நிக் நல்லா இருக்கான் இப்பதைக்கி. அடுத்து என்னன்னு டாடி தா முடிவெடுப்பாரு. " என்றவளுக்கு கண்ணீர் வந்தது தம்பியை நினைத்து. ரிஷி அவளின் தோளில் தட்டி ஆறுதல் சொல்ல, மடோனா ரிஷியை அணைத்தாள்.


நடு வழியில் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு நிற்க, ஹரிணி இதைப் பார்த்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். ஆனால் அவள் தான் இல்லையே. அவள் இல்லாத அந்த இடத்தைப் பின்னால் வந்த கௌதம் சரியாக நிரப்ப முயற்சி செய்தான். ‘அதாங்க பச போட்ட மாறி ஓட்டிட்டு நின்ன ரெண்டு பேரையும் தண்ணீ தெளிச்சி பிரிச்சி விட்டுட்டான். அதோட மடோனாவ டாக்டர் கூப்பிடுறாங்கன்னு தொரத்தியும் விட்டுட்டான்.’ 


அதைப் பார்த்த ரிஷி கௌதமை முறைக்க,


" என்ன என் டார்லிங் பக்கத்துல இல்லைங்கையும் தைரியம் கூடிப்போச்சின்னு நினைக்கிறேன். கட்டிப்படிச்சிட்டு நிக்கிற. " 


"நா கட்டி பிடிச்சேன். நீ அத பாத்த. ம்…" எனப் புருவம் உயர்த்தி கேட்டான்.


" ஆமா... அவா என்னடான்னா லாரி மோதிச் சாஞ்சி போன புளிய மரமாட்டாம் அது உம்மேல சாஞ்சிட்டு நிக்கிறதும, நீயும் தள்ளி விடாம நாய்க்குட்டிய தடவுற மாறித் தலைய தடவிக் குடுத்துட்டு நிக்கிறதையும் பாத்துட்டு தான இருந்தேன். அடுத்து அந்தப் பார்பி டால் பக்கம் உன்னோட பார்வ பேச்சி, கொன்னுடுவே பாத்துக்கு. மொத வேளையா இத பத்தி டார்லிங்கிட்ட போட்டுக் குடுக்குறேன். டேய் போலிஸ்ஸு. சுருதி எப்படி‌ டா இருக்கு. பிழைச்சிடும்ல. " என ரிஷியிடம் ஆரம்பித்து ஜீவா விடம் முடிக்க, ரிஷியின் உதட்டில் சிறு புன்னகை வந்தது, கௌதமின் மிரட்டலில்.


" வாய்ப்பு கம்மி தான்னு சொன்னாங்க. ப்ளட் ப்ளாக் ஆகி அதாவது ரத்தம் உறைஞ்சி போய்க் கட்டி மாறி ஆகிடுச்சாம். ஆப்ரேஷன் பண்ணா பிழைக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. ஆனாலும் உறுதியா எதையும் சொல்லல. " 


" இப்ப ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கா. " விக்னேஷ்.


"இல்ல நண்பா. டாக்டர் ரூல்ஸ் பேசுறானுங்க. கார்டியன் கிட்ட சைன் வாங்கணும்னு அது இதுன்டு. "‌


"கார்டியன்க்கு நாம எங்க போறது. " என்பதற்கும் சம்பத் வரவும் சரியாக இருந்தது. சம்பத் தனித்து வரவில்லை உடன் சுருதியின் காதலன் மணிராமுடன் வந்தான். மணிராம் ரிஷியைப் பார்த்ததும்.


" அண்ணா, சுருதி எப்படி இருக்கா. சுருதிய காப்பாத்திடலாம்னு சொன்னிங்க. இப்ப வேற மாறிச் சொல்றாங்க. உங்கள நம்பித்தாண்ணா இத்தன நாள் உயிரோடேவே இருந்தேன். இல்லன்னா எப்பையோ செத்திருப்பேன். நீங்கச் சொன்னபடி தா எல்லாமே செஞ்சேனே. எனக்கு அவா திரும்பக் கிடைச்சா போதும் ண்ணா. இப்ப நா சுருதிய பாக்கணும் ண்ணா. எங்க அவ. " என அழுகுரலில் சுருதியை தேட. அவனைச் சம்பத் சமாதானம் செய்தான். ஜீவாவும் விக்னேஷும் ரிஷியை மடக்கி கேள்வி கேட்கத் தொடங்கினார்.


"மணிராமையும் சுருதியையும் எப்படி தெரியும்? "


" அவன தற்கொலை பண்ணிக்க சொல்லிப் பெட்ரோல் கேனோட கமிஷனர் ஆஃபிஸ்க்கு அனுப்புவது நீ தானா. "


"மணிராம் கேஸ்ஸ நாங்க எடுத்து நடத்தணும்னு எதுக்கு நினைச்ச?. " என்க.


"என்னங்கடா என்ன அக்யூஸ்ட்டு மாறிக் கேள்வி கேக்குறீங்க.” என்றவன், 


“ஆமா நாந்தா மணிராம கமிஷனர் ஆஃபிஸ்க்கு போகச் சொல்லி ஐடியா குடுத்தேன். அவெ தற்கொலை பண்ணிக்க ட்ரெய் பண்ணலன்னா உங்கள மாறியான பெரிய போலிஸ்கானுங்க பார்வ பட்டிருக்குமா. இல்ல பத்தே நாள்ல இவ்வளவு பெரிய கும்பல பிடிச்சிருக்கு முடியுமா. சொல்லு. இது ஈசல் புத்து மாறி. ஒருத்தன பிடிச்சா அடுத்து அடுத்துன்னு வந்துட்டே இருப்பானுங்க. உங்க டிப்பார்ட்மெண்டுக்கு நல்ல வேட்ட இருக்கும். " என்றவன் விக்னேஷ் பார்த்து.


" நீங்க மூணு பேரும் லாஸ்ட்டா கேன்டில் பண்ணிங்களே அம்ரேஷ் சூசைட் கேஸ். அத நீங்க முடிச்ச வேகமும் ஸ்டைலும் பிடிச்சிருந்தது. அதா சுருதியோட கேஸ்ஸையும் நீங்க வேகமா சால்வ் பண்ணிடுவிங்கன்னு நினைச்சேன். பரவாயில்ல நா நினைச்சத விட வேகமாத்தா இருந்திச்சி. கூட ஹெல்ப் பண்ணது என்னோட கிட் டா ஆச்சே." என ஹரிணியை பெருமையாகப் பேச, விக்னேஷிக்கு புன்னகை வந்தது. ரிஷியின் புத்திசாலிதனத்தை நினைத்து. அவனிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது என்பதை உணர்ந்தவன் ரிஷியுடனான நட்பை வளர்க்க விரும்பினான்.


சுருதிக்கி ஆப்ரேஷன் பண்ண எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டது மடோனாவின் செலவில்.


மணிராமின் கையெழுத்து பெற்று மருத்துவர்கள் தங்களின் வேலையைத் தொடங்க. சுருதிக்கி ரத்தம் தேவைப்பட்டது. அவளுடையது தான் அரிய வகையாச்சே, கிடைப்பது சிரமம் என்று கூற, ரிஷி சம்பத்தை குடுக்க சொன்னான்.


" மாப்ள தா உன்னோட உயிர் நண்பெங்கிறதுக்காக என்னோட ரத்ததத மட்டும் அட்ட பூச்சியாட்டம் உறிச்சி எடுக்கப் பாக்குறியே இது நியாயமா. "சம்பத்.


" டேய் நீ குடுக்கப்போறது ஜஸ்ட் 350ml தான் டா. உன்னோட உடம்புல ஓடுற 5 லிட்டர் ரத்ததுல 350ml எடுத்தா ரெண்டே நாள்ல மறுபடியும் ரத்தம் ஊறிடும். அதுக்கு போய் ஃபீல் பண்ற. நீ பண்ண போற இந்தத் தானத்தால மூணு பேரோட உயிர ‌நீ காப்பாத்த போற. " என ரிஷி மஞ்சள் தண்ணீர் தெளிக்க சம்பத்திற்கு ஆடுபோல் தலையசைப்பதை தவிர வேறு வழி இல்லையே.


"முடியல, என்னால சுத்தமான முடியல. ஈவினிங் கால் பண்ணி உடனே ஊட்டிக்கி வான்ன, ஏ எதுக்குன்னு கேக்காம வந்தேன். இப்ப என்னடான்னா ரத்தம் குடுக்கச் சொல்லி ரத்தம் சுண்டி போற அளவுக்குப் பேசுற. இதெல்லாம் கேக்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா. ச்ச…


ராணிம்மாவ பாத்துக்க வரச் சொன்னன்னு நினைச்சேன். பாத்தா ஸ்ரா போட்டு ரத்தத எடுக்கக் கூப்பிட்டிருக்கான். " எனச் சம்பத் புலம்பினான்.


ரிஷி சுருதிக்கு எப்படியும் ரத்தம் தேவைப்படும் என்பற்காகவே சம்பத்தை அழைத்துள்ளான். வெகுநேரம் புலம்பியவனை செவிலியர் அழைக்கவும்.


" கௌதம் ஒரு உதவி செய். ரத்தத்த உறிஞ்சி முடிக்கையும் என்ன கை தாங்காம ஊர்ல கொண்டு போய் விட்டுடு மச்சான். இத எனக்காக நா கேக்கல. உன்னோட தங்கச்சி வாழ்க்கைக்காகக் கேக்குறேன். இவெங்கூட இருந்தா உனக்குத் தா ரெண்டு கிட்னி இருக்குல்ல அதுல ஒன்ன குடுன்னு கேட்டுப் பக்கம் பக்கமா பேசுவான். உன்னோட தங்கச்சி புருஷன பத்திரமா கொண்டு போய் அவகிட்டயே சேத்துடு. ப்ளிஸ்... " எனச் செவிலியர் காட்டிய பாதையில் செல்ல, மற்றவர்கள் சிரித்தனர்.


"மச்சி, முடியையும் கால் பண்ணு. நா வீட்டுக்குப் போறேன். ஹரிணிய பாக்க. " எனக் கிளம்ப.


"ராணிம்மா இப்ப வீட்டுல இல்ல. " எனக் கத்தினான் சம்பத்.


"என்ன மச்சி சொன்ன?. " என திரும்பக் கேட்க.


"உங்காதுல விழுந்தது சரி தா. ராணிம்மாவும், கூட இருந்த அந்தப் பொண்ணும் இப்ப அந்த வீட்டுல இல்லன்னு சொல்றேன். "


"அப்ப ராணிம்மா எங்க. " ரிஷி சிறு பயம் வந்தது அவனுள்


" ஹாங். செஸ் போர்டுல ராஜாக்கு பக்கத்துல இருப்பாங்க. ராணிம்மா. " என்ற படி செவிலியருடன் நடந்து சென்றவன் ரிஷியின் முகம் போன போக்க பார்த்துத் திரும்பி வந்து.


"இங்கருந்து கொஞ்ச தூரம் தள்ளி வெட்னரி க்ளினிக் ஒன்னு இருக்கு. அங்கதா விட்டுடுட்டு வந்தேன். கூட உன்னோட அண்ணே வேலு இருக்காரு. டிம்முக்கு அடி பட்டிருக்கு. " என நடந்ததை சொல்ல, இரு கணவன்களும் பயந்து விட்டனர். தங்கள் மனைவியை நினைத்து. கடைசியாகச் சம்பத் சொன்ன வார்த்தை தான் நிம்மதியை தந்தது. அதா ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகல.‌ நல்லாத்தா இருக்காங்கங்கிறது தா.


இங்க ரிஷிய விட அதிகம் பயந்தது விக்னேஷ் தான். "எனக்குன்னே கிளம்பி வந்திடுறாய்ங்க போல. ஏற்கனவே ஒருத்தன் பண்ணதுக்கு பயந்து போய்த்தா பாப்பா ஆமை ஓட்டுக்குள்ள பதுங்குற மாறிப் பதுங்கி போய்யிருந்தா. இப்ப கொஞ்ச நாளாத்தா நல்லா பேசுறான்னு நினைச்சேன். ஆனா அதுக்கும் ஆப்பு வைக்கிற மாறி இங்கையும் ஒருத்தேன்‌‌. இப்ப அவள சரி பண்ண எத்தன மாசமெடுக்குமோ. கடவுளே. " என வேண்ட, மூவரும் சம்பத் சொன்ன கால்நடை மருத்துவ மனைக்குச் சென்றனர். ஜீவாவை மட்டும் விட்டுவிட்டு.


சம்பத் சொன்ன இடத்தில் சென்று பார்த்தால் அங்கு அவர்கள் இல்லை. எனவே வேல்ராஜ்ஜிற்கு ஃபோன் செய்து கேக்க, " வெட்னரி டாக்டர்ஸ் இல்ல தரன். நீ கூட்டீட்டு வரச் சொன்ன டாக்டர் தா இப்பதைக்கி சும்மா கட்டு போட்டு விட்டிருக்காரு. புல்லெட் எடுத்தாச்சி. பயப்பட எதுவும் இல்ல. ஆனா ஹரிணி தா அழுத்துட்டே இருக்கா. ஏன்னு தா தெரியல. " என்க, ரிஷி மணியைப் பார்த்தான்.‌ அது அதிகாலை மூன்று.


'போய்ச்சி. தைரியமான பொண்ணுன்னு அறிமுகம் செஞ்ச ஹரிணியே அழறான்னா. நம்ம பாப்பாவோட நிலம. கண்ணீர் கடல்ல உறைஞ்சி போய் மிதப்பான்னு நினைக்கிறேன்‌‌. ' விக்னேஷின் மைண்ட் வாய்ஸ்.


" கிளம்பலாம் ரிஷி. டார்லிங்க பாத்தாதா நிம்மதியா இருக்கும்." கௌதம் படபடத்தான், ஹரிணி அழுகிறாள் என்ற செய்தியால். ஹரிணி பயந்து கண்ணீர் விடும் ரகம் இல்லையே அதான்.


காரை நிறுத்தும் முன்னரே அடித்துப் பிடித்து இறங்கினான் விக்னேஷ். பவதா காண வேகமாக உள்ளே சென்றால், அவளோ சோஃபாவில் படுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள். புன்னகையுடன் அவளின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட, அவள் எழுந்தாளோ இல்லையோ. அறையில் இருந்த ஹரிணி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள், கௌதமை கண்ணீருடன்.‌


அதிகம் பயந்திருக்கிறாள் என்று அவளின் உடல் நடுக்கமே ‌சொல்லியது. அது கௌதமை நல்லபடியாகக் காயங்கள் ஏதுமின்றி பார்த்தபின் தான் கலங்கிய அவளின் முகம் தெளியத் தொடங்கியது. அவளின் சிந்தனைகள் எப்போதும் கௌதமையும் அவனின் நலனையும் முன்னிருத்தியே இருக்கும். இப்போதும் அப்படி தான். அடிபட்டு மயங்கிக் கிடந்த டிம் அவளின் கண்களுக்கு கௌதமாகத் தெரிந்தான். அதான் இந்தப் பயம். கௌதம் இல்லை என்றால் என்பதை நினைத்துப் பார்க்க கூட அவள் விரும்பவில்லை.


"டார்லிங் எனக்கு ஒன்னுமில்ல. பாரு இந்தச் சுண்டு விரல் மட்டும் தா லைட்டா காயம். அதுவும் அந்த மரமண்ட மனோகரால வந்தது. மத்தபடி ஐ ஆம் பைன் டா டார்லிங். " என்றவன் அவளின் தலையை வருடி விட்டு வந்து கொண்டு ரிஷியைப் பார்த்தான். ரிஷி சிறு புன்னகையுடன் டிம்மை பார்க்கச் சென்றான்.


கௌதமின் மார்பில் சாய்ந்திருந்தாலும் செல்லும் தன் கணவனையே உற்று பார்த்தால் ஹரிணி. ரிஷி திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றான். அது கோபப் பார்வை.


'அவ்வளவு தான உன்னோட நம்பிக்க. ' என்பது போல் இருந்தது.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 38


விழி 40


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...