முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 38


 

அத்தியாயம்: 38


எந்த ஒரு ஏற்றத்திற்கும்.


இறக்கம் உண்டு…


எந்தத் துன்பத்திற்கும்.


முடிவு உண்டு.


எந்த முயற்சிக்கும்.


பயன் உண்டு.


பாரதியாரின் வரிகள் அவை. இன்று மலையென எழுந்து நின்ற சந்திரபோஸ்ஸின் வளர்ச்சி தரை தொட்டு தவழப் போகிறது. தன் நண்பனும் பால் மணம் மாறாக் குழந்தை பார்கவியும் பட்ட துன்பங்கள் அனைத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கப் போகிறது. இத்தனை ஆண்டுகள் ரிஷி மேற்கொண்ட முயற்சிக்குப் பயன் கை சேரப்போகிறது. இதை நினைத்துப் பார்த்தால் ஹரிணி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஆனால் அவளால் முடியவில்லை.


சென்ற தன் நண்பனை முழுதாய் காணும் வரை கண்ணில் ஒரு துளி தூக்கம் வரவில்லை. விழி மூடினால் கௌதமின் முகமே வந்து நின்றது. கை கால்களில் அடி பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அவன் நிற்பதை போலவும், விக்னேஷ் அவனின் கையில் விலங்கிட்டு கொலை காரன் என முத்திரை குத்தி அழைத்து வருவது போலவும் காட்சிகள் கண்ணிமைக்குள்.


அத்தோடு பார்கவியின் மரணத்தின் காரணமாகப் பிரிந்த இருவரும் இப்போது மீண்டும் அதற்காக அடித்துக் கொள்வது போன்றும். ரிஷி கௌதமை மாட்டி விட்டு விட்டுக் கௌதமை பழய போதை உலகிற்குள் தள்ளி விடுவது போன்றும் காட்சிகள் விரிய, இமையை மூடவில்லை அவள். மூடினால் தானே காட்சிகள் வரும். அதான் உறங்காது தன் நண்பனைக் கண்ணில் காணும் வரை உறைந்து போய் அமர்ந்திருக்கிறாள் ஹரிணி. அவர்கள் சென்ற சிறிது நேரம் கூடச் சென்றிருக்காது, அப்போதே அமர்ந்து விட்டாள் வாசலைப் பார்த்த படி.


சில நிமிடங்கள் சென்றிருக்கும் தூரத்தில் சிறு வெளிச்சம். ஏதோ ஒரு கார் வந்து நிற்பது போலத் தெரிய, யாரென ஜன்னல் வழியே உற்று பார்த்தாள் ஹரிணி, கதவை மூடி விட்டு. அவர்கள் தயானந்தன் அனுப்பி வைத்த ஆட்கள். கதிரேசன் தேடி இங்கு வந்துள்ளனர். இரண்டு தடிமாடுகள் காரிலிருந்து இறங்க, ஹரிணிக்கு சிறு அச்சம் வரத் தொடங்கியது. அவர்களின் கையில் உள்ள மரக்கட்டையும் துப்பாக்கியும் பேதமின்றி பாயுமே அதான் அந்தப் பயம்.


வேகமாக ஓடிச் சென்று கதிரேசன் இருந்த அறையில் உள்ள எல்லா ஜன்னல்களையும் மூடியவள்‌.‌. பாதுக்காப்பிற்கு எனப் பாலா விட்டுச் சென்ற ஒரு காவலரை எச்சரித்தாள். அந்தக் காவலன் யார் எனப் பார்க்க வெளியே செல்ல, இப்போது வீட்டில் இருப்பது நான்கு பேரும் அரை உயிராய் கிடக்கும் கதிரேசனும் மட்டுமே. ஜன்னல் வழியே அந்த காவலரைப் பாத்த படி ஹரிணி நிக்க,


விடாது டெய்ஸியும் டிம்மும் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த பவதா, " ஏ இங்க நிக்கிற ஹரிணி. உன்னோட டாக்ஸ்க்கு என்ன ஆச்சி. ஏ கத்தி கிட்டே இருக்குங்க. " எனத் தூக்க கலக்கத்தில் ஜன்னலில் அருகில் நின்ற ஹரிணியை கேட்டபடி அவளின் அருகில் செல்ல. அங்குக் கேட் ஏறிக் குதிக்கும் ஆளைக் கண்டு பயந்து கத்தப் போனவளின் வாயை மூடி சோஃபாவில் அமரச்செய்தாள் ஹரிணி.


"ஷூ... சத்தம் போடாத. அமைதியா இரு. " என்க.


"அமைதியாவா. எப்படி முடியும். யாரு இவனுங்க. வாசப்பக்கமா வந்து கதவ தட்டாம. சுவரேறி குத்திக்கிறாங்க. எதுக்கு வந்திருக்காங்க. " 


" மே பீ கதிரேசனுக்காக வந்திருக்கலாம். "


" ஆ… கதிரேசனையா. கைல எதோ இருக்குற மாறித் தெரியுதே. உள்ள வந்தா நம்மல போட்டுட்டு கதிரேசன் கூட்டீட்டு போய்டுவாங்களா. " எனப் பயத்தில் பேச,


" உள்ள வரமாட்டானுங்க. டெய்ஸியும் டிம்மும் பாத்துப்பாங்க." என அவள் சொல்லி முடிக்கும்‌ முன் துப்பாக்கி சுடும் சத்தமும் டிம் வித்தியாசமாகக் குரைக்கும் சத்தமும் கேட்க, பவதாவின் நடுங்கிய கரத்தைப் பிடித்தபடி தைரியம் கூறினாள் ஹரிணி.


" துப்பாக்கி சத்தம் கேக்குது. " எனப் பவதா பயந்து போய் சொல்ல, ஹரிணி எழுந்து சென்று பார்க்கப் போனாள்.


" வேணாம் ஹரிணி அண்ணாவும் விக்னேஷும் வர்ற வர நாம வெளில போக வேண்டாம். இங்கயே இருக்குறது தா சேஃப். " 


" பாலா விட்டுடுட்டு போன போலிஸ்க்கு என்ன ஆச்சின்னு தெரிய வேண்டாமா. உள்ளையே இருந்தா வெளில என்ன நடக்குதுன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது. நீ இங்கையே இரு. நா பாத்துட்டு வர்றேன். " என வெளியே சென்று பார்த்தாள்.


" உள்ள பயந்து போய் உக்காந்திருக்குறதுக்கு பதிலா நானும் உங்கூடவே வந்துடுறேன். இரு என்னையும் கூட்டீட்டு போ. " எனப் பவதாவும் நடுங்கிய படி உடன் சென்றாள்.


கதவைத் திறந்தவளின் முகத்தில் பளிச்சென வெளிச்சம் படர்ந்தது. எதிர் இருப்பவர்களைப் பார்க்க முடியாத பாடி கண் கூசியன. தன் கரத்தால் வெளிச்சம் வந்த பாதையை மறைத்து, இமைகளைச் சுருக்கி பார்த்தவளின் கண்களுக்கு மேலும் சில கார்கள். இல்லை ஜீப்கள் என வாகனங்கள் வந்து நின்றது தெரிந்தது. உள்ளிருந்து ஆஜானுபாகுவான பத்து பேர் இறங்கினர்.


"போச்சி... அந்த நாசமா போன கிழவந்தா நம்மல கொல்ல இத்தன பேர அனுப்பிருக்கான் போல. நாம செத்தோம்… விக்னேஷ் எங்கடா இருக்க. ஏன்னடா எனக்குத் தேவ படுறப்ப மட்டும் பக்கத்துலையே இருக்க மாட்டேங்கிற. " தயானந்தனின் ஆட்கள் தான் அவர்கள் என நினைத்துப் பவதா அழத் தொடங்கினாள்


" கொஞ்சம் வாய மூடு. உனக்கு எப்ப பாத்தாலும் எதையாது பாத்து பயந்து அழுத்துட்டே தா இருக்கனுமா. முதல்ல என்ன நடக்குதுன்னு கவனிக்கணும். அப்றம் கிடைக்கிற சந்தர்பத்த நமக்குச் சாதகமா யூஸ் பண்ணி தப்பிக்கிற வழிய தேடணும். இப்படி தேவை இல்லாம கண்ணீர் விட்டா. நடக்குற எதுவும் நடக்காம இருக்காது. வாய் மூடு. " என அதட்டியவள். அவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ள துணிந்து வெளியே சென்றாள்.


வந்தவர்கள் அவளை நெருங்கும் முன் ஒரு குரல் கேட்டது, "ராணிம்மா…" என்று,


அது சம்பத்தின் குரல். "ராகவ் ண்ணா. " எனத் தன் பார்வையை சுழல விடச் சம்பத் வந்து நின்றான் அவளின் முன். வேகமாகச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.


"பயந்துட்டிங்களா ராணிம்மா. " என்றான் சில்லிட்ட அவளின் கரம் கண்டு.


" ம்... லைட்டா. ஆமா நீங்க எப்படி இங்க வந்திங்க?. " என்றாள்.


ஏனெனில் சம்பத்திற்கு பின்னால் வேல்ராஜ் நின்றுகொண்டிருந்தான். கோவையில் இருக்கும் அவனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் சம்பத்.


"மாப்ள தா அவசரமா வரச்சொன்னான். " 


" உங்களுக்குத் துணையா இருந்து நாளைக்கி நம்ம ஊருக்குக் கூட்டீட்டு போகணும்னு சொன்னான். " என வேல்ராஜ் சொன்னதை கேட்டு ஹரிணிக்கு பெருமையாக இருந்தது. தன் கணவனின் நடக்க விருப்பத்தைக் கணித்து முன்னெச்சரிக்கையாய் செய்த ஏற்பாட்டால்.


சம்பத் வந்திருந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். ஏனெனில் கதிரேசனை பாதுகாப்பாகச் சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ரிஷியால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆம்புலன்ஸ்ஸின் உதவியுடன் இரு டாக்டர்கள் உடன் இருக்க கதிரேசனை அழைத்துச் சென்றனர் சென்னை மருத்துவமனைக்கு.


பவதாவிற்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. துணைக்கி ஆள் இருக்கிறார்கள் என்ற தைரியமும் வந்தது.


" அப்பாடா!. நாலு பவுன்சர்ஸ் நம்ம பக்கத்துல இருக்குறது எவ்ளோ ஹப்பியா இருக்கு. ஹேய், ஹரிணி நீ எங்க போற. வா வீட்டுக்குள்ள போவோம். " எனத் தோட்டத்தின் இருளில் நடந்து சென்ற ஹரிணி அழைத்தாள் பவதா.


ஆனால் அவளைக் கண்டு கொள்ளாது ஹரிணி டிம்மையும் டெய்ஸியையும் காணச் சென்றாள். துப்பாக்கி சத்தம் கேட்டதே. தன் செல்ல நாய்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா எனத் தேடிச் செல்ல, அவளின் உள்ளுணர்வு சொன்னது உண்மை என்பது போல் டிம்மின் காலில் பாய்ந்திருந்தது அந்தப் புல்லட். அதிக ரத்தம் கசிந்தததால் எழமுடியாமல் படுத்திருந்த டிம்மை டெய்ஸி சுற்றி சுற்றி வர, இருவருக்கும் அருகில் தயானந்தன் அனுப்பிய ஒரு ஆள் காயத்துடன் படுத்திருந்தான். இருவரும் சேர்ந்து, வந்தவர்களைக் கடித்து குதறி விட்டது. மற்றவன் பயந்து தப்பி விட்டான் போலும். அவனை துரத்திச் சென்றுள்ளான் பாலாவின் ஆள்.


"டிம்... " என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை அழுகை தான் வந்தது. செவிலியர்கள் முதலுதவி செய்ய, வேல்ராஜ் மருத்துவமனைக்கி அழைத்துச் சென்றான். ஹரிணியும் பவதாவும் உடன் சென்றனர்.


மருத்துவமனையில் இருந்தாலும் பெண்கள் இருவருக்கும் தங்களின் இணை பற்றிய கவலை வந்து ஒட்டிக் கொண்டு.


இன்னேரம் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனரோ...


_____________________


விக்னேஷ்.


அடிமேல் அடி வைத்து முன்னேறி சென்றுகொண்டிருந்தான். அந்த இருளிலும் கண்கள் அவனுக்கு நன்றாகத் தெரிந்தன. கரிய இரவில் இரை தேடும் ஆந்தைபோல் மாறி விட்டான்.‌ அவனின் இரை முன்னால் சென்று கொண்டிருந்த ரிஷியும் கௌதமும் தான்.


ரிஷியை பற்றி தெரிந்ததிலிருந்து ரிஷி எப்படி சந்திரபோஸ்ஸை பழி வாங்க போகிறான் என்பதை காண சுவாரசியமானவும் ஆவலாகவும் இருந்தது அவனுக்கு. எனவே ரிஷியைத் தன் பார்வையின் எல்லைக்குள்ளேயே வைத்திருந்தான்.


மின்சாரம் தடை‌பட்டபோது வெளியே வந்த சந்திரபோஸ்ஸையும் தன்செயனையும் ஒரே அடியில் மயக்கமடையச் செய்து பாலாவிடம் ஒப்படைத்தான் ரிஷி. இப்போதே அடிக்க வேண்டும் எனப் பாய்ந்த கௌதமிடம். 'நம்ம ஏரியாக்கு கொண்டு போய் ஊற வச்சி எவ்ளோ நேரம் வேணும்னாலும் அடிக்கலாம். ' என்று கூறி தடுத்தான் ரிஷி.


பாலாவும் பார்ஷல் சர்வீஸில் வேலை செய்பவன் போல் இருவரையும் மரக்கிடங்கில் டெலிவரி செய்து விட்டு, அவனுக்கு வேண்டிய சந்தானத்தை கைது செய்தான். எதிர்ப்பேயின்றி முழு போதையில் இருந்த சந்தனத்தை ஜீப்பில் ஏற்றி விட்டுத் திரும்பிய போது, "எங்கடா என்னோட மச்சான மட்டும் கூட்டீட்டு போறிங்க. " எனக் காவலர் உடையில் தள்ளாடிக் கொண்டிருந்த உமாபதியும் 'நீயும் வா. ' என ஏற்றிக் கொண்டு சென்றனர்.


‘போற வழில எதாவது மல உச்சியா பாத்து தள்ளி விட்டுப் போவோம். உயிரோட எந்திரிச்சி நடந்து வந்தான்னா அப்பனுக்கு கொள்ளி வச்சிட்டு மச்சினன ஜாமின்ல எடுக்கட்டும்.’ என நினைத்துப் பாலா தமிழ்வாணனை மட்டும் உள்ளே அடைத்து வைத்து விட்டுச் சென்றான் தன் கேரள தேசத்திற்கு.


பாலாவை பின் தொடர நினைத்த மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கௌதம் மனோவுடனும் விக்னேஷுடனும் சேர்ந்து சண்டை செய்ய, ரிஷியும் அதில் கலந்து கொண்டு தயானந்ததின் அடியாட்களைத் தொம்சம் செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் வந்த பாதையே திரும்பிக் காட்டிற்குள் கௌதமை அழைத்துச் சென்றான். இவர்களை இருவரின் மேல் கண்ணைக் கலட்டி வைத்திருந்த விக்னேஷும் அவர்களை ஃபாலோ செய்துகொண்டிருந்தான்.


இப்போது கை கால்கள் எதுவும் கட்டப்படாமல் ரிஷியின் முன் மூவரும் தரையில் கிடந்தனர். யார் யார் என்றால் அது சந்திரபோஸ், தன்செயன், தமிழ்வாணன். இருவர் மயங்கிக் கிட்ட, தமிழ்வாணனுக்கு மயக்க மருந்து தேவையில்லை.


 ‘ஏன்னா அந்தக் கிழம் தா தண்ணியடிச்சிட்டு மட்டியாகி கெடக்கே.’


மயக்கம் தெளிந்து எழுந்த சந்திரபோஸ், " யார்டா நீங்க. என்னடா வேணும் உங்களுக்கு?. " என்க,


" ஹ. உன்னோட இதயம். அத மட்டும் தந்தா போதும். பத்திரமா ப்ரேம் போட்டுச் சுவத்துல மாட்டித் தொங்க விட்டு வச்சிபேன். " ரிஷி. 


அவனின் பின்னால் அவனின் சம்மதத்திற்காகக் காத்து நின்றான் கௌதம், 'நீ கண்ண மட்டும் காட்டு மூணு பேர் தலையையும் தனியா வெட்டி எடுத்திடுறேன். ' என்பது போல் நின்றான்.


" ***** பயளுகலா. ****. " என ஆங்கிலத்தில் கெட்டதாய் நாலு வார்த்தையைத் தேடி பிடித்துத் திட்ட, ரிஷி ' வேற எதாவது பேசேன்டா. ' என்பது போல் அமர்ந்திருந்தான்.‌


" நா யாருன்னு தெரியாம எங்கிட்ட மோதிருக்க. " என அதட்ட.


"நல்லாவே தெரியும். ஆனாலும் உன்னோட பயோடேட்டாவ நீயே உன்னோட வாயால சொன்னோன்னா எங்களுக்குச் சூட் பண்ண வசதியா இருக்கும். சூட்டிங்கையும் நீ கேமரால சூட் பண்ணப்போறோம்னு நினைச்சிக்க கூடாது. இதுல சூட் பண்ண போறோம். உங்கள்ள யார எந்த ஆர்டர்ல கொல்லாம்னு நா யோசிக்கிற வரைக்கும் உங்களுக்கு உயிரோட இருக்க டயம் தாரேன். என்ஜாய் யூவர் லாஸ்ட் நைட். " எனக் கன்னை ரிஷி காட்டி மிரட்ட, சந்திரபோஸ் மிரள வில்லை. ஆனால் தன்செயன் மிரண்டு விட்டார்.


"இல்ல... இல்ல... என்ன விட்டுடுங்க. நா எந்தத் தப்பும் வேணும்னே செய்யல. சந்திரா தா... சந்திரா சொல்லித் தா... சந்திரா நா சொன்னேனே... ரிஷிதரன்னு தம்பி தா அது. விட்டுடுங்க தம்பி. ஏதோ பேராசைல செஞ்சிட்டேன். விட்டுங்க என்ன." எனக் கெஞ்ச.


"தனா ஏ இந்தக் கோமாளிங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்க. இவனுங்களால நம்மல எதுவும் செய்ய முடியாது. ரோகித், உமா, எங்கடா போனிங்க. " எனக் கத்த.


“மாமியார் வீட்டு விருந்துக்குப் போயிருக்கானுங்க. உம்பேச்சு அவனுங்க காதுல கேக்காது. இனி உனக்கே நீ பேசுறது கேக்காது." என ரிஷி சொல்ல, கௌதம் பலம் கொண்டு அடிக்கத் தொடங்கினான். கை ஓயும் வரை அடித்தான். உடலில் தெம்பு இருக்கும் வரையும் மிதித்தான்.


எதற்குத் தன்னை அடிக்கிறார்கள் என்று தெரியாமல் அடிவாங்கியவர்களிடம், " நாங்க எதுக்கு உன்ன கொல்லப் போறோம்னு உனக்குத் தெரியாதுல்ல. கேட்டுக்க... நீங்கச் செஞ்ச பாவத்தோட ஆரம்ப புள்ளி. பார்கவி. அது எங்க தங்கச்சி. " என்றவன் சந்திரபோஸ்ஸின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பார்கவியின் ஐடி கார்டை எடுத்து வெளியே காட்ட, அது கௌதமை வெறி கொள்ளச் செய்தது.


விழியில் நீர் அருவியாய் கொட்ட, 'ஏன்டா என்னோட பாப்புடுவ கொன்ன?. எப்படி கொல்ல மனசு வந்துச்சி?. ஏன்டா?.' எனக் கத்திக் கொண்டே அடித்தான்.‌ ஒரு கட்டத்தில் தன் கையில் இருந்த துப்பாக்கியைப் போஸ்ஸின் நெற்றியில் வைத்துச் சுடத் தயாராக, ரிஷி வேண்டாம் என்று தடுத்தான். இம்முறை கோபம் கொள்ளாமல் ஏன் என்று காரணம் கேட்டான் கௌதம்.


" உயிர் வலின்னா என்னன்னு தெரியாம இவனுங்க சாகுறத நா விரும்பல ஹரி. உனக்காகத் தான் இங்க கொண்டுவந்து போட்டது. உங்கையால இவனுங்கள ஆச தீர்ற வர அடி. அப்றம் முடிவு பண்ணலாம் இவனுங்களோட மரணம் எப்படி இருக்கணும்னு. ஈசியா வா. இல்ல கொடூரமாவா. இல்ல அதுக்கும் மேலயான்னு. " என்றான் ரிஷி.


"நா வேணும்னா ஐடியா குடுக்கவா. ஏங்கிட்ட சில பெஸ்டான ஐடியால்லாம் இருக்கு. " என்றபடி விக்னேஷ் வந்தான். அவனைப் பார்த்தும் ரிஷியின் உதட்டில் ஓர் சிறிய புன்னகை.


" ம்... குடுக்கலாம் தா. ஆனா எனக்கு நீ அன்வருக்கு குடுத்த தண்டன மாறி ஈசியான தண்டனையா இருக்க கூடாது. அத விடக் கொடுமையான‌ ஒன்னா இருக்கணும். " என்க, ரிஷியும் விக்னேஷும் சிரித்தனர்.


'அன்வர். விக்னேஷ் கடைசியாகக் கையாண்டா வழக்கின் குற்றவாளி. அவனைக் கண்டெய்னரில் அடைத்து ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு நாட்டிற்கு கப்பலில் ஏற்றி விட்டு விட்டான். விக்னேஷும் அவனின் நண்பர்களின் நல்ல கவனிப்பாலும் பாதி உயிராய் இருந்த அன்வர்.‌ உணவு காற்று என எதுவும் கிடைக்காமல் ரெண்டே நாளில் இறந்து போய்விட்டான். ஆனால் அவன் தலைமறைவாகி விட்டான் என்று கூறி இப்போது வரை தேடிக் கொண்டு தான் இருக்கின்றனர். தேடுவது போல் நாடகம் நடத்தினர் அந்தக் காவலர்கள். அதைத்தான் ரிஷி முறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினான். '


" என்ன கேட்டா உடம்ப கூறு போட்டு விக்கிற இவனுங்கள, ஏ நாமலும் கூறு போடக் கூடாது. இங்க மரத்த அறுக்குற பெரிய சைஸ் ரம்மர் இருக்கு. என்ன சொல்ற கௌதம். " விக்னேஷ்.


"சரியான யோசன. " எனக் கௌதம் தமிழ்வாணனை தூக்க, ரிஷி வேண்டாம் என்றான்.


"அப்ப இப்படியே விட்டுட சொல்றியா. " என்றான் காட்டமாக.


"நாளைக்கே செத்து போய்டுவானுங்கன்னு சொல்லுற அளவுக்கு வயசான கொழடுகள நம்ம கையால கொன்னு மீதியிருக்கு நம்ம லைஃப்ப நாம ஏ கெடுத்துக்கணும். அதுவும் ஒரு சின்சியர் என்கவுண்டர் ஸ்பெஷல் போலிஸ்ஸ கூடவே வச்சிட்டு கொல பண்ண முடியுமா? என்ன‌?. " எனச் சிரிக்க,


" எதுக்கு சிரிக்கிறன்னு எனக்குப் புரியவே இல்ல. உயிரோட விட எதுவும் ப்ளான் போட்டிருக்கியா என்ன. "


"இல்ல. சாகத்தா போறான். ஆனா இன்னைக்கி இல்ல. அஞ்சி நாள் ஆகும், உயிரு உடம்ப விட்டுப் போக. " என ரிஷி ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிக் கிடந்த சந்திரபோஸ்ஸை தூக்கி தோளில் போட்டுக்கு கொண்டு நடந்தான்.


" அதுவர என்னால பொறுமையா இருக்க முடியாது. பேசாட்டி நா இவனுங்க மூணு பேரையுமே சுட்டுட்டா. இவனுங்க டெத் பாடிய பாத்தாதத்தா நிம்மதியா இருக்கும். " கௌதம்.


" சாகப்பேற கிழவன கொன்னு என்ன சாதிக்க போற. ம்… அதுமட்டுமில்ல உன்ன கொலகாரனா பாக்குற தெம்பு என்னோட கிட் க்கு கிடையாது. சோ… நாம தா பண்ணணும். ஆனா அது வெளில வேற யாருக்கும் தெரியக் கூடாது. சீக்கிரம் ஆளுக்கு ஒரு ஆளுன்னு தூக்கி தோள்ல போட்டிட்டு எம்பின்னாடியே வாங்க. " ரிஷி.


"அப்ப ஏற்கனவே இதுக்கும் ஒரு ப்ளான் போட்டு வச்சிட்டு தா ஆள தூக்கிட்டு வந்திருக்க போலயே. " எனக் கௌதமும் விக்னேஷும் சேர்ந்து கேக்க ரிஷி சிரித்தான், சத்தமாக.


அந்த அமானுஷ்ய இரவில் அவனின் சிரிப்பு கேட்பவர்களைப் பயங்கொள்ளும் படியாத்தான் இருந்தது.



மூவரும் அந்தக் கயவர்களை தோளில் சுமந்தபடி எங்கோ சென்றனர். அதுவும் காட்டிற்குள் நடந்தே.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


விழி 37


விழி 39



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...