அத்தியாயம்: 37
"ஐயோ!! உன்ன பெத்தவளுக்கு நா என்ன பதில் சொல்லுவேன் ம்மா. பத்து மாசம் சொமந்து பெத்தாளே அவளுக்கு என்ன பதில் சொல்வேன். இத்தன வர்ஷமா உன்ன கண்ணுக்குள்ள வச்சி வளத்தேனே. ஐய்யோ… உயிரோட இருந்த என்னோட பொண்ண நானே கையெழுத்து போட்டுக் கொன்னுட்டேனே. கொன்னுட்டேனே. உன்ன ஆசாசையா வளத்து ஆளாக்க நினைச்ச எங்கையாலையே அரையடி பூமிக்குள்ள பொத்தைக்க வச்சிட்டியே கடவுளே. நீயெல்லாம் இருக்கியா இந்த உலகத்துல. இந்தக் கொடுமைய எல்லாம் பாத்துத்திட்டு தா இருக்கியா. எப்பொண்ண எங்கிட்ட இருந்து பறிச்சிட்டியே டா பாவி. " எனப் பார்கவியின் உடலை மண்ணில் புதைக்கும்போது கலியபெருமாளின் கதறல் சுற்றி இருந்த மலைகளையும் மரங்களையும் சேர்ந்து அழ வைத்தது.
இதை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்த சந்திரபோஸ்ஸுக்கு மகிழ்ச்சி. தன் வெளிநாட்டு படிப்பைத் தொடங்க உள்ளாரே.
அன்று மட்டுமல்ல. இன்றும் அந்த நிகழ்விற்காக அவர் வருத்தப்பட்டதே இல்லை. தன் வெளிநாட்டு படிப்பின் மூலம் தன் திறமையை மட்டுமல்லாது காப்பகத்தையும் விரிவு படுத்தி தொடர் கொலைகளை செய்யத் தொடங்கினார் வெளிநாட்டவரின் தேவைக்காக. அதற்குப் பெரிதும் உதவியது தமிழ்வாணனின் பத்திரிக்கையும் அவரின் மகன் உமாபதியின் காக்கி சட்டையும்.
தன் கையில் இருந்த ஐடி கார்டில் உள்ள பார்கவியின் முகத்தைப் பார்த்த சந்திரபோஸ்,
" என்னோட ஆரம்பம் நீ தா பாப்பா. மறக்க முடியாத முகம் உன்னோடது. இன்னைக்கி உன்ன மாறி இன்னொன்னு. இது என்னோட அறுபதாவது ஹார்ட் ட்ராஸ்ப்ளான்ட் ஆப்ரேஷன். தேங்க் யூ ஃபார் யுவர் ஹார்ட் பேபி. " என்றவர் அதை செண்டிமெண்ட்டாகத் தன் பேண்ட் பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு, பச்சை நிற அங்கியை அணியத் தொடங்கினார். முகம் தலையென அனைத்தையும் மூடியவர், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றார்.
இரு ஸ்டெக்சர்கள். ஒன்றில் நிக்கில். மற்றொன்றில் சுருதி.
" ம்... தனா ஸ்டார்ட் பண்ணு. " எனத் திறப்பு விழாக்கு ரிப்பன் கட் பண்ண கத்தரியை கொடுப்பது போல், கத்தியை எடுத்துத் தன்செயனிடம் கொடுத்தார் சந்திரபோஸ். சுற்றி ஆறு பேர் நிற்க அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கண்களை மூடிக்கொண்டான் தன்செயன். ஊர்ல இருக்குற அத்தனை சாமியையும் கும்பிட்டுட்டு கத்தியை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார் தன்செயன் பயபக்தியுடன். பல வருடத்திற்குப் பிறகு செய்யும் ஹார்ட் ஆப்ரேஷன். சரியா நடக்க வேண்டுமென வேண்டுதல்.
வாங்கிய கத்தியால் நிக்கின் மார்பில் கோடு போடும் முன் கரண்ட் கட்டானது.
'யார்ரா அது. நாங்க இவனோட ப்யூஸ்ஸ புடுங்குறதுக்குள்ள. கரண்ட் ப்யூஸ்ஸ புடுங்குனது. ஒரு வேள வேண்டுன தெய்வம் கை விட்டுடுச்சோ..' தன்செயனின் மைண்ட் வாய்ஸ்.
" ரோகித், போய் என்னனு பாரு. ஜென்ரேட்டர். யூப்பியஸ்ன்னு இருக்கும்போது எப்படி பவர் கட் ஆகும். " எனச் சந்திரபோஸ் தன் மகனை அனுப்ப, அவன் திரும்பி வருவதற்குள் ஆப்பரேஷன் தியேட்டர் சினிமா தியேட்டர் மாறிக் கூட்டமாவும் களேபரமாவும் மாறி விட்டது. என்ன பண்ண ரோகித் தால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
சரி எப்படி கரண்டு போச்சி… ம்…
'நம்ம ஹீரோஸ் வரணும்னா பில்டப் வேணாமா. அதா... பவர கட் பண்ணி பவரா என்ட்ரீ குடுக்குறோம். ஆமா அவனுங்கள நாம காட்டுக்குள்ள தான விட்டுட்டு வந்தோம். இங்க எப்படி வந்தானுங்க. இன்னொரு ஃப்ளாஷ் பேக்குக்கு போய்ட்டு வருவோம். '
பெயரே தெரியாத அந்த மரத்தின் கீழே தன் காரை நிறுத்தி விட்டுப் பாலாவும் அவனின் குழுவும் ரிஷி சொன்ன இடத்தில் எதையோ தீவிரமாகத் தேடிக்க கொண்டு இருந்தனர். கண்டு பிடித்து விட்டார்கள் போலும் குழுவில் உள்ள நான்கு பேருடன், கைது செய்வது எப்படி என டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தான்.
"ரவி நீங்க அவனுங்கள மறஞ்சி இருந்து மட்டும் வாட்ச் பண்ணிட்டு இருங்க. அவனுங்களோட ஒவ்வொரு மூவ்வையும் எனக்கு அப்டேட் பண்ணுங்க. ம். " என ஒருவனை மட்டும் செல்லச் சொல்ல.
"ஸாரே என்டா இது. எதுக்கு நாம வாட்ச் பண்ணணும். போய் நேரா அரஸ்ட் பண்ணி கூட்டீட்டு போகலாமே. நம்மகிட்ட தா அரஸ்ட் வாரன் இருக்கே. எதுக்கு இந்த விளையாட்டு. " என ஒருவன் கேட்க.
"விளையாட்டு தா ஸார். ஆனா விளையாடப் போறது நாம இல்ல. நாம ஜஸ்ட் ஒரு ஆடியன்ஸ். கை தட்டி வேடிக்கை பாப்போம். நம்ம கைக்கே பந்து வந்து விழும். அதுவரைக்கும் வாட்ச் பண்ணுவோம். " என்பதற்குகள் கார் வந்து நின்றது.
காரில் வந்திறங்கியவனை பாலா எதிர் கொண்டான். "மச்சி அரைக்கிலோமீட்டர் தூரத்துல ஒரு குடோன் மாறி ஒன்னு இருக்கு. மரத்தெல்லாம் அறுத்துப் போட்டு வக்கிற இடம். அங்க உக்காந்து தா அப்பா மகெ மருமகென்னு குடும்பமா தண்ணியடிச்சிட்டு இருக்கானுங்க. அல்லக்கைன்னு ரெண்டு தா இருக்கானுங்க. என்ன பண்ண?. எனக்கு உமாபதியோட மச்சான் சந்தானம் வேணும்.
அதிரடியாக உள்ள போய் அரஸ்ட் பண்ணுறதுக்கு முன்னாடி உன்னோட ப்ளான் என்னன்னு கேக்கலாம்னு காத்திருக்கோம். கண்டிப்பா அக்கா புருஷனுக்கு ஒன்னுன்னா அந்தப் போலிஸ்காரெ சும்மா இருக்க மாட்டான். கதவிடுக்குல மாட்டுன எலியாட்டம் கீச் கீச்சின்னு கத்துவான். அத பாத்துட்டு என்னால சும்மாலாம் இருக்க முடியாது. கன் யூஸ் பண்ற மாறி இருக்கும். சொல்லு உமாபதிய என்ன பண்ணலாம். முடிச்சிடவா. "
" ம்... முடிச்சிடு மச்சான். இப்ப இல்ல. நா சொல்லும்போது. அதுவரை அவனுங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும். ரெண்டு பேர அனுப்பு போதும். " என காரிலிருந்து ஒரு பேப்பரை எடுத்தான்.
பாலா இருவரை அனுப்பி, தான் வந்து அவர்களைக் கைது செய்யும் வரை அங்கேயே இருந்து கண்காணிக்க சொன்னான். இருவரும் தலையசைத்து செல்ல, " கைஸ் எனக்குத் தமிழ்வாணன் வேணும். அவெ மேல ஒரு கீறல் கூட விலக் கூடாது. " என்றான் ரிஷி. கொண்டு வந்த காகிதத்தை முன் பக்க காரின் மேல் விரித்து டார்ச்சின் உதவியுடன் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
" என்னடா இது ஹோட்டல் ஆர்டர் பண்ணுற மாறி இவெ வேணும் அவெ வேணுங்கிறானுங்க. அப்ப நமக்கும் யாரையாது வேணும்ன்னு ஆர்டர் பண்ணுவோமா. " மனோ ஜீவாவின் காதில் முணுமுணுக்க.
" வாய மூடுடா. ஒரு வேட்டைக்கி போகும்போது காமெடி பண்ணிட்டு இருக்க. ஷூ..." ஜீவா.
" அத நா போட்டிருக்கேன் மச்சான். பேட்டா ஷூ. வில கொஞ்சம் ஜாஸ்தி தா. " என்றவனை ஜீவா முறைத்து.
"என்னடா வேணும் உனக்கு. "என்க.
"இப்ப யார நாம பிடிச்சி இழுத்துட்டு போனா கமிஷனர் நமக்கு பாராட்டுப் பத்திரம் வாசிச்சி ப்ரமோஷன் குடுப்பாடு. இப்ப யார நாம அரஸ்ட் பண்ணணும். தலைவர் தயானந்தத்தையா. இல்ல மாஸ்டர் மைண்ட் சந்திரபோஸ்ஸையா. இல்ல குட்டி தல ரோகித்தையா. சொல்லு மச்சான் நா கேட்டுக்கிறேன். " மனோ காதைக் கூர்திட்டி வைக்க,
" நீங்க அரஸ்ட் பண்ண வேண்டிய ஆள என்னோட ப்ரதர் தா சொல்லுவான். நீங்களா முடிவு பண்ண முடியாது. ஏன்னா அவெ கைல வச்சிருக்குற பேப்பர பாத்தா, கொத்தனாரு எல்லாத்தையும் பக்காவா ப்ளான் போட்டு எடுத்துட்டு வந்த மாறி இருக்கு. பல நாளாகப் போட்ட திட்டம் ஸ்பாயில் ஆகுற மாறி உங்கள எதுவும் செய்ய விடமாட்டான். " கௌதம் சொல்ல.
" இப்ப என்ன பாஸ் சொல்ல வர்றிங்க. " மனோ.
" அவெ சொல்லுவான். அத மட்டும் தா நாம செய்யணும். " என்க. விக்னேஷ் இறங்கி ரிஷியின் அருகில் சென்றான்.
"ரிஷி என்ன ப்ளான். என்ன பண்ணப்போறோம். " என்றவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வரைபடம்போல் இருந்ததை டார்ச் அடித்துப் பார்த்தான் ரிஷி.
"எங்க கேஸ்க்கு முக்கியமான ஆளே சுருதி தா. இங்க சும்மாவே நின்னுட்டு இருந்தா. எப்படி அவள காப்பாத்துறது."
'ம்ஹீம்... இடியே வந்து பக்கத்துல விழுந்தாலும் அசால்ட்டா திரும்பிப் பாத்துட்டு போட்டே இருப்பேன். நீ என்னடா பொடிப்பயெ மாறிக் கேள்வி கேட்டுட்டு.' என்பது போல் நிமிராமல் ரிஷி நிற்க,
" ஆஸ்ரமத்துக்குள்ள அதிரடியாகப் போய் அந்தப் பொண்ண காப்பாத்த வேண்டியது தா. வேற என்ன பண்ண முடியும் நம்மால. "பாலா.
"எப்படி மேஜிக் பண்ணி அங்க போகப்போறாமா. நாம இருக்குற இடத்துல இருந்து பொடி நடையா நடக்காம ஜீப்ல போனா கூட ஆஸ்ரமத்துக்கு போய்ச் சேர அரைமணி நேரத்துக்கு மேல ஆகும். இதுல உடனே போனா தா அந்தப் பொண்ண காப்பாத்த முடியும்னு டயலாக்லாம் பேசிட்டு, வெட்டியா நின்னு படம் பாத்துட்டு இருக்கிங்க. இத என்னோட நண்பன் என்னன்னு கேட்டா. செவிடங்காதுல ஊதுன சங்கு மாறி ஒரு இடத்துல நின்னு போஸ் கிடுக்குறது. என்ன இதெல்லாம். " மனோ ஆவேசமாகப் பேச,
" என்ன மச்சான் திடீர்னு பொங்கிட்ட. என்னாச்சி. " ஜீவா.
"பின்ன என்னடா. எது கேட்டாலும் பதிலே சொல்லாம சும்மா சும்மா நிமிர்ந்து பாத்துட்டு குனிஞ்சிக்கிட்டா கோபம் வராதா. இவரு சொல்லுறத மட்டும் கேக்க நாம என்ன இவருக்கு அசிஸ்டன்ட்டாவா வேல பாக்குறோம். " மனோ.
"இல்ல தா. எனக்கு உன்ன மாறிப் புத்திசாலி அசிஸ்டன்ட் தேவயே இல்ல. " என நக்கலாகக் குரல் கொடுத்தாலும் இன்னும் நிமிராமலேயே பதில் சொல்ல, மூவருக்குமே கடுப்பானது. ஏனெனில் அந்த அத்துவான காட்டுக்குள் வந்து வெகு நேரம் ஆயிற்று. எதிரிய பிடிக்கலாம்னு ஆவி பறக்கக் கிளம்புனவங்கள தூக்கி ஃபேனுக்கு கீழ வச்சி ஆறவிட்டுட்டு இருக்கான் ரிஷி.
"அரமணி நேரம்லா ஆகாது. ஐஞ்சி நிமிசத்துக்கும் குறைவான நேரத்துலயே நாம உள்ள போய்டலாம். " என்றான்.
அப்பாடா ஒருவழிய நிமிந்து பாத்துட்டான் என்றிருந்தது அவர்களுக்கு.
"எப்படி. "
"இங்க பாருங்க. இது அந்தக் காப்பத்தோட ப்ளூ ப்ரிண்ட். இங்க வச்சிதா ஆப்ரேஷன் நடக்கும்." எனக் கதிரேசன் மூலம் பெற்ற அந்த வரைபடத்தைக் காட்டியவன்.
"கதிரேசன் சொன்னத வச்சி பாத்தா ஆப்ரேஷன் செய்யச் சரியா இன்னும் பத்து நிமிஷம் தா இருக்கணும். அதுக்குள்ள நாம என்னென்ன பண்ணணும்னு சொல்லிடுறேன். கரெக்ட்டா அத ஃபாலோ பண்ணிடுங்க.
பாலா நீ இந்த இடத்துல இருக்குற பவர் ஃபாக்ஸ்ஸ சட்டவுன் பண்ணி எரிச்சிடு. பக்கத்துலேயே யூபிஎஸ் கனெக்சனையும் சேத்து எரிச்சிடு. அப்பதா கரண்ட் கட்டாகும். எரிச்சிட்டு ஃபயர் சரவீஸ்க்கு கால் பண்ணிட்டு சந்தானத்த அரஸ்ட் பண்ண நீ கிளம்பிடு. " என அவன் அணைக்க வேண்டிய மின்சாரத்தின் இணைப்பு இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினான் ரிஷி.
" கரண்ட் போனதும் ஜென்ரேட்டர ஆன் பண்ண சில நிமிடம் தா ஆகும். அதுக்குள்ள நாம எல்லாரும் உள்ள ஆப்ரேஷன் நடக்குற இந்த இடத்துக்குப் போய்டணும். விக்னேஷ், மனோ நீங்க ரெண்டு பேரும் மீதியிருக்குற ஆட்களோட உள்ள இருக்குற எல்லா டாக்டர்ஸ்ஸையும் அரஸ்ட் பண்ணி கூட்டீட்டு போகணும். அதுவும் ஃபயர் டிப்பாட்மெண்ட் ஆளுங்களும் ஜனங்களும் கூடுறதுக்கு முன்னாடி. இல்லன்னா எல்லாரும் எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு.
நிச்சயம் உள்ள சில அடியாட்கள் மட்டும் தா இருப்பாங்க. குழந்தைங்க எல்லாரும் வேற பிள்டிங்ல தா பாதுகாப்பா இருப்பாங்க. சோ கன் யூஸ் பண்ண தயங்க வேண்டாம். முக்கியமா தயானந்தத்தையும் அவரோட செல்லப் பேரன் ரோகித்தையும் தப்பிக்க விட்டுட்டாதிங்க.
ஆப்ரேஷன் தியேட்டர்ல ரெண்டு பேஷன்ட்டோட நிலம எப்படி வேணும்னாலும் இருக்குலாம். நா ரெண்டு ஆம்புலன்ஸ்ஸ நாலு டாக்டர்ஸ்ஸோட காப்பகத்துக்கு வெளில நிக்க வச்சிருக்கேன். அந்த ரெண்டு பேரையும் ஆம்புலன்ஸ்க்கு கூட்டீட்டு போக வேண்டியது ஜீவா உன்னோட பொறுப்பு. " என்க.
"அப்பச் சந்திரபோஸ். " மனோ.
"தன்செயன். " ஜீவா.
"அதுக்கு தா நாங்க இருக்கோமே. " எனக் கௌதம் சொல்ல, ரிஷியும் கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர். அந்தப் புன்னகை அவர்கள் பழி வாங்கும் வெறியுடன் இருப்பதை சொன்னது.
" அதெல்லாம் சரி. இந்த ப்ளான்லாம் காப்பகத்துக்குள்ள போனதுக்கு அப்றம் தா யூஸ் ஆகும். இப்ப எப்படி உள்ள போறது. ஐஞ்சி நிமிசத்துக்குள்ள உள்ள போய்டலாம்னு சொன்ன. " விக்னேஷ் கேட்க.
ரிஷி இதழ் குவித்து விசில் அடித்தபடி அங்கிருக்கும் ஒரு குகையைக் கண் காட்டினான். செடி கொடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் பாதை சுத்தமாகவும் சில பல விளக்குகளால் ஆங்காங்கே வெளிச்சமும் இருந்தது. மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும். இறந்த உடலைகளை இதன் வழியே தான் கொண்டு வந்து காட்டிற்குள் புதைத்து விட்டுச் செல்வர்.
அது நேராகக் காப்பகத்திற்குள் மட்டுமல்ல, சுருதி போன்ற சிலரை அடைத்து வைத்திருந்த இடத்திற்குள் கொண்டு சென்று விட்டது. ரிஷியின் நடையை வைத்து அவன் இங்குப் பல முறை வந்து சென்றிருக்கிறான் என்பதை விக்னேஷ் உணர்ந்தான்.
கண்ணில் சிக்கிய அனைவரையும் அடித்துப் போட்டு உள்ள பத்திரமாகச் சென்றனர். பாலா ரிஷி சொன்னதை சரியா செஞ்சதுனாலதா பவர் கட்.
ஆப்ரேஷன் தியேட்டர் ஒரே இருட்டா மாறியது. திடீரெனக் கட்டான மின்சாரம் சில நிமிடங்களைக் கடந்தும் வராமல் இருப்பதால், எதோ நடக்க உள்ளதை உணர்ந்த போஸ்ஸும், தன்செயனும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர. அங்கு அவர்களுக்காக நம்ம ஹீரோஸ் காத்திட்டு இருந்தாங்க.
"நா அப்பவே உமா கிட்ட சொன்னேன். இந்த மெட்ராஸ்காரனுங்கள தொரத்தி விடுடான்னு. கேக்கல. சந்திரா இவனுங்க உயிரோட விட்டுடாத. கொல்லு... கொல்லு... " என நரம்பு புடைக்கக் கத்திக் கொண்டு இருந்தார் தயானந்தன்.
என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் வெளியே வந்து மடோனா துப்பாக்கியுடன் ரிஷியை பார்த்தும் உறைந்து நின்றாள். அவளிடம்,
"கால் தி போலிஸ் நௌ. " என உத்தரவிட்டு விட்டு, கத்திக் கொண்டே இருந்த தயானந்தனின் ஒரு கையில் விலங்கு பூட்டி அங்கிருந்த கதவில் நாயைக் கட்டி வைப்பது போல் கட்டிப்போட்டு விட்டுச் சென்றான் ரிஷி.
ஆப்ரேஷன் தியேட்டரின் உள்ளே சென்றதும் ஜீவா செய்த முதல் வேலை நிக்கும் சுருதியும் இருந்த ஸ்டெக்ஸரை இழுத்துக் கொண்டு வெளியே நின்றிருந்த ஆம்புலன்ஸிக்கு சென்றது தான். நடப்பது விபரிதம் என்பதை உணர்ந்து மடோனாவும் ஜீவாவிற்கு உதவி செய்தாள்.
" டாக்டர், முதல்ல இந்தப் பொண்ண பாருங்க. "எனச் சுருதியை ஒரு ஆம்புலன்ஸிலும், நிக்கை வேறு ஒன்றிலும் ஏற்றினான். நிக்கிற்கு பிரச்சினை இல்லை. மயக்க மருந்து தான் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால் சுருதியின் நிலைதான் மோசமாக இருந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். மடோனாவை நிக்குடன் அனுப்பி விட்டு, மீண்டும் உள்ளே சென்றான் ஜீவா.
செல்லும் வழியிலேயே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவே நடையை வேகப்படுத்தினான் ஜீவா. நல்ல வேளையாக இவை எல்லாம் தொடங்கும் முன்னரே குழந்தைகள் வெளியே வந்தது விட்டாதபடி அறையில் வைத்துப் பூட்டியிருந்தான் ரோகித்.
இளம் வயதான அவனைப் பிடிப்பது தான் சற்று சிரமமாக இருந்தது. ஆனா போதும் துறுதுறுவென ஓடிய காலில் துப்பாக்கி குண்டைக் கொடுத்தும், உடலில் சிலபல இடங்களில் உருட்டு கட்டை கிடைக்காததால் தன் கையையே கட்டையாக்கி அடித்து மடக்கி பிடித்தான் மனோ. சண்டைல உடையாத மண்ட எங்கருக்குங்கிற மாறி மனோவிற்கு காலில் அடி. லைட்டா.
"சச்… பட்ட இடத்துலையே படும்னு சொல்லுவாங்க. என்ன பொருத்த வரைக்கும் அது சரி தா. ஒரு வேல எனக்கே எனக்குன்னு சொல்லிருப்பாங்களோ. இருக்கும். இனிமே இந்த அடிபடுற மாறியான எந்த ஒரு சண்ட காட்சிலையும் கலந்துக்க கூடாது. " எனப் புலம்பியபடியே அடிவாங்கிப் படுத்திருந்த வெளிநாட்டு வெள்ளைக்கார துரைகளை தன் ஒற்றைகாலால் நொண்டி நொண்டி நடந்து ஒரு அறையில் அடைத்து வைத்தான், ரிஷி சொன்ன படி.
ஜீவா வந்து மீதி இருந்த ஆட்களுடன் சண்டை செய்யவும், உள்ளூர் போலிஸ் வரவும் சரியாக இருந்தது. துணி மூட்டையை போல் அனைவரையும் சுருட்டி ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதைப் பார்த்த மக்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே நின்றனர்.
மீண்டும் ஒருமுறை மக்களிடம் அவமானம் ஆகிவிடக் கூடாது என்பதால், பெய் வழக்கு போட்டுத் தன்னை அடித்து இழுத்துச் செல்வதாக மக்களை பார்த்துக் கத்திக் கொண்டே ஜீப்பில் எறினார் தயானந்தன். ரோகித் மட்டும் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.
" ஒரு வழியா டைடு வில்லனுங்கள தூக்கியாச்சி. மெயின் வில்லனுங்கல பாத்தியா நண்பா நீ. " ஜீவா.
"இல்ல மச்சான். நா பாக்கலயே. "
"ஒருவேள தப்பிச்சிட்டானுங்களோ. " ஜீவா.
" இருக்காது. அந்த ரெண்டு பேரையும் அண்ணனும் தம்பியுமா சப்பாத்திய திருப்பிப் போட்டு திருப்பிப் போட்டு எடுக்குற மாறிப் பொரட்டி போட்டு எடுக்குறத பாத்துட்டு தா நா வெளியவே வந்தேன். பாத்தியா நா சாய்த்த முதலைங்கள. எல்லாம் தின்னு தின்னு கொழுத்து போனதுக." என அடிபட்டு விழுந்து கிடந்தவர்களை காட்டி தன் வீரதிர பராக்கிரமத்தை புகழ்ந்து மனோ சொல்ல.
"மச்சான் விக்னேஷ் எங்க. "
"தெரியலையே. "
"ரிஷியும் கௌதமும் கூட மிஸ்ஸிங். " என இருவரும் மூவரை தேடத் தொடங்கினர். ஆனால் கண்டு பிடிப்பதற்குள் கடமை அவர்களைக் கட்டி இழுத்துச் சென்றது. காவல் நிலையத்திற்கு.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..