முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 110

 

அத்தியாயம்: 110


"குற்ற உணர்ச்சி. " என்றவன் கண்களில் வேதனையைக் காண முடிந்தது. 


ஏனெனில் சுடர் புத்திசாலி பெண். கடலைப் போடும் எண்ணத்துடன் அனுப்பும் குறுந்தகவல்கள் எதற்கும் மதிப்பளித்தது இல்லை. பதிலளித்ததும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏமாந்தது தீஷித் என்ற ஒருவனின் பெயரில். அதுவும் போலியானது என்று அறியாது. அவனின் பெயரைத் தவிர வேற யாராக இருந்தாலும் அவள் பேசியிருக்க மாட்டாள். 


"என்னோட பேர சொல்லி ஒருத்தெ ஏமாத்திருக்கான். பல மாசங்களா நான்னு நினைச்சி அவளுக்குள்ள பொய்யான காதல வளத்து, கற்பனைல மிதக்க விட்டு நம்பிக்க துரோகம் நடந்திருக்கு. அது தெரிஞ்சும் எப்படிச் சும்மா இருக்கச் சொல்லுற? அவளப் பிடிக்காதவங்க, பழி வாங்க தான் இதப் பண்ணிருந்தாலும், ஏன் என்னோட பேர யூஸ் பண்ணணும். 


அவளுக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்கையும் காதலும் இருந்திருந்தா, நான்னு நம்பி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட காதல் வளத்திருப்பா. அது பொய்ன்னு தெரியும் போது எவ்ளோ வலிச்சிருக்கும். ஏமாற்றம். நாம நம்புன ஒருத்தர் கிட்ட இருந்து கிடைக்கிற ஏமாற்றம் வலிய தரும்.‌ அத நான் அவளோட கண்ணுல பாத்தேன். அவள ஏமாத்துனது நான்னு தான நினைச்சிருப்பா. அதுக்காகவே நான் அவன எதாவது செஞ்சிருக்கணும். செய்யல. முட்டாளா சுயநலமா இருந்திருக்கேன்.  " என்றவன் சுடருடனான தன் கடைசி சந்திப்பைப் பற்றி கூறினான். 


சுடருடன் காதல் நாடகமாடிய சிராஜின் ஆள் ஒரு காஃபி ஷாப்பில் காத்திருப்பதாக சொல்லி அழைத்தான். சுடரை அவனின் ஆள் பைக்கில் பிக்கப் செய்து காஃபி ஷாப்பில் இறக்கி விட்டு சென்றான். 


அவளின் நல்ல நேரமோ என்னவோ லண்டனில் இருந்த தீஷித் அன்று சென்னை வந்து அதே ஷாப்பில் அமர்ந்திருந்தான். 


இரு அடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பில் இரண்டாவது தளத்தில் போலி அமர்ந்திருக்க முதல் தளத்தில் தீஷித் இருந்தான். உள்ளே சென்ற சுடருக்குத் தான் உண்மையான தீஷித் யார் என்று தெரியுமே. அதனால் போலியாக அவளை அழைத்தவனை நோக்கி செல்லாது தீஷித்தின் முன் வந்து நின்றாள், புன்னகையுடன்.


வெகு நாட்களுக்கு பின் பார்த்துக் கொள்வதால் தீஷித் சுடரைப் பார்த்து தோழமையுடன் எழுந்து நிற்க, வந்தவள் ஓடி வந்து அவனை அணைத்தாள். அது தீஷித்தின் புருவங்களை முடிச்சிட செய்தாலும் கருத்தில் கொள்ளாது அவளின் நலன் விசாரித்து பேசினான். 


" ரொம்ப மிஸ் பண்ணேன் தீஷித். " என்று வெட்கத்துடன் அவள் பேச, குழம்பிப்போனான் அவன். பின் சுற்று முற்றிலும் பார்த்தவள் அவனைத் தனியே யாரும் பார்த்திடாத ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று,


"நான் நேத்து சொன்னேனே அது இது தான். இதுல அரசனூர்ல இருந்த நிறைய பேருக்கு டெஸ்ட் எடுத்தோமே அது இருக்கு. இவங்க உடம்புல ரேடியேஷன் பாதிப்பு இருக்குங்கிறத நிருபிக்க நினைச்சி டெஸ்ட்டுக்கு குடுத்திருந்தோம். பட் இந்தியால அந்த வசதி கிடையாதாம். 


ஆனா எங்க போன நிருபிக்க முடியும்னு கண்டு பிடிச்சிட்டேன். ஜெர்மனில இதுக்கான ஒரு ரிசர்ச் சென்டர் இருக்கு. அங்க டெஸ்டுக்கு குடுத்தா நம்மால சிராஜ்க்கு எதிரா போட்ட கேஸ்ல வின் பண்ண முடியும். நாளைக்கி இத வக்கில் மேடம்ட்ட குடுத்து நம்ம கவர்மென்ட் மூலமா இத ப்ரூப் பண்ணலாம்னு இருக்கேன். " என்றவள் சில பைஃயில்களைக் காட்டி பேச, அவளின் பேச்சில் எதுவும் புரியவில்லை அவனுக்கு. 


" இது.. இது எல்லாம் என்ன?" எனக் கேள்வி கேட்டவனை வேற்றுலக ஜந்து போல் பார்த்தாள் சுடர். 


"என்னவா. இது எவிடென்ஸ். A1 communication industry யால அரசனூர்ல இறந்து போன அப்றம் பாதிக்கப்பட்ட ஜனங்களோட மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் இது. " 


"ஓகே. இதை ஏன் எங்கிட்ட காட்டுற?" எனக் கேள்வி எழுப்ப,


"நீ தான எடுத்திட்டு வர சொன்ன. " 


"நானா. " 


"ஆமா. நீ தான. 'சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். உன்ன நேர்ல பார்த்து என்னோட கையணைப்பில வச்சி. முத்தம் குடுத்து. என்னோட லவ்வ சொல்லிட்டு. அத தர்றேன்.' ன்னு நீ சொன்னதுனால தான நானே வந்தேன். " 


"வாட்… லவ். நீ இன்னும் அந்த நினைப்புலதா இருக்கியா. " என்றவன் பைஃல்களை மூடி வைத்தான்.


" நான் மாறல. நீ தான வேற மாதிரி பேசுற. " என்ற போது சுடரின் முகத்தில் அதிருப்தி இருந்தது. அதை நிமிர்ந்து பார்த்தவன்,


" நாந்தா உங்கிட்ட அன்னைக்கி க்ளியரா சொல்லிட்டேனே எம்மனசு வேற பொண்ணு இருக்கான்னு. " 


"மறுபடியும் முதல்ல இருந்தா. உப்... எனக்கு சலிச்சி போச்சி ST. நீ தான எனக்கு மெஜ்ஏஸ் பண்ண நாம ஃப்ரெண்டா இருக்கலாம்னு கேட்டேன். நடந்தத மறந்திட்டு‌ புதுசா பழகலாம்னு நீ சொன்ன. அப்றம் அந்தப் பொண்ணு மேல எனக்கு இருக்குறது ஜஸ்ட்ட க்ரெஸ்னு சொன்ன. அடுத்து எம்மேல ஃபீலிங் இருக்குன்ன. அது லவ்வுன்ன. இப்ப மறுபடியும். " எனக் கரம் விரித்து பேசியவளின் பேச்சு உலறலாக பட்டது. 


"பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு. நான் எப்ப மெஸ்ஏஜ் பண்ணேன். நான் எதுக்கு உனக்கு ரிப்ளே அனுப்பணும். நான் உன்னோட நம்பர ப்ளாக் பண்ணி பல மாசம் ஆச்சி. நீ என்னைப் பாக்க வந்ததும் காதல் கீதல்ன்னு பெணாத்தாத சுடர்ன்னு நினைச்சேன். ஆனா நீ மாறவே இல்ல. " எனத் தீஷித் பேசிய எதுவும் அவளின் புத்தியைச் சென்றடையவில்லை. 


காரணம் அவளின் கையில் இருந்த செல்ஃபோன் மின்னி மறைந்தது. போலி அவளுக்காகக் காத்திருப்பதாக சொல்லி தகவல் அனுப்ப, சுடருக்கு புரிந்து போனது தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று. 


கடைசியாக ஃபோன் பேசும்‌ போது 'மெடிக்கல் டெஸ்ட் ரிசல்ட்ட மறக்காம எடுத்திட்டு வந்திடு. ' என திரும்ப திரும்ப சொல்லியதை வைத்து பார்த்தால், தன் கையில் உள்ள காகிதங்கள் தான் அவனுக்குத் தேவையாக உள்ளது. அப்படியெனில் அவன் செல்போன் டவர்காரன் செய்த தில்லு முல்லு என மூளை சொல்ல, இடிந்து போனாள் பெண். இத்தனை நாட்களாக தான் வளத்த காதல். தன் ஆசைக்கு நீர் விட்டு வளர்த்தது இவன் இல்லையா? என வேதனையில் துடித்துப் போனாள் சுடர்.‌ பின்,


"தீஷித் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிருங்களா. இத கொரியர் அனுப்பி வைக்க முடியுமா. ப்ளீஸ். " எனக் கண்ணீருடன் இறைஞ்ச, தீஷித்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அவளின் காதல் பொய்த்து போன அதிருப்தி அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, தீஷித் ஏன் என்று கூட கேட்காது வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றே விட்டான்.‌


அவன்‌ சென்ற பாதையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் கண்கள் பாலை வனமாக மாறியது. எவ்வளவு நேரம் அழுதாள்‌ என்று அவளுக்கே தெரியாது. பார்த்த நொடியில் இருந்து தீஷித் மீது அவள் கொண்ட நேசம் உண்மை. முழுதாக அவளை அழக்கூட விடாது செல்ஃபோன் அதிர்ந்தது.


சுடருக்கு விடாது அழைப்பு விடுத்தவனிடம் இருந்து தப்பிக்க நினைத்து வெளியே வந்து உதவிக்கு ஆட்களை அழைக்க ஃபோன் செய்யும் முன் விசாகனின் ஆட்களால் கடத்தப்பட்டிருந்தாள் பெண். 


"அடுத்த நாளே நான் திரும்ப லண்டன் போய்ட்டேன். எனக்கு சுடருக்கு நடந்த எந்தக் கொடுமையும் தெரியாது. அந்த பைஃலயும் நான் போஸ்ட் பண்ணிட்டேன். எந்த அட்ரஸ்ன்னு கூட நான் பாக்கல. மறுபடியும் ஆறு மாசம் கழிச்சி தான் சென்னை வந்தேன். அப்ப ஒரு துண்டு பிரசுரத்துல சுடரோட ஃபோட்டோ போட்டு, 'வன் கொடுமை.'ங்கிற தலைப்புல அச்சிட்டு கண்ணாயிரம் அங்கிலும் சாரதாம்மாவும் குடுத்திட்டு இருக்குறத பாத்தேன். 


எங்கைக்கு வந்த பேப்பர‌ படிக்கும் போது என்னால அத நம்பவே முடியல. யாரோ என்னைய உயிரோட புதச்சி மண் போட்டு மூடின மாதிரி மூச்சு விட முடியாம திணறிப்போனே. 


நான் பாத்த அன்னைக்கி தான் சுடர் கடத்தப்பட்டிருக்கா. பல நாள்‌ பழகுன மாதிரி பேசுன அவாகிட்ட நான் பொறுமையா பேசிருந்தா இன்னைக்கி அவ உயிரோடயாது இருந்திருப்பாங்கிற குற்ற உணர்ச்சி என்னை ஒவ்வொரு நாளும் கொல்லுது. எனக்கும் தங்கச்சி தோழி அம்மாங்கிற பேர்ல பொண்ணுங்கள தெரியும். கூட்டு பாலியல் பலாத்காரங்கிற வார்த்த… ச்ச…  


அவளோட அடாப்ஸி ரிப்போட்ட படிக்க படிக்க அவ்ளோ கோபம். எம்மேலயே கோபம். அட்லீஸ்ட் அவள நான் வீடு வரைக்கும் பத்திரமா கூட்டீட்டாது போய் விட்டிருக்கலாம். எம்பேர சொல்லி ஏமாத்துனவே மேல ஆத்திரம் வெறி.‌ ஆனா அத யார் மேல காட்டன்னு தெரியல. A1 communication industry. சிராஜ். அரசனூர். ரேடியேஷன் அட்டாக். இத மட்டும்‌ தான் அவளோட பேச்சுல இருந்து என்னால எடுக்க முடிஞ்சது. 


என்னோட டார்கெட் சிராஜ். அரசனூர் கேஸ்ஸ பத்தி விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். சுடர் எதுக்காக போராடுனாளோ அந்தத் தீர்ப்ப வாங்கி தரணும்னு முடிவு பண்ணேன்‌. அவனுக்கு ஆப்போஷிட்டா ஒரு கம்பெனி ஸ்டார் பண்ணேன். உன்னோட உதவியால அத வேகமா டெவலப் பண்ணேன். " 


"வாட் என்னோட உதவியா! " கதை கேட்டுக் கொண்டிருந்த மது குழம்ப,


" ஆமா. உன்னால தான் என்னோட கம்பெனிகள் ராக்கெட் வேகத்துல வளந்தது. " எனக் குறுநகையுடன் கூறினான் தீஷித். 


"அடப்பாவி. நீ தானா அது. ஹோட்டல்ல  அவனோட முக்கியமான தொழில் ரகசியத்த திருடிட்டு போனது. அவெ முன்னாடியும் என்னோட சித்தப்பா முன்னாடியும் நான் தல குனிஞ்சி நிக்க நீயா காரணம். எம்மேல விழுந்த முதல் ப்ளாக் மார்க் அது தெரியுமா? இதுவர யாரு முன்னாடியும் கவனக்குறைவு அலட்சியமா இருந்தேன்னு பேரு வாங்கினது இல்ல. "


"எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒன்னு இருக்கும்ல. நீ அசந்த. நான் தட்டிட்டு போய்டேன். எடுக்குறது எனக்கு கஷ்டமாத்தா இருந்தது. ஆனாலும் நல்ல எக்ஸ்ப்ரியன்ஸ். இனி அசால்ட்டா எதுலயும் இருக்காத. தூக்கிட்டி போக நான் எப்பவும் ரெடியா தான் இருப்பேன்." என இரு பொருள் பட பேசியவனுடன் சண்டைக்கு சென்றான் மது. 


இருவரும் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, மதுவின் பக்கத்து காரின் கண்ணாடியில் கீறல் விழுந்தது. உடனே சண்டையை நிறுத்தியவன் என்ன நடக்கிறது என்று கவனிக்கும் முன் பல துப்பாக்கி குண்டுகள் காரை வந்து அடைந்தது. கார் புல்லட் ப்ரூஃப் என்பதால் உள்ளிருப்பவர்களுக்கு ஏதும் நிகழவில்லை. ஆனால் நிகழ்த்தியே தீருவோம் என்ற வெறியில் மூன்று கார்கள் முன் பின் பக்கவாட்டில் என மூன்று பக்கங்களிலும் அணைகட்டி வந்தது. 


மது, முதலாவதாக தீஷித் அமர்ந்திருந்த சீட்டைச் சரித்து படுக்கை நிலைக்கு மாற்றினான். பின் தன் பக்கம் இருந்த ஜன்னலை இறக்கியவன் பக்கவாட்டில் இடித்துக் கொண்டு வந்த காரின் டயரை நோக்கி சுட்டவன், உடனடியாக ப்ரேக்கை அழுத்தினான். அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த காரை மோதித் தள்ளி அதையும் சாய்த்து தானும் குடை சாய்ந்து போய் நின்றது. 


ஆனால், பின்னால் வந்து கொண்டிருந்த கார் மதுவின் காரை முடித்தள்ளிக் கொண்டு செல்ல மது ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். சில மீட்டர் தூரம் சென்றவன் காரை யூ டன் போட்டு திருப்பினான். திருப்பும் நொடிகளில் பின்னால் வந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் கரத்தை நோக்கி சுட, அவன் ஸ்டேரிங்கை வளைத்தில் கார் மரத்தில் மோதி நின்றது. 


மூன்று காரில் இருந்த ஆட்கள் கீழே இறங்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட, மது லாவகமாக காரை ஓட்டிச் சென்றான். காருக்கு சேதாரம் அதிகம் தான். மெக்கானிக் செட்டிற்கு செல்லாது காரை எடுக்க முடியாது என்ற நிலைக்கு வர, அருகில் இருந்த ஊரின் மெக்கானிக் செட்டில் கார் நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் பிடிக்கும் என்றதால் கவனத்துடன் இங்கும் அங்கு உலாத்திக் கொண்டிருந்தான் மது. இது இத்தோடு நின்று விடாதே. மூன்று என்பது அடுத்து பத்து காரா உயரும் என்பதை அறிந்து கொண்டதால், 


" ரூட்ட மாத்தி போனா?" தீஷித். 


" சரி வராது. நாளைக்கி காலைல பதினோரு மணிக்குள்ள உன்ன கோர்ட்டுல சேக்கணும். " 


"இன்னைக்கி நைட் தாண்டுவோமான்னு தெரியல. " 


"Don't think negatively. நம்மால முடியும். " 


"அப்படியே பைரவி மாதிரியே பேசுற. வாய்ப்பே இல்லன்னாலும் இருக்குங்கிற மாறியே பேசுவா. " என்ற போது தீஷித்தின் குரலில் மென்மை இருந்தது. 


"சுடர் குடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்ட நீ ஜெர்மன் அனுப்பி டெஸ்ட் பண்ணியா. " 


"எஸ். அது அரசனூர்ல சுடரோட வீட்டுல கிடைச்சது. ஆளுங்க மட்டுமில்ல அங்க இருக்குற ஆடு மாடுங்க ஏன் மண் கூட பாதிக்கப்பட்டிருக்கு. ஒரிஜினல் பேப்பர்கள் இதோ. " என்றவன் தன் லேப்டாப் பேக்கில் இருந்து எடுத்து காட்ட,


"பேரம் பேசலாமா. " 


"என்ன சொல்லவர்ற. ‍" 


"நாம உயிரோட இருக்கணும்னா இதுவும் இதுவும் நம்ம கிட்ட இருக்கு கூடாது. " எனத் தீஷித் கையில் இருந்ததையும் விசாகனிடம் இருந்து தான் எடுத்து வந்ததையும் காட்டி சொல்ல,


"சோ எல்லா எவிடன்ஸயும் அவனுங்க கிட்ட குடுத்திட்டு எங்கள உயிரோட விடுன்னு உயிர் பிச்ச கேக்கச் சொல்றியா. நீயெல்லாம் ஆம்பள தானா. தொட நடுங்கி. செக்யூரிட்டி ஏஜென்சி வச்சி நடத்துற உன்ன பெரிய வீரன் மாதிரி பேசுனாங்க. ஆனா இப்பத்தா தெரியுது. நீ ஒரு பயந்தாங்கொள்ளின்னு. " 


"அப்ப வேற ஐடியா குடு. நீ உயிரோட கோர்ட்டுக்கு போக. " 


"என்னோட சின்ன  அலட்சியம் ஒரு பொண்ண சிதைச்சிடுச்சின்னு இப்ப வரைக்கும் தவிச்சிட்டு இருக்கேன். இப்ப அவனால எத்தன பேர் பாதிக்கபட்டுட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்றமும் சுயநலமா என்னை காப்பாத்திட்டு உயிர் வாழ்றத விட செத்து போறது மேல். உன்னால முடிஞ்சா என்னை கோர்ட்க்கு கூட்டீட்டு போ. இல்லன்னா இறக்கி விட்டுடு. நான் பாத்துப்பேன். " எனக் கோபம் பேசியவனைத் திரும்பி ஏற இறங்க பார்த்தவன்,


"நீ செத்தாலும் சாகலன்னாலும் எதுவும் மாறப்போறது இல்ல. உன்னோட படத்துக்கு மாலை போட்டு மரியாத பண்ணி ரெண்டு சொட்டு கண்ணீர் வடிச்சிட்டு அடுத்த வேலைய பாக்க போய்டும் இந்த உலகம். ஏன்னா உனக்காக யாரும் பிறக்கல. எல்லாரும் போற போக்குல கொஞ்சம் நேரம் கூட வர்ற வழிப்போக்கர்கள் தான். ம்ச்… நான் சொல்ற ஐடியா மட்டும் ஒர்க்கவுட் ஆனா நீயும் அந்த பேப்பரும் பத்திரமா கோர்ட்டுக்கு போய் சேரும். எம்மேல நம்பிக்க இருந்தா தா. " எனக் கரம் நீட்ட, தீஷித் மது விடம் ஒப்படைத்தான் அனைத்தையும். 


அன்று அவனின் நண்பர்கள் பைரவி என யார் கேட்டும் இதை மட்டும் சொல்லவில்லை அவன். தானே நேரில் சென்று விளக்கி சிராஜ்ஜிற்கு தண்டனை கிடைக்கும் தருணத்தை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்‌ என்பதால் தான் டெல்லிக்கு வந்தே தீருவேன் என அடம்பிடித்ததே. சுடர் இறந்ததில் இருந்து யாரையும் முழுமையாக நம்ப மறுத்த மனம் மதுவை நம்பச் சொல்லியது. 


"என்ன ஐடியா அது?" என்ற தீஷித்திடம் மது திட்டத்தை விளக்க, தீஷித்திற்கு குஷியாகப் போனது. மதுவை ஆரத் தழுவி அணைத்தான்.


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...